அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)

முன்னாள் தமிழக முதல்வரும் முதுபெரும் தி.மு.க.தலைவருமான மு.கருணாநிதி தனது 94ம் வயதில் மரணமடைந்தார்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார்க்கும் திமுக கட்சித் தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வ.மு.முரளி: 

ஒரு மூத்த அரசியல் தலைவர் இறக்கும்போது நெக்குருகுவதும், அஞ்சலி செலுத்துவோர் வரிசையில் இடம்பிடிக்க அலைபாய்வதும் இயல்பானதே. அதுவும் அவர் சார்ந்த திமுக பல்லாண்டு காலம் மாநிலத்தை ஆண்ட கட்சி, வருங்காலத்தில் ஆள வாய்ப்புள்ள கட்சி என்னும்போது, அவருடன் தனது பந்தத்தை வெளிப்படுத்த பலரும் துடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
.
இன்று உணர்ச்சிகளின் ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போது, தெளிவான சிந்தனைக்கோ, அவரே பெயரளவிலேனும் வலியுறுத்திய பகுத்தறிவுக்கோ, அவர் பெரிதும் பிராபல்யப்படுத்திய சுயமரியாதைக்கோ எந்த வேலையும் இல்லை. ஆனால், எனது மானசீக குருநாதர் பாரதி உரைத்த அதே ‘நெஞ்சுக்கு நீதி’யைப் படித்து வளர்ந்த என்னால், பிறருடன் அந்த வரிசையில் நிற்க முடியவில்லை. அதேசமயம், தமிழ்ச் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் என்ற முறையில், திருவாளர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திப்பது ஓர் இந்து என்ற முறையில் எனது கடமை.

எந்த ஒரு மனிதரும் நல்லது, கெட்டது என்ற இரு வினைகளின் இடையே ஊடாடுபவர் தான். அவர் இயற்றிய நன்மைகளுக்கு நன்றி. அவர் செய்த தீமைகளுக்கு நான் நம்பும் இறையோ அல்லது அவர் நம்பிய இயற்கையோ பாடம் கற்பிக்கும். அதில் எனது பங்கு ஏதுமில்லை. இப்போதைக்கு, பண்பாடு கருதி, அவர்தம் குடும்பத்தினருக்கும், கழக சகோதரர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பது சக மனிதன் என்ற வகையில் எனது கடமை.

அவர் காலமாவதற்கு முன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினரும் வீட்டுப் பெண்களும் சூழ்ந்திருந்த காட்சி என்றும் நமது குடும்பங்களில் காணக் கிடைப்பது. அதற்கு அவரது முன்னோர் இயற்றிய தவம் காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே மிகவும் புண்ணியம் செய்த ஆத்மாக்களுக்கு மட்டும்தான் இத்தகைய சூழல் கிடைக்கும். வாழ்நாளெல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களை ஏகடியம் பேசிய அவருக்கு- அவர் நம்பாத இறைவனை அவரது வீட்டுப் பெண்கள் வழிபட்டதாலும் கூட இந்தப் புண்ணியம் கிடைத்திருக்கலாம். அவர்களுக்காக, அவர்களது வீட்டுப் பெரியவரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது சக தமிழன் என்ற வகையில் எனது கடமை.

அவரது அரசியல் கொள்கைகளுடன் நான் முற்றிலும் மாறுபட்டவன். இருப்பினும் அவர் சார்ந்த திமுகவுக்கு இருமுறை சட்டசபைத் தேர்தல்களிலும் இரு முறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் நான் வாக்களித்திருக்கிறேன். அது அந்தந்த நேரச் சூழ்நிலைகளை அனுசரித்து எடுத்த முடிவு. அதேசமயம், அவரது தேசிய விரோத, ஹிந்து விரோத, இனத் துவேஷக் கருத்துகளை எதிர்த்து சிந்தித்ததால்தான் நான் வளர்ந்தேன்.

அவரை நான் கடுமையாக விமர்சித்து பலமுறை எழுதி இருக்கிறேன். அவரது நிர்வாகத் திறனையும், கடும் உழைப்பையும், நகைச்சுவை உணர்வையும் பாராட்டி சிலமுறை எழுதி இருக்கிறேன். ஒருவகையில் எனது சிந்தனையின் எதிர்த் துருவம் அவர்.

ஹிந்து மத துவேஷம் மட்டுமே மதச்சார்பின்மை என்ற கண்ணோட்டத்தை உருவாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. ஹிந்து மத வெறுப்பு மட்டுமே பகுத்தறிவு என்ற அபாய விஷத்தை பரப்பியதிலும் அவரது ஆற்றல் வெகுவாகக் கழிந்தது. அவரது சுய மரியாதையும் தமிழுணர்வும் போலித்தனமானவை என்பதை 2009ல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது தமிழக மக்கள் உணர்ந்தனர். அங்கு லட்சக் கணக்கில் சகோதர தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது நமது தமிழர் தலைவர் கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடாத்திக் கொண்டிருந்தார். பொது வாழ்வில் தூய்மை- தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் என்ற கோட்பாட்டுக்கும் அவருக்கும் வெகுதூரம் என்று அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள். அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பு என்பதும் அரசியல் மேலாண்மை காரணமாக அங்கீகரிக்கப்பட்டதே. ஆட்சி அதிகாரம் காரணமாகவே அவரது எழுத்துகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் ஊழலை ஒரு இலக்கணமாக வளர்த்தெடுத்ததில் அவரது பங்களிப்பு முதன்மையானது.

இதையெல்லாம், இந்த நாளில் சொல்ல வேண்டுமா என்று பலர் பூசி மெழுகக் கூடும். அல்லது, கட்சி அரசியல் சார்ந்தவர்களின் எதிர்வினையை அஞ்சி, பலரும் நமக்கென்ன என்று இருக்கக் கூடும். என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்!’ என்று கூறிய சான்றோர் வழி வந்தவர்கள் நாம். நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் சிறிதேனும் நம்பிக்கையை விதைத்துச் செல்ல வேண்டும். செல்லரிக்காத சில வித்துக்களையேனும் நாம் சேமித்துவைத்துச் செல்ல வேண்டும்.

கூட்டத்தோடு கூட்டமாக ஒப்பாரி வைப்பவர்களாலோ, அறிவுவயப்படாமல் உணர்ச்சிவசப்படுவோராலோ உண்மைகளை உரக்கச் சொல்ல முடியாது. தவிர, இங்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கொள்கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்தான். அதனால்தான் சமசிந்தனையின்றி, கருணாநிதிக்கு புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒருசேரக் கிடைக்கின்றன.

ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. அவ்வாறின்றி, போலித்தனமான கோஷங்களோ, அரசியல் லாபத்துக்காகப் பாடும் புகழ்மொழிகளோ, கடுமையான வெறுப்புடன் உமிழும் சாபங்களோ, நாயக வழிபாட்டுணர்வால் மிதமிஞ்சி வரையும் புராணங்களோ அவரை மதிப்பிட உதவாது. காலம் என்பது கங்கெனச் சுழன்று கீழ் மேலாகும், மேல் கீழாகும். அந்தக் காலம் நிச்சயம் ஒவ்வொருவரையும் மதிப்பிடும். திருவாளர் கருணாநிதியின் இடமும் அப்போது தெளிவாகும்.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை. அந்தக் குறையைப் போக்கவேனும் இதை எழுதித் தீர வேண்டியிருக்கிறது.

அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆயினும் எனது சிந்தைக்கு உரமூட்டிய எதிர்த்துருவம் அவர் என்ற நினைவு என்றும் எனக்குண்டு. ஆகவே, அவரது ஆன்மா நற்கதி அடைய நான் பிரார்த்திக்கிறேன்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

(வ.மு.முரளி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

26 Replies to “அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)”

  1. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். த்ராவிடம் தமிழகத்திற்குச் செய்த கேடுகளுள் பெரியது தமிழர்களை ஸம்ஸ்கார ஹீனர்களாக்கியது. இல்லாத பொல்லாத ஸம்ஸ்காரங்களை செய்து கருணாநிதியின் ப்ரேதத்தை இழிவு செய்திருக்கிறார்கள். ப்ரேதம் நல்லகதியை அடையாவிட்டால் தேசத்துக்குக் கேடு. தேவாரம் திருமுறை திருப்புகழ் ராமாயணம் பாகவதம் என்று அவரவரால் இயன்ற பாராயணம் செய்து முறையான ஸம்ஸ்காரம் கிடைக்காத இந்த ப்ரேதம் நல்ல கதியை அடைய ப்ரார்த்திப்போம். அது அந்த ப்ரேதத்திற்கும் நல்லது. தேசத்திற்கும் நல்லது. வேலும் மயிலும் சேவலும் துணை.

  2. Mu Ka removed all the check posts in Coimbatore, set up by JJ to control the flow of Muslim extremists. When Mu.Ka came to power, he removed all of them.

    Result – 13 bomb blasts in a single day in Coimbatore.

    How do you account for the death of manjolai tea estate workers due to police excesses during his regime?

    His Veeranam scam in 1971 was described as “scientific corruption” by the sarkarai commission report.

    He withdrew the case filed in court for the formation of cauvery river water authority board, on the request of the then PM Indira Gandhi. Is this not a betrayal of tamil interests?

    Katchatheevu was ceded to Sri Lanka during his tenure as CM.

    There are many more.

    (Edited and published)

  3. சாதி மற்றும் தீண்டாமை பேய்களின் கொண்டத்தை அடகக வேணடிய அவசியத்தை நாடு உணா்ந்தபோது தந்திரமாக அந்த பிரச்சனையை பார்ப்பனர்களுக்க எதிராக மட்டும் திருப்பி மக்களை ஏமாற்றியவா். பிற சாதி யினர் இன்னும் தீண்டாமையை கடைபிடித்து வரும் நிலையில் இன்னும் அது தீா்க்கப்படாமல் உள்ளது.கோவை ஈரோடு மாவட்டங்களில் சாதி தீண்டாமை இன்றும் அதிகம்.

    கலைஞா் என்றாவது தீண்டாமைக்கு காரணமான பார்ப்பனா் அல்லாத சாதியை கண்டித்ததுண்டா ? திராவிட இயக்கம் என்றம் பார்ப்பனா்கள் செய்த ததீண்டாமையை மட்டுமே எதிா்த்தார்கள் .

  4. ஈவேரா வழியில் வந்த அண்ணா ஈவேராவுக்கு மாற்றுப்பாதையாக ஈவேராவை முற்றிலும் நிராகரித்து , ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற திருமூலரின் சித்தாந்தத்தை தூக்கி பிடித்தவர் நாங்கள் பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம் பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்கமாட்டோம் என்று சொன்னார். கலைஞரை பொறுத்தவரை அவர் அண்ணா வழியில் இருந்து விலகி , திமுகவை திசை திருப்பி, குங்குமம் வைத்திருந்த ஆதிசங்கரர் எம் பியை பார்த்து என்ன நெற்றியில் ரத்தமா ? என்று நக்கல் அடித்தவர். நாடகம், சினிமா ஆகியவற்றில் வசனம் எழுதி தந்து தனது எழுத்தாற்றலையும், மேடைகளை பேசி பேச்சாற்றலையும் வளர்த்துக்கொண்டு , அவற்றை பயன்படுத்தி பலரை கவர்ந்தார். இந்து மதத்தில் நிலவிய சில தவறான பழக்கங்களை வைத்துக்கொண்டு , மதத்தின் மீது தேவை இல்லாமல் குற்றம் சொல்லி, கடும் விமரிசனங்களை வைத்த அவர், கிறித்தவம் பற்றி ராபர்ட் க்ரீன் இங்கர்சால் போன்ற உண்மையான பகுத்தறிவு வாதிகள் வைத்த விமரிசனங்களை தனது பிரச்சாரத்தில் ஒருபோதும் பேச துணிந்ததில்லை. அதே போன்று இஸ்லாத்தினை கடுமையாக விமரிசித்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த பல சீர்திருத்த வாதிகளில் யாரையும் அவர் பாராட்டியதோ , அவர்களுக்கு உதவிகள் செய்ததோ கிடையாது. இந்துக்களை பிளவு படுத்தி , தனக்கு ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதில் கவனம் செலுத்தினாரே ஒழிய , மற்ற படி இவர் உண்மையான சீர்திருத்தவாதியும் அன்று.

    இந்து பெண்களுக்கு திருமணத்திற்கு பின்னரும் பெற்றோர் சொத்தில் பங்கு உண்டு என்று இவர் கொண்டுவந்த சட்டத்திருத்தம் மகாராஷ்டிரம், ஆந்திரம், ஹரியானா ஆகிய சில மாநிலங்களில் செய்யப்பட சட்ட திருத்தத்தின் தொடர்ச்சி தான்.

    பிற மதவாதிகளின் வாக்குகளை எப்படியாவது வாங்கி தனது கட்சிக்கு அரசியல் ஆதாயம் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களை எவ்வித கடுமையான விமரிசனமும் செய்யாமல் வாய்மூடி இருந்தார் என்பதே உண்மை.

    பிரிவினைவாதிகள் இவரது ஆதரவை எப்போதும் மறைமுகமாக பெற்றே வந்தனர் என்பதே வரலாறு. இலங்கை தீவிரவாதிகள் சென்னையில் புகுந்து பத்மநாபாவை படுகொலை செய்து, அதனுடன் சேர்த்து மேலும் பதினைந்து பேரை யமலோகம் அனுப்பி வைத்தது இவருடைய ஆட்சியில் தான். அது மட்டுமில்லாது , அந்த சிவராசன் உள்ளிட்ட கொலைகாரர்களை பத்திரமாக இலங்கை சென்று சேரும் வரை தடுக்கவேண்டாம் என்று தலைமை செயலாளர் மூலம் அறிவுரை வழங்கியதும் இவர் தான். அதன்விளைவாகவே அந்த கொலைகாரர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்து ராஜீவ் படுகொலையை தமிழகத்தில் அரங்கேற்றினார்கள்.

    இலங்கையில் இருந்து திரும்பிய இந்திய அமைதிப்படையை இவர் வரவேற்க செல்லவில்லை என்பதுடன் அப்போது அவர் பேசிய பல பேச்சுக்கள் மிகவும் கேவலமான தேசவிரோத பேச்சுக்களே ஆகும்.

    நவோதயா வித்யாலயாக்களை 1989 ஆம் ஆண்டிலேயே கட்டுமரம் தடுத்ததால், அதன் பின்னர் வந்த ஜெயலலிதா அரசுகளும் , அதே பஜனையை தொடர்ந்தனவே ஒழிய, எல்லா பிரச்சினைகளுக்கும், காவிரியில் ஆரம்பித்து , கட்டுமரமே ஆரம்பப் புள்ளி. ஜெயலலிதா ஆட்சியில் எவ்வளவோ தவறுகள் இருந்தாலும், திமுக ஆட்சியை விட அது பல மடங்கு உயர்ந்ததாக இருந்ததால் தான் மக்கள், அதனை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர். முதல் முதலில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் 1991 -96 காலக்கட்டத்தில் அவர் மோசமான ஆட்சியை தந்தார் என்பது உண்மை. அதன் பிறகு அவர் சுதாரித்துக்கொண்டு மாநில நலனில் சிறிது அக்கறை காட்டி மின் தட்டுப்பாடை போக்கினார். திமுக என்றாலே ஒரே ஒரு குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தும் வசூல் குழு என்பதே உண்மை. ராஜாஜி, இந்திரா, வாஜ்பாய், என்று யாராஇருந்தாலும் அவர்குக்கு வேண்டியபோது , முறையே மூதறிஞர் நேருவின் மகள், வாஜ்பாயி நல்லவர் என்றார். வேண்டாத எதிரணியில் இருந்தபோது, குல்லுகபட்டர், ரத்தக்காட்டேரி, பாம்பு பரதேசி, பண்டாரம் என்பார் . இதுதான் அவரது அரசியல் பண்பு. பெருந்தலைவர் காமராஜரை எருமை மாட்டு தோழன், கட்டைப்பீடி, கருவாட்டுக்காரி பெற்ற பிள்ளை என்றெல்லாம் அன்புடன் மொழிந்ததை நாடு மறக்காது.

    (Edited and published)

  5. Nil nisi Bonum = இறந்தவர்களைப் பற்றி நல்லதே பேசவேண்டும் என்பார்கள். ஆனால் பல ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு அரசியல் பதவி வாயிலாக பல விஷயங்களில் பல நிலைகளில் பல முறைகளில் தாக்கம் ஏற்படுத்திய கருணாநிதியைப் பற்றிய உண்மையான விமர்சனம் நல்ல அம்சங்களைக் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியாது. இந்த அஞ்சலிக் குறிப்புகள் பல அம்சங்களைச் சுட்டிக்காட்டிவிட்டன. அவர் செய்த ஒவ்வொரு விஷயத்திலும் குறும்புத்தனமும் விதண்டாவாதமுமே மிஞ்சுகிறது. புரை தீர்ந்த நன்மை என அவர் செய்தது எதுவும் இல்லை. ஒரு தலைமுறை மதுவிலக்கின் நன்மையை அனுபவித்த நாட்டில், மதுவை மீண்டும் புகுத்தி நாட்டைக் கெடுத்தார். தமிழ் நாட்டின் கல்வித்தரத்தைத் தாழ்த்தினார். தமிழ் நாட்டில் தேசீய உணர்வை அறச்செய்தார். ஹிந்துக்களைத் திட்டிக்கொண்டே ஹிந்து கோவில்களைக் கொள்ளையடிக்க வைத்தார். பத்திரிகைகளைப் பயமுறுத்தினார். [மவுன்ட் ரோடு மஹாவிஷ்ணுவும் அவர் காலடியில் வந்து விழுந்தது] தன் சொந்த நலனுக்காக காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெற்று தமிழ் நாட்டிற்குப் பெருத்த, நிலையான துரோகம் செய்தார். தமிழ் நூல்களுக்கு புதிய உரை எனச் சொல்லி தமிழ் இலக்கியப் பண்பாட்டிற்கே சமாதிவைத்தார். அறிவியல் கண்ணோட்டமில்லாத இனவாதத்தைப் பற்றி, தன் பகுத்தறிவு வெறுமையை பறைசாற்றினார். பகுத்தறிவு என்ற போர்வையில் இந்திய ஆன்மீகஇயலின் மீது வெறுப்பை வளர்த்தார்.அரசியலிலும் ஆட்சியமைப்பிலும் எல்லா நிலைகளிலும் லஞ்ச ஊழலை அரிய கலையாகவே போற்றி வளர்த்தார் அன்னிய நாட்டு மதத்தை வலிந்து ஆதரித்தார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குதர்க்கமாகவே நடந்துகொண்டார்.
    ஜயலலிதாவுடன் ஒப்பிட்டால் இவர் மேலாக இருக்கலாம். அது, குருடனுடன் ஒப்பிட்டால் ஒற்றைக்கண்ணன் பரவாயில்லை என்பது போன்றது.ஆனால் அந்தப் பார்வையும் சரியாக இல்லையே!
    ஒவ்வொரு விஷயத்தையும் வரும் நாட்களில் நிதானமாக யோசித்துப் பார்த்தால் கருணாநிதி தமிழ் நாட்டின் பெரிய துரோகியாக இருந்தார் என்பது தெரியவரும். .

    The evil that men do lives after them;
    the good is oft interred with their bones.
    William Shakespeare

  6. B.R.மகாதேவன் எழுதிய அஞ்சலிக் குறிப்பை தமிழ்ஹிந்து பிரசுரித்திருக்கவே கூடாது என்று பல வாசகர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதனடிப்படையில் அந்தப் பகுதி இப்பதிவிலிருந்து நீக்கப் படுகிறது. தவறுக்கு வருந்துகிறோம்.

  7. கருணாநிதி க்கு பாரதிய ஜனதாயோடு கூட்டணி இருந்தபோது வோட்டு போட்டேன். அதற்கு முன்போ பின்போ திமுக வுக்கு ஒட்டுபோடவில்லை.காரணம் இந்து விரோத போக்குதான். காயல்பட்டணத்தில் ” என் பிணத்தின் மீது நடந்து சென்று தான் முஸ்லீம்களை ஒருவன் காயப்படுத்த முடியும் ” என்று தேவையே இல்லாமல் பேசி கைதட்டு வாங்கினாா்.
    தலித் மக்களுக்கு அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்பதை மறுக்க இயலாது.அனைவரும் கைவிட்ட தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்து பேயாட்டம் போட்ட போது அவர்களுக்கு கை கொடுத்து உதவியவா் திரு.தட்சணா மூர்த்தி என்ற கருணாநிதியேதான்.அரசு இயந்திரம் மிகவும் பாழாக்கிய -நிதி மேலாண்மையில் பெருமையும் அன்னாருக்குதான்.இறந்தவா்களை பாராட்டிப் பேசுவதுான் சிறப்பு.இருப்பினும் சில குறைகளையும் நினைத்து பார்ப்பதில் தவறு இல்லைதான்

  8. Your article shows his successful career which has lot of praise and criticism but above all if you check the amount of people benefite. In summary he did his job more than expected. Let’s thank him for his contribution towards tamilnadu one of economically leading states.

  9. எந்த ஒரு இனமும் வாழ்வில் உயர சில விஷயங்கள் அடிப்படையாக அமைகின்றன. அவற்றை நாம் இழந்தால் அந்த இனமோ, சமுதாயமோ வாழ்வில் சிறக்க முடியாது.

    1. ஒரு சமுதாயம் தன்னுடைய வாழ்வில் நம்பிக்கை மிகுந்த , நேர்மறை எண்ணங்களை மக்களிடம் விதைக்கவேண்டும். அவநம்பிக்கையை விதைக்க கூடாது.ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழன் காட்டுமிராண்டி என்றும் சொல்லி, தமிழினத்தை கேவலமாகப் பேசி , சமுதாயத்தில் தாழ்வு மனப்பான்மையையும், அவநம்பிக்கையையும் விதைத்தவர் ஈவேரா. அவரை தூக்கி பிடித்து, திருவரங்கம் கோயில் எதிரே திரும்பும் முனையில் சிலை வைத்து ,தமிழ் சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக இழிவு படுத்தியவர் கலைஞர்.

    2.இரண்டாவது கூறு : முன்னேறும் எந்த சமுதாயமும், இனமும் , பொருளாதார ரீதியாக உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய வாழ்வியல் கட்டாயங்களை சந்திக்க , உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்ள, தேவையான பிறமொழித் திறமை . இந்த பிறமொழி திறமை என்பது அன்றாடம் பேசும் சுமார் இருநூறு வாக்கியங்களில் பாண்டித்தியம் பெறுதலை குறிக்கிறது. இந்தியாவில் சுமார் தொண்ணூறு கோடி மக்களிடம் தொடர்பு கொள்ள தேவைப்படும் இந்தி மொழிமீது தேவை இல்லாத வெறுப்பை உருவாக்கி , வெறுப்பு அரசியல் செய்து , சமுதாயத்தின் தகவல் தொடர்பு திறனை பாழ்படுத்தியவர் தான் கலைஞர். தன்னுடைய பேரன்கள் படித்த இந்தியைப் பாமர மற்றும் ஏழைத் தமிழன் படிக்கமுடியாதவாறு குந்தகம் விளைவித்தார்.

    உலகில் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ளமுடியாத சமுதாயம் குட்டையில் தேங்கிய நீரைப் போன்று பாசி படர்ந்து, தீயதாக, பயனற்றதாக போய்விடும்.

    3. மூன்றாவதாக எந்த சமுதாயமும் தன்னுடைய சிறப்புக்களை வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது. ஆனால் பிறரை இழித்துப் பேசுவது, எண்ணிறந்த எதிரிகளை தான் உருவாக்கும். நான் நல்லவன் என்பவன் உலகில் எங்குமே வரவேற்கப்படுவான். ஆனால் நான் மட்டுமே நல்லவன் என்று சொல்பவனுக்கு உலகில் எங்குமே இடம் கிடைக்காது. அதனால் தான் இவர்கள் உருவாக்கிய திராவிடம் என்ற அரசியல் கொள்கை திராவிட நிலப்பரப்புக்களில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் ஏற்கப்படவில்லை. எங்கும் போணியாகாத அந்த போலி சரக்கை தமிழகத்தில் வியாபாரம் செய்து குடும்பத்திற்கு மட்டும் சொத்துக்குவித்து, சாதனை புரிந்தனர்.

    4. மனிதன் உழைத்து முன்னேற தேவை உடலுரம். அந்த உடலுரத்தை அழித்து, தமிழக இளைஞர்கள் சாராயக் கடை வாசலில் பிணம் போலக் கிடப்பது வேதனை தரும் காட்சி. அந்தக் காட்சிக்கு அடிப்படை பெரியவர் 1971 ஆம் ஆண்டுதிறந்த சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் தான். நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகியும் அந்த தீமையில் இருந்து தமிழகம் விடுபட முடியவில்லை.

    5. நாத்திகம் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவு தான். என்னுடைய தந்தையாரிடம் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, இந்து நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் , சம்பிரதாயங்களையும் கண்டபடி கேலி செய்தும், வாய்க்கு வந்தபடி விமரிசித்தும் வரும் தமிழக நாத்திகர்கள் என்று நாம் சொல்லும் திக போன்றவர்களை பற்றி நான் கேட்டபோது, மனிதன் அனுபவக் குறைவால் பல தவறான கருத்துக்களை கொண்டிருப்பான், ஆனால் அனுபவம் ஏற ஏற , வாழ்க்கை அவனுக்கு பல உண்மைகளை வெளிப்படுத்திவிடும். அப்போது தான் இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அம்சம் மட்டுமே என்று உணரத்தொடங்கிவிடுவான். அப்போது அவன் போக்கு மாறிவிடும். அதனை போல அந்தப் பழமையான வேத காலத்தில் இருந்த சார்வாகம், இன்றைய போலி நாத்திகர்கள் எல்லாமே ஒன்றல்ல. அவற்றில் ஏராளம் வேறுபாடு உள்ளது. ஆனால் உண்மை நாத்திகம் என்பது தேடுதல். அது ஆன்மீகத்தையோ, ஆன்மீகவாதிகளையோ, கேலி செய்வது அல்ல. கேள்வி கேட்பது மற்றும் அந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் அதில் தெளிவு பெறுவதும் தான் .இந்து மதத்தில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. தன் பெற்றோருக்கு ஆண்டு தோறும் நீத்தார் கடன் செய்வது கூட பல்வேறு விதங்களில் USER FRIENDLY -ஆகவே உள்ளது. அது மட்டுமல்ல வேதங்கள் போற்றப்படும் நம் நாட்டில் அந்த வேதங்களை தவிர வேறு பிற நூல்களும் கூட வேதத்திற்கு சம அந்தஸ்து பெறுகின்றன. திருக்குறளும், பகவத் கீதையும், பன்னிரு திருமுறைகளும், நாலாயிரம் திவ்வியப் பிரபந்தமும் , இவை தவிர திருப்புகழ், விநாயகர் அகவல், விநாயகர் நான் மணி மாலை, அபிராமி அந்தாதி என்று ஏராளம் பனுவல்கள் நமக்கு விரும்புவோர் விரும்புவதை பயன்படுத்தும் ஆப்ஷன் உள்ள விஷயம் இது. இது எல்லை அற்ற பெருங்கடல். இதனை புரிந்து கொண்டோர் பாராட்டுவர். புரிந்து கொள்ளாதோர் அறியாமை காரணமாக தேவை அற்ற கடும் விமரிசனங்களை பொழிவர். இதில் கலைஞர் எந்த ரகம் என்பது அனைவரும் அறிவோம்.

    6. வாழ்விற்கு அடிப்படை தேவை தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவ பெருந்தகை. அந்த காவிரி நதி நீர் விஷயத்தில் எவ்வித தெளிவும் இல்லாமல் , எத்தனை அணைகள் வேண்டுமானாலும் காவிரியில் கட்டிக்கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்து, தமிழகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்கியவர் கலைஞர்.

    7. இவர் அடித்த செம்மொழி கூத்து உலகப்புகழ் பெற்றது. தமிழை செம்மொழி என்று அரசானை வெளியிட்டு, விழாக்கொண்டாடினார். உடனே தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, சமஸ்கிருதம் என்று பல்வேறு இந்திய மொழிகளும் இவர் மத்திய அரசில் காங்கிரசுடன் கூட்டணி அரசில் இருக்கும் போதே செம்மொழி அந்தஸ்து பெற்றன.

    8.ஒரு போக்குவரத்து கழகத்துக்கு தியாகி சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் என்று பெயர் வைத்தவுடன் சாதிக் கலவரம் வந்தது என்று சொல்லி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் உள்ள தலைவர்கள் பெயரை உடனடியாக அகற்றினார். ஆனால் பல்கலைக் கழகங்களின் பெயர்களில் தலைவர்கள் பெயர் இருக்கலாமாம் . அதனை நீக்கவில்லை. என்ன முரண்பாடு பாருங்கள் .

    மொத்தத்தில் முழு சுயநலவாதி மற்றும் குழப்பவாதி. தமிழினத்துக்கு பெருங்கேடு விளைவித்தவர் என்றே கருத வேண்டி உள்ளது.

  10. “To the living, we owe consideration; to the dead, we only owe the truth” – Voltaire.

  11. அத்விகா at 4.53 pm. சொன்னது சரியே- ஹிந்தி மொழி விஷயம் தவிர. இந்தியாவில் சுமார் 90 கோடி மக்களுடன் தொடர்புகொள்ள ஹிந்தி தேவைப்படுகிறது என்பது சரியல்ல. எந்த மாநில மக்களுடன் தொடர்பு தேவையோ அந்த மாநில மொழியே போதும்.உயர் விவகாரத்தொடர்புக்கு ஆங்கிலம் தான் அவசியம்.
    ஹிந்தி என்பது மொழி விவகாரம் மட்டும் அல்ல- மொழி ஆதிக்கம் பற்றியது. இந்தியாவின் எந்த மொழியும் நவீனக் கல்வி, அறிவியலுக்கு ஏற்றதாக இல்லை, அவை வெறும் பேச்சு, கேளிக்கை, இலக்கிய மொழிகள் தான். நவீனக் கல்வியின் எந்தத் துறைக்கும் ஆங்கிலம் தான் அடிப்படை. இதை நம் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இன்று ஆங்கிலத்திற்குத் தான் மவுசு அதிகம்.
    இங்கு தான் பிரச்சினை வருகிறது. நாம் தாய்மொழி கற்கவேண்டும்; கல்வி-அறிவியலுக்கு ஆங்கிலம் கற்கவேண்டும். இது நாடு முழுவதுமான நிலை. ஆனால் ஹிந்தி மொழி ஆட்சிமொழியாகத் திணிக்கப்பட்டு விட்டதால், ஹிந்தி மொழி தாய்மொழியாக இல்லாதவர்கள் ஒரு மூன்றாவது மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஹாயாக இருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயமானது? இது காந்தியார் நமக்குச் செய்த துரோகம். ஹிந்தி மொழி பேசாதவர்கள் இரண்டாம் தரக் குடிமகனாகிவிட்டார்கள். இந்தியா ஹிந்தியாவாகி விட்டது! நான் 50 ஆண்டுகளுக்குமேல் 7 மாநிலங்களில் இருந்து இதை நேரில் அனுபவித்தவன். இன்றைய பா.ஜ.ப அரசு ஹிந்தி தீவிரவாதத்தின் மொத்த உருவமாக, அசுர இயந்திரம் போன்று செயல்படுகிறது.
    60களில் தமிழ் நாட்டில் எழுந்த ஹிந்தி எதிர்ப்பு அலை அறிஞர்களால் ஆழ்ந்து யோசித்து உருவாக்கப்பட்டது. டாக்டர் சுனீதி குமார் சாட்டர்ஜி, எல்.கிருஷ்ணசுவாமி பாரதி, ராஜாஜி, இன்னும் பிற மாநிலத்திலிருந்த அறிஞர்கள் அச்சமயத்தில் இதைப்பற்றி விரிவாக எழுதினர்.ஆனால் பின்னர் வந்த திராவிடப் பதர்கள் இதை ஹிந்திவெறுப்பாகவும், வட நாட்டார் வெறுப்பாகவும் மாற்றி தமிழ் இளைஞர்களைத் திசை திருப்பினர். ஹிந்தி ஆதிக்கத்தைத் தடுக்கவோ, தவிர்க்கவோ உண்மையான முயற்சி செய்யவில்லை. இது தான் உண்மையன பிரச்சினை.மக்களே போன்ற கயவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
    ஹிந்தி இல்லாமல் தொழில் வர்த்தகத் தொடர்பு கொள்ளமுடியாது என்பது மாயை. இதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள்; ஆனால் அரசியல் வாதிகளின் வீட்டுக் குழந்தைகள் ஆங்கில மீடியம் படிக்கிறார்கள்; ஹிந்தி மாநிலங்களிலும் இதுதான் நிலை; பிற மொழி மாநிலங்களிலும் இதுதான் நிலை. ஹிந்தி ஒழிக என்ற கோஷம் தவறானது; ஆனல் ஹிந்தி ஆதிக்கம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். இன்று இந்த நிலைக்கு பல மாநிலங்களில் ஆதரவு பெருகிவருகிறது.மற்றபடி மக்களுக்கு எது தேவையோ அதை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். ஹிந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை என்ற நிலை உருவாவதற்கு நாம் இடம்தரலாகாது.

  12. Karunanidhi’s good and bad deeds are in record. My point is only one. Marina beach already became grave yard. As per DMK argument that place should be given only for the people holding Dravidian principle. If it is the case, that area could be sold to the people on tender basis. government and middle can get good amount in lump sum . People like district secretaries can avail the same benefit in their areas.

  13. ”To the living, we owe consideration; to the dead, we only owe the truth” – Voltaire.//

    This’s half truth. The other half is BOTH to the living and to the dead, we own both consideration and truth. Here Voltaire is not owning truth to the living Funny logic 🙂

    We should examine other people’s sayings, instead of blindly accepting them.

  14. அன்பின் ஸ்ரீ நஞ்சப்பா

    ஹிந்துஸ்தானமுழுதும் கிட்டத்தட்ட மூன்று தசாப்தமாக நான் பல எல்லைப்புற மாகாணங்களில் உத்யோகத்தில் இருந்திருக்கிறேன். பொதுத்துறை நிறுவனங்கள், ராணுவம், துணைராணுவம் என தேசமளாவிய ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உத்யோகஸ்தர்களிடையே பொதுவில் புழங்கும் மொழி ஹிந்தி.

    மத்ய சர்க்காரில் ஆட்சியில் இருப்பது மோதியாக இருந்தாலும் சரி காங்க்ரஸாக இருந்தாலும் சரி அவர்கள் அரசியல் சாஸனத்திற்கும் அதன் பாற்பட்டு இயற்றப்பட்ட சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டவர்கள். நமது அரசியல் சாஸனத்தில் ஏதாவது ஒரு மொழியைப் பற்றி இது இப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது என்றால் அது ஹிந்தி மொழிக்காக மட்டிலும். இது கசப்பாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி யதார்த்தம். மேலும் சர்க்காரி கார்யாலயங்களில் ஹிந்தி மொழியின் உபயோகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் சட்டதிட்டங்கள் உண்டு. ஹிந்தி மொழியை தேசமளாவி பொதுப்புழக்கத்திற்குக் கொணர அதில் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. மத்யசர்க்காரில் யார் இருந்தாலும் சரி இந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமது நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றனர். இதோ செப்டம்பர் மாதம் வர இருக்கிறது. தேசமளாவி செப்டம்பர் 1 முதல் 15 வரை ஹிந்தி பக்வாடா ஒவ்வொரு மத்ய சர்க்கார் நிறுவனத்திலும் அனுஷ்டிக்கப்படும். அதற்கு முன்னர் வருஷாந்தர அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். ஹிந்தி மொழி எந்த அளவு கார்யாலய புழக்கத்தில் உள்ளது என்று பரிசீலிக்கப்பட்டு மேற்கொண்டு அதனை வ்ருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதெல்லாம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

    ஹிந்தி மொழி பரவலாக்கல் என்ற சொல்லாடலுடன் மட்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இது ஒருபுறம் மாகாணம் விட்டு மாகாணம் புழங்கி வரும் மக்களின் கலாசார, வ்யாபார பரிவர்த்தனைகள் மூலம் பெருமளவும் அதனையடுத்து வெகு நிச்சயமாக தேசத்தின் சட்ட திட்டங்களின் பாற்பட்டும் நிகழ்கிறது. மத்ய சர்க்கார் தரப்பில் இருந்து சட்ட ரீதியாக எடுக்கப்படும் ஹிந்தி பரவலாக்கல் நடவடிக்கைகளினாலும் ஹிந்தி பரவலாக்கல் நிகழ்கிறது.

    இதில் ஆதிக்கம் என்ற சொல்லாடல் மனப்பிறழ்வு மட்டிலுமே. இதை நான் ஏற்க மாட்டேன். சட்ட ரீதியான ஹிந்தி பரவலாக்கல் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் நமது அரசியல் சாஸனத்தின் பாற்பட்டு அமலாக்கப்பட்ட சட்டங்களைத் திருத்த வேண்டும். தமிழகத்தில் எப்போதுமே தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் வேலை இடையறாது நடக்கிறது. வெறுமனே தமிழகத்தில் இதுவரை ஹிந்தியின் பெயரால் கம்பு சுத்திக்கொண்டிருந்த அல்லது கொள்கை ரீதியாக ஹிந்தி பரவலாக்கலுக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் சட்ட ரீதியான ஹிந்தி பரவலாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை ஒரு தனிநபர் மசோதாவாவது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்களா என்று யாராவது தகவல் பகிர்ந்தால் நல்லது.

    நானும் நீங்களும் தமிழ் ஹிந்துவில் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வதால் ஏதும் ஆகப்போவதில்லை. தமிழகத்தில் வாய்ச்சவடால் விடும் அரசியல் வ்யாதிகள் நம் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கு மேற்கொண்டு பாராளுமன்ற நடவடிக்கைகளில் உருப்படியாக ஏதாவது செய்தால் ஏதாவது நடக்கலாம்.

  15. //As per DMK argument that place should be given only for the people holding Dravidian principle. If it is the case, that area could be sold to the people on tender basis. government and middle can get good amount in lump sum . People like district secretaries can avail the same benefit in their areas.//

    From where did you get your information that DMK wants the Marina for graves of the people holding only dravidiian principles? Can anyone ask for a public place permanently? They must NOT have asked for all people, but only for Karunanithi – not so because he held such principles as because he served (whatever meaning you take for the word is your business, not theirs!) the State for about four decades. No party or person can seek any pubic place like a beach for all people for all times to come – under whatsoever grounds – like China gave a 100-year lease of Hong Kong to UK. Suppose the DMK had asked for it, they would have lost the case. Now, they have won it!

    Their argument was to counter squarely the AIADMK’s argument that only CMs who died in harness should get to be buried there. The rub of the case is over the semantics ‘sitting CM vs former CM.” No Dravidian principles as you imagined 🙂 In Delhi, all former PMs (Nehru, Indira, Rajiv, Shastri – have been buried or cremated there, with the only exception of Gandhi and also, Sanjay Gandhi) Why haven’t you suggested that the banks of Yamuna should be given to the highest bidder of the tender to bury their loved ones? Underneath any sarcasm one should be able to find some worth. I find nothing in your sarcasm..

    The major point to note – you haven’t done that – is that there is no rule that exists as to where to bury or create CMs or major leaders of TN if it is a State funeral – (as in the case of former CM Karunanithi – the Central Government treated it so – mind the fact pl). Modi’s ordering a State funeral to Karunanidhi dented the court case for AIADMK 🙁

    In the absence of any such rule or law passed by TN Legislative Assembly, it becomes a free-for-all fight ! Govt was not able to produce any law except to show what actually happened in the past – as convention, not as clear-cut rules.

    So, AIADMK lost the case, or Ramasamy. He is naive to call for sending Karunanithi’s body out of Marina. For the question what he did when Jayalalitha, Anna and MGR were laid to rest, he had no answer. Even if he had asked for previously, having failed to stop those graves, he could have asked for a permanent injunction from the court or agitated for a law from TN govt.

    Better late than never It is possible for all those interested like you, to keep Marina free from all such encroachments by asking for a deterrent law as said above.

    Make the demand now: the TN Legislative Assembly may pass a law about the use of Marina clearing laying down that it should not be used as burial ground for leaders or anyone, henceforth; whatever done in the past can’t be the precedent.

    This is the correct course of action. Marina will be saved from future depredations for which the coming generations shall be thankful to you. You can start a petition in Change.org and collect signatures and forward it to both State and Centre governments. This is worth your while.

  16. அன்பின் க்ருஷ்ணகுமார்
    ஹிந்தி பற்றி சிறப்பாக தெளிவுபடுத்தி உள்ளீர்கள். சிலருக்கு சாதிவெறுப்புணர்வு போன்று ஹிந்தி வெறுப்பணர்வும் எஜமான் விசவாச உணர்வு ஆங்கிலத்தின் மேலும் இன்றும் நீடிக்கின்றது.

  17. @BSV Aug 10,

    I think you misunderstood Voltaire. To the living, consideration takes more precedence than truth. All dharmashastras say this (including the kuRaL). In any case, thanks for your gratuitous advice. That and $2.75 will fetch me a ticket for a ride in the NYC Metro.

    Cheers!

  18. //ப்ரேதம் நல்லகதியை அடையாவிட்டால் தேசத்துக்குக் கேடு. தேவாரம் திருமுறை திருப்புகழ் ராமாயணம் பாகவதம் என்று அவரவரால் இயன்ற பாராயணம் செய்து முறையான ஸம்ஸ்காரம் கிடைக்காத இந்த ப்ரேதம் நல்ல கதியை அடைய ப்ரார்த்திப்போம்//

    உடல் (ப்ரேதம்) நற்கதியடையவேண்டுமென நம்புவர்கள் இந்துக்களாக மாட்டார். கிருத்துவரோ இசுலாமியரோ இருக்கலாம்.

    இந்துக்கள் இவ்வுடலை விட்டு ஆன்மா வெளியேறுகிறது. மரணம் உடலுக்குத்தானேயொழிய ஆன்மாவுக்கு அன்று. எனவே ஆன்மாவே நற்கதியடையவேண்டுமென்ற கொள்கையுடையோர். எனவே அதற்கான காரியங்களைச் செய்வார்கள்.

    செய்யவேண்டியது அவர்கள் குடும்பத்தார். 8 கோடி தமிழர்களையும் திருவாசகம் தேவாரம் திருப்புகழ் ஓதி கருநாநிதியின் ” உடல் (ப்ரேதம்) நற்கதி ” 🙂 யை அடையச் செய்யவேண்டுங்கள் என்கிறார்.

    ஏன் 8 கோடி மக்கள் அதைச்செய்யவேண்டும்? கோடிக்கணக்கான மக்கள் நாடோறும் மரணிக்க (தமிழகத்தில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்க) நமக்கேன் கருநாநிதியின் ஆன்மாவில் மட்டும் அக்கறை இருக்க வேண்டும்?

    அவர் குடும்பத்தினர் (ஒரு சிலரைத்தவிர) எல்லாருமே நல்ல இந்துக்கள். அவர்கள் செய்து வருகிறார்கள். அன்னாரின் ஆன்மா நற்கதி அடையுமா? அடையாதா? என்பது நம் பிரச்சினையே இல்லை.

  19. //I think you misunderstood Voltaire. //

    It is neither misinterpretation nor correct interpretation. It is just a different interpretation.

  20. பேரன்பிற்குரிய ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின் அவர்கள் சமூஹத்திற்கு

    \\ உடல் (ப்ரேதம்) நற்கதியடையவேண்டுமென நம்புவர்கள் இந்துக்களாக மாட்டார். கிருத்துவரோ இசுலாமியரோ இருக்கலாம். \\

    ஐயா அப்படியென்று உங்களுக்கு எந்த பெந்தகோஸ்தே திருச்சபையில் அல்லது கத்தோலிக்க திருச்சபையில் பாடம் எடுத்தார்கள் என்று ஒப்புவிக்கலாமே.

    இறந்த உடல் ப்ரேதமாக ஆகி பின்னர் செய்யும் ஸம்ஸ்காரங்களால் நற்கதி அடைகிறது என்பது ஹிந்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.

    ஹிந்துப்பெயரில் புகுந்து கொண்டு க்றைஸ்தவ ப்ரசாரம் செய்யும் தேவரீருக்கு ஆடின்னா தெரியுமா அமாவாசைன்னா தெரியுமா? உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சுத்த சுவிசேஷ வேதாகமம் மட்டிலும் தானே.

    \\ ஏன் 8 கோடி மக்கள் அதைச்செய்யவேண்டும்? கோடிக்கணக்கான மக்கள் நாடோறும் மரணிக்க (தமிழகத்தில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்க) நமக்கேன் கருநாநிதியின் ஆன்மாவில் மட்டும் அக்கறை இருக்க வேண்டும்? அவர் குடும்பத்தினர் (ஒரு சிலரைத்தவிர) எல்லாருமே நல்ல இந்துக்கள். அவர்கள் செய்து வருகிறார்கள். அன்னாரின் ஆன்மா நற்கதி அடையுமா? அடையாதா? என்பது நம் பிரச்சினையே இல்லை. \\

    தக்ஷிணாமூர்த்திகாரு தமிழகத்தின் முக்யமந்த்ரியாக இருந்தவர். அவர் உங்களைப் போல வாழ்நாள் முழுதும் ஹிந்துமதக்காழ்ப்பு ஜாதிக்காழ்ப்பு க்றைஸ்தவ மத ப்ரசாரம் இஸ்லாமிய ப்ரசாரம் என்று கழித்தவர். உங்களைப் போலவே தேசவிரோதக்கருத்துக்களைப் பகிர்ந்தவர். உங்களைப் போலவே பிரிவினைவாதக் கருத்துக்களைப் பகிர்ந்தவர்.

    இறந்தவர் இப்படி ஒரு ஸ்தானத்தில் இருந்து அவருக்கு ஸம்ஸ்காரங்களும் சரியாகச் செய்யப்படவில்லையென்றால் இறந்த பின் ப்ரேதத்வம் அகலாத சரீரம் பிசாசாக அலையும் என்பது ஹிந்துக்கள் நம்பிக்கை. புராணங்களில் இதற்கு சான்றுகள் இருக்கின்றன.

    ஓஹ்…………உங்களுக்கு புரணாம்னா தெரியாது இல்லையா? பழைய ஏற்பாடா புதிய ஏற்பாடா என்று கேழ்ப்பீர்கள் 🙂

    வாழ்நாள் முழுதும் அரக்கத்தனமாக வாழ்ந்து பொதுமக்களின் சொத்தைக் கொள்ளையடித்து பதிதனாக ஆகிப்போனாலும் தமிழகத்தை அரசாட்சி செய்த இவர் செத்துப்போன பின் ஹிந்துவாகப் பிறந்த இவரது ஸம்ஸ்காரம் ஹிந்து முறைப்படி ஒழுங்காகச் செய்யப்படவில்லை என்றால் ஹிந்துக்களாகிய எல்லோருக்கும் விசனமாகத் தான் இருக்கும்.

    மரணாந்தானி வைரானி என்று விபீஷணனுக்கு ராமபிரான் உபதேசம் செய்திருக்கிறார்.

    ம்…………….ஹிந்து முறைப்படி ஸம்ஸ்காரம் செய்யப்படவில்லை என்றால் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவுக்கு குஷி கிளம்பும் தான். புரிந்து கொள்ள முடிகிறது.

    ராமாயண உபதேசம் உங்களுக்கு கசக்கும் தான். புரிகிறது. ராமபிரானுடைய உருவப்படத்துக்கு செருப்புமாலை அணிவித்த ஆதிக்க ஜாதி இனவெறி ஈ வெ ராமசாமி நாயக்கரை விசிலடித்துக் கொண்டாடும் உங்களுக்கு ராமாயணம் சொல்லுவது கசக்கும் தான்.

  21. ஒரு பெரிய பண்டிதர் போல இந்துமதத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அடிப்படைக் கொள்கைகளைச் சொல்லும் ஒரு சிறுநூலே போதும். சிறுநூல்கள் ஏராளம். இராமகிருஸ்ண மடமும் வெளியிட்டிருக்கின்றன. இத்தளத்தின் ஆர்க்கைவ்லும் தேடலாம்.

    இந்துக்களிடையே கொள்கை வேறுபாடுகளும் விட்டுக்கொடுத்தலும் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கொள்கைகள் என்றும் அப்படித்தான் இருக்கும்.

    ஓர் இந்து தன் கர்ம வினைப்பயன்களுக்கேற்ப மறுபிறவியில் வாழ்வான். கர்ம வினை; மறுபிறப்புக் கொள்கை இம்மத‌ வேர்கள். ஆன்மா உடலோடு மரணிக்காது. எனவே ஆன்மா நற்கதியடையவேண்டுமென்று அன்னரின் உறவினர்கள் ஈம காரியங்கள் செய்வார்கள்.

    ஆனால் இங்கு சடலம் நற்கதியடையுமெனவும், நாமெல்லாரும் கருநாநிதியின் சடலம் அப்படியடைவேண்டுமென்பதற்காக வேண்டிக்கொள்ள இங்கு வேண்டுகோள் விடுக்கிறார் இவர். சடலம் மண்ணோடு மண்ணாக மக்கிவிடும்; அல்லது சாம்பலாகப் போகும். அஃதோடு அதன் கதை முடிந்தது. ஆன்மா தொடர்கிறது: தன் கர்ம வினைக்கேற்ப நற்கதியோ, துர்கதியோ அடைகிறது.

    அறிந்தும் அறியாததது போல நடிக்கிறாரா? அல்லது உண்மையில் இந்துதானா? திரு அன்புராஜ் சொல்வது போல, ஏனோ தானோ என்றிருப்பவர்களாலே இம்மதத்துக்குக் கேடு வருகிறது. கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்: இந்துமதத்தை தெரிந்து வாழுங்கள்.

    8 கோடி தமிழ்மக்களின் உழைப்பையும் சொத்தையும் கொள்ளையடித்தவனும் தன் வாணாள் முழுவதும் இந்துக்கடவுளர்களையும் இந்து நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடியவனுமான‌ ஒருவனின் ஆன்ம நற்கதிக்காக, தேவாரம் ஓதுங்கள்! திருவாசகம் ஓதுங்கள்!! திருப்புகழ் ஓதுங்கள்!!! பிரபந்தம் ஓதுங்கள் !!!! என்று கோடி தமிழ் இந்துக்களிடம் விண்ணப்பிக்கிறார். பரிதாபம் 🙁

    இத்தளம் எத்தனையோ நல்லவர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தும்போதெல்லாம் இப்படிப்பட்ட வேண்டுகோள் வைக்காத இவருக்கேன் கருநாநிதியின் மேல் இத்தகைய கரிசனம்?

  22. பேரன்பிற்குரிய ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின்.

    நைஸா அன்புராஜ் அவர்களது சீர்திருத்தக்கருத்துக்களுடன் தேவரீரது ஸம்ப்ரதாய அழித்தொழிப்பு வஞ்சக எண்ணங்களை ஒப்பிட முனையாதீர்கள்.

    அன்புராஜ் அவர்கள் இந்த தளத்திலும் வேறெங்கும் மிகக் கடுமையாக ஆப்ரஹாமிய மதத்தை எதிர்ப்பவர்.

    தேவரீர் அப்படியா. தேவரீரது வாக்கு தத்தம் அப்படியா ஸ்வாமின்.

    ஜகன்மாதாவாகிய ஆண்டாளை தேவரீர் நாக்கூசாது வய்யிரமுத்துவின் பாஷையில் நிந்தை செய்ததும் ஆழ்வார் ஆசார்யாதிகளை சிரிவைணவன் என்று சொல்லிக்கொண்டு நிந்தனை செய்வதும் அவர்களது அருளிச்செயல்களை வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வ்யாக்யானம் என்ற பெயரில் உளறிக்கொட்டுவதும் முற்போக்கும் இல்லை வயிற்றுப்போக்கும் இல்லை.

    தேவரீர் முன்னர் க்றைஸ்தவப் பெயரில் அவதாரம் எடுத்து பின்னர் காவ்யா மேடம் என்ற பெண்ணின் பெயரில் அவதாரம் எடுத்து பின்னர் கணபதிராமய்யர்வாள் என்ற பெயரில் அவதாரம் எடுத்து ஆனால் ஒவ்வொரு அவதாரத்திலும் க்றைஸ்தவ ப்ரசரத்தையும் ஹிந்துமதக்காழ்ப்பையும் பொழிவதை செயற்பாடாகக் கொண்டிருந்தீர்களே அதெல்லாம் மறந்து போய்விடுமோ?

    க்றைஸ்த்வ பெயர் அவதாரம், மேடம் பெயரிலான அவதாரம், ஐயர் பெயரில் அவதாரம் இது அத்தனையிலும் சரித்ரத்தில் இல்லாத ஏசுவை சரித்ரத்தில் இருந்ததாக தேவரீர் சாதித்தது மற்றும் புனித ரெவ ரெண்டு தெரசாளை தேவரீர் ஆதரவோ ஆதரவு செய்தது இந்த கண்றாவி கந்தறகோளத்துக்கெல்லாம் அன்புராஜ் நிச்சயமாக ஒத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்.

    அன்புராஜ் அவர்களது நோக்கம் மற்றும் தேவரீரது நோக்கம் இரண்டும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசத்தைக் கொண்டுள்ளது. அன்புராஜ் அவர்களது நோக்கம் ஹிந்துமத சீர்திருத்த இயக்கமான ஆர்யசமாஜம் ப்ரம்மசமாஜம் போன்ற பெரியோர்களது தர்க்கங்களால் ஆனது. ஹிந்துமதத்தைச் சார்ந்த எண்ணிறந்த அன்பர்கள் அப்படிப்பட்ட இயக்கங்களது போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஆன்மீக சாதனைகளை செய்து வருகிறார்கள். சித்தாந்த ரீதியில் அதனுடன் ஒன்றுபடும் மற்றும் வேறுபடும் அன்பர்கள் உண்டு.

    தேவரீரது எண்ணம் அப்படியா? ஆப்ரஹாமியத்துக்கு வாக்குதத்தம் கொடுத்த தேவரீரது நோக்கம் ஹிந்து மதத்துடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் கொச்சைப்படுத்தி அதை அழித்தொழிப்பது. உங்களுடைய முதல் இலக்காக நீங்கள் எடுத்துக்கொண்டது. வைஷ்ணவம். முதலில் பெயரை சீரழிப்பதில் இருந்து தேவரீர் துவக்கம். சிரி வைணவம். அப்புறம் ஜகன்மாதவான ஆண்டாளை தளம் தளமாக நிந்தை செய்வது. எம்பெருமானாரை ஆழ்வார் ஆசார்யாதிகளை நிந்தை செய்வது. அருளிச்செயல்களை நிந்தை செய்வது.

    வேற்று மதத்திலிருந்து டிஏ ஜோஸஃப் ஸ்வாமின் வைஷ்ணவத்தை தழுவினால் நாங்கள் அவரை பூஜ்யராகக் கருதுவோம். ஆனால் ஆதிக்க இனவெறி ஈவெராமசாமி நாய்க்கரின் வழி ஆப்ரஹாமியத்துக்கு வால்பிடிக்கும் தேவரீர் அவரை தளம் தளமாக இகழுவீர். அவரை கலை பேதமன்னியில் இருகலையைச் சார்ந்த ஆசார்யர்களும் கொண்டாடுகிறார்கள். அவரது கால்தூசுக்கும் கூட சமானமாகாத தேவரீர் அவரை தளம் தளமாக இகழுவீர்கள்.

    அருணகிரிநாதரை நிந்தனை செய்வீர்கள். திருப்புகழை நிந்தனை செய்வீர்கள். சைவ சமயத்தை வெறுப்பதாக இதே தளத்தில் “Tamil” என்ற அவதாரம் எடுத்த போது பெனாத்தியிருக்கிறீர்கள். ஸம்ஸ்க்ருத மொழியை நிந்தை செய்வீர்கள். ஆனால் அரபிக்கு கொடி பிடிப்பீர்கள்.

    அன்புராஜுடன் தேவரீரை ஒப்பிட வேண்டாம்.

    அவருடன் நான் நூத்துக்கு தொண்ணூற்றொன்பது விஷயங்களில் ஒப்புமை கொள்ளுகிறேன். தேவரீருடன் நூத்துக்கு ஒரிரு விஷயங்களில் ஒப்புமை கொள்ளுகிறேன்.

    அன்புராஜ் என்னுடன் அபிப்ராய பேதமே கொண்டாலும் சரி அவருடைய கருத்துக்களை நான் மதிக்கிறேன். அதனுடன் எனக்கு ஆங்காங்கு பிணக்கு இருந்தாலும் அதில் கிஞ்சித்தும் வஞ்சகத்தைக் காணேன். ஆனால் தேவரீரது கருத்துக்கள் ஆதியோடந்தம் ஹிந்து மதத்தை வேரும் வேரடி மண்ணும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டு பாலில் நஞ்சைக் கலந்து பகிரப்படுபவை.

    ஒவ்வொரு முறையும் நீங்கள் ஹிந்துமத இழிவுக்கருத்துக்களை ஸம்ப்ரதாயத்தை இகழும் கருத்துக்களை பகிரும் போதும் வெகுநிச்சயமாக அதனை மிகக் கடுமையாக எதிர்ப்பேன்.

  23. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின்

    \\\ சடலம் மண்ணோடு மண்ணாக மக்கிவிடும்; அல்லது சாம்பலாகப் போகும். அஃதோடு அதன் கதை முடிந்தது. ஆன்மா தொடர்கிறது: தன் கர்ம வினைக்கேற்ப நற்கதியோ, துர்கதியோ அடைகிறது. \\

    அஃதோடு அதன் கதை முடியவில்லை. என்பதைத் தான் ஹிந்து மதத்தின் அனாதி காலமாகச் செய்யப்பட்டு வ்ரும் ப்ரேத ஸம்ஸ்காரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆன்மா தொடருகிறது. சரி தான்.

    ஆனால் உங்களுக்கு ப்ரேத நிவ்ருத்யர்த்தமாக ஒவ்வொரு ஹிந்துவும் செய்யும் ஸம்ஸ்காராதிகளை அழித்தொழிப்பதற்கும் அதை இகழ்வதற்கும் உமது பெந்தகோஸ்தே சபையோ அல்லது கத்தோலிக்க சபையோ ஆக்ஞை இட்டிருந்தால் ……………

    அதை தேவ ஊழிய நிமித்தமாக தேவரீர் செய்ய விழைந்தால் அதை நேரடியாகச் சொல்லி விடலாமே.

    எதற்கு நயவஞ்சகமாக அதை மறைக்க விழைகிறீர்கள்? அது தெரியாமற் போய்விடும் என்று கனவு காணுகிறீர்களா?

    வாழ்நாள் முழுதும் தக்ஷிணாமூர்த்தி காரு ஹிந்துமதத்தை இகழ்ந்தாலும் தெருத்தெருவாக உமது க்றைஸ்தவ தேவ ஊழிய நண்பர்கள் ஹிந்துக்களை பாவிகளே என்று நிந்தை செய்தாலும் ஹிந்து மதத்தில் ஊறித்திளைத்த டிமுக்காவினரில் விசிலடிச்சான் குஞ்சுகளும் கூட ராமசாமி நாயக்கரையும் அண்ணாத்துரையையும் தக்ஷிணாமூர்த்திகாருவையும் அவர்களது பஹூத் அறிவையும் தலை முழுகி விட்டது உங்களுக்கு வயிற்றெறிச்சல் கொடுப்பது புரிகிறது.

    தெருமுக்கினில் துன்னூறு பூசி பானையில் தண்ணி நிரப்பி மொட்டை போட்டு கருணாநிதிப்படத்தை வலம் வருவது என்ன?

    பத்துக்கு பண்ண வேண்டிய காரியம். மாஸ்யம் எல்லாம் கனஜோர். தேவரீர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இகழும் திருமுறை திவ்யப்ரபந்த பாராயணம் ஒருபக்கம்.

    சமாதியில் தயிர்வடை நைவேத்யம் ஒருபக்கம்.

    ஜால்ரா, ம்ருதங்கம், சிப்ளாக்கட்டையுடன் பஜனை ஒருபக்கம்.

    ம்…………………….இப்படியெல்லாம் இவர்கள் இருந்தால் இவர்களிடம் எப்படி உமது க்றைஸ்தவ தேவ ஊழிய வ்யாபாரத்தை நடத்துவது என்று உமக்கு ஆயாசம் வருவது புரிகிறது.

  24. ஒருவரின் “மரணத்தோடு அனைத்து எதிர்ப்பு மனப்பான்மைகளும் முடிவடைகின்றன” என்கிற பொருள் தரும் “மரண-அந்தானி வைராணி…” (6-114-101) என்ற ஸ்லோகத்தை ஸ்ரீ வால்மீகி, இராவணனின் மரணத்திற்குப் பிறகு ஸ்ரீ இராமன் கூறுவதாக எழுதியுள்ளார். அதை அனைவரும் ஒத்துக்கொண்டாலும், கருணாநிதியின் வாழ்க்கைப் பயணத்திற்கோ, அவரது எழுத்துக்கள் எதற்குமோ காலச் சுவடுகளாகப் பதிவு பெறும் அருகதை கிடையாது என்பதை, சோதிட ரீதியாக அலசியிருப்பதை, ஜெயஸ்ரீ நாதன் அவர்களின் கீழ்க்கண்ட பதிவில் பார்க்கலாம்:
    https://jayasreesaranathan.blogspot.com/search?q=Karunanidhi-why-he-was-way-he+was

    எஸ். ராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *