ஸ்ரீராமானுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் முன்வைத்து சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதியுள்ள குறுநாவல் ‘நான் இராமானுசன்’. இந்த நூல் நேற்று (மே-10ம் நாள்) ஸ்ரீராமானுஜ ஜெயந்தி அன்று ஸ்ரீபெரும்புதூரில் வெளியிடப் பட்டது. இந்த ஆண்டு ஸ்ரீராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த தருணமாகவும் நாடெங்கும் கொண்டாடப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நூலைத் தான் எழுதியதன் பின்னணி பற்றி நூலாசிரியர் கூறுவது:
ஆப்த வாக்யம்’ – கருச் சொற்றொடர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’. இந்த சொற்றொடர் மனதில் வந்து புகுந்தது 2013 என்று தோன்றுகிறது. விஷ்ணுபுரம் படித்தபோது இருக்கலாம்.
ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை.
ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.
விடாமல் துரத்திய அச்சொல் ஒரு நாள் ‘அங் மோ கியோ’ நூலகத்தில் மனதில் விரிந்து விளங்கியது. பாதை புரிந்து பணியைத் துவங்கினேன்.
பெருவியப்பளிக்கும் நூல்களை அது காட்டிக்கொடுத்தது. மறைந்தொழிந்த ஆசான்கள் பலரை அது எனக்கு மட்டுமாகத் தோன்றச் செய்தது. எங்கும் எப்பொழுதும் அந்த நினைவே சூழ்ந்து நிறைந்தது.
பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது ‘நான் இராமானுசன்’ உருக்கொண்டு துலங்கி நிற்கிறது.
ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, நூல் உருக் கொண்ட கதை இதுவே.
ஸ்ரீபெரும்பூதூர் ஜீயர் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பல ஆன்றோர்கள் கலந்து கொண்டனர். பெரியவர் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்தாணுமாலயன் ஜி, ஸ்ரீ சதுர்வேதி சுவாமிகள் ஆகியோர் உரையாற்றினர். திரு.கலாநிதி (மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்) நூலை வெளியிட திரு. தடா பெரியசாமி (தலைவர், நந்தனார் பேரவை) முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். புத்தகத்தை விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நான் இராமானுசன்
ஆசிரியர்: ஆமருவி தேவநாதன்
விஜயபாரதம் பதிப்பகம்
12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31,
தொலைபேசி: +44-2836-2271
பக்கங்கள்: 135
விலை: ரூ. 60விரைவில் NHM தளத்தின் மூலம் ஆன்லைனிலும் கிடைக்கும். தொலைபேசி மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234. சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் பதிப்பக அரங்கிலும் கிடைக்கும்.
Wish to have a copy of the book. Hope I may get it in from Books Fair going to be held on June 2016.
Thanks for the nice info ji.
Dr A P Irungovel, Ph.D.,
Sankara Nethralaya,
Chennai 600 006.
இன்றைய கால நிலையில் பொதுவாக நூல்கள் அதுவும் ஆணிமீக நூல்கள் படிப்பது குறைந்துவிட்டது. காரணம் செல்வம் சம்பாதிக்க பட்டய படிப்பு போதும் என்ற மனோபாவம். கணனியில் முன் காலம் கழித்தால் போதும். இந்த சூழ்நிலை மாறவேண்டும். அது தாய்மார்கள் மூலம் தான் முடியும். ஹிந்து மத மற்றும் வாழ்க்கை வழிபாட்டுமுறை போன்ற நூல்களை திருகோவில்களில் தாய்மார்களுக்கு பிரசாதத்துடன் வழங்கலாம் . இவர்கள் மூலம் குழந்தைகள் அறிவை வளர்துகொள்ளலாம்
ஒரு அருமையான முயற்சி. உடையவர், எம்பெருமானார் என்றெல்லாம் ஸ்ரீ வைணவப்பெருமக்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு ஒரு நாவல் வடிவில் வெளியாவது மிகுந்த ஆனந்தமளிக்கிறது. நான் ராமானுசன் என்பதைவிட அடியேன் ராமானுசன் என்று இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஸ்ரீ வைணவர்கள் இன்றும் தங்களை அடியேன் ராமானுஜ தாஸன் என்று சொல்லிப்பின் தமது பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளும் மரபை உடையவர்கள்.
தொடர்ந்து வைணவ ப்பெரியோர்களைப்பற்றி எழுதவேண்டும் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன். வாழ்க வாழ்க
A welcome addition to the books on Udaiyavar.
Bhagawath Ramanuja remains the greatest Mahapurusha to have set foot on earth & it is only in the fitness of things that more people become aware of his contributions to society & religion.
Srimathe Ramanujaya Namaha: