தலைமுறை [சிறுகதை]

”வர்ற மாசி மாசம், எட்டாந்தேதி நம்ம அருள்மிகு கதலி சீனிவாச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கமிட்டி கூட்டம் நடக்குதுங்க, எல்லாரும் வந்து கலந்துக்கங்க” டமடமடமடம…

கதலி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், வைகை நதிக்கரை ஓரமாக இருக்கும் சின்ன ஜம்புலிபுத்தூரில் இருக்கும் கோவில். ஜம்புலிபுத்தூரில் இருப்பது கதலி நரசிம்மர், இவர் கதலி ஸ்ரீநிவாசர். விஸ்வநாத நாயக்கன் காலத்தில் பிரிக்கப்பட்ட ஜமீன் என்பார்கள் இல்லை இது சொக்கநாதன் காலத்தில் பிரிக்கப்பட்டது என்பார்கள். ஆனால் இன்று பெயருக்கு ஜமீன்தார் மட்டுமே இருக்கின்றார்.

“வழக்கம் போல ஜமீன்தார் லோகன்துரைதான் திருவிழா கமிட்டி தலைவர், பெருமாள் கணக்குவழக்கு பாத்துப்பாரு, மந்தைய கவுண்டர், குருணை வெள்ளை, ஆண்டவர் மூணு பேரும் நிதி வசூல்”

“எல்லா ஜாதிக்கட்டு வரியும் வந்திருச்சி”

“அம்பி ஐயங்கார் கிட்ட மறுபடியும் நினைவு படுத்துங்க, அவர் பாட்டுக்கு கொடியேத்தம் அன்னிக்கி கடைய திறந்து வச்சிட்டு உக்காந்துரப் போறாரு”

“கொடிக்கயிறு வாங்க வேண்டாமா”

“அதுக்குதான் நாளைக்கு மந்திரி வீட்டுக்கு போகனும்”

ஹாஜி கமால் ராவுத்தரின் வீடு. ஊருக்குள் மந்திரி வீடு என்ற பெயரே பரிச்சியம். நாயக்கர்கள் காலத்தில் ஜமீன்தார்கள் ஆட்சியிலிருந்த போது, இவர்கள் குடும்பத்தினர்தான் மந்திரியாக பணிபுரிந்து வந்தனர். அந்த மதிப்பு இன்றும் உண்டு.

லோகன்துரை, பெருமாள், மந்தைய கவுண்டர் அனைவரும் உள்ளே சென்றனர். “வாங்க வாங்க” என்று வரவேற்றார் கமால் ராவுத்தர். மூட்டிய வெள்ளை வேட்டி, கை வைத்த பனியனுடன் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார்.

“எழுந்து வந்து வரவேற்க முடியல, மன்னிக்கனும்”

“எப்படி இருக்கீங்க ராவுத்தரே” என்று கேட்டார் லோகன்துரை.

“இருக்கேன், அல்லா கருணையால நல்லா இருக்கேன். நடக்கத்தான் முடியல. பள்ளிக்கு கூட போக முடியல”

“வயசாச்சு இல்ல, எங்க அப்பாவ விட நீங்க ரெண்டு வயசு கம்மி, எனக்கே இப்ப அம்பதாகி போச்சு” என்றார் லோகன்துரை.

“நம்ம கோவில் திருவிழான்னு கேள்விப் பட்டேன்” என்றார் ராவுத்தர்

உள்ளேயிருந்து அவரது மகள் ஐரீன் கையில் மோர் குவளைகளுடன் வந்தார். அவர்கள் வழக்கப்படி தலையை சேலையால் மறைத்து கொண்டிருந்தார்.

“ஆமாங்க, அடுத்த வாரம் கோடியேத்தம், கொடிக்கயிறு வழக்கமா நம்ம வீட்லதான் வாங்கி தர்றது வழக்கம், அதோடு நீங்கதான வந்து குடில் கட்டைய தொட்டு தரணும், அதான் முறையா சொல்லிட்டு போலாம்னு வந்தோம்”

“ஆமா, கயிறு ஏற்கனவே தயாரா இருக்கு, அத எடுத்துட்டு வாம்மா”

“ஐரின் இங்கதான் இருக்கா” என்றார் லோகன்துரை

“மாப்பிள்ள மெளத்தானதுக்கு பின்னா இவ இங்கதான் இருக்கா”

ஐரின் உள்ளேயிருந்து ஒரு பெரிய தட்டில், புதுக்கயிறு, பெரிய துணி கொடி மரத்தில் சுற்ற, ஒரு நூறு ரூபாய் கட்டு என்று அனைத்தையும் கொண்டு வந்தார்.

“நீயே உன் கையால கொடம்மா” என்றார் ராவுத்தர்.

லோகன்துரை எழுந்து நின்று வாங்கிக் கொண்டு அதை பெருமாளிடம் தந்தார்.

“அப்ப வர்றோம், தேரோட்டம் அன்னிக்கி வழக்கம போல மேள தாளத்தோட வந்து அழைச்சிட்டு போறோம். இப்ப கிளம்பறோம்” என்றார் மந்தைய கவுண்டர்.

“என்னால எங்க நடக்க முடியும். ஜமால் ஜமாலத்தான் அனுப்பனும், ஆனா” என்று நிறுத்தினார்.

“அதுவும் சரிதான், அடுத்த தலைமுறைக்கு பட்டம் கட்ட வேண்டியதுதான” என்று கூறினார் பெருமாள்

வெளியே வந்த போது ஜமால் உள்ளே நுழைந்தான். முப்பது வயதிருக்கலாம். பைஜாமா ஜிப்பா தலையில் கருப்பு துருக்கி குல்லா, அவன் பின்னால் அவரது பர்தா அணிந்த மனைவி. எங்கோ வெளியில் சென்றுவிட்டு வருகின்றார்கள். அந்நியர்களை கண்டதும் அவன் மனைவி வேகமாக உள்ளே சென்று மறைந்தாள். அவனும் அவன் பையனும் வராண்டாவில் நின்று கொண்டிருந்தனர்.

“நல்ல வேளை தம்பியே வந்துட்டாரு” என்றார் குருணை வெள்ளை. குருணை வெள்ளை தன் ஜிப்பா பையிலிருந்த பொட்டணத்தை பிரித்து ஒரு கற்கண்டை எடுத்து அந்த குட்டி பையனிடம் தந்தார். அவன் தயக்கத்துடன் வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.

வராண்டாவில் நின்றபடியே அனைத்தையும் சொன்னார்கள்

“அத்தா ஏற்கனவே சொன்னாரு, ஆனா பாருங்க நான் எப்படி இந்து கோவிலுக்கு எல்லாம் வர முடியும் சொல்லுங்க. கட்சியில் வேற இருக்கேன். கட்சியில கேள்வி கேட்டா ஒன்னும் சொல்ல முடியாது”

“இல்ல தம்பி, நியாயமா உங்க தாத்தா தான் இத பண்ணனும், அவரால வர முடியல, உங்க அத்தாவும் இல்ல” என்றார் மந்தையக்கவுண்டர்.

“அதுக்கு நா என்ன பண்ண முடியும், என்னால வர முடியாது. ஊர் ஊரா போய் மத்தவங்கள பண்ணக்கூடாதுன்னு சொல்றத நானே செஞ்சா எப்படி ”

“தம்பி, நீங்க மந்திரி பரம்பரை, நான் ஜமீன் பரம்பரை, இப்ப அதுக்கு எந்த மதிப்பும் இல்ல. ஏதோ ஒரு காலத்துல நீங்க இஸ்லாம் பக்கம் போய்ட்டீங்க. இருந்தும் மந்திரிங்கற முறைல கோவில்ல உங்களுக்கான மரியாதை எப்பவும் உண்டு. ராஜா ஆட்சியை நடத்துறவர்ன்னு தேர் வடத்தையும், ஆட்சி அலைபாயாம பாத்துக்குற மந்திரிக்கு தேரை வழிநடத்துர குடில் கட்டையையும் எடுத்து தர அனுமதி தந்தாங்க மக்கள், அந்த பாக்கியம் இன்னமும் நமக்கு இருக்குன்னு பெருமை பட்டுக்கனும். இது கூட இன்னும் எத்தன வருஷமோ?” என்றார் லோகன்துரை.

“பத்து வருஷம் முன்னாடி நடந்த திருவிழாவுல கூட உங்க தாத்தா தான் குடில் கட்டைய தொட்டு கொடுத்தாரு. அப்ப உங்க அப்பா இருந்தாரு. அவருக்கு பட்டமும் கட்டினோம்.” என்றார் பெருமாள்.

“அது அப்பங்க, இப்ப காலமெல்லாம் மாறிப் போச்சு, இப்ப எங்களுக்கு எது தப்பு சரின்னு தெரிஞ்சி போச்சு. நீங்க போய்ட்டு வாங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்,

ஏதும் பதில் பேசாமல் நடந்தார்கள்.

அன்றிரவு கோவிலில் கமிட்டி கூட்டம். லோகன்துரையின் மகன் ஷ்யாமும் வந்திருந்தான்.

“என்னப்பா அந்தாள போய் ஏன் கூப்பிட்டீங்க. அவர கூப்பட வேண்டாம்னு நான் சொன்னேல்ல, நம்ம கோவில் திருவிழாவுக்கு அவங்க ஆளுங்க எதுக்கு. வெறும் மாலைய மட்டும் வாங்கிட்டு போகவா? பிராசாதம் வாங்கிப்பாங்களா, குங்குமம் வச்சுப்பாங்களா? துளசி வாங்கிப்பாங்களா?

“டேய், ராவுத்தர் அப்பா எல்லாம் வாங்கிட்டிருந்தவர்தான், நானே சின்ன பிள்ளைல பாத்திருக்கேன். ராவுத்தரும் அப்படி இருந்தவர்தான், பின்னாடி அவங்க ஆளுங்க கொஞ்சம் சங்கடப்படறாங்கன்னு ஜாடையா சொன்னாப்ல, அதனால நாமளும் அத மதிச்சி ஒன்னும் தர்றதில்ல ”

“பேசாம தேனி கலெக்ட்ர கூப்டு அவரை வைச்சு நடத்துவோம்”

பங்குனி மாசம் பத்தாம் தேதி. தேர் நன்றாக இலுப்பெண்ணை பூசப்பட்டு பளபளப்பாக இருந்தது. சக்கரங்களுக்கு அருகில் கட்டை போடுபவர்கள் தயாராக இருந்தனர். அவர்கள் இடுப்பில் கயிற்றை கட்டி அதை பிடித்தபடி அவர்கள் பின்னால் ஆட்கள் தயாராக இருந்தனர். கட்டை போடும் போது கொஞ்சம் கவனம் தவறினாலும் சக்கரம் மேலே ஏறிவிடும், அதனால் பின்னால் இருப்பவர்கள் படு உஷாராக இருக்க வேண்டும், பெரும்பாலும் மாமன் மச்சானாக இருப்பார்கள். குடில் கட்டையை மாவட்ட ஆட்சியர் எடுத்து தர கட்டை போடுபவர்களில் மூத்தவர் பெற்று கொண்டார்.

கோவில் நிர்வாக அதிகாரி கொடியசைக்க, லோகன்துரை முதலில் தேர் வடத்தை தொட்டு எடுத்தார். கொடியசைவு கண்டதும், தேர் தட்டிலிருந்த மேளக்காரர்கள் கெட்டி மேளம் கொட்ட, கொம்பு, சங்கு, சேகண்டி எல்லாம் முழங்க, மக்கள் அனைவரும் கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுக்க ஆரம்பித்தனர்.

தேரின் பின் சக்கரத்தின் அடியில் நெம்புகட்டையை போட்டு அதற்கான ஆட்கள் அதன் மீது ஏறி நின்று கையிலிருந்த மூங்கிலை தரையில் ஊன்றி கொண்டு மிதித்தனர்.

தேர் அசைந்தது. கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழும்பியது. தேர் குடங்குகள் க்ரீச் க்ரீச் சத்தம் எழுப்பியபடி பெரிதாக ஆடின. சின்ன சின்ன மரத்துணுக்குகள் சிதறியது.

இடத்தை விட்டு ஒரு அடி முன்னேறியிருக்கும். ஏதோ மரம் முறிவது போன்ற பெரிய சத்தம் கேட்டது, தேர் பயங்கரமாக குலுங்கியது. கட்டை போடுபவர்கள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் கட்டைகளை போட்டு தேரை நிறுத்தினார்கள். மேள சத்தம் மாறி முழங்க, வடமிழுப்பது நின்றது

உள் அச்சு முறிந்திருந்தது.

“இப்படி ஆகிப் போச்சேப்பா”

“இறங்கு பொழுதுல கொடியேத்துனா இப்படித்தான் நடக்கும்”

“அய்யருங்க சரியில்லப்பா”

உடனடியாக கோவிலில் இருந்த உபரி அச்சை எடுத்து வர ஆளனுப்பினார்கள். தச்சர்கள் அச்சை சரி செய்ய ஆரம்பித்தார்கள்.

“க்ரேனை வச்சி தேரை உசத்துறதுதான் ஒரே வழி”

“இல்ல பெரிய ஜாக்கி வச்சி தூக்கிடுவோம். ”

“அத்தாம் பெரிய கிரேனுக்கு ஜாக்கிக்கு எங்கிட்டு போக”

“திருச்சி பெல்லுல இருக்கும், அங்க என் மச்சான் இருக்கான் நான் பேசுறேன்”

இரவு ஒன்றும் நடக்கவில்லை.

அதிகாலை ஐந்து மணி, ஒரு கார் தேரடிக்கு வந்தது, தேருக்கு எவ்வளவு அருகில் வர முடியுமோ அந்தளவிற்கு வந்து நின்றது

ராவுத்தர், சுத்தமான வெள்ளை வேட்டி சட்டை, தலையில் சல்லடை குல்லா

காரில் எப்படி ஏறினாரோ தெரியவில்லை. பின் சீட்டில் மகள். அவரது வண்டிக்கு பின்னால் ஒரு ட்ராக்டர், கற்கள், மரக்கட்டைகள், மணல் மூட்டைகள், வேலையாட்கள்.

காரிலிருந்து கஷ்டப்பட்டு இறங்கி டிராக்டரிலிருந்து இறக்கப்பட்ட ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவர் வந்த விபரம் அறிந்த லோகன்துரை, பெருமாள், கவுண்டர் என்று அனைவரும் கூடிவிட்டனர்.

“நேத்தே விஷயம் தெரியும், நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ணியிருப்பீங்கன்னு நினச்சேன், சரி ஒன்னும் முடியலன்னதும்தான் வந்தேன்.” என்றார் ராவுத்தர்

“ஏற்பாடு நடந்துட்டு இருக்கு, ஆனா நேரம்தான் அதிகமாகுது என்ன செய்ய” என்றார் லோகன்துரை.

“நான் சரி பண்ணி தர்றேன், பண்ணலாமா?”

“என்ன அனுமதி கேட்டுட்டு, நம்ம ஊர் தேரு, தாராளமா செய்யுங்க” என்றார் லோகன்துரை.

“வேற யாரும் வந்து என்ன தொந்தரவு செய்யக்கூடாது, யோசன சொல்லக் கூடாது. எல்லாரையும் வெளிய அனுப்புங்க” என்றார்.

“இவருக்கு என்ன தெரியும், நான் கட்சியில பேசி எம்.பி மூலமா ஜாக்கி, இஞ்ஞினியர் எல்லாரையும் வரவழைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன், இவரு என்ன” என்று குதிதான் ஷ்யாம். லோகன்துரை அவனை அடக்கிவிட்டு, “நீங்க பண்ணுங்க ராவுத்தரே, நான் ஏற்பாடு பண்றேன், ஈஓ கிட்டயும் நான் பேசிக்கிறேன்” என்றார்.

கூட்டம் விரட்டப்பட்டு, சுற்றி கயிறு கட்டி போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேரின் மீது ஒரே ஒரு குட்டி அர்ச்சகர் தவிர்த்து அனைவரும் இறக்கப்பட்டனர்.

முதலில் தேரின் இரண்டு அச்சுகளுக்கு அடியில் கற்கள் வேகமாக அடுக்கப்பட்டன, மணல் மூட்டைகளை பக்கவாட்டில் அடுக்கினர். அச்சிற்கும் கற்களுக்கும் இருந்த சின்ன சின்ன இடைவெளியில் பெரிய மர ஆப்புகளை அடித்து இறுக்கினார்கள். தேர் இப்போது கற்களின் மேல் நின்று கொண்டிருந்தது.

காலியாக இருந்த தேரடியில் கூட்டம் கூட ஆரம்பித்தது. வெயில் ஏறிக்கொண்டிருந்தது. அறநிலையத்துறை ஆட்கள் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். பெருமாள் சென்று காருக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.

”ராவுத்தரே ஏதாவது குடிக்கிறீங்களா?”

”வேண்டாம்யா, நோம்பு வச்சிருக்கேன். ”

”சரி, சரி, வருஷா வருஷா நாளுங்க மாறி மாறி வருதா, தெரியாம போச்சு.”

”அய்யா, சக்கரத்த கழட்ட வேண்டியதுதான் பாக்கி.”

உள் சக்கரங்களுக்கு அடியிலும், பக்கவாட்டில் ஒரு அரையடிக்கு பள்ளம் தோண்ட ஆணையிட்டார், தோண்ட தோண்ட மெதுவாக சக்கரம் விடுபட்டது. மெதுவாக கழட்டி பக்கவாட்டில் தோண்டிய பள்ளத்தில் இறக்கினார்கள். அங்கிருந்து நீளமாக ஓரு ஓடை போல பள்ளம் வெட்டி, சக்கரங்களை உருட்டி வெளியேற்றினார்கள். அச்சை மாட்டி, மீண்டும் அதே வழியில் சக்கரங்களை மாட்டினார்கள்.

தோண்டிய பள்ளத்தில் கற்களை கொட்டி இறுக்கினார்கள். சிமிண்ட் பாலையும் கரைத்து ஊற்றி, உள் சக்கரத்திற்கு அடியில் பெரிய பெரிய இரும்பு கம்பிகளை போட்டு, மேலே தட்டையான கட்டைகளை வைத்து இறுக்கி மண்ணின் நெகிழ்வில் சக்கரம் சிக்காமல், அதே சமயம் உருண்டு வெளியே வரவும் தோதாகச் செய்தார்கள்.
அங்கேயே இருந்து அனைத்தையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

மூன்று மணிக்கு தேர் தயாரானது,

கவுண்டரை அழைத்த ராவுத்தர், “வடக்கயிறு நீளத்த கொஞ்சம் கொறச்சிடுங்க, ரொம்ப பேரு இழுத்தா வேகம் அதிகமாகும், புது அச்சு வேற”

சற்று யோசித்த கவுண்டர், “வேண்டாம்யா, ஒவ்வொரு ஜாதிக்கும் வடக்கயிறுல பங்கிருக்கு, எங்க ஜாதிப் பங்க வெட்டிடாங்கன்னு கலாட்டா வரும், எதுக்கு. பாத்து சமாளிச்சிக்கலாம், கட்ட போடறவங்கள கொஞ்சம் பாத்துக்க சொல்றேன்”

“சரி, புது அச்சு. பாத்து சூதானமா நடத்துங்க”

“வந்தது வந்துட்டீங்க, நீங்களே இருந்து கட்டையை எடுத்து கொடுத்துடுங்க உங்க பையன் முடியாதுன்னு சொல்லிட்டாரு”

“தெரியும், என்னையும் போகக்கூடாதுன்னுதான் சொன்னான், அவனுங்களுக்கு இது புரியாது, விடுங்க”

அனைத்தும் மீண்டும் தயாரானது, அர்ச்சகர், மந்திரி ராவுத்தருக்கு பரிவட்டம் கட்டி மாலையிட்டார்.

கட்டையை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தனர், ராவுத்தர் தன் மகளிடம் “அம்மா அத தொட்டு எடுத்து அவங்க கிட்ட கொடு” என்றார்.

ஐரீன், அருகிலிருந்த பூக்களை எடுத்து அதன் மீது தூவிவிட்டு கட்டையை எடுத்து அருகிலிருந்த கட்டை போடுபவரிடம் தந்தார்.

கோவிந்தா கோஷத்துடன் தேர் புறப்பட்டது.

*******

ரெங்கசுப்ரமணி இணையத்தில் தொடர்ந்து  இலக்கிய விமரிசனங்களையும் புத்தகப் பார்வைகளையும் எழுதிவரும் தீவிர இலக்கிய வாசகர்.  அவரது வலைப்பதிவு கட்டுரைகளை இங்கே வாசிக்கலாம்.

20 Replies to “தலைமுறை [சிறுகதை]”

  1. ரெங்கா,

    இதுதான் முதல் முயற்சி என்று நினைக்கிறேன். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

    கதையின் கரு, பின்புலம் எல்லாம் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக பாரம்பரியமாக நடந்து வரும் பழக்கத்தை அருமையாக விவரித்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் மெருகேற்றல் மட்டுமே தேவை.

  2. கோவிந்த சுவாமிக்கு ஓர் இசுலாமியனின் உதவி தேவைப்படுகிறது என்பது கதை: அது ஒரு பாரம்பரியமாக இருக்கிறது என்று சொன்னாலும் இசுலாமியன் இல்லாமல் அவரால் நகரமுடியவில்லை. இக்கதை திருவரங்கத்து பீபி நாச்சியார் அல்லது துலக்க நாச்சியார் வரலாற்றை நினைவு படுத்துகிறது. இருகைகள் தட்டினால்தான் ஓசை. கதையில் இருகை ஓசை. துலக்க நாச்சியார் கதை ஒரு கையோசையாகவே (அப்படி ஓசை வருமென்றால்!) முடிந்தது. தமிழ் இசுலாமியர்கள் கண்டுகொள்ளவேயில்லை. கதையிலாவது இருக்கட்டும் என்று ரெங்க சுப்பிரமணி நினைத்துவிட்டார் போலும். ஆக, கதை அவரின் நிராசையின் வடிவம்.

  3. கதை அருமை.

    முயற்சி புரிகிறது.

    மாநகர் மதுரையிலே அம்மையின் திருமணத்தின் போது, ஒரு இஸ்லாமிய பெரியவர் தகப்பன் ஸ்தானத்திலிருந்து திருமண விழாவில் கலந்து கொள்ளும் மங்கையருக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் எல்லாம் வழங்குவதை கவனித்திருக்கிறேன்.

  4. இன்றும் இந்து ஆலயங்களுக்கு ஊருக்கு தொியாமல் காணிக்கை அா்ச்சனை செய்யும் இசுலாமியா்கள் நிறைய போ்கள் உள்ளாா்கள். குறிப்பாக தூத்துக்குடி குலசேகரன்பட்டனம் அருள் மிகு முத்தாரம்மன் ஆலயத்தில் குடும்பத்தோடு அம்மனை வழிபட்டுச்ன செல்லும் இசுலாமியா்களைக் காணலாம்.ஆனால் இன்று நசாத் தௌஹிக்கஜமாத் என்று பல அரேபிய தீவிரவாத குழுக்குள் தோன்றி பெரும் சா்ச்சைகளை ஏற்படுத்தி இந்திய முஸ்லீம்களை முற்றிலும் அரேபியா்கள் போல் மாற்ற முயன்று வருகின்றாா்கள்.முற்றிலும் அரேபியா்கள் போல் வாழ்வதுான் இசுலாம் என்கின்றனா். தா்கா வழிபாடு செய்பவா்கள் மத்தியில் தீவிரவாதம் இல்லை என்பது பொதுவான உண்மை.

  5. நீத்தாரைப் போற்றி வணங்குதல் இசுலாமிய கோட்பாடுகளுக்கு உடன்பாடானதல்ல என்றே அறியப் படுகின்றது.

  6. ஐயா !

    திரு.ஜெயமோகன் அவர்கள் “ஆனை டாக்டர்” என்னும் பெயரில் ஒரு புனைவினை எழுதியிருந்தார். அதில் வரும் அனைத்து நிகழ்வுகளும் உண்மையைப் போன்றே, என்னமோ இவர் நேரில் இருந்து அவதானித்து எழுதியது போலிருக்கும். அதில் ஒரு நிகழ்ச்சி ஒரு வெர்டனரி டாக்டர் செந்நாயுடன் பழகுவது என்று வரும். காட்டு யானையின் காலில் செருகிய பீர் பாட்டிலை வெளியேற்ற பல காட்டு யானைகளின் முன்னிலையில் சிகிச்சை, நடைபெறுவதாகவும் வரும். அவை நடைமுறையில் சாத்தியமில்லை என்று துறைவல்லுநர்கள் பின்பு விளக்கினார்கள்.

    அதுமாதிரி இந்தப் புனைவிலும் சில நடைமுறை லாஜிக் மீறல்கள் காணலாம். எனக்கு மரவேலைகள் செய்யும் பல ஸ்தபதிகளுடன் நட்புறவு உண்டு. அவர்கள் எங்கள் காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் கருடவாஹநம், குதிரை வாஹநம், ஶேஷவாஹநம் , த்வஜஸ்தம்பம் , திருமஞ்சன கேடயம், பிரபை, தோளுக்கினியான் , ஹோமத்திற்கு ஸ்ருக், தர்வீ, ஸ்ருவம், ஆசன பலகை என்று செய்து தருவார்கள். அவர்கள் சொன்னது – “ஒரு சிற்பியின் உச்சகட்ட திறமை என்பது தேர் கட்டும் பணிதான்” . பார்விதானம் செய்வது, உபபீடம் செய்வது, அதிஷ்டானம் செய்வது, சக்கரம் செய்வது( சில்லு செய்வது) ,பீடம் செய்வது, கிடுகு/நிகண்டு செய்வது, சிகரம் செய்வது என்று பல அங்கங்கள் உள்ளன. பின்னர் அலங்காரத்திற்கு சாரதி, அஶ்வங்கள் மற்றும் மேல்விதானம் யாளி, மத்ஸ்யம், சர்ப்பம் மற்றும் சிம்மங்களாலும் செய்யப்படும். பீடத்தினை சுற்றி பல்வேறு அவதாரக் கதைகளை சுட்டும் சிற்பங்கள் அமைக்கப்படும்.

    என்னமோ ஜாக்கியை வைத்து, லாரி டயரை மாற்றுவது போல அவ்வளவு எளிதாக எழுதப்பட்டுள்ளது. இவ்வளவும் தெரிந்த ஸ்தபதியர் குழுவினால்தான் தேரினை சரிசெய்ய முடியும். அறநிலையத் துறை சார்ந்த கோயில் என்றால் ,அவர்கள் சார்ந்த அரசியல் பிரச்சினைகளும் ஏராளமாக சந்திக்க வேண்டிவரும். பொதுவாக கோயிலில் எந்த வேலை செய்தாலும் ஒருகுழுவினருடன் பிணக்கு ஏற்பட்டால், அதே தொழிலில் இருக்கும் மற்ற குழுவினர் அப்பணிகளை ஏற்க மாட்டார்கள். சங்கம், சச்சரவு ,உள்ளூர் என்று நடைமுறை சிக்கல்கள் உண்டு.

    இவண்,
    கெணேசு

  7. ஐயா !

    /**தேரின் மீது ஒரே ஒரு குட்டி அர்ச்சகர் தவிர்த்து அனைவரும் இறக்கப்பட்டனர்.**/

    வைணவ ஆகமங்களில் வைகானசம், பாஞ்சராத்ரம் என்று இரண்டு பிரிவு உண்டு. ரதோத்சவம் அல்லது தேர்திருவிழா என்பது கொடியேற்றத்துடன் தொடங்கும் ப்ரம்மோத்சவத்தின் 9ஆம் நாள் அங்கம். ரக்ஷாபந்தன பட்டாசார்யர் என்பவர் வேதம் ,ஆகமம் மற்றும் மீமாம்சை தெரிந்த வித்வானாய் இருப்பார். அவர்தான் கொடியேற்றுவார். இருவேளைகளிலும் ஹோமம் செய்வார். எல்லா வாகனத்திலும் கூடவே இருப்பார். அவர் இந்த 10 நாட்களும் மிகவும் ஜாக்கிரதையாக எவ்வித தீட்டும் படாதவாறு பார்த்துக்கொள்வார். அதாவது ஒரு கல்லூரி முதல்வர் போன்றதாம். தினமும் ஒருமுறை பெருமாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் அவரால் நட்த்தப்பெறும். தேர் நின்று போனால் பெருமாளை உடனே சன்னிதிக்கு எழுந்தருளச் செய்து ஶாந்தி ஹோம்ம் செய்வர். எனவே மேற்கூறிய வாக்கியமும் ஒரு லாஜிக் மீறல்தான்.

    இவண்,
    கெணேசு

  8. நான் இஸ்லாத்தை மதிக்கிறேன் – முஸ்லீம்கள் ஹிந்து மதத்தை மதிப்பதுபோல
    நான் அல்லாவை மதிக்கிறேன் – முஸ்லீம்கள் ஸ்ரீராமனை மதிப்பதுபோல
    நான் குர்ரானை மதிக்கிறேன் – முஸ்லீம்கள் பகவத்கீதையை, ராமாயணம் மதிப்பதுபோல
    நான் நபியை மதிக்கிறேன் – முஸ்லீம்கள் ஸ்ரீ அனுமானை மதிப்பதுபோல
    நான் மசூதியை புனிதமாக மதிக்கிறேன் – முஸ்லீம்கள் கோவிலை புனிதமாக மதிப்பதுபோல
    நான் முஸ்லீம் பெண்களை மதிக்கிறேன் – முஸ்லீம் ஆண்கள் ஹிந்து பெண்களை மதிப்பதுபோல
    நான் இஸ்லாமிய பண்டிகைகளை மதிக்கிறேன் – முஸ்லீம்கள் ஹிந்து பண்டிகைகளை மதிப்பதுபோல

    இப்படி இருக்கையில் நான் எப்படி மதவாதி ஆவேன் ???!!!!!!!!!!!!!!!( உத்திரபிரதேச முதல்வர் ஆதித்யநாத்

    மத ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த கட்டுரை வரவேற்க்கதக்கது. பம்பாய் திரைபடம் எடுத்த மணிரத்தினம் வீட்டில் இஸ்லாமியர்கள் அராஜகம் செய்தது தெரியும். ஏன் 10 ஹிந்துக்கள் இறந்தாலும் பரவாயில்லை ஒரு முஸ்லீம் உயிர் பிழைப்பதற்காக என்று சொன்ன காந்திக்கே அல்வா கொடுத்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை மறக்கக்கூடாது. இஸ்லாமியர்களும், கிருஸ்துவர்களும் நம்பகத்தன்மை அற்றவர்கள் என்பதை இன்று வரை சரித்திரம் நமக்கு புத்தி புகட்டிவந்துள்ளது.

    இவர்களை நாம் நம்பவேண்டுமானால் முதலில் இஸ்லாமியர்கள் பின் வருவனவற்றை ஏற்க்கவேண்டும் – ராமர்கோவில்-புர்கா எரிப்பு-பொது சிவில் சட்டம்-பசுவதை தடுப்பு- ஒரு மனைவி – குடும்பக்கட்டுபாடு-சிறுபான்மை தகுதி – நான் முதலில் இந்தியன் பின்பு ஹிந்து முஸ்லீம் என்ற எண்ணம். இதைபோல் கிருஸ்துவர்களும் மதமாற்றம் – சிறுபான்மை தகுதி – ஹிந்து கிருஸ்துவர் என்ற எண்ணம் – மேலும் இந்த இரு மதங்களும் தங்கள் மதங்களை சார்ந்த மற்ற தேசத்தவர்களை சகோதரர்களாக பார்பதும், அவர்களுடன் கூட்டு சேர்வதும், அவர்களுக்காக போராடுவதும் சல்லி
    காசுக்குகூட உபயோகம் இல்லை என்பதை கண்கூடாக பார்த்தபின்பு நம்பிக்கை வைப்பது அடிமுட்டாள் தனம். அது நமது தேச ஒற்றுமையை கெடுக்கும் ஒரு நோய் என்பதை உணர்ந்து அம்மாதிரியான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்.

  9. நமது அரசும் முஸ்லீம்கள் முன்பு மண்டியிடும் அரசாகவே உள்ளது. ஆனால் அரேபிய கலாச்சார வாழ்வு நாசம் செய்து கொண்டிருக்கின்றது என்பதை முஸ்லீம்கள் 3 விசயங்களில் உணா்ந்துள்ளாா்கள்.
    01.முத்தலாக் என்ற மணவிலக்கு.மணவிலக்கு அளிக்கும் உாிமை மதக்குழுக்களுக்கு இருக்கக் கூடாது.நீதிமன்றத்திற்குதான் இருக்க வேண்டும். இந்த வகையில் இந்து கிறிஸ்தவ முஸ்லீம் பெண்கள் ஒரே உாிமை என்ற சட்ட வளையத்திற்குள் வருகின்றாா்கள்.இதுஒரு சட்ட சமத்துவம்.
    02.முஸ்லீம் பெண்கள் ஒன்றிற்கு மேல் மனைவிகளை மணந்து கொள்வது என்ற பிரச்சனை.இதிலும் நீதிமன்ற அனுமதி பெற்று கூடுதலாக ஒரு மனைவியை திருமணம் செய்துகொள்ள சட்டம் அரசு இயற்றினால் இசுலாமிய பெண்கள் பொிதும் மகிழ்ந்து ஆதாிப்பாா்கள்.ஆண்களும் ஆதாிப்பாா்கள்.பெண் பாதிக்கப்படும்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப ஆண் உறவுகளும் பாதிக்கப்படுகின்றாா்கள்.எனவேஆண்களும் ஆதாிப்பாா்கள்.
    03.அடுத்து நிக்கா ஹலால் -மிகவும் அசிங்கமான பழக்கம்.பெண்ணை கேவலப்படுத்தும் மிக மிக முட்டாள்தனமாக ஒரு கிறுக்குத்தனம். இதையும் ஒழித்துக் கட்ட வேண்டும்.
    04.பாகப்பிாிவினையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உாிமை வழங்க வேண்டும்.
    அரசு துணிந்து சட்டம் இயற்றினால் சில குழப்பங்களுக்கு பின் தெளிந்து விடும்.
    அரசியல் வாதிகள் திரு.மோடி அவா்கள் சட்டம் கொண்டுவந்தால் மத வெறியன் இந்துத்துவா என்பாா்கள். இந்து அரசியல் வாதிகள்தான் இப்படிப் பேசி வீண் பிரச்சனைகளை உண்டாக்குவாா்கள்.அயோத்தியில் பிரச்சனைக்குாிய கட்டடம் இடிக்கப்பட்டபோது முஸ்லீம்கள் யாரும் முதலில் ஏதும் செய்யவில்லை.ஒரு வித திகில் உணா்வோடு ஸ்தம்பித்துக் காணப்பட்டாா்கள்.பின் அனைத்து கட்சியினரும் தூபம் போட்டபின் நாடே ஸதம்பித்துப் போனது.நாடே ஸதம்பித்துப் போனதற்கு முஸ்லீம்கள் கிஞ்சித்தும் காரணம் அல்ல. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள இயலாத பயிற்சி யற்ற இந்துக்கள்தாம் காரணம்.

    நமது துக்ளக் ஆசிாியா் கூட தனது பத்திாிகை அட்டைப்படத்தை கருப்பாக வெளியிட்டு விட்டாா்.என்றால் பாா்த்துக் கொள்ளுங்கள்.

    இந்துக்கள் முக்கியமான சில ஆலயங்களை மீட்க வேண்டியது அவசியம்.காசி மதுரா இப்படி நாடு முழுவதும் உள்ள சாித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உறுதியுடன் மீட்க வேண்டும்.அரசும் இந்து சமூகமும் உறுதியாக இருந்தால் …….இந்துக்கள் அனைவரும் உறுதியுடன் இருந்தால்…… முஸ்லீம்கள் யதாா்த்தத்தைஉணருவாா்கள்.

  10. இசுலாம் பாகப்பிாிவனை நியாயமானதல்ல.பெண்களுக்கு சமமாக தந்தையில் சொத்துக்கள் பகிரப்பட டுனிசியாவில் சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவிப்பு
    Women Inherit Less Under Islam. Tunisia is trying to change that

    September 7, 2017

    Tunis: Halima Bin Diafi says her brothers spent their summer enjoying Tunisia’s Mediterranean coast while she was stuck in the capital, trying to scrape together enough cash to feed her children.

    That’s because the men got all the family money. Their father was fairly prosperous by local standards, and left land and a house worth about $200,000 when he died. But under the country’s inheritance laws, a daughter is only entitled to half of what a son receives. And many women, pressured by their families and communities, end up ceding their share entirely.

    “After receiving all our father’s inheritance, my brothers only care about their own families. They travel. And they’ve forgotten they have sisters.”( இந்து குடும்பங்களில் சகோதரா்கள் பாகப்பிாிவனை செய்து கொள்வாா்கள். ஆனால் பெண்களுக்கு பாகப்பிாிவினை கிடையாது. தராளமாக வழங்கிக் கொண்டேயிருப்பாா்கள். கணவன் இறந்தாலோ கணவன் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் பெண்கள் தாய் அல்லது சகோதரா்கள் வீட்டில் அடைக்கலம் பெற அதுவே வசதி. பெண்களுக்கும் பாகப்பிாிவினை அளித்தால் பின்பு உறவு கெட்டுவிடும்)

    at Tunisia’s 90-year-old President Beji Qaid Al Sebsi is proposing to do – and his call has found echoes across the Muslim world, stoking a wider debate about modernising Islam.Last month, Al Sebsi ordered a review of civil codes that govern inheritance, saying equality “is the foundation of justice and the basis of life in a community.” If that requires the reinterpretation of religious teachings, the president said, then so much the better: “This new direction should be welcomed and encouraged.”

    Tunisia has a history of advancing women’s rights. Under Habib Bourguiba, who presided over independence from France in 1956, and his successor Zine Al Abideen Bin Ali, polygamy was banned and women were given a say in divorce proceedings.But those leaders were widely seen, by admirers as well as critics, as secular dictators—suppressing religion as they sought to create a modern society in imitation of the West.

  11. 01.முத்தலாக் என்ற மணவிலக்கு.மணவிலக்கு அளிக்கும் உாிமை மதக்குழுக்களுக்கு இருக்கக் கூடாது.நீதிமன்றத்திற்குதான் இருக்க வேண்டும். இந்த வகையில் இந்து கிறிஸ்தவ முஸ்லீம் பெண்கள் ஒரே உாிமை என்ற சட்ட வளையத்திற்குள் வருகின்றாா்கள்.இதுஒரு சட்ட சமத்துவம்.
    ————————————————————————–
    அன்பா் திரு.செ.சுகுமாா் சொல்வது முற்றிலும் சாி. முத்தலாக் முறைக்கு எதிராக திரு.மோடி அவா்கள் கருத்து தொிவித்தபோது முஸ்லீம்களில் பலா் பிரதமருக்கு எதிரான வழக்கமான விமா்சனங்களை அள்ளி வீசினாா்கள்.பொது சிவில் சட்டம் வரப்போகின்றது என்ற பயத்தை பரப்பினாா்கள். நீதிமன்ற தீா்ப்பு முத்தலாக் முறைக்கு எதிராக வந்தது.முஸ்லீம்களை தெருவுக்கு தள்ள பாரதீய ஜனதாக்கட்சியைத்தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தூண்டின. ஆனால் முஸ்லீம்கள் தற்போது அற்புதமாக யாரும் எதிா்பாராத வகையில் ஆதரவு அளித்துள்ளாா்கள்.எதிாி கட்சிகளின் திட்டம் தவிடு பொடியானது.அரேபிய மத பழைமைவாதிகளின் செல்வாக்கு சாிந்து போனது.
    அதுபோல் அரசு துணிந்து பலதாரமணம் நிக்கா ஹலாலை தடை செய்தால் முழு ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.நிச்சயம் சாியத் மற்றும் அரேபிய தீவிரவாதிகளுக்கு( Islamic fundamentalists) இந்தியாவில் ஆதரவு இருப்பதாக நினைப்பது பொய்.முஸ்லீம்கள் குழந்தை தத்து எடுக்க ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.சொத்துாிமையை டுனிசியாவில் செய்வது போல் செய்ய வேண்டும்.
    இதையெல்லாம் செய்து விட்டால் முஸ்லீம்களின் நாயகன் திரு.நரேந்திர மோடிதான்

  12. சமய நல்லிணக்கத்தைக் காட்டும் நல்லதொரு கதை. பரங்கிப்பேட்டைப் பெருமாள்கோவில் உற்சவத்தில் ஒருநாள் மண்டகப்படி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது இப்பொழுதும் நடக்கிறதா என்று அறிந்தோர் பகிரலாமே!

  13. முஸ்லீம்கள் மத்தியில் சிறுவயது பெண்களைத் திருமணம் செய்யும் பழக்கம் முன்பு நிறைய இருந்தது.தறபோது குறைந்து வருகின்றது..இருப்பினும் வரப்போகும் சட்டத்தில் முஸ்லீம் பெண்களின் திருமண வயது 18 என்றும் ஆண்களின் வயது 22 – இந்துக்களுக்கு சமமாக நிா்ணயம் செய்ய வேண்டும். நிச்சயம் முஸ்லீம்களின் ஆதரவு அரசுக்கு கிடைக்கும்.

  14. ஐயா ,

    /***
    பரங்கிப்பேட்டைப் பெருமாள்கோவில் உற்சவத்தில் ஒருநாள் மண்டகப்படி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.***/

    விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் பெருமாள் கோயில் உத்சவத்தில் கூட முஸ்லிம் சகோதரர்கள் மண்டகப்படி மரியாதை தருகின்றனர் .

    ஆனால் அதற்காக அவர்களுக்கு, ஸ்தபதிகள் போல சிற்ப தொழில் பயிலுதல் , தேர் கட்டுதல் எல்லாம் தெரியும் என்பன கட்டுக்கதை கூட இல்லை ! கானல் நீர் போன்ற உண்மையாகும் .

    உருவ வழிபாடு செய்யும் நமக்காக , தொழில் கற்று =>கல் ,மரம் ,சுதை ,உலோகம் இவைகளில் சிற்பம் செய்பவர்கள் நம்மவரில் ஒரு வகுப்பு ==>ஸ்தபதி வகுப்பு என உள்ளனர் .

    முஸ்லீம் சகோதரர்கள் உருவ வழிபாட்டினை ஏற்காதவர்கள் . அவர்களுக்குப் போய் “சர்வ சாதாரணமாக”
    ஸ்தபதி வேலை தெரியும் என்பது நம்பத்தக்கதல்ல. கொஞ்சம் விட்டால் வேதம் ஓதினார்கள் என்றும் எழுதுவர்.

    நன்றி ,
    கெணேசு

    (Edited and published)

  15. ஐயா ,
    /**”ராவுத்தரே ஏதாவது குடிக்கிறீங்களா?”**/

    நானறிந்தவரையில் , “ஆசாரிகள்” என்னும் வகுப்பினை சேர்ந்த இந்து சகோதரர்களே -“ஸ்தபதி” தொழிலுக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த தொழிலை சிறுவயது முதல் கற்க வேண்டும் . அவர்கள் அனைவருக்கும் சித்திரம் வரைதல் என்பது மிக மிக சுலபமாக வழங்கப்பட்ட ஒரு பிறவிக் கொடையாகும் . இது பரம்பரையாக வரும் பழக்கமாகும். அவர்களுக்கு என்று சிற்பக் கூடங்களும் உண்டு. எடுத்துக் காட்டாக – மஹாபலிபுரம், சுவாமிமலை, ஸ்ரீகாளாஸ்தி என்பன.

    தச்சர் வேலையும் ,மர -ஸ்தபதி வேலையும் வேறு வேறாகும் . கட்டிட வேலைக்கும் ,சுண்ண -ஸ்தபதி வேலைக்கும் நெடுவாசியுண்டு. அவ்வாறே இரும்பு உருக்குவோரும் ,உலோக ஸ்தபதியும் ஒன்றல்லர் .

    ஏதோ முஸ்லீம் சகோதர தச்சர்கள், வண்டி சக்கரங்கள் செய்திருக்கலாம். தச்சர் தொழில் செய்யலாம் . ஆனால் ஸ்தபதி தொழில் செய்ய இயலாது. அதற்கு கற்பனை வளம் ,சித்திரம் வரைதல், சிவ -வைணவ ஆகம அறிவு, பக்தி வேண்டும் . வண்டி சக்கர அச்சும் , தேரினுடைய அச்சும் ஒன்றல்ல . அச்சகோதரர்களை சிற்ப கூடங்களில் சேர்க்க மாட்டார்கள் .

    இக்கட்டுரையில் மிகச் சாதாரணமாக ,சில முஸ்லீம் சகோதரர்கள் , தேரின் அச்சினை, சிங்கிள் டீ குடித்து விட்டு , மாற்றிச் செல்வதாக வருகின்றது . இரண்டு நாள்களாக, ஸ்ரீனிவாச பெருமாளும் நடுவீதியில் கைவிடப்பட்டவராக சித்தரிக்கப்படுகின்றது . இது ஆகம விதிகளுக்கும் ,ஸ்தபதி தொழிலுக்கும் செய்யும் நையாண்டியாகவே கருதுகின்றேன் . யாதுமறியா நம் மக்களும், இதனை உண்மை என்றே நம்புவார்கள் . அத்துணை சாமர்த்தியமாக இப்புனைவு நம்மை இட்டுச் செல்கிறது .

    நன்றி ,
    கெணேசு

  16. ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3
    —————————————————————-
    என்னும் கட்டுரையில் திரு.துளசிராமன் அவர்கள் மிக அருமையாக SYNESTHESIA என்றால் என்ன என்று கீழ்வருமாறு விளக்கியுள்ளார்கள்.

    “SYNESTHESIA” : – என்றால் என்ன ?
    *******************************************

    /***பல சிற்பிகள், ஓவியர், கவிஞர், அறிஞர் பெருமக்களுக்கு அவர்தம் மூளையில் அந்தந்த பாகங்களில் ஏற்படும், கூடுதல் ந்யூரான்களின் இணைப்பு, அந்தந்த திறமைகளை, பிறப்பிலேயே வந்த கொடையாக, இந்த SYNESTHESIA தான் சாத்தியப்படுத்துகின்றது. ந்யூரான்-இணைப்பு என்னும் வ்யாஜத்தில், நமக்கும் அவர்களுக்கும் பாரிய வேறுபாடுண்டு. ***/

    அதன்படி “ஸ்தபதிகள்” என்பவர்கள் பரம்பரையாக பரம்பரையாக, சிற்பம் அமைக்கும் திறமைகளை அசாதாரணமாகப் பெறுகின்றனர். தாங்கள் பெற்ற இந்த கற்பனைவளம், சித்திரம் வரைதல், சிற்பத்திறன் என்பன அவர்கள் மூளையில் டீ.என்.ஏ வால் நிகழ்ந்த சில ந்யூரான்களின் கூடுதல் இணைப்புக்கள்தான் என்று நிரூபிக்கமுடியும். இதைத்தான் SYNESTHESIA என்கின்றனர்.

    அவர்களிடம் ஒரு புகைப்படத்தினை கொடுத்தால், அதேபோல ஒரு பஞ்சலோக சிலையோ , மரத்தில் சிற்பமோ , சிமெண்ட் கொண்டு சுதை சிற்பமோ செய்ய முடியும்.இவை அந்தந்த மூளையினுடைய பாகங்களில் அமைந்த ந்யூரான் இணைப்புக்களால் தான் சாத்தியப்படும். இவை அனைத்தும் பிறவிக் கொடைகள். சாதாரணமான நம் போன்றவர்களால் அவ்வாறு சித்திரம் வரையவோ (அ) சிற்பம் செதுக்கவோ சாத்தியமே இல்லை. பல ஜன்மங்களில் செய்த அப்யாசத்தினால் விளைவதாகும்.

    அவ்வாறே தேரை பழுது பார்க்கவும், முன் அனுபவம் தேவை (EXPERIENCE) . அதன் கட்டுமானம்(ARCHITECTURE) ,வடிவமைப்பு வரைபடம்(DESIGN DIAGRAM) பற்றிய அறிவு வேண்டும். இதனை ஆகம அறிவு என்பர். இவை ஒன்றுமே இல்லாமால் ஏதோ அகஸ்மாத்தாக வந்தவர்கள் தேரின் அச்சினை மாற்றினார்கள் என்பது பிதற்றலே அன்றி வேறென்னவாம்.

    /** வேற யாரும் வந்து என்ன தொந்தரவு செய்யக்கூடாது, யோசன சொல்லக் கூடாது . எல்லாரையும் வெளிய அனுப்புங்க” என்றார்.**/

    செம காமடி தான் !!! ரூம் போட்டு யோசிப்பாய்ங்க்களோ !!!

    நன்றி,
    கெணேசு

  17. கதை என்றாலும் அதற்கு சில நிஜ சம்பவங்கள்தான் தூண்டுகோல். எங்கள் ஊர் தேர் அச்சு முறிந்து நடுத்தெருவில் இரண்டு நாள் நின்றது. தேரில் இருந்த பெருமாள் எங்கும் செல்லவில்லை. தேர் அச்சு முறிந்து ஒரு பெட்டிக்கடையை நசுக்கி வீட்டி மொட்டை மாடியை ஒட்டி நின்றது. தேரின் மேல் இருந்த நாங்கள் தேரிலிருந்து வீட்டு மொட்டை மாடியில் சாதாரணமாக இறங்கி சென்றோம்.

    அச்சு சரி செய்யப்பட்டு தேர் கிளம்பும் வரை பெருமாள் தேரில்தான் இருந்தார். எங்கள் ஊர் பெருமாள் தேர் உற்ச்சவம் இரண்டுநாள் நடக்கும். இரவு தேரில்தான் பெருமாள் வாசம் செய்வார். கடந்த தேர் திருவிழாவில் ஜாதிக்கலவரத்தால் தடங்கல் ஏற்பட்ட போதும் பெருமாள் தேரில்தான் இருந்தார். இரண்டாவது, அச்சு முறிந்த தேரை சரி செய்தவர் உள்ளூரில் லேத் பட்டறை வைத்திருந்தவர். அவர் ஜாக்கி வைத்தும், கற்களை வைத்தும்தான் அச்சை மாற்றினார்.

    என்ன செய்ய சில சமயம் ரூம் போட்டு யோசித்தால் கூட கற்பனை செய்ய முடியாதது நிஜத்தில் நடந்துவிடும்.

  18. ரொம்ப நன்றி திரு.கணேஷ். அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *