ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை

நமது பாரம்பரியத்தில் சாஸ்திரங்களுக்கு தவிர்க்க இயலாத உன்னதமான இடம் உள்ளது.

இந்த சாஸ்திரங்களைப் படைத்தவர்கள் முனிவர்கள் ஆவர். அவர்கள்கூட தாமே இதனை இயற்றியதாகவோ, எழுதியதாகவோ சொல்லவில்லை. மாறாக, அவர்கள் தம் தவத்தினால் கண்டறிந்ததை, உணர்ந்த சத்தியத்தையே சாஸ்திரங்களாகபடைத்தளித்தனர்.

இதனால் தான் அவர்களை ‘மந்த்ரத்ரஷ்டா’ என்று முன்னோர்கள் அழைத்தனர்.  உருவற்ற  அருவமாக இறைவனை உணர்வதற்கு ஞானிகளால் மட்டுமே இயலும்.  ஆனால், எளியவர்களான நமக்கு உருவவழிபாடே தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

 இந்த உருவவழிபாட்டைச் செய்வதற்குக்கூட, ஒரு விதிமுறை உள்ளது.  அவரவர் தத்தமது விருப்பிற்கேற்ப முறையற்ற வழிபாட்டைச் செய்வது இயலாது.

உலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு அல்லது விக்கிரஹ ஆராதனை என்பது  தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவவழிபாடுசெய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளும் சமயிகள்கூட, புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும்,

ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.

ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசியமான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறைவனிடம் கொண்டுசெல்லும் அம்சமாகவே இருக்கின்றது.  இதனை ஸ்ரீவைணவர்கள் ‘அர்ச்சாவதாரம்’ என்று  கொண்டாடுவர். இந்தஅர்ச்சாவதாரத்திற்காகவே ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன.      அவை பண்பாடு,கலைகள், வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம்வளர்க்கும் உன்னத நிலையங்களாகவும் விளங்கி வருகின்றன.

வெறும் கல்லுக்கு ஏன் இவ்வளவு உபசாரம் என்று பலரும் விதண்டாவாதம் பேசக் கேட்டிருக்கலாம். அறுபது இலட்சம் மூபாய் காசோலை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரு துண்டுக்காகிதம். அதில் என்ன பெறுமதிஇருக்கிறது? ஒரு சிறு காகிதம்தானே என்று கசக்கி எறியலாமா?  அந்த காகிதம்எப்படி பலலட்சங்களை வெளிப்படுத்துகின்றதோ, அதுபோலவே, கல்லில்சமைக்கப்பட்ட அந்தத் திருவுருவம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருவடிவமாகக் காட்சிதருகின்றது.

ஆகமச்சிறப்பு:

 எப்படி, கட்டடக்கலைக்கு பொறியியற்துறை (B.E), மருத்துவத்திற்கு (M.B.B.S),கலைகளுக்கு(B.A,finearts) என்று ஒவ்வொரு சாஸ்திரம் இருக்கின்றதோ அதுபோலவே,

திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு சாஸ்திரம் உள்ளது. அதுவே‘ஆகமம்’ ஆகும்.

ஆகமம் என்பது ஒரு பெரிய பாதை என்றால், அதில் பல கிளைப்பாதைகள் உள்ளன.சைவாகமங்கள், பாஞ்சராத்திரம், வைகானஸம் என்ற இரு வைணவ ஆகமபிரிவுகள், சாக்ததந்திரங்கள் என்று இக்கிளைகள் பல. பௌத்தர்களுக்கும், ஜைனர்கள் என்ற சமணர்களுக்கும் தனித்தனி ஆகம நூல்கள் உள.

 ஆயினும், ஆகமங்களால் வழிபடப்பெறும் இறைவனே ஆகமம்கூறும் மூலதத்துவம் ஆகும். இந்த ஆகமங்களுக்குள் ஒன்றோடொன்று குழம்பிக்கொள்ளாமல், ஒன்றில் சொல்லப்பட்டது மற்றொன்றிலும் சொல்லப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி, அவரவர் அவ்வவற்றை ஏற்றலே முறையாகும்.

 துவாபரயுக நிறைவில் தோன்றிய வாசுதேவ ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மக்கள் அறநெறி நின்று விலகாது வாழ்வதற்காக ஆகமங்களை இயற்றுமாறுமுனிவர்களுக்குக் கட்டளையிட்டார். சிவ, விஷ்ணு, தேவி வழிபாட்டுக்குரியதானஆகமங்கள் யாவும் உருவாக்கப்பட்டன. யாவற்றையும் ஸ்ரீ கிருஷ்ணனானகண்ணன் பார்வையிட்டு, பரிசீலித்து ஒப்புதல் அளித்த பிறகே அவை பிரச்சாரம்செய்யப்பட்டன என்று ஒரு கதை இருக்கின்றது.

இந்த கதையுடன் ஒட்டியதாக, ஆகமங்கள் குறித்து அனேகமாக, யாவரும்ஏற்றுக்கொள்ளும் ஒரு சுலோகம் உள்ளது. அது,

“ஆகதம் சிவவக்த்ரேப்யோ 

கதம்ச கிரிஜானனே

மதம்ச வாசுதேவஸ்ய

தஸ்மாதாகம முச்சயதே”

இந்த சம்ஸ்கிருதக் கவிதையின் நான்கு வரிகளில் முன்னெழுத்துக்கள் ஆகம என்ற சொல்லைக் காட்டுவதைக் காணலாம்.

இதன் பொருளாவது,

“பரமசிவனுடைய திருமுகத்திலிருந்து வந்தது. மலைமகளான பார்வதியின்காதுகளில் சென்றது. வாசுதேவனான திருமாலால் ஒப்புக்கொள்ளப்பட்டது”என்பதாகும்.

ஆகம பேதங்கள்:

சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை.

உக்ரஜோதி, சத்யோஜாத, ஸ்ரீராமகண்ட, வித்யாகண்ட, நாராயணகண்ட,வீபூதிகண்ட, ஸ்ரீகண்ட, நீலகண்ட, ஸோமசம்பு, ஈசானசம்பு, ஹ்ருதயசிவ,ப்ரம்மசம்பு, வைராக்ய சிவ, ஞானசம்பு, த்ரிலோசனசிவ, வருண, ஈஸ்வரசிவ,அகோரசிவ என்பதே அப்பதிணெண் சிவாச்சார்யர்களின் திருநாமங்களாகும்.

இதில், அகோர சிவாச்சார்யரின் பத்ததியே ஆகமமரபில் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

இப்பதிணெண் சிவாச்சார்யர்கள் தவிர, சர்வாத்மசிவ, சர்வேசபண்டித சிவ,வியாபகசிவ, வ்யோமசிவ, உத்துங்க சிவ, பரமானந்த யோகீஸ்வர சிவ, அப்பையதீட்சிதர் என்கிறவர்களும் சிவாகம விளக்க நூல்களைப் படைத்திருப்பதாக அறியமுடிகின்றது.

இந்த விளக்க நூல்களில் பலவும் இன்று காணக்கிடைக்காது அழிந்து விட்டன. ஆகமங்களிலும் அதிகளவானவை முழுமையாகவோ, பாகமாகவோ அழிந்து விட்டன.

சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன.  

திருமூலர் பெருமான் ஆகமங்கள்பற்றி திருமந்திரத்தில் பல இடங்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

 அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூறாயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே.

 ***   ***   ***

27 Replies to “ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை”

 1. ஐயா ,

  கட்டுரை ஆசிரியருக்கு மிக்க நன்றி ! நல்ல கட்டுரை !!
  இன்றைக்கு மிகத் தேவையானதும் கூட !

  1.) நாம் சாலைகளில், HIGHLY INFLAMMABLE என்னும் அபாய அறிவிப்புடன் (சிரிக்கும் கபாலம் -இருகை எலும்புகளுடன் ) நீண்ட சரக்கு உந்துகளை பலமுறை கண்டிருப்போம் (INDIANOIL CONTAINER-TRUCK,etc) . அவற்றின் மீது காணப்படும் வாசகம் -“INFLAMMABLE” ! – அப்படி என்றால் என்ன சார்?
  “FLAMMABLE” என்றால் பிரபையுடன் கூடியது (தீ). உதாரணம்— திருவிளக்கு ,மெழுகுவர்த்தி போன்றன. இவ்வகையான தீயானது கட்புலனாகும் .எனவே இவ்வகை தீவிபத்து நிகழநேரிடில் , அதனிலிருந்து விலகிச் சென்று தப்ப முடியும் .
  ஆனால் INFLAMMABLE என்பது பிரபையில்லாதது (தீ ). உதாரணம் –சிலவகை HYDROCARBONS ,PETROLEUM போன்றன. இவ்வகையான தீயானது கட்புலனாகாது. எனவே இவ்வகை தீ விபத்து நிகழநேரிடில் , அதனிலிருந்து விலகிச் சென்று தப்ப முடியாது .
  ஆகவேதான் HIGHLY INFLAMMABLE என்று நம்மை எச்சரிக்கை செய்கின்றனர்.
  2.) நமது அகங்களில் பயன்படும் HP,INDIANOIL, BP போன்ற காஸ் உருளைகளில் HYDROCARBONS மீயழுத்த-திரவ நிலையில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மணம் கிடையா .எனவே மந்தமாக , சத்தமின்றி கசிவு ஏற்பட்டால் அறிய முடியாது . ஆகையினால் தான் THIO ALCOHOL- MERCAPTANs என்று வேறு ஒரு கந்தமுள்ள வாயுவினை சேர்க்கின்றனர்.

  அதன் நாற்றத்தின் மூலம் கசிவினை அறிந்து விபத்து நேராது தடுக்க முடிகின்றது. மேற்கூறிய இரு பயன்பாடுகளிலும் நாம் அறிய வருவது , குணம்(பிரபை -நிறம் ;நாற்றம் -கந்தம் ) இல்லையேல் அறிவு ஏற்படாது . குணமில்லாத பொருள் அபாவம் ஆகும் (இருக்கவே முடியாது ). குணம்தான் அறிவுக்கு காரணம் . அக்குணமே விஷய அனுபவ ஹேது .விஷயத்தின் இருப்பை அதன் குணத்தினால் ,நமது பொறிகளின் (கண், காத்து, மூக்கு, நாக்கு, மெய் ,மனஸ்) வாயிலாக அறியலாகின்றது .
  வேதாந்திகள் குணத்தினை அத்ரவ்யம் என்றும் பொருளினை த்ரவ்யம் என்றும் வழங்குவர். இவ்விரண்டும் அப்ருதக்ஸித்தம் -பிரிக்க இயலாதன.
  நிர்குண ப்ரம்மம் என்றால் ப்ரக்ருதியினுடைய ஸத்வம்,ரஜஸ் ,தமஸ் என்னும் மலமில்லாதவன் என்றுதான் பொருளே தவிர குணமேயில்லாதவன் என்றல்ல. (ப்ரக்ருதியை விட வேறானவன்).
  ஸகுண ப்ரம்மம் என்றால் முடிவில்லாத கல்யாண குணங்கள் உடையவன் என்று பொருள். (கல்யாண குணம் -தன்னுடன் சேர்ந்தவரையும் தம்போலே மாற்றுவது. நெருப்பானது -தன்னுடன் சேர்ந்தவரையும் நெருப்பாக்கும். ஆனால் தன்னுடன் சேரும் ஜீவனையும் 1)அபஹதபாப்மா ,2)விஜர: ,3)விம்ருத்யு,4)விசோக: ,5)விஜிகத்ஸ: ,6)அபிபாஸ: ,7)ஸத்யகாம: , 8)சத்யசங்கல்ப: என்று அமரனாக்குபவன் பரமன்.
  [இவை யாவும் ஸ்ரீபாஷ்யம்- மஹாபூர்வபக்ஷத்திலிருந்து அடியேன் சுட்டது ..ஹி …ஹி…ஹி ]
  ஆத்மாவை உருவாக்கவோ ,அழிக்கவோ இயலாது . ஆயினும் அதன் கர்மமடியாக புத்தியானது சுருங்கி விரியும். அதன் ஸ்வபாவம் மாறும் எனினும் ஸ்வரூபம் மாறிலி – அணுவளவு(ஜீவன்).

  அதேபோல ப்ரக்ருதியினை உருவாக்கவோ ,அழிக்கவோ இயலாது.
  எனினும் அதன் ஸ்வரூபம் மாறிக்கொண்டேயிருக்கும்.

  ஸ்வபாவம் ,ஸ்வரூபம் இரண்டும் மாறிலி மற்றும் அனந்தம் பரமனுக்கு.

  அவனது எண்ணிலடங்கா அனந்த குணங்களில் ஒரு குணம்தான் ஸுராதனத்வம்(ஸு + ஆராதனம்+த்வம் ) -எளிதாக வழிபடும்தன்மை .விக்ரக வழிபாடு.
  இதைத்தான் பல்வேறு ஆகமங்கள் விளக்குகின்றன .

  வைட்ணவ சமயத்தில் பரம் ,வ்யூஹம்,விபவம்,அந்தர்யாமி மற்றும் அர்ச்சை என்று 5 நிலைகளில் எம்பெருமானை வழிபடலாம். அதிலும் 5ம் நிலையான விக்ரஹ வழிபாடே(அர்ச்சை) சிறந்தது.

  பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
  பிரிவகையின்றி நன்னீர்தூய் புரிவதுவும் புகைபூவே. –திருவாய்மொழி-1-6-1
  அர்ச்சையில் பரத்துவம் காண்பது பிரபன்னனுக்கு லக்ஷணம்.[ நன்றி : கந்தர்வன் on July 3, 2011 at 12:18 pm]
  இதை விடுத்து “வள்ளலார் சொன்னார் ,வைகைப்புயல் வடிவேலு சொன்னார்” என்றோ “விவேகானந்தர் சொன்னார், விவேக் நடிகர் சொன்னார் ” என்றும் கொள்வதுதான் காமெடி டைம். இன்று நம் சனாதன தர்மம் நாசமாகப் போனது இந்த மாதிரி காமெடியால்தான். [போலி -நிர்குணம் ,அருவவழிபாடு ,மாயாவாதம்]. அதனால்தான் இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் ஒரே போலிச்சாமியார் மயம் . அவர்கள்தான் -“நானும் கடவுள் ,என் மச்சானும் கடவுள்”- என்றோ கொக்கரிப்பது .கேக்கறவன் கேனையனா இருந்தா மாடு மச்சான்னு கூவுமாம். ஆகம சாஸ்திரம் ஏற்படுத்திய காஷ்யபர்,மரீசி, அத்ரி ,ப்ருகு ரிஷிகளை விட இவர்கள் உயர்ந்தவர்களோ ?

  நன்றி ,
  கெனேசு

 2. ஒரு விசிஷ்டாத்வைதி போல துவேஷமாக கிருஸ்துவனோ இஸ்லாமியனோ கூட பேச இயலாது.சனாதனத்தை சீரழித்து அதை தயிர்சாத இயக்கமாக மாற்றியதில் அவர்களுக்கு நல்ல பங்குண்டு.

  வேதாந்தம் சொல்லும் சதுர் மஹா வாக்யங்களுக்கு ப்ரமேயத்தை அத்வைதைத்தை தவிர வேறெந்த சித்தாந்தமும் தர இயலாது.

 3. உடன்பிறப்பே(ராமகளஞ்சியம்! ) ,

  உங்கள் (போலி) அத்வைதத்தில் இந்த உபநிஷத வாக்கியத்திற்கு எப்படி விளக்கம் சொல்வீர் ?

  ப்ருஹதாரண்யக உபநிஷத் – 3 ம் அத்யாயம் -7 ம் ப்ராம்மணம்
  ய: ஆத்மநி திஷ்டந் ; ஆத்ம: அந்தரோ; யம் ஆத்மா ந வேத ;யஸ்ய ஆத்மா ஶரீரம் ;ய: ஆத்மா அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத: -ப்ருஹதாரண்யக உபநிஷத் – 3 ம் அத்யாயம் -7 ம் ப்ராம்மணம்
  1)யார் ஆத்மாவில் இருக்கின்றானோ [எல்லா மொழிகளும் ,மதங்களும்] ,2)யார் ஆத்மாவுக்கு உள்ளேயே உறைபவனோ ,3)அப்படி தன்னுள் உறையும் யாரை ஆத்மா அறியாதோ ,4)யாருக்கு ஆத்மா சரீரமோ ;5)யார் ஆத்மாவையும் தன் இச்சைக்கேற்ப நியமிக்கின்றானோ ,அந்த பரமான-ஆத்மா அந்தர்யாமி மற்றும் அழிவற்றவன்.

  அன்புடன் ,
  கெனீசு

 4. உடன்பிறப்பே ,

  https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga31/ayodhya_31_frame.htm

  வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டம் 31ம் சர்கம் 5 ம் சுலோகம் (ஸ்ரீ ராமரிடம் இலக்குவன் காட்டுக்கு உடன் வர வேண்டி )

  ந​ தேவ​ லோகாக்ரமணம் ந அமரத்வம் அஹம் வ்ருணே|
  ஐஶ்வர்யம் சாபி லோகாநாம் காமயே ந​ த்வயா விநா||

  “நீயில்லாமல் எனக்கு வைகுண்டமோ ,கைவல்யமோக்ஷமோ அல்லது ஐஸ்வர்யமோ வேண்டாம் “- என்கிறார்.

  இதையே தொண்டரடிபொடியாழ்வாரும் ,

  “(பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
  அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்)
  இச்சுவை தவிர யான்போய் இந்திரா லோகமாளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே “- என்கிறார் .

  இதில் எங்கே உள்ளது உங்கள் மாயாவாதம் ?

  அன்புடன் ,
  கெனீசு

 5. ஐயா ,

  காஞ்சி பெரியவர் அருளிய தெய்வத்தின் குரல் பாகத்தில் -தசோபநிஷத் பாகத்திலிருந்து ….
  தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
  https://www.kamakoti.org/tamil/Kural49.htm
  ப்ருஹதாரண்யகம்
  “இப்படி அவர் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளப் புறப்படுமுன் ஜனகராஜனின் சபையில் பரமாத்ம தத்வம் பற்றிக் கஹோளர், உத்தாலக ஆருணி, கார்கி ஆகியவர்களிடம் நடத்தின வாதங்களும், அப்புறம் ஜனகருக்குப் பண்ணின உபதேசங்களும் முனிகாண்டத்தில் சொல்லப்படுகின்றன. விசிஷ்டாத்வைதத்தில் விசேஷமாகச் சொல்லப்படும் அந்தர்யாமிக் கொள்கைக்கு ஆதாரம், உத்தாலக ஆருணிக்கு யாக்ஞவல்கியர் சொன்ன பதிலில் இருக்கிறது. லோகம் முழுக்கவே மாயை என்று அத்வைதத்திலுள்ளபடி சொல்லாமல், லோகம் சரீரம் என்றால், அதற்கு உயிராக உள்ளே பரமாத்மா இருக்கிறார் என்பதுதான் அந்தர்யாமிக் கொள்கையின் முக்யமான கருத்து.”

  எனவே
  “அஹம் ப்ரம்மாஸ்மி” என்று உங்களுக்கு (மாயாவாத சித்தாந்தம் ) மஹாவாக்கியங்கள் இருக்கலாம் .[அபேத ஸ்ருதி- ஜீவனும் -பரமனும் ஒன்றே என்பது ]

  ஆனால் த்வைதிகளுக்கு “பதிம் விச்வஸ்ய” என்று மஹாவாக்கியங்கள் இருக்கலாம் .[பேத ஸ்ருதி -ஜீவன் வேறு ,பரமன் வேறு என்பது]

  ஆனால் “யம் ஆத்மனி திஷ்டன்” – என்று கடக ஸ்ருதியினால் எங்கள் விசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத்வைதமே சரியானதாகும் .[ஜீவன் பரமனுக்கு உடலாகின்றான் ]

  நன்றி ,
  கேனேசு

 6. கடவுள் நம்பிக்கை இருப்பது தவறல்ல. ஆனால் கடவுள் நம்பிக்கையின் பெயரால் தன்னுடைய நம்பிக்கை சரியானது , உயர்வானது என்று சொல்லலாம் – அதுவும் தவறில்லை. அதே சமயம் பிற நம்பிக்கைகளை தவறு என்று கூறுவது ஒரு முழு அறியாமை. இதனாலேயே தன்னுடைய நம்பிக்கைகளை பிறர் மீது திணிக்கும் கும்பல் உலகெங்கும் கோடிக்கணக்கான பிற மதத்தினரையும், பிற நம்பிக்கையாளர்களையும் தினசரி கொன்று குவித்து வருவதை மீடியாவில் பார்த்துவருகிறோம்.

  கடவுள் என்பதை மனித இனத்தில் பயன்படுத்தப்படும் சொற்களால் வரையறை (அதாவது DEFINITION) செய்வது என்பது ஒரு முழு நகைச்சுவைதான். கடவுள் நம்பிக்கை விஷயத்தில் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல . அதனால் தான் கண்டவர் விண்டிலர் / விண்டவர் கண்டிலர் என்று தெய்வீகப் புருஷர்கள் கூறியுள்ளனர்.

  மேலே உள்ள பதிவில் கெநீசு என்ற பெயரில் உள்ள பதிவில் ” விஷிச்டாத்வைதமே சரியானதாகும் ” என்று சொல்லியுள்ளார். ஒரு வாக்கியத்தை ஆக்டிவ் வாய்ஸ் , பாஸிவ் வாய்ஸ் , ( ACTIVE VOICE PASSIVE VOICE ) என்று எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம். அதே போல வாக்கியத்தை SIMPLE/COMPOUND/ COMPLEX – என்ற மூன்று வகைகளில் எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம். அறியாமை காரணமாக ஒரு சிறு குழந்தை SIMPLE- SENTENCE மட்டுமே சரி என்பதை போலத்தான் , விஷிச்டாத்வைதமே சரி என்பதும். சரியான பதிவு என்றால் விஷிச்டாத்வைதமும் சரி என்பதுதான்.

  இதெல்லாம் ஆறு குருடர்கள் யானையை பற்றி வர்ணனை செய்த கதைதான் . இந்த பதிவில் மறுமொழியை பதிவிட்டுள்ள கெனேசு வள்ளலாரையும், வைகைப்புயல் வடிவேலுவையும் , விவேகானதரையும், நகைச்சுவை நடிகர் விவேக்கையும் தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார். என்ன கேவலமான ஒப்பீடு .இது போன்ற இழிவான பதிவுகளை ஆசிரியர் குழு வடிகட்டாதது வேதனை தருகிறது. இந்துமதம் என்பது ALL INCLUSIVE.கடவுள் இல்லை என்று சொல்பவனும் கூட இந்துவே.

  கடவுள் சக்தியை ஒரு குறிப்பிட்டுள்ள வடிவத்தின் மூலமாக நாம் வழிபடுவது மனித இனத்தின் கவனத்தை ஒருநிலைப்படுத்தவும் , வழிபாட்டில் மனித இனத்துக்கு உருவாகவேண்டிய பாவனையை பெறுவதற்கும் தானே ஒழிய , இறை சக்திக்கு இது மட்டுமே உருவம் அது மட்டுமே உருவம் என்று வரையறைகள் செய்வது அறிவீனம். கடவுளின் உடல் ஜீவாத்மா என்று சொன்னாலே இந்த ஜீவாத்மா இல்லாமல் கடவுள் நிறைவடையமாட்டார் என்று பொருள் வந்துவிடும். கடவுளுக்கு COMPLEMENT எதுவும் கிடையாது.

  மாயை என்பதற்கு இல்லாதது / பொய் என்று பொருள் கொள்ளக் கூடாது. மாயை என்றால் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பது என்றே பொருள். இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு தோற்றமும் நிரந்தரமாக இல்லாது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. நமக்கு அறிவியல் உணர்த்தும் உண்மையும் இதுதான்.

  பிரபஞ்சம் முழுவதும் எலெக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் ஆகிய மூன்றின் வித்தியாசமான கலவை தான் பல்வேறு உருவங்களில் உள்ளது. அணுவின் மையக்கருவில் உள்ள எலெக்ட்ரான் புரோட்டான் ஆகியவற்றின் எண்ணிக்கையை கூட்டியோ குறித்தோ செய்வதன் மூலம் , இரும்பை தங்கமாகவோ, தங்கத்தை இரும்பாகவோ மாற்றமுடியும் என்பதை அறிவியல் நிரூபித்து விட்டது. இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒரே சக்தியின் பல்வேறு வகை தோற்றங்கள் தான்.

  போலி -நிர்குணம் ,அருவவழிபாடு ,மாயாவாதம்- இவற்றால் தான் சனாதன தர்மம் நாசமாகப் போனது என்று பிறரை பற்றி திரு கெனேசு தரக்குறைவாக எழுதியுள்ளார். பதிலுக்கு எதிர்க் கோஷ்டி களும் , கண்டனம் செய்து சனாதன தர்மம் நாசமாய் போனதற்கு விஷிச்டாத்வைதிகளே காரணம் என்று ஆரம்பிக்க இவர் வழி வகுக்கிறார்.

  முக்கியமாக வேதங்களை பின்பற்றுவோர் மட்டுமே இந்துக்கள் அல்ல. வேதத்தை நிராகரிப்போரும் இந்துக்களே ஆவார்கள். இதனைத்தான் மாணிக்கவாசகர் நாத்திகம் பேசி நாத்தழும்பேறி என்று திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  தன்னுடைய மார்க்கம் மட்டுமே சரி என்றும் பிற மார்க்கங்கள் சரியல்ல என்றும் சொல்பவன் தன்னுடைய அறியாமை தான் வெளிப்படுத்துகின்றான்.

  இத்தகையோரை விட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கே சொர்க்கம் நிச்சயம் . கெனேசு போன்றவர்கள் கடவுள் நம்பிக்கையையே இழிவு படுத்துகிறார்கள். அவர்களை போன்றோர் குலம் பல்லூழி காலம்வாழ்க.

 7. //சரியான பதிவு என்றால் விஷிச்டாத்வைதமும் சரி என்பதுதான்.//

  நீங்கள் சொல்லவரும் கருத்து என்னவென்றால், எல்லாருமே பொய்யர்களாகத்தான் வாழ வேண்டுமென்கிறீர்கள்.

  உங்கள் வழியிலேயே சென்றால், ஒருவருக்குமே இறை நம்பிக்கை இருக்காது. நம்பிக்கை என்றால் அதை முழுவதுமாக நம்புவதுதான். என் நம்பிக்கையும் சரி. அவர் நம்பிக்கையும் சரி என்றால், இர‌ண்டில் எதையும் எடுத்துக்கொண்டுவிடலாம். விளைவு விபரீதமே. ஒரு கூட்டம் மற்றவரைக்கொலை செய்வதுதான் எங்கள் நம்பிக்கையென்றால், அதுவும் சரியென்பீர்களா? முடியாதல்லவா? எனவே எல்லாவற்றையும் ஒரே கட்டாகக்கட்டு சரியென்று சொல்லக்கூடாது.

  நம்பிக்கை என்பது எப்போதுமோ முழுநம்பிக்கைதான். கால் நம்பிக்கை, அரை நம்பிக்கை, முக்கால் நம்பிக்கெயென்றெல்லாம் கிடையா. கால், அரை, முக்கால் என்பது போலி நம்பிக்கையே.

  விஷிஸ்டாத்வைதம் இவரின் நம்பிக்கை. இவரைப்பொறுத்தவரை முழுவதும் நம்புகிறார். அதே சம்யம் ;பிற நம்பிக்கைகளைப் பொய் என்று கருதுகிறார். இவரைப்போலவே அவர், த்வைதம் நம்பிக்கை. முழுவதுமாக, பிற ந்ம்பிக்கைகள் போலி என்று கருதுகிறார். இருவருமே அவரவர் வழியில் சிறந்தவரே, உண்மையாகத்தான் இருக்கிறார்.

  இதுவும் சரி, அதுவும் சரி என்பவர்தான் தன்னையும் ஏமாற்றி, ஊரையும் ஏமாற்றுகிறார்.

  சரியான பதிவு என்றால அவரவருக்கு அவரவர் ந்ம்பிக்கை மட்டுமே மீண்டும் மட்டுமே சரி.

 8. இந்துமதத்தின் அடிப்படைக்கருத்து சரியாகப்புரியப்பட்டிருக்கிறதா?

  இந்துமதத்தில் பலபல நம்பிக்கை மையங்கள் இருக்கின்றன (செக்ட்ஸ்). தரிசனங்களும் உள. இராமானுஜரின் விஷிஸ்டாத்வைதம் சங்கரரின் அத்வைதமும் இது போன்று பலபல உள. இல்லையா? எனவே எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ஒருவரால் வாழ்வியலாது. எனவே இப்பன்மைகளில் தன்க்குச்சரியென்ற ஒன்றைப் பிடித்து வாழ்வதே சரி. அப்படிச் செய்பவரே இந்துமதத்தின் முழுப்பயனையும் பெறவியலும். இல்லாவிட்டால் காலையில் பழனி மாலையில் வேளாங்கண்ணி என்று செல்பவரும் இந்து எனலாமே? கிடையாது. (தமிழக அரசு பேருந்து ஒன்று பழனி டு வேளாங்கண்ணி என்று விடப்பட்டிருக்கும் நோக்கமே இப்படிச்செல்லும் இந்துக்களுக்குத்தான்!)

  அதேசமயம், மற்ற மதங்கள் பன்முகத்தன்மைக்கு எதிரானவை. இந்துமதம் இருப்பதெல்லாவற்றையும் நுழைய விட்டு, அவற்றுள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொளக என தன்னிச்சையையும் கொடுக்கிறது.

  ஆனால் நீங்களோ அந்த இந்துமதம் கொடுக்கும் தன்னிச்சையைத் தவறாகப் புரிந்து பொருள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் !

 9. திரு BSV, என் கொள்கை சரியானது. உன்னுடைய கொள்கை பொய்யானது என்று யாரிடமும் கூறிப்பாருங்கள். கேட்பவர் ஆபிரகாமியர் ஆக இருந்தால் உங்கள் தலையே இருக்காது. பிற நம்பிக்கைகளை பொய் என்று சொல்பவன் சமூக விரோதி. அவனால் சமுதாயத்தில் சண்டை சச்சரவுகள் தான் வளரும். பிறருடைய நம்பிக்கையை பொய் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு வழியை தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள். அதனை யாரும் தடுக்கவோ மறுக்கவோ இல்லை. ஆனால் மற்ற வழிகள் பொய் என்று சொன்னால் கூறு போட்டுவிடுவார்கள். தேவை இல்லாத வன்முறைகளுக்கு வழிவகுப்போர் யாராயினும் சமூக விரோதிகளே ஆவார். இந்து மத கருத்தாக்கங்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பது உங்களை போன்ற தவறான புரிதல் உள்ளோர் தான். பிறரை அங்கீகரிப்பவர்கள் வேறு எதிர்ப்பவர்கள் வேறு இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தன்னுடைய வழிமுறையே சரியானது மற்றவழிமுறைகள் எல்லாமே தவறு பொய் என்று சொல்பவன் மனித இனத்துக்கே விரோதி ஆவான்.

  அவரைக்காய் சாம்பார் சாப்பிடுவது நமது விருப்பம் அதில் தவறு இல்லை. ஆனால் வெங்காய சாம்பார் சாப்பிடுவது கூடாது என்று நாம் சொல்லக் கூடாது. மற்ற வழிகள் தவறு என்றோ பொய் என்றோ எப்போது கூறலாம் என்றால், அவர்கள் பிற நம்பிக்கைகளை ஒழிப்பேன் என்று சொல்லும் போது நாமும் அவர்களை எதிர்த்து போராடவேண்டும். அதே சமயம் உன் மதமும், அதன் தத்துவமும் தவறு என்று பிறரிடம் யார் சொன்னாலும் சொன்னவனை பொலி போட்டுவிடுவார்கள். தைரியம் இருந்தால் ஒரு கிறித்தவரிடமோ, ஒரு இஸ்லாமியரிடமோ போய் உன்னுடைய மதமும் அதன் தத்துவங்களும் பொய் என்று சொல்லிப்பாருங்கள். என்ன நடந்தது என்பதை அதன் பிறகு மற்றவர்களுக்கு சொல்ல ஆளே இருக்காது.

 10. நீங்கள் போற பாதை வேறு. நான் காட்டிய பாதை வேறு.

  //சரியான பதிவு என்றால் விஷிச்டாத்வைதமும் சரி என்பதுதான்// என்பது நீங்கள் எழுதியது. திரு கணேசுக்கு. ஒரு சமயத்தின் அடிப்படைக்கொள்கைகளை விரும்பி ஏற்றுக்கொள்பவன் அதை முழுவதுமாக நம்பித்தான் ஏற்றுக்கொள்கிறான். கண்டிப்பாக பிறசமயங்களை முழுவதும் மறுதலிக்கிறான்.

  இன்றைய உலகில் எந்தவொரு சமயக்கொள்கையும் இரகசியமானதன்று. எல்லாருமே தெரிந்துகொள்ளலாம். அப்படித் தெரிந்த பின்னர் எல்லாமே போலி என தெரிந்து தெளிந்த பின்னர் எது உண்மை என்று, தான் தெளிந்தானோ அதை ஏற்கும்போது — அங்கு என்ன புலனாகிறது நமக்கு? அவனுக்குப் பிறசமயங்கள் காட்டும் இறைத்தன்மையும் வழிகளும் போலியானவை என்றே. வரலாற்றில் பல சமயப்பெரியோர்கள் இப்படித் தெரிந்து தெளிந்தவர்கள்தான். திருமழிசையாழ்வார் எப்படித்தெளிந்தேன். எப்படி என் சமயத்தை ஏற்றேன் என்றெழதியிருக்கிறார் இப்படி:

  சாக்கியம் கற்றோம்; சமணம் கற்றோம்; சங்கரனார்
  ஆக்கிய ஆகம நூல் ஆய்ந்தோம் – பாக்கியத்தால்
  செங்கட் கரியானைச் சேர்ந்தோம், தீதிலமே
  எங்கட் கரியதொன் றில்

  இவரிடம் போய், செங்கட்கரியானும் ஓகே; அல்லாவும் ஓகே என்று சொல்ல முடியுமா? ஆனால், உங்கள் வாசகம் //சரியான பதிவு என்றால் விஷிச்டாத்வைதமும் சரி என்பதுதான்// அப்படி ஓகே என்று சொல்கிறது. அய்யகோ!

  சமூகத்தில் மக்கள் எல்லாருமே ஒரே சிந்தனையோடு இருக்க மாட்டார்கள். வேறுபட்ட சிந்தனைகள்; அணுகுமுறைகள் இறைவன் மனிதவர்க்கத்தின் அடிப்படையிலேயே வைத்துவிட்டான். எனவே, தனக்குச் சரியென்பது பிறருக்குச் சரியாக இருக்காது என்று அவனுக்குத் தெரியும். எனவே, என் வழி, எனக்கு; அவர்கள் வழி; அவர்களுக்கு எனபதை உணர்ந்து பிறர்வழிகளில் தலையிட மாட்டான். அதே சமயம், அவன் கொள்கையே உண்மை அவனுக்கு எனபதில் இருவேறுகருத்துக்கள் இல்லவே இல்லை.

  நீங்கள் பேசுவது வேறு; வேறுகொள்கைகள் உடையோரிடம் சென்று நீங்கள் போலி என்று சொன்னால் விடுவார்களா? என்பதுதானே? இது சமயக்கொள்கைகளுக்கு மட்டும்தானா? இல்லை. எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஒருவன் மர நுனியில் உட்கார்ந்து மரத்தை வெட்டும்போது, இது முட்டாள்தனம் என்று சொல்லிப்பாருங்கள். அதே அருவாளை உங்கள் தலையில் போட்டுவிடுவானல்லவா? பெண்ணைச் சீண்டியவனிடம் இது தவறு என்றால், அவன் கையில் உள்ளதை வைத்து உங்களைப்போட்டுத்தள்ளிவிடுவான். இதுதான் உலகம். சமயச்சச்சரவுகளைத்தாண்டிய பொது உண்மை இது.

  எனவே நீங்கள் பேசுவது வேறு; நான் பேசுவது வேறு. இங்கே பல சமயக்கொள்கைகள் பேசபப்ட்டால், அது போலி, எனது மட்டுமே உண்மை எனபதில் பிரச்சினையேயில்லை தனக்குத்தானே என்றால். இங்கே பேசித்தீர்த்துக்கொள்வார்கள். வேறிடங்களில் மாட்டார்கள். அங்கு நீங்கள் சொன்னது நடக்கும்.

  இதுவம்ச, அதுவும் சரி என்பது பக்கா போலி. பொய் தனிநபர்களை மட்டும் வைத்துப்பார்க்கும்போது.

  ஒன்றே ஒன்றுதான் சரியாக இருக்க முடியும் ஒரு தனிநபருக்கு. இல்லாவிட்டால், அவர் பொய்யர். அவருக்குச் சமயமே இல்லை. திருமழிசையாழ்வார் பொய்யர் அன்று. அவருக்கு ஒரு தெளிவான சமயம் இருந்தது. அதனை அவரே கண்டு பிடித்துக் கொண்டார். அவரைப்பொறுத்தவரை, சாக்கியமும், சமணமும், சஙகரனாரின் ஆகமும் போலிகளே.

 11. //* BSV on October 29, 2016 at 1:23 pm
  ஒரு கூட்டம் மற்றவரைக்கொலை செய்வதுதான் எங்கள் நம்பிக்கையென்றால், அதுவும் சரியென்பீர்களா? முடியாதல்லவா?* //

  இது நம்பிக்கையென்று ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தவர்கள்(கூட்டத்தவர்கள்) மற்றவர்கள் மேல் திணித்தாலும் இது ஒன்றும் நம்பிக்கையின்பாற்பட்டதல்ல. இது தனது வெறும் ஆதிக்க மனப்பான்மையை வலுக்கட்டாயமாக நிலைநிறுத்துவதற்கு எடுத்தாளப்படுகிற கொலைகார யுக்தி . இங்கு விவாதிக்கப்படுவது தத்துவார்த்த சிந்தையிலான இறை நம்பிக்கை.

  //* இதுவும் சரி, அதுவும் சரி என்பவர்தான் தன்னையும் ஏமாற்றி, ஊரையும் ஏமாற்றுகிறார்.
  சரியான பதிவு என்றால அவரவருக்கு அவரவர் ந்ம்பிக்கை மட்டுமே மீண்டும் மட்டுமே சரி. *//

  ஹை! இது நாம் கேள்விப்பட்டதிலேயே விசித்திராமாகியிருக்கிறது. இப்படி யார் எத்தனை பேரை ஏமாற்றி வந்திருக்கிறார்கள்? எமது நம்பிக்கை உயர்ந்தது அடுத்தவரின் நம்பிக்கை தாழ்ந்தது என்கிற மனப்பான்மைதான் அகங்காரத்தின் ஊற்று, மமதையின் சிகரம் மற்றும் பிறரை அழித்தொழிக்கவேண்டுமென்கிற கெட்ட எண்ணத்தின் அடிப்படை.

  //* BSV on October 29, 2016 at 1:33 pm
  இல்லாவிட்டால் காலையில் பழனி மாலையில் வேளாங்கண்ணி என்று செல்பவரும் இந்து எனலாமே? கிடையாது. இந்துமதம் இருப்பதெல்லாவற்றையும் நுழைய விட்டு, அவற்றுள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொளக என தன்னிச்சையையும் கொடுக்கிறது. *//

  பழனியும் வேளாங்கண்ணியும் ஒன்றா? இங்கு விவாதிக்கப்படுவது இந்து மதத்திற்குளுள்ள நம்பிக்கைகள். ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடங்கள் இந்துப்புனிதத்தலமாகவல்லவாயிருக்கவேண்டும்? அந்நிய மதங்களைதழுவிக்கொள்ள (எடுத்துக்கொள்ள) எப்பொழுது இந்து மதமோ அல்லது இந்து மதத்தினாரோ உபதேசித்தனர் அல்லது உத்தரவிட்டனர்?

  இத்தகைய தவறான புரிதல்கள் உள்நோக்கம் கொண்டவையாகவிருக்கவேண்டும் என்று யாம் ஏன் சந்தேகிக்கக்கூடாது?

 12. அன்பான தமக்கையார் அத்விகா அவர்களுக்கு ,
  /***
  அத்விகா on October 27, 2016 at 6:45 pm
  கடவுள் என்பதை மனித இனத்தில் பயன்படுத்தப்படும் சொற்களால் வரையறை (அதாவது DEFINITION) செய்வது என்பது ஒரு முழு நகைச்சுவைதான்.
  ***/
  அக்கா ! உங்க பதிலைப் படித்து ஒரே வெடிச்சிரிப்பு தான் வருது ! ஹய்யோ …ஹய்யோ ! ..
  ஶாரீரக ஶாஸ்த்ரம்(ப்ரம்ம சூத்ரங்கள்) -முதல் அத்யாயம்(ஸமன்வய அத்யாயம்)- முதல் பாதம் -இரண்டாம் அதிகரணம் (ஜன்மாத்யதிகரணம் ) .அதில் ஒரே சூத்ரம் .
  ஜன்மாத்யஸ்ய யத:
  இதற்கு பூர்வ பக்ஷி -(வாதி /எதிரி ) = தார்க்கிகன் (தர்க்கம் (அ ) ந்யாய மதம் .நிறுவனர் -கௌதம ரிஷி ).
  கேள்வி = கடவுள் என்பதை மனித இனத்தில் பயன்படுத்தப்படும் சொற்களால் வரையறை செய்ய முடியாது.எனவே உமது வேதாந்த மதம் (நிறுவனர் -வேத வ்யாஸ ரிஷி) தள்ளக் கூடியது தான் ; ஏற்க இயலாது.
  ஸித்தாந்தம் (பதில் ) = இதற்கு விடை யஜுர் வேதத்தில் தைத்திரிய ஸம்ஹிதையில் பின்வருமாறு உள்ளது .
  “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ; யேந ஜாதாநி ஜீவந்தி ;யம் ப்ரயந்த் அபிஸம்விஶந்தி ; தத் விஜிக்ஞாஸஸ்வ; தத் ப்ரம்ம இதி |”
  பொருள் : “எவனிடமிருந்து இந்த பிரபஞ்சம் உருவானதோ ;எவனால் இந்த பிரபஞ்சம் தாங்கப்படுகின்றதோ ;எவனிடமே இந்த பிரபஞ்சம் லயமடையுமோ ;அவனைத் தெரிந்து கொள் ; அவனே ப்ரம்மம் ”
  ஆதி சங்கரரும் ,ஸ்ரீமத் ராமானுஜரும் ,ஸ்ரீமத் மத்வரும் ஆகிய மூவரும் இணங்கிய சூத்ரம் இதுவே .இதைத்தான் கம்பரும்
  “உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
  நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
  அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
  அன்னவர்க்கே சரண் நாங்களே” என்கிறார் .
  மறந்து போனியா அக்கா !
  சரியான சிரிப்பு போலீஸ் அக்கா நீங்க !

  தங்கள் அன்புத்தம்பி ,
  கணேசு

 13. அன்பான தமக்கையார் அத்விகா அவர்களுக்கு ,
  /***
  அத்விகா on October 27, 2016 at 6:45 pm
  அதனால் தான் கண்டவர் விண்டிலர் / விண்டவர் கண்டிலர் என்று தெய்வீகப் புருஷர்கள் கூறியுள்ளனர்.
  ***/
  முதற்கண் திருமூலர் அடியேனை மன்னிப்பாராக !
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னும் திருவிளையாடல் சினிமா வசனத்துடன் தொடங்குவேன் எனது வாதங்களை …..
  1.) சுக்ல யஜுர் வேதம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் யாக்ஞவல்க்யர் தம் மனைவி மைத்ரேயிக்கு பரமாத்மாவைப் பற்றி உபதேசிக்கையில் –
  “ஆத்மா அரே! த்ரஷ்டவ்ய: ,ஸ்ரோதவ்ய: ,மந்தவ்ய : ,நிதித்யாஸிதவ்ய:” என்கின்றார். யாக்ஞவல்க்யர் கண்டபிறகே மைத்ரேயிக்கு விண்டுகின்றார்.
  பொருள் : பரமனைக் காண விழையும் ஒருவன் -அவனது ஸ்வரூப,ரூப,வைபவங்களை பற்றிக் கேட்க வேண்டும்.அதையே மனதில் நினைக்க வேண்டும் .அநவரதம் தியானிக்க வேண்டும் .இறுதியில் அவனை சாக்ஷாத்கரிக்கலாம்.
  2.) ரிக் வேதம் -புருஷ சூக்த மந்த்ரத்தில் —–
  “தம் ஏவம் வித்வாந் அம்ருத இஹ பவதி | ந அந்யப் பந்தா அயனாய வித்யதே ||”
  பொருள் : பரமனை அடைய வேண்டினால் ,அவனைப் பற்றி அறிந்தே தீர வேண்டும் . இதற்குப் புறம்பான வழி ஏதுமில்லை .
  இத்தொடர் ஒன்றுக்கு இருமுறை வருகின்றது.
  தம் ஏவம் வித்வாந் அம்ருத இஹ பவதி | ந அந்யப் பந்தா வித்யதே அயனாய ||
  இரண்டாம் முறை இறுதியில் சொற்கள் மாறி வருகின்றன என்றாலும் அதற்கும் ஒரே பொருள்தான் .
  பிறர் பரமனைக் கண்டதை விண்டினால்தான் நாமும் அவனைக் காண இயலும் .
  எடுத்துக்காட்டாக விஷ்ணுபுராணத்தில் ப்ரஹ்லாதாழ்வான் ,தனது தாயின் கர்ப்ப வாச காலத்தில் நாரத மஹரிஷி வாயிலாக “வெள்ளை விளிசங்கொடு ஆழியேந்தி தாமரைக் கண்ணன் ” என்றிவ்வாறு ரூபத்தினை ,ஸ்வரூப,விபவ ,குண ,சேஷ்டிதங்களை கேட்கின்றான். பிறந்த பின்னர் அதையே மனதில் சிந்திக்கின்றான் . அநவரதம் தியானிக்கின்றான் .அதன் விளைவாக பரமனை நேரிலேயே கண்டு களிக்கின்றான் .திருமாலின் அருகலில் இருக்கப் பெற்றவன் அவனால் அபயம் பெறுகின்றான் .”அத தஸ்ய கதோ அபயம் பவதி ” என்னும் யஜுர்வேத மந்த்ரத்திற்கொப்ப அவனுக்கு அபாயம் என்று ஏதுமில்லை .தன் தகப்பன் ஹிரண்யகசிபு அவனுக்கு விஷம் கொடுத்தான், சர்பத்தினால் தீண்ட வைத்தான் ,ஆயுதங்களால் ப்ரஹரித்தான் ,ஸமுத்ரத்தில் மூழ்க வைத்தான் ,மலையிலிருந்து தள்ளினான் ,இருட்டறையில் தள்ளி பசி ,தாகத்திற்கு ஆளாக்க முயன்றான் ,யானை காலில் இடர வைத்தான், தீயில் இட்டு பொசுக்கினான் .ஆயினும் ஒரு துன்பமும் அவனுக்கு இல்லை.
  நாரத மஹரிஷி தான் கண்டதையே ப்ரஹ்லாதாழ்வானுக்கு விண்டுகின்றார்.
  கதிராயிரம் இரவி கலந்தெரித்தால் ஒத்த நீள்முடியன்
  எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
  அதிரும் கழற்பொருதோள் இரணியன் ஆகம் பிளந்துஅரியாய்
  உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டாருளர் -பெரியாழ்வார் திருமொழி .

  3.) ஒரு ஜீவன் மோக்ஷ லோகம் சென்றபின்னர் ,பரமனைக் கண்டு -“அஹமஸ்மி ப்ரதம ஜாருதஸ்ய ;பூர்வம் தேவேப்யோ அம்ருதஸ்ய நாபாயீ ; யோ மா ததாதி ஸஹி தேவமாவா: ,அஹம் அந்நம் -அஹம் அந்நம் -அஹம் அந்நமாத்மீ |” -என்று பாடுகின்றான்.
  பொருள் : “நான் உனக்கு அன்னம் ஆவேன் . என்னை போக்கியமாக ஏற்றுக் கொள்“. பரமனைக் கண்டும் அதையே விண்டும் ஆனந்திப்பதையே சாமவேதம் ஓதுகின்றது.
  4.) மேலும் ஸாமவேதம் சாந்தோக்ய உபநிஷத்தில் ரிஷி உத்தாலக ஆருணி தன் மகன் ஸ்வேதகேதுவிற்கு -“ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் . ஏகம் ஏவ அத்விதீயம் ” என்று தான் கண்டதை தன் மகனுக்கு விண்டினார் .
  பொருள் : ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் ஸத் என்கிற ப்ரம்மம் ஒன்றே இருந்தது .அதைத்தவிர வேறு ஒன்றுமில்லை .

  5.) ஸாமவேதம் சாந்தோக்ய உபநிஷத்தில் ரிஷி சாண்டில்யர் -“ஸர்வம் கலு இதம் ப்ரம்ம தஜ் ஜ லான் இதி ஸாந்த உபாஸீத “- என்று உபதேசிக்கின்றார் . பொருள் :இங்கு காணும் அனைத்தும் ப்ரம்மமே அன்றோ ! இப்பிரபஞ்சத்திற்கு தஜ்ஜம் -பிறப்பிக்கும் ஒருவன் எவனோ ,தல்லம் -லயமாக்கும் ஒருவன் எவனோ , ததனம் – தாங்கும் ஒருவன் எவனோ ,அந்த ஒருவனை சாந்தமாக உபாசனை செய்வாய்.

  6.) ஸாமவேதம் சாந்தோக்ய உபநிஷத்தில் -“ய: ஏஷ: அந்தர் ஆதித்ய புருஷ : த்ருஷ்யதே ; ஹிரண்ய ஸ்மஷ்ரு: ஹிரண்ய கேஸ: ,ஆப்ர நகாத் சர்வ ஏவ ஸுவர்ண: ; தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ” – என்று உபதேசிக்கின்றது. பொருள் : இதோ இந்த சூரிய மண்டலத்தில் மத்தியவர்த்தியாய் தெரியும் ஒரு புருஷனைப் பாருங்கோள் !
  அவன் மீசை,தாடி முதல் நகம் வரையில் எல்லாம் தங்க மயமாய ஜொலிக்கின்றது. ஆனால் அவன் கண்கள் இரண்டும் அன்றலர்ந்த செந்தாமரை இதழ் போலுள்ளனவே . பாரீர் பாரீர் …
  எல்லோரையும் சந்தியாவந்தனம் செய்யும் பொழுதில் “செந்தாமரைக் கண்ணனை ” தரிஸிக்கச் செய்யும் சுலோகமிது .
  வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்
  உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன்
  வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
  கள்ளப் படைத்துணையாகிப் பாரதம் கைசெய்யக் கண்டாருளர்.
  எங்கள் பெரியாழ்வார் பரமனை பலர் கண்டதாகப் விண்டுவதை கேண்மின்.

  மேலும் செப்புவேன் ,
  கணேசு

 14. தம்பி கனேசு ,

  சாக்கியமும், சமணமும், சங்கரனாரின் ஆகமமும் நீங்கள் பின்பற்றிப்பார்க்காமல் அது பொய் என்று கூறுவது ஒரு அறியாமை மற்றும் தேவை இல்லாத விஷயம். அவர்களும் உங்களை வடகலை தென்கலை விஷிஷ்டாத்வைதமும் பொய் என்று சொல்ல எவ்வளவு நேரமாகும். கடவுள் சக்தியை மேலே வரையறை செய்துள்ளோர் அதனை ஒரு inclusive definition ஆகவே செய்துள்ளனர். வேதங்கள் ஒரு பகுதியையே அறிந்துள்ளன என்பதே உண்மை. வேதங்கள் கடவுளுக்கு exclusive definition கொடுக்கவில்லை. பொய்களை சொல்லி வாழாதீர்கள். மேலும் திரு மயூரகிரி ஷர்மா எழுதியுள்ள ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு என்ற தலைப்பிலான இந்த கட்டுரையில் மறுமொழி இடுகிறேன் என்ற போலிப்போர்வையில் , ஆகமங்கள் பொய் என்று எழுதும் வக்கிர புத்தி கொண்ட உங்கள் பதிவு நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான பேர்வழி என்பதை தெளிவாக கட்டுகிறது. இறைவழிபாடு என்பது தனக்கு பிடித்த முறையை பின்பற்றுவது தானே ஒழிய பிறமுறைகளை பின்பற்றுவோரை பார்த்து உன் முறை பொய்- என்று சொல்லுவதல்ல. தமிழ் இந்து தளத்தில் ஆன்மீக கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளவேண்டுமே தவிர இந்து சமயத்தில் நாத்திகர்களில் ஆரம்பித்து, ஆக்ஞேயவாதிகள் தொடர , சைவர், காணாபத்தியர், சாக்தர், கவ்மாரர், சௌரர் , வைஷ்ணவர் என்று ஏராளம் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் பிற பிரிவு தத்துவங்கள் பொய் என்று சொல்ல ஆரம்பித்தால், வீண் சண்டையும் மனக்கிலேசமும் தான் வளரும். கனேசு போன்றோர் அதனை தான் செய்ய முயல்கிறார்கள். இந்து மதத்துக்கு சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோர் மட்டும் தலைவர்கள் அல்ல.

 15. //பழனியும் வேளாங்கண்ணியும் ஒன்றா? இங்கு விவாதிக்கப்படுவது இந்து மதத்திற்குளுள்ள நம்பிக்கைகள். ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடங்கள் இந்துப்புனிதத்தலமாகவல்லவாயிருக்கவேண்டும்? அந்நிய மதங்களைதழுவிக்கொள்ள (எடுத்துக்கொள்ள) எப்பொழுது இந்து மதமோ அல்லது இந்து மதத்தினாரோ உபதேசித்தனர் அல்லது உத்தரவிட்டனர்?//

  நல்ல கேள்விகள். கேட்டதற்கு நன்றி.

  இந்துமதத்தில் உத்தரவு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே உத்தரவிட்டனரா என்ற கேள்வி எழ வாய்ப்பில்லை. நாம் பேசுவது அப்படி செய்வது சரியா என்ற கேள்விதான். அதைத்தான் உங்களைப்போன்றோர் எதிர் நோக்கி பதில் தேட்வேண்டும்.

  தமிழ்நாட்டு இந்துக்களைப்பற்றித்தான் பேசுகிறோம். காலையில் பழனி, பின்னர் பேருந்து மாலையில் வேளாங்கண்ணிக்குச் சென்றடைய அங்கு வழிபாடு. மறுநாள் நாகூர் அங்கு வழிபாடு. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்படி மூன்று மதத்திலும் வழிபாடு செய்யுமிவர்கள் இந்துக்களா என்பதே கேள்வி. ஏன் இக்கேள்வி எழுதுகிறது? அதை நீங்களே சொல்லிவிட்டால், எங்கேயும் இந்துமதத்தில் கிருத்துவமத வழிபாடோ, இசுலாமிய வழிபாடோ செய்யலாம் என்று சொல்லவில்லை. இல்லையா? பின் எப்படி இவர்கள் இந்துக்கள் ஆவார்கள்? ஒரு கிருத்துவன் பழநிக்கு வந்து மொட்டை போடுகிறானா? ஓர் இசுலாமியன் பழநி சென்று வருகிறானா? இல்லவே இல்லை. பின் ஏனிப்படி இவர்கள் மட்டும். இவர்கள் இப்படி இந்துக்கள் ஆவார்கள்?

  அடுத்த கேள்வி: இந்துமதத்துக்குள்ளேயே இருக்கும் பல வழிபாடுகளைப்பற்றிப்பேசினாலும் இங்கு இருவகையினர் இருக்கின்றார்கள் காலம்காலமாக.

  1. எல்லா இந்துக்கடவுளையும் வழிபடுவோர்.
  2. ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டை ஏற்றுச்செய்வோர்.

  இரண்டாமவர்தான் இங்கு பேசப்பட்டவர்கள் என்னால். இவர்கள் செய்வது தவறா சரியா? இந்துமதம் இருக்கும் ஆயிரக்கணக்கான வழிமுறைகளிலும் கடவுளர்களிலும் ஒன்றை எடுத்து செய்வது தவறே இல்லை.அதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு என்கின்ற போது, இதுவே என் வழி; மற்ற வழி எனக்கில்லை என்றால், அதுவும் சரி, இதுவும் சரி என்பது அவர்களின் உரிமையைத் தவறென்பது போலல்லவா ஆகிறது?

  இங்கு எவரும் தங்கள் மார்க்கத்தையோ, வழிபாட்டையோ – இந்துமதத்துக்குள் பேசும்போது – மற்றவர் மேல் திணிக்கவில்லை. கேட்பதெல்லாம் – இதுவும் சரி, அதுவும் சரி என்பது மேற்காட்டிய முதலாமவருக்கே பொருந்தும். மற்றவர் செய்தால்தான் இந்து; இல்லாவிட்டால் ”எனக்கு ஐயமேற்படுகிறது?” என்றால், எனக்கும் ஐயமேற்ப்டுகிறது இப்படி திணிப்போர் இந்துக்களா அல்லது இசுலாமியர்களா என்று?

  பதில் சொல்லுங்கள் பரிக்சித்.

 16. //இறைவழிபாடு என்பது தனக்கு பிடித்த முறையை பின்பற்றுவது தானே ஒழிய பிறமுறைகளை பின்பற்றுவோரை பார்த்து உன் முறை பொய்- என்று சொல்லுவதல்ல. தமிழ் இந்து தளத்தில் ஆன்மீக கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளவேண்டுமே தவிர இந்து சமயத்தில் நாத்திகர்களில் ஆரம்பித்து, ஆக்ஞேயவாதிகள் தொடர , சைவர், காணாபத்தியர், சாக்தர், கவ்மாரர், சௌரர் , வைஷ்ணவர் என்று ஏராளம் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் பிற பிரிவு தத்துவங்கள் பொய் என்று சொல்ல ஆரம்பித்தால், வீண் சண்டையும் மனக்கிலேசமும் தான் வளரும்//

  இது சரியான கருத்து. எனினும் ஒரு சிறிய மாற்றம் தேவை. அது ”பொய்” என்ற சொல்லிலிருந்து வரவேண்டும்.

  தான் ஒரு இறைவழிபாடு (அதாவது இந்து மதத்தில் காட்டப்பட்ட பல்வகையானவற்றுள் ஒன்றை வைத்து) ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதே சமயம் மற்றவர்கள் இந்துமதத்தில்காட்டப்பட்ட‌ ஒன்றையோ பலவற்றையோ ஏற்று வாழ்கிறார்கள். இது நாம் காணும் உண்மை. இந்துமதத்தில் இது முழுக்கமுழுக்கச் சரி.

  அது கிடக்க. ஒரே வழிபாட்டைக் கொண்டவர் மற்ற வழிபாடுகளைப் பொய் என்று சொல்வதால் கண்டிப்பாக மனக்கிலேசமும் வேண்டா விளைவுகளும் ஹேதுவாகும். இதுவும் சரி.

  அதற்காக மற்றவர்கள் வழிபாட்டை உண்மையென அவர் நம்ப வேண்டுமா? அப்படி நம்பும்போது ஏன் அவற்றை விட்டுவிட்டு இதை மட்டும் ஏற்றார் என்ற கேள்விக்குப் பதில் அதெல்லாம் ஒரு வசதிக்காக என்று அவர் சொன்னால், அவர் மதவாழ்க்கை ரொம்ப மலினமான விசயமல்லவா? மத வாழ்க்கையை மலினமாகக் கொண்டவரின் பூஜை அறையில் மக்கா படமும், வேளாங்கண்ணி படமும் இயேசுவின் சிலுவைப்படமும் எல்லா இந்துக்கடவுளர்கள் படங்களுக்கிடையில் இருக்கின்றனல்லவா? இதுதானே மலினம் என்பது?

  மதவாழ்க்கையை ஆழ்ந்து அனுஷ்டிக்க விரும்புவோர்தான் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவைகள் போலியெனத் தெளிந்து உறுதி செய்தபின்னர்தான் ஏற்கிறார். பின் எப்படி பிறவற்றை உண்மை என்பார்? அதுவும் சரி இதுவும் சரி என்பதை அவர் சொல்ல முடியுமா? உறையிலடங்கா வாள் எனவழைக்கப்படும் திருமழிசையாழ்வார் சொல்வாரா?

  இதற்கெல்லாம் பதில்: அவர் தனக்கு இதுவே உணமை மற்றவையெல்லாம் பொய்கள்; போலி வழிகள் என்று ஏற்க இந்து மதத்தில் தடையேதுமே இல்லை. மற்றெல்லாவழிகளுமே பொய்கள் என்று அவர் தாராளமாக நம்பி வாழலாம்.

  எங்கு பிரச்சினையென்றால், அவர் பிறர‌றிய அவர்கள் வழிகள் பொய்கள் என்று பொதுவெளியில் பறை சாற்றக்கூடாது.

 17. அன்பான தமக்கையார் அத்விகா அவர்களுக்கு ,
  /***
  மேலும் திரு மயூரகிரி ஷர்மா எழுதியுள்ள ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு என்ற தலைப்பிலான இந்த கட்டுரையில் மறுமொழி இடுகிறேன் என்ற போலிப்போர்வையில் , ஆகமங்கள் பொய் என்று எழுதும் வக்கிர புத்தி கொண்ட உங்கள் பதிவு நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான பேர்வழி என்பதை தெளிவாக கட்டுகிறது.
  ***/
  அடியேன் எழுதியிருக்கும் பின்னூட்டத்தினை தங்கள் தயை கூர்ந்து (சற்று கண்களில் விளக்கெண்ணெய் விட்டுகே கொண்டு )முதலில் இருந்து வாசிக்கவும் .அடியேன் வாரம் தோறும் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் அடிப்பொடியன் ஆவேன் .அடியேனுக்கு ஆகமந்தான் மிகவும் பிடிக்கும் .விக்கிரக வழிபாடுதான் மிகவும் உயர்ந்தது என்னும் விசிஷ்டாத்வைதத்தினை பின்பற்றுபவன். நீவிர் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சினை இடுகின்றீர். இக்கட்டுரை தொடக்கத்திலேயே ,ஆசிரியரை மிகவும் புகழ்ந்து எழுதியிருப்பதை பாரீரே! இது அன்வயக் கருத்தேயன்றி(உடன்பாடு) , வ்யதிரேகமல்லவே ( எதிர்மறை) !!உமக்கு மறுப்பாகவா தெரிகின்றது ?

  ஸ்ரீரங்கத்திலே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு, அதிலொன்றாம் யாக ஸம்ஸ்காரத்தினை செய்பவன்.(அதாவது ) தினமும் எம்பெருமான் விக்ரகத்திற்கு மந்த்ர ,ஸ்நான ,அலங்கார,போஜ்ய மற்றும் பர்யங்காசனம் சமர்பிப்பவன்.
  அடியேன் பிரஸாதம் செய்து நித்ய தளிகை சமர்ப்பித்து, அதன் பின்னரே சாப்பிடுபவன்.

  அடியேனையா ஆகமத்திற்கு எதிரி என்கிறீர் . ராம! ராம!

  எங்கள் ஆழ்வார்கள் அனைவரும் விக்கிரக ஆராதனையே சிறந்தது என்று சொல்வர்.
  நம்மாழ்வார் 32 திவ்ய தேசங்களையும் ,திருமங்கையாழ்வார் 70 க்கும் மேற்பட்ட ஸ்தலங்களையும் பாடியுள்ளனரே ! எங்களுக்கு விடுமுறை கிட்டும்தோறும் அத்திவ்ய தேசங்களுக்கே செல்வோம்.

  வள்ளலாரும் விவேகானந்தரும்தான் விக்கிரக வழிபாட்டிற்கு விரோதிகள் . அடியேனல்லேன் !!!
  அடியேனது பெரியப்பா ,வடலூரிலுள்ள உலக மையத்திலேயே சிலகாலம் இருந்தவர். அவர்கள் நந்தாவிளக்கை த்யானம் செய்வோராவர்.விக்கிரக வழிபாட்டிற்கு விரோதிகள்.அம்முறை கலியுக தர்மத்திற்கு விருத்தமாம் .
  சென்னை ராமக்ருஷ்ணமடத்திற்கும் உபநிஷத நூற்கள் வாங்க சென்றிருக்கின்ரேன். அங்கும் அப்படியே .வெறும் த்யானந்தான். அவர்களது விமானத்தில் அல்லா ,ஏசு ,சாயிபாபா ,புத்தர் என்று அனைத்து மத சின்னங்களும் கண்டு நகைத்ததுமுண்டு .
  முதலில் நீவிர் கீழ்காணும் சுட்டியினை வாசியும் .
  -விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள் -October 22, 2016-ஜடாயு

  கார்த்தயுகத்தில் தபஸ்ஸினாலும் ,திரேதாயுகத்தில் யாகத்தினாலும் ,
  த்வாபரயுகத்தில் ஞ்நானத்தாலும் பெரும் பேற்றினை
  கலியுகத்தில் விக்கிரக வழிபாட்டால் எளிதில் பெறலாம் .
  நாம சங்கீர்த்தனம் என்பர் அதனை .

  “கண்டவர் விண்டிலர்” என்பதும் விக்கிரக வழிபாட்டிற்கு விரோதியாம் .

  ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
  வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
  தெழிகுரலருவித் திருவேங்கடத்து
  எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே ! – திருமலை

  கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்
  சங்கு சக்கரங்களென்று கைகூப்பும் தாமரைக்கு கண்ணென்றே தளரும்
  எங்ஙனே தரிக்கும் உன்னை விட்டேன் என்னும் இருநிலம் கைதுழாவி இருக்கும்
  செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்திட்டாயே -திருவரங்கம்
  மேலும் சமணமதம் பொய்தானென்று சம்பந்தரும் ,அப்பரும் நிரூபித்தாகி விட்டது . அடியேனுக்கு எதற்கு ?
  பச்சை மாமலைபோல் மேனி ,பவளவாய் கமலச் செங்கண்
  அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
  இச்சுவை தவிர யான்போய் இந்திரா லோகமாளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

  அடியேன் மற்ற சமயங்களை வெறுப்பவனல்லன் ! என் மதத்தினை தாக்கினால் மறுமொழி கொடுக்கின்ரேன் அவ்வளவே !

  உமக்கு குப்புற விழுந்தும் மீசை ஒட்டவில்லை அக்கா !
  பணிவுடன் ,
  கணேசு

 18. திரு. பி.எஸ்.வி,

  எமது பதிவை ஒரு பொருட்டாக மதித்து மறுபதிவு செய்ததிற்கு நன்றி. நீங்கள் சொல்லவருவதுதானென்ன? த்வைதிகள் அத்வைதிகளையும், அத்வைதிகள் வஷிஷ்டாத்வைதிகளையும், விஷிஷ்டாத்வைதிகள் மற்ற இருவரையும் போலியானதான அல்லது பொய்யானதான நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களென்று தூற்றிக்கொள்ளவேண்டும். அதாவது ஒருவருக்கொருவர், சாதாரணமான வார்த்தைகளால் சொல்லவேண்டுமென்றால், திட்டித்தீர்த்து, வசைபாடி, சண்டையிட்டுக்கொள்ளவேண்டும். பின் வேறெதெற்கு உங்களுடைய நோக்கம் வழிவகுக்கும்?

  உங்களுடைய நம்பிக்கை உங்களுக்கு எம்முடைய நம்பிக்கை நமக்கு என்றிருப்பதுதான், குறைந்தபட்சம், சமய பூசலைத் தவிர்த்து இந்து ஒற்றுமையையைப் பேணிக்காக்கும். எமது ஒற்றுமைதான் இப்போதைக்கு அவசியாமானவொன்று. இந்த ஒற்றுமைக்குப் பங்கம் விழைவிக்குமெந்தவிதமான செயல்களும் முழுமையாக எங்களால் நிராகரிக்கப்படவேண்டியவொன்றே. உங்களுடைய பதிவில் அத்தகைய ஒற்றுமைத்தொனி தெரியவில்லை. இதற்கு ஏதேனும் காரணமிருக்கலாம், எமக்குத்தெரியவரவில்லை.

  இன்னொன்று, பெரும்பாலான ஹிந்துக்கள் தமது தாய் தந்தையரின் நம்பிக்கையையொட்டியே தத்தம் வழிபாட்டு முறையை அமைத்துக்கொள்கிறார்கள். இவர்கள், துரதிஷ்டவசமாக, எதுவும் சமய நூல்களைக் கற்றறிந்தவர்கள் கிடையாது. ஆனாலும், எல்லாவித ஈடுபாட்டுடனுமேயே சமய வழிபாட்டுக்களில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். ஒருவகையில், இத்தகையவர்கள், சதா சண்டையிட்டுக்கொள்ளும் எல்லாம் கற்றறிந்த சமஷ்கிருத மற்றும் தமிழ் பண்டிதர்களைக்காட்டிலும் ஒரு படி மேல். இது எமது பார்வை.

  உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் திரு. அத்விகா அவர்கள் முழுமையான பதில்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குமேலாக எழுதுவதற்கு எமக்கு ஞானமில்லை.

 19. .பிராக்ஷித்!

  இரு தளங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரே தளம்தான் இருக்கிறது என்ற பிடியில் இருக்கிறீர்கள்.

  1. இந்து என்ற பொது அடையாளம்.
  2. சைவ சித்தாந்திகள், ஷிரிவைணவர்கள். சஙகரமடத்தைச்சார்ந்தோர்; மெயவழிச்சாலையர், இப்படிபலவகையினர். இவர்களின் அடையாளம் தனித்தனி. இவர்கள் இன்னொருவர் வழிபாட்டுத்தளத்துக்குச் சென்று வரமாட்டார்கள். அதாவது சைவசிந்த்தாந்திகளுக்கு சிவனே முழுமுதற்கடவுள். வைணவருக்கு திருமாலே முழுமுதற்கடவுள். இவர்கள் போக தனிமடங்கள்: பிரமகுமாரிகள்; பங்காரு அடிகளார்;

  உங்கள் பிர்ச்சினையென்னவென்றால், இந்து என்ற பொது அடையாளம் கொண்டோரே கிட்டத்தட்ட அனைத்து இந்துக்களும். இது சரியே. ஆனால், இவர்களைப்பற்றி நான் பேசவேயில்லை. நான் பேசுவது இரண்டாமவரைத்தான். அவர்களையெடுக்கும்போது, உங்கள் வழிசென்றால், அவர்கள் தங்கள் தங்கள் தனித்தனி வழிபாட்டு நம்பிக்கைக்களை விட்டொழித்து, முதலடையாளத்தை மட்டுமே எடுக்க வேண்டும். ஒரு வைணவர் சிதம்பரம் கோயில் சென்று வழிபடவேண்டும்.

  உங்களது ஆசையின் அடிப்படை எனக்கு நன்றாகவே தெரியும். இந்துக்களிடையே பொது இந்து என்ற அடையாளமிருந்தால்தான் ஒரே மக்கள் சக்தியாக முடியும் என்று நம்புகிறீர்கள். ஆனால், அதை அவரவர் தங்கள்தங்கள் வழிகளில் அவர்கள் தனிநபர் அல்லது குடும்ப வாழ்க்கை, அல்லது மடத்து வாழ்க்கையில் இருந்து கொண்டு செய்ய முடியும் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

  முடியும். வீட்டிலும் வழிபாட்டுத்தளங்களிலும் இந்து, முசுலிம், கிருத்துவன், சீக்கியன், ஜெயினன், பொது வெளியில் இந்தியன் என்ற அடையாளம். தனித்தனி மொழிகள் பேசி, தங்கள் தங்கள் மாநிலங்களில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இந்தியா என்ற நாடும் இந்தியர் என்ற் அடையாளமும் பொது அடையாளங்களாக ஏற்கிறோம். அதன்படி வாழ்கிறோம்.

  அதைப்போலவே இங்கும் செய்ய முடியும். இந்துகள் ஒற்றுமை அவரவர் தனிவழிபாட்டு முறைகளை ஒழிக்காமலும் செய்யலாம்.

 20. திரு கெனேசு, என்னுடைய முந்திய பதிவு திரு BSV அவர்களின் பதிவுக்கான பதில். தங்கள் பெயர் தவறாக தைப்பாகிவிட்டது . பிழையை பொறுத்தருள்க .

  BSV on October 31, 2016 at 2:28 pm

  ” ஒன்றே ஒன்றுதான் சரியாக இருக்க முடியும் ஒரு தனிநபருக்கு. இல்லாவிட்டால், அவர் பொய்யர். அவருக்குச் சமயமே இல்லை. திருமழிசையாழ்வார் பொய்யர் அன்று. அவருக்கு ஒரு தெளிவான சமயம் இருந்தது. அதனை அவரே கண்டு பிடித்துக் கொண்டார். அவரைப்பொறுத்தவரை, சாக்கியமும், சமணமும், சஙகரனாரின் ஆகமும் போலிகளே.”

  திரு BSV,

  ஆகமமும் போலிகளே என்று முடித்துள்ளீர்கள். ஏனிந்த தவறான கருத்து. பிறரை போலி என்று சொல்வது நமக்கு எந்த விதத்தில் உபயோகமானது ?

  சாக்கியமோ, சமணமோ, சங்கரரின் ஆகமமோ எதுவமே பொய்யல்ல.

  உண்மை ஒன்று தான். ஆனால் அதனை அறிஞர் பலவிதமாக காண்கிறார்கள் – பலவிதமாக வர்ணிக்கிறார்கள். இது தான் உண்மை.

  மினர்வா நோட்ஸ் வேறு பாப்புலர் நோட்ஸ் வேறு ஆனால் இரண்டில் எதைப் படித்தாலும் மாணவன் தேறிவிடுவான். ஆனால் எந்த வியாபாரியும் தன் சரக்கு உயர்த்தி மற்ற கடை சரக்கு மட்டம் என்று சொல்லி விளம்பரம் செய்வது வியாபாரம். ஆன்மிகம் வியாபாரம் அல்ல. ஆன்மீகத்திற்கு தனி மனிதனின் பயிற்சிதான் மிக முக்கியம். மதங்களோ மத நூல்களோ அல்ல.

  ஒரு விஷயம் பொய் என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் வெளியில் பிறர் காதுபட பேசுவதோ, பலரும் படிக்கும் பொது தளங்களில் எழுதுவதோ கூடாது.

  கூறியது திருமங்கை ஆழ்வார் என்பதால் அது சரியான கருத்தாகுமா ?

  திருவாசகத்துக்கு விளக்க உரை எழுதிய சுவாமி சித்பவானந்தரின் விளக்கத்தில் , சில பாடல்களின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை அருமையாக குறிப்பிட்டுள்ளார். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்த சைவ வைஷ்ணவ கருத்து மோதல்கள் எல்லாமே கண்டிக்கத்தக்கவை. பிறகருத்துக்களை கண்டிக்காமலேயே நம் கருத்தை நாம் வாழ்க்கையில் பின் பற்றமுடியுமே . பிறரை போலி என்று சொன்னால் சரியல்ல . நமக்கு ஒரு விஷயம் போலி என்று பட்டால் நாம் அதனை பின்பற்றவேண்டாம். அதை விடுத்து பிற கருத்தை போலி என்று சொல்லும் போது, பிறருக்கு வருத்தம் ஏற்பட்டு அவர்களும் நம்மை பதிலுக்கு போலி என்று சொல்வார்கள். இதனால் வீண் சண்டைகள் தானே வளரும்.

  மாணிக்கவாசகர் சொன்ன திருவாசகப் பாடல்களில் சில பாடல்களுக்கு சுவாமி சித்பவானந்தர் உடன்படவில்லை. அதே போல திருமங்கை ஆழ்வார் எழுதிய இந்த கருத்துக்களும் நாம் ஏற்கக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன்.

  பிறரை பொய் என்றால் நாமும் பொய்தான் என்று அவர்கள் கூறுவார்கள்.

  பிறரை குறை கூறுவோர் வாதிகளே தவிர ஞானிகள் அல்ல. ஞானி பிறர் குற்றம் காணான்.

 21. முழு முதற்கடவுள் யார் என்று என்னுடைய நண்பர் ஒருவர் உள்பெட்டியில் வந்து கேள்வி கேட்டுள்ளார்.

  இந்தக் கேள்விக்கு அவருக்கு நீண்ட பதில் அளிக்கவேண்டும் அப்போதுதான் நமக்கு சரிப்பட்டு வரும் என்று தோன்றுகிறது.

  கடவுள் சக்தி என்பது எங்கும் நிறைந்துள்ளது. அது இல்லாத இடமே இல்லை.கடவுள் பூரணமானவர். கடவுளில் முதல் கடவுள், இரண்டாம் கடவுள், மூன்றாம் கடவுள் என்றெல்லாம் கிடையாது. எண்ணிக்கை என்பதே இந்த விஷயத்தில் கிடையாது.

  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கும் இடத்தில் தான் ஒன்று, இரண்டு என்று எண்ண முடியும்.ஒரே சக்தி தான் பல்வேறு வடிவங்களில் காட்சி அளிக்கிறது.

  நம் மனித அறிவைக் கொண்டு இதற்கு முழு விளக்கம் அளிப்பது சிரமம். இருந்தபோதும் முயல்வோமே ?

  பனிக்கட்டி திட நிலையில் (SOLID STATE ) உள்ளது. அதுவே உருகிய பின்னர் திரவ நிலையில் தண்ணீர் ஆகிறது. அதே தண்ணீரும் மேலும் காய்ச்சப்படும் போது , நீராவி ஆகி , வாயு நிலையை அடைகிறது. எனவே பனிக்கட்டி, நீர், நீராவி என்பவை ஒரே பொருளின் பல்வேறு தோற்றங்களே.

  மீண்டும் குளிரவைத்தால், நீராவி, தண்ணீ ராகிவிடும். தண்ணீர் மேலும் குளிரவைக்கப்படும் போது , பழைய படி பனிக்கட்டியாக மாறிவிடும்.

  இதே போலத்தான் கடவுள் வடிவங்கள் பல கோடி. நமக்கு தேவையான எந்த வடிவத்தையும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். கடவுள் வடிவங்களில் கால் கடவுள், அரைக்கடவுள், முக்கால் கடவுள் , முழு கடவுள், ஒன்றே கால் கடவுள், ஒன்றரை கடவுள், என்றெல்லாம் சொல்லமுடியாது. ஏனெனில் கடவுள் என்றாலே பூரணம், எங்கும் நிறைந்தவர் . இந்த உலகில் நாம் காணும் பஞ்ச பூதங்களும் கடவுளின் இருப்பே. அவரே மரம், செடி, கோடி, விலங்குகள், மனிதன், பறவைகள், தண்ணீர், நெருப்பு, காற்று , ஆகாயம், மண் என்று எல்லாமாக இருக்கிறார்.

  பிள்ளையார், கணபதி, விநாயகர் , முருகன், சுப்பிரமணியன் , வள்ளிமணாளன், கந்தன், சிவகுருநாதன், சிவன், தட்சிணாமூர்த்தி, நடராஜர், மகாவிஷ்ணு, அம்மன், துர்க்கை, லட்சுமி, காளி, அங்காள பரமேஸ்வரி என்று எத்தனை எத்தனை பெயர்களிலும் எத்தனை எத்தனை வடிவங்களிலும் நாம் அழைத்தாலும் , இவை எல்லாமே ஒரே சக்தியின் பல்வேறு தோற்றங்களே ஆகும்.
  .
  நமக்கு வரும் அடுத்த கேள்வி , இத்தனை வடிவங்களும், இத்தனை பெயர்களும் தேவையா ?

  சிந்திப்போம். மனிதனுக்காக வந்தவையே இந்த தெய்வ வடிவங்கள். நாம் வீட்டில் கைலியை கட்டிக்கொண்டு இருப்போம். வெளியே கடைத்தெருவுக்கு போகும் போது, வேட்டி சட்டையுடன் செல்கிறோம். அலுவலகம் செல்லும் போது பாண்ட் ஷர்ட் மற்றும் நீதிமன்றம் செல்லும் போது கோட்டுடன் செல்கிறோம். ஒரு தனிமனிதனாகிய நமக்கே இவ்வளவு வடிவங்கள் தேவைப்படுகின்றன. நமக்கு எத்தனை பெயர்கள் உள்ளன.?

  குழந்தைகள் நம்மை அப்பா என்கின்றனர். . பேரன்பேத்திகள் நம்மை தாத்தா என்கின்றனர்
  நம் அண்ணன் நம்மை தம்பி என்று கூப்பிடுகிறார்.
  நம் தம்பி நம்மை அண்ணா என்று அழைக்கிறார்.
  ஒரு தனி மனிதனான நமக்கே இவ்வளவு பெயர்கள் இந்த சமுதாயத்தில் உள்ளன அல்லவா ?

  இதே போலத்தான் கடவுள் வடிவங்கள் வித்தியாசப்படும் போது , பெயர்களும் வித்தியாசப்படும். எனவே தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களும் நமக்கு தேவைப்படுகின்றன.

  தடைகள் அகல பிள்ளையார் வடிவத்தில் கடவுளை நினைக்கிறோம். போரில் வெல்ல முருகன், காளி , துர்க்கை, பத்ரகாளி , ஆகிய வடிவங்களில் அதே கடவுளை நினைக்கிறோம்..

  பணவசதி வேண்டி அதே கடவுளை மகாலெட்சுமி என்ற வடிவத்தில் நினைக்கிறோம்.

  கல்வி அறிவு பெறவேண்டி , அதே கடவுளை சரஸ்வதி என்ற பெயரில் வணங்குகிறோம்.

  நல்ல ஒழுக்கம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே கடவுளை புருஷோத்தமன் இராமன் என்ற பெயரில் வணங்குகிறோம்.

  ஆன்மீக ஞானம் பெறவேண்டி , அதே கடவுளை தட்சிணாமூர்த்தி, கிருஷ்ண பரமாத்மா என்ற வடிவங்களில் நினைத்து வணங்குகிறோம்.

  பெயர்களும் வடிவங்களும் வித்தியாசமானவை என்ற போதும், இவை அனைத்தும் ஒரே சக்தியின் பல்வேறு வடிவங்களும், பல்வேறு பெயர்களும் ஆகும். இந்த பெயர்கள் மற்றும் வடிவங்களில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது.

  உருவம் இல்லாத வழிபாடு என்பது மனித இனத்துக்கு உகந்தது அல்ல. மனம் ஒருநிலைபடவும், தியானத்துக்கும் நிச்சயம் ஒரு உருவம், அல்லது வடிவம் வேண்டும்.

  உருவமே இல்லாத தியானம் என்பது உயர்நிலை யோகிகளுக்கே வாய்க்கும். நாம் உயர்நிலை யோகிகள் அல்ல. உலகில் கோடியில் ஒருவரே உயர்நிலை யோகியாகி அமரவாழ்வு எய்துகிறார்கள்.

  காண்பது எல்லாமே சமம் என்ற உணர்வுடன் வாழ்ந்தால் , நமது வாழ்வு மேலும் மேலும் உயரும்.

  ஒன்றுதான் பலவடிவங்களில் உள்ளது என்பதை அறிவியலும் அதாவது சயின்சிலும் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதாவது எதிர் மின்சக்தி கொண்ட எலெக்ட்ரானை நேர் மின்சக்தி கொண்ட பாசிட்ரானாக மாற்றமுடியும் என்பதை சோதனை சாலையில் நிரூபித்து விட்டனர். அடிப்படை என்னவெனில் ஒன்றை வேறு ஒன்றாக மாற்றமுடியும் என்பது தான். எந்த ஒரு பொருளின் அணுக்களிலும் உள்ள எலெக்ட்ரான் மற்றும் புரோட்டான்களின் எண்ணிக்கையை மாற்றி அமைப்பதன் மூலம் அதனை வேறு ஒரு பொருளாக மாற்ற முடிகிறது.

  இந்த உண்மையை உணர்ந்து வாழ்வில் அமைதி பெறுவோம்.

  ஓம் ஸ்ரீ சத்குரு சைவசித்தாந்த நந்திநாத கைலாச பரம்பரை சிவாய சுப்ரமுனிய சுவாமி துணை.

  நன்றாக குருவாழ்க குருவே துணை .

  வையகம் வளமுடன் வாழ்க .

 22. //ஆகமமும் போலிகளே என்று முடித்துள்ளீர்கள். ஏனிந்த தவறான கருத்து. பிறரை போலி என்று சொல்வது நமக்கு எந்த விதத்தில் உபயோகமானது ?

  சாக்கியமோ, சமணமோ, சங்கரரின் ஆகமமோ எதுவமே பொய்யல்ல.//

  அப்படி நான் முடிக்கவில்லை. அப்படி முடித்தார் திருமழிசையாழ்வார் என்று சொன்னேன். திரும்பவும் போய்ப்படித்துக்கொள்க.

  நான் எழுதியது எதுவுமே என் தனிநபர் வாழ்க்கைக் கருத்துக்களோ கொள்கைகளே இல்லவே இல்லை. எப்படி மக்களின் சிலர் தங்கள் மதக்கொள்கைகளை (இந்துக்களில்) எடுத்துக்கொள்கிறார்கள் (இராமனுஜரின் வைணவர்கள்; மெயவழிசசாலையர், அய்யா வைகுண்டர் தொண்டர்கள் போன்று) என்பதுதான் என்னால் சொல்லப்பட்டது. என்வே நான் எல்லாவற்றையும் பொய்கள், போலிகள் என்று சொன்னதாகப் பறை சாற்றக்கூடாது. All that I wrote was objective observations. Nothing subjective. Please understand.

  இருதடவை திருமங்கையாழ்வார் என்றெழுதியிருக்கிறீர்கள். சொன்னவர் திருமழிசையாழ்வார். ஆழ்வார் சொன்னால் சரியாகுமா என்று கேட்கிறீர்கள். ஆழ்வார்கள் பலர் அதே கருத்தைக்கொண்டிருக்கிறார்கள். ஆழ்வார் அனைவருக்கும் திருமாலே ஒரே தெய்வம் என்றறிக.

  உண்மை ஒன்றே அதைப் பலர் பலவித வடிவங்களில் பார்க்கிறார்கள் என்று பல ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள், அதை பிராக்ஷித் சொன்னது போல அல்லது விரும்புவது போல, இந்துமதப்பிரிவுகளுக்குள் மட்டுமே வைத்துப்பார்க்கிறீர்கள். உண்மை ஒன்றே; பார்வைகள் வேறென்றால் கிருத்துவர்கள் நம்பிக்கையையும் இசுலாமியர் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

  ப்ராக்ஷித் போன்றவர்களுக்கு அவை உண்மைகள் அல்ல. போலிகள்; பித்தலாட்டங்கள். உண்மைகள் ஒன்றே; அதை அணுகும் முறைகள் வேறுபடலாமெனபது இந்துப்பிரிவுகளுக்கு மட்டும்தான் என்கிறார்.

  ஒரு இந்துப்பிரிவுக்காரர் தம் குரு சொன்னதை நம்பி, தம் குரு காட்டிய தெய்வத்தை ஏற்கிறார். இன்னொரு பிரிவுக்காரர் இவ்வாறே. இவர்களுக்குள் இருப்பது வழிபாட்டு வேறுபாடேயொழிய பிணக்குகள் சண்டைகள் என்று பொருள் கொள்வது அறியாமை. ஆதிகாலத்தில், அப்படி இருந்திருக்கலாம். இன்று எவரும் அப்படிச்செய்வதில்லை.

  மற்றவர் தம் வழிபாட்டைக்கொள்ளலாகாது என்று சொல்லிக்கொண்டு அவர் உங்களது கொள்கையையே ஏற்கவேண்டுமென்பதை, என்பதை குறுக்குசால் ஓட்டி இட்டுக்கட்டுகிறீர்கள் இது அராஜகம். இந்து மதம் என்ற ஆலமரத்தின் வேரையே வெட்டப்பார்க்கிறீர்கள். இம்மதத்தில் எவரும் எத்தெய்வத்தையும் எப்படியும் வழிபடலாம். அத் தெய்வத்தை மட்டுமே உணமையென்று நம்பி வழிபடுகிறார்கள். அப்படியென்றால் பிறதெய்வங்கள் அவர்களுக்கு, பரதேவதைகள். அப்படி அவர்கள் நம்ப இம்மதத்தில் தாராளம் உண்டு. எவர்கையையும் எவரும் வெட்டமாட்டார்கள்.

  இதுதான் இந்துமதம்.

 23. //தடைகள் அகல பிள்ளையார் வடிவத்தில் கடவுளை நினைக்கிறோம். போரில் வெல்ல முருகன், காளி , துர்க்கை, பத்ரகாளி , ஆகிய வடிவங்களில் அதே கடவுளை நினைக்கிறோம்..

  பணவசதி வேண்டி அதே கடவுளை மகாலெட்சுமி என்ற வடிவத்தில் நினைக்கிறோம்.

  கல்வி அறிவு பெறவேண்டி , அதே கடவுளை சரஸ்வதி என்ற பெயரில் வணங்குகிறோம்.

  நல்ல ஒழுக்கம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே கடவுளை புருஷோத்தமன் இராமன் என்ற பெயரில் வணங்குகிறோம்.

  ஆன்மீக ஞானம் பெறவேண்டி , அதே கடவுளை தட்சிணாமூர்த்தி, கிருஷ்ண பரமாத்மா என்ற வடிவங்களில் நினைத்து வணங்குகிறோம்.

  பெயர்களும் வடிவங்களும் வித்தியாசமானவை என்ற போதும், இவை அனைத்தும் ஒரே சக்தியின் பல்வேறு வடிவங்களும், பல்வேறு பெயர்களும் ஆகும். இந்த பெயர்கள் மற்றும் வடிவங்களில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது.//

  இது உங்கள் வழிபாட்டுக்கொள்கை. தயவு செய்து புரிஞ்சுக்கோங்க சார்!

  ஆழ்வார் சொன்னதால் அது சரியான கருத்தாகுமா என்று கேட்கும் உங்களைப்பார்த்து அவர்கள், நீங்கள் சொன்னால் சரியாகுமா என்று திருப்பிக்கேட்டால் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்/ நீங்கள் பல கடவுளரை பல காரணங்களுக்காக, (அதாவது பிள்ளையாரைத்தடைகளைக்கடக்க போன்று) வழிபடுகிறோமென்னும்போது, அவர்கள், அனைத்துக்குமே எங்களுக்கு ஒரே கடவுள் போதுமென்றால், என்ன பதில்? உடனே இசுலாமை இங்கிழுக்கிறேன் என்று பாதையைத்திருப்ப வேண்டாம். ஒரு கடவுள் போதுமென்றவனுக்கு இக்கடவுள் உயர்வு அக்கடவுள் தாழ்வு என்ற கேள்வியே இல்லையே?

  பலபல ஞானிகள் உங்கள் கருத்தைக்கொண்டிருக்கிறார்கள் எனப்தால் மற்றவர்கள் அவரவர் வழிபாட்டுக்கொள்கையை விட்டுவிட்டு உங்கள் கருத்தை ஏற்கவேண்டுமென்ற நினைப்புதான் நான் சொல்லும் அராஜகம். இந்துமதத்துக்கு எதிரானது. இசுலாமில் சரி. இங்கு முற்றிலும் தவறு.

 24. நமஸ்காரம் ஶ்ரீ மயூரகிரி ஶர்மா அவர்களே,
  நான் பண்டைய சேர தேஶமான கொங்கதேஶம் என்றழைக்கப்படும் கோவை பகுதியின் வேதாகம நெறியினைக்குறித்து ஆய்வு செய்து வருகிறன். kongululagurus.blogspot.in
  கொங்கின் பிரதான மடமான பாசூர் மடத்தின் கிளை மடமான யாழ்பாண மடத்தைப்பற்றி குலகுரு சொல்லியும், ஆரியசக்கரவர்த்திகள் எமது பகுதியிலிருந்து சென்றவர்களென்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. யாழ் பஞ்சாங்கம் எழுதிய வம்ஶத்தினர் உள்ளனரா? ஆரியச்சக்கரவர்த்திகள் என்னவாயினர்? மேலும் எங்கள் பகுதி பாசையோடு யாழ்தமிழ் பொருந்தி வருவதைக்காண முடிகிறது. குறிப்பாக வளவு என்று வாழ்விடப்பகுதியினைக்குறிப்பதும், வரோணும் என ஓணும் போட்டு அழைக்குறதும். பேசுதல்னா திட்டுதல்ங்கற பொருளும், முட்டாளை மோட்டுப்பயல் ங்கறதும்..வாங்கோ போங்கோங்கறதும்…இன்னும் பல….தொடர்புக்கு pondheepankar@gmail.com

 25. https://pasurmatam.blogspot.in/?m=1

  “முதலாம் பராந்தக சோழனால் (910-950), சிங்கையில் (நல்லூர்) அமர்த்தப்பட்ட சோழங்க (கூழங்கை யென்பது திரிபு) கூழங்கை சக்கிரவர்த்திகள் மும்டிச்சோழ மண்டலம் கட்டமைப்பு குடியேற்றம் செய்ய இலங்கைக்கு இம்மரபில் வந்த சந்திரசேகர தீக்ஷதர் குமாரர் ராமலிங்க தீக்ஷதர் குலகுருவாக சென்றதை அறிகிறோம். அவர்மகனே “கைலாயமாலை” பாடச்செய்த கங்காதர தீக்ஷதர். சீடர்களான முதன்மை வன்னிமையான யாழ் வன்னிமையை (லங்கை கூற்றப்பிரிவுகளின் முதன்மைப் பிரிவான யாழ்பாண பிரிவு) தோற்றுவித்த காலத்தே, தீக்ஷதர் குருவாயெழுதிக் கணித்து உண்டானதுதான் யாழ்பாண பஞ்சாங்கம். தற்பொழுதும் பாசூரை அடுத்துள்ள கூழங்கையின் பூர்வீக கிராமமான சோழங்காபாளையம் (கல்வெட்டில் சோழகங்கபாளையம்) மேற்கூறியதுக்குச் சாட்சி. மேலும் கீழைக்கலிங்க கங்கர் (Odisha) கிளை மரபே (சோடகங்கர்). குடி வைக்கப்பட்ட வன்னிப மகமைகளின் 7 வெவ்வேறு குல வேளாளரில் கூழங்கையின் “கொங்கு வேளாளரே” (கொங்கைவர்) முதன்மையான வன்னிபமென்கிறது கன்னன்குடா சுவடி.  

  https://noolaham.net/project/45/4430/4430.html
  (பக்கம்:56)

  சோழர் தலைநகரான பொலநறுவையில் ரன்கொத விகாரையில் காணப்பெறும் 13th நூற்றாண்டு கல்வெட்டில் சோழர் புலியிலச்சினையுடன் “குவலாலபுர பரமேஶ்வரன், கங்கா குலோத்துங்கன், காவேரி வல்லபன், நந்தி கிரிஞ்சதன்” யென்று தெள்ளத்தெளிவாக சேர கங்கர் (கொங்கர்) சாசனமுள்ளது.

  இதன்மூலமும், சிருங்கேரி சங்கரமடமே கதிர்காமம் முதலான கோயில்களுக்கு துருஸ்து செய்வதாலும், இலங்கைத் தமிழர்கள் பாரம்பரியமாக ஸ்மார்த்த பாசுபத சைவர்கள் என்பதனை அறிகிறோம்.
  கூழங்கை சக்கிரவர்த்திகள் மரபு
  https://www.friendstamilchat.com/forum/index.php?topic=5343.5;wap2
  https://www.yarlmann.lk/viewsingle.php?id=949
  https://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty

  தங்கள் கங்காகுலத்தினை அண்ணமார் சுவாமிகள் ஆரியகுல வம்சமென்பதும், சோழரை சூரியகுல வம்சமென்பதும் அக்கதையிலிருந்து அகிடைக்கும் தெளிவு. 

  கூழங்கையினாட்சியையும், அவர்தம் குலகுரு கவிராஜ குரும்பரம்பரையின் அனுகிரகத்தையும் மறைத்ததன்மூலமே Portuguese Jesuits 1620தில் தங்கள் லங்கை அழிப்பைத் தொடங்கியின்று வரை நடத்தி வருகின்றனர். 

  “திரிகோணமலை கோணேசர் கல்வெட்டென்ற” நூலாசிரியர் “கவிராஜ வரோதயர்” அதாவது  கவிராஜகுரு வரத்திலுண்டானவரென்று அடைமொழிப்பெயருடையவராதலால் 
   ராமலிங்க தீக்ஷதரது பூர்வீகமான திருவானைக்காவல் – உறையூரென்பது திண்ணம். கீழுள்ள website பாக்கவும்

  https://ta.wikipedia.org/s/x4e

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *