கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

ந்தியாவின் கோவா பகுதியை ஆண்ட போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களால் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள் போன்றவர்களின் மதவழிபாட்டு உரிமையை அழித்தொழித்து, அவர்களைக் கிறிஸ்தவர்களாக கட்டாய மதமாற்றம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘இன்குசிஷன் (Inquisition)’ என்னும் கொடூரமான வழக்கம் 1560-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொடூரமான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த பலர் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1174-ஆம் வருடம் பிற மதங்களையும் மதிக்கிற, சுதந்திர எண்ணம் கொண்டவரான போர்ச்சுக்கலின் மந்திரி மார்க்வெஸ்-டி-பொம்பால் என்பவரால் கோவாவில் பிற மதத்தவரை கொடூரமான முறையில் மதம் மாற்றும் இன்க்குசிஷன் சிறிது காலத்திற்கு தடை செய்யப்பட்டது. எனினும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1778-ஆம் வருடம், போர்ச்சுக்கலின் அரசியான டி. மாரியா மீண்டும் இன்க்குசிஷனுக்கு அனுமதி கொடுத்தாள். அதனைத் தொடர்ந்து நடந்த கட்டாய கிறிஸ்தவ மதமாற்றங்கள் 1812-ஆம் வருடம் வரை தொடர்ந்து நடந்தன.

துரதிருஷ்டவசமாக இந்தியர்களுக்கு, முக்கியமாக ஹிந்துக்களுக்கு அது குறித்தான அறிவு சிறிதும் இல்லாமல் இருப்பது கண்கூடு. எனவே, இந்தியர்கள் பலரும் அறியாத அல்லது மறந்து போன அந்தக் கொடூர காலகட்டத்தைக் குறித்து இங்கு சிறிதளவு அறிவினைப் புகட்டுவதே இந்தத் தொடரின் நோக்கமாகும்.

கிறிஸ்தவ மதவெறியர்கள் இந்தியாவில் மீண்டும் தலையெடுக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதனைக் குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் அறிவதும், மதமாற்றம் செய்ய வரும் கிறிஸ்தவனை விரட்டுவதும் மிக முக்கியமான ஒன்றாகும். அறியாமையே இன்றைக்கு ஹிந்துக்களைச் சூழ்ந்திருக்கும் ஒரு பெருநோயாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்து நிற்கிறது. அந்த அறியாமையை நீக்க இந்தக் கட்டுரைத் தொடர் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

****

1229-ஆம் வருடம் இத்தாலியின் டொலோஸா பகுதியில் போப் ஒன்பதாம் கிரிகொரி தலைமையில் கூடிய கிறிஸ்தவ பிஷப்களின் கூட்டத்தில் உலகெங்கிலும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்குத் தேவையான நாற்பத்தைந்து கருத்துக்கள் கொண்ட சட்ட முன்வடிவு எழுதப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் அவை விவாதிக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்த அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. முக்கியமாக அந்தச் சட்டெங்களில் அடங்கியிருந்த பதினெட்டு கருத்துக்கள் கிறிஸ்தவர்களல்லாத அன்னிய மதத்தவர்கள் அல்லது அன்னிய மதத்தவர்கள் என சந்தேகம் கொள்ளத்தக்கவர்களைப் பற்றியும் அவர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் பற்றியதாகும்.

அந்தச் சட்டங்களின்படி, ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் பிஷப்களும் அவரது அடிப்பொடிகளும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் அன்னிய மதத்தவர்களின் மீது தங்களின் பிடியை இறுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பாகன் கடவுள்களை வணங்கும் அன்னிய மதத்தவனுக்கு உழுவதற்கு நிலம் கொடுக்காமலிருக்க வேண்டுமென கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறும் கிறிஸ்தவன் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான். எவனேனும் ஒரு பாகனிய அன்னிய மதத்தவன் வாழும் வீடு கண்டறிப்பட்டால் அது உடனடியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பிறமதத்தவனின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் கடுமையான முறையில் முடக்கப்பட்டு அவன் கிறிஸ்தவனாக மதம் மாறும்வரையிலும் கொடுமைகளுக்கு உள்ளானான்.

ஃபிரான்ஸ் நாட்டை ஆண்டுவந்த ஒன்பதாம் லூயி மன்னன் இந்தச் சட்டங்களை முழுமையாக ஸ்வீகரித்து அதனைத் தான் ஆளும் பகுதியில் உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டான். இதே போன்ற மனப்பாங்கு இரண்டாம் ஃப்ரெடரிக் அரசன் ஆண்ட ஜெர்மனியிலும், இத்தாலியின் ஒருபகுதியிலும் நிலவியது. பின்னர் ஃப்ரான்ஸிலும் இந்தச் சட்டங்கள் தீயைப் போலப் பரவின.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் காலப்பகுதில் கிறிஸ்தவ சர்ச்களுக்கும், ஐரோப்பிய நாடுகளை ஆண்ட அரசாங்கங்களுக்கும் இடையே இருந்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக கிறிஸ்தவர்கள் அல்லாத பிற தெய்வங்களை வழிபடும் பாகன்கள் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஸ்பெயினில் அரசன் ஃபெர்டினெண்ட்டும், இஸபெல்லாவும் ஆண்ட காலத்தில் இன்குஷிஷன் என்கிற கொடூரத்தை அவர்கள் ஸ்பெயினில் வாழ்த பாகன்கள் மீது கட்டவிழ்த்துவிட இந்த ஒத்துழைப்புகளே காரணமாக இருந்தன. சர்ச் சொல்வதனைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அரசர்கள் பாகன்களை கொடூரமாக அழித்து ஒழித்தார்கள்.

ஃபெர்டினண்டும், அவனது அரசி இஸபெல்லாவும் ஸ்பெயினை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் யூதர்கள் அந்த நாட்டில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார்கள். அது கல்வியாகட்டும், வியாபாரமாகட்டும் அல்லது அரசியலாகட்டும். யூதர்கள் எல்லாவற்றிலும் மிகுந்த ஈடுபாடும் செல்வாக்கும் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் மீது பொறாமையுடன் இருந்த கிறிஸ்தவர்கள் யூத வெறுப்புத் தூண்டும்விதமாக வெறுப்பூட்டும் வதந்திகளைப் பரப்பி வந்தார்கள். அந்த வெறியூட்டுதல்களே பின்னாளில் ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்களைப் படுகொலை செய்ய வழிவகை செய்தது.

பொறாமையில் புழுங்கிய கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் வாழும் யூதர்களைக் குறித்தான கட்டுக்கதைகளை ஸ்பெயினெங்கும் பரப்பினார்கள். யூதர்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து ஏசியதாகவும், அவர்களின் புனித அடையாளங்களை அவமானப்படுத்தி சிலுவையை அசிங்கப்படுத்தியதாகவும், யூதர்களின் வசந்தவிழாவில் (Passover) குழந்தைகளையும், கிறிஸ்தவர்களையும் நரபலி கொடுத்ததாகவும் செய்திகள் ஸ்பெயினெங்கும் பரப்பப்பட்டன. இந்த கட்டுக்கதைகளை உண்மையென்று நம்பிய சாதாரண கிறிஸ்தவர்களும், அவர்களது மதவெறி பிடித்த மதத்தலைவர்களும் யூதர்களின் மீது தங்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினார்கள்.

பதினான்காம் நூற்றாண்டி இறுதிப் பகுதியில் இந்த மதவெறித் தாக்குதல்கள் உக்கிரமடைந்து கேஸ்ட்டில் மற்றும் ஆராகன் பகுதியில் வசித்த யூதர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். அவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் அவர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்தார்கள். ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என்று பேதம் பார்க்காமல் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையிலிருந்து யூதர்கள் தப்புவதற்கு ஒரேவழி அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவது மட்டும்தான் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இதனால் அஞ்சி நடுங்கிய ஏறக்குறைய 35,000 யூதர்ளை “அற்புதங்கள்” செய்தவர் என்று அறியப்பட்டவரான செயிண்ட் வின்செண்ட் ஃபெரியர் என்பவன் மதமாற்றம் செய்வித்தான். இதுவே கிறிஸ்தவர்கள் மத்தியில் “அற்புதம்” என இன்றைக்கு அறியப்படுகிறது.

ஆரகன் மற்றும் கேஸ்ட்டின் என்கிற தனித்தனியான இரெண்டு ஸ்பெயின் பகுதிகள் ஃபெர்டினண்ட் மற்றும் இஸபெல்லாவின் திருமணத்திற்குப் பிறகு ஒன்றாகின. இவர்கள் இருவரும் இணைவதற்கு முக்கிய காரணமானவன் டொமினிக்கன் சாமியாரான டோர்க்குமடா (Torquemada, 1420-1498) என்பவன். பெரும் கிறிஸ்தவ மதவெறியனும், யூத வெறுப்பாளனுமான இந்த டோர்க்குமடா ராணி இஸபெல்லாவிற்கு சிறுவயதிலிருந்தே பாவமன்னிப்பு வழங்கி வந்தவன். இவனே ஸ்பெயினில் யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த இன்குஷிஷன் வெறியாட்டங்களுக்கு முக்கிய காரணமானவன்.

இந்த நாயிலும் கீழான கிறிஸ்தவ மதவெறியனின் பின்னனியை ஆராய்ந்த போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் ஒருவர் அவனின் இந்த மதவெறிக்குக் காரணமாக கீழ்க்கண்டவற்றை எழுதுகிறார்.
“தனது இளமைக்காலத்தில் பல நாடுகளுக்கும் பயணம் செய்த பாதிரி டோர்க்குமடா, கார்டோவா என்னும் பகுதியிலிருந்த ஒரு இளம் பெண்ணின் மீது காதல் கொண்டான். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தப் பெண் அவனை உதாசினம் செய்துவிட்டு முஸ்லிம் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு கிரெனெடா பகுதிக்குச் சென்றுவிட்டாள். இதன் காரணமாக டோர்க்குமடா முஸ்லிம்களின் மீது கடும் வெறுப்பு கொண்டான். பின்னர் அங்கிருந்து சரகோகா பகுதிக்குச் செல்லும் அவன் அங்கு கிறிஸ்தவ வேதங்களைக் குறித்துப் படிக்கிறான். அவன் மீது ஈர்ப்பு கொண்ட பிற பாதிரிகள் உதவியுடன் அவன் டொமினிகன் சர்ச்சில் சேருகிறான்.

அங்கிருந்த நூலகத்தில் கிறிஸ்தவ அதிகாரங்களைக் குறித்துக் கற்கும் டோர்க்குமடா அங்கிருந்தே பிறமதத்தவரை வெறுத்து அவர்களைப் படுகொலை செய்யும் இன்குசிஷன் என்கிற கொடும் செயலை தனது கொள்கையாகக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணமும், தன்னை அனைவரிலும் ஒரு நல்ல கிறிஸ்தவனாக காட்டிக் கொள்வதற்காகவும் தனது எண்ணத்தில் உதித்த இன்குசிஷன் என்னும் கொடூரத்தை செயலில் காட்டும் நாளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.”

இன்னொரு வரலாற்றாசிரியரான பிரஸ்காட் மேற்படி டோர்க்குமடா பாதிரி ஸ்பெயினில் எவ்வாறு பாகனியர்களுக்கும், யூதர்களுக்கும் எதிராக தனது கொடூர திட்டத்தை நிறைவேற்றினான் என்பதனைக் குறித்துக் கூறுகையில்,

“மனதில் சிறிதும் ஈரமும், இரக்கமும் இல்லாதா வஞ்சகனான டோர்க்குமடா தன்னிடம் பாவமன்னிப்பு கேட்க வரும் சிறுமி இஸபெல்லாவின் மனதில் நஞ்சை விதைக்க முயற்சி செய்கிறான். பாகன்களையும், யூதர்களையும் குறித்து அவள் மனதில் வெறுப்பைத் தூண்டும் விதமாகக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறான். ஆனால் இயல்பிலேயே நல்ல மனதுடைய சிறுமி இஸபெல்லா அந்தக் கதைகளைப் புறம் தள்ளுகிறாள். இருப்பினும் மனம் தளராத டோர்க்குமடா எதிர்காலத்தில் அவள் அரியணை ஏறியபின்னர் கடவுளின் நல்ல சேவகியாக மாறி, கத்தோலிக்க நம்பிக்கைக்கு மிகவும் உதவுபவளாக, பரமண்டலத்தில் இருக்கும் பிதாவினைப் போற்றிப் புகழ்பவளாக இருப்பாள் என நம்பிக்கை கொள்கிறான்.

அந்த நேரமும் வந்தது. டோர்க்குமடாவின் வஞ்சக எண்ணமும் ஈடேறி ஸ்பெயினில் யூதர்களும், பாகன்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். ஈவு இரக்கமின்றி விரட்டியடிக்கப்பட்டார்கள்.

(தொடரும்)

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

4 Replies to “கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1”

  1. அருமையான கட்டுரை,தற்போதைய தேவையும் கூட,வாழ்த்துக்கள், தொடருங்கள்

  2. This post is the need of the hour. Also give us effective but small question and answer to counter the Christian bigotry. Take the fight to the enemy camp

  3. I am not sure Jesus bled for mankind. But I am sure men of other faiths bled in the hands of cruel Christians. Unfortunately throughout the world only Muslims are targeted for extremist views and acts. Christians are far worse.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *