ஒரு பெண் ஒரு சின்ன மான் குட்டிக்கு தன் மார்பில் பால் கொடுக்கும் புகைப் படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு விலங்குகள் மீதும் மரங்கள் மீதும் இயற்கையின் மீதும் காதல் கொண்ட மக்கள் பிஷ்னோய் மக்கள்
தங்கள் கானகப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மானைக் கொன்றதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது வழக்கு போட்டவர்கள் இந்த பிஷ்னோய் மக்கள் தான்.
வைல்டஸ்ட் இந்தியா என்னும் டிஸ்கவரி சேனல் டாக்குமெண்ட்டரி படத்தில் இந்த மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் குறித்து சிறப்பாகப் படம் எடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முதல் எபிசோடு ராஜஸ்தானின் பாலை நிலங்களையும் அங்கு வாழும் விலங்குகளையும் மிக அழகாக பிருமாண்டமாக காட்டுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வித மான்கள் புனிதமாகக் கருதப் படுகின்றன. ஆகவே அவைகள் அங்கு பாதுகாப்பாக உணர்கின்றன. அழகிய குட்டி குட்டி மான்கள் அங்கும் இங்கும் சுதந்திரமாக அலைகின்றன. அவற்றை அங்கு வாழும் பிஷ்னோய் பழங்குடியினர் அன்பாக உபசரிக்கிறார்கள். பாதுகாக்கிறார்கள். ஒரு பிஷ்னோய் பழங்குடிப் பெண் ஒரு மான் குட்டிக்குப் பால் கொடுக்கும் ஃபோட்டோ ஒன்றை பலரும் பார்த்திருந்திருக்கலாம். பிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை. அவர்கள் மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம். ஆகவே அவை எந்தக் கட்டத்திலும் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள். படையினர் அவர்களைக் கொல்லக் கொல்ல மொத்தம் 393 பேர்கள் அங்கு அந்த மரத்தைப் பாதுகாப்பதற்காக உயிரை விட்டிருக்கிறார்கள். இதை பிஷ்னோய் பழங்குடி மக்களின் மூத்தவர் ஒருவர் குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்கிறார்.
பின்ணணியில் வர்ணணையாளர் உருக்கத்துடன் இது 300 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த உண்மைச் சம்பவம் அவர்கள் மரங்களைக் காப்பதற்காக உயிரையே விட்டிருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல 393 பேர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து அந்த மரத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் இந்துக்கள் என்று சொல்கிறார்.
அதைக் கேட்கும் நான் விவரிக்க இயலாத பரவசம் அடைந்தேன். இந்த போஷ்னோய் இன மக்களின் குரு ஜம்பேஷ்வரர். அவர் 14ம் நூற்றாண்டில் அந்த மக்களுக்கு 29 முக்கியமான கடமைகளைக் கட்டளைகளாக இட்டிருக்கிறார் அவையே இன்றும் போற்றப் படுகின்றன. கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலான கட்டளைகள் விலங்குகளையும், மரங்களையையும் சுற்றுச் சூழலையும் போற்றும் பாதுகாக்கும் பேணும் கட்டளைகளே.
சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் சூழலியலின் சமன்பாட்டை பேணுவதின் முக்கியத்துவத்தையும் அவர் விஷ்ணு வழிபாட்டுடன் கூடவே போதித்திருக்கிறார். இயற்கை அழிந்தால் மனிதன் வாழ முடியாது. அங்குள்ள குரங்குகளும், மாடுகளும், பறைவகளும், மான்களும், மரங்களும் இல்லையென்றால் அங்கு மனிதனும் அழிந்து விடுவான் என்று போதித்திருக்கிறார். ஏனென்றால் அவரும் அவர் இன மக்களும் இந்துக்கள்.
ஒரு மரத்தைக் காப்பாற்றுவதற்காக 393 மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்ததும் இதே இந்தியாவில்தான் நடந்துள்ளது. ஆனால் இன்றோ கும்பல் கும்பலாகப் போய் இந்தியாவின் நூறாண்டுகள் வயதுள்ள ஒரு செம்மையான மரத்தை வெட்டுகிறோம். அவை வெறும் மரங்கள் அல்லவே. இந்த நாட்டின் அரிய பொக்கிஷங்கள் அல்லவா? அந்தப் பழங்குடி மக்களிடம் இருந்து தமிழர்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்? மரங்களை வெட்டியதும் இல்லாமல் அப்படி வெட்டியவர்கள் தமிழர்கள் என்பதினாலேயே அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று போராடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட கலாசார சீரழிவை அடைந்து விட்டது தமிழ் நாடு? மரங்கள் இந்தியாவின் ஜீவ நாடி. குறிப்பாக தமிழ் நாட்டில் பெரும் அளவு மர வன அழிப்பினால் தொடர்ந்து மழை அளவு குறைந்து பாலைவனமாகி வருகிறது. அது குறித்த சூழலியல் பிரக்ஞை சற்றும் இன்றி தமிழர் அரசியல் செய்து வருகிறார்கள் தமிழ் நாட்டு மக்கள். மனித உயிர்களை விட மரங்கள் மேலானவையா என்று ஒரு இந்த்துவ நண்பரே கேட்க்கிறார் என்றால் அவருக்கு மேற் சொன்ன பிஷ்னோய் மக்கள் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனதுதான் காரணம். மனித உயிர்களை விட மரங்கள் மேலானவையா என்றால் என் பதில் ஆம் என்பதே.
ஒரு மரம் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. ஒரு மரத்தை வெட்டுவது நிகழ்கால மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். ஆகவே ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுபவன் பல நூறு பேர்களைக் கொன்றவனாகின்றான் ஆகவே அப்பேர்ப்பட்ட கொலைகாரனைச் சுட்டுக் கொல்வதில் எந்தத் தவறும் இல்லை. மரத்துக்காக உயிர் இழந்த அந்த பழங்குடி மக்களை ஒப்பிட்டால் காசுக்காக நூற்றாண்டுகள் வளர்ந்த மரங்களை வெட்டுபவர்கள் மகா பாவிகள். தமிழர்கள் இந்த ராஜஸ்தான் பழங்குடியினரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. வெட்டி ஜம்பமும் போலிப் பெருமிதமும் போலி மொழி வெறியும் தீயவைகள் அனைத்தையும் ஆதரிக்கும் சீழ் பிடித்த மனப்பாங்குமே இன்றைய தமிழ் நாட்டினரின் கலாசாரமாக மாறிப் போய் விட்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஒரு சீழ் பிடித்த கேடு கெட்ட சமூகத்தில் நான் ஒரு அங்கம் என்று சொல்லிக் கொள்ள வெட்க்கமும் வேதனையும் அடைகின்றேன். தமிழர்களின் பண்பாடு இது அல்ல. முல்லைக்குத் தேர் கொடுத்த பண்பாடு அது. மரங்களை வழிபடும் கலாசாரம் அது. அதுவே இன்றைய தமிழகத்தின் தேவை. மரம் வெட்டிகளைப் போற்றி ஆதரிப்பது வெட்க்கக் கேடான அருவருக்கத்தக்க ஒரு விஷயம் என்பதை என்று தமிழ் நாட்டு மக்கள் உணரப் போகிறார்கள்?
மானுக்கு தாய்பால் ஊட்டும் காட்சியையும் தாங்கள் வெளியிட்டு இருக்கலாம். அருமையான தகவல். இயற்கையை பாதுகாக்கும் அற்புதமான வாழ்க்கை.