17வது லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டத் துவங்கிவிட்டது. 7 கட்டமாக நடைபெறும் இத்தேர்தலில் தமிழகம் இரண்டாவது கட்டத்தில், ஏப்ரல் 18-இல் தேர்தலைச் சந்திக்கிறது.
சென்ற தேர்தலில் அதிமுக (தனித்துப் போட்டி), திமுக அணி, பாஜக அணி, காங்கிரஸ் (தனித்துப் போட்டி), இடதுசாரி அணி என்ற ஐந்துமுனைப் போட்டி நிலவியது. அதில் ‘லேடியா, மோடியா?’ என்ற கேள்வியை முன்னிறுத்திய அதிமுக தலைவி ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்றார். தமிழகம்-39, பாண்டிசேரி-1 உள்ளிட்ட 40 தொகுதிகளில் அதிமுக மட்டுமே 37 தொகுதிகளை வென்று லோக்சபையில் அதிக இடம் பிடித்த கட்சிகளின் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தது. மோடிக்கு மாற்றாக பிரதமர் வேட்பாளராக வாய்ப்புள்ளவராக ஜெயலலிதாவை தமிழக மக்கள் கருதியதால்தான் அந்த வெற்றி சாத்தியமானது.
தவிர, மோடிக்கு நிகரான எதிர்ப்பாளராக தன்னை முன்னிறுத்திய ஜெயலலிதாவை சிறுபான்மை மக்களும் ஆதரித்தனர். அதனால்தான் அந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் திமுக அணி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது. திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்த ஜனநாயக முற்போக்கு முன்னணி மாபெரும் தோல்வி அடைந்தது.
தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, பெரும்பாலான தொகுதிகளில் வைப்புத் தொகையையும் இழந்தது. அதேபோல, மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்த இடதுசாரிக் கூட்டணி 17 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் வைப்புத் தொகையை இழந்தது.
மாறாக, பாமக, மதிமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, கொங்குநாடு தேசியக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பாஜக அமைத்த மூன்றாவது அணி 3 தொகுதிகளில் வென்றது. கன்னியாகுமரி, தர்மபுரி, பாண்டிசேரி தொகுதிகளில் பாஜக அணி வென்றது. பிரதான எதிர்க்கட்சியான திமுகவே தோல்வியுற்ற நிலையில், மோடி அலை காரணமாக மூன்று தொகுதிகளில் வெல்ல முடிந்தது. தவிர பாஜகவின் வாக்கு சதவிகிதமும் கணிசமாக உயர்ந்தது. பல தொகுதிகளில் இரண்டாமிடத்தையும் பெற்றது தே.ஜ.கூட்டணி.
தற்போதைய தேர்தலில் இந்த 5 அணிகள் இரண்டு அணிகளாகி உள்ளன. சென்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக இம்முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. தவிர, தமிழகத்தில் கூட்டணியின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கிறது. 2014 தேர்தலில் பாஜக அணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளான பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவையும், திமுக அணியில் இடம் பெற்றிருந்த புதிய தமிழகமும் அதிமுக தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ளன. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுக அணியில் புதிய வரவாகி உள்ளது.
சென்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸும், பாஜக அணியில் இடம் பெற்றிருந்த இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு தேசியக் கட்சி, மதிமுக ஆகியவையும் இம்முறை திமுக அணியில் சேர்ந்துள்ளன.
தவிர, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று தினகரன் தனி ஆவர்த்தனம் நடத்திவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் அனைத்துத் தொகுதிகளிலும் களம் காண்கின்றன.
ஆக, இம்முறை நான்கு முனைப் போட்டி உறுதியாகி இருக்கிறது. தமிழக தேர்தல் களத்தில் அரசியல் அனிகளின் இறுதி நிலவரம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணி:
அதிமுக- 20, பாமக-7, பாஜக-5, தேமுதிக-4, என்.ஆர்.காங்கிரஸ்-1, புதிய தமிழகம்-1, தமிழ் மாநில காங்கிரஸ்-1, புதிய நீதிக் கட்சி- 1
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி:
திமுக-20, காங்கிரஸ்-10, சிபிஎம்-2, சிபிஐ-2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-2, மதிமுக-1, முஸ்லிம் லீக்-1, கொங்குநாடு தேசியக் கட்சி- 1, இந்திய ஜனநாயகக் கட்சி- 1.
அமமக தலைமையிலான அணியும், மக்கள் நீதி மையம் தலைமையிலான அணியும் முறையே, அதிமுக, திமுக அணிகளின் வாக்குகளில் சேதாரம் ஏற்படுத்துவார்கள் என்பது சிலரது எதிர்பார்ப்பு. இதில் தினகரன் பெருமளவில் பணம் செலவு செய்ய வாய்ப்புள்ளது. எனினும் மிகப் பெரும் வாக்கு சதவிகிதம் கொண்டுள்ள அதிமுகவுக்கு தினகரனால் ஏற்படும் இழப்பை அதன் கூட்டணிக் கட்சிகள் நிவர்த்தி செய்துவிட வாய்ப்புகள் அதிகம். அதேசமயம், ஆளும் கட்சிகள் மீதான அதிருப்தி வாக்குகள் திமுக அணிக்குச் செல்லாமல் கமல்ஹாசன் பிரிப்பாராயின், அது திமுகவுக்கு பாதகம் ஆகிவிடும்.
திமுக தலைமை உண்மையிலேயே ராஜதந்திரம் உள்ள கட்சியாக இருந்திருந்தால், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மையம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை தனது அணியில் சேர்த்திருக்கும். பாமக தனது அணியில் இடம் பெறும் என்ற நம்பிக்கையில் திமுக செய்த தவறு பிற கட்சிகளை அரவணைக்காது விடுத்தது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே என்று முடுவெடுத்ததும் திமுகவுக்கு தேர்தலின்போது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
சென்ற சட்டசபைத் தேர்தலின்போதும் இதே தவறைத்தான் திமுக செய்தது. தேமுதிக தனது அணிக்கு வரும் என்று மு.கருணாநிதி இறுதி வரை காத்திருந்தார். பழம் நழுவிப் பாலில் விழும் என்றும்கூட அவர் சொன்னார். ஆனால் அந்தப் பழத்தை மக்கள் நலக் கூட்டணி என்ற குவளைக்கு மடை மாற்றி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் வைகோ. அந்த வஞ்சகத்தை இன்னமும் மு.க.ஸ்டாலின் மறக்கவில்லை என்பது, இம்முறை மதிமுவை கடைசிவரை இழுத்தடித்து புலம்பவிட்டதில் தெரிய வந்தது.
இந்தத் தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வலிமை அடிப்படையில் அதிமுக அணியே முதன்மை வகிக்கிறது. சென்ற தேர்தலில் 40 தொகுதிகளை 37 + 3 என்று பாகம் பிரித்துக்கொண்ட அதிமுக, பாஜக அணிகள் இம்முறை ஒரே அணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிடுவது இந்தக் கூட்டணியின் ஆகச் சிறந்த பலம். குறிப்பாக, வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்ட பாமகவும், மாநிலம் முழுவதும் பரவலான வாக்கு வங்கியைக் கொண்ட தேமுதிகவும், மத்தியில் ஆளும் பாஜகவும் தனது அணியில் இருப்பது அதிமுகவுக்கு அதீத சாதகம்.
ஆரம்பத்தில் சொதப்பினாலும், பாஜக அங்கம் வகிக்கும் அணியிலேயே நீடிப்பது என்று பிரேமலதா விஜயகாந்த் எடுத்த முடிவு விவேகமானது என்பதை தேர்தல் முடிவு சொல்லும். அவரது சகோதரர் சுதீஷ் கள்ளக் குறிச்சியில் நட்சத்திர வேட்பாளராகக் கலம் காண்கிறார். அதேபோல பாமகவின் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியும், பாஜகவின் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரியும், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் திமுக பிரமுகர் கனிமொழி கருணாநிதியும் மோதும் தூத்துக்குடியும், நட்சத்திரத் தொகுதிகள் ஆக உள்ளன.
எதிர்த்தரப்பில், ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்துவிட்டது. கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிடும் நீலகிரி (தனி), மத்திய சென்னை ஆகியவை நட்சத்திரத் தொகுதிகளாக உள்ளன. திமுக அணியில் திமுக தவிர்த்து பெருமளவில் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் எதுவும் இல்லை. இடதுசாரிக் கட்சிகளுக்கு கோவை, திருப்பூர், தஞ்சாவூர், வட சென்னை உள்ளிட்ட சில தொகுதிகள் தவிர்த்து பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் திமுகவுக்கு சாதகமா, பாதகமா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு திருமாவளவனின் வெறுப்பூட்டும் பேச்சுகளால் பிற ஜாதியினர் கோபம் அடைந்திருக்கிறார்கள்.
சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்கு வங்கி மட்டுமே இப்போதைக்கு திமுகவின் ஒரே நம்பிக்கை. அதிமுக, பாஜகவின் தோழமைக் கட்சியாக மாறியதால், சிறுபான்மையினர் தங்களையே ஆதரிப்பார்கள் என்று மனப்பால் குடிக்கிறது திமுக. அதேசமயம், திமுகவின் ஹிந்து விரோதப் போக்கால் பெரும்பான்மை சமுதாயத்தின் அதிருப்தி பெருகி வருவதை கடைசி நேரத்தில்தான் ஸ்டாலின் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. “திமுக ஹிந்துக்களுக்கு எதிரியல்ல, பாஜகவுக்கு மட்டுமே எதிரி” என்று சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. முஸ்லிம் லீக் கட்சியை தனது அணியில் வைத்துக்கொண்டே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று தனது அணியை ஸ்டாலின் அழைப்பது அரசியல் நகைச்சுவை. இந்த அணியை மனிதநேய மக்கள் கட்சி என்ற இஸ்லாமியக் கட்சியும் வேறு வழியின்றி ஆதரிக்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் இப்போதே திமுக அணிக்கு ஆதரவாக பிரார்த்தனைகள் துவங்கிவிட்டன.
இந்தத் தேர்தலில் மிக முக்கியமான அம்சம், ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதுதான். ஜெயலலிதா இல்லாத அதிமுகவை தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட எடப்பாடி கே.பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், கருணாநிதி இல்லாத திமுகவை வழிநடத்தும் மு.க.ஸ்டாலினின் தலைமைக்குமான யுத்தம் இது. இத்தேர்தல் முடிவுகளே இவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
முந்தைய தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட அதிமுக அணி- திமுக அணி இடையிலான வாக்கு விகித மாறுபாடு இப்போதைக்கு 15 சதவிகிதமாக இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி, சிறுபான்மையினர் ஆதரவு மாற்றம், உயர் பணமதிப்பிழப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யின் எதிர்விளைவுகள் போன்ற காரணங்களால் அதிமுக தலைமையிலான அணியின் வாக்கு விகிதம் குறைய வாய்ப்புகள் இருப்பினும்கூட, அதிமுக அணியின் சரிவு ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்’ என்ற அளவிலேயே இருக்கும்.
தவிர, கூட்டணி பலம், பிரதமர் மோடி மீதான அபிமானம் தமிழகத்தில் பெருகி வருவது போன்றவை அதிமுக அணியின் இழப்புகளை சமன் செய்ய உதவும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது, முத்ரா வங்கிக் கடனால் தமிழகத்தில் அதிகமானோர் பயன் பெற்றிருப்பது, விவசாயிகளுக்கு உதவித்தொகை, உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, மத்திய அரசில் ஊழலின்மை ஆகியவை பாஜக- அதிமுக அணியின் சாதக அம்சங்கள்.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்துவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடைப்படை பலம். எதிரணியில் அவ்வாறு ஒருவரைக் காட்ட முடியாதென்பதும் பாஜக சார்ந்த அணிக்கு பலம். தவிர, தமிழகத்தில் திமுக அணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம், சிபிஐ ஆகியவை பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுவதும், கர்நாடகத்தில் தமிழக நலனுக்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் வாக்க்குறுதி அளிப்பதும் திமுக அணிக்கு பாதகங்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, மதவாதம், நீட் எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை விரிவாக்க எதிர்ப்பு, எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு, நெடுவாசலில் விவசாய நிலங்களில் எரிவாயு எடுக்க எதிர்ப்பு, உயர் மின்கோபுரப் பாதை எதிர்ப்பு ஆகியவற்றை பிரசாரம் செய்வது திமுக அணிக்கு சாதகம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலுள்ள பாஜக, அதிமுக கட்சிகள் மீது இயல்பாக உருவாக வாய்ப்புள்ள மக்கள் அதிருப்தியும் திமுகவுக்கு சாதகம். ஆனால், அதை வாக்குகளாக மாற்றும் வலிமை திமுக அணிக்கு இல்லாமல் இருப்பது பாதகமே. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை அவரது சொந்தக் கட்சியினரே ஏற்கத் தயங்கும் நிலையில் மக்களிடம் அது பெருத்த மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
மாநில அரசைப் பொருத்த வரை, ஜெயலலிதாவுக்குப் பிறகான கடந்த இரண்டாண்டுகால அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இணை ஓரளவு நற்பெயரையே ஈட்டி இருக்கிறது. அவர்களின் செயல்பாடுகளில் ஆணவப்போக்கு வெளிப்படவில்லை. இவ்விருவரும் தமிழகத்தின் பிரதானமான இரு ஜாதிகளான கொங்கு வேளாளர், முக்குலத்தோர் சமூகங்களைச் சார்ந்திருப்பது அதிமுகவின் கூடுதல் வலிமை. இத்துடன் பாமகவின் வன்னியர் வாக்கு வங்கியும், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக ஆதரவாகத் திரும்பும் நாடார் வாக்கு வங்கியும், தேர்தல் களத்தில் பேரிடம் வகிக்கும். இத்தகைய சாதகமான நிலையை திமுக அணியில் காண முடியவில்லை.
இந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் பதவியை இழந்த அதிருப்தியாளர்களால் நேரிட்ட இடைத்தேர்தல் இது. கழகங்களிடையிலான உண்மையான போட்டி இந்த இடைத்தேர்தல்தான். இதில் அதிமுக குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வென்றாக வேண்டும். அப்போதுதான் அதிமுக அரசு நீடிக்க முடியும். இதை இலக்காகக் கொண்டே திமுகவும், அதிருப்தியாளர்களின் அணியான அமமுகவும் வேலை செய்கின்றன. அதிமுக அணி இந்த போர்க்களத்தில் மீண்டுவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன. அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பது அக்கட்சிக்கு மிகவும் சாதகம்.
பாஜக வேட்பாளர்கள் விவரம்:
1. தூத்துக்குடி- தமிழிசை சௌந்தர்ராஜன்
2. ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்
3. கோயம்புத்தூர்- சி.பி.ராதாகிருஷ்ணன்
4. கன்னியாகுமர்- பொன்.ராதாகிருஷ்ணன்
5. சிவகங்கை- ஹெச்.ராஜா
தவிர, அதிமுகவின் தேர்தல் களப்பணியுடன் திமுகவை ஒப்பிட சற்றும் இயலாது. மேலும், அதிமுக அணியின் கூட்டணி வலிமையும், மோடியின் பிரசாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை. உண்மையிலேயே எடப்பாடி ராசியானவர் என்பது ஒவ்வொரு முறையும் நிரூபணம் ஆகி வருகிறது. ஆர்ப்பாட்டமில்லாமல் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் அவரது லாவகத்தைக் கண்டு மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 18-இல் தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் தேர்தல் நடைமுறைகளும், பிரசாரமும் நிறைவடைந்து வாக்குப்பதிவு நிகழ இருப்பது ஆளும் கூட்டணிக்கே முற்றிலும் சாதகம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, கூட்டணி அமைவதற்கு முன்னதாகவே, தமிழகத்தில் பிரதமர் மோடி திருப்பூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் 3 பிரமாண்டமான பொதுக்கூட்டங்களில் பேசிச் சென்றுவிட்டார். காஞ்சிபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. திமுக தரப்பில் ஒரு பொதுக்கூட்டம் மட்டுமே அவ்வாறு நடைபெற்றிருக்கிறது.
இவ்வாறாக, தமிழக தேர்தல் களத்தில் ஆளும் கூட்டணி புத்துணர்வுடன் காணப்படுகிறது. “நாற்பதும் நமதே” என்ற முழக்கத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. திமுகவும் அமமுகவும் ம.நீ.மையமும் எவ்வளவுதான் போராடினாலும் எட்ட முடியாத தொலைவில் மோடியின் ஆளுமையும் அதிமுக அணியின் வாக்கு வலிமையும் உள்ளன.
இப்போது கட்டுரையின் நிறைவுக் கட்டத்தை நாம் எட்டி இருக்கிறோம். நிகழவுள்ள தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுவதை இதுவரை பார்த்தோம். தமிழகத்தை வெல்ல வாய்ப்புள்ள அரசியல் அணிகள் குறித்த நிலவரத்தை இதுகாறும் அலசி இருக்கிறோம்.
இதைவிட முக்கியமான ஒரு கடமை நமக்கு இருக்கிறது. வெல்ல வேண்டிய கட்சிகள் எவை என்பதைத் தீர்மானிப்பதும் முக்கியமானது. அந்த வகையில் நமது தேர்வு தமிழகத்தில் அதிமுக – பாஜக அணியாகவே இருக்க முடியும்.
வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.
தேசப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, மக்கள் நலத் திட்டங்கள், தேசியப் பெருமிதம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி, உலக அளவில் பாரதத்தின் செல்வாக்கு உயர்வு, வரிச் சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சி, விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள், தமிழகத்துக்கு பாஜக அரசு அளித்துள்ள திட்டங்கள் என பன்முகங்களில் சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும்போது, அதில் தமிழகத்தில் பங்களிப்பு நூறு சதவிகிதமாக இருக்க வேண்டும்.
இதனை உறுதி செய்வதே நமது ஒரே கடமை.
.
ஆம் அரசியலில் தமிழக நிலையை படம் பிடித்துக் காட்டும் அருமையான கட்டுரை. சிறு பான்மையினா் என்றும் அரசியல் சக்தியாக விளங்கியதில்லை. ஆகவே திரு.மோடி அரசு அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. முத்தலாக் ஒழிப்பு சட்டம் குறித்து ஒரு அரசியல் தலைவா் கூட விவாதிக்க முன்வரவில்லை.நிக்கா ஹலால் குறித்தும் யாரும் பேச முன்வரவில்லை. நமது அரசயில் வாதிகள் இவ்வளவு கோழைகளாக இருப்பது ஏன் ? முதுகெலும்பு உள்ளவா்கள் பாரதிய ஜனதாக் கட்சியில் ஒதுங்கி விட்டாா்கள்.
This article provides a realistic picture of the current political scene in Tamil Nadu. This is totally related to the current elections. In the absence of the elections, there is nothing in common among the parties which are part of the NDA. It exudes an euphoria and confidence that this formation will win.May it so happen.
I did not want to raise doubts or difficulties for this alliance, but certain things have to be pointed out, in the larger and long term interests of the nation.
No one in his right mind will support the family controlled Congress, DMK or the alliance of mainly caste based parties of the North with hate as the only agenda. But does it automatically translate into support for the BJP and its allies?
That AIADMK and BJP have become allies is not due to convergence of principles but convenience of electoral gain. National level BJP played a dubious part behind the scene at the time of Jayalalithaa’s death to install the present dispensation. We have not forgotten that the BJP suppressed many things in connection with the prolonged hospitalisation and death of J. This alliance therefore is simple quid pro quo- you scratch my back, and I scratch yours.
We have looked upon BJP not only as a national party, but as truly nationalistic. Yet, under Modi, with single majority, what has it done to promote the nationalist agenda? Ghar wapsi, ban on cattle trade and beef – these saw Modi tremble and retreat. He did not dare to do anything in respect of the anti-Hindu judgement in the Sabharimala case. Modi is like a mud horse- not to cross the river with.
Even if we concede that there are two sides to demonetisation, what is the justification for his adopting Aadhaar so fanatically, ( which seriously compromises personal freedom and secrecy) and GST, which were Congress ideas?
Modi and Shah represent a formation of secret agenda. No one knows what their programmes are. Development, Make in India etc are slogans. What are their contents? No one in the present government can explain, including Jaitley the FM who can only react.
In the last para of this article, Jatayu lists 10 items as the achievements of Modi govt.Of these, national defence, fostering internal strength, restoration of national pride, rise of India’s stock among nations- these are unexceptionable. But the other items are debatable. Welfare schemes are based on fudging the budget for resources, ( and looting Reserve Bank for the rest). End of corruption is seen only on paper. From birth certificate to death certificate, nothing moves without payment. Economic development is debatable. Even if we do not go along with the doubting economists, there seems to be something seriously wrong with the approach of Modi govt: He and FM jaitley are without a clue to the way the economy works! [This combination is as productive as the ‘double barrel’ attack of Barrington and Bolus in cricket matches, as Vizzy used to describe in the 60s] About agriculture, the less said the better. Here too the Modi dispensation is without insight or even plain sight- the present chemical based, corporates dominated agriculture which steadily increases input costs is unsustainable and uneconomical without substantial subsidies for both farmers and consumers. It is burning at both ends.If we thus go into details of the 10 items, they become 10 liabilities for the Modi government.
I will add: Modi’s Hindi fanaticism and his party’s national level brinkmanship and double talk on the Cauvery water issue are bound to rankle Tamil Nadu once the election fever subsides.
I do concede that Modi government has worked with a hostile national media. But what sort of team he is heading if in five years he could not do anything to counter it? What leadership has he displayed here?
Our elections are based on communal calculations. BJP is ( and cannot be expected to be) an exception.
I know nationalistic Tamilians have no alternative but to support the NDA in the current elections. I know the State BJP leaders are good people and struggling against odds. But they are not served well by the national leadership. I know 60+ years of anti-national and anti-Hindu propaganda in Tamil Nadu cannot be reversed in five years of BJP rule at the centre. But the journey of a thousand miles begins with the first step. Has Modi taken that first step? Can he at least free Hindu temples from government control?
Please read “Sekkizhaan” [சேக்கிழான்] for Jatayu in my response. Sorry for the slip.
Good analysis