கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன.
பொருட்களை அனுப்ப விரும்புவோர்
9443618482 – நாராயணன்
9444152630 – கேசவன்
ஆகியோரை இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் ,
பணமாக நன்கொடை அளிக்க விரும்புவோர் கீழ்காணும் வங்கி எண்ணுக்கு அனுப்பலாம்.
Sevabharathi Thentamilnadu
31841094583
IFSC CODE SBIN0008181
State bank of India
Mela Chinthamani branch
Tiruchirapalli
சேவாபாரதி நிவாரணப்பணிகள் குறித்து திருப்பூரிலிருந்து ஒரு ரிப்போர்ட்:
(நன்றி: வீர.ராஜமாணிக்கம்)
புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும் வழங்கப்பட்டது. பழைய ப்ளெக்ஸ்கள், தார்பாய்கள் வாங்கப்பட்டு தற்காலிக முகாம்கள்,உடைந்த கூரைகள் மீது போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மிக முக்கியமாக உணவுப்பொருட்களை அனுப்பும் துவங்கியது. திருப்பூரில் தன்னார்வலர்களும், வணிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு ரெடிமேட் சப்பாத்திகள், குஷ்பூ இட்லி, அவல்,பிரட், பன், கடலை மிட்டாய்கள் பிஸ்கட், பழங்கள் என்று உடனடியாக உண்ணக்கூடிய பொருட்களை, இரண்டு வாகனங்களில் அனுப்பப்பட்டது. பின்னர் அரிசி, ரவை, சமையல் எண்ணெய் , மசால் பொடிகள் , மஞ்சள் தூள், டீத்தூள், தண்ணீர் கேன்கள்,தண்ணீர் பாக்கெட்கள், அத்யாவசிய மளிகைப்பொருட்கள், தக்காளி, வெங்காயம், காய்கறிகள், பாத்திரம், கரண்டி, பக்கெட் இவை எல்லாம் அடுத்தடுத்த நாள்களுக்கான பிராயாரிட்டியாக எடுத்து கொள்ளப்பட்டு சேகரித்து அனுப்பபட்டது.
பின்னர் துண்டு, பெட்சீட், கம்பளி, சோலார் சார்ஜர்கள், பேட்டரி செல்கள், மெழுகு வர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி, சிகரெட் லைட்டர்கள், சின்ன ஜென்செட்கள், சிறுவர்களுக்கான உடைகள், உள்ளாடைகள், நைட்டிகள், புடவை, சானிட்டரி நாப்கின், டெட்டால், பினாயில் , காய்ச்சல், வயிற்று போக்கு,தலைவலிக்கான மருந்து மாத்திரைகள், நில வேம்பு கஷாய பொடிகள், தேங்காய்,எலுமிச்சை, கரும்பு சக்கரை, வெல்லம்,5 கிலோ ,10 கிலோ அரிசி பைகள், ரப்பர் செருப்புகள், பொதுவாக சமையல் செய்ய கேஸ் அடுப்புகள், குளிக்கும் சோப்புகள், துணி துவைக்கும் சோப்புகள், கத்தி, சுத்தியல், கயிறு, ஆணி தார்ப்பாய்கள் இவைகளோடு பி எஸ் என் எல், ஜியோ சிம்கார்ட்கள், ப்ரி பெய்ட் கூப்பன்களையும் அனுப்பினோம்.
இவற்றை அங்கு நேரடியாக பெற்றுக்கொள்ள சேவாபாரதியின் தற்காலிக முகாம்கள் இருக்கின்றது. அதோடு மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து உதவிப்பொருட்கள் வழங்கப்படுகிறது. உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. பெருமளவிலான தன்னார்வலர்கள், இருசக்கர வாகனங்களிலும், டாடா ஏஸ், மற்றும் சைக்கிளிலும் கொண்டு சென்று பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்குகிறார்கள்.
நேற்று முதல் இந்திய மருத்துவ கழகத்தோடு இணைந்து சேவாபாரதி மருத்துவர்களின் தன்னார்வ சேவையை ஒருங்கிணைக்கிறது. திருப்பூர் இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் சேவா பாரதி சார்பாக ரு. 11.5 லட்சம் மதிப்புள்ள நிவரணம் மற்றும் மருந்து பொருட்களை சேகரித்து மருத்துவர்கள் அடங்கிய குழு கஜா புயல் பாதித்த பகுதிக்கு சென்றுள்ளது.
பெருமளவிலான பொருட்கள் திருப்பூர் மக்களின் உதவி, திருப்பூர் தொழிலதிபர்கள், தொழிலாளிகள், சேவை அமைப்புகளின் அயராத உழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பால்கிடைத்தவை . வாகனங்களுக்கு வெறும் டீசல் மட்டும் அடித்து கொடுத்தால் போதும் என்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து செலவை ஏற்ற நிறுவனங்கள். திருப்பூர் மக்களின் கருணை மிகுந்த பங்களிப்பும் , சேவாபாரதி மற்றும் தன்னார்வலர்களின் நன்றி மிகு பங்களிப்புகள்.
நாம் அனைவரும் டெல்டா மாவட்டங்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவும் பிரார்த்திப்போம்.
இந்து சமூதாயத்தின் கண்ணியம் கௌரவம் ஆகியவற்றை கட்டிக்காத்து புகழ் சோ்ப்பது சேவா பாரதி யே. இந்துக்களாலும் சீரிய முறையில் தொண்டுகள் நிவாரணப்பணிகள் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டிய இயக்கம்.வாழ்க அவர்தம் தொண்டு.அதிக எண்ணிக்கையில் இந்த இயக்கததில் இந்துக்கள் சேர வேண்டும். தொலைக்காட்சிகள் சேவாபாரதியை காட்டவில்லை.தௌஹத் ஜமாத் மூலமும் பணிகள் நடக்கின்றது.அதையும் காட்டினாா்களா ? இல்லை..