சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்

அண்மைக் காலத்தில் சமஸ்கிருதமொழி பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்விவாதங்கள் பெரும்பாலும் அரசியல், சாதி, மத வேறுபாட்டுக் கண்ணோட்டத்துடனே நடைபெறுகின்றன. புதுமைநாடும் சைவர்கள் சிலரும் இவ்விவாதங்களில் கலந்துகொண்டு, திருமுறைத் தமிழினை உயர்த்துவதாகக் கருதிக்கொண்டு வடமொழியைத் தூற்றுகின்றனர். இதில் கலந்துகொள்ள விருப்பமில்லாத ஒருசார் சைவசித்தாந்திகள் உள்ளனர். அவர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் பயன்பாடு குறித்து அவர்களுடைய ஆச்சாரியர்கள் அல்லது குருமார்கள் கூறிய கருத்தின்வழி ஒழுகுவதே பெரும் பயன்தரும் எனும் நம்பிக்கையுடையவர்கள்.

சைவசமயக் கருத்தரங்கு ஒன்றில் இளைய மடாதிபதி ஒருவர் தமிழை வடமொழியைக் காட்டிலும் உயர்வுடையதாகக் காட்டும் நோக்கில், திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் பாடிய,

“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து

பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமி ழேனை

மண்ணிடைச் சிலவிலக்க ணவரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப் படக்கிடந்த தாவெண்ணவும் படுமோ”

என்னும் செய்யுளை ஆரவாரமாகச் சொன்னார். அவருடைய கருத்து வடமொழி இலக்கண வரம்பற்றதென்று கூறுவது.  பாமரரே இதற்குக் கைதட்டுவர்; தமிழினை முறையாகக் கற்றவர் இகழ்ச்சிநகையே புரிவர்.

தமிழின் ஆற்றலைப் பறைசாற்றுவதாக அவர் கூறிய மற்றொரு பாடல்,

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை

உண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக்

கண்டதும் கதவினைத் திறந்ததும் கன்னித்

தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”

இவ்வாற்றல் தமிழுக்கே உண்டெனில். இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள அதியற்புதச் செயல்களை நிகழ்த்திய சமயாச்சாரியர்களை, இதைக் காட்டிலும் ஒருவர் இழிவுபடுத்த முடியாது. இந்த மடாதிபதி பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத்தை முழுவதும் படித்திருக்கமாட்டார். படித்திருந்தால் திருமணப்படலத்தில் பரஞ்சோதி முனிவர் பாடியுள்ள செய்தியொன்று அவர் பார்வையிற்பட்டிருக்கும்.

“பந்த நான்மறைப் பொருட் டிரட்டென வடபாடல் செய்தெதிர் புட்ப

தந்த னேத்த வானுயி ருணவுருத் தெழுதழல் விடத்தெதிர் நோக்கும்

அந்த மாதி யிலானிழல் வடிவமா யாடியினிழல் போல

வந்த சுந்தரன் சாத்து நீறொடு திருமாலையுமெடுத் தேந்த”

சோமசுந்தரக் கடவுள் திருமணக்கோலம் கொள்ளும்போது, நான்கு வேதப்பொருள்களின் திரட்டென வடமொழியில் பாடல்செய்து புட்பதந்தன் என்பான் புகழ்ந்துபாட, ஆடியில் தோன்றும் பிரதிபிம்பம்போன்ற ஆலாலசுந்தரன் சுவாமிக்குச் சாத்தும் திருநீறொடு திருமாலையும் எடுத்தேந்தினான் எனும் இப்பாடலில் தெய்வமணமகனை புட்பதந்தர் வடமொழிப் பாடலில் போற்றினார் எனப் பரஞ்சோதியார் கூறுகின்றார்.

புட்பதந்தர் பாடிய அத்தோத்திரம் ‘ சிவமஹிம்ந ஸ்தோத்திரம் ‘ என்பதாகும்.  (இந்நூலை ஆங்கிலத்தில் ஆர்தர் அவலான் எனும் புனைபெயரில் சர் ஜான் உட்ராஃப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, குறிப்புரையுடன் வெளியிட்டுள்ளார்)

இவ்விடத்தில் கொங்குநாட்டில் தலைசிறந்த துறவியாகவும் கவிஞராகவும் திகழ்ந்த கௌமாரமடாலயம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளுக்கும் திருமந்திரமணி எனும் விருதுபெற்ற துடிசைக்கிழார் எனும் அறிஞருக்குமிடையே நடைபெற்ற உரையாடலை அறிதல் நலம். துடிசைக்கிழார் கொங்குநாட்டு இலக்கியங்கள் சிலவற்றையும் திருமந்திரத்தையும் பதிப்பித்த நல்ல அறிஞர். தமிழ்மீது பெரும் பற்றுடையவர். அந்த மோகத்தின் காரணமாகப் பிறமொழிகளைத் தாழ்வாகக்கருதும் மயக்கம் உடையவர்.

துடிசைக்கிழார்: சுவாமி! நம் செந்தமிழுக்கு வடமொழி ஒருபோதும் சமமாகாது. எலும்பைப் பெண்ணாக்கியதும் அரவுதொட்ட பாலகனை எழுப்பியதும் முதலையுண்ட சேயை மீட்டளித்ததும் தேவாரப் பாசுரங்கள்தாமே; வடமொழி வேதமந்திரங்களோ சுலோகங்களோ அல்லவே! இவற்றால் தமிழே வடமொழியைவிட உயர்வானது என்பது உறுதியாகின்றதல்லவா?

சுவாமிகள்: பெரியீர்! வடமொழியில் சிவபெருமானும் பிரமனும் எண்ணற்ற முனிவர்களும் வேதம், ஆகமம், இதிகாசம், புராணம் துதிப்பனுவல்கள், தத்துவ நூல்கள் எனப் பலவற்றை வழங்கியுள்ளனர். நம் தமிழிலும் திருக்குறள், திருமந்திரம், தேவார-திருவாசக, திவ்வியப்பிரபந்தம், சிவஞானபோதம் முதலிய சாத்திர-தோத்திரங்கள் என எல்லாக் கலைச்செல்வங்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் ஒருமொழியை உயர்த்துவதற்காக மற்றொன்றைத் தாழ்த்துவது பண்புடைமை ஆகாது.

கிழார்: திருஞானசம்பந்தர் ‘மட்டிட்ட புன்னையங்கானல்’ எனத்தொடங்கும் தமிழ்ப் பதிகத்தால்தானே அங்கம் பூம்பாவை ஆக்கினார்? அப்பர், ‘ஒன்றுகொலாம்’ எனும் தேவாரப் பதிகம் பாடியதால்தானே அரவுதீண்டிய மைந்தன் உயிர்த்தெழுந்தான்? சுந்தரரின், ‘எற்றால் மறக்கேன்’ எனும் திருப்பதிகம் தானே முதலையுண்ட பாலகனை வரவழித்தது? இவர்கலெல்லாம் வடமொழியில் பாடவில்லையே? அந்த மொழிக்கு ஆற்றல் இருந்திருந்தால் அதில் பாடியிருப்பார்கள் அல்லவா?

சுவாமிகள்: (புன்முறுவலுடன்) எலும்பு பெண்ணானதும் அரவால் மாண்ட மகன் மீண்டதும், முதலைவாய்ப் பிள்ளை வந்ததும் தமிழ்மொழியின் தனி ஆற்றலால் என்பதுதானே தங்கள் கருத்து?

கிழார்: ஆமாம் சுவாமி! அப்படியேதான். இதில் சற்றும்  ஐயமே இல்லை..

சுவாமிகள்: நல்லது. நீங்களும் நானும் நன்கு தமிழ் கற்றவர்கள்; தமிழிற் பற்பல பாடல்களைப் பாடியவர்கள்; நமது தமிழ்ப்புலமையிலும் தமிழ் உணர்விலும் சற்றும் குறையில்லை. மூவர் முதலிகள் தேவாரம்பாடிய அதே யாப்பில், நாம் பாடினால் செயற்கரும் செயல்கள் ஏதேனும் நடக்குமா?

கிழார்: அது எப்படி இயலும்? நடக்காது.

சுவாமிகள்: மூவர் முதலிகள் வடமொழிச் சுலோகங்களாகவோ அல்லது வேறு ஏதாவது மொழியில் ஏதாவதொரு வடிவில் கூறியிருந்தால் அந்த அற்புதங்கள் நடந்திருக்குமா? நடந்திருக்காதா?

கிழார்: கட்டாயமாக நடந்திருக்கும்.

சுவாமிகள்: அற்புதங்கள், சித்திகள் போன்றவையெல்லாம் மொழியால் நடப்பவை அல்ல. ஆன்மீக வல்லமைபெற்ற மகான்களின் ஆணைவழி, இறைவனின் திருவருளால் நிகழ்பவை. தமிழ், வடமொழி மட்டும் அல்ல; தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி போன்ற இந்தியமொழிகளிலெல்லாம் இறைவனை வேண்டிச் செயற்கரும் செயல்களைச் செய்த மகான்களின் பாடல்கள் காணப்படுகின்றன.  அண்டசராசரங்களையெல்லாம் கடந்து விளங்கும் பரம்பொருளை — அதனை நீங்கள் சிவபெருமான் என்றோ, திருமால் என்றோ — எப்படிக் கூறினாலும் சரி — ஏதோவொரு மொழிக்குமட்டும் உரியதாகச் சொல்வீர்களேயாகில் பரத்துவம் என்னாவது? இந்திய மொழிகள் மட்டுமல்ல; உலகமொழிகள் அனைத்துமே உண்மையான அருளாளர்களுக்கு இறையருளைப் பெறுவதற்கு ஏற்ற கருவிகளேயாகும்.

மொழிப்பற்று வேண்டற்பால நற்பண்பு; அதேசமயம் மொழிவெறி ஒதுக்கவேண்டிய இழிதகைமை. வடமொழி தென்மொழியாளர்களிடையே ஒரு சிலரிடத்து மிக்குவிளங்கும் இந்த அறிவற்ற மூர்க்கத்தனம் அறிவுடைய சான்றோர்க்கு ஆகாதது.”     (சிரவையதீனம் தவத்திரு கந்தசுவாமிகள் வரலாறு, சிரவைக் கௌமாரசபை வெளியீடு, 20-11-1999)

  சுவாமிகளின் கருத்தே சுத்தாத்துவித சைவசித்தாந்திகளின் கருத்தாகும்

சுத்தாத்துவித சைவசித்தாந்தத்தின் ஆசிரியன்மார் இம்மொழிகளைப் பற்றிக் கூறிய கருத்துக்கள்தாம் யாவை?

“வைதிக சமயமாகிய சைவசித்தாந்த சமயம் தமிழ்நாட்டில் அநாதி காலமாகப் பயின்று வந்தது. ஏனைய சமயங்கள் யாவும் இதன்பின் தோன்றின என்பது பொருந்தும். இச்சமயமானது ஆதியில் இந்தியநாடு முழுமையும் வியாபித் திருந்தது என்று பெரியோர் சொல்வர்.காசுமீரத்தில் இன்றும் சைவசமயத்துள் ஒருபிரிவு வழக்கிலிருப்பதும், மொஹஞ்சதரோ அகழ்பொருள்களில் சைவச்சின்னங்கள் காணப்படுவதும் இதற்குச் சான்று பகரும்.

வேதம், சிவாகமம் இரண்டையும் சைவசித்தாந்த சமயம் தனக்கு ஆதாரங்களாகக் கொள்ளும். இவை வடமொழி நூல்கள். இன்று சிலர் தவறாகக் கருதுவதுபோல, வடமொழி ஒரு சாதிக்கே உரிய மொழியாக இருந்ததில்லை; தமிழ் நாட்டில் ஞான நாட்டமுடையோர் அனைவருமே வடமொழி வல்லவராயிருந்தார்கள். எல்லாருமே வடமொழியில் சமயநூல் எழுதியும் உரையெழுதியும் சமயத்தை வளர்த்ததொடு, தமிழொடு வடமொழியையும் வளர்த்தார்கள். அம்மொழி, தமிழருக்கும் உரிய மொழியாகவே இருந்தது.” (மு. அருணாசலம், தத்துவப் பிரகாசம், முதற்பதிப்பின் முன்னுரை,1965),.

            தமிழின் இனிமையை நுகரவிரும்புவோர் குமரகுருபரசுவாமிகளின் பிரபந்தங்களில் தோய்வர்.  முகலாய மன்னனைக் காணச்சென்ற அவர், இந்துஸ்தானி மொழியைப் பயிலவிரும்பிச் சகலகலாவல்லியைத் தோத்தரித்துச் செய்த சகலகலாவல்லி மாலையில் “வடநூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று காக்குங் கருணைக்கடலே சகல கலாவல்லியே” எனப் பாடினார்.

இதில் அம்மையின் தொண்டர்கள் இருமொழியும் வல்லவராக இருப்பர் என்னும் அவரது கருத்துத் தெளிவாகின்றது. தமிழ் இலக்கியம் பயில விரும்புவோர் நாள்தோறும் பாராயணம்செய்யும் நூல் சகலகலாவல்லிமாலை. தமிழறிவுடன் வடமொழியறிவும் இந்நூற் பாராயணம்செய்யும் தமிழ் ஆர்வலர் பெறுவர்.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், இவர், வேதங்களாகிய வடநூல்களை, ‘காலத்தொடு கற்பனை கடந்த கருவூலப் பழம்பாடல்’ எனப் போற்றியதுடன், கலைமாச்செல்வர்கள் அந்தக் கருவூலத்தில் தேடிவைத்துள்ள கடவுள்மாமணி என அம்மையைப் போற்றுகின்றார். (அருமையாகத் தேடிப்பெற்ற நவமணிகளைக் கருவூலத்தில்வைத்துக் காப்பாற்றுதல் நம் வழக்கமல்லவா). மேலும் சங்கம்வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையை, “வடகலை தென்கலை பலகலை யும்பொதி மதுரைவளம்பதியே” எனப் பாராட்டுகின்றார். (மதுரைக் கலம்பகம்)       .

வடமொழியொன்றை மட்டுமே அறிந்தவரைக் காட்டிலும், தமிழ், வடமொழி இருமொழிகளிலும் வல்லவரே போற்றற்குரியவர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த சைவசித்தாந்தப் பேராசிரியர்களான ஔவை துரைசாமிப் பிள்ளை, பண்டித பூஷணம் பேட்டை ஈசுவரமூர்த்தியா பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், தூத்துக்குடி பொ. முத்தையாபிள்ளை,, சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ஆ. ஷண்முக முதலியார், பேராசிரியர் திருஞானசம்பந்தம் காஞ்சிபுரம் நாகலிங்க முதலியார், அருணைவடிவேல் முதலியார் முதலியோர் இருமொழிகளிலும் வல்லுநர்களாகத் தமிழ் சைவசித்தாந்தத்திற்கு ஆற்றிய தொண்டினைச் சைவ உலகம் மறத்தலாகாது.

சகலாகம பண்டிதராகிய அருணந்தி சிவாச்சாரியார், காசுமீரம்வரை சென்று சைவசித்தாந்திகளுடனும் பிற மதத்தாருடனும் விவாதம் செய்தார் எனக் கூறப்படுகின்றது. அங்கெல்லாம் அவர் சமஸ்கிருதத்தில்தானே விவாதித்திருப்பார்? தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும்.

***   ***   ***

51 Replies to “சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்”

 1. ​அருமையான கட்டுரை
  நன்றி நன்றி

 2. வணக்கம் ,

  முனைவன் என்னும்சொல் திவாகர நிகண்டிலும் , பிங்கல நிகண்டிலும் காணப்பெறும். இது அருகதேவனைக் குறிக்கிறது.
  மேலும் திருவாய்மொழியிலும்(8.9.5 – எட்டாம்பத்து- ஒன்பதாம் திருவாய்மொழி -ஐந்தாம் பாடல்) திருமாலைக் குறிக்கக் காணப்பெறுகிறது.
  தொல்காப்பியத்திலும்(மரபியல்-1586 ம் சூத்திரம், நன்னூலிலும்(பாயிரவியல் 3 ம் சூத்திரம்) இச்சொல்லினை அங்ஙணமே காணலாம்.
  ஆனால் DOCTORATE பட்டம் பெற்ற பெரியோரை இச்சொல்லினால் சுட்டுவது எங்ஙணம்?
  இது நம் தாய்மொழிக்கு இழுக்கு. நிகண்டிற்கும் இழுக்கு,.
  முனைவர் என்பது முழுமுதற்கடவுளைக் குறிக்கப் பயன்படுகிறது .

  DOCTORATE பட்டம் பெற்றவரையல்ல .

  அன்புடன்,
  கணேசு

 3. படிக்கப்படிக்க மகிழ்ச்சியை கொடுத்த‌ அருமையான கட்டுரை.என் மனத்திலிருந்த நெடு நாளைய வருத்ததை போக்கியது. நன்றி!

 4. நீண்ட காலத்திற்குப் பின்னர் முனைவர் ஐயா அவர்கள் தமிழ் ஹிந்துவில் ஒரு அருமையானக்கட்டுரையை வழங்கி இருக்கின்றார்கள். வைதீக சைவ சமயத்திலும் அதன் சித்தாந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களின் நிலைப்பாட்டினை ஐயா அவர்கள் உரைத்திருக்கின்றார்கள்.அவரது வாதங்கள் ஆணித்தனமானவை, ஆதாரப்பூர்வமானவை. ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதவேண்டும் என்று ஐயா அவர்களை வேண்டுகின்றேன்.
  யாரெல்லாம் சிவபக்தியில் ஆழ்ந்திருந்தார்களோ, பரசிவத்தின் திருவருளில் கலந்திருந்தார்களோ அவர்கள் எல்லோருமே மொழித்துவேசம் இல்லாதவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். நம்முடைய சைவ ஆச்சாரியார்கள் எல்லாரும் வேதம், ஆகமம், தமிழ் வடமொழி ஆகியவற்றை தமது இருக்கண்களாகவேப் போற்றி இருக்கின்றனர். சமயாச்சாரியார்கள், சந்தானாச்சாரியார்கள், திருமூலர் பிரான் என நம்முடைய பிதாகம குருமார்கள் எல்லோரும் தெளிவாக வலியுறுத்திய கருத்து இது.

  வேதம், ஆகமம், வடமொழி ஆகியவற்றை மறுப்போர் யார்? அவர்களின் துவேசத்தின் தோற்றுவாய் மூலம் எதுவென்று நோக்கினால் அது அபிராஹாமிய, கிறைஸ்தவ, இவாஞ்சலிக்கல் மதமாற்றி மிஷ நரிகள் என்பது தெளிவாகவேத்தெரிகின்றது.
  தமிழ் சமஸ்கிருதம் என்ற இருமொழிகளையும் வேதாகமம், திருமுறை என்று நமது பிரமாணங்களையும் சிரமேல்வைதுப்போற்றுவோம்.
  சிவசிவ

 5. ஐயா அவர்களின் கட்டுரையை வெகுநாளுக்குப்பின் படிக்கும் பேறு கிடைத்தது;
  சொல் நயத்துக்கும், பொருட்செறிவுக்கும் இலக்கணமாய் அமைவது ஐயா அவர்களின்
  எழுத்து.நாள்தோறும் தங்கள் கருத்துகளைக் காணும் வாய்ப்பை நல்குவீராக

  அன்புடன்
  தேவ்

 6. கட்டுரையின் இறுதி ஈரடிகளை எழுதாமல் விட்டிருக்கலாம் அவை கட்டுரையின் நோக்கத்தையே புரட்டிப்போட்டு விடுகின்றன.

  கட்டுரையின் நோக்கம் இருமொழிகளுமே ஒரு தமிழ் இந்துவுக்கு அல்லது சைவ சிந்தாந்திக்கு இன்றியமையாதவை..

  இறுதிவரிகளின் படி பார்த்தால் வடநாடு செல்வோருக்கே அவ்வின்றியமை இருக்கிறது எனபது போல.

  தற்போது டில்லிக்குப்போய் பொழைக்கனுமென்னா ஹிந்தி படித்தால் செகரியம் என்பது போல.

  இன்னுமொரு தவறான முடிவும் பின்னூட்டங்களில் காணப்படுகிறது. மொழித்துவேஷம் எனபது எல்லாரிடமும் இருப்பது போலவும் அதைச் சாடவும் பகடி செய்யவுமே யாம் புறப்பட்டோம் என்று ஆணவப்போக்கு.

  தமிழறிஞர் காணப்படும் வடமொழித்துவேசம் ஒன்று; மற்றோரிடம் காணப்படும் அம்மொழித்துவேஷம் இரண்டாவது. இக்கட்டுரை முன்னவரை நோக்கி எழுதப்பட்டதாகவே தெரியும். பின்னூட்டங்கள் அவ்வேறுபாட்டைப்பற்றிக்கவலைபடவில்லை.

  மற்றவர்களிடம் காணப்படும் துவேசம் ப்ராக்டிகல். அன்றாடவாழ்க்கையினால் வருவது. அத்துவேசம் உள்ளோர் புலம்பெயரும் புதுநாட்டில் மொழியில் வாழவேண்டும்போது அம்மொழியை வெறுப்பாரில்லை. வடநாடு செல்வோர் ஹிந்தியைப்பேசி மகிழ்வது போல. இவர் சமஸ்கிருத மொழி ஒன்றே புழங்கும்நாடு சென்றால், அம்மொழியை அணைப்பார். எங்கே போச்சு உங்கள் வாதமிங்கே? காணாமல் போச்சு.

  எனவே, வேறுபாடறிந்து பேசுக. அல்லது காழ்ப்புணர்ச்சி கொள்க. மக்கள் மக்களே. இடம், ஏவல், சூழநிலைக்குத் தக்கதான் வாழ்வார். சூழ்நிலையின் கைதிகள் அவர்கள். வள்ளுவரின் சிலைக்கே வடவர்கள் எதிர்க்கிறார்கள். இல்லையா? அவர்கள் சூழ்நிலை அப்படி.

 7. இன்னொன்றையும் சொல்லி முடிக்கலாம். இக்கட்டுரையாசிரியர் வேறொரிடத்தில் எழுதிய பின்னூட்டத்தில் இருக்கிறதுஅ

  வடமொழி (சமஸ்கிருதம்) இருவகைகளில் புழக்கத்தில் வரும். ஒன்று: சமயம்சார்ந்தது. இன்னொன்று பொதுவாழ்க்கை சார்ந்தது.

  காளிதாசனின் நாடகங்கள்; காமசூத்திரா போன்ற்வை வடமொழியில் எழுதப்பட்ட சமயம்ச்சாரா செக்கூலர் படைப்புக்கள். அவையும் படிக்கப்படுகின்றன பள்ளிகளில் கல்லூரிகள் சர்வகலாசாலைகளில்.

  சமயம்ச்சார்ந்த படைப்புக்களைப்பற்றி தமிழ்ஹிந்து வாசகர்களுக்குச் சொல்வது கொல்லன் பட்டறையில் ஊசி விற்பது.

  மொழித்துவேசம் எனப்து செக்கூலர் வகையில் மட்டுமே. அன்றாடவாழ்க்கையில் ஏன் அம்மொழி இங்கே என்ற கேள்விதான் வைக்கப்படுகிறது

  சமயம்ச்சார்ந்த வகையை எடுக்கும்போது, அது தேவைப்படுகிறது. அதை இக்கட்டுரையாசிரியர் நான் மேறகாட்டிய பின்னூட்டத்திலேயே சொல்கிறது. விரிக்கலாம்.

  சமய தத்துவ விளக்கங்களில் தேவை ஏனென்றால், தமிழ் இந்துமதம் வட்நாட்டில் தோன்றிய இந்துமதத்தின் ஊற்றே எனபது உண்மை. அதை மறுப்பாரும் உளர். அவரைப்பற்றி இங்கு கதைக்கபப்டவில்லை.

  எனவே வடமொழி சமயக்கருத்துக்கள் தெரியாமல் இம்மத்தத்தைப்புரியலாகாது என்னும் போது தமிழில் விளக்கங்கள் எழுதப்படும்போது அம்மொழிச்சொற்கள் கையாளப்படுகிறது. சிவஞான போதம் என்ற நூலின் மணிப்பிரவாளம் ,ம;லைக்கவைக்கும். வைணவப்பேருரைகாரகளைக் கூட என்னால் படிக்க முடியும், சைவர்களைப்படிக்க என்னால் முடியவில்லை. ஆனால் அப்பிரவாளம் திணிக்கப்படவில்லை. மாறாக தேவையாகிறது எனபதே இவரின் பின்னூட்டக்கருத்து. என் கருத்தும் கூட.

  இது மேலைநாட்டுத் தத்துவத்திலும் வரும். மேலை நாட்டுத்தத்துவ அறிஞர்களின் ஒரு பிரிவு ஜெருமானியர்கள். இவர்கள் தத்துவம் இவர்கள் மொழியான ஜெருமனிலிலேயே எழுதப்பட்டது. மொழிப்பெயர்க்கும்போது, வெகு கடினம். காரணம், இவ்வறிஞர்கள், ஜெருமன் சொற்களைத் தங்கள் தத்துவத்தில் புதிய பொருட்களைத் தரும்படி உருவாக்கிவிட அது பாமர ஜெருமானியருக்கே புரியமுடியாதபடி கடினம்.

  இதைப்போல, ஒரு மொழிச் சொற்களின் பொருட்களை அப்படியே பிறமொழியில் கொண்டுவர இயலாது போகின்றபடியால் அம்மொழிச்சொற்களே கையாளப்பட்டு அருஞ்சொற்கள் அகராதியில் பிண்ணினைப்பாக போடும்படி ஆகிறது இப்படியாக உருவாகிறது மணிப்பிரவாளம்.

  Therefore, the use of manipravalam is a logical corollary. Not artificial.

 8. //சுவாமிகள்: அற்புதங்கள், சித்திகள் போன்றவையெல்லாம் மொழியால் நடப்பவை அல்ல. ஆன்மீக வல்லமைபெற்ற மகான்களின் ஆணைவழி, இறைவனின் திருவருளால் நிகழ்பவை. தமிழ், வடமொழி மட்டும் அல்ல; தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி போன்ற இந்தியமொழிகளிலெல்லாம் இறைவனை வேண்டிச் செயற்கரும் செயல்களைச் செய்த மகான்களின் பாடல்கள் காணப்படுகின்றன. அண்டசராசரங்களையெல்லாம் கடந்து விளங்கும் பரம்பொருளை — அதனை நீங்கள் சிவபெருமான் என்றோ, திருமால் என்றோ — எப்படிக் கூறினாலும் சரி — ஏதோவொரு மொழிக்குமட்டும் உரியதாகச் சொல்வீர்களேயாகில் பரத்துவம் என்னாவது? இந்திய மொழிகள் மட்டுமல்ல; உலகமொழிகள் அனைத்துமே உண்மையான அருளாளர்களுக்கு இறையருளைப் பெறுவதற்கு ஏற்ற கருவிகளேயாகும்.//

  தனிநபராக இக்கருத்து எனக்குப்பிடிக்கும். அதாவது மொழி எப்படி பேசுகிறோம்; உணர்கிறோம் எனபது ஆளைப்பொறுத்தது. ஆழ்வார்கள் பாடினால் பாசுரங்கள்; நம்மாழ்வார் பாடியது திராவிட வேதம். நாம் படிக்கும் போது அவை நம்மை ஆழ்வார்களுக்கு ஈடாக்காது.

  இதுவரை மேற்கண்ட கருத்து எனக்கு ஒத்து போகும். பின்னர் ஆகாது.

  ஏனெனில், இப்பாசுரங்களுக்குத் தெய்வ சக்தி உண்டு என்று ஓவ்வொரு பத்துவின் இறுதியில் சேர்க்கபப்ட்டிருக்கும் தனியனகள் அறை கூவுகின்றன.

  ஓர் எ.கா

  திருமங்கையாழ்வார் அஹோபில நரசிம்மரைப்பற்றி பாடிய பத்தில் இறுதி இது:

  செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேல் குன்றுடைய
  எங்கள் ஈசன் எம்பிரானை இருந்தமிழ்நூல் புலவன்
  மங்கையாளன் மன்னு தொல் சீர் வண்டு அறைத் தார்க் கலியன்
  செங்கையாளன் செஞ்சொற் மாலை வல்லவர் தீது இலரே.

  இருந்தமிழ் நூல் புலவன், மங்கையாளன், கலியன், செங்கையாளன் எனபன திருமங்கையாழ்வாரைக்குறிக்கும் சொற்கள்.

  இவரின் சிங்கவேல் குன்றப்பாசுரங்களை வாசித்து தொழும்போது இறையருள் கிடைத்து நம் துயர்ங்கள் நீங்கும் என்பது திரண்ட பொருள். இது ஓர் எடுத்துக்காட்டே. எனவே தமிழ் வைணவர்களின் புனித நூலாகிறது.

  ஒவ்வொரு பத்துவுக்கும் ஒரு தனிப்பட்ட சக்தி உண்டு எனபதால், திவ்ய பிரபந்தம் இறைவழிபாட்டில் கட்டாயப்படுத்தப்படுகிறது. 4000+ பாடல்களுக்கும் உண்டு. அதாவது இப்பாடல்களை தின்ந்தோறும் ஓதாமல் இறைவணக்கும் நிறைவடையாது.

  ஆக, எழுதிய அல்லது பாடிய ஆழ்வார்கள் மட்டுமல்ல, திரும்ப்பாடி தொழுவோருக்கும் நலம் இத்தமிழ்ப்பாசுர்ங்கள் நலம் பயக்கும்.

  இப்போது சமஸ்கிருத இறை நூல்களுக்கு வருவோம்; அவற்றுக்கு இறை வலிமை உண்டு என்பது ஏற்ற்க்கொள்ளப்பட்ட ஒன்று. அவற்றை ஓதும் பாமரருக்கும் உண்டு. எனவே வேதங்கள் கோயில்களின் இறைவணக்கத்தின் போது ஓதப்படுகின்றன. திருமணங்களில் பிறவிடங்களிலும் மந்திரங்கள் அம்மொழியில்தான் உள்ளன.

  மொழிக்கு இறைவலிமை உண்டு. அதைப் பாமரரும் பெற முடியும் என்பதே நான் தெரிந்த கருத்து. இக்கருத்து நான் மேலே சுட்டிய கட்டுரைப்பகுதிக்கு எதிரானது.

 9. //முனைவர் என்பது முழுமுதற்கடவுளைக் குறிக்கப் பயன்படுகிறது .

  DOCTORATE பட்டம் பெற்றவரையல்ல .

  அன்புடன்,
  கணேசு//

  டாக்டர் என்ற பதத்தை விலக்கி, முனைவர் என்ற பதத்தை எடுத்துக்கொள்ள காரணம், டாகடர் என்றால் மருத்துவரையும் குறிக்கும். மக்கள் குழம்பிப்போவார்கள். முனைவர் என்றால், ஹானரிஸ் காசா, மற்றும் ஆராய்ச்சிப்படிப்பை முடித்தோர் (பி ஹெச் டி) என அறிவிக்கும். போதுவாக ஆராய்ச்சிப்பட்டத்திற்குத்தான். எடுத்துக்காட்டாக, ஹானரிஸ் காசா பட்டம் அளிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லது பெரும்புள்ளிகளை எவரும் முனிவர் ஜயலலிதா என்றழைப்பதில்லை. டாக்டர் ஜயலலிதாதான்.

  நீங்கள் சுட்டியது போல முனைவர் என்பது முழுமதற்கடவுளைக்குறிக்கவே என்றால், ஆராய்ச்சி பட்டம்பெற்றொரை எப்படி நல்ல தமிழில் குறிப்பிடுவது என்று சொன்னால் நன்று ஹானரிஸ் காசா பட்டத்துக்கும் சொல்லவும்.

 10. BSV on July 3, 2016 at 12:04 am
  “கட்டுரையின் நோக்கம் இருமொழிகளுமே ஒரு தமிழ் இந்துவுக்கு அல்லது சைவ சிந்தாந்திக்கு இன்றியமையாதவை..

  இறுதிவரிகளின் படி பார்த்தால் வடநாடு செல்வோருக்கே அவ்வின்றியமை இருக்கிறது எனபது போல”.
  அபத்தமானப்புரிதல். விதண்டை என்றுதான் இதை சொல்லவேண்டும்.
  முனைவர் முத்துக்குமாரசுவாமி அந்தபத்தி முழுவதும் சொல்லுவதை உள்வாங்க வேண்டும்.
  “சகலாகம பண்டிதராகிய அருணந்தி சிவாச்சாரியார், காசுமீரம்வரை சென்று சைவசித்தாந்திகளுடனும் பிற மதத்தாருடனும் விவாதம் செய்தார் எனக் கூறப்படுகின்றது. அங்கெல்லாம் அவர் சமஸ்கிருதத்தில்தானே விவாதித்திருப்பார்? தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும்”.
  வட நாடு போனாலும் போகாவிட்டாலும் சரி பாரத நாட்டின் தத்துவ தரிசனங்களோடு உரையாடுவதற்கு சமஸ்கிருத அறிவு புலமை அவசியம். என்பதைத்தான் ஐயா சொல்கிறார். சைவசித்தாந்த சாஸ்திரங்களிலேயே ஒரு ஒப்பாய்வு அணுகுமுறைத்தெளிவாக இருக்கின்றது. சிவஞான சித்தியாரும் சரி சங்கற்ப நிராகரணமும் பாரத நாட்டின் இதர தத்துவ மரபுகளோடு விவாதிக்கும் பாங்கிலேயே அமைந்திருக்கின்றன. அந்த விவாதம் அந்த நூல்களோடு முற்றுப்பெற்றுவிடவில்லை. இன்னும் தொடரவேண்டும். சைவ சமயத்தின் ஆறு தத்துவ மரபினரும் தமக்குள் உரையாடுவதோடு விவாதிப்பதோடு மற்ற த்த்துவ மரபினரோடும் உரையாடவேண்டும். அதற்கு சமஸ்கிருத ஞானம் அத்தியாவசியம். பாரத நாட்டின் வைதீக வைதீகமல்லாது பிரிவினரோடு மட்டுமன்றி ஐரோப்பிய அபிராஹாமிய சிந்தனை மற்றும் நம்பிக்கை மரபுகளோடும் விவாதிக்கவேண்டும்.

 11. கணேசு on June 30, 2016 at 3:42 pm
  “முனைவன் என்னும்சொல் திவாகர நிகண்டிலும் , பிங்கல நிகண்டிலும் காணப்பெறும். இது அருகதேவனைக் குறிக்கிறது.
  மேலும் திருவாய்மொழியிலும்(8.9.5 – எட்டாம்பத்து- ஒன்பதாம் திருவாய்மொழி -ஐந்தாம் பாடல்) திருமாலைக் குறிக்கக் காணப்பெறுகிறது.
  தொல்காப்பியத்திலும்(மரபியல்-1586 ம் சூத்திரம், நன்னூலிலும்(பாயிரவியல் 3 ம் சூத்திரம்) இச்சொல்லினை அங்ஙணமே காணலாம்”.
  முனைவர் என்பதை டாக்டர் என்பதற்கு இணையாக டாக்டர் ஆப் பிலாசபி பட்டம் பெற்றவர்கள் பயன்படுத்துகின்றனர். மெய்யியல் முனைவர் என்று பலத்தமிழ் நாட்டுப்பல்கலைக்கழகங்கள் அதை மொழி பெயர்த்திருக்கின்றன. எமது அண்ணாமலைப்பல்கலைக்கழகம் ஆய்வியல் அறிஞர் என்று அதே பட்டத்தை வழங்குகிறது. தமிழ் பேராசிரியர்கள் முனைவர் என்றே அழைக்கின்றனர். அதில் தவறு ஏதும் இருப்பதாகத்தெரியவில்லை.

  பிறந்து இறந்து பிறவித்தளையுள் உள்ள அனேக ஆன்மாக்கள் தமது சுய முயற்சியால் அறவாழ்வு தவவாழ்வினால் பிறவா நிலை எய்துவர் என்பது ஜைனமதத்தின் அடிப்படைக்கொள்கை. அத்தகைய மேன்மை அடைந்தவர் அர்ஹர் எனப்படும் ஆதி நாதராகிய ரிஷபதேவ தீர்த்தங்கரர். அவரை முனைவர் என்பது சரி. அப்படியே தமது முனைப்பால் ஆய்வு செய்து பட்டம்பெற்றவர்களும் முனைவர்தாம்.

 12. BSV on July 3, 2016 at 1:30 pm
  “ஏனெனில், இப்பாசுரங்களுக்குத் தெய்வ சக்தி உண்டு என்று ஓவ்வொரு பத்துவின் இறுதியில் சேர்க்கபப்ட்டிருக்கும் தனியனகள் அறை கூவுகின்றன”.
  “மொழிக்கு இறைவலிமை உண்டு. அதைப் பாமரரும் பெற முடியும் என்பதே நான் தெரிந்த கருத்து. இக்கருத்து நான் மேலே சுட்டிய கட்டுரைப்பகுதிக்கு எதிரானது”.
  சரியான திரித்துரைத்தல் இது.
  “இந்திய மொழிகள் மட்டுமல்ல; உலகமொழிகள் அனைத்துமே உண்மையான அருளாளர்களுக்கு இறையருளைப் பெறுவதற்கு ஏற்ற கருவிகளேயாகும்”. என்று முனைவர் ஐயா சொல்லிவிட்டபோது மொழிக்கு மந்திர ஆற்றல் இல்லை என்று அவர் சொல்வது போல் வாதிடுவது அபத்தம். எல்லா மொழியிலும் அருளாளர்கள் பக்திப்பனுவல்களைப்புரிந்திருக்கின்றார்கள். அவற்றைப்பயன்படுத்தலாம். அதில் உயர்வுதாழ்வு கருதுதல் அபத்தம் என்றக்கருதை மந்திர சக்தி மொழிக்கே இல்லை என்பது போலத்திரித்தல் தவறு. நிறைமொழி மாந்தர் ஆணையில் வந்தவையே மந்திரங்கள் என்பது தொல்காப்பியர் இலக்கணம். மானத ஜயதே மந்திரம் என்பது சமஸ்கிருத தொல்மொழி. இரண்டும் சொல்வது ஒன்றே. மந்திரத்துக்கு எக்ஸ்க்ளூசிவிஸ்ட் உரிமை யாருக்கும் கிடையாது. இறைவனோடு ஒன்றி இருந்த பெரியோர்கள் சொன்னது மந்திரம். அந்த நிலையை நாம் அடைந்தாலும் அந்தமந்திரங்களைக்கண்டு மந்திர த்ருஷ்டாக்கள் ஆகமுடியும். இறையனுபவம் இயேசுவுக்கு மட்டுமோ அல்லது நபிகளுக்கு மட்டுமோ சாத்தியமானது அல்ல. அது எல்லோருக்கும் சாத்தியம். ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேத ரிஷிகள், பக்த மான்மியர்கள், யோகிகள், வேதாந்த ஞானிகள் பெற்ற அனுபவம் அனுபூதி இவை எல்லாம் எல்லோருக்கும் சாத்தியம். ஒரே வழியில் போனால்தான் அதுகிடைக்கும் என்றும் அதனை ஏகபோக உரிமையை யாரும் கொண்டாடிவிடமுடியாதே என்பது எமது நிலை.
  பி எஸ் வி உங்கள் கருத்தென்ன? நேரடி ஆன்மிக அனுபவம், அனுபூதி, எல்லோருக்கும் சாத்தியம்தானே? இயேசுவின் அனுபவம், புத்தரின் அனுபவம், அல்லது நபிகளின் அனுபவத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கைப்போதாதா?

 13. ஐயா உடன்பிறப்பே,
  /**
  சிவஞான போதம் என்ற நூலின் மணிப்பிரவாளம் ,ம;லைக்கவைக்கும். வைணவப்பேருரைகாரகளைக் கூட என்னால் படிக்க முடியும், சைவர்களைப்படிக்க என்னால் முடியவில்லை.
  **/
  தமிழ்த்தாத்தா உ.வே.சா எழுதிய நல்லுரைக் கோவையிலிருந்து ,
  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும் ,
  உ.வே.சா வின் நலம்விரும்பி , (அதாவது கும்பகோணம் கலாசாலை பேராசிரியர் பதவியின் ஓய்வு பெற்று அப்பதவியினை உ.வே.சா வுக்கு நல்கிய) தியாகராய செட்டியார் சொன்னதை படியும் .
  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0442.html
  TOPIC # 12
  பிறருடைய குறையைக் கண்டவிடத்துக் கண்டிக்கும் இயல்புடைய செட்டியார் தம்முடைய நிலையை நன்றாக உணர்ந்திருந்தார். தம்முடைய அளவுக்கு மிஞ்சிய காரியத்தைப் பிறர் வற்புறுத்தினாலும் செய்யார்; இது சிலரிடத்தில் மாத்திரம் காணப்படும் அருமையான குணம்.

  திருச்சிராப்பள்ளியிலும் வேறு இடங்களிலும் சிரஸ்தேதாராகவும் டிப்டி கலெக்டராகவும் இருந்து விளங்கிய திரு. பட்டாபிராம பிள்ளையென்பவர் தமிழபிமானம் மிக்கவர்; தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் பாதுகாக்கும் இயல்பினர்; மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை நன்கு அறிந்தவர்; ஸ்ரீதியாகராச செட்டியாரிடத்தில் மிக்க அன்பு பூண்டவர்; அறிவாளிகள் நிலையான காரியங்கள் செய்யவேண்டுமென்பது அவருடைய விருப்பம். திவ்யப் பிரபந்தங்களுக்குப் பெரியோர்களால் வடமொழி தென்மொழியிற் செய்யப்பெற்ற வியாக்கியானங்கள் இருப்பது போலத் தேவார திருவாசகங்களுக்கு இல்லையே யென்ற வருத்தம் அவருக்கு உண்டு. அதனால் சைவமடாதிபதிகளையும் சைவ வித்துவான்களையும் சந்திக்கும் பொழுதெல்லாம் திருமுறைகளுக்கு ஓர் உரை எழுதும்படி வற்புறுத்திக் கூறுவார். கேட்பவரிற் பெரும்பாலோர் இயன்றவரையில் உழைத்துப் பார்ப் போமென்றே விடை பகர்ந்து வந்தார்கள்.

  தியாகராச செட்டியார் உபகாரச்சம்பளம் பெற்றுத் திருவானைக்காவில் சில ஆண்டுகள் இருந்தபோது பட்டாபிராம்பிள்ளை அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று பார்த்து வருவார். அப்பொழுது அவரைத் திருவாசகத்திற்கு உரை எழுதவேண்டுமென்று வற்புறுத்திக் கூறுவார். அன்றியும் அங்கங்கே நிகழும் கல்லியாணங்களை விசாரிக்கப்போன காலங்களிலும் மற்ற இடங்களுக்குச் சென்றிருந்த காலங்களிலும் அவரைச் சந்தித்தபோதெல்லாம் மேலும் மேலும் கூறுவார்; “எழுத ஆரம்பித்தீர்களா? எவ்வளவு ஆயிற்று?” என்று கேட்பார்; அருகிலுள்ள கனவான்களிடம், “இவரிடம் எவ்வளவு நாளாகச் சொல்லி வருகிறேன்; கேட்கமாட்டேனென்கிறாரே!” என்று சொல்லுவார்.

  ஒருநாள் செட்டியார் திருச்சிராப்பள்ளியிலுள்ள உறவினரொருவர் வீட்டில் நிகழ்ந்த ஒரு துக்கத்துக்காக அங்கே சென்று விசாரித்து நீராடி விட்டு ஈரத்துணியோடு மீண்டு காவிரி யாற்றுப் பாலத்தின்மேல் நடந்து வந்தார். அப்பொழுது நடுப்பகல் பன்னிரண்டு மணிநேரம். செட்டியார் வெயிலாலும் பசியாலும் மிகவும் களைப்படைந் திருந்தார்.

  அச்சமயம் பட்டாபிராம்பிள்ளை ஸ்ரீரங்கம் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு மார்பிற் சந்தனம் விளங்க உத்ஸாகமாக எதிரே ஒரு வண்டியில் வந்தார். செட்டியாரைக் கண்டவுடன் அவர் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கினார், செட்டியாரை யணுகி க்ஷேம சமாசாரம் விசாரித்தபின்பு வழக்கம் போலவே திருவாசகவுரை எவ்வளவாயிற்றென்று கேட்டார்.

  நீண்டநாளாக இந்த விஷயத்தைப்பற்றி எவ்விடத்திலும் கேட்டு வந்ததனாலும், அப்பொழுது தமக்கு இருந்த தளர்ச்சியினாலும் செட்டியாருக்குக் கோபம் உண்டாயிற்று; “நீங்கள் கொஞ்சமாவது திருவாசகத்தின் பெருமையை அறிந்துகொள்ளவே யில்லை நென்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். அதற்கு என்னால் உரை எழுத முடியுமா? திருவாசகம் எவ்வளவு! என்னுடைய படிப்பு எவ்வளவு! அதற்கு உரையெழுத வேண்டுமென்றால் வேதம், உபநிஷதம், ஆகமங்கள், புராணங்கள், யோக சாஸ்திரங்கள் முதலியவை தெரிய வேண்டாமா? தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்களையும் சில சைவ சித்தாந்த சாஸ்திரங்களையுமே படித்த நான் எப்படி எழுத முடியும்?” என்றார்.

  பட்டாபிராம்பிள்ளை :- திவ்யப் பிரபந்தத்திற்கு அவர்கள் வியாக்கியானம் செய்ய வில்லையா?

  செட்டியார் :- என்ன ஐயா! உங்களுக்கு அவர்களுடைய படிப்பின் அளவு சிறிதேனும் தெரியாது போல் இருக்கிறது. அவர்கள் வடமொழி தென்மொழி இரண்டிலும் சிறந்த புலமையுடையவர்கள்; அவர்கள் உரையினாலல்லவா நூலின் பெருமை அதிகமாகின்றது? நான் உரை எழுதினால் திருவாசகத்திற்கு எவ்வளவு குறைவு உண்டாகுந் தெரியுமா? என்னுடைய உரையினால் அதற்குக் குறைவு ஏற்படவேண்டுமென்பது தங்கள் எண்ணமோ? எங்கே கண்டாலும் நச்சுநச்சென்று என் படிப்பின் அளவு தெரியாமல் திருவாசகத்துக்கு உரையெழுதும்படி சொல்லிச்சொல்லி என்னை வருத்துகின்றீர்கள். இனிமேலும் இப்படித் தொந்தரவு செய்வதாயிருந்தால், இதோ இந்தக் காவிரியில் இப்படியே பொத்தென்று விழுந்து என் உயிரை விட்டுவிடுவேன். பட்டாபிராம பிள்ளையவர்கள் திருவாசக்த்திற்கு உரையெழுதும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததனால் அந்தத் துன்பத்தைத் தாங்கமாட்டாமல், தியாகராச செட்டியார் ஆற்றில் விழுந்துவிட்டாரென்ற அபக்கியாதி உங்களுக்கு ஏற்படட்டும்.

  பட்டாபிராம பிள்ளை உடனே செட்டியாருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, “ஐயா! ஐயா! வேண்டாமையா! இனிமேல் நான் இதைப்பற்றிக் கேட்பதே இல்லை ஐயா!” என்று சொல்லிச் சமாதானப் படுத்திவிட்டு அவருடைய அயர்ச்சியான நிலையை அறிந்து தம் வண்டியில் ஏற்றித் திருவானைக்காவிலுள்ள அவர் இருப்பிடத்தில் அவரை விட்டுவிட்டு மீண்டு திரிசிரபுரத்திலிருந்த தம்மிடம் சென்றார்.

  அவாளே வாளா விருந்த விஷயத்தில் தேவரீர் ஏன் காதை நுழைக்கின்றீர் !!
  அடியேன்,
  கெணேசு

 14. ஐயா உடன்பிறப்பே,
  /**
  மானத ஜயதே மந்திரம் என்பது சமஸ்கிருத தொல்மொழி. **/
  அட்ரா! அட்ரா! அட்ரா! ….

  “மந்தாரம் த்ராயதே இதி மந்த்ர: “-என்பதே சரியான வ்யுத்பத்தி .
  அதாவது “மனனம் செய்பவனை காப்பது” என்பதாம்.

  அடியேன்,
  கெணேசு

 15. ஐயா வேதாந்த தேசிகரே,

  /** ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேத ரிஷிகள், பக்த மான்மியர்கள், யோகிகள், வேதாந்த ஞானிகள் பெற்ற அனுபவம் அனுபூதி இவை எல்லாம் எல்லோருக்கும் சாத்தியம்.
  **/

  “இசைவித்துன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே”

  “என்னைத் தீ மனம் கெடுத்தாய் ”

  “மருவித் தொழும் மனமே தந்தாய் ”

  “ஆரெனக்குன் பாதமே சரணாகதி தன்தொழிந்தாய் உனக்கு ஓர் கைம்மாறு நானொன்றிலேன் , எனதாவியும் உனதே ”

  இவ்வனைத்தும் அவன் அடியார்கள் சொன்னது .

  எனவே பக்தியும் இறைவனே கொடுக்க வேண்டும் .

  “காசு பணம் துட்டு மணி மணி”-
  கேவலம் இவற்றை அடையவே இறையருள் வேண்டும் போது ,
  மிகப் புனிதமான பக்தி மட்டும் உமக்கு லாட்டரி ஸீட்டிலா கிடைக்கும்.

  அடியார் அருளின்றி அமையாது அவன் அருள்.
  கடவுளைபி பற்றுவதை விட அவனடியாரை பற்ற ,எதுவுமே கிட்டலாம்.

  உமக்கு இன்னும் அஹங்காரம் ஆகியவில்லை ஓய் !!( நான் இந்த உடம்பு என்னும் நினைப்பு அஹங்காரம்.)

  அது மட்டும் ஒழிந்தால் அடியாரை பணியலாம் .முடியுமா !!!

 16. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி மஹாசயர் அவர்களிடமிருந்து நீண்ட காலத்துக்க்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட அருமையான் வ்யாசம் இது.

  தமிழும் ஸம்ஸ்க்ருத மொழியும் ஹிந்துஸ்தானத்தின் புராதனமான கலாசாரத்தை அறிவதற்கு மிகவும் தேவையானவை.

  இரு பெரும் அடியவர்களது சம்வாதம் மூலமாக தங்களது விளக்கம் மிக அருமை.

  அருள் பொழிவது அருளாளர்களது வாக் வன்மை என்பது துல்லியமாக விளக்கப்பட்டிருக்கிறது. அதனூடே உறையும் மொழிக்கும் கூட அதில் சிறப்பு உண்டு தான். ஆனால் ப்ரதானமான சிறப்பு அருளாளர்களின் வாக் வன்மை என்பதை மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள் ஐயா.

  அதுவும் ஹ்ருதய ஸ்பர்சியான விஷயம் ……..

  “””””””””” இந்திய மொழிகள் மட்டுமல்ல; உலகமொழிகள் அனைத்துமே உண்மையான அருளாளர்களுக்கு இறையருளைப் பெறுவதற்கு ஏற்ற கருவிகளேயாகும். “”””””””””””””

  பாரதீய ஸம்ஸ்க்ருதியில் ஆழ்ந்து அமிழ்ந்தவர் ஒவ்வொருவரும் இப்படித் தான் பேச முடியும்.

  மொழிகளில் தாழ்வு கற்பிப்பது………. மொழிகளை வெறுப்பது………… இவையெல்லாம் வ்யக்தி விசேஷம் இன்னமும் பக்குவப் பட வேண்டுமே என்பதனையே காண்பிக்கும்.

  ஈற்று வரிகள் தொன்மையான பாரதப் பண்பாட்டின் சுவடுகள் என்றால் மிகையாகாது. வாத ப்ரதிவாதங்கள் தத்துவங்களை விளக்கும் என்பது தொன்மையான பாரதீயரின் நம்பிக்கை.

  வாதே வாதே ஜாயதே தத்வபோத:

  வாதம் செய்யச் செய்ய தத்துவம் துலங்கும்.

  சமய வாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத மொழி அறிவு அத்யாவச்யமானது என்பதனை தங்களது வ்யாசம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

  உபய வேதாந்திகளாக தாங்கள் பட்டியலிட்ட பெருந்தகைகளோடு நான் சேர்க்க விரும்புவது…………

  ஈழத்தைச் சார்ந்த சிவநெறிச் செல்வரான ஆறுமுக நாவலரும் அவரது பெருமை மிகு சிஷ்யரான ஸ்ரீ காசிவாசி செந்திநாதைய்யர் அவர்களும்…………

 17. அன்பார்ந்த சிவஸ்ரீ விபூதி பூஷண மஹாசயர் அவர்களுக்கு

  தாங்கள் அன்பர் பீ எசு அவர்களது ஒரு அபத்தமான புரிதலை மட்டிலும் சுட்டி சரியான புரிதலை ஆழ்ந்து விசாரித்திருக்கிறீர்கள். இன்னொன்றும் கூட விட்டுப்போய் இருக்கிறது.

  \\\ சமயம்ச்சார்ந்த படைப்புக்களைப்பற்றி தமிழ்ஹிந்து வாசகர்களுக்குச் சொல்வது கொல்லன் பட்டறையில் ஊசி விற்பது. \\\

  இது அதி அபத்தமான அதிக ப்ரசங்கம்.

  சமயம் பற்றிய விஷயங்கள் திரும்பத் திரும்பப் பேசுதல் என்பது ஒரு பயிற்சி போன்றது. அது மிகவும் அவச்யமானதும் கூட என்பது சமயத்தில் ஆழ விழையும் ஒவ்வொரு அன்பருக்கும் புரிந்திருக்க வேண்டிய விஷயம். சமயக் கருத்துக்களை திரும்பத் திரும்ப அசை போடுதலில் மற்றும் அதை ஸஹ்ருதயர்களொடு விசாரம் செய்வதில் தத்துவம் ஆழ்ந்து துலங்கும் என்று பெரியோர் சொல்லுவர்.

  அதுவும் சிரி வைணவம் பற்றி லெக்சர் அளிக்கும் பீ எசு அவர்களுக்கு *******பேசிற்றே பேசலல்லால் ****** என்ற சொற்றொடர் தெரிந்திருக்க வேணுமே………… ஒருக்கால் ஸ்ரீ வைஷ்ணவம் பேப்பரில் சாய்ஸில் விட்டு விட்டீர்களோ 🙂

  ஏட்டுச் சுரைக்காய் ஏன் கறிக்குதவாது என்று புரிகிறது.

 18. Thiru Shivshree Vibuthi Bhushan

  என் கருத்தை அபத்தக்கருத்து என்பதைவிட நான் எப்படி கட்டுரை வைக்கும் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்; எனவே மாற்றுக்கருத்து என்றுதான் சொல்ல முடியும்.

  மகான்கள் ஒரு மொழியைப்பயன்படுத்தும்போது மட்டுமே செய்ற்கரிய செய்லகள் நடக்கும். பாமரர்கள் பயன்படுத்தும்போது அவை நடக்கா என்கிறார் சுவாமிகள் (கட்டுரையில் வரும் சுவாமிகள் கிழார் உரையாடலில்)

  ஆக, அடிக்கருத்து என்னவென்றால், மொழியில் அல்ல வலிமை. மொழியைப் பயன்படுத்துவோர் மகான்களாக இருந்தால் மட்டுமே வலிமை என்பது.

  என் கருத்து இதற்கெதிரானது என்பதை திவ்ய பிரபந்தத்தை அறிந்தோருக்கு மட்டுமே புரியும்.

  நாலாயிரத்துமதிகமான எண்ணிக்கைகள் கொண்ட பாடல்கள் நிறைந்த பழங்காலப் பனுவலது. பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை. பத்து பத்தாக பிரிக்கப்பட்டு கோர்க்கப்பட்டது. முதற்பத்து, இரண்டாம் பத்து எனறு சொல்வது வைணவர் வழக்கம். இடஞ்சுட்டி பொருள் விளக்குக என்ற கேள்விக்கு விடையில், திருவாய்மொழியில் ஒன்பதாம் பத்து என்றாலே எம்.ஏ வைணவத்தில். ஒவ்வொரு பத்தின் இறுதிப்பாடல் அப்பத்தை மனமார இறைஞ்சி வாசித்து திருமாலை வணங்குவோருக்கு (ஓதுதல்) அவர்கள் கேட்ட நன்மை கிடைக்கும். இது போக, சில பத்துக்களுக்கென்றே சில சிறப்பான நன்மை நல்க வலிமை உண்டு. எவருக்குமே.; மகான்கள்-பாமரர்கள் என்ற பாகுபாடில்லை.

  இதுதான் திவ்ய பிரபந்தம். எனவேதான் பிரபந்தம் ஓதுதல் வைண்வரின் பூசனையில் கட்டாயாமாக்கப்படுகிறது.

  ஒரு எடுத்துக்காட்டை வைத்தேன். பலபல வைக்கலாம்.

  இதிலிருந்து என்ன தெரிகிறது? பாசுரங்களை யாத்த ஆழ்வார்களுக்கும், அப்பாசுரங்களை ஓதி வணங்கும் பொது வைணவருக்கும் திருமாலின் கருணை உண்டு. இதனால் ஆழ்வார்களுக்கு நிகரானவர்கள் பாமரர்கள் எனபபொருள் கொளல் தவறு. நாம் இங்கு கதைப்பது ஓதுதல் என்ற செயலையும் அதை எவரும் செய்து பயன்பெறலாமென்பதுமே.

  கட்டுரை மறுக்கிறது. அல்லது உதாசீனப்படுத்துகிறது. கீழே படித்துப்புரியலாம். கட்டுரையிலிருந்து:

  //சுவாமிகள்: நல்லது. நீங்களும் நானும் நன்கு தமிழ் கற்றவர்கள்; தமிழிற் பற்பல பாடல்களைப் பாடியவர்கள்; நமது தமிழ்ப்புலமையிலும் தமிழ் உணர்விலும் சற்றும் குறையில்லை. மூவர் முதலிகள் தேவாரம்பாடிய அதே யாப்பில், நாம் பாடினால் செயற்கரும் செயல்கள் ஏதேனும் நடக்குமா?

  கிழார்: அது எப்படி இயலும்? நடக்காது.//

  இவை போக, மந்திரங்கள் இறைவனிடம் போய்ச்சேர்கின்றன எனபதும் இந்துக்களின் நம்பிக்கை. ஒரு மொழியில்தான் இருக்கவேண்டுமெனப்து சமஸ்கிருதத்தை விதந்தோதும் உங்களுக்கு தெரியாதோ? காயத்திரி மந்திரத்தை ஏன் இங்கிலீசில் மொழிபெயர்த்துப் படிக்கக்கூடாது? விடை: படித்தால் அம்மந்திரம் மந்திரமில்லாமல் தந்திரமாகி விடும். எம்மொழியும் சலேகா என்ற வாதம் இங்கு அடிபட்டுப்போய்விடுகிறது.

  No chance. It should be only in Sanskrit.

  The politics behind attributing divine powers to Azhwaar pasurams came from the above line in Tamil Religious History. (Looking at it as an outsider). Azhwars confess they chose Tamil conscious of the fact only Tamil will reach HIM.

  Only in Tamil. Please note. A devotee cannot translate the pasurams into any other language and recite in his or her pooja. Can we do that? Silly question. But she can write in other script and read it, like cine actresses, not knowing to read Tamil, write the dialogues in Telugu or Malayalam or Hindi script, and deliver on screen well.

 19. அடிப்படை உண்மைகளை விளக்கும் தெளிவான கட்டுரை.
  சிவம்-சைவம்-சித்தாந்தம்- சுத்தாத்துவிதம் = எல்லாம் சம்ஸ்க்ருதச் சொற்கள்! இசொற்களின் மூலக் கருத்துக்களும் சம்ஸ்க்ருத ஆதாரத்தில் எழுந்தவை. இவர்களின் மூல மந்திரம் சம்ஸ்க்ருதத்தில் இருப்பது. இவர்களின் சாத்திர நூல்களும் சம்ஸ்க்ருத அடிப்படையில் அமைந்தவை! இவர்களின் குருமார்கள் பெற்ற தீக்ஷை மந்திரமும், இவர்கள் வழிபாட்டில் பயன்படுத்தும் மந்திரங்களும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பவையே! இவ்வளவு இருந்தும் சம்ஸ்க்ருதத்தைத் தூற்றுவது எனபது எவ்வளவு அபத்தமானது!
  உலகெங்கிலும் அருளாளர்கள் பல அற்புதச் செயல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வற்புதங்களுக்குக் காரணம் அவர்களின் அருளாற்றலேதவிர மொழியல்ல. ஸ்ரீ ஹனுமான் சாலீசா கொச்சை ஹிந்தியில் இருப்பது. இதன் வியத்தகு வலிமை மொழியினாலா அல்லது இதை இயற்றிய மஹானின் அருளாண்மையினாலா?
  எல்லாவற்றிலும் பெரிய அற்புதம் அலைபாயும் மனத்தை அடக்குவது. இதை தக்ஷிணாமூர்த்தி மவுனமாகவே சாதிக்கிறார்! சொல்லற்றுச் சும்மா இருக்கும் நிலையிலேயே எல்லாவற்றையும் அறிவித்து விடுகிறார். “மவுனமா வுரையாற் காட்டும் மாபிரம வஸ்து.” எல்லாமொழிகளின் முடிந்த, உயர்ந்த நிலை இந்த அனுபவம் தான்!
  தோத்திரம் எல்லாமொழிகளிலும் இருப்பது. அதன் ஆசிரியர்களின் தகுதியைப் பொறுத்து அதன் பயன் அமைகிறது. அருளாளர்களின் பாடல்களுக்குத் தனி மகத்துவம் இருக்கிறது. இது அனுபவத்தில் விளங்கும். இத்தகைய பாடல்கள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. கல்லார்க்கும் கற்றவற்கும் களிப்பருளும் களிப்பாகிய இறைவன் எல்லாமொழி மாந்தர்களுக்கும் அருள்செய்பவன்.
  ஆனால் மந்திரம் என்று வந்தால் அது சம்ஸ்க்ருதம் ஒன்றிதான் இருக்கிறது! சமய விளக்கத்திற்கு சம்ஸ்க்ருதம் வேண்டாம் என்று இருந்த பௌத்தர்கள் கூட சம்ஸ்க்ருத மந்திரத்தையே கொண்டுள்ளனர்! ஜப்பானில் கூட சம்ஸ்க்ருத மந்திரம்தான்!
  ஆனால் உண்மையான மந்திரம் நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்வது- வெறும் மொழியறிவினால் விளைவதல்ல.
  தமிழ்நாட்டில் இருந்த உண்மையான அருளாளர்கள் மொழிவெறியையோ அன்றி துவேஷத்தையோ போதித்ததில்லை, சம்ஸ்க்ருத அறிவில்லாமல் திருமந்திரத்தைப் பயிலவியலாது.வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் சம்ஸ்க்ருதம் கற்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். நூற்றுக் கணக்கான யோகங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதைப்பார்த்தால் அவருக்கு சம்ஸ்க்ருதத்தில் இருந்த ஆழ்ந்த அறிவு தெரியவரும். ஸ்ரீ க்ருபானந்த வாரியாரின் திருப்புகழ் விரிவுரைகளில் யோகம், சைவ சித்தாந்தம், மந்திரம் பற்றிப் பல இடங்களில் விரிவாக விளக்கியிருக்கிறார். அதிலிருந்து சைவர்களுக்கு சம்ஸ்க்ருத மொழியறிவு எவ்வளவு இன்றியமையாதது என்பதை ஒருவாறு தெரிந்துகொள்ளலாம்.ஆனால் சைவ மடாதிபதிகள் இவ்விஷயத்தில் மவுனம் சாதிப்பது அரசியல் கருதி போலும்!
  “வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனான் காண்”,”செந்தமிழோ டாரியனை”, “முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் ” – இதெல்லாம் அப்பர் ஸ்வாமிகள் வாக்கு. சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டும் சிவபிரானிடமிருந்தே வந்தவை என்பதே நமது ஆஸ்திகத் தமிழ் மரபு.

  அனைத்திந்திய அளவிலும், உலக அளவிலும் பிற தத்துவப் பிரிவுகளுடன் தொடர்புகொள்ள மட்டுமின்றி , சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்தையே நன்கு கற்க சம்ஸ்க்ருத அறிவு இன்றியமையாதது. வேரை விடுத்து மரம் செழிக்குமா?

 20. அன்பரே,
  /**
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 4, 2016 at 5:46 pm
  அர்ஹர் எனப்படும் ஆதி நாதராகிய ரிஷபதேவ தீர்த்தங்கரர்.

  **/
  நான்முகன் மகன்(ஸ்ருஷ்டி) -> ஸ்வாயம்புவ மநு
  ஸ்வாயம்புவ மநு மகன்-> ப்ரியவ்ரதன் .
  ப்ரியவ்ரதன் மகன்-> ஆக்நீத்ரன்
  ஆக்நீத்ரன் மகன்-> நாபி
  நாபி மகன்-> ரிஷபதேவர்
  ஆனால் அர்ஹன் எனப்படுபவன் மஹாமோஹன் .இவன் வேறு.

  மேலும் அர்ஹன் என்பவர் ஜைனமதம் .ரிஷபதேவர் என்பவர் ஸநாதன மதம் . நீர் பேசாமல் ஸநாதன மதத்தைவிடுத்து ஜைனமதம் தழுவலாம் .
  ஏனெனில் ஜைனமதம் பற்றி எல்லாப் பொய்யுரைகளையும் படித்துள்ளீர்.
  அதை நம்பவும் வேறு செய்கின்றீர்.

  இப்பொழுது உமது விசுவாமித்திர ஸ்ருஷ்டியினால் விளைந்த வ்யுத்பத்தி வாக்கியம் பற்றிக் காணலாம்.
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 4, 2016 at 5:46 pm
  /*மானத ஜயதே மந்திரம்*/ => சூப்பரப்பு !!! சூப்பர் சூப்பர் சூப்பர்
  இதற்கு அடியேனது வ்யாக்யானம் மேற்கண்டவாறு…. [எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்து பாத்தேன் . முடியல !! …என்னால ….முடியல …(வடிவேலு)]
  முதலில் மானத – என்னுஞ்சொல்
  ********************************************************
  1. மாநத: –( மாந: என்றால் அறிவு, த:- என்றால் இருந்து ). அறிவிலிருந்து (என்று பொருள் கொள்கிறேன் .)
  (வடமொழியில் நகாரம் உண்டு ஆயின், னகாரங்கள் கிடையா .)
  2. மாநத: + ஜயதே => மாநதோ ஜயதே (விஸர்க ஸந்தி மற்றும் குண ஸந்தி) மாநதோ ஜயதே என்பதே சரியான பிரயோகம். மாநத ஜயதே என்று வாராது .
  3. மாநதோ ஜயதே – மீண்டும் தவறு . அளவு (மாந: ) என்பது ஒரு அத்ரவ்யம்( பண்பு). ஆகவே அத்ரவ்யத்திலிருந்து ஒன்றுமே உண்டாகாது.
  த்ரவ்யத்திலிருந்து(பொருள்) தான் எதுவும் உண்டாகும்.( மீமாம்ஸா சாஸ்த்ரம் படியும்)

  பிறகு ஜயதே – என்னுஞ்சொல்
  *************************************************
  ஜயதே => வடமொழியில் இப்படி ஒரு ஆத்மநேபதி வினைச்சொல்லே காணமுடியாது . (ஜாயதே என்று வேண்டுமானால் கொள்ளலாம் .( ஜாயதே =>உண்டாகிறது) .

  இறுதியில்
  மந்திரம்
  **************
  மந்திரம் – இது தமிழ்ச்சொல் (எட்டாமுப்பு பையனுக்கும் தெரியும் ) . வடமொழியில் மந்த்ர: என்னுஞ் சொல்லில் உள்ள “த்ர“ என்னும் கூட்டெழுத்து நம் தாய்மொழியில் -திர என்று திரியும் – நன்னூல் (சொல்லதிகாரம் ,பதவியல்)

  எழுத்துப்பிழை(இலக்கணம்) , சொற்பிழை (நிகண்டு,இலக்கணம்) ,ஸ்ருஷ்டி (மீமாம்ஸா) இப்படி பல பிழைகள் .

  ஐயா !!
  நீவிர் ,யாவர் என்று அடியேன் அறிகிலேன்.
  நீவிர் அடியேனை விட பிராயம் முந்தியவராகவும் கூடலாம்.

  ஆயின் ,அடியேன் அடிவீழ்ச்சி விண்ணப்பஞ் செய்கின்றேன்.

  முக்குறும்பு என்று உள .”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் ”
  அவையாவன,…
  1.குலச்செருக்கு – தான் பெரிய அந்தணர் குலத் தோன்றல் என்பதாம்.(கோத்திரம்).
  2.கல்விச் செருக்கு -தான் தென்மொழி,வடமொழி என உபயமொழிகளும் கற்றவன்.
  மீமாம்ஸை ,தர்க்கம் ,வியாகரணம் – பொன்ற 18 வித்யா ஸ்தானங்களில் பண்டிதன் என்பது போன்ற செருக்கு.
  3. செல்வச்செருக்கு -இது யாவர்க்கும் அறியலாம்படி இருக்குமது.
  முழுமுதற்கடவுள் பாண்டவர்க்காக தூது நடந்தனன்.அஸ்தினாபுரம் அடைந்தனன் . விதூராழ்வான் இல்லத்திலே அமுது உண்டனன். அன்றிரவில் அவரகத்திலேயே அறிதுயில் கொண்டனன்.
  அவன் ஏன் துரோணர் அகம் செல்லவில்லை . துரோணருக்கு குலச்செருக்குமாம்.(அபிவாதயே —-பாரத்வாஜ கோத்ர:)
  அவன் ஏன் பீஷ்மர் இல்லம் ஏகவில்லை .பீஷ்மருக்கு கல்விச்செருக்காம். -உசனா கவி( சுக்ரன்),ப்ருஹஸ்பதி, மற்றும் பார்கவரிடம் பயின்றவராயிர்றே .
  அவன் ஏன் துரியோதனன் மனையைத் துறந்தான் .-திரியோதனனுக்கு சக்கரவர்த்தியென்னும் செலவாகி செருக்காம் .
  ஆகவே நீர்வண்ணன் தாழ்ந்த இடம் புகுந்தனன் .விதூராழ்வானுக்கு அருளினன் .
  நான் இந்த உடல் .இந்த உடலே நான். நான் பண்டிதன் . நான் உயர்குலத்தன் . நான் செல்வந்தன் . எனக்கு இத்த்துணை மனைவிமார்,மக்கள் ,செல்வம்,ஆள் ,அம்பு, சேனை உண்டு.

  அல்ல !அல்ல! அல்ல! அடியேன் அடியாருக்கு அடியேன் என்பதே உண்மையாம் .

  இதை அறிவீர் நீரே . “சைவம் பெரிது, வைணவம் சிறிது” என்றிவ்வாறு உமக்குள் ஏன் சமயப்பூசல்.

  வருந்த வேண்டா . உம்மை வணங்குவேன் . அடியேன் பிழை செய்தவனை மன்னியும் .

 21. கெணேசு on July 4, 2016 at 8:50 pm
  எனவே பக்தியும் இறைவனே கொடுக்க வேண்டும் .
  ஐயா இது எம்மைப்பொருத்தவரையில் சரிதான். இந்த நிலை பக்திமார்கத்தவருடையதே. யோகம், வேதாந்தம், தாந்த்ரிக சாதகர்கள் இந்த நிலையை முழுமையாகக்கைக்கொள்வதில்லை. பௌத்தரும் ஜைனரும் இதை ஏற்பதே இல்லை. இறையருளா, சுயமுயற்சியா முக்திக்கு இறுதிக்காரணமாக அமைவது என்ற விவாதத்தில் பக்தி மார்கத்தினை ஏற்போர் அருளே என்பர். யோகம், வேதாந்த சாதனம், போன்றவற்றை வலியுறுத்துவோர் முயற்சி என்பர். ஆகவே பாரத நாட்டில் பண்பாட்டில் இவர்களுக்கிடையே விவாதம் தொடர்கின்றது. இரண்டு பக்கமும் இணைந்தும் ஒரு சிலப்பாரம்பரியங்களில் காணப்படுகின்றது.
  உங்களுடைய ஒரே வழிதான் சரியான வழி என்பதை ஏற்பதற்கில்லை.
  இதுதான் இதுமட்டும் சரி என்பதை எம்மால் ஏற்கமுடியாது.

 22. கெணேசு
  “உமக்கு இன்னும் அஹங்காரம் ஆகியவில்லை ஓய் !!( நான் இந்த உடம்பு என்னும் நினைப்பு அஹங்காரம்.)
  அது மட்டும் ஒழிந்தால் அடியாரை பணியலாம் .முடியுமா !!!”
  அஹங்காரம் மமகாரம் இவையெல்லாம் ஆணவமாகும். இவை இருப்பதால்தானே இன்னமும் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும், விவாதித்துக்கொண்டும் இருக்கின்றேன். மும்மலம் ஒழிதற்கு வீரசைவ நெறியில் நிற்கின்றேன். அஷ்டாவரணங்களை குருவிடத்திலே பெற்றிற்றிருக்கின்றேன். இந்த ஆவரணங்களில் குரு, லிங்கம், ஜங்கமம் ஆகிய மூன்றும் உள்ளன. ஜங்கமம் என்பது நடமாடும் கோயிலான சிவனடியார்கள். ஆகவே சிவபெருமானுடையதிருவருளால் இவை வாய்த்திருக்கின்றன. அகங்காரம் ஒழிந்தால் சரணடையலாம் என்பதன்று எமது நிலை. அகங்காரம் ஒழிவதற்கு ஏன் அனைத்து மலங்களும் அகல்வதற்கு குரு லிங்க ஜங்கமத்தை சரணடையவேண்டும் என்பதே எமது புரிதல். சிவசிவ ஹர ஹர

 23. ஐயா ,
  மறைமலையடிகளாரே ,
  /**
  BSV on July 3, 2016 at 10:53 pm
  ஆராய்ச்சி பட்டம்பெற்றொரை எப்படி நல்ல தமிழில் குறிப்பிடுவது என்று சொன்னால் நன்று . ஹானரிஸ் காசா பட்டத்துக்கும் சொல்லவும்.
  **/
  அடியேன் ஒரு மென்பொருள் சிற்பி . தமிழை சரிவர அறியாத மடையன். அடியேனது தாய்மொழி தமிழும் அன்று. முன்னம் நோற்ற விதிகொலோ ,முகில்வண்ணன் மாயங்கொலோ , யான் தமிழகத்தில் பிறக்கும் பேறு பெற்றேன் . மணியின் அணிநிறமாயன் தமரடி நீற்றினை சூடும் பெறாதபயன் பெற்றேன் . அமிழ்திலும் இனிய தமிழ் கற்றேன் . ஆயினும் தமிழ் நிகண்டு, நன்நூல் மனப்பாடம் செய்ய இன்னமும் பாக்யம் பெற்றேனல்லன். அதேபோல வடமொழியில் சித்தாந்த கௌமுதியும் ,அமரகோசமும் இன்னும் பாடமாகவில்லை .
  தொடர்ந்த சர்ச்சைக்கு வருவோம் .
  இந்த முனைவர் என்றும் சொல் தொல்காப்பியத்தில் (மரபியல்-1586 ம் சூத்திரம்) முழுமுதற்கடவுளை சுட்டுகின்றார் .(அகரமுதல எழுத்தெல்லாம் என்னுமதுபோல ).
  இதையே பவநந்தியார் நன்னூலிலும்(பாயிரவியல் 3 ம் சூத்திரம்) மேற்கோள் காட்டுகின்றார்.
  திருவாய்மொழியில் ஆழ்வார்
  புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
  நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
  சுனுயினுள் தடந்தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
  முனைவன் மூவுலகாளியப்பன் திருவருள் மூழ்கினளே. -திருவாய்மொழி -8.9.5

  உங்களுக்கு புதிய சொல் வேண்டுமென்றால் இப்படித்தான் களவு செய்வதோ ?

  “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி” -என்றொரு பழமொழி உண்டு .
  நிஷித்தகர்மம் /( பஞ்ச மஹாபாதகங்கள்) என்பவை -1.)கொலை ,2.)களவு ,3.)பிறன் மனை விழைதல் ,4.)மது பானம் மற்றும் 5.)இவ்வாததாயினரோடு கூட்டு .
  எனவே திருமால் மற்றும் அருகனின் நாமத்தை ,
  உங்களுக்கு புதிய சொல் வேண்டுமென்றால் இப்படித்தான் களவு செய்வதோ ?

  எனவே திருமால் மற்றும் அருகனின் நாமத்தை ,ஆராய்ச்சி பட்டம் பெற்றோருக்கும் மற்றும் ஹானரிஸ் காசா பட்டத்துக்கும் கொடுத்து விடுவதுதான் பண்பாடாகுமா ?

  சரி அடியேன் ஒன்று கேட்கின்றேன் .
  12 ஜோடி மூளை நரம்புகள் முறையே – 1.Olfactory, 2.Optic,3.Oculomotor, 4.Trochlear, 5.Trigeminal,6.Abducens,7.Facial,8.VestibuloCochlear,9.Glassopharyngeal,10.Vagus,11.Spinal Accessory,12.Hypoglossal.
  இவைகளுக்கு முறையே நீரே பெயர் சூட்டும் . எதிர்காலத்தில் மருத்துவ மாணவ மணிகளுக்கு தமிழிலேயே பயில உதவியதாய் இருக்கும்.
  அடியேனுக்கும் கௌதஸ்குதன்(அதானுங்ணா கல்லுளி மங்கன்) என்று ஓர் வ்யபதேஸ்யமுண்டு(அதானுங்ணா Nomenclature) .
  The list will continue.
  வர்ட்டா ,
  கெணேசு

 24. முனைவர் என்ற பதம் இறைவனையே குறிக்கும் என நிறுவ பல எடுத்துக்காட்டுக்கள் உள. மறுப்பதற்கில்லை. ஆனால், நம்மவூர்ல ஆராய்ச்சி பட்டம் பி ஹெச் டி பெற்றவர்களை முனைவர் என்ற பெயர்முதலியை வைத்தழைக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல. பலகலைக்கழகங்களும். முனைவர் முத்துக்குமாரசுவாமிஎன்றால் தமிழில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர் என்று பொருளெடுக்கப்படுகிறது.

  முனைவர் எனப்து சரியாகாதென்றால், வேறெப்படி பெயர்முதலி வரும்? வேறெவராவது சொல்லலாமே? திரு கணேசு என்னை ஏமாற்றிவிட்டபடியால் மற்றவருக்கு இவ்வினா! Please try.

 25. மதிப்பிற்குரிய BSV ஐயா அவர்களுக்கு,
  /**
  BSV on July 6, 2016 at 7:39 pm
  முனைவர் எனப்து சரியாகாதென்றால், வேறெப்படி பெயர்முதலி வரும்? வேறெவராவது சொல்லலாமே? திரு கணேசு என்னை ஏமாற்றிவிட்டபடியால் மற்றவருக்கு இவ்வினா! Please try.
  **/
  அடியேன் சொன்னதை மிக விளையாட்டாகவும் ,சொல்லவந்த பாவத்தை(BHAAVANAI) புரிந்து கொண்டதற்கும் மிக்க நன்றி .
  வாழிய நீவிர் ! வாழிய உமது சீல குணம் .

 26. முனைவர் என்பது Ph.D. பட்டத்தை குறிக்கப் பயன்படுத்துவதெல்லாம் கடந்த இருபது முப்பது வருஷங்களாகத்தான். அதற்கு முன் அந்த வார்த்தையை நம்மில் பெருவாரியானவர் கேட்டிருக்க மாட்டோம். வார்த்தையின் பொருள் நம் கண்ணெதிரிலேயே மாறுகிறதா?

  சொற்களின் பொருள் மாறுவது நடப்பதுதானே? பாயசம் நாறுகிறது என்றால் குப்பையில் கொட்டத்தான் நமக்கெல்லாம் தோன்றும். பல நூறு வருஷங்களுக்கு முன்னால் அப்படி சொன்னால், அப்படியா என்று இன்னும் இரண்டு தொன்னை பாயசம் சாப்பிட்டிருப்பார்கள்…

 27. ஐயா,

  /*
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 6, 2016 at 7:57 am
  இறையருளா, சுயமுயற்சியா முக்திக்கு இறுதிக்காரணமாக அமைவது என்ற விவாதத்தில் பக்தி மார்கத்தினை ஏற்போர் அருளே என்பர். யோகம், வேதாந்த சாதனம், போன்றவற்றை வலியுறுத்துவோர் முயற்சி என்பர்.
  */
  ஈஸ்வர ப்ரணிதான வா – பதஞ்சலி யோக ஸூத்ரம் 1-23
  https://rashmidevi.wordpress.com/2014/01/23/offering-heart/

  பதஞ்சலியே ஒத்துக் கொள்கின்றாரே …
  முடியல ! என்னால முடியல ! அழுதுருவேன் ! அப்புறம் அழுதுருவேன் !
  பக்தி, கைவல்யம் ,காசு-பணம் ,சாயுஜ்யம் ,அழகு ,பதவி ,மரியாதை ,வாஹனம்,திருமணம் ,மக்கள் ,இல்லம் இப்படி எல்லாமே இறைவன் அருளால்தான் கிட்டுகிறது .

  ரசத்தில் பலவகையுண்டு .
  தக்காளி ரசம் – தக்காளி மிகுதியாயிருப்பது ,
  பருப்பு ரசம் -பருப்புச்சாறு மிகுதியாயிருப்பது ,
  எலுமிச்சை ரசம் -எலுமிச்ச்சை சாறு கலந்தது ,
  மிளகு ரசம் -மிளகு மிகுதியாயிருப்பது ,
  பைனாப்பிள் ரசம்- பைனாப்பிள் சாறு கலந்தது ,
  சீரக ரசம் -சீரகம் மிகுதியாயிருப்பது ,இன்னபிறவாம் .
  ரசம் என்றால் அதனுள் நீர்,உப்பு ,தக்காளி, பருப்பு ,மிளகு போன்றவை கட்டாயம் இருக்கும் . ஆனால் சில சாமான்கள் கூடவும் குறையவும் இருக்கும் .
  அதன் பங்கு மிகுதியோ அதனால் அப்பெயர் ஏற்படுகிறது.
  நிலம், நீர், காற்று ,நெருப்பு ,ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களிலும் அப்படியே .
  50% ஸூக்ஷ்ம நிலம் +12.5 %ஸூக்ஷ்ம நீர் +12.5% ஸூக்ஷ்ம காற்று +12.5% ஸூக்ஷ்ம நெருப்பு +12.5% ஸூக்ஷ்ம ஆகாயம்=ஸ்தூல நிலம்
  12.5% ஸூக்ஷ்ம நிலம் +50%ஸூக்ஷ்ம நீர் +12.5% ஸூக்ஷ்ம காற்று +12.5% ஸூக்ஷ்ம நெருப்பு +12.5% ஸூக்ஷ்ம ஆகாயம்=ஸ்தூல நீர்
  12.5% ஸூக்ஷ்ம நிலம் +12.5 %ஸூக்ஷ்ம நீர் +50% ஸூக்ஷ்ம காற்று +12.5% ஸூக்ஷ்ம நெருப்பு +12.5% ஸூக்ஷ்ம ஆகாயம்=ஸ்தூல காற்று
  12.5% ஸூக்ஷ்ம நிலம் +12.5 %ஸூக்ஷ்ம நீர் +12.5% ஸூக்ஷ்ம காற்று +50% ஸூக்ஷ்ம நெருப்பு +12.5% ஸூக்ஷ்ம ஆகாயம்=ஸ்தூல நெருப்பு
  12.5% ஸூக்ஷ்ம நிலம் +12.5 %ஸூக்ஷ்ம நீர் +12.5% ஸூக்ஷ்ம காற்று + 12.5% ஸூக்ஷ்ம நெருப்பு +50% ஸூக்ஷ்ம ஆகாயம்= ஸ்தூல ஆகாயம் (பஞ்சீகரணம்)
  எனவே ஒவ்வொரு ஸ்தூல பூதத்திலும் ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களுண்டு .
  அவற்றுள் எதன் பங்கு மிகுதியாக உளதோ அதன் பெயரே அவ்வொ தத்துவத்திற்கு பெயராகும் .

  அதேபோலவே வேதாந்தமும்.
  ஹடயோகம் ,ஞானயோகம் ,பக்தியோகம் ,கர்மயோகம், சரணாகதி என்பன அதன் அங்கங்கள் .
  இவற்றில் யாவற்றிலுமே கர்மமும் ,அறிவும் ,காதலும் ,ப்ராணாயாமமும், ப்ரபத்தியும் கலந்திருக்கும்.
  அவற்றுள் எதன் பங்கு மிகுதியாக உளதோ அதன் பெயரே அவ்வொ மார்க்கத்திற்கு பெயராகும் .
  இதை அறியாமல் ஆதிசங்கரர் ஞானயோகம் மார்க்கமே சிறந்தது என்கிறார்.
  அவர்கள் சந்தியாவந்தனம் ,சிகை ,யக்ஞோபவீதம் போன்ற கர்ம சம்பந்தம் துறந்தவர்களாவர் .

  ஒரு ஸந்யாசி அக்னியை விடவேண்டும் .ஆனால் யக்ஞோபவீதமோ அல்லது சந்தியாவந்தனத்தையோ அல்ல .
  வைட்ணவ ஸந்யாசிக்கு சிகை ,யக்ஞோபவீதம்,பவித்ரம் ,தண்டு ,அரைநாண் போன்ற வெளிச்சின்னங்களும் சந்தியாவந்தனம் போன்ற கர்மங்களும் விடத்தக்கதல்ல .

  நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
  ஷரீர-யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத் அகர்மண: பகவத் கீதை 3.8
  செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது.
  மூச்சு விடுவதும் ஒரு கர்மந்தான் .சங்கரரால் சுவாசிப்பதை துறக்க முடியுமா.( சங்கு தான்)

  ந கர்மணாம் அனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோ (அ)ஷ்னுதே
  ந ச ஸன்ன்யஸனாத் ஏவ ஸித்திம் ஸமதி கச்சதி கீதை 3.4
  செயல்களிலிருந்து விலகிக் கொள்வதால் விளைவுகளிலிருந்து ஒருவன் விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாததாகும்.

  கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன்
  இந்த்ரியார்தான் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே
  புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனின்பப் பொருள்களில் மனதை அலைபாய விடுபவன், தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகின்றான். கீதை 3.6
  இதை அறியாத ஜெயேந்திரர் கம்பி எண்ணினார் .( ஒரு சந்நியாசிக்கு எதற்கு ஜெயலலிதாவுடன் வியாபார கூட்டு)

  ந ஹி கஷ்சித் க்ஷணம் அபி ஜாது திஷ்டத்-யகர்ம-க்ருத்
  கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதி-ஜைர் குணை: கீதை 3.5
  பௌதிக இயற்கையிடமிருந்து பெறப்பட்ட குணங்களுக்குத் தகுந்தாற் போல, ஒவ்வொருவரும் சுதந்திரம் ஏதுமின்றி செயல்படுவதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். எனவே, ஒரு கணம் கூட செயல்கள் எதையும் செய்யாமல் இருப்பது எவருக்கும் சாத்தியமல்ல.

  எனவே சந்யாசிக்கும் கர்மமுண்டு .ஆனால் அவற்றை ஈஸ்வரார்ப்பணமாக செய்ய வேண்டும் (கர்மயோகம்).
  சந்யாசிக்கும் பூஜா புனஸ்காரமுண்டு(பக்தியோகம் ) .ஆனால் அவற்றை ஈஸ்வரார்ப்பணமாக செய்ய வேண்டும்.
  சந்யாசி செய்ய வேண்டிய ஸந்த்யாவந்தனத்திலும் ,திருவாராதன காலத்திலும் ப்ராணாயாமமுண்டு (ஹடயோகம் ).
  சன்யாசி செய்யும் இதிஹாச புராண படணம் ,உபன்யாசம் போன்றன க்ஞாநயோகம் .
  சன்யாசி செய்யும் ஈஸ்வர ப்ரணிதானமே பிரபத்தியோகம் .

  குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம்விட்ட,
  இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயனில்லையேல்,
  சிறுக நினைவதோர் பாசமுண்டாம் பின்னும் வீடில்லை,
  மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே -திருவாய்மொழி – 4-1-1
  பட்டிமேயாதபடி மனத்தைக் குறுக்கி ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு நன்றாகச் சேர்த்து (ஆத்மஸாகூஷாத்காரித்தைப்பண்ணி) (ஜச்வர்யம், பகவதநுபவம் முதலிய) எல்லாவற்றையும் வெறுத்தவனாய் ஸங்கோச மோக்ஷமாகிய கைவல்யமோக்ஷத்தில் விருப்பங்கொண்டவனான
  ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கும் அந்த பகவதுபாஸநம் இல்லையாகில் அற்பமாக நினைப்பதற்குறுப்பான
  ஒரு பந்தம் உண்டாகும். அதற்குமேலே அந்தக் கைவல்ய மோக்ஷம் ஒரு நாளும் விட்டு நிங்குவதன்று;
  ஹேயப்ரதிபடனான எம்பெருமானை ஆச்ரயித்து நீங்காவிடில் அதுவே பரமபுருஷார்த்தம்.
  http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3822

  ஜைன, பெளத்த மாதங்கள் அடியேனுக்கு ஒரு பொருட்டே அல்ல .இவை வேத பாஹ்யங்கள் .இவற்றை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் பூர்வாசார்யர்கள் பேய் ஓட்டியாயிற்று . ஆனாலும் நேற்று பெய்த மழையில் இன்று ,சில காளான்கள் முளைக்கவே செய்கின்றன .
  நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கெல்லாம்,
  ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன்தானே,
  **************************************************************************************************
  பூவியல் நால்தடந்தோளன் பொருபடையாழி சங்கேந்தும்,
  காவிநன் மேனிக்கமலக் கண்ணன் என் கண்ணினுளானே. திருவாய்மொழி – 1-9-8

  அடியேன்
  தாஸன்

 28. கெணேசு….

  ஜைன மதத்தில் ஆதிநாதர் எனப்படும் ரிஷபநாதரே முதல் தீர்த்தங்கரர். சிவஸ்ரீ கூறுவது சரியே.

  நீங்கள்தான் தானும் குழம்பிப் பிறரையும் குழப்புகிறீர்கள். நான்முகன், வைவாவஸ்வத மனு இன்னபிறர்களுக்கும் ஜைன மதத்தின் தீர்த்தங்கரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 29. ஐயா அடியவரே ,
  /**அடியவன் on July 8, 2016 at 9:57 pm
  ஜைன மதத்தில் ஆதிநாதர் எனப்படும் ரிஷபநாதரே முதல் தீர்த்தங்கரர். சிவஸ்ரீ கூறுவது சரியே.**/

  புராணத்தில் மஹரிஷி வியாசரும்,பராசரரும் எழுதியது உண்மையா ? அல்லது சிவஸ்ரீ கூறுவது உண்மையா?

  /**”மானத ஜயதே மந்திரம் என்பது சமஸ்கிருத தொல்மொழி. ” **/
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 4, 2016 at 5:46 pm
  என்று கூசாமல் புளுகியவர்தான் , உமக்கு சரியான அதிகாரியோ ?
  எல்லாம் கலியுகத்தின் மகிமை ஐயா !
  அன்புடன் ,
  கெணேசு

 30. கெணேசு,

  புராணத்துக்கும் ஜைன மதத்துக்கும் சம்பந்தம் இல்லை.

  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது.

 31. பெரு மதிப்பிற்குரிய அடியாருக்கு ,
  /**
  அடியவன் on July 12, 2016 at 4:25 pm
  புராணத்துக்கும் ஜைன மதத்துக்கும் சம்பந்தம் இல்லை.
  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது.
  **/
  https://www.vedabase.com/en/sb/5
  SB 5.1: The Activities of Maharaja Priyavrata -ஸ்வயம்புவ மனுவின் மகன் .நான்முகனாரது பெயரன்.
  SB 5.2: The Activities of Maharaja Agnidhra -ப்ரியவ்ரதனின் மகன் -அக்னித்ரன் .
  SB 5.3: Rishabhadeva’s Appearance in the Womb of Merudevi, the Wife of King Nabhi – நாபி மகன் ரிஷபதேவர் .
  SB 5.4: The Characteristics of Rishabhadeva, the Supreme Personality of Godhead
  SB 5.5: Lord Rishabhadeva’s Teachings to His Sons
  SB 5.6: The Activities of Lord Rishabhadeva
  மேற்காணும் சுட்டிகள் வாயிலாக
  ஸ்ரீமத் பாகவத புராணம் 5 ம் காண்டம் 1,2,3,4,5,6 அத்தியாயங்களில் ரிஷபதேவர் பற்றி வருகின்றது .

  இதைத்தான் ஜைனர்கள் காப்பியடித்தது .
  கதை இங்ஙணம் இருக்க ,நீவிர் அடியேனை குற்றம் சொல்வது எவ்வாறு ?

  காப்பியடித்தது ஜைனர்கள் . அதை வழிமொழிந்தது இடதுசாரி எழுத்தாளர்கள் .

  மேலும் அர்ஹன் எனப்படுபவன் மஹாமோஹன் .இவன் வேறு. இவனைப் பற்றி விஷ்ணுபுராணத்தில் 3 ம் அம்சம் 18 அத்தியாயத்தில் வைத்து கூறப்படுகின்றான் .

  ததோ திகம்பரோ முண்டோ பர்ஹிபிஞ்சதரோ த்விஜ: |
  மாயாமோஹோஸுராந் ஶ்லக்ஷ்ணமிதம் வசநமப்ரவீத் || விஷ்ணுபுராணம் 3-18-2
  பொருள்: அப்பொழுது நர்மதை நதிக்கரையில் ,தவத்தில் இருந்த அஸுரர்களிடம் ,ஆடையில்லாதவனாயும் ,மொட்டைத்தலையனும் ,கையில் மயில்தோகையுடனும் ,மஹாமோஹன் என்றும் அர்ஹன் என்றும் பெயர்கொண்டு ,மயக்கும் சொற்களை சொன்னான் .

  குருத்வம் மம வாக்யாநி யதி முக்திமபீப்ஸத |
  அர்ஹத்வம் ஏநம் தர்மம் ச முக்தித்வாரம ஸம்வ்ருதம்|| விஷ்ணுபுராணம் 3-18-4
  பொருள்: உங்களுக்கு மோக்ஷம் பெற விருப்பம் இருந்தால் ,என்னுடைய இந்த அர்ஹத்வம் (அர்ஹன்) என்னும் மோக்ஷ வாயிலைப் பற்றியிருக்கும் தர்மத்தை பின்பற்றுவீராக .

  எனவே இந்த அர்ஹன் வேறு ஆசாமி . ரிஷபதேவர் வேறு ச்வாமி .

  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது ஜைனர்கள் , இடதுசாரி எழுத்தாளர்கள், ASIATIC SOCIETY, INDOLOGY ,etc. அடியேனல்லேன்.

  முடியல ! முடியல ! அப்புறம் அழுதுருவேன் !

 32. அய்யா, முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு

  உங்கள் கருத்து பாராட்ட தகுந்தது தான் ஆனால் ஒரு குறை … , அத்தியாசிரம சுத்தாத்துவித வைதீக சைவ சித்தாந்த ஞான பானு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளை சைவ உலகம் மறக்கலாமா ? அந்த பெருமான் சைவத்திற்கு செய்த அருமைகளை நீங்கள் மறந்து ஏனோ ?

  “அண்மைக்காலத்தில் வாழ்ந்த சைவசித்தாந்தப் பேராசிரியர்களான ஔவை துரைசாமிப் பிள்ளை, பண்டித பூஷணம் பேட்டை ஈசுவரமூர்த்தியா பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், தூத்துக்குடி பொ. முத்தையாபிள்ளை,, சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ஆ. ஷண்முக முதலியார், பேராசிரியர் திருஞானசம்பந்தம் காஞ்சிபுரம் நாகலிங்க முதலியார், அருணைவடிவேல் முதலியார் முதலியோர் இருமொழிகளிலும் வல்லுநர்களாகத் தமிழ் சைவசித்தாந்தத்திற்கு ஆற்றிய தொண்டினைச் சைவ உலகம் மறத்தலாகாது.”

 33. கெணேசு
  /**”மானத ஜயதே மந்திரம் என்பது சமஸ்கிருத தொல்மொழி. ” **/
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 4, 2016 at 5:46 pm
  என்று கூசாமல் புளுகியவர்தான் , உமக்கு சரியான அதிகாரியோ ?
  எல்லாம் கலியுகத்தின் மகிமை ஐயா !
  கலியுகத்தின் மகிமை இதுவன்று. கணேஸ் என்பதை கெணேஸ் என்று எழுதுவதுதான். இங்கே கேள்வி அத்தாரிட்டியைப்பற்றியல்ல.என்னை அதிகாரி என்று யாரும் சொல்லவில்லை. யானும் அப்படி எண்ணவும் இல்லை. தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது இங்கே அவசியமற்றது. அதை நீங்கள் தொடர்ந்து செய்கின்றீர்கள். அது உங்களது சித்தாந்தமாக இருக்கலாம். அதை ஏற்பதற்கில்லை. யான் சமஸ்கிருதப்பண்டிதன் அல்ல. எனக்கு பெரிவர்கள் சொன்னதை சொன்னேன். மந்திரம் உங்களைப்பொருத்தவரையில் உச்சரிப்பவனை காக்ககூடியதாக இருக்கலாம். ஆனால் எம்மைப்பொருத்தவரையில் அது அது மனதை வெல்லுவதற்கு கடப்பதற்கான சாதனமே.

 34. கெணேசு
  “ஸ்ரீமத் பாகவத புராணம் 5 ம் காண்டம் 1,2,3,4,5,6 அத்தியாயங்களில் ரிஷபதேவர் பற்றி வருகின்றது .

  இதைத்தான் ஜைனர்கள் காப்பியடித்தது”.
  ஐயா கெணேசு ஜைனமதத்தின் காலம் எது? ஜைனசமயம் தோன்றிய காலம் எது? உங்கள் மஹாபாகவதம் தோன்றிய காலம் எதுவென்று என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.
  மஹாபாகவதம் தோன்றிய காலம் பிற்பட்டதே. சைவர்களைப்பொருத்தவரை பதினான்கு வித்தைகளில் ஒன்றாக அதைக்கருதுவதில்லை. வித்யாஸ்தானங்களில் ஒன்று என்றோ வைதீகம் என்றோ சைவாச்சாரியார்கள் பாகவதத்தைக்கருதுவதில்லை. தேவி பாகவதமே சைவர்களால் பதினென் புராணங்களுல் ஒன்றாகக்கருதப்படுகின்றது. ஆகவே பாகவதம் தோன்றியகாலம் பிற்பட்டதாக இருக்கலாம்.

 35. அன்புடையீர் ,
  /** ஐயா கெணேசு ஜைனமதத்தின் காலம் எது? ஜைனசமயம் தோன்றிய காலம் எது? சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 20, 2016 at 8:15 pm **/

  தமிழில் நன்னூல் என்னும் இலக்கண நூலினை எழுதியவர் பவநந்தியார். இவர் ஜைனமதம் சார்ந்தவர்.
  இந்நூலில் பயின்றுவரும் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் நான்முகன் என்றும் அச்சுதன் என்றும் நமது சனாதன தர்மத்தின் கடவுளர்களான அயன் மற்றும் திருமாலைக் குறிக்கும் சொற் ப்ரயோகம் காணீர் !! காணீர் !!

  பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த
  நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே – எழுத்ததிகாரம்-56

  முச்சகம் நிழற்றும் முழு மதி முக்குடை
  அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல்லே -சொல்லதிகாரம்-258

  இச்சொற்களால் அருக தேவன் குறிக்கப்படுகின்றார் என்பது உரைகளில் காணப் பெறும். இதுவே ஜைனர்களின் திருட்டுக்கு உதாரணம் .

  நமது நாட்டிற்கு பாரதநாடு என்ற பெயர் ஏற்பட்டது பரதமஹாராஜர் என்னும் மன்னவர் ஆண்டதால்தான் .( அதானுங்க ஜடபரதர்). இவருக்கு தகப்பனார் ஜம்புத்வீபத்தை பிரித்துக் கொடுக்கின்றார் .இவராண்ட பகுதி பாரத வர்ஷம் . இவர் ஒரு சனாதன தர்மி .இவரது தகப்பனார் நாமதேயம் ரிஷபர் என்பதாம் . இவரும் ஒரு சனாதன தர்மியாவார்.
  இதைத்தான் நாம் சங்கல்பத்தில் –“அத்ய ப்ராம்ஹண: ;த்விதீய பரார்தே;ஸ்வேத வராஹ கல்பே;கலியுகே ; ஜம்புத்வீபே; பாரத வர்ஷே…” -என்று சொல்லி வருகின்றோம்.

  ரிஷபர் என்னும் பெயர், மஹாபாரதத்தில் அநுஶாஸநிக பர்வத்தில் பீஷ்மர் தருமருக்கு உரைக்கும் சஹஸ்ரநாமத்தில் ஒரு பெயராகும்.
  வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: | -28 ம் சுலோகம் .
  http://www.shivkumar.org/music/vishnu-sahasranamam-meanings.htm
  மேலும் பத்மபுராணத்தில் உத்தரகாண்டத்தில் பரமசிவனார் பார்வதிக்கு உரைக்கும் சஹஸ்ரநாமத்திலும் ஒரு பெயராகும்.

  எனவே ரிஷபர் என்னும் பெயர் திருமாலைச் சுட்டும்.
  கூடுதலாக அதே மஹாபாரதத்தில் காணப்பெறும் ஶிவ சஹஸ்ரநாமத்தில் ஒரு பெயராகவும் இருக்கலாம் .(Let me confirm after few days).
  இவ்வாறாக ரிஷபதேவர் என்னும் சொல் திருமாலின் ஒரு அவதாரம் என்பதே வைட்ணவர்களின் ஆதாரம்.( ஸ்வயம்புவ மனு குலத்தில் நாபி என்னும் அரசரின் மகனாக அவதாரம்.- விஷ்ணுபுராணம் 2 ம் அம்சம்)
  இதனை ஆட்டைய போட்டது ஜைனர்களாம்.

  இப்ப என்னா செய்வீங்க !! இப்ப என்னா செய்வீங்க !! அஸுக்கு புஸுக்கு ! இப்ப என்னா செய்வீங்க !!

  Sorry ! there is no website proof to show Vishnupuran, Mahabharath & padmapuran here. But ofcourse they are written in hindi and available in pdf format from gitapress gorakpur sites.

 36. அன்புடையீர் ,
  /**அடியவன் on July 8, 2016 at 9:57 pm

  கெணேசு….

  ஜைன மதத்தில் ஆதிநாதர் எனப்படும் ரிஷபநாதரே முதல் தீர்த்தங்கரர். சிவஸ்ரீ கூறுவது சரியே.**/

  http://www.kamakoti.org/tamil/Kural121.htm?PHPSESSID=c0450d67073ee482434e23ad36cb16d1
  புராணம் என்று இருந்தால் அது சொல்ல வேண்டிய விஷயங்கள் ஐந்து இருக்கின்றன என்று பஞ்ச லக்ஷணம் கொடுத்திருக்கிறது.
  அவை: 1) ஸர்க்கம் (ஆதியில் நடந்த சிருஷ்டி).
  2) ப்ரதி ஸர்க்கம் (அப்புறம் அந்த ஸ்ருஷ்டி யுகங்கள் தோறும் கவடு விட்டுக் கொண்டு பரவியது.)
  3.) வம்சம் (பிரம்ம புத்ரர்களிலிருந்து ஆரம்பித்து ஜீவகுலம் எப்படி தலைமுறை தலைமுறையாக வந்தது என்ற விஷயம்.)
  4.) மன்வந்தரம் (ஆயிரம் சதுர்யுகங்களில் லோகம் பூராவுக்கும் மநுஷ்யகுல முன்னோர்களாக இருக்கப்பட்ட பதினாலு மனுக்களின் காலத்தைப் பற்றிய விஷயங்கள்.)
  5.), வம்சாநுசரிதம் (தேசத்தைப் பரிபாலித்த ராஜாக்களின் வம்சாவளி; ஸுர்ய வம்சம், சந்திர வம்சம் என்பது போன்ற dynasty -களின் விவரம்) .

  இதில் 3ம் லக்ஷணமாக வருவது வம்சம் என்பதாம் . இதைத்தான் அடியேன்
  நான்முகன் மகன் –> ஸ்வாயம்புவ மநு
  ஸ்வாயம்புவ மநு மகன்-> ப்ரியவ்ரதன் ,
  ப்ரியவ்ரதன் மகன்-> ஆக்நீத்ரன்,
  ஆக்நீத்ரன் மகன்-> நாபி,
  நாபி மகன்-> ரிஷபதேவர்.
  ரிஷபதேவர் மகன்-> பரதர்
  எனவே ரிஷபதேவர் திருமாலின் அம்சம்தான் என்றும் முன்னர் விளக்கி இருந்தேன் .( விஷ்ணுபுராணம் ,நாரத புராணம் ,ப்ரம்ம புராணம் முதலியன.).
  ஆனாலும் அவர் ஜைனர் என்று ஆடம் பிடிப்பாரை நாம் எவ்வாறு சனாதன தர்மி எனக் கொள்வதாம் ?

  அடியேன் எவ்வளவு ப்ரமாணங்களை காட்டிடினும் சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்கள் ஒத்துக் கொள்வதேயில்லை .

  (Edited and published)

 37. சந்தமறையும் தமிழும்தேர் தன்னேரில்லாக் கும்ர்குருதாசர் எனும் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள பரிபூரஃணானந்தபோதம், தகராலய ரகசியம், திருப்பா, வேதத்திக் குறித்த வியாசம் முதலிய கட்டுரைகள் ஆகியன வைதீக சைவத்திற்கு அரண் செய்யும் சாத்திரநூல்கள். தமிழ் நடை சிறிதுகடினமாக இருப்பினும் பழகிவிட்டால் பேரின்பம் தரும்.

 38. /** சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 20, 2016 at 8:15 pm
  மஹாபாகவதம் தோன்றிய காலம் பிற்பட்டதே. சைவர்களைப்பொருத்தவரை பதினான்கு வித்தைகளில் ஒன்றாக அதைக்கருதுவதில்லை. வித்யாஸ்தானங்களில் ஒன்று என்றோ வைதீகம் என்றோ சைவாச்சாரியார்கள் பாகவதத்தைக்கருதுவதில்லை. தேவி பாகவதமே சைவர்களால் பதினென் புராணங்களுல் ஒன்றாகக்கருதப்படுகின்றது. **/
  /**
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 11, 2011 at 2:30 pm
  http://tamilhindu.com/2011/08/tamils-and-vedanta-6/
  உங்கள் பாகவதம் வைதீகமானது அன்று அது தாந்த்ரீகமானது. அதில் வேத நிந்தனை உள்ளது என்பது சிவனருட் செல்வர்தம் கருத்து. தேவை எனில் அதனையும் எழுதுவோம்.
  **/
  உத்தரம்:-
  எங்கள் ஸ்ரீமத் பாகவதம் , ஒரு வைதீக புராணமே தான் . என்று நிரூபிக்க வாய்ப்பளித்தமைக்கு ,ஐயா சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்கள் திருவடிக்கு ஆயிரம் ஆயிரம் நமஸ்காரங்கள் உரித்தாகுக .

  ஸ்ரீமத் பாகவதம் தான் வைதீக புராணம் என்று அடியேனது வாதங்களை ,இங்கு , இரண்டு வகையாக வைக்கின்றேன் . அவையாவன 1) மீமாம்ஸா (வேத ஆராய்ச்சி) வாயிலாகவும் மற்றும் 2.) வியாகரணம் வாயிலாகவுமாம் .
  நீர் முதலில் 14 வித்யா ஸ்தானங்கள் என்று ஒப்புக்கொண்டீரே ,அதில் வருவதுதான் மேற்கூறிய மீமாம்ஸா மற்றும் புராணமாம்.
  http://www.kamakoti.org/tamil/Kural103.htm
  மீமாம்ஸை :- உபக்ரம-உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்று ஆறு வழிகளைக் காட்டி இவற்றால் வேதமந்திரங்களின் உத்தேசத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறது.

  க்ருஷ்ண த்வைபாயன வ்யாஸர், தான் செய்த ப்ரம்ம மீமாம்ஸா நூலினை , அதாதோ ப்ரம்ம ஜிக்ஞாஸ: என்று தொடங்குகின்றார் . (அதாவது “கர்மானுஷ்டானுத்திற்குப் பிறகு ப்ரம்ம விசாரம்” -என்று !!). அதன் பிறகு அவர் சொல்லும் முதல் சூத்திரமே –
  “ஜன்மாத்யஸ்ய யத: “-1-1-2 .
  வியாசர் இங்கு குறிப்பாக சுட்டுவது -யஜுர்வேதத்தில் தைத்திரீய ஆரண்யகத்தில் வரும் –
  “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே , யேந ஜாதாநி ஜீவந்தி, யம் ப்ரயந்தி அபி ஸம்விஶந்தி” – என்னும் பகுதியாம்.
  இதன் பொருள் -“எவனிடமிருந்து இந்த பிரபஞ்சம் உண்டாகியதோ ;எவனாலேயே இந்த பிரபஞ்சம் தாங்கப்படுகின்றதோ ;எவனிடமே இந்த பிரபஞ்சம் திரும்பவும் லயமடையுமோ ; அவனை அறிந்துகொள் ; அவனே பரப்பிரம்மம் “[-என்றிவ்வாறு வருணர் தன் மகன் ப்ருகுவிடம் உபதேசிக்கின்றார்.]

  இச்சூத்திரத்தின்கண் வடமொழி இலக்கணம் கொண்டு கவனமாக அறிய வேண்டிய சொற்கள் சிலவுண்டு – அவையாவன:
  1)யத : – எவனிடமிருந்து (ஆண்பால் -ஒருமை -5 ம் வேற்றுமை ),
  2)யேந – எவனால் (ஆண்பால் -ஒருமை -3 ம் வேற்றுமை ),
  3)யம் – எவனை (அதாவது) எவனிடம் (ஆண்பால் -ஒருமை -2 ம் வேற்றுமை )- [என்றிவ்வாறு , ஆண்பால் ஒருமை சொற் ப்ரயோகம் காணீரே !! ]

  இதனால் பரப்பிரம்மம் என்பவன் ஒரு ஆண்பால் என்றும், அவன் ஒருவனே என்றும், !!! பலர் அல்ல என்றும் அறியலாம் .

  ஒருவேளை பரப்பிரம்மம் பெண்பால் எனில் அச்சொற்கள்
  1)யாத : – எவளிடமிருந்து (பெண்பால் -5 ம் வேற்றுமை ),
  2)யயா -எவளால்(பெண்பால் -3 ம் வேற்றுமை ),
  3)யாம் -எவளை (அதாவது) எவளிடம் (பெண்பால் -2 ம் வேற்றுமை )
  என்றுதான் இருந்திருக்கும்.
  “யாதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே , யயா ஜாதாநி ஜீவந்தி, யாம் ப்ரயந்தி அபி ஸம்விஶந்தி”
  பொருள்: “எவளிடமிருந்து இந்த பிரபஞ்சம் உண்டாகியதோ ; எவளாலேயே இந்த பிரபஞ்சம் தாங்கப்படுகின்றதோ ; எவளிடமே இந்த பிரபஞ்சம் திரும்பவும் லயமடையுமோ ; அவளை அறிந்துகொள் ; அவளே பரப்பிரம்மம்”.

  ஆனால் இப்படியன்றி அங்கு ஆண்பால் –ஒருமை எடுத்தாளப்பட்டதனால் -பரமாத்மா ஒரு ஆண் தான் என்று நிரூபணம் ஆகின்றது .

  அதே வாக்கியமான “ஜன்மாத்யஸ்ய யத:” என்றுதான் எங்கள் ஸ்ரீமத் பாகவத புராணமும் , “கண்ணனே முழுமுதற்கடவுள்”- என்று துதித்து, ஆரம்பிக்கின்றது.
  “ஜந்மாத்யஸ்ய யதோந்வயாத் இதரதஶ்சார்தேஷ்வபிக்ஞ ஸ்வராட்
  தேநே ப்ரம்ம ஹ்ருதா ய ஆதிகவயே முஹ்யந்தி யத் ஸூரய:
  தேஜோவாரிம்ருதாம் யதா விநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
  தாம்நா ஸ்வேநஸதா நிரதஸ் குஹகம் ஸத்யம் பரம் தீமஹி|”
  ஸ்ரீமத் பாகவத புராணம்- 1-1-1

  இந்த ஸ்லோகத்தின் 4 பாதங்களும்(கால்வரி) ,ப்ரம்ம சூத்திரத்தின் 4 அத்தியாயங்களை சுருங்க விளக்கும். மேலும் ப்ரம்ம சூத்திரம்- 545 சூத்ரங்களும் இப்புராணத்தில் மிகவிரிவாக விளக்கப்பட்டுள்ளன. தேவீபாகவதத்தில் இவ்வாறு மீமாம்ஸா பிரயோகம் கிடையாது.

  அநாவ்ருத்தி: ஶப்தாத்; அநாவ்ருத்தி: ஶப்தாத்; – 4-4-22 என்று ப்ரம்ம சூத்திரம் முடிகின்றது.
  பொருள்: முக்தர்கள் இவ்வுலகிற்கு திரும்பி வருவதில்லை .ஶ்ருதி அவ்வாறு கூறுவதால்; – (2 முறை).
  இதற்கு வ்யாஸர் –“தயோர்த்வமாயந் அம்ருதத்வமேதி- சாந்தோக்ய உபநிஷத் – 8-6-6” வாக்யமாக
  “அவ்வழியால் மேலே சென்று அம்ருதத்வம் அடைகின்றனர்”- என்கிறார்.

  “யோகீந்த்ராய ததாத்மநாத பகவத்ராதாய காருண்யதஸ்
  தச்சுத் தம் விமலம் விஶோகமம்ருதம் ஸத்யம் பரம் தீமஹி” – ஸ்ரீமத் பாகவத புராணம்- 12-13-19 என்று பாகவதம் 18000 சுலோகங்கள் கொண்டு முடிகின்றது.
  எங்கள் ஸ்ரீமத் பாகவத புராணம் –
  “ஸத்யம் பரம் தீமஹி” என்று உபக்ரமித்து (தொடங்கி) ,
  “ஸத்யம் பரம் தீமஹி” என்று உபஸம்ஹாரம்(முடிவு) அடைகின்றது. ஆகவே இதனை காயத்ரி கூறும் ப்ரம்மவித்யை என்பர். எனவே இதுதான் வைதீகம்.
  கூடுதலாக மீமாம்ஸா ஸாஸ்திரத்தின் அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி உத்திகளையும் இப்புராணத்தின்கண் காணலாகும் .

  மேலும் சாக்தஆகமம் ஏற்பதற்கில்லை (தாந்த்ரீகம்) என்று சங்கர பகவத் பாதர் தனது ப்ரம்ம சூத்திரம் 3ம் அத்யாயம் 3ம் பாத பாஷ்யத்தில் கூறியுள்ளார். இவ்வாறாக சாக்த ஆகமம் சார்ந்த, தேவீ பாகவதம் தான் தாந்த்ரீகம், அது வைதீகமானது அன்று. அது வித்யா ஸ்தானங்களில் ஒன்றல்ல என்பதே உண்மையாம். உமக்கு எது வைதீகம்? எது தாந்த்ரிகம்? என்பதில் ப்ரமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறே, குறுக்குசால் ஓட்டும் வடகலையாரும் ஸ்ரீமகாலட்சுமி ஒரு பரமாத்மா என்று கப்ஸா விட்டு திரிகின்றனர். வடகலையார் சொல்வது , நீவிர்-”ஸ்ரீபராசக்தி ஒரு பரமாத்மா” -என்று ஏற்பது போன்றதாம். இவையாவும் வைதீகமல்ல.
  அடியேன் பாகவத புராணத்தினை பாராயணம் செய்பவன். எனினும் அதன் அர்த்த சூக்ஷ்மங்களை அறியேன் . மீமாம்ஸா, வியாகரணம், புராண சாஸ்திரங்களில் நுனிப்புல் மேய்ந்தவன் . எனவே எங்காணும் தவறு காணில் மன்னிக்கவும் .
  இவை ஏதும் அறியாது, தேவரீர் வெறுமனே ,புழுதி வாரித் தூற்றுவது நடுநிலையாளர்களுக்குப் புரியும்.

  அடியேன் ,
  கெணேசு

 39. நாம் இணையதளத்தில் படித்தவரை பகவான் ரிஷபா என்பவர் முதல் ஜைன தீர்த்தங்கரர். இவர் ஆதிநாத் என்றும் அழைக்கப்படுகிறார். மற்றும் இவர் விஷ்ணுவின் அவதாரமாக பாகவத புராணத்தில் குறிப்பிடப்படுகிறார். மேலும், ஸ்ரீமத் சுவாமி சித்பாவானந்தரின் திருவாசக விளக்கவுரை நூலில் இவருக்கு மஹாதேவன், அரஹதேவன், ஸர்வேச்வரன், மஹாவிஷ்ணு என்று ஆயிரத்தெட்டு திருநாமங்கள் அமைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 87)

  இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்….
  /* இதை அறிவீர் நீரே . “சைவம் பெரிது, வைணவம் சிறிது” என்றிவ்வாறு உமக்குள் ஏன் சமயப்பூசல்.*/
  /* இவை ஏதும் அறியாது, தேவரீர் வெறுமனே ,புழுதி வாரித் தூற்றுவது நடுநிலையாளர்களுக்குப் புரியும்.*/

  திருவாளர் கெனேசு அவர்களே! இங்கு பெருமதிப்பிற்குரிய சிவஸ்ரீ விபூதி பூஷண் ஐயா அவர்கள் எந்தப்பதிவில் நீங்கள் மேலே சொன்ன மாதிரி கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்? நீங்கள் சொல்வது மிகுந்த அபாண்டமாயிருக்கிறது. திரு. சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்கள், “ஒரே வழி” என்பதை ஏற்ப்பதிற்கில்லை என்று மிகத்தெளிவாக அதே நேரத்தில் கண்ணியமாக எடுத்துரைக்கிறார். வேறெந்த வேற்றுமையையோ வெறுப்பையோ அவருடைய பதிவில் காணயியலவில்லை. உங்களுடைய பதிவுகளின் நோக்கம்தான் இங்கு சந்தேகத்துக்குரியதாயிருக்கின்றது. மன்னிக்கவும்.

 40. கட்டுரையும் கடிதங்களும் தகவல் சுரங்கம். அாிய தகவல்கள். நன்றி

 41. ஐயா ,
  /*
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 20, 2016 at 8:10 pm
  மந்திரம் உங்களைப்பொருத்தவரையில் உச்சரிப்பவனை காக்ககூடியதாக இருக்கலாம். ஆனால் எம்மைப்பொருத்தவரையில் அது அது மனதை வெல்லுவதற்கு கடப்பதற்கான சாதனமே.*/

  1) வடமொழியில் நிருக்தம் என்று ஒரு சாஸ்திரம் உண்டு .இது 6 வேதாங்கங்களில் ஒன்றாம் .

  நிருக்தம் = வேதத்தின் காது
  http://www.kamakoti.org/tamil/Kural85.htm
  தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

  நிருக்த சாஸ்திரம் பலரால் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் முக்கியமானது யாஸ்கர் ரிஷி செய்தது. இது சொற்களின் வ்யுத்பத்தியினை விளக்க வந்ததாம் .[ETYMOLOGY].
  தமிழில் இடுகுறிப்பெயர் எனவும் காரணப்பெயர் எனவும் நன்னூலில் காணப்பெறும் .ஆயினும் வடமொழியில் எல்லாப் பெயர்களும் காரணப் பெயர்கள்தான் .
  ராமன் என்னும் சொல் தமிழைப் பொறுத்த வரையில் இடுகுறிப்பெயர்.
  இதுவே நிருக்த சாஸ்திரத்தில்-
  1) “ரமதி இதி ராம:” -ஆனந்திப்பவன் ராமன் (ஜீவன் )
  2) “ரமயதி இதி ராம:”- பிறருக்கு ஆனந்தத்தினை விளைவிப்பவன் ராமன் .(பரமன் )
  என்றிவ்வாறு பல காரணங்கள் காணப்பெறும் .[ காரணப்பெயர்.] . வடமொழியில் இடுகுறிப் பெயரே காணமுடியாது.

  இங்ஙணமே காயத்ரி -“காயந்தம் த்ராயதே இதி காயத்ரி “- தன்னைப் பாடுபவனை காப்பதனால் அதற்கு காயத்ரி ” என்று பெயர்.
  மேலும் மந்த்ரம் -“மந்தாரம் த்ராயதே இதி மந்த்ர:” -தன்னை நினைப்பவனை காப்பதனால் அதற்கு மந்திரம் ” என்று பெயர். /** எம்மைப்பொருத்தவரையில் அது அது மனதை வெல்லுவதற்கு கடப்பதற்கான சாதனமே**/ என்பது வெறும் கப்ஸா தான் .
  நிருக்தம் என்பது தேவரீர் ஒத்துக்கொண்ட 14 வித்யா ஸ்தானங்களில் ஒன்று .
  இதையாவது ஏற்கின்றீரோ ?

  2) /** அது அது மனதை வெல்லுவதற்கு கடப்பதற்கான சாதனமே **/
  தட்டச்சு செய்யும் பொழுதில் இலக்கணப்பிழையும் உளது .- இங்கு எண்ணும்மை பயின்று வரவேண்டும்[வெல்லுவதற்கும் கடப்பதற்கும்] . ஆனால் தேவரீர் இரட்டைக்கிளவியினை [அது அது] பயன்படுத்தியது ஏனோ ?

  3) மேலும் 14 வித்யா ஸ்தானங்களில் தர்க்கம் (அல்லது )-நியாய சாஸ்திரம் என்றும் உளது .இதனை சூத்திரம் எழுதி பிரச்சாரப்படுத்தியவர் கவுதம ரிஷி .
  http://www.kamakoti.org/tamil/Kural112.htm தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

  அதன்படி மனஸ் (மனது) என்பது ஒரு சாதனம் . இது நமக்கு 11 ஆவது இந்திரியம் ஆகும் .அதனைக் கடக்கவியலாது . ஆனால் ஜெயிக்கலாம் . மந்திரம் சாதனமாகாது. மந்திரம் மனஸ் என்னும் சாதனத்திலுள்ள அழுக்கை அகற்றும் அவ்வளவே. மீமாம்ஸா சாஸ்திரப்படி மந்திரம் என்பது ஒரு தர்மத்தின் அங்கம் . அது அத்ருஷ்டத்தை விளைவித்து ,ஒரு தேவதையின் கருணைக்கு நம்மை பத்திரமாக்கி, நாம் கேட்கும் , பலனை விளைவிக்கும் அவ்வளவே. மந்திரம் ஒரு அங்கமே தவிர சாதனமன்று . ஸாதனம் என்பது கரணம் /இந்திரியம் .
  மேலும் ப்ரமாணங்கள் பின்வருமாறு : –
  மனோ ஹி ஹேது ஸர்வேஷாம் இந்திரியானாம் ப்ரவர்தனே |
  ஶுபாஶுபாஸ்வ வஸ்தாஸு தச்ச மே ஸுவ்யவஸ்திதம் ||
  (வால்மீகி ராமாயணம் – 5-11-41)
  பொருள்: தர்ம மார்க்கம் மற்றும் அதர்ம மார்க்கங்களில் நமது மனம்தான் ப்ரவர்த்திக்க காரணமாகின்றது .எனக்கோ அது எனக்கு அடங்கியே உள்ளது.
  http://www.valmikiramayan.net/utf8/sundara/sarga11/sundara_11_frame.htm
  உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவஸாதயேத் |
  ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துர் ஆத்மைவரிபுர் ஆத்மன: || பகவத் கீதை-6-5
  http://www.vedabase.com/ta/bg/6/5
  பொருள்: மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனமே கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும் எதிரியுமாவான்.
  அடியேனது முடிவு:
  எனவே ஜீவாத்மனுக்கு கைவல்ய நிலையில்தான் மனத்தைக் கடக்க இயலும் . பந்தப்பட்ட நிலையில் மனதை ஜெயிக்க மட்டுமே சாத்தியம் . கடக்க -விட்டு விலக சாத்தியம் இல்லை .

  ஆனால் இறைவன் ஒருவனால் மட்டுமே சாதனமின்றி இயங்க இயலும் . ஜீவனுக்கு அது முடியாது.

  மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
  மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
  http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3483

  புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
  நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

  தேவரீருக்கு ஏதோ வடமொழி மட்டுமே தெரியாது என்றிருந்தேன் .தமிழ் இலக்கணமும் தகராறு என்றும் தெரிய வருகின்றது . வித்யா ஸ்தானங்கள் 14 என்று அதன் ஸங்க்யை மட்டும் அறிந்துள்ளீரே தவிர அதன் உத்தேசமாவது அறிவீரோ? [ENUMERATION ]

  தாங்கள் எழுதுவது முழுதும் தவறு . இதில் பாகவத புராணத்தின் மீது காழ்ப்புணர்ச்சி வேறு .குறிப்பாக வைட்ணவத்தின் மீது கொலை வெறி /அழுக்காறு கொண்டுள்ளீர் .
  ஆனால் அடியேனைப் பார்த்து “தனிமனித தாக்குதல்” என்று நகைக்கின்றிர் .
  உமக்கு ஆசார்ய பக்தியோ ,அடியார் மீதான பக்தியோ கிடையா .வேதாந்த வாசிப்பும் மிக்க குறைவு . சாந்தோக்ய உபநிஷத்தில் 3 ம் அத்யாயம் பூமா வித்யையில் சனத்குமாரர் நாரதரிடம் உபதேசிப்பதுபோல் போல் -தேவரிர் அபிதானம் [NAME] மட்டும் அறிந்து வைத்துள்ளீர் . தகுந்த ஆசார்யனை நாடுவீராக !

  அடியேன் ஏதேனும் பிழையாக எழுதியிருப்பேன் மன்னிக்கவும் .
  தங்கள் நலன் விரும்பி ,
  தம்பி கெணேசு

 42. ஐயா,
  /** மிகத்தெளிவாக அதே நேரத்தில் கண்ணியமாக**/
  parikchith on August 11, 2016 at 9:38 pm
  இப்பாரத தேசத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் “ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் க்ரந்தத்தின் மீது -” நான் சொல்வதெல்லாம் உண்மை ! உண்மையைத் தவிர வேறில்லை ! ” -என்று சத்திய பிரமாணம் செய்த பின்னரே , எல்லா பிரஜைகளும் விசாரணைக்கு உள்ளாவார் (அவர் எம்மதமாயினும் சரி).

  அந்த கிரந்தத்தினை அளித்தவர் கண்ணன் ஆவார் .
  “கண் ஆவான் என்றும் மண்ணூர் விண்ணோர்க்கு ” என்றும் ; “கண்ணன் என்னும் கருந்தெய்வம் ” என்றும்;” காக்கும் இயல்வினன் கண்ணபெருமான் ” என்றும் வணங்கப் பெறுபவன் திருமால் என்னும் பரதேவதை ஆவார்.
  இரு இதிகாசங்களும் ,பெரும்பாலான புராணங்களிலும்,வேதத்திலும் ,தர்க்க -மீமாம்ஸா சாஸ்திரங்களிலும் ,மனுஸ்ம்ருதி போன்ற பெரும்பாலான தர்மங்களிலும் பரமாத்மா என்று கொண்டாடப் பெறுபவர் திருமாலே .
  அத்தெய்வத்தை -” வஞ்சகன் கண்ணன் ” என்று -காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒருவர் சிறுகதை எழுதுவாராம் . http://tamilhindu.com/2016/07/வஞ்சகன்-கண்ணன்-சிறுகதை/
  அதை தமிழ் ஹிந்து வலைத்தளம் பிரசுரம் செய்யுமாம் . – இதில் எங்கே போனது உமது கண்ணியம் ? தன் தெய்வத்தை நிந்தித்தால் எவருமே வெகுண்டு எழத்தானே செய்வர். இதில் அடியேனுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு ?

  “தமிழைப் பழிப்பவனை தாய் தடுத்தாலும் விடேன்” -என்றால் அத்தமிழே அர்ச்சிக்கும் தமிழ்முதல்வனையே பழிப்பவனை நானும் கண்ணியமாகத்தான் பழிக்கின்றேன் .
  திரு. சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்கள் பல பதிவுகளில் பாகவத புராணம் பற்றியும் ,ராமரைப் பற்றியும்.,க்ருஷ்ணரைப் பற்றியும் அவதூறாக எழுதியுள்ளார் .இன்னுமொரு முறை நடுநிலையோடு சரியாகப் படியுங்கள் விளங்கும் .

  /** நாம் இணையதளத்தில் படித்தவரை பகவான் ரிஷபா என்பவர் முதல் ஜைன தீர்த்தங்கரர். இவர் ஆதிநாத் என்றும் அழைக்கப்படுகிறார்.**/
  காஷ்மீர் எங்களுடையதே என்று -“இரு நாட்டினரும் ,ஒரு மாகாண மக்களும் ” சண்டையிட்டுக் கொள்கின்றனர் .
  இதில் எவர் சொல்வது உண்மையென்று ஊருக்கே தெரியும் .

  அதைப் போல்தான் ரிஷபர் வைணவரா அல்லது ஜைனரா என்பதும் !!!
  முடியல ! என்னால முடியல ! சார் நீங்க புராணத்தை நம்புவீரா இல்லை இடது சாரியினர் எழுதும் வலைத்தளங்களையா?
  /** உங்களுடைய பதிவுகளின் நோக்கம்தான் இங்கு சந்தேகத்துக்குரியதாயிருக்கின்றது.**/
  ஆமாம் சார். அடியேன் அல் கொய்தாவிலிருந்து நேராக வந்தவன்.
  முடியல ! என்னால முடியல !

  அன்புடன்,
  கெணேசு

 43. suresh_the_smart on August 22, 2016 at 6:38 pm

  /** ஆனால் தேவரீர் இரட்டைக்கிளவியினை [அது அது] பயன்படுத்தியது ஏனோ ? **/

  “அது அது” -என்பது அடுக்குத் தொடர் . அதனை இரட்டைக்கிளவி என்று தவறாக அடித்ததற்கு மன்னிக்கவும் .

  அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்
  இரண்டு மூன்றுநான்கு எல்லைமுறை அடுக்கும் – நன்னூல் 395

  இரட்டைக் கிளவி இரட்டில் பிரிந்திசையா ” — நன்னூல் 396

  “ஏலேய் கெனேசு !! – மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுஷனாம்ல ,உனுக்குத்தான் எவ்ளோ பெருந்தன்மை பா !! ஆவ்வ் !! எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு “.

 44. அன்புள்ள parikchith ஐயா ,
  தங்கள் ப்ரஶ்நம்:
  /**
  parikchith on August 11, 2016 at 9:38 pm
  திருவாளர் கெனேசு அவர்களே! இங்கு பெருமதிப்பிற்குரிய சிவஸ்ரீ விபூதி பூஷண் ஐயா அவர்கள் எந்தப்பதிவில் நீங்கள் மேலே சொன்ன மாதிரி கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்? **/
  அடியேனுடைய உத்தரம்: கீழ்காணும் பதிவிலேதான் ஐயா !!!
  http://tamilhindu.com/2011/08/tamils-and-vedanta-6/
  முகப்பு » ஆன்மிகம், இலக்கியம், வைணவம் பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 6
  இவ்வலைதளத்தில் இந்த ஆறு கண்ணியக் கருத்துக்களைப் பாரீர் ! பாரீர் !
  கண்ணியக் கருத்து # 1)
  /##
  CN.Muthukumaraswamy on August 10, 2011 at 5:52 am
  செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான். எச்சைவனும் இவ்வாறு கூறான்.
  ##/

  கண்ணியக் கருத்து # 2)
  /##
  C.N.Nuthukumaraswamy on August 11, 2011 at 9:05 am
  “இருப்புலக்கையின் சிறிய துணுக்கைத் தன் அம்புக்கு முள்ளாக வைத்துக் கொண்டவனான ஜரன் என்கின்ற வேடன் வந்தான். தூரத்திலிருந்து சுவாமியின் திருவடியை ஒருமிருகமாக நினைத்து, அவ்வம்பை அத்திருத்தாளினடிப்புறத்தில் எய்தான்” என்னும் செய்தி விஷ்ணுபுராணத்து 5ஆம் அமிசத்தின் 37ஆம் அத்தியாயத்தில் வருகின்றது.
  கிருஷ்ணனுடைய உடம்பில் அருச்சுனன் விதிப்படி உத்தரகிரியை செய்து கொள்ளி வைத்த செய்தி 38ஆம் அத்தியாயத்தில் உள்ளது.
  ##/

  கண்ணியக் கருத்து # 3)
  /##
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 11, 2011 at 2:30 pm
  உங்கள் பாகவதம் வைதீகமானது அன்று அது தாந்த்ரீகமானது. அதில் வேத நிந்தனை உள்ளது என்பது சிவனருட் செல்வர்தம் கருத்து. தேவை எனில் அதனையும் எழுதுவோம்.
  ##/

  கண்ணியக் கருத்து # 4)
  /##
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 10, 2011 at 12:18 pm
  அவதார புருஷர்களான ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் பிறந்ததும் இறந்ததும் ஆதாரப்பூர்வமானது. இதில் என்ன ஐயம். சைவர்களின் கருத்து இறைவன் அவதாரம் செய்வதில்லை என்பது. வைணவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் சைவர் இதனை ஏற்பதில்லை. அவ்வளவுதான்.
  ##/

  கண்ணியக் கருத்து # 5)
  /##
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 11, 2011 at 11:36 am
  திரு பாலாஜி,
  “சில வைணவ வெறியர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல” என்று முனைவர் அய்யா அடிக்கடி நிரூபிக்கிறார். வெட்கப்படவேண்டிய விஷயம்!!!
  இதுதான் கண்டிக்கத்தக்கது தனிமனிதரின் கருத்துரிமை அவமதிப்பதாகும்
  பதில் : ஐயாவின் கருத்தில் வெறி யேதும் துளியும் இல்லை. சைவர் யாரும் சிவபரம் பொருளை பிறவா யாக்கை பெரியோன் என்றே கொள்வர். சைவ நூல்கள் கருத்தினை அவர் மொழிந்தார் அவ்வளவே. ஹிந்து சமூகத்தின் ஒற்றுமைக்கு இக்கருத்து எதிர் இல்லை. சனாதனம் பல்வேறு பட்ட வழிபாடு முறைகளையும் சித்தாந்தங்களைக்கொண்டதாகும். ஐயா சொன்னது சைவப் பெரியோர் மொழி.
  ##/

  கண்ணியக் கருத்து # 6)
  /##
  சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 11, 2011 at 11:55 am

  திருமாலடியார் கந்தர்வன்
  கண்ணன் “இறந்ததாக” எந்தப் புராணத்திலும் இல்லை. தன்னுடைய திருமேனியுடன் அப்படியே வைகுந்தத்தில் எழுந்தருளினான் என்று பாகவதம் கூறுகிறது.
  ஆனால் மகாபாரதம் வேடன் மான் என்று தவறாக எய்த அம்பால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணர் இறந்தார் என்று உள்ளதே. ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி சரயுவில் மூழ்கி ஜல சமாதியானார் என்றும் உத்தர ராமாயணம் கூறுகிறதே. இதை நீங்கள் ஏற்க வில்லையா என்ன.
  செத்து பிறக்கின்ற” என்ற வார்த்தை பிரயோகம் அழகாகவா உள்ளது.
  பதில்: இதில் தவறு இல்லை. உங்களைப் புண்படுத்தும் எந்த உள் நோக்கமும் காண்கிலேன்.
  ##/

  இனி அடியேனுடைய விளக்கம்: ஒருமுறை பீர்பாலும் பேரரசர் அக்பரும் சேர்ந்து உணவு அருந்தினார்கள். விருந்திற்குப் பிறகு பீர்பாலுக்குத் தாம்பூலம் உண்ணும் பழக்கம் உண்டு. சக்கரவர்த்தியாருக்கு அப்பழக்கமில்லை. பீர்பால் நம்மைப்போலொரு ஸனாதன தர்மி. ஆனால் சக்கரவர்த்தியாரோ நம் சகோதர சமயமாகிய இஸ்லாம் சமயம் சார்ந்தவர். எனவே பேரரசர் ,பீர்பால் தாம்பூலம் உண்ணும்போதில் -” ஓ பீர்பால் – இந்த வெற்றிலை பாக்கினை கழுதைகள் கூட சாப்பிடுவதில்லையாமே என்றார்” – நையாண்டியுடன்.
  உடனே பீர்பால் -” இதனை மனிதர்கள் சாப்பிடுவதுண்டு. ஆனால் கழுதைகள்தான் சாப்பிடாது” என்றார். ஹா ஹா ஹா !!!
  இவ்வாறே பிரமாணங்கள் என்ன கூறுகின்றனவெனில் …..

  1.) “அஜாயமானோ பஹுதா விஜாயதே” –தைத்தீரிய உபநிஷத்
  பொருள்: திருமால் பிறப்பே இல்லாதவனாகியும், தன் இச்சையினால் பலவாறாகப் பிறக்கின்றான்.( ராமனாக,கண்ணனாக,etc)
  2.) அஜ: அபி ஸன் அவ்யயாத்மா பூதானாம் ஈஶ்வர: அபி ஸன் |
  ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா ||- கீதை -4-6
  http://www.vedabase.com/ta/bg/4/6
  பொருள் :நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.

  எனவே முழுமுதற்கடவுள் என்பவன் தனது லீலை மடியாக(விளையாட்டாக) செத்துப் பிறப்பவனே அன்றி பிறவாது இருப்பவனாகக் கூறப்படுபவன் முழுமுதற்கடவுள் அல்லன். இதுவே ஸனாதன தர்மம் என்று நிறுவ விழைகிறேன்.
  மேற்சுட்டப்பட்ட அனைத்து கண்ணிய கருத்துக்களுக்கும் அடியேன் ஒவ்வொன்றாக ,தக்க ப்ரமாணத்துடன் பதில் இறுப்பேன் !! நிற்க !!!

  பத்த வச்சுட்டியே பரட்டை !! (பரட்டை னு என்னைய சொன்னேன் ஐயா )

  இந்த 6 ல் ஒவ்வொன்றும் திருநெல்வேலி அல்வா மாதிரி சுலபமான கேள்விகள் …இந்த அரிய வாய்ப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றி.
  இந்த கண்ணிய கருத்துக்களுக்கு ப்ரமாணமாக
  அ )ராமாயணம் -உத்தர காண்டம் ,ஆ)மஹாபாரதம் -அநுஶாஸநிக பர்வம் ,இ ) விஷ்ணுபுராணம் -5 ம் அம்ஶம் ..என்று காட்டியிருக்கின்றனரா .ம்ம்ம்!!
  இந்த க்ரந்தங்கள் அடியேனிடமும் உள்ளன .அடியேனும் வடமொழியில் வாசிப்பவனே . வலைப்பதிவில் போயும் காண்பேன் !!
  [நாங்களும் பரட்ட தான் ! சீப்பும் வச்சிருக்கோம் ! இறங்கி போயி சீவுவோம் !! அவ்வ்வ்வ்வ் !!!- நன்றி வடிவேலு -சந்திரமுகி திரைப்படம்]
  இனி கச்சேரி ஆரம்பம் !!!
  இதுக்குப் பேர்தான் தான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிறதா !!! அவ்வ்வ்வ்வ்வ் !

  மிக்க நன்றி parikchith ஐயா.
  அவற்றை ப்ரசுரம் செய்தால் தலையல்லால் கைம்மாறிலனே !!!(என் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டவன் ஆவேன்)
  அன்புடன் ,
  பரட்ட என்கிற கெணேசு

 45. திரு. கெனேசு அவர்களுக்கு, வணக்கம்.

  நீங்கள் மெத்தப்படித்தவராயிருக்கலாம், புராணங்களையும், வேதங்களையும் கரைத்து குடித்தவராயிருக்கலாம் மற்றும் வடமொழியிலும் தமிழிலும் பண்டிதராயுமிருக்கலாம், ஆனாலும், உங்கள் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்கவியலாது. நாம் பலமுறை படித்தாயிற்று. நீங்கள் சொல்வதுபோல் திரு. சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்கள் எந்தவித காழ்புணர்ச்சியுடணுமோ அல்லது கொலை வெறியுமோடோ எங்கும் எதையும் பதிவு செய்யவில்லை. அவர் செய்யாத ஒன்றை செய்ததாகக்கூறுவதுதான் உங்களது நோக்கங்களை கேள்விக்குரியதாக்குகிறது.

  உங்களது வாதத்தில் , திருமால்தான் கடவுள் மேலும், கண்ணன்தான் கடவுள் என்பதை எல்லோரும் கட்டாயம் ஏற்கவேண்டும் என்கிற எதேச்சதிகாரம்தான் தெரிகிறது. இப்படிஎந்தவகையிலும் வேறு எந்த கடவுளகர்ளைப்பற்றியும் யாரும் சொல்லவில்லை இந்தத் தளத்தில். திரு சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்கள், சைவம் என்றால் என்ன சைவம் எதை ஏற்கிறது மற்றும் எதை ஏற்கவில்லை என்பதைத்தான் திரும்பத்திரும்ப பதிவுசெய்கிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறது? எம்மைப்பொறுத்தவரை, எமக்கு சிவபெருமான் கடவுள். கண்ணனும் கடவுளே. அபிராமியும் கடவுள் , அஷ்டலக்ஷ்மியும் கடவுள். நாம் இந்த இந்து மதத்தின் அடிப்படை கொள்கையில் பெருமிதம் கொள்கிறோம். ஆனந்தக்களிப்பில் திளைக்கிறோம்.

  — இது திரு. ஆர் .வீ அவர்களுடைய கற்பனைக்கதை. இதில் காழ்புணர்ச்சியெதுவுமிருப்பதாக நம்புவதிற்கு இடமில்லை. இந்தக்கதையையே உண்மையில் நடந்ததென்று யாரும் நம்பவைக்கப்பட்டாழொழிய வேறெது பாதகமும் வரப்போவதில்லை.

  –எடுத்துக்கொள்ளப்பட்ட விவாதப்பொருளை விடுத்து தனிநபரொருவரின் தகுதியையே கேலிப்பொருளாக்குவது தனி நபர் தாக்குதலின்றி வேறென்ன?

  இறுதியாக,

  —இருக்கலாம். ஆனால் திருமால் மற்றும் கண்ணன் ஒருவன்தான் தெய்வம் என்பதை எம்மால் ஏற்கமுடியாது. இதனின் அர்த்தம் நாம் புராணங்களையும், வேதத்தையும், மீமாம்ஸா சாஸ்த்திரங்களையும், மனுஸ்ருமிதி போன்ற தர்மங்களையும் மறுக்கிறோம் என்பதல்ல.

  இதுவிஷயமாக மேலும் விவாதிப்பதற்கு, எம்மிடம் வேறொன்றுமில்லை.
  நன்றி. வணக்கம்.

 46. ஐயா,

  1.) அடியேன் பரமசிவனாரையோ ,ஐயப்பனையோ ,காளிதேவியையோ ,அருகக்
  கடவுளையோ ,புத்ததேவனையோ ,அல்லாவையோ ,யேசப்பரையோ, முனியாண்டியையோ ,காட்டேரியையோ கடவுள் அல்ல என்று இதுகாறும் எங்காணும் கூறியதுண்டோ ? அல்லேன்.
  விஷ்ணு புராணத்தில் முதல் அம்சத்தில் இப்பிரபஞ்சம் திரும்ப திரும்ப அழிகப்பட்டு ,ஸ்ருஷ்டிக்கப்படும் என்று காண்கின்றோம். அவ்வாறு ஸ்ருஷ்டிக்கப்படும் பொழுதில் முன்பு இருந்ததுபோலவே ஆக்கி ,இயக்கப்படும் என்றும் காண்கின்றோம்.
  அதன் உட்கருத்து யாதெனின் எல்லா மொழிகளுக்கும் “தமிழ் ,வடமொழி,கன்னடம்,ஈப்ரு ,லத்தின் போன்றனவும் அழிக்கப்பட்டு பின் ஆக்கப்படும் என்பதேயாம். அவ்வாறே எல்லா மதங்களும் அழிக்கப்பட்டு பின் முன்பு இருந்ததுபோலவே ஆக்கப்படும் என்பதேயாம் .
  2.) அல்லது இந்த தேவனே சிறியவர் , இந்த தேவனே பெரியவர் என்று அடியேன் முதல்கருத்து வைத்ததுண்டோ ? அல்லேன்.
  “வாயவ்யம் ஶ்வேதமாலபேத் பூதிகாம:” | -சொத்து அடைய ஆசையுள்ளவர் ,வெள்ளை நிறமுள்ளதைக் கொண்டு ,வாயுதேவனுக்கு யாகம் செய்யவும். இதனை விதிவாக்கியம் என்பர் மீமாம்சகர் .

  i)“வாயுர் வை க்ஷேபிஷ்டா தேவதா” | -வாயு சீக்கிரமாக அனுக்ரஹம் செய்யும் தேவதை ஆவார் . -இதனை விதிசேஷ ஶேஷ அர்த்தவாத வாக்கியம் என்பர்.
  தமிழில் சொல்வதானால் உயர்த்திக் கூறல். MARKETING. அப்படிச் சொன்னால்தான் , சரக்கு விற்கும். “தத்தம் தேவர்களே பெரியர். மற்றெல்லாரும் சிறியர்” என்பன மதங்கள்.
  இதைத்தான் பைபிளும், குரானும், ஸாத்விக, தாமஸ ,ராஜஸ புராணங்களும் செய்கின்றன . இப் புராணங்களை முன்பே இருந்தவாறு இயற்றுபவரும் வ்யாஸர் உருவில் கண்ணனே .மற்றவர் மயிக்கூச்செரியும்படி சொல்பவரும் லோமஹர்ஷணர் உருவில் கண்ணனே (சூத பகவான்) .
  உங்களுக்கு எது பிடித்தமானதோ அதை பின்பற்றுங்கள் .
  அதனை உங்கள் வீட்டிலோ ,வழிபாட்டு தளங்களிலோ கற்பியுங்கள் .
  பலவகையான மக்கள் புழங்கும் தெருவிலோ ,வலைத்தளங்களிலோ ஏன் செய்கின்றீர் ?
  ii)”உமக்கு சினிமா நடிகை போன்று ஆபாச உடை உடுத்த வேண்டுமாயின் தனியறையில் தாராளமாக செய்யலாம் .சமுதாயத்தில் ஏன் செய்கின்றாய் ? பிறரை ஏன் கெடுக்கின்றாய் ? -” -என்று நவ நாகரீக நங்கையை கேட்பது போலவாம் .
  PRIVATE SPACE is different than PUBLIC SOCIETY. Kindly Mind your Space. Respect the Society and God.

  3.) அடியேன் யாரையேனும் -“நீவிர் வைட்ணவத்திற்கு வாருங்கோள்” – என்று வருந்தி அழைத்துண்டோ ? அல்லவே அல்லேன்.
  i).இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன |
  ந சாஷுஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ (அ)ப்யஸூயதி||-பகவத் கீதை -18.67
  http://www.vedabase.com/ta/bg/18/67
  பொருள் :இந்த இரகசிய ஞானம், தவமில்லாதவருக்கோ, பக்தியில்லாதவருக்கோ, பக்தித் தொண்டில் ஈடுபடாதவருக்கோ, என் மீது பொறாமையுள்ளவருக்கோ ஒருபோதும் விளக்கப்படக் கூடாது.
  எனவே ரகசியத்தை கூவி விற்க அடியேன் ஒன்றும் வ்யாபாரியல்ல !!

  ii).தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம்வரம் |
  நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்|| -வால்மீகி ராமாயணம் 1-1-1
  http://www.valmikiramayan.net/utf8/baala/sarga1/bala_1_frame.htm
  பொருள் :பக்தியிலும் ,பகவானைப் பற்றிய கேள்விகளிலும் அநவரதம் நிற்பவரும் , பிறரது நலன்களையே எப்பொழுதும் சிந்திப்பவரும் ,பகவானைப் பற்றி கீர்த்தனம் செய்பவருள் சிறந்தவருமான நாரதரிடம் ,தபஸ்வியான வால்மீகி ரிஷி அணுகி பணிவாக கேட்கின்றார்.
  எனவே பணிவில்லாதவரிடம் அடியேன் போய் பகவத் விஷய கீர்த்தனம் செய்வேனோ?
  4.) திருமாலே ஒரே தேவன் என்று எங்காணும் கூவியதுண்டோ ? அல்லேன்.
  யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஷ்ரத்தயார்சிதும் இச்சதி |
  தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாம் ஏவ விததாம்-யஹம் || பகவத் கீதை -7-21
  http://www.vedabase.com/ta/bg/7/21
  எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். த பிடித்தமான கடவுளை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.
  அப்ப, அடியேனுக்கு ஏனைய்யா வீண்வம்பு !!! நீங்களாச்சு உங்க கடவுளராச்சு !
  5.) எந்த மதம் சார்ந்த புனித நூல்களையோ இகழ்ந்ததுண்டோ ? அல்லேன்.

  நாவினுள்நின்று மலரும் ஞானக்கலைகளுக் கெல்லாம்,
  ஆவியுமாக்கையும் தானே அழிப்போடளிப்பவன் தானே,
  பூவியல்நால் தடந்தோளன் பொருபடையாழி சங்கேந்தும்,
  காவிநன்மேனிக் கமலக்கண்ணனென் கண்ணினுளானே.

  எல்லாக் கலைகளையும் (நூல்கள் ) அழித்து, அளிப்பவனை அடியேன் எப்படி தடுப்பேன் ?
  “வஞ்சகன் கண்ணன்” -என்று கற்பனை சிறுகதை வருகின்றதே (இவையெல்லாம் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு -நாவலில் சுடுவது என்றும் அறிவேன் .http://www.jeyamohan.in/)
  , இதேபோல நாளை யாராவது காமுகன் சிவன் என்று எழுதினால் உமக்கு மகிழ்ச்சியோ ? அதையும் பிரசுரிப்பீரோ? அடியேன் யாருடைய பாராட்டுக்கோ ,இவற்றை எழுதவில்லை .

  உன்னைய காப்பாத்த வந்தோம்யா -நன்றி : விருமாண்டி திரைப்படம்.

  அன்புடன் ,
  கெனேசு

 47. We are followers of Santana dharma. Eternal function of the soul is loving devotional service. We all know that sabda Brahman is Anadi -eternal. So sabda Brahman is self authority. Direct sense perception and speculative knowledge is insufficient to reach the param sathyam. Vedas proclaim that Lord sri krsna is the supreme personality of Godhead (SPG). If a person accepts Vedas it is very easy to understand this. And he got unlimited forms (Vishnu tatvas). Also Lord Siva is Guna avatar of krsna. However most of the people emotionally either accept or reject this vedic conclusion. This is not election for the post of PM or CM so that people can decide based on their liking. For example if all people accept will it make somebody god. Or if people does not accept will is disqualify the actual god. So this emotional approach will not help. As the subject is very serious one, we have to understand based on sabda Brahman. However it seems in whole of India within sanatana dharma nobody denies Vedas. But in South India Saiva sidhanta people deny the Vedas based on language. This is not matured way of presenting the theology. As if Lord Siva is Lord for Tamil speaking people and within the territory of tamilnadu. No. He is Lord of entire universe what to speak about small dust like earth floating in vast sky. So we request people to understand Vedas. This is not within your authority to accept or reject. Lord is not within small jiva’s feel good factor. If Vedas explain science of god that is conclusive proof.

 48. இத காரைக்கால் அம்மையார் ஒரு வரியில சொல்லிட்டு போய்ட்டார்…

  “நூல் அறிவு பேசி நுழைவிலார் திரிக”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *