புல்லட் ரயில் எனும் பெருங்கனவு

மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்த மைக்கல்  ஃபாரடேயின் பரிசோதனை சாலைக்கு வந்த அன்றைய இங்கிலாந்து நிதி அமைச்சர் கேட்டாராம் ” இதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் என்ன பலன்?” என்று. அதற்கு ஃபாரடே “இதற்கு நீங்கள் ஒரு வரி போடலாம்” என சொன்னாராம்.

நம்மூரிலே இருக்கும் ஆகச்சிறந்த அறிவாளிகள் ராக்கெட் விட்ட போதும் இதையே தான் கேட்டார்கள். இப்போது புல்லட் ரயிலுக்கும் இதையே தான் கேட்கிறார்கள் -சீனா பணக்கார நாடு, அவர்கள் செய்யலாம். நாம் செய்யலாமா?

செய்தி:  இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்: 14-செப் 2017 அன்று பிரதமர் நரேந்திர மோதியும்  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல் நாட்டுகின்றனர். 

சீனா எப்போது புல்லட் ரயிலை ஆரம்பித்தது? 2007 இல் தான். ஆமாம். பத்தே பத்து வருசம் முன்பு தான். இன்றைக்கு சீனா அதிவேக ரயில்கள் மட்டும் 22,000 கிலோ மீட்டருக்கு வைத்திருக்கிறது. மற்றவர்களிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாங்கிய காலம் போய், இப்போது சீனாவே புதிதாக மணிக்கு 500 கிமீ வேகத்திலே போகக்கூடிய வண்டிகளை தயாரிக்கும் ஆராய்ச்சியிலே ஈடுபட்டிருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தின் பக்கவிளைவுகளாக ஏகப்பட்ட தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்புகளும் உருவாகி உள்ளன. பத்தே வருடங்களிலேயே ஏகப்பட்ட மாற்றங்கள்.

இதை விட, அதிவேக ரயில்கள் விமானப்பயணத்தை விட இரு மடங்கு மட்டுமே நேரம் எடுத்துக்கொள்கின்றன. பெய்ஜிங் ஷான்காய் வழி அதிவேக ரயிலிலே 4 மணி நேரம் 50 நிமிடங்கள் என்றால், விமானத்திலே 2 மணி நேரம் 10 நிமிடங்கள். செலவோ மூன்றில் ஒரு பங்கு தான். ஒப்பீட்டுக்கு சென்னை மும்பை விமான வழியாக 2 மணி நேரம் ஆகும். அதுவே ரயில் வழியாக 4 மணி நேரம் தான் என்றால்? அதுவும் கட்டணமும் விமானக் கட்டணத்தைவிட மூன்று மடங்கு குறைவு என்றால்? 1500 ரூபாய்க்கு 4 மணி நேரத்திலே மும்பை போகமுடியும் என்றால்? யோசித்து பாருங்கள்.

இதைவிடவும், புல்லட் ரயில் புதிய அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளுக்கான கனவை தூண்டிவிடுமல்லவா?  ராக்கெட் விட்டபோது எவ்வளவு கேலிகளும் கிண்டல்களும் வந்தன என அப்துல் கலாம் எழுதியிருப்பார். புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீவன் வைன்பெர்க் ஒரு பேச்சிலே சொன்னார், “19 ஆம் நூற்றாண்டிலே அறிவியலாளர்கள் வெற்றிடத்திலே மின்சாரம் செலுத்துவதை ஆராய்ந்தார்கள், அதன் மூலம் எலெக்ட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. அது இல்லாமல் இன்றைய முன்னேறம் எதுவுமே இல்லை. அன்றைக்கு அவர்கள் அப்போதைய விஷயங்களிலே மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் இன்றைக்கும் நாம் நீராவி எந்திரம் பற்றி படித்து கொண்டிருப்போம்”.

இன்றைக்கும் அதைத்தான் சொல்கிறார்கள் இல்லையா? இருக்கும் ரயில்களை சரிப்படுத்துங்கள் என. இருக்கும் ரயில்களை சரிப்படுத்திக்கொண்டே இருந்தால் இன்னும் ஆயிரம் வருசம் ஆனாலும் இப்படி சோத்துக்கு பிச்சை எடுத்துட்டே தான் இருப்போம்.

மெட்ரோ ரயில் வந்த போதும் இதே போல் அல்லக்கை முண்டங்கள் கூவின. இருக்கும் ரயிலை ஏன் சரிசெய்யவில்லை என. இன்றைக்கு மெட்ரோ ரயில் இல்லாத நகரமே இல்லை என்ற நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. 1995 இல் ஆரம்பிக்கப்பட்டு 2002 இல் சேவையை தொடங்கிய டெல்லி மெட்ரோ இன்றைக்கும் 16 ஆம் இடத்திலே இருக்கிறது.

டெல்லி மெட்ரோ கட்ட 7 வருடங்கள் என்றால் கொச்சி மெட்ரோ 2 வருடங்களிலே கட்டப்பட்டது. அதே போல் முதல் புல்லட் ரயில் கட்ட 5 வருடங்கள் எடுக்கலாம் என்றால் அடுத்தடுத்த ரயில்களை ஒரு வருடத்திலே கட்டி முடித்துவிடலாமே?

மெட்ரோ ரயிலை விட, நிலத்தடி ரயிலை விட புல்லட் ரயில் ஒரு பெருங்கனவு.

கனவு நிஜமாவது என்பது நாட்டையே முன்னேற்றும்.

******

(ராஜசங்கர் பேஸ்புக் பக்கம் இங்கே)

 

4 Replies to “புல்லட் ரயில் எனும் பெருங்கனவு”

  1. முன்னேற்றத்தின் அடையாளங்கள் போக்குவரத்து வசதிகள். நாய்கள் குரைத்து பொழுது விடிவதில்லை.திரு.மோடி அவா்களின் சாதனை பட்டியலில் இது ஒரு அற்புதமான பதிவு. ஜப்பானுக்கும் நமக்கும் அணுகுண்டு சோதனை செய்தபிறகு உறவுகள் மந்தகதியாக இருந்தது. திரு.மோடி அவா்களின் பெரும் முயற்சியால் அது பொங்கி பொலிந்து வருகின்றது.ஜப்பான் ஒரு இந்து நாடு.அதனோடனான உறவு நமக்கு பொிதும் பயன்படும்.

  2. Japan suffered two nuclear attacks. They know the real value of progress. India too. High time we develop such projects.

  3. புல்லட் ரெயில்- இந்திய, இந்து பண்பாட்டிற்கு அடிக்கப்படும் மேலும் ஒரு சாவுமணி…

  4. The project is funded thro a loan of 50 years with 2% interest. It is a strategic move to ensure japan’s support to India in the face of the aggrandizement and posturing by China. Hence the project should not be seen in isolation but as a geo political and economic strategy. The project would also ensure development of indigenous competency.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *