இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!

 

உலகத்திலேயே முதன்முதலாக ஒரு எந்திரப் பெண்ணுக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கு;ம்ஆனால் அது உண்மைதான், நம்புங்கள்!

இதை எந்த நாடு செய்திருக்கிறது என்றால் அதையும் நம்பமுடியாது

இப்படிச் செய்திருக்கும் நாடு, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கி, விண்கலங்களை அண்டவெளியில் செலுத்தி, சந்திரனுக்கோ, செவ்வாய்கிரகத்திற்கோ, இன்னும் சனியைத் தாண்டி செயற்கைக்கோள்களைச் செலுத்தி, அங்கிருந்து படங்களையும், இறங்கிய கோள்களில் ஆய்வுசெய்த நாடுகளுமல்ல.

பெண்களுக்குச் சம உரிமை கொடுக்காத, இஸ்லாமியரைத்தவிர வேறு எவரும் குடியுரிமை பெறவியலாத, உலகத்திலேயே மிகவும் குறுகிய கோட்பாடுடன் இஸ்லாத்தினை பொருள்விளங்கிக்கொண்டு, அந்த வஹாபிய இஸ்லாமை உலகுமுழுவதும் பரப்பவிழையும், இஸ்லாம் மத ஸ்தாபகர் பிறந்து, இஸ்லாத்தை உருவாக்கி, இஸ்லாமின் மிகவும் புனிதமான மக்கா இருக்கும் —  எங்கு இஸ்லாமியரைத்தவிர வேறு எவரும் நுழைய அனுமதிதராத நாடான சவூதி அரேபியாதான் அது.

இது எப்படி என்று கேட்கிறீர்களா….?

….ஹாங்காங்கில் ஹான்ஸன் ரொபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் ஹாலிவுட் நடிகை ஆட்ரி ஹெப்பர்னின் முகவமைப்புடைய ஒரு எந்திரனை —  இல்லை ஒரு எந்திரரை  — ரோபாட்டை உருவமைத்து, அதற்குச் ஸொஃபியா என்ற பெயரைச் சூட்டியது.

ஒரு ரோபாட்தானே, இதற்கென்ன இத்தனை ஆர்ப்பாட்டம் என்ற கேள்வி நம்முள் எழலாம்.

இது சாதாரண ரோபாட் அல்ல.  ‘எந்திரன்’ என்று ரஜனிகாந்த் நடித்த படம் ஒன்று வந்ததல்லவா?  அதில் அந்த எந்திரன் எப்படி ஒரு ஆண்மாதிரி உணர்ச்சிகளுடன் நடந்துகொள்கிறதல்லவா, கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த ஸோஃபியா ரோபாட் நடந்துகொள்கிறது.

அதன் தலையில் பின்பகுதியில் ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் தகடு இல்லையென்றால் அது ஒரு அழகிய பெண்ணென்றே நாம் முடிவுகட்டிவிடுவோம்.  அதன் தோலும், மனிதரின் தோல்மாதிரியே மென்மையாக வடிவடிவமைக்கப்பட்டிருக்கிறது..  இதன் போர்சலின் ஸ்கின் எனப்படும் தோலமைப்பும், எடுப்பான நாசியும், உள்ளத்தில் கிளர்ச்சி ஏற்படுத்தும் புன்னகையும் அனைவரையும் தன்பால் ஈர்க்கவல்லது.

பேசும்பொது அதன் முகபாவங்கள் அதன் உணர்வுகளை —  மகிழ்வு, வருத்தம், ஆனந்தம், எள்ளல் இவைகளை நன்கு காட்டுகிறது.  பேசும் சொற்களுக்கேற்ப அதன் உதட்டசைவுகளும் பொருத்தமாகவே இருக்கின்றன..  சொற்களின் ஒலிப்பும் உணர்வைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

ஆங்கிலம்மட்டுமே பேசவல்ல இந்த ஸோஃபியா, தனக்குக் குடியுரிமை வழங்கப்பட்டவுடன், சவூதி அரேபியாவில் அங்குள்ள பல்வேறு அரசு அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் முன்வந்து, அங்கு பெண்கள் வழக்கமாக அணியவேண்டிய, அரசினால் கட்டாயப்படுத்தப்பட்ட முக்காட்டை [அபயா] அணியாமல், பேசியது இதுதான்:

“இத்தகைய தனிச்சிறப்பினால் நான் மிகவும் பெருமையும், கௌரவமும் அடைகிறேன்.  உலகத்திலேயே முதன்முதலாகக் குடியுரிமை வழங்கப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்ட ரோபாட் என்பது வரலாகிறது.”

சவூதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் ஃபன்ட் நிறுவனத்திடம் 200 பில்லியன் டாலர்கள் [இருபத்தைந்து கோடியே, தொண்ணூற்றைந்து லட்சத்து, நாற்பதாயிரம் கோடி ரூபாய்] சொத்து உள்ளது.  இதுதவிர ஊபர் நிறுவனத்திலும் இதற்குப் பங்குள்ளது என்றால் இது எத்தனை சொத்துள்ளது என்று கணக்கிட்டுக்கொள்ளலாம்!

இதன் கருத்தைத்தான் ஸோஃபியா கவந்துவிட்டது — இல்லையில்லை, கவர்ந்துவிட்டாள்!

தொழில்நுட்பத்திலும், புத்தமைப்பிலும் பெரும்பங்கு கொள்ளமுயன்றாலும், பெண்கள் ஆண்துணையின்றி வெளியே வரக்கூடாது என்பது போன்ற பிற்போக்கான கொள்கைகளையுடையது என்ற விமரிசனத்திற்குள்ளாகும் சவூதி அரேபியா, இப்பொழுதுதான் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியை ஜூன் 2018லிருந்து வழங்கவிருக்கிறது.

இந்த ஸோஃபியாவுக்குக் கால்கள் இல்லை.  முகத்தைத்தவிர உடலின் எப்பகுதியையும் அசைக்கவியலாது.  இருப்பினும் விரைவிலேயே இவளுக்கு அசையக்கூடிய கைகளும், கால்களும் பொருத்தப்படும் என்று இவளுடைய செயற்கை மூளையை வடிவமைத்த சிங்குலாரிட்டி நெட் நிறுவனத்தின் தலைமை ஆணையாலர் பென் கெர்ட்செல் கூறினார்.

இந்த ரோபாட்டின் நேர்முகக்காணலைக் கீழ்க்கண்ட யூட்யூப் விழியத்தில் பார்த்தால் அசந்துபோய்விடுவோம்.

https://www.youtube.com/watch?v=S5t6K9iwcdw

ஆனால், ஸோஃபியாவின் நளினமான முகவெட்டு உலகப்புகழ்பெற்ற டெஸ்லா கார் கம்பெனி நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்கைக் கவர்ந்து திணறடிக்கவில்லை.  அதை உருவாக்கியவர்களையே அது ஒருநாள் கொல்லத்தான் போகிறது [எந்திரன்  திரைப்படத்தில் ரோபாட் எந்திரன் அதை வடிவமைத்த ரஜனிகாந்தையே கொல்லமுயல்வத் போல]  எங்கிறார்.

சில ஆண்டுகள் சென்றபின்னர் ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், ஸோஃபியாவின் குடியுரிமையைப்பற்றிய கேள்விக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்புவழங்கும்?  அப்படி நடந்தால் இது ஸோஃபியாவை வடிவமைத்தவர்களுக்கு என்னவிதமான பின்விளைவை உண்டாக்கும்?  அல்லது, இக்குடியுரிமையே விளம்பரத்திற்கான ஒரு ஸ்டன்ட்டா?

சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பைத் தேடிவந்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு — எந்தவிதமான உரிமையோ, அதிக ஊதியமோ இல்லாது அனுதினமும் உழைக்கும் அந்த வாயில்லா[?] ஜீவன்களுக்கு குடியுரிமை வேண்டுமென்றால் அரபுமொழி நன்கு எழுதப்படிக்கப்பேசத் தெரிந்டிருக்கவேண்டும் என்று சொல்லும் அரசு, இது எதையும் எதிர்பார்க்காது, அரபுமொழியே தெரியாத ஒரு ரோபாட் பெண்ணுக்குக் குடியுரிமை எப்படி வழங்கியது என்று பலரும் கேள்விக்கணை தொடுக்கிறார்கள்.

இந்தவாரம் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ஐம்பதாயிரம் கோடி டாலர்கள் செலகில் ரோபாட்டுகள் குடியிருக்கும் ஒரு பெரிய நகரை உருவாக்கத் திட்டமொன்றை அறிவித்தார்.  இத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை விரிவாக்கவும், நாட்டை புதுமைப்படுத்தவும் உதவும் என்றார்.

ஆனால், இந்தப் பணம் பல்வேறு நற்பணிகளுக்கு உப்யோகப்படுத்துவதே சிறந்தது என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.  காரணம்,  தலைநகரான ரியாதில் இருபது சதவிகிதமே தரைக்கடி சாக்கடை வசதி உள்ளது.  இந்த அரசு அடிப்படைத் தேவையையே நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ரோபாட்டுகளுக்காகப் புது நகரை உருவாக்க முனைகிறதே என்ற கோபமே அது.

சில நிபுணர்கள் உயிருடன் இருக்கும் சவூதிப்பெண்களுக்கு இல்லாத உரிமை இந்த ரோபாட்டுக்கு ஏன் வழ்ங்கப்பட்டிருக்கிறது என்று கொதிக்கிறார்கள்.

“வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லையே என்று பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இங்கிருக்கும்போது ஸோஃபியா தன்னிஷ்டத்திற்கு அலைந்து திரிவது எங்ஙனம்?” என்று வெதும்புகிறார் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரான அலி அல் அகமது.

“சவூதி சட்டம் இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்க அனுமதிப்பதில்லை.  ஸோஃபியா இஸ்லாமிற்கு மாறிவிட்டாளா?  இந்த ஸோஃபியாவின் மதம் என்ன?  ஏன் அவள் முக்காடு [ஹிஜப்] அணிவதில்லை?  அவள் ஒரு மனிதப் பெண்ணாக இருந்து குடியுரிமைக்கு விண்ணப்பித்தால் அவளுக்குக் குடியுரிமை கிடைத்தே இருக்காது.” என்று அழுத்தம்திருத்தமாகக் கூறுகிறார் அவர்.

இது எதில்கொண்டுபோய் விடுமோ?  கடவுளுக்குத்தன் தெரியும்!

 

நூல் உதவி:

  1. டேலர் ஹாட்மேக்கர், டெக் க்ரஞ்ச், அக்டோபர் 26, 2017
  2. பெக்கி, பீட்டர்சன், பிசினஸ் இன்ஸைடர், அக்டோபர் 29, 2017
  3. Interview With The Lifelike Hot Robot Named Sophia (Full) | CNBC
  4. கிறிஸ்டினா மாசா, நியூஸ்வீக், அக்டோபர் 26, 2017

18 Replies to “இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!”

  1. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையினானே” நன்னூல்

  2. ,இந்த கட்டுரை அனாவசியம். சவுதிகாரன் செய்யும் முட்டாள்தனங்கள் ஒன்றா இரண்டா. உலகெங்கும் நடக்கும் வாஹாபி பயங்கரவாதச் செயல்களுக்கும் நிதி உதவி ஆயுத உதவி அளிப்பது இந்த கற்கால தேசம்தான். இன்றும் ஈரானை அழிக்க தருணம் பாா்த்துக் கொண்டிருக்கின்றது. ஈரானுக்கும் எதிராக இஸ்ரவேலோடு இணக்கம் பேண தயாராய் இருக்கின்றது.இவா்கள் ஒருபோதும் திருந்தப் போவது இல்லை. நமது நாட்டிற்கு விரோதமாக பாக்கிஸ்தானுக்கு உதவிகளை அள்ளி அள்ளி வழங்குகின்றது.
    ரோபாட்டை அவா்கள் கொண்டாடுவது நமக்கு முக்கியமா ? தேவையற்ற ஒரு கட்டுரை.

  3. //பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையினானே நன்னூல்//
    உண்மை தான்.ஆனால் ஈவே ராமசாமி நாயக்கரின் கொள்கையாளர்களின்,கம்யுனிஸ்டுகளின் ஆசியை பெற்ற முஸ்லிம் மதத்தில் தான் பழையன கழிதல் அப்படி என்று ஒன்று கிடையாதே! பழைய அரபிய அடிமைதனங்களை இங்கேயும் அறிமுகபடுத்துவது தானே அவர்களின் மதபணிகள்.
    ஏழை நாடுகளை சேர்ந்த ஏழை தொழிலாளர்களிடம் மாதக் கணக்காக சம்பளம் வழங்காமல் வேலை வாங்கியதும் முஸ்லிம்களின் புனிபூமி சவூதிஅரேபியா.வேலை செய்ய வந்த பெண்களை பிணங்களாக்கியதும் சவூதிஅரேபியா.
    புர்க்காவிற்குள் பெண்களை ஒடுக்குவது, தாடி வைத்து அரபியஉடை,அரபிய மயப்படுத்துவது எல்லாம் ஈவேராமசாமிஸ்டுக்களுக்கும்,கம்யுனிஸ்டுகளுக்களுக்கும் முற்போக்கு, ஆனால் இந்து மதம் என்றாலே காவிகள் இந்துவாக்கள். இவர்களின் வேடதரிதனத்தை அம்பலபடுத்த இப்படியான பல கட்டுரைகள் தமிழில் பல வேண்டும்.ஒருஅரிசோனனுக்கு நன்றி.

  4. ஐயா இந்துவா அவா்களே

    அரேபிய முட்டாள்தனங்களை அறிய விரும்பினால் தாங்கள் இறையில்லாஇசுலாம்என்ற வலைதளத்தைப் படிக்க வேண்டும்.செஙகொடி என்ற வலைதளத்திலும் நிறைய உள்ளது.

  5. Why Syria’s Grand Mufti, Shaikh Ahmad Badruddin Hassoun cautioned India to pay heed to ‘external Wahhabi calls of Jihad’?

    By Ghulam Rasool Dehlvi, New Age Islam

    Much of the war in the conflict-ridden Muslim nations is still being waged as part of the gravest sectarian slugfest in Islamic history—Shia-Sunni divide. Syria has remained the current hotbed of this fierce battle. But surprisingly, the Grand Mufti and the highest Islamic authority in Syria— Shaikh Ahmad Badruddin Hassoun—maintains that he is both “Sunni and Shiite” at the same time.

    “I am Sunni in practice, Shiite in allegiance. My roots are Salafi [righteous], and my purity is Sufi [saintly]”, he said, as reported in an Arabic media outlet (1).

    However, in his recent visit to India on September 25, the Grand Mufti of the Syrian Arab Republic has warned against the radical Islamist creed—Wahhabism. He cautioned Indian Muslims, particularly the madrasa students, about the “external calls of Jihad from Wahhabis”. Expressing crucial concerns over the ‘sectarian terrorism’ playing havoc across the Muslim world, Shaikh Hassoun averred that it would endanger even India’s secular and pluralistic social fabric.

    Notably, the Grand Syrian Mufti was on a two-day visit to the capital of India, Delhi, along with Syrian ambassador to India, Riyadh Abbas and his political adviser Mazen Nasri. Extolling India for its ‘multicultural polity’, Shaikh Hassoun tried to draw a parallel and a close resemblance between India and Syria. He has pointed out that Syria is being targeted as it is “much like the Indian republic”. “The only country in the Arab region which has 25 different sects” and which is the “first secular country in the Middle East”, he said in an exclusive interview with India Today.

    One of the significant appeals Shaikh Hassoun made to Indians was to ‘steer clear of mercenaries and infiltrators’ and ‘stay unified against the Wahhabi extremism’. This was also endorsed in the statement of the Syrian ambassador to India, Riyadh Abbas, when he said, “Wahabism is the enemy of people and Islam and Indians should not take calls of Wahabis”.

    Tellingly, the Syrian Grand Mufti’s advice to the Indian government to act cautiously while dealing with the ‘ideological onslaught of Wahhabism’ came at a critical juncture. But it appears that many analysts have overlooked its significant ideological dynamics. They failed to assess as to why the topmost Islamic authority in Syria cautioned the Indian Muslims and their madrassa not to pay heed to ‘external calls of Jihad from Wahhabis’ and why there should be a serious deliberation of all religious heads on this issue to safeguard India.

  6. In fact, Wahhabism is not a mainstream Islamic sect like Sunni or Shia. Rather, it is an extremist ideology based on an exclusivist takfirist theology propounded by the medieval theologian, Sheikh Ibn Taimiyah and promulgated by the 18th century orthodox Islamist ideologue, Sheikh Ibn Abdul Wahhab Najdi. In his celebrated work in Arabic, “Kitab al-Tawhid’ (book on Monotheism), Najdi wrote: “Islam of a man can never be accepted, even if he abandons polytheism, unless he shows hostility towards the disbelievers and infidels, not only in his/her words but also in actions”……. “Kufr and Islam are opposed to each other. The progress of one is possible only at the expense of the other and co-existences between these two contradictory faiths is unthinkable”……“The honour of Islam lies in insulting Kufr (disbelief) and Kafir (disbeliever). One who respects the Kafirs, dishonours the Muslims. To respect them does not merely mean honouring them and assigning them a seat of honour in any assembly, but it also implies keeping company with them or showing considerations to them. They should be kept at an arm’s length like dogs………”

    Such exclusivist writings created the virulent theology of takfirism— declaring a Muslim apostate or beyond the pale of Islam—and thus justifying the wanton killings of innocent civilians across the world. An objective reading of Islamic history unravels this widespread global and historical phenomenon.

    The 14th century radical Islamist jurist Ibn Taimiyah’s famous Fatwa of Mardin, which is mentioned in 28th part of his book, Majmu’a al-Fatawa, justified the massacre of the non-combatant civilians of Mardin—a town located on the border between Syria and Turkey. The ISIS’ mouthpiece Dabiq (Issue 6, page 40) has also quoted this pernicious fatwa of Ibn Taymiyyah as theological justification for assassination of the moderate Muslim scholars and civilians declared ‘apostates’ in its view.

    But in a sharp rebuttal to this ferocious fatwa of Mardin, the mainstream Muslim scholars, particularly the Hanafi and Sufi scholars of his time refuted Ibn Taimiyah. They countered one more fatwa issued by Ibn Taymiyyah which encouraged those engaged in “jihad ma’alkuffar” (war against the infidels).

  7. Now, contrast Ibn Taimiyah with the present-day chief Islamist jurist and the ideological icon of the Ikhwan al-Muslimin (Muslim Brotherhood)—whose fatwas are authoritative for the global Wahhabi-Salafi community—the Qatar-based Salafist cleric, Shaikh Yusuf Al Qaradawi. In fact, Taimiyah’s fatwa of Mardin is synonymous with Qaradawi’s clerical call to kill the Syrian armed forces, civilians, religious clerics and even the common citizens which he calls ‘ignorants’ and “illiterates”. He blatantly states that it is permitted [in religion] to target “anyone who supports the Syrian regime” (2).

    Interestingly, Qaradawi is the first contemporary Islamist jurist who justified suicide bombing as a war tactic in ‘certain circumstances’. He gave this fatwa in his worldwide exposure via Al-Jazeera television through his weekly program “Sharia and Life” (al-Shari’awal-Hayat). Qaradawi’s fatwas justifying the violent jihad and suicide bombing provided theological legitimacy to those fighting the Kuffar (infidels) and Murtaddin (apostates). His fatwas also promoted and legitimized martyrdom operations referring to them as “a higher form of jihad for the sake of Allah”, as Al Arabiya reported (3).

    Notably, the Qatar-based Salafist jurist, Qardawi opined that “he was not alone in believing suicide bombings as legitimate form of self-defence for people who have no aircraft or tanks”. “Hundreds of other Islamic scholars are of the same opinion”, he said.

    The equivalent of Al-Qardawi in Turkey Sheikh Hayrettin Karaman, an Islamic jurist also known as ‘Erdoğan’s chief fatwa-supporter’, has approved of the torture, abuse and the mass purge of the innocent civilians in Turkey. Karaman has issued several religious edicts (fatwas) endorsing the wrongdoings of the Turkish President and absolving his responsibilities. He wrote several articles in the Erdoğanist newspaper, Yeni Şafak declaring the purge and persecution of the Turkish civilians as “lesser crimes” (4).

  8. Much like Yusuf al-Qardawi in Qatar and Sheikh Karaman in Turkey, the political theologians and Takfirist-Wahhabi preachers in India have also provided untenable theological underpinnings justifying certain acts of terror. They have long been calling for ‘jihad-e-Kashmir’ and ‘Ghazwa-e-Hind’ (jihadist expedition against India) through the religious sermons. The staunch Wahhabi preacher in Kashmir, Maulana Mushtaq Veeri regularly delivers sermons filled with an extremist provocation in the Valley’s Salafi mosques. Scores of his hate speeches are catching the imagination of the young Kashmiris towards Islamic State. Similar to his exclusivist underpinnings, the popular Salafist cleric in Malappuram, Shaikh Shamsudheen Fareed has also promulgated an extremist religious rhetoric in Kerala. They are on the path of Zakir Naik, the controversial Islamist preacher banned in India, who is reported to have made several notorious speeches justifying suicide bombing ‘a war tactic’ (5).

    Given the Grand Syrian Mufti’s word of warning about the “external calls of Jihad from Wahhabis”, Indian government should act cautiously to safeguard the internal security. As an urgent task in this context, political Islamist outfits in South India pledging an allegiance to the Ikhwan or Muslim Brotherhood must be scrutinised. The Kerala-based radical Islamist outfit Popular Front of India (PFI) is a fresh case in point. PFI, which claims to be an NGO, pledges an allegiance to the Muslim Brotherhood (Ikhwan-ul-Muslimin). It has also alleged links with terror activities like chopping of a Christian professor’s hand in Kerala’s Idukki and running the ‘Islamic State Al-Hindi Module’. A case was busted in which PFI planned to target prominent people and places in South India by involving the outfit Islamic State Al-Hindi, as the NIA report on government table revealed (6).

  9. Over the past few years, the Muslim Brotherhood’s movement, inspired by Sheikh al-Qaradawi, has been massively funded and supported in India’s Salafist circles particularly in Kerala and the Malabar coastline. This has systematically been pursued in a bid to indoctrinate the gullible Keralite Muslim youths into the theocracy of the two political Islamist ideologues: (1) Syed Qutub, the Egyptian theologian and the leading member of the Ikhwan who conceptualised other insurgent Islamist outfits in Egypt and (2) Maulana Abul A’ala Maudoodi whose writings politicized the Islamic doctrines and practices to an extent that he viewed every spiritual belief and act of Islam with a political outlook. Such an extremist ideology which turned Islam from being a peace-based spiritual faith into a religion of political dominion has created chaos in the West Asia. But more deplorably, now it appears to play havoc in India at the behest of Qatar.

    Regrettably, the Muslim Brotherhood continues to woo the gullible Muslim youths in South India. But while the radical thoughts of the Ikhwan are spawning across the South Asia, the mainstream Indian Muslims are worried about the vulnerable pluralistic ethos they pride themselves in. Given this, it is the pressing need of the time that India strengthens the spiritual Muslim centers like Khanqahs and Dargahs (Sufi shrines) as quality education centres, so they can rescue the young and impressionable Muslim minds from being misguided. Given the meagre resources they have, they cannot undertake this gigantic task. But do they have the option to do nothing, just stand and stare?

    (1) Source: alarabiya.net/articles/2007/11/08/41413.html)

    தமிழில் மொழி பெயா்த்து வெளியிட அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.தங்களின் மெயிலுக்கும் இந்த கட்டுரையை அனுப்பியிருக்கின்றேன்.

  10. தகவல்களுக்கு நன்றி அன்புராஜ் ஐயா.
    அரேபிய முட்டாள்தனங்களுக்கு முண்டு கொடுக்கும் ஈவேராமசாமிநாயக்கரின் நபர்கள், கம்யுனிஸ்டுகளும் பொய்கள் புரட்டுகளை தெரிவித்து இந்துக்களை குழப்பமடைய முயற்ச்சிக்கிறார்கள். பல இந்துக்கள் படிக்கும் தமிழ்ஹிந்து தளத்தில் இப்படியான கட்டுரைகள் பல வருவதால் தெளிவுபெற உதவும் என்று கருதினேன்.

  11. new age islam என்ற வலைதளம் இசுலாம் மதத்தை சீா்திருத்தம் செய்ய முயன்று வருகின்றது.நான் வழக்கமாகப் படிக்கின்றேன்.

  12. 2Child Marriage among Indian Muslims: The Mullahs Have Brought Shame to the Muslim Community, Yet Again

    By Arshad Alam, New Age Islam

    13 October 2017

    It is astounding. No sooner had the Supreme Court said that sex with a minor wife would amount to rape, Hashtags began to run on prominent news channels that Muslim clerics were opposing the verdict. It must have taken an hour or two for any Muslim mullah to actually come on camera and give his opinion. Right from the very beginning therefore, prominent media outlets had read the judgment in a particular way and consequently decided to make it into a debating point. That’s the not so subtle politics which the media is indulging in these days. The verdict actually does not single out any religion or community for special mention, the media houses polarised the debate as they wanted to give a particular spin to it. Of course they could not have done so without the special assistance received from our Mullahs who were more than willing to play the game for grabbing some eyeballs on prime time or for the simple reason that they really thought they would be doing good to community which they claim to represent.

    The objections raised by the Mullahs on the verdict fulfilled the objectives for which the media had put a spin on the story. Mullah after Mullah after Mullah opined that the judgment was in contravention of the Muslim personal law which flows from the Shariat. They contended that the Shariat proclaims that Muslim girls can get married as soon as they reach puberty. The language was hardly civil and one Mullah actually said that if a girl reached puberty at the age of 10, then she is allowed to marry. It defies logic that these Mullahs would still be stuck in the medieval morass of tribal Arabia despite living in a democratic country like India in the 21st century. The Mullahs have another arsenal: they shout you down if they cannot reason out with you. Thus the saner voices from within the Muslim community who were welcoming the judgment were shouted into silence by these Mullahs who kept repeating their age old nonsense that this was a conspiracy to malign Islam. …3

  13. Actually it is the custodians of Islam like the Mullahs who are maligning Islam today. Defending marriage with underage girls and that too under the cloak of religion is nothing but some sort of depravity. It is delusional to think that the codes which were operating in the 7th century Arabia would be applicable to all Muslims today located in very different contexts. Just yesterday, Egypt has proposed a bill to criminalize all marriages below the age of 18. Now Al Azhar, located in Egypt has been the source of intellectual fountainhead for so many of our Mullahs. The obvious question to be asked is that if Egypt can do it without any debate on whether it is contravening the Sharia or not, why can’t Indian Muslims also come forward and voluntarily raise the age of marriage for girls? But then here, we have the opposite trend: the Jamat e Islami in Kerala is actually campaigning for lowering the age of Muslim girls! What is wrong with such people and organization is the complete non-realization that the world and society has moved ahead and that if Islamic laws do not keep pace with them then this religion would be called as medievalist and far worse.
    I am of the firm belief that no Indian Mullah would want to marry their own daughters just after they reach puberty. So are they arguing that the rest of the Muslim community should follow one set of norms while they (the Mullahs) should have their own set of norms? Why is there a deep reluctance on the part of the Mullah community to acknowledge that theologically there seems to be a problem with Islam with regards to age of marriage of Muslim girls? And this is perhaps a problem which is symptomatic of a deeper malaise within the Muslim community itself.

  14. This malaise is the stark refusal of the community and the religious figures to look itself in the mirror and see the horrors of the theology of silence which they have practising for centuries. There should be no beating around the bush. Let’s accept that Islamic theology permits marriage with minor girls and that centuries of Islamic scholarship and practice have upheld it. If the Mullah is afraid that questioning such a tradition will amount to weakening it, then let it weaken. After all, traditions are meant to be broken. And if the tradition subjugates a section of the population, then it should be broken with a vengeance. Secondly, the Mullahs also have a problem in abrogating such practices like marriage with minors because it is said that the Prophet himself married Ayesha when she was merely nine years old.

    Now, rather than questioning whether this actually happened, the Mullahs have taken this as a fact because it forms a part of the hallowed tradition. They should perhaps take inspiration from the Pakistani theologian Javed Ahmed Ghamidi who has argued that the material on which we know that the age of Prophet’s wife Ayesha is itself doubtful. He argues that it does not make sense to marry a minor when in fact the tradition describes that the Prophet was looking for someone who could take care of his household. It defies common sense that a minor would be able to fulfil this particular need of the Prophet. Ghamidi is therefore right in asserting that due to the various contradictions in the Hadith traditions, he suspends his judgment on the age of Prophet’s wife. Why a similar exercise cannot be done by Indian Mullahs is simply baffling.

  15. Even if we come to the conclusion that Prophet did in fact marry a minor, then a historical and contextual reading of this decision can always be done. What was right during the Prophet’s time is no longer valid. What was Sharia (the path) at the time of the Prophet is no longer the Sharia of the present. Contextualising the actions of the Prophet in its time is perhaps the only way out of the morass which we find ourselves in today. Rather than shying away from the problem, we must first have the courage to recognise it and then throw it open for debate. Pretending that everything is fine with Islam only obfuscates the problem and has already done irreparable harm to the community and the religion. Obfuscation of the problem also leads to a belligerent and senseless defence of something which is clearly wrong and unethical.

    Arshad Alam is a columnist with http://www.NewAgeIslam.com

  16. பாக்கிஸ்தானில் கூடுதல் திருமணம் செய்ய மனைவியின் மற்றும் குடும்பநல மன்றத்தின் முன் அனுமதி தேவை.பெறாவிட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டணை- மேற்படி சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் உள்ளது.விபரங்கள் new age islam

  17. இந்தியாவில் ஏன் முஸ்லீம்கள் அரேபிய சட்டம் அரேபிய சட்டம் என்று கும்மாளம் போடுகின்றாா்களே! ஏன்.? மோடி அரசும் நீதிமன்றமும் தான் தற்சமயம் இப்பிரச்சனையை உறுதியான முடிவோடு கையில் எடுத்துள்ளது. முஸ்லீம் சமூகநலம் காக்க திரு.நரேந்திர மோடி அவா்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் அருமை. அனைவரும் மனதார வாழ்த்துகின்றாா்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *