கொலைகாரக் கிறிஸ்தவம் – 29

போர்ச்சுகீசியர்களுக்கு இணையாக டச்சுக்காரர்களும் இந்தியாவில் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் மிஷனரி வேலைகளைத் தொடர்ந்தார்கள். எனினும், போர்ச்சுகீசியர்கள் அளவிற்கு வன்முறைகளை அவர்கள் உபயோகிக்கவில்லை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கட்டாய மதமாற்றங்களை அவர்கள் நடத்தினாலும் கத்தோலிக்க போர்ச்சுகீசியர்களின் மதவெறிக்கு முன்னால் புரோட்டஸ்டண்டுகளான அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

அதேசமயம் இந்தியாவிற்கு மதத்தைப் பரப்பவந்த பிற ஐரோப்பிய நாட்டுக் குடிமக்களைவிடவும் டேனிஷ் அரசாங்கம் தங்களுக்குத் தேவயானவற்றைச் செய்யவும் அவர்களைப் பாதுகாக்கவும் முன்னின்றது என்பதில் சந்தேகமில்லை. அந்த காலகட்டத்தில் நடந்துகொண்ட பிறநாடுகளைப்போல மிஷனரிகளை நடவடிக்கைகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டேனிஷ் அரசாங்கம் பிறமதத்தினவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதனை அங்கீகாரம் செய்யவில்லை. எனினும், பல திறமையான பாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்ப வைப்பதில் டேனிஷ் அரசாங்கம் வெற்றிபெற்றது என்பதில் சந்தேகமில்லை.

சீகன்பால்க்

1705-ஆம் வருடம் டேனிஷ் பாதிரிகளான சீகன்பால்க்கும் (Zigenbalg), புலுட்ச்சாவும் (Plutschau) முதன்முதலாக இந்தியாவில் மிஷனரிப் பணிகளைச் செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களே கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது புரோட்டஸ்டண்ட் மிஷனரிகளும் ஆவார்கள் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் ஒரு மூலையில் டேனிஷ்காரர்களின் வசமிருந்த தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த அந்த இரு பாதிரிகளும் உடனடியாக தமிழ்மொழியைக் கற்கவும், அந்தப் பகுதியிலிருந்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதிலும் முயற்சிகளைத் தொடங்கினார்கள்.

எனினும் அவர்களின் மதமாற்ற முயற்சிகளுக்கான எதிர்ப்பு அந்தப் பகுதியில் இருந்த பிற ஐரோப்பிய காலணி அதிகாரிகளால் கடைபிடிக்கப்பட்டு அந்த இரு பாதிரிகளும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இன்றைக்கு இருப்பதுபோல தகவல்தொடர்பு சாதனங்கள் அதிகமில்லாத அந்தக்காலத்தில் இவ்விரு பாதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தகவல் டேனிஷ் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட தாமதமானதால் இருவரும் நீண்டகாலம் சிறையில் இருந்தார்கள். பின்னர் ஐரோப்பிய நாடுகளிடையே இருந்த ஒப்பந்தங்கள் காரணமாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

தங்களின் மதமாற்ற பிரசாரங்களைத் தரங்கம்பாடியில் துவங்கிய சீகன்பால்க், அருகிலிருந்த தஞ்சாவூருக்கும் பின்னர் திருநெல்வேலிக்கும் விரிவுபடுத்தினார். சென்னை ஐரோப்பிய மிஷனரி வேலைகளின் தலைமையகமாக இருந்தாலும், டேனிஷ் மிஷனரிகள் ‘கடற்கரையோர மிஷனரிகள்’ என அறியப்பட்டனர்.

ஹிந்துக்களை வற்புறுத்தி மதமாற்றம் செய்யாதவர்களாக டேனிஷ் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், மிகத் திறமையான அவர்களது பிறசெயல்களால் மதமாற்றம்செய்வதில் வெற்றியும் கண்டார்கள். உதாரணமாக, ஐரோப்பிய மொழிகளில் மட்டுமே இருந்த பைபிளை மூன்றே வருடங்களில் “தேவையான அளவுக்கு” தமிழில் மொழிமாற்றம் செய்து, ஹிந்துக்களை மூளைச் சலவை செய்வதிலும் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார்கள்.

தமிழகத்தில் பள்ளிகளைத் மதமாற்றக் கருவிகளாகத் துவங்கி, படிக்கவரும் இளம் சிறுவர்களை மனதைத் திருப்பியும், மெதுவான அணுகுமுறைகளாலும் தமிழக ஹிந்துக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுப் பலரை புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதில் வெற்றி பெற்றார்கள், டேனிஷ் மிஷனரிகள்.

சீகன்பால்க் வெறும் மூன்றரை வருடங்களில்  நூற்றி அறுபது ஹிந்துக்களை புரொட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்களாக மதமாற்றம் செய்தார். பத்தே வருடங்களில் அந்த எண்ணிக்கை மூன்று மடங்காகியது. ஆகவே, சென்னையில் ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டு சீகன்பால்க்கின் பாதிரிகள் தெலுங்கிலும், போர்ச்சுகீசிய மொழியிலும், தமிழிலும் மதப்பிரசங்கங்களைச் செய்யத் துவங்கினர்.

இதனால், சென்னையில் மட்டுமே ஒரே வருடத்தில் நூற்றுநாற்பது ஆடுகள் வழி தவறி, இயேசு கிறிஸ்துவின் புரோட்டஸ்டண்ட் பாதையில் பயணிக்கத் துவங்கின. சீகன்பால்க்கின் பைபிளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டதால் மும்பை போன்ற தூரப்பகுதிகளிலும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அச்சுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு பல மொழிகளில் அது அச்சடிக்கப்பட்டது.

Image result for Friedrich Schwartz
ஃப்ரெடெரிக் ஷ்வார்ட்ஸ்

சீகன்பால்கிற்குப் பின்னர் 1750-ஆம் வருடம் இந்தியாவிற்கு வந்த மிஷனரியான ஃப்ரெடெரிக் ஷ்வார்ட்ஸின் (Friedrich Schwartz)  வருகை டேனிஷ் மிஷனரிகளிடையே பெரும் உற்சாகத்தைக் கொண்டுவந்தது. ஷ்வார்ட்ஸ் மிஷனரி உலகில், பெரும் மதமாற்றத் திறமை உடையவர் எனக் கணிக்கப்பட்டவர். அவர் இந்தியா வந்த காலத்தில் முதல்தலைமுறை டேனிஷ் மிஷனரிகள் பெரும்பாலோர் உயிருடன் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தபோது வந்த ஷ்வார்ட்ஸ்,, தென்னிந்தியாவில் காலனி அமைத்திருந்த ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஹிந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்றார். மேலும், பிரிட்டிஷ்காரர்களின் சமாதான ஏஜெண்ட்டாகவும் வேலைசெய்துவந்தார்.

பதினாறு வருடங்கள் தரங்கம்பாடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மதமாற்றப் பணிகள் செய்த ஷ்வார்ட்ஸ் திருச்சிராப்பள்ளியிலும், தஞ்சாவூரிலும் தனது பணிகளைத் துவக்கினார். பல சர்ச்சுகள் அங்கு கட்டப்பட்டன. 1779—ஆம் வருடம் பிரிட்டிஷ்காரர்களுக்கும், ஹைதர் அலிக்கும் நிகழ்ந்த போர்களில் சமாதானத் தூதுவராக பணியாற்றிய ஸ்குவார்ஷின் தலையீட்டால் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் முக்கிய கோட்டை அமைந்திருந்த கடலூர் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. ஷ்வார்ட்ஸால் ஏறக்குறைய 50,000 ஹிந்துக்கள் புரோட்டஸ்ட்டுகளாக மதம்மாறியதாகத் தெரிகிறது. இருப்பினும் இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் 1850-ஆம் வருடம் எடுத்த கணக்கின்படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருந்தது.

டேனிஷ் கப்பலில் ஏறி நவம்பர் 11, 1793-ஆம் வருடம் இந்தியவிற்கு வந்த வில்லயம் கேரியே டேனிஷ் மிஷனரிகளுக்கு அடுத்தபடியாக, பிரிட்டிஷ் இவாஞ்சலிசம் இந்தியாவில் காலூன்றக் காரணமானவர்.

பெங்காலி மொழியைக் கற்றுக் கொண்ட கேரி, கல்கத்தாவைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததுடன், பைபிளின் புதிய ஏற்பாட்டையும் பெங்காலி மொழியில் மொழிபெயர்த்தார். கேரியால் ஹூப்ளி நதியில் ஞானஸ்னானம் செய்து வைக்கப்பட்ட கிருஷ்ணபால் என்கிற ஹிந்துவே முதன்முதல் கல்கத்தாவில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய ஹிந்து எனத் தெரிகிறது. அங்கிருந்த பிரிட்டிஷ் மிஷனரிகள் பூடான், பர்மா, ஒரிஸ்ஸா எனப் பல பகுதிகளுக்கும் பரவி, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக் குழந்தைகளை மதமாற்றம் செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பல மிஷனரிகள் இங்கிலாந்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் வெள்ளமெனத் திரண்டு இந்தியாவைச் சூழத் துவங்கியது வரலாறு. அதனைக் குறித்து எழுதுவதென்றால் தனிப் புத்தகமே எழுதவேண்டும். ஆரம்பத்தில் ஹிந்து மதத்தைத் தொந்திரவு செய்ய விருப்பமில்லாதிருந்த வைசிராய்கள், மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் தங்களின் அடிமைகளாக மாறி சேவகம் செய்வதினைக் கண்டு அதனை மேன்மேலும் செய்ய முற்பட்டார்கள். மிஷனரிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே செயல்பட்டனர். அதற்கான சட்ட வரையறைகளும் கொண்டுவரப்பட்டு மிஷனரிகள் பாதுகாக்கப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போரில் ஒரே ஒரு குறிப்பிட்ட இந்திய கிறிஸ்வனைக்கூட உங்களால் அடையாளம் காட்ட இயலாது. ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்கள் தங்களின் வெள்ளைக்கார கிறிஸ்தவ முதலாளிகளுக்கு அடிமைகளாக, அவர்களின் கால்நக்கிப் பிழைப்பவரகளாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசுகளே இன்றைக்கும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது  கண்கூடு.

அடிமைகள் என்றைக்கும் அடிமைகளே.

இந்தியாவை ஆண்ட இன்னொரு பெரும் ஐரோப்பிய நாடு ஃப்ரான்ஸ். எனினும் கத்தோலிக்கர்களான ஃப்ரெஞ்சுக்காரர்கள் பெரும்பாலும் மதமாற்றங்களிலும், ஹிந்துக்களைத் துன்புறுத்துவதிலும் இருந்து விலகியே இருந்தார்கள் என்றாலும் அவர்களிடையேயும் மதவெறியர்கள் அவ்வப்போது தோன்றி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஃப்ரெஞ்சுக் காலனியான பாண்டிச்சேரியை ஆண்ட டூப்ளேவின் காலத்தில்தான் புகழ்பெற்ற, பழமையான வேதபுரீஸ்வரர் ஆலயம் இடித்துத் தகர்க்கப்பட்டு அதன்மீது சர்ச் கட்டப்பட்டது. காரைக்காலில் இருந்த பெயரறியாத இன்னொரு பேராலயமும் இடித்துத் தகர்க்கப்பட்டது. ஃப்ரெஞ்சுப் பாதிரிகள் ஹிந்துக்களை மிரட்டி அவர்களைத் துன்புறுத்தியதும் நிகழ்ந்தது. சாதிவாரியான மதமாற்றங்களும் ஃப்ரெஞ்சுப் பாண்டிச்சேரியில் நிகழ்ந்த ஆதாரங்களை ஆனந்தரெங்கம்பிள்ளை போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். மதம்மாறிய ஹிந்துக்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டன. ஹிந்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான பல ஆதாரங்களும் இருக்கின்றன.

அதனையெல்லாம் இங்கு எழுதுவதென்றால் ஏற்கனவே சொன்னபடி இன்னொரு புத்தகம்தான் எழுத வேண்டியிருக்கும். அனைத்துத் தகவல்களும் இன்றைக்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *