கொலைகாரக் கிறிஸ்தவம் — 22

இன்குசிஷன் விசாரணைகளுக்கு இரண்டு முக்கிய  நோக்கங்கள் இருந்தன. முதலாவது, கிறிஸ்தவனாக மதம்மாறிய அல்லது மாற்றப்பட்ட ஒருவன் கிறிஸ்துவுக்கு எதிராகப் பேசினாலோ, அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக நடந்து கொண்டாலோ அவனையொ — இரண்டாவதாக, ஹிந்துக்கள், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற  பிறமதத்தினரைப் பிடித்துச் சித்திரவதைசெய்து — அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றுவது.

இந்த விசாரணைகளின் போது செய்யவேண்டிய பலவிதமான சித்திரவதைகளைக் குறித்தும் இன்குசிஷன் சட்ட நடவடிக்கைப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. அந்த சித்திரவதை முறைகளில் ஒன்றிரண்டை இங்கு பார்க்கலாம்.

முதலாவது, தண்டனையளிக்கப்பட்டவனின் கைகளைப் பின்புறமாக மணிக்கட்டில் இறுக்கமாகக் கயிற்றால் கட்டி, (Torture of Pole or Potro) அவனைச் சிறிது சிறிதாக அந்தரத்தில் தூக்கி, கால்கள் தரையில்படாமல் தொங்கவிடுவார்கள். சிலசமயங்களில் கால்களில் எடைகளைக் கட்டுவதும் உண்டு. அவனை இன்குசிஷன் நீதிபதில் மனதுவைக்கும் காலம் வரைக்கும் அந்தரத்தில் தொங்கவிடுவார்கள். அவ்வப்போது அவனைக் கீழே இழுத்து வீழ்த்துவதும் உண்டு. பெண்களுக்கு இந்தத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

1620-ஆம் வருடம் ஒரு இன்குசிஷன் எழுத்தன், மேற்படி தண்டனையளிக்கையில் குற்றவாளியைக் கட்டி அவனை மெதுவாக மட்டுமே இழுக்கவேண்டும், அப்போதுதான் அவன் நிறைய வலியும், வேதனையும் அடைவான். அத்துடன், அவனது கால்களை முழுமையாகத் தரையிலிருந்து தூக்கமல் அவனது முன்னங்கால்கள் லேசாகத் தரையைத் தொட்டபடி இருந்தால் அவன் இன்னும் வேதனையடைவான் என சிபாரிசு செய்தான். அப்படி அந்தரத்தில் தொங்கி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில் பைபிளின் ஒரு குறிப்பிட்ட சில வார்த்தைகள் (Psalm Miserere)  மூன்றுமுறைகள் அமைதியான முறையில் சொல்லப்படவேண்டும். அதேவேளையில் குற்றம் சாட்டப்பட்டவன் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி மீண்டும், மீண்டும் கேட்கவேண்டும்.  அப்பொழுதும் அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தால் அவனைக் கீழே இறக்கி, பின்னர் அவன் கால்களில் எடைகளைக் கட்டி, இரண்டு பைபிள் வாசகங்கள் சொல்லவேண்டும். கால்களில் கட்டப்படும் எடைகளின் அளவு ஒவ்வொருமுறையும் கூட்டிக்கொண்டே போகவேண்டும் எனவும் அவன் இன்குசிஷன் நீதிபதிகளுக்கு சிபாரிசளித்தான்.

இரண்டாவது, தண்ணீர் சித்திரவதை (Water torture of potro). இந்த சித்திரவதை முறை சிறிது சிக்கலானது.  முதலில் குற்றவாளியை ஒரு சரிவான மேசையில் (trestle – a framework consisting of a horizontal beam supported by two pairs of sloping legs) தலை சரிவான பகுதியிலும், கால் மேடான பகுதியிலும் இருக்கும்படி சரிவாகப் படுக்கவைப்பார்கள். சரிவான பகுதியின் கீழ்ப்பகுதியில் குழிபோன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதில் அவனுடைய தலையை அமுக்கி, அவன் நகராமலிருக்குக்ம் பொருட்டு அவன் தலையைச் சுற்றிலும் இரும்புப் பட்டையை இறுக்கிப் பிணைப்பார்கள்.

சதையை வெட்டுமளவிற்குக் கூர்மையான சங்கிலிகளை அவனது கை, கால்கள், துடைகள், கணுக்கால்கள் என அத்தனை பகுதிகளிலும் ஓரிடம் விடாமல் பிணைத்து, மேசையுடன் இணைத்துக் கட்டுவார்கள். அந்தச் சங்கிலிகளை முறுக்க முறுக்க அவை சதைக்குள் புதைந்து ஆழமான வெட்டுக் காயங்களை உருவாக்கும். நகரமுடியாமல் தலைகீழாகக் கிடக்கும் அந்த பரிதாபத்திற்குறிவனின் வாயைப் பெரிய இரும்புக் கொறடா போன்ற ஒன்றால் திறந்தே இருக்கும்படி செய்வார்கள். அவன் வாய்க்குள் ஒரு துணிப்பந்து சொருகப்பட்டு ஒரு ஜாடியிலிருந்து தண்ணீர் மெதுவாக அவன் வாய்க்குள் ஊற்றப்படும்.

இந்தத் துயரத்தை அனுபவிக்கும் குற்றம்சாட்டவன் மூச்சுத் திணறித் திணறி மரண அவஸ்தைப்படுவான். அவ்வப்போது அந்தத் துணியை நீக்கி, அவனது குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கேட்பார்கள். ஒப்புக்கொண்டவன் குற்றுயிரும் குலையுயிருமாகப் பிழைத்துக் கிடப்பான். சிலசமயம் குற்றவாளிகளுக்கு ஆறு முதல் எட்டு ஜாடிகள் அளவிற்குத் தண்ணீர் புகட்டப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.

இவற்றுடன் பலதரப்பட்ட சித்திரவதைகளும் இன்குசிஷன் விசாரணைகள் நடத்தியவர்களால் செய்யப்பட்டன. இந்த சித்திரவதைகளைக் குறித்து ஆராய்ந்தவரான இ.டி. விட்டிங்டன் இவ்வாறு சொல்கிறார்,

நாகரிக மனிதன் கண்டுபிடித்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகள் அவை என்பதில் சந்தேகம் இல்லை. சாதாரண முள் சங்கிலியிலிருந்து, கையின் கட்டைவிரலைச் சிதைக்கும் கருவிகளும், கால்களின் எலும்புகளை நொறுக்கும் கருவிகளும், ஸ்பானிஷ் காலணிகள் என்றழைக்கப்படும் கூர்மையான சக்கரங்களும், கொதிக்கும் எண்ணெய் குற்றவாளிகளில் கால்களில் ஊற்றப்பட்டும், கொளுத்திய மெழுகுவர்த்தியை அவர்களின் அக்குளுக்கு நேராகப் பிடித்து எரிப்பதும், எரியும் சல்ஃபரை அவர்களின் உடலில் வீசுவதும்…..எனப் பலவகையான சித்திரவதை முறைகளை இன்குசிஷன் விசாரணைகளில் பயன்படுத்தினார்கள்.

பாம்பெர்க் என்கிற இடத்தில் விசாரணைக் கைதிகளுக்கு உப்பிடப்பட்ட மீனை உண்ணக் கொடுத்து, அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீரை அளிக்க மறுத்தார்கள். பலரை சுண்ணாம்புக் காளவாயில் தூக்கியெறிந்து அவர்கள் உயிருடன் வெந்து சாகச்செய்தார்கள்.  இன்னொரு இடமான லின்ஹெய்ம் என்கிற இடத்தில் கைதிகளை ஒரு சக்கரத்தில் படுக்கவைத்துக் கட்டி அந்தச் சக்கரத்தைத் தொடர்ந்து சுற்றினார்கள். அதில் கட்டப்பட்டிருந்த கைதிகள் வாந்தியெடுத்து முழு உணர்வும் அற்றவர்களாகும்வரை அந்தச் சக்கரங்களை விடாமல் சுற்றினார்கள். மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அந்தச் சித்திரவதைகக்கு ஆளாக விரும்பாதவர்கள் தாங்கள் செய்யாத குற்றங்களைக்கூட ஒப்புக்கொண்டார்கள்.

நெய்ஸே என்னுமிடத்தில் நூற்றைம்பது விரலளவுள்ள கூர்மையான ஆணிகள் அறையப்பட்ட நாற்காலியில் குற்றம் சாட்டப்பட்ட பிறமதத்தவனை நாட்கணக்கில் உட்காரவைத்தார்கள். இந்தச் சித்திரவதைக்கு ஆளான பத்தில் ஒன்பதுபேர், அவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், தாங்கள் செய்யாத அத்தனை குற்றங்களையும் செய்ததாக ஒப்புக்கொண்டார்கள்.

இந்தச் சித்திரவதைகள் எந்த அளவிற்கு குற்றவாளிகளின் மனதில் அச்சத்தை மூட்டின என்பதற்கு உதாரணமாக ஹெச்.சி. லீ என்பவர் சொல்லும் கிறிஸ்வதமதத்தைச் சாராத ஒரு பெண்மணிக்கு நிக்ழந்ததொரு ‘மிதமான’ சித்திரவதைச் சம்பவத்தைப் பார்க்கலாம். இந்தச் சம்பவத்தில் ‘பன்றி இறைச்சி தின்ன மறுத்து, சனிக்கிழமைகளில் சுத்தமான துணியை அணிந்த’ ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தண்ணீர் சித்திரவதை இது:

அந்தப் பெண்ணை சித்திரவதைக் கூடத்திற்குத் தூக்கிவந்து, அவளை உண்மையைச் சொல்லும்படி உத்தரவிட்டாரகள். அவள் தன்னிடம் சொல்வதற்கு எதுவுமில்லை என அப்பாவித்தனமாக பதில்சொன்னாள். உடனடியாக அவளது உடைகளைக் களைய உத்தரவிட்டு, மீண்டுமொருமுறை அவளிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படிச் சொன்னார்கள். அதன் பின்னரும் அவள் அமைதியாயிருந்தாள். அவளது உடைகளை அவர்கள் களைய ஆரம்பிக்கையில், கனவான்களே, நான் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். நான் எந்தக் குற்றமும் அற்றவள். கடவுளின் பெயரால் சொல்கிறேன். நான் எதுவும் அறியாதவள் எனச் சொன்னாள்.

அவளது உடைகளைக் களைந்த பின்னர் அவளை மேசையில் தலைகீழாகப் படுக்க வைத்து அவளது கைகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். அவள் மீண்டும், நான் உண்மையைத்தான் சொன்னேன். நான் என்ன சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோதும், உண்மையைச் சொல்லும்படி வலியுறுத்தினார்கள். நான் உண்மையை மட்டுமே சொன்னேன். என்னிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை, என்றாள் அந்தப் பெண்.

அவளது கைகளில் முள் கம்பியைச் சுழற்றிக் கட்டிவிட்டு, அவளை மீண்டும் உண்மையைச் சொல்லும்படி வற்புறுத்துகினர். வலிதாங்காமல் கதறியழும் அவள் மீண்டும், ‘‘நான் சொல்லவேண்டியது அனைத்தும் சொல்லிவிட்டேன்,’ என்றாள். நீ இன்னும் உண்மையச் சொல்லவில்லை, எனச் சொல்லிக் கொண்டே முள்கம்பியை இறுக்கினர். நான் என்ன சொல்லவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதனைச் சொல்லுங்கள். நான அதையே திரும்பச் சொல்லுகிறேன், எனக் கண்ணீருடன் மன்றாடினாள் அவள்.

நீ என்ன செய்தாய் என்பதனைச் சொல்லு எனக் கடுமையாகக் கேட்பவர்களிடம் மீண்டும் அந்தப் பெண், நான் ஒன்றுமே செய்யவில்லையே என்றாள். உடனடியாக மற்றொரு முள்கம்பிக் கயிறு கொண்டுவரும்படி உத்தரவிடுகிறான், இன்குசிஷன் விசாரணைசெய்பவன். என்னை அவிழ்த்துவிடுங்கள். நான் என்ன செய்தேனென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன சொன்னாலும் அதனை ஒப்புக்கொள்கிறேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,’ என அவள் சொல்லச் சொல்ல, இன்னொறு முள்கம்பியினால் அவளது கை, கால்கள் இறுக்கப்பட்டன. நீ பன்றி இறைச்சியைச் தின்ன மறுத்தாயா எனக் கேட்டுக் கொண்டே அவளது கைகளை இறுக்கினார்கள். இப்படியாக பதினாறு முள் கம்பிகளை அவள் உடலில் இட்டு முறுக்கினார்கள்.

அதற்குப் பிறகு அவளை தண்ணீர் சித்திரவதைக்குத் தயாராக்கினார்கள். இறைவனின் பெயரால் நான் என்ன சொல்லவேண்டும் எனச் சொல்லுங்கள். அத்தனையையும் நான் ஒப்புக் கொள்கிறேன் எனக் கெஞ்சியும் அவளைத் தண்ணீர் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். அவள் மயக்கமடைந்து ஏறக்குறைய மூச்சுத் திணறி இறக்கும்வரை சித்திரவதைகளை அவர்கள் தொடர்ந்தார்கள்.” என்று விளக்குகிறார்.

ஏற்கனவே சொன்னபடி இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

கோவாவின் இன்குசிஷன் கொடூரங்களைக் குறித்துப் பேசும் அத்தனை வரலாற்று அறிஞர்களும், கிறிஸ்தவ மதத்தின் பெயரால் அப்பாவி ஹிந்துக்களுக்கு நடந்த இரக்கமற்ற கொடூரங்களை எவராலும் மறுக்கவியலாது எனச் சொல்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தங்களின் இனமான வெள்ளைக்காரர்களையே எண்ணமுடியாத, இரக்கமற்ற முறைகளால் சித்திரவதைசெய்தவர்கள் கறுப்பர்களான இந்தியர்களை — குறிப்பாக ஹிந்துக்களை எத்தனை சித்திரவதைகள் செய்திருப்பார்கள் என்பதினை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தங்களின் மதச் சடங்குகளைச் செய்த, திருவிழாக்களைக் கொண்டாடிய ஹிந்துக்களுக்கு கசையடிகள் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறான ஹிந்துக்கள் கோவாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட சம்பவங்களும்கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் கோவா ஹிந்துக்கள் தாங்கள் உண்ணாத உணவுகளையும் கட்டாயப்படுத்தி உண்ணவைக்கப்பட்டிருக்கலாம். தங்களின் உயிரையும், உடமைகளையும் இரக்கமற்ற கிறிஸ்தவப் பதர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக தங்களின் மதச்சம்பிரதாயங்களையும் துறந்து நடந்திருக்கலாம். அவ்வாறான சூழலில் தாங்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதனைத் தவிர்த்து வேறுவழியின்றி அவர்கள் மதம்மாறிய சம்பவங்களும் நடந்திருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *