கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்

தமிழாக்கம்: சிவஸ்ரீ.விபூதிபூஷண்

பகுதி 1 — பதியியல்

இயேசுவின் ஜீவிதம்

இயேசுவின் அற்புதங்களும் அவரது தெய்வீகத்தன்மையும்

கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

இயேசு தனது ஜீவிதத்தில் அனேக அற்புதங்களை செய்தார். ஆகவே, அவர் கடவுளே என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர் செய்ததாகக் கூறப்படுகின்றவை மெய்யாகிலும் அதிசயங்களா? அற்புதங்களா? அருஞ்செயல்கள்தானா?

அதைச் சற்று ஆராயலாம், வாருங்கள்.

யார் அந்தச் சாத்தான்?

00 Satanமுதலாவதாக, இயேசு சாத்தானை வெற்றிகொண்டு அவனைத் தோற்கடித்த சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். யார் இந்தச் சாத்தான்? அவனைப் படைத்தது யார் என்ற கேள்விகளுக்கு உங்கள் பரிசுத்தவேதாகமாகிய விவிலியத்தில் பதில் தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. சில பைபிள் உரையாசிரியர்கள் படைப்புக்காலத்தில் ஜெஹோவா ஆயிரக்கணக்கான ஏஞ்சல்களைப்[i] படைத்தார் என்றும் அவர்களுள் தனது கட்டளைக்குக் கீழ்படியாதவர்களை அவர் சபித்தார் என்கிறார்கள். சபிக்கப்பட்ட ஏஞ்சல்களுள் ஒருவனே இந்த சாத்தான் என்றும் அவர்கள் சொல்வதுண்டு.

இந்த உரையாசிரியர்கள் எங்கிருந்து இந்தப் புராணத்தைக் கண்டுபிடித்தார்கள்? இந்தத்தகவல்களின் மூலம் எது?  பைபிளிலில் இதைப்பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. இயேசுவின் தாயான மரியாளின் கணவர் யோசேப்புவின் கனவில் வந்ததுபோல் யாராவது ஏஞ்சல் வந்து இவர்களது கனவிலும் சொன்னதோ?

இயேசு, சாத்தான் — இவர்களில் வல்லமையானவர் யார்?

சாத்தானைப்பற்றிய இவர்களது கட்டுக்கதையை நம்பினாலும்கூட இயேசுவைக் கடவுள் என்று ஒப்பமுடியாது.     கடவுளின் சாபத்தால் சாத்தான் தனது ஏஞ்செல் நிலையிலிருந்து வீழ்ந்தான் அல்லவா? இயேசு கடவுளாக இருந்தால், சாத்தான் அஞ்சாமல் அவருக்கு அருகில் வருவதற்கு முடியுமா? இயேசுவைக் கண்டதுமே அவன் அஞ்சி நடுங்கி ஓடிப்போய் இருக்கவேண்டுமே! அல்லது, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி இருக்கவேண்டும் அல்லவா?.

நமது கிராமங்களில் பேய், பிசாசு, துஷ்ட ஆவிகளால், பீடிக்கப்பட்டவர்கள் மாடசாமி, கருப்பசாமி, ஐயனார், சங்கிலி பூதனார் போன்ற கிராமதேவதைகளின் சன்னிதிக்கு வரும்போது அவர்களைவிட்டு ஓடிவிடுவதைக் காணலாமே! சாமியாடிகளைக்கண்டால் மனிதரைப் பிடித்து ஆட்டும் பேய்கள் அஞ்சி நடுங்குவதைத்தானே காணமுடிகிறது?

இங்கே நிலமை இப்படியிருக்க, அங்கே சாத்தானுக்கு இயேசுவை பிடிப்பதற்கு எந்தவித அச்சமும் இருந்ததாக பைபிளிலிருந்து அறியமுடியவில்லை. சான்றாக கீழ்கண்ட வசனத்தைப்பாருங்கள்.

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குகொண்டு போகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்கு பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடையக் குமாரனேயானால், இந்த கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்” — (மத்தேயு, 4:1-4).

இதே நிகழ்வினை லூக்கா(4:1-13)வின் சுவிஷேசத்திலும் காணலாம்[ii].

      சாத்தான் இயேசுவைப்பிடித்து, பட்டினிபோட்டு, பல இடங்களுக்கு இழுத்து சென்று அலைக்கழித்தது, இந்த வசனங்களில் இருந்து தெளிவாகப் புலனாகிறது மேலும், இயேசுவுக்கு சாத்தானை தூரவிரட்டும் அளவிற்கோ, அல்லது தன்னிடம்   நெருங்குவதைத் தடுக்கும் அளவிற்கோகூட சக்தி இல்லை என்பதும் தெரிகிறது.

சாத்தான் உங்கள் தேவனைவிடவும் திறமையானவனா?

      மத்தேயுவின் சுவேஷேசத்தில்(4:1) இருக்கும் ‘அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குகொண்டு போகப்பட்டார்,’ என்பதைச் சுட்டிக்காட்டி, எமது வாதத்தினை மறுக்கலாம்.

பரிசுத்த ஆவியின் அனுமதியின் பேரிலேதான், சாத்தான் இயேசுவைப்பிடித்து பரிசோதனை செய்தான் என்றும் நீங்கள் வாதிடலாம்.

அப்படியானால் வேறு சில வினாக்கள் அங்கே எழுகிறது.

 1. இயேசுவை வனாந்திரத்துக்கு அனுப்பி சாத்தானைக்கொண்டு பரிசோதிக்கவேண்டிய அவசியம் பரிசுத்த ஆவிக்கு வந்தது ஏன்?
 2. சாத்தான் இயேசுவைப் பரிசோதித்து, இவர் தேவ குமாரன் என்று சான்றிதழ் வழங்கினால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்று பரிசுத்த ஆவி எண்ணியதா?
 3. உங்களது திரித்துவக்கோட்பாட்டின்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்கிறீர்களே. அதன்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகியன வேறுவேறு அன்று என்றே பொருள்படும். சுதன் சாத்தானால் சோதிக்கப்பட்டால் பிதாவும், பரிசுத்த ஆவியும்  சோதிக்கப்பட்டதாகத்தானே அர்த்தமாகிவிடும்?

   உங்கள் தேவனாகிய ஜெஹோவா, இயேசுவை சோதனை செய்வதற்கு சாத்தானை அனுமதித்தார் என்பது சாத்தான் அவரைவிட சக்திவாயந்தவன் என்பதை அவரே ஒத்துக்கொள்வதாகிவிடாதா? அன்றி, அவன் உங்கள் ஆண்டவரைக்காட்டிலும் சக்தி குறைந்தவனா இல்லையா என்று அவருக்குத்தெரியாதா?

ஆனால் ஒன்று தெரிகிறது — சாத்தானால் சோதிக்கப்பட்டால் மக்கள் இயேசுவை நம்புவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதே அது.

      சாத்தானுடைய சோதனைகள் என்னென்ன என்பதையும், அவற்றையெல்லாம் உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மெய்யாகிலும் வெற்றிகொண்டாரா என்பதையும் ஆராய்வோம்.

வனாந்திரத்தில் இயேசுவின் உண்ணாவிரதம்:

இயேசுவுக்கு சாத்தான் வைத்த சோதனை நாற்பதுநாள் உண்ணாவிரதத்தில் தொடங்குகிறது. உண்ணாவிரதமிருந்த இயேசுவுக்குப் பசித்தது. அப்போது அவரிடத்திலே கல்லை அப்பமாக மாற்றும்படி சாத்தான் சொன்னான். அதனைச் செய்ய இயேசுவால் முடியவில்லை[iii].

இதுதானா பரிட்சையில் தேறும் லட்சணம்? வேறென்ன அவர் செய்தார்?

அவர், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை, தேவனின் வாய்மொழிகளாலும் வாழ்கிறான், என்றல்லவா பதிலளித்தார்!

கல்லை அப்பமாக்காமல் இப்படி அவர் மடத்தனமாக பதிலளித்தது ஏன்? அவருக்குப் பசி இல்லை என்பதால் அவர் அப்படிப் பேசவில்லை என்று நீங்கள் பதில் கூறலாம். ஆனால் அவருக்குப் பசி எடுத்தது என்பதை, மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிஷேசங்கள் தெளிவாகச் சொல்லுகின்றனவே! — (மத்தேயு, 4:2).

அவர் பசியை வென்றுவிட்டார், ஆகவே அவருக்கு பசிக்கவில்லை, எனவே அவர் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் வாதிடலாம். வனாந்திரத்தில் அவருக்கு பசி ஏற்பட்டதாக பைபிள்சொல்வதால் உங்கள் வாதத்தை ஏற்கவியலாது.

தேவவார்த்தைகளால் மனிதனுக்குப் பசியாறும் என்ற இயேசுவின் கருத்து உண்மையாக இருந்தால் தேவவார்த்தைகளைப்  பயன்படுத்தி பசியாறி இருக்கலாமே?

இன்னொருசமயம், தனது பசிதீர்க்கக் கனிகொடுக்காத அத்திமரத்தைக்கண்டு அவர் கடும்கோபம்கொண்டு சபிக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே!

ஆகவே, பசியில்லாததாலோ, பசியை வென்றுவிட்டதாலோ, அல்லது தேவவார்த்தையின் மகிமையால் பசியை வென்றுவிட்டதாலோ, இயேசு கற்களை அப்பமாக மாற்றவில்லை என்பது சரியாகாது. அப்படி மாற்றுவதற்கு எந்த தெய்வீக சக்தியோ மந்திர ஆற்றலோ அவருக்கு இருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

தேவாலய கோபுர உச்சியிலிருந்து இயேசு குதிக்கமறுத்தது ஏன்?

Jesus on piancle with satanசாத்தான் இயேசுவுக்கு வைத்த இரண்டாவது பரிக்ஷைதான் என்ன? சாத்தான் ஒரு தேவாலயத்தின் கோபுர உச்சிக்கு இயேசுவைக்கொண்டு சென்று, அங்கே இருந்து கீழே குதி, ஏஞ்சல்களான பிதாவின் ஏவலர்கள் காப்பாற்றுவார்கள், என்றதுதான்[iv] இரண்டாம் சோதனை.

இந்தத்தடவையும் இயேசு எதையும் செய்யவில்லை.

உண்மை அவ்வாறு இருக்க, சாத்தானை ஏசு தோற்கடித்தார் என்று இன்னமும் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?

சரி, சாத்தானுக்கு ஏதாவது பதில் சொன்னாரா, உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து?

ஆமாம், அவர் சாத்தானை நோக்கி கர்த்தராகிய ஜெஹோவாவை பரிச்சயம் பண்ணிப்பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்வதாக சொன்னார். அபத்தத்திலும் அபத்தம் அல்லவா இது? சாத்தானின் சவாலை ஏற்று, இயேசு  கீழே குதித்திருக்கவேண்டுமே.

சகிப்புத் தன்மையால், பொறுமையால்தான், கோவில் விமான உச்சியிலிருந்து இயேசு தாழக்குதிக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம்.

இயேசு உண்மையிலே பொறுமையின் வடிவமாகவே எப்போதும் இருந்திருந்தால் யாரையும் கடிந்துகொண்டிருக்கமாட்டாரே! பல சமயம் அநியாயமாக சபிக்கவும் செய்திருக்கமாட்டாரே! பொறையுடைமையால் அல்ல, பயத்தினால்தான் இயேசு கோயிலின் சிகரத்திலிருந்து கீழே குதிக்கவில்லை.

பரிசுத்த ஆவியின் ஆணைப்படி சாத்தான் இயேசுவைப் பரிசோதித்தான்; அதனால் அப்படி அவர் செய்யவில்லை என்றுகூட நீங்கள் வாதிடலாம். அப்படியானால்கூட, பரிசோதிப்பது சாத்தானின் கடமை என்றால் — அதில் வெற்றிபெறுவது இயேசுவின் கடமை அல்லவா? அதைவிட்டு நழுவுவது சரியாகாது.

சாத்தானின் சோதனைகளை ஏமாற்றுவது, அதற்கு பதிலாக ஏதேதோ தத்துபித்தென்று அர்த்தமின்றி பேசுவது,  பரிசுத்த ஆவி மற்றும் பிதாவின் ஆணையை மீறுவதாகாதா?

ஜெஹோவாவின் பூரண அருள் இயேசுவுக்கு இருந்திருந்தால், சாத்தானின் சவாலை ஏற்று, ஏஞ்சல்கள் காப்பாற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கையோடு, கோயிலின் சிகரத்திலிருந்து அவர் கீழே குதித்திருக்கமுடியாதா? அல்லது அங்கிருந்து சாத்தானையாவது கீழே தள்ளியிருக்கமுடியாதா? அல்லது, தான் கீழே குதித்தது போன்றதொரு மாயத்தோற்றத்தைச் சாத்தானுக்குக் காட்டியிருக்கலாமே? இவை எதையும் செய்யவில்லையே, உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து!

மலையுச்சியில்  இயேசு நடுநடுங்கியது ஏன்?02 Temptation

இயேசுவைப்பிடித்து, பம்பரம்போல சுழற்றி, ஒரு மலையின் முகட்டுக்குகொண்டு சென்ற சாத்தான், உலகில் உள்ள எல்லா அரசுகளையெல்லாம் காட்டி, நீ எனக்கு முன் மண்டியிட்டால், இவை அனைத்தையும் உனக்குத் தருவேன், என்றான்.

அச்சத்தால் வெலவெலவென நடுநடுங்கிய இயேசு தத்துபித்தென்று உளறினார்[v].

சாத்தானை மெய்யாகிலும் இயேசு தோற்கடித்திருந்தால் அவரை வெற்றியாளர் எனலாம். மாறாக சாத்தான்தான் இயேசுவை  நடுநடுங்கவைத்து வெற்றிபெற்றிருக்கிறான் என்பதுதானே உண்மை?

ஆகவே, பிதா-சுதன்-பரிசுத்த ஆவியாகிய திரித்துவரும் சாத்தானைக்காட்டிலும் வல்லமைகுறைவானவர்கள் என்பது தெரிகிறது.

சாத்தானை வெல்லமுடியாதவர் எப்படிக் கடவுளாக இருக்கமுடியும்?

மேலும், எந்தக்கொடுமையும் செய்யாமல் இயேசுவைப் பாவமே என்று விட்டுவிட்ட சாத்தான், ஜெஹோவாவைவிடக் கருணையுள்ளவராகவே தெரிகிறார்.

பன்றிகளைத் தீயஆவிகளுக்கு இயேசு பலிகொடுத்தது முறையா?

   08 Pigs ஒருசமயம், சில தீய ஆவிகள் பிடிக்கப்பட்ட மனிதனை இயேசுவிடம் கூட்டிவந்து, ஆவிகளை விரட்டச்சொன்னார்கள். அவனை விட்டுவிட, ஆவிகள் இயேசுவிடம் ஆயிரம் பன்றிகளை பலியாகக்கேட்டன. தீயசக்திகளின் இந்த அநியாயமான பேராசையை நிறைவேற்றிக்கொள்ள  ஆயிரம் பன்றிகளைக் கடலில் மூழ்கடித்துக்கொன்றுவிட இயேசு சம்மதித்தார்[vi]. இரண்டாயிரம் பன்றிகளை இழந்துவிட்ட அதன் உரிமையாளர்க்கு எவ்வளவு பெரிய நஷ்டம் இது![vii]

இயேசுவின் தெய்வீக சக்திக்கு நேர்மைக்கு எவ்வளவு பொருத்தமான உதாரணம் இதுவென்று பாருங்கள்!

பசியால் சாபம்விட்ட இயேசு, தானே உண்ணாவிரதம் இருந்தாரா? 

ஒருசமயம் பசியின்வேகத்தில், தனக்குக் கனிகொடாத அத்திமரத்தை அழிந்துபோகும்படி சபித்தார் இயேசு என்பதை நாம் அறிவோம்.

அது உண்மையிலேயே ஒரு பெரிய அற்புதம்தான்! செயற்கரிய அருஞ்செயல்தான்!

மரங்கள் பூத்துக் காய்த்து கனிவதற்கும் பருவம் இருக்கிறதல்லவா? அப்படியே இருந்தாலும், கனிகளை  நாம் பறித்தால்தானே நமக்கு கனிகள் கிடைக்கும்?

நமக்கு பழங்கள் தேவையா, இல்லையா என்பதை மரம் எப்படி அறியும்? கடவுளின் நியதிப்படியேதான் பருவகாலங்களும், மரங்கள் பூப்பதும் காய்ப்பதும், காய்கள் கனியாவதும் நிகழ்கின்றன.

இயேசு மெய்யாகிலும் தேவனாக, தேவகுமாரனாக இருந்திருந்தால் அப்போது அவருக்கு கனிகிடைக்காதற்கு அவரேதான் காரணமாக இருக்கவேண்டும்!. அப்படியானால், தன்னைத்தானே  நொந்துகொள்ளாமல், குற்றமில்லாத அந்த அத்திமரத்தை ஏன் சபித்தார்?  தாளாத பசியால் ஆத்திரம் அடைந்து, சாபம்விட்ட இயேசுவின் செயல் சரிதானா?

ஒருநாள்கூடப் பட்டினியை, பசியைத் தாங்கமுடியாமல் அத்திமரத்துக்கு அழிந்துபோகக்கடவது என்று சாபம்விட்ட ஏசு, நாற்பது நாற்கள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி?

நிச்சயம் அது பொய்தான்.

ஏசுவால் பசியைத்தாங்கமுடியும், ஆனால் தனது மகிமையை சீடர்களுக்கு காட்டுவதற்காகத்தான் அத்திமரத்தை சபித்தார்,’ என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் அத்திமரத்தினைக் கனிகொடுக்கும்படி செய்திருந்தால், அது நிச்சயமாக அற்புதமாக இருந்திருக்கும். அது அனைவரது பசியையும் போக்கியிருக்கும். அதனால் அவரது சீடர்களுக்கு இயேசுவின்மீது இருந்த நம்பிக்கை இன்னும் உறுதியாயிருக்கும்.

சரியான காலத்தில் பொருத்தமான செயல்களைச் செய்வது இயேசுவுக்கே தெரியாத செயலாகத்தான் தெரிகிறது. அவர் நாற்பதுநாள்கள் உண்ணாவிரதம் இருந்தது உண்மையிலே நடந்திருந்தாலும், அது அவரது இச்சைப்படி  நிகழ்ந்திருக்கவாய்ப்பில்லை. சாத்தானின் காவலில், காட்டிலே சிறைப்பட்டு இருந்ததால், அவருக்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை.  யாரும் உணவைக்கொண்டுவந்து கொடுக்காததாலும், உணவை அவரே தேடிக்கொள்ள முடியாததாலும் அவர் உண்ணாவிரதம் இருந்ததுதான் உண்மை.

நீர்மேல் நடத்தல் போன்றவை அற்புதங்களா?Jesus walks on water

இயேசு நீர்மேல் நடந்தார் என்று புதிய ஏற்பாடு சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் அது ஒரு அற்புதம் ஆகாது.

ஜலஸ்தம்பம் என்னும் இந்த செயல் சாமானியார்களாலும் தற்காலத்தில் நடத்தப்படுகிறது[viii]. தற்காலத்தில் செப்படிவித்தைக்காரர்கள், மாயாஜாலக்காரர்கள், மந்திரவாதிகள் போன்றோர் செய்யும் வித்தைகளை இயேசு அந்தக்காலத்தில் செய்ததாகச் சொல்லப்படுகிறது. மிகச்சாதாரணமான அவற்றை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை.

இறந்துபோனவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு தேவனா?

     மரித்துப்போனவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு தேவன் என்று சொல்லுகிறீர்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் (26:23)[ix] மற்றும் வெளிப்படுத்தின விஷேசம் (1:5)[x] ஆகிய பைபிள்வசனங்கள் தெளிவாக மரித்தோரிலிருந்து எழுந்தவர்களில் இயேசுவே முதலானவர் என்று சொல்வதால் இயேசு செத்துப்போனவர்கள் யாரையும் உயிர்ப்பிக்கவில்லை என்பது உறுதியாகிறது. இயேசு மரித்தவர்கள் யாரையாவது உயிர்ப்பித்திருந்தால் அவர்களில் யாரவதல்லவா முதலாவதாக உயிர்த்தெழுந்த மனிதராக இருந்திருப்பார்கள்? மரித்து உயிர்த்தெழுந்தபின்னர் இயேசு வேறுயாரையும் உயிர்த்தெழச் செய்யவில்லையே! ஆகவே, உயிர்த்தெழுந்த மரித்தவர்களில் இயேசுதானே கடைசியானவராய் இருந்திருக்கவேண்டும்?

மரித்துப் போனவர்களில் — உயிர்த்தெழுந்தவர்களில் முதலானவர்தான் இயேசு; ஆனால், உயிர்த்தெழவைக்கப்பட்டவர் அல்லர் இயேசு, என்று நீங்கள் வாதிடலாம். இயேசுவால் உயிர்ப்பிக்கப்பட்ட மரித்தவர்களும், உயிர்த்தெழுந்தவர்கள்தான் என்பதை யாராவது மறுக்கமுடியுமா? நேற்றிரவு இடியோசைகேட்டு விழித்துக்கொண்டேன் என்று ஒருவர் சொன்னால் அவரே விழித்ததாகத்தானே பொருள்? மரித்துப்போன ஒருவர் உயிர்த்தெழவைக்கப்பட்டாலும் அவர் உயிர்த்தெழுந்தவர்தானே?

 இயேசு தானே உயிர்த்தெழுந்தாரா?

அடுத்து நமக்கு எழும் சந்தேகம்,  இயேசு தனது சக்தியினாலேயே உயிர்த்தெழுந்தாரா என்பதுதான். நிச்சயமாக தனது சக்தியினாலே அவர் உயிர்த்தெழவில்லை. அவரது தேவனால்தான் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதைக்கீழ்கண்ட விவிலிய வசணங்கள் தெளிவுபடுத்துகின்றன:

“நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.(ரோமர் 4:24).

“ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.”  — (அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:15)

கொரிந்தியர் 15ல் காணப்படும் கீழ்கண்ட வசனங்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு யார் காரணம் என்பதை சொல்லவில்லை:

 “கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?  மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே! — (கொரிந்தியர் 15: 12-13).

ஆனால், பின்வரும் வசனம் இயேசு அவரது தேவனாலே உயிர்த்தெழச்செய்யப்பட்டார் என்று தெளிவாகச் சொல்கிறது:

“மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.” — (கொரிந்தியர் 15:15).

இயேசு மரித்தவர்களில் உயிர்த்தெழுந்தவரில் முதலானவர் என்ற விவிலியத்தின் கருத்து மெய்யானதென்றால், அவர் மரித்தவர்களை உயிர்த்தெழச்செய்தார் என்று அதே விவிலியம் சொல்லுவது தவறானதாகத்தானே இருக்கமுடியும்?

குறிப்புக்கள்

[i]  ஏஞ்சல் என்பதைத் தேவதை என்று மொழிபெயர்ப்பு செய்வது கிறிஸ்தவர்களின் வழக்கமாக இருக்கிறது. ஏஞ்சல் என்பதும், தேவதை என்பதும் வேறுவேறு. ஹிந்துப் புராணங்களில் சொல்லப்படும் தேவ, தேவதைகளுக்கு இருக்கிற சுதந்திரம், ஜெஹோவா என்ற யூததேவனின் அடிமைச் சேவகர்களான் ஏஞ்சல்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. –(சிவஸ்ரீ).

[ii] இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாள்கள் முடிந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல் அப்பமாகும்படி சொல்லும்,” என்றான்.

அவர் பிரதியுத்தரமாக, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்றார்.

பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து, “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும்,” என்று சொன்னான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்றார்.

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக்கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது,” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே,” என்றார்.

பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் — (லூக்கா 4:1-13).

[iii] அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்,” என்றான். அவர் பிரதியுத்தரமாக “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு, 4:1-4).

[iv] அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக்கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுப் போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது,” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு, 4: 5-7).

[v] மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்,” என்று சொன்னான்.

அப்பொழுது இயேசு, “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு 4:8-10).

[vi]  அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு, விட்டு பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில்மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும் — (மாற்கு 5:13).

[vii]  ஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை.  நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது.

[viii]  ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம் அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், என்பது வரலாறு — (சிவஸ்ரீ.).

[ix] “ தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான் — (அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:23).

[x] உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. — (வெளிப்படுத்தின விஷேசம் 1:5).

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

21 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8”

 1. பைபிள் வசனங்களை மாற்றாமல் போட்டதுக்கு நன்றி

 2. Uyiron “பைபிள் வசனங்களை மாற்றாமல் போட்டதுக்கு நன்றி”
  நன்றிக்கு நன்றி. பைபிள்வசனங்களை மட்டும் வாசித்தால் போதாது நண்பரே. அவற்றைப்பற்றிய விமர்சனங்களையும் வாசித்தல் நல்லது. விவாதிப்பது இன்னும் நல்லது.
  இந்தக்கட்டுரைத்தொடர் முழுவதும் விவிலிய வசனங்கள் மாறாமல் கொடுக்கப்பட்டுவருகின்றன. ஸ்ரீ சட்டம்பிசுவாமிகளின் மூல நூலான கிறிஸ்துமதச்சேதனத்திலும் சரி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் சரி, விவிலியவசனங்கள் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பும் கிறிஸ்தவர்களுடையதுதான். இணையத்தில் தேடி கொடுத்துவருகிறேன். வசனங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டாலும் அந்த அத்தியாயத்தை வாசித்துப்புரிந்து கொண்டே மொழிபெயர்ப்பை செய்துவருகின்றேன்.
  பைபிளை ஆதாரமாக்கொண்டு மிகப்பிரமாதமாக தர்க்கப்பூர்வமாக விவாதத்தினை ஸ்ரீ ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் முன்வைத்திருக்கிறார்.
  உங்களால் முடிந்தால் விருப்பம் இருந்தால் பைபிள் வசன ஆதாரங்களோடு ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் கருத்துக்களை மறுத்து வாதிடலாம்.

 3. விவிலியத்தின் வசனங்களை உள்ளது உள்ள படி கையாண்டு அதில் உள்ள முரண்களை எடுத்துறைக்கிறார் சட்டாம்பி ஸ்வாமிகள். அதைத் தமிழாக்கம் செய்துள்ள ஸ்ரீ சிவஸ்ரீவிபூதி பூஷண் அவர்களது வ்யாசத் தொடரை வாசிக்கும் சிந்திக்கும் தமிழ் ஹிந்து எவரொருவரும் க்றைஸ்தவத்தினை நிச்சயம் அறிவு பூர்வமாக புறக்கணிப்பார்.

 4. எல்லாம் தெரிந்தது போல தம்பட்டம் பேசி கருத்துக்களை மாற்றி உங்கள் ஆசைதீர கட்டுரை வரைகிறாயே.. உன் விருப்பப்படி வேதாகமத்திற்கு விளக்கம் கொடுக்க நீ யார்.. மண்ணான நீ நம் மன்னாதி மன்னவருக்கு முன் வெறும் தூசி.. அவர் உன் உயிரை மட்டுமல்ல, ஆத்துமாவையும் அழிக்கக் கூட்யவர்.. பிசாசு உன்னை தூண்டியதால் அந்த சாத்தானுக்கு புகழ் ஏற்படுத்துறாயா.. அதே சாத்தான் உன்னைக் கொண்டு பெருமை பேசி திரியும் காலம் இன்னும் கொஞ்சந்தான்.. சாத்தான் அதே தேவனுடைய வசனத்தை பாவித்து தேவன் முடக்க முயன்று முடியாதே போனது.. அது போல நீயும் தேவ வசனத்தால் தேவனுக்கு எதிராக பேசும் உன் வீரம் சப்பை சப்பையாய் குப்பையாகும்.. 60 வயதாகும் போது மண்டய போடும் நீ 6 கோடிக்கும் அதிக வருடம் வாழுகின்ற கடவுளுக்கு நக்கல் பண்றியாக்கும்…

 5. சகோதரனே ,ஒருமரம் நல்லதென்று அதன் கனி கொண்டு அறியலாம் உங்கள் வார்த்தைமூலம் உங்கள் மதப்பித்து எப்படியென்று அறிந்து கொள்ளமுடிந்தது நன்றி . பிறேமதாசன்

 6. ஆத்மாவை அழிக்கும் வல்லமை படைத்த உங்கள் அறிவார்ந்த கடவுளுக்கு அந்த அற்ப
  சாத்தானை அழிக்கும் ஆற்றலில்லையா? அது என்ன வெங்காய வல்லமை?

  ///6 கோடிக்கும் அதிக வருடம் வாழுகின்ற கடவுளுக்கு/// 6 கோடிக்கும் அதிகமாக என்றால் ஒரு 7 கோடி இருக்குமா? OK 7 கோடிக்கு முன்னால் உங்கள் கடவுள் எங்கே இருந்தாருங்க? என்ன செய்து கொண்டிருந்தார்.

 7. Uyiron
  முதலில் கட்டுரையைப்படிக்கவேண்டும். அதில் உள்ளக்கருத்துக்களைப்புரிந்துகொண்டு ஆதாரப்பூர்வமாக பைபிளின் வசனங்களோடு மறுக்கவேண்டும்.
  உயிரோன்
  “கருத்துக்களை மாற்றி உங்கள் ஆசைதீர கட்டுரை வரைகிறாயே.. உன் விருப்பப்படி வேதாகமத்திற்கு விளக்கம் கொடுக்க நீ யார்..” பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை அப்படியே ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் கொடுத்திருக்கின்றார். அதன் பொருளை எந்தவிதத்திரிபும் அவர் செய்யக்கிடையாது. இங்கே அவர் பைபிள் வசனங்களுக்கு தவறானப்பொருள் கொடுத்ததாக சொல்லும் தாங்கள் அதனை மெய்பிக்கவேண்டும். பைபிளுக்கு எந்த புதிய விளக்கத்தையும் கொடுக்க ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் முயற்சிக்கவே கிடையாது. பைபிள் பைபிள் என்று பைபிளிலே இல்லாதக்கருத்துக்களை இயேசுவுக்கு கிறிஸ்தவப்பிரச்சாரகர்கள் புனைந்தேத்துகிறார்கள் என்பதே அவரது ஆணித்தரமான வாதம். இன்னும் தியாலஜியெல்லாம் படித்தவர்களையெல்லாம் கூட்டிவந்தேனும் அவரது வாதங்களை ஆதாரப்பூர்வமாக புத்தியைக்கொண்டு தர்க்கத்தைக்கொண்டு மறுத்துவாதாடுங்க.
  பொதுவெளியில் எல்லோருக்கும் பைபிளைக்கொடுக்கிற கிறிஸ்தவர்களுக்கு அதைப்படித்து புரிந்துகொள்ளுகிற உரிமை அனைவருக்கும் உண்டு என்று தெரியாதா? ஆதாரமில்லாமல் மிஷனரிகள் விடுகிற கதைகளையெல்லாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்று யாரையும் நீங்கள் கட்டாயப்படுத்தமுடியாது.

 8. உயிரோன்
  “எல்லாம் தெரிந்தது போல தம்பட்டம் பேசி கருத்துக்களை மாற்றி உங்கள் ஆசைதீர கட்டுரை வரைகிறாயே.”. எல்லாம் தெரிந்தவர் எல்லாம் வல்லவர் இறைவன், கடவுள், பரம்பொருள் என்பது எமது ஹிந்து மதத்தினரின் புரிதல். அப்படிப்பட்ட குணங்கள் எதுவுமே இயேசுவுக்கும், ஜெஹோவாவுக்கும் கூடத்தெரியாது என்பதை இந்தக்கட்டுரையின் முந்தையப்பகுதிகளில் பைபிளிலிருந்து ஆதாரங்களோடு ஸ்ரீலஸ்ரீ சாமிகள் எழுதியிருக்கிறார். அதைப்படித்து ஆதாரத்தோடு மறுத்துப்பேசுங்க. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பிகாலத்திலேயும் சரி அதற்குப்பின்னர் இன்றுவரையிலும் அவரது ஆணித்தனமான வாதங்களை உடைக்க எவராலும் முடியவில்லை. முடிந்தால் இன்னும் நான்கு தியாலஜிகாரங்களைக்கூட்டிவந்து விவாதம் செய்யுங்க.

 9. உயிரோன்
  “மண்ணான நீ நம் மன்னாதி மன்னவருக்கு முன் வெறும் தூசி.. அவர் உன் உயிரை மட்டுமல்ல, ஆத்துமாவையும் அழிக்கக் கூட்யவர்.. ” நான் மண்ணல்ல, என்னுடலும் மண்னல்ல.நான் உடலல்ல. உடலை இயக்குகிற பிராணனும் அல்ல. சைதன்யமான ஆன்மாவாவேன். அந்த ஆன்மாவை யாரும் அழிக்கமுடியாது. உங்க இயேசு மட்டுமல்ல அவங்க அப்பன் அந்தக்கொடுங்கோலன் பேராசைப்பிடித்த ஜெஹோவாவும்தான். ஆன்மா என்றக்கோட்பாடெல்லாம் பைபிளில் கிடையாது. உடல்மட்டும்தான் இருக்கிறது. செத்துப்போனவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் மறுபடியும் உடலோடு உயிர்த்தெழுந்து சொர்கத்தில் புலனின்பம் அனுபவிப்பார்கள் என்று பைபிள் சொல்லுவதால், உடலைத்தவிர எந்த ஆன்மாவும் கிடையாது. ஆன்மா என்பது என்ன? அதன் குணங்கள் என்ன? இந்தக்கேள்விகளுக்கு பைபிளிலிருந்து வசனங்களோடு பதில் அளியுங்கள். இது எமது சவால்.

 10. உயிரோன்
  “பிசாசு உன்னை தூண்டியதால் அந்த சாத்தானுக்கு புகழ் ஏற்படுத்துறாயா.. அதே சாத்தான் உன்னைக் கொண்டு பெருமை பேசி திரியும் காலம் இன்னும் கொஞ்சந்தான்.. சாத்தான் அதே தேவனுடைய வசனத்தை பாவித்து தேவன் முடக்க முயன்று முடியாதே போனது”. யார் அந்தப்பிசாசு? அவனைப்படைத்தது யார்? எப்போது படைக்கப்பட்டான் அவன்? அவன் புத்திக்கெட்டது ஏன்? கெடுத்தது யார்? அந்த சாத்தானை இன்னும் உயிரோடு ஏன் விட்டுவைத்திருக்கிறார் உங்கள் ஜெஹோவா? இயேசு அவரை ஏன் அழிக்கவில்லை. அவனை அழிக்கமுடியாத ஜெஹோவா, தோற்கடிக்கமுடியாத இயேசு இவர்கள் எல்லாம் கடவுளா? ஏன் எப்படி பதில் கூறவாருங்கள். சும்மா புலம்பக்கூடாது. பொய் கடவுளாகிவிடமுடியாது. சாத்தானும் கிடையாது, அவனைப்படைத்த ஜெஹோவா கடவுள்கிடையாது. இதற்கு முந்தையப்பகுதிகளில் ஜெஹோவாவின் கடவுள்தன்மை உடைத்தெரியப்பட்டுவிட்டது. உங்க பரம பிதா கொடுத்த புத்தியைவைத்து விவாதிக்கவேண்டும். ஆதாரம் வேண்டும் தர்க்கத்திறனமும் வேண்டும்.வெறும் நம்பிக்கைகளை யாம் ஏற்பதற்கில்லை. அதை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.

 11. உயிரோன்
  “சாத்தான் அதே தேவனுடைய வசனத்தை பாவித்து தேவன் முடக்க முயன்று முடியாதே போனது.. அது போல நீயும் தேவ வசனத்தால் தேவனுக்கு எதிராக பேசும் உன் வீரம் சப்பை சப்பையாய் குப்பையாகும்.. 60 வயதாகும் போது மண்டய போடும் நீ 6 கோடிக்கும் அதிக வருடம் வாழுகின்ற கடவுளுக்கு நக்கல் பண்றியாக்கும்…”
  சாத்தானை உங்கள் தேவனாகிய இயேசு எதுவும் செய்யவே முடியவில்லை. இயேசுவை சாத்தான் படாதபாடு படுத்தியக்கதை முந்தையப்பகுதியில் விவாதிக்கப்பட்டது. படித்துவிட்டு விவாதியுங்கள். முடியலையா யாராவது பெரிய புத்திமானைக்கூப்பிட்டு வந்து விவாதியுங்கள்.
  ஆறுகோடிக்கும் அதிகவருடம் வாழ்ந்தாரா ஜெஹோவா? அப்படியானால் அதற்கு முன்னால் அவர் இருக்கவில்லையா? அவரைப்படைத்தது யார்? ஜெஹோவாவே கடவுள் கிடையாது என்பதுதானே ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளுடையவாதம்.
  இங்கே வீரம் தீரம் பற்றியெல்லாம் யாரும் பேசவே கிடையாது. உண்மை சத்தியம் அதனைப்பற்றியத் தேடல் விவாதம் உண்டு. அதை அறிவார்ந்த முறையில் நடத்தவேண்டும். பைபிளில் இருப்பதெல்லாம் தேவ வசனம் என்பது உங்கள் நம்பிக்கை. அதை ஹிந்துக்களாக இருக்கிற நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. பைபிளிலே கூட அந்தவசனங்கள் ஜெஹோவா வானத்தில் இருந்து மனிதர்களுடைய மண்டையில் இறக்கியதற்கு ஆதாரம் கிடையாது. சும்மா கதைவிடாதீர்கள்.

 12. உயிரோன்
  “பிசாசு உன்னை தூண்டியதால் அந்த சாத்தானுக்கு புகழ் ஏற்படுத்துறாயா.. அதே சாத்தான் உன்னைக் கொண்டு பெருமை பேசி திரியும் காலம் இன்னும் கொஞ்சந்தான்”.
  சாத்தானுக்கு புகழ் ஏற்படுத்துவது நான் அல்லன். இயேசு ஜெஹோவா போன்ற உங்க தலைவர்கள்தான். அவனை இன்னமும் ஏன் அவர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள். அந்த கொடிய நச்சுப்பாம்பை ஏன் இன்னும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் படுத்தியப்பாட்டையெல்லாம் தாங்கிக்கொண்டு அவனை எதுவுமே செய்யமுடியாத இயேசு எப்படி அவனைவிட வல்லமையுள்ளவனாக இருக்கமுடியும்? ஆதாரத்தோடு தர்க்கப்பூர்வமாக விவாதிக்கவேண்டும்.

 13. பரலோகத்திலுள்ள பரமபிதாவே, Uyiron அறியாமையால் பிதற்றுவதை மன்னிப்பீராக!

 14. சாத்திரங்கள் ஒன்றும் காணார் — பொய்
  சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
  கோத்திரம் ஒன்றா இருந்தாலும் — ஒரு
  கொள்கையிற் பிரிந்தவனை குலைத்திகழ் வார்;
  தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் — தமைச்
  சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்.

  கண்ணிலா குழந்தை கல்போல் — பிறர்
  காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;
  நண்ணிய பெருங்கலைகள் — பத்து
  நாலாயிரங் கோடி நயந்துநின்ற,
  புண்ணிய நாட்டிலே — இவர்
  பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.

  நெஞ்சு பொறுக்கு திலையே — இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…

 15. யாகத்தி லேதவ வேகத்திலே — தனி
  யோகத்தி லேபல போகத்திலே
  ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
  அருளினி லேஉயர் நாடு — இந்த

  பாருக்குள்ளே நல்ல நாடு — எங்கள்
  பாரத நாடு.

 16. Uyiron,

  உங்கள் பிள்ளைகள் உங்கள் சொல்லை மீறினால், அவர்களை சபிதுவிடுவீரோ? கருணையேவுருவான கடவுள், அவர் படைத்த தேவதைகளில் சில அவர் சொல்லை மீறியதற்காக சபிப்பாரா?

  இயேசு கடவுள் என்றால் அது மதம். ஏசுவிற்கு எதிரி சாத்தான். என் பக்கம் நின்றால் உங்களுக்கு சுகபோகம், சாத்தான் பக்கம் நின்றால் நீங்கள் காலி என்று சொன்னால் அது அரசியல். உலக அரங்கில் மத போர்வையில் ஆக்கிரமிப்பு செய்யும் இரண்டு அரசியல் கட்சிகளால் உலகம் விரைவில் அழியும். (NATO vs OIC). அவர்களின் பலம் ஓங்க ஆள் பிடிதுக்கொண்டிருகிரார்கள். ஏற்கனவே இவை இரண்டும் இவ்வுலகின் பழைய பெரும் நாகரீகங்கள் பலவற்றை அழித்துவிட்டன. தங்களை தவிர பிற அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டு பின் தங்களுக்குள் சண்டையிட்டு, தாங்களும் அழிந்து, கடவுளின் அற்புத படைப்பான இவ்வுலகையும் அழிக்க முயலும் இவ்விருண்டு கட்சிகள் பின்பற்றும் __________________, கடவுள் என்ற இலக்கணத்திற்கு தகுமோ? தன் ரத்தத்தை பாலக கொடுப்பது தாய் குணம். எதிர்க்க முடியாதவர்களையும், வாயற்ற ஜீவன்களையும் கொன்று அவைகளின் ரத்தத்தை பாலக குடிப்பது பேய் குணம். கிருத்துவ கடவுள் உய்ய சாத்தான் தேவைப்படுகிறது. சாத்தான் இல்லையேல் கிருத்துவ கடவுளின் படைப்பும், அவருடைய செயல்களும் நியாயமற்றதும், அர்த்தமற்றதுமாகிவிடும்.

  இந்து மதத்தில் சாதி கொடுமை உள்ளதென்றால், அதை எதிர்த்து தங்களின் உரிமைக்காக போராட வேண்டும். அதை விடுத்து மதம் மாறுவதென்பது தற்கொலையாகும்!

  கிட்டபார்வையுடன் காசுக்காகவும், வேலைக்காகவும், வயிற்றை கழுவவும், மதம் மாறுபவர்கள், மதம் மாறுவதே மேல். இந்துவாக இருக்க அவர்கள் தகுதியற்றவர்கள். ஆன்ம ஞானம் பெற விழைபவர்கள் சிந்திக்க!

 17. “Which was the richest country in ancient times” என்று google செய்து பாருங்கள். இப்பொழுது அது ஏன் பிச்சைக்கார நாடாக மாறியது என்று யோசியுங்கள். “மெக்காலே கல்வி” என்ற சாபத்தினால் நம் நாடு தன் வரலாற்றை மறந்தது ஏனோ?

  சிபி சக்ரவர்த்தியும், மனு நீதி சோழனும், பாரியும், பேகனும் பிறந்த இந்து மதம் தழைத்தோங்கிய பாரதத்தில் சமணமும், பௌத்தமும் பிறந்தன. “கண்ணனுக்கு கண், பல்லுக்கு பல்” என்ற யூத மதம் தழைத்தோங்கிய அரேபிய பாலைவனத்தில், கிருத்துவமும், இசுலாமும் முளைத்தது.

  பாரத துணை கண்டத்தில் நிலவிய சூழல் அமைப்பில் (“எகோ சிஸ்டம்”) சமணமும், பௌத்தமும் பிறந்தன. இங்கு வாழ்தவர்களின் அணைத்து தேவைகளையும் இப்புண்ணிய பூமி பூர்த்திசெய்தது. அவர்களின் புரட்தேவைகள் எளிதாக பூர்தியானதால், அகத்தேவை பூர்த்திக்கான தேடல் அனைவருக்கும் அதிகமாயிற்று. வர்தமானரும் (மகாவீரர்), சித்தாரதரும் (புத்தர்) அரண்மனையில் பிறந்து அரச வாழ்வை துறந்து துறவியரானார்கள்.

  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் மணலாக, பகலில் மண்டையை பிளக்கும் வெயிலும், இரவில் நடுநடுங்கவைக்கும் குளிரும், மனித சமுதாயம் வாழ சிறிதும் ஒவ்வாத பாலைவனத்தில், கிருத்துவமும், இசுலாமும் முளைத்தது. மிக அத்தியாவசிய தேவைகளான தாகத்தை தணிக்க நீரும், பசிக்கு உணவும், பற்றாகுறையாக இருந்த இடத்தில், அவற்றிற்காக திருடுதல், கொள்ளையடித்தல், மாட்டிக்கொண்டால் தப்பிக்க கொலைசெய்தல் ஆகியவையே அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வுமுறையாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வினாடியும் போராட்டமாக வாழும் சமுதாயத்தில் இயல், இசை, நாட்டிய, கலை, கல்வி, அருவியல், கலாசாரம் ஆகிய எவையும் வளர்ந்திருக்க முடியாது. இவ்வாறான சூழலில் வாழும் மக்களிடம் அகத்தேவை பூர்த்திக்கான தேடல் இருக்க அறவே வாய்ப்பில்லை. அங்கு முளைத்த கிருத்துவமும், இசுலாமும் மதங்களல்ல. அவை அரசியல் ஆள்சேர்ப்பு கட்சிகளே.

  மேலும், அந்த பாலைவனத்தின் இருபுறத்திலும் மிக செழிப்பான நைல் நதியோடும் எகிப்தும், யுபெறேடஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகலோடும் மோசபடோமியாவும், பாரசீகமும் இருந்தன. அந்த சமுதாயங்கள் இயல், இசை, நாட்டிய, கலை, கல்வி, அருவியல் ஆகிய அனைத்திலும் முன்னேறிய கலாச்சாரங்களாக இருந்தன. ஆதலால், பொறாமை தலைத்தூக்க கிருத்துவம் மற்றும் இசுலாமின் கடவுள்களுக்கு எதிரியாக சாத்தானை வடிவமைத்தனர். அவர்களைவிட பலவிதத்தில் பலமடங்கு முன்னேறிய சமுதாயத்தினர்கள் வணங்கும் தெய்வங்களை சாத்தான் என்று கூறி, அவர்களையும், அவர்கள் தெய்வங்களையும், வழிப்பாட்டுத்தலங்களையும், சின்னங்களையும், மொழி, இன, சடங்கு மற்றும் கலாச்சாரங்களையும் அழிக்கத்துவங்கினர், அழித்தார்கள், அழித்துகொண்டிருக்கிறார்கள்.

  “An eye for an eye only ends up making the whole world blind.” – Mahatma Gandhi

 18. சபாஷ் ஜார்ஜ்! அருமையான வாதம். அற்புதமான கருத்துக்கள் ஆழ்ந்தஞானம்

  /////மதம் மாறுவதென்பது தற்கொலையாகும்!//// இதுவும் மிகமிக சரியான கருத்து . ஆனால் உங்கள் பெயர் ஜார்ஜ் என்று உள்ளதே. அதுதான் இடிக்கிறது. அது குறித்து விளக்கினால் நன்றாக இருக்கும். Please

 19. அன்பின் ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

  கவலையற்க. ஜார்ஜ் என்ற பெயரில் தர்க்க பூர்வமாக க்றைஸ்தவத்தை ஒரு அன்பர் மறுதலித்தால் என்ன குழப்பம். ஸ்ரீ தேவப்ரியா சாலமோன் அவர்கள் பெரும் பைபிளியல் அறிஞர். ஆயினும் விவிலியத்தின் குறைபாடுகளை தர்க்க பூர்வமாக மறுதலிப்பவர்.

  நமது தமிழ் ஹிந்து தளத்தில் சில வருஷங்கள் முன்னர் அசோக் குமார் கணேசன் என்ற ஹிந்துப் பெயரில் ஒரு அன்பர் விவிலியத்தை விதந்தோதியிருக்கிறார். பின்னாட்களில் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரிலும் பின்னர் பல பலப்பல ஹிந்துப்பெயர்களிலும் ஒரு அன்பர் ஸ்ரீ வைஷ்ணவத்தை சிரிவைணவம் என்று இழித்தும் க்றைஸ்தவத்தை விதந்தோதியும் உள்ளார்.

  பரக்காவெட்டி தத் என்ற ஹிந்துப்பெயரில் ஹிந்து மதத்தை இழித்தும் உலகளாவிய ஜிஹாதிய பயங்கரவாதத்தை ஆதரித்தும் பேசும் அம்மிணியின் மூக்கை உடைத்தவர் தானே அயான் ஹிர்ஸி அலி எனும் இஸ்லாமியப் பெயர் கொண்டு இஸ்லாத்தை மறுதலித்த பெண்மணி.

 20. //Uyiron on April 23, 2016 at 2:54 pm-எல்லாம் தெரிந்தது போல தம்பட்டம் பேசி கருத்துக்களை மாற்றி உங்கள் ஆசைதீர கட்டுரை வரைகிறாயே.. உன் விருப்பப்படி வேதாகமத்திற்கு விளக்கம் கொடுக்க நீ யார்.. மண்ணான நீ நம் மன்னாதி மன்னவருக்கு முன் வெறும் தூசி.. அவர் உன் உயிரை மட்டுமல்ல, ஆத்துமாவையும் அழிக்கக் கூட்யவர்.. பிசாசு//
  விவிலியம் பற்றிய உண்மைகளையும் இஸ்ரேலின் தொல்லியல் அகழ்வாய்வு முடிவுகளுமே தேவை. மூட நம்பிக்கைகள் எப்பயனும் தராது.
  வரலாற்று உண்மை -இஸ்ரேல் எனும்படி நாடு பொமு 850 வாக்கில் சிறு நாடாய் உருவானது. 125 ஆண்டு பின்பு அசிரியர் விரட்ட யூதேயா பகுதிகளில் மக்கள் குடியேறினர்.
  பொமு725க்கு முன் ஜெருசலேம் மக்கள் தொகை 1500, அடுத்த 25 ஆண்டுகளில் 15000, இது 2 தலைமுறைக்குப் பின் குறைந்தது. என்றுமே ஜெருசலேம் பெரிய ஊரே இல்லை, கிரேக்கர் கீழ் தவிர, கிரேக்கர் செல்லுமுன் காட்டுமிராண்டிகளாய், நாடோடிகளாய், ஆடு- மாடு மேய்க்கும் காட்டுமிராண்டிகளே எபிரேயர்கள். பழைய ஏற்பாடு முழுமையும் பொமு.100 தொடங்கி இயேசுவிற்கு 150 ஆண்டு பின்பு தான் புனையல் முடிக்கப் பெற்றது.
  பழமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
  நீங்கள் உங்கள் மூட விசுவாசத்தை விட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்.
  இஸ்ரேல் தொல்லியல் ஆய்வு உண்மை அறிய, டெல் அவிவ் பல்கலைகழக தொல்லியல் துறை இயக்குனர் இஸ்ரேல் ஃபின்கெல்ஸ்டீன் நூல் “Bible Unearthed” இணைப்பு-https://www.amazon.in/Bible-Unearthed-Archaeologys-Vision-Ancient/dp/0684869136
  உலகில் இன்று பழைய ஏற்பாடு வரலாறு தொல்லியலில் போற்றப்படும் கோபன் ஹேகன் பல்கலைக் கழக பேராசிரியர் தாமஸ் தாம்சன் நூல் -The Mythic Past: Biblical Archaeology And The Myth Of Israel
  https://www.amazon.com/Mythic-Past-Biblical-Archaeology-Israel/dp/0465006493
  இணைப்பு- https://www.amazon.com/Mythic-Past-Biblical-Archaeology-Israel/dp/0465006493
  நேர்மையாய் தேடுங்கள் இனையத்தில் இரண்டுமே இலவசமாய் உள்ளது.
  ஞானமாய் நடங்கள்

 21. bible padithu padithu muttalgalana ivargalin vimarsanangalai porutpaduthavendam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *