கோவாவின் இன்குவிஷனுக்கும், தமிழகக் கடலோர, கேரள ஹிந்து பரதவர்கள் மதம்மாறுவதற்கு முக்கியமான ஒரு மனிதரான சேவியரைத் தமிழகத்தில் ஹிந்துக்கள் அதிகம்பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்குப் “புனித” சேவியராக அழைக்கப்படும் இந்த மதவெறியனைக் குறித்து சிறிது இங்கு காணலாம். இது ஒரு அறிமுகம் மட்டுமே என்பதினை நினைவில் கொள்ளுங்கள்.
எந்த சேவியர் ஹிந்துக்களைக் கொடூரமாகக் கொன்றானோ, எந்த சேவியர் ஹிந்து ஆலயங்களை இடித்து, அதிலிருந்த சிலைகளை உடைத்தானோ, எந்த சேவியர் அப்பாவி ஹிந்துக்களை இன்குவிசிஷன் விசாரணைகள் மூலம் கொடுமைகள் செய்து மதமாற்றம் செய்தானோ, அதே சேவியர் இன்றைக்குப் “புனித”னாக இந்தியாவில் அழைக்கப்படுகிறான். இந்தக் கொலைகாரனின் பெயரால் இன்றைக்கு இந்தியாவெங்கும் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அறியாமையில் உழலும் ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் சேர்க்க வரிசையில் நிற்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.
சேவியரின் பூர்வீகம் இன்றைய ஸ்பெயினில் இருக்கும் பாம்பலோனா நகரிலிருந்து இருபது மைல்கள் தொலைவிலிருக்கும் பைரனீஸ் மலையடிவாரக் கிராமமான நவார்ரே என்பதாகும். இங்குதான் பிரபுக்களான சேவியர் குடும்பத்தின் அரண்மனை இருக்கிறது. இங்கு வாழ்ந்த டான் யுவான்-டி-ஜாஸ்ஸோ என்பவருக்கும் அவரது மனைவியான மேரி சேவியருக்கும் மகனாக 1506-ஆம் வருடம், ஏப்ரல் 7-ஆம் தேதி ஃப்ரன்ஸிஸ் சேவியர் பிறந்தான். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்த இன்னொரு புகழ்பெற்ற ஸ்பானியப் பாதிரியான லொயோலாவும் பிறந்த இடம் நாவார்ரேதான்.
இளமையில் சேவியர் பிறகுழந்தைகளைப் போல விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டாமால், நவார்ரேவின் காடுகளில் தனியனாகச் சுற்றித் திரிவதில் ஆர்வம் கொண்டிருந்தான். பணக்காரர்களான அவர்களது பெற்றோர்கள் சேவியருக்குத் தனியான ஆசிரியர்களை அமர்த்திப் பாடம் கற்றுக் கொடுத்தார்கள். சேவியர் தத்துவத்தில் (meta-physics) நாட்டம்கொண்டு படித்து தத்துவவாதியாகத் தேர்ந்தான். 524-ஆம் வருடம் பாரிஸ் செயிண்ட் பார்பா கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து படித்து இளவயதிலேயே, அதே கல்லூரியில் அரிஸ்ட்டாட்டிலின் தத்துவத்தைப் போதிக்கிற ஆசிரியராகப் பதவி வகித்தான்.
சேவியர் பிறர் அரியாமல் பாரிஸிலேயே தன் வாழ்நாளைக் கழித்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், அவையனைத்தும் அவனது சொந்த ஊர்க்காரனான லொயோலாவின் வருகையால் முற்றிலும் மாறியது. லொயோலா ‘சொஸைட்டி ஆஃப் ஜீஸஸ்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, அதன் தலைவராக இருந்தான். இருப்பினும் தன்னுடைய கல்வி அறிவு போதாது என்கிற எண்ணத்தால், பாரிஸிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அங்கு சேவியரினைப் பற்றிக் கேள்விப்பட்ட லொயோலா, அந்த புத்திசாலியின் மனதை எப்படியாவது மாற்றித் தனது மதமாற்ற வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்
சேவியருடன் நட்புக்கொண்ட லொயோலா மெல்லமெல்ல அவன் மனதினைக் கரைத்து. “இந்த உலகத்தையே வென்ற மனிதன் தன் ஆன்மாவைக் கொன்று சாதிக்கப்போவதுதான் என்ன?” என சேவியரைக் கேட்கிறான். அவனது பரப்புரைகள் சேவியரை ஈர்த்தது.
ஆகஸ்ட் 15, 1534ல் இக்னேஷியர் சேவியரும், இன்னும் ஐந்து பேர்களும் ஃப்ரான்ஸின் செயிண்ட் டெனிஸ் சர்ச்சில் சந்தித்தார்கள். அங்கு நடந்த பிரார்த்தனைக்குப் பிறகு சேவியர் பரமண்டலத்திலிருக்கும் பிதாவினுக்கும், லொயோலாவின் சர்ச்சிற்கும் சேவைசெய்து வாழ்வதாக முடிவெடுத்தான். அந்த நாளே இந்தியாவையும், பிற கிழக்கு நாடுகளின் தலைவிதியை எதிர்காலத்தில் நிர்ணயித்த நாளாகும். அன்றைக்கு அந்த சந்திப்பு நிகழாதிருந்தால், இன்றைய உலகம் வேறுவிதமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்த் ஆறாண்டுகள் சேவியர் தனது சத்தியத்திற்கு உண்மையானவனாக உலகத்து இன்பங்களைத் துறந்து, பயணங்களில் கழித்துக் கொண்டிருந்தான். வறுமையையும், களைப்பையும், கடின வாழ்க்கைமுறைகளையும் தனது அனுபவத்தில் கண்டுகொண்டிருந்த சேவியரை உடனடியாக ரோமிற்கு வரும்படி அழைத்தான் லொயோலா. அவர்கள் பொம்பலோனோவில் சொஸைட்டி-ஆஃப்-ஜீஸஸ் நிறுவனத்தை நிறுவினர். அங்கிருந்து கிழக்குநாடுகளுக்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்பச் செல்வதற்காக சேவியருக்குப் பாதிரியாக வாழ்வதற்கும், பிரசங்கங்கள் செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் ரோமில் சந்திக்கும் லோயோலாவின் இன்னொரு மாணவன் மூலமாக கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் கண்டு வியந்தான் சேவியர். போர்ச்சுகீசிய அரசர்கள் தென்னிந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப அனுப்பிவைத்த மிஷனரிகளாகவே அவன் அவர்களைப் பார்த்தான். சேவியரும் அவர்களுடன் இந்தியாவிற்குப் போகவிருப்பதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான் லொயோலா.
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப 1540 மார்ச் 16 ரோமிலிருந்து புறப்பட்ட சேவியர் இந்தியாவிற்குச் செல்ல கப்பல் கிடைக்காமல் ஒன்பது மாதங்கள் போர்ச்சுகலில் காத்திருந்து, 1541 ஏப்ரல் மாதம் போர்ச்சுகீசிய கப்பலில் ஏறி, 1542 மே மாதம் ஆறாம் தேதி கோவாவை அடைந்தான்.
அங்கு ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்குப் பல தந்திரங்களைச் செய்ய ஆரம்பித்தான் சேவியர். அவற்றில் முக்கியமானது ஹிந்துக்களை சித்திரவதைசெய்து படுகொலை செய்ய அச்சாரமிட்ட கோவா இன்குசிஷன் என்கிற கொடிய விசாரணை. ஹிந்துக்களை மத மாற்றம் செய்து பாகன்களை ஒழிக்க ஒரே வழி அங்கு இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்குவதுதான் என போர்ச்சுகீசிய அரசருக்குக் கடிதங்கள் எழுதி சம்மதிக்க வைத்தவனும் கத்தோலிக்க பயங்கரவாதியாகியான சேவியர்தான்.
பிராமண வெறுப்பில் ஊறியவனான சேவியர் அவர்களைத் துன்புறுத்தி கோவாவிலிருந்து விரட்டியடித்தான். அந்த பிராமண வெறுப்பே பிற்காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் கடைப்பிடிக்கபட்டு இன்றுவரையிலும் இந்திய கிறிஸ்தவ மதமாற்றிகளால் தொடரப்பட்டுக் கொண்டுருப்பதனைக் காணலாம். பிரிட்டிஷ்காரனான லார்ட் மிண்ட்டோ என்பவன் ‘கிறிஸ்வமதம் இந்தியாவில் பரவ வேண்டுவதற்கு ஒரேவழி பிராமணர்களை இனப்படுகொலை செய்வதுதான்’ என 1812-ஆம் வருடம் பிரிட்டிஷ் பார்லிமெண்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறான். தமிழ்நாடுபோன்ற மாநிலங்களில் பிராமணர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதன் பின்னணியில் மதவெறிபிடித்த கிறிஸ்தவ பாதிரிகளே இருப்பதனை நீங்கள் கவனித்திருக்கலாம்.
சேவியர் சொஸைட்டி ஆப் ஜீஸசுக்கு எழுதிய கடிதமொன்றில், “மனைவி, பிள்ளைகளுடன் மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு, போலிக் கடவுளர்களின் ஆலயங்களை இடித்து, அங்குள்ள சிலைகளை உடைத்து எறியும்படி உத்தரவிட்டேன். அந்த ஆலயங்கள் உடைக்கப்படுகையில் எனக்கு உண்டான மகிழ்ச்சியைக் குறித்து வார்த்தைகளால் விளக்க இயலாது. எந்த மக்கள் அந்தச் சிலைகளையெல்லாம் வணங்கி வந்தார்களோ அந்த மக்களின் கைகளாலேயே அந்தச் சிலைகள் உடைக்கப்படுவது ஒரு பேரின்பமடையும் நிகழ்வு”.
கொச்சிக்குச் செல்லும் சேவியர் அங்கிருந்த ஹிந்து ராஜாவிடம் நைச்சியமாகப் பேசி அவனிடமிருந்து ஏராளமான நிலத்தையும், பணத்தையும் தானமாகப் பெற்றான். பின்னர் அந்தப் பணத்தை உபயோகித்து அங்கு ஒரு பெரும் சர்ச்சினைக் கட்டி அங்கிருந்த ஹிந்துக்களை மதமாற்றம்செய்தான். ஹிந்துக்களின் கையால் ஹிந்துக்களின் கண்ணைக் குத்திய செயலுக்கு நிகரானது அது.
கோவா, கொச்சி வழியாக கன்னியாகுமரிக்கும் வந்த சேவியர் அங்கிருந்த ஏராளமான ஹிந்துப் பரதவர்களை மதமாற்றம் செய்தான்.
அதனைக் குறித்து பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.
(முற்றும்)
இந்துக்களாகிய நாம் எவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றோம் ?????
எர்வாடி ( இராமநாதபுரம்)தா்காவில் அடக்கம் பெற்றிருப்பவரும் இந்துக்களை பலவாறு கொடுமை படுத்தி மதுரையை ஆண்ட ஒரு மன்னன் என்பதும் உண்மையா ?
sir innum pala punitharhalai patrium eluthumaru kaettukolhiren. example. sebasthiar, anthoniyar