நூல் : Savarkar: Echoes from a forgotten past – 1883 to 1924
ஆசிரியர் : Dr Vikram Sampath
இந்த நூலினை வாசித்து முடித்த பிறகு , இன்னதென்று சொல்ல இயலா ஒரு மனநிலையில் இருந்தேன் . வழக்கம் போல ஒரு நூலினை வாசித்து முடித்தவுடன் , அந்த நூலுக்கான ஒரு மதிப்புரையை உடனே எழுதுவது போல அல்லாமல் , இந்த முறை, காலம் கடத்தினேன் . ஏனெனில் இந்த பாரத மண்ணுக்கு , அதன் விடுதலைக்கு , அதன் நெடிய பண்பாட்டுக்கு – தன்னுடைய உடல் , பொருள் மற்றும் வளமான எதிர்காலம் முதலியனவற்றை ஆகுதியாக அளித்த மகத்தான ஒரு செயல் வீரரின் தியாகத்தை என்னுடைய எழுத்திலே கொண்டு வர இயலாது என்ற அவநம்பிக்கையை இந்த நூல் என்னுள் தோற்றுவித்தது . இருப்பினும் மகத்தான அந்த வீரர் , அவரது தமையனார் (Ganesh Dāmodar Sāvarkar alais Babarao Savarkar ) , அவரது தம்பி (Dr. Narayan Damodar Savarkar ) , அவரது அண்ணி( Yesu Vahini alais Saraswatibai Savarkar ) அவரது மனைவி ( Yamunabai Vinayak or Mai Savarkar ) ஆகியோரின் நினவுகளை கண்ணீரில் போற்றி , வணங்கி இந்தப் பதிவினை எழுதுகிறேன் .
அருமையான இந்த நூலினை எழுதியவர் விக்ரம் சம்பத் . அவர் BITS இல் கணிதம் மற்றும் பொறியியலில் பட்டங்கள் பெற்றபிறகு , நிதி மேலாண்மையியலில் ( MBA – Finance ) பட்டம் பெற்ற பிறகு ஆஸ்திரேலியா ( Australia ) வில் உள்ள பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் இசையில் முனைவர் பட்டங்களை பெற்றார் . பன்முகத் திறன்கள் பெற்ற ஆளுமையுள்ள ஒரு வரலாற்று அறிஞர் . இந்த நூலில் ஏரளாமான தரவுகள் / ஆவணங்கள் கொண்டு அற்புதமான இதனை வடிவமைத்து உள்ளார் . அவருக்கு நமது பாராட்டுகள் !
சாவர்க்கரின் வரலாற்றை – அவரது பிறப்பில் இருந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டு முதல் உள்ள விஷயங்கள் குறித்து இந்த நூல் எழுதப்பட்டு உள்ளது . பின்னுள்ள அவரது வரலாறு, இரண்டாம் பகுதியாக பின்னர் வெளிவரும் என்று தெரிகிறது .
சாவர்க்கர் குறித்து நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் ?
மத்தியிலே பிரதமர் மோதி தலைமையிலே நிலையான ஆட்சி வந்த பிறகுதான் இந்த நாட்டின் நலனுக்குத் தங்கள் உயிர் , பொருள் உடமை எல்லாம் இழந்த மகத்தான தலைவர்கள் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது , அதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் அரசுகள் “ பண்டித” ஜவஹர்கலால் நேரு மற்றும் அவரது வாரிசுகள் மட்டும் இந்த நாட்டுக்கு செய்த “ மகத்தான தியாகங்கள் ” மட்டுமே தெரிந்தன .
மேலே நான் குறிப்பிட்ட “ உயிர் , பொருள் உடமை எல்லாம் இழந்த “ என்ற வரியை எதுகை , மோனைக்காக எழுத வில்லை , சாவர்க்கர் கைதுக்கு பிறகு என்னவெல்லாம் அவரது குடும்பத்தாருக்கு வந்தது பாருங்கள் :
// Vinayak’s trunks , books , garments and other belongings were put out for public auction . This was because the trial had sentenced him with forfeiture of all property . The monies so recovered were to go to the government treasury . His property – worth Rs 27 , 000 and that of his father – in – law’s worth Rs 6725 – was confiscated . Even the cooking pots and utensils from his house were seized //
கொடுமை இத்துடன் நிற்கவில்லை ! அவர் படித்து பெற்ற BA பட்டமும் பிடுங்கப்பட்டது !
// To make matters worse , on 14th August 1911 , a day before Vinayak was harnessed to the oil mill ( “ செக்கிழுத்த செம்மல் ” ) he received a letter from Bombay University . It was from the secretary of the education department stating that under Section 18 of the Indian Universities Act , the BA degree conferred on him was set to be cancelled . The senate of Bombay University in their meeting on 1st July 1911 had come to his conclusion in the wake of his conviction and sentence in the Nasik Conspiracy Case
An education that Vinayak had obtained after such hardships and had managed to pass with exemplary performance was ruthlessly stripped off him . This added immensely to his mental agony //
பிரிட்டிஷ் ( British ) காலனிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, சாவர்க்கரை மிகவும் துன்புறுத்தி விட்டது . இந்தக் கொடுமை “ மகாத்மா ” காந்திக்கும் “ பண்டித ” நேருவுக்கும் கூட நிகழவில்லை !
ஒன்றன்பின் ஒன்றாக இரு ஆயுள் தண்டனைகள் பெற்ற ( 50 ஆண்டுகள் ) சாவர்கர் ஒரு கைதி என்ற முறையிலும் , ஓர் ஹிந்து என்ற முறையிலும் , ஓர் சித்பவன் பிராமணர் என்ற முறையிலும் எவ்வாறு தன்சிறைவாசத்தை எதிர்கொண்டார் ?
// On entry into cell , the first act that was committed for a Hindu prisoner was that his sacred thread was cut off . However , Muslim prisoners were allowed to sport their beards , as were Sikhs with regard to their hair . It was Barrie’s ( Jailor ) idea of creating discord between the Hindus and Muslims and hence he placed the Hindu prisoners under the most bigoted of Muslim warders and jamadars . Most of them were fanatical Pathans , Sindhis and Baluchis from Sindh and the Nort-West Frontier Province . It gave these men a special thrill to brutalize a Hindu kafir //
பாரீசில் ( Paris ) இருந்த புரட்சியாளர்களான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ( Shyamji Krishna Varma ) , மேடம் காமா ( Bhikaiji Rustom Cama ) , சர்தார் சிங்க் ராணா ( Sardarsinhji Ravaji Rana ) ஆகியோரை சந்திக்கச் சென்ற சாவர்கர் , தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் ஏன் லண்டன் ( London ) நகர் திரும்பிச் சென்றுக் கைதானார் ?
சாவர்கர் கைது செய்ப்பட்டு , இந்தியாவுக்கு திரும்பி வரும் வேளையில் கப்பல் மர்செய்லஸ் ( Marseilles ) துறைமுகம் சென்றபோது , துணிகரமாக தப்பி பின்னர் கைது செய்யப்பட்ட நேரத்தில் நடத்த சம்பவங்கள் என்ன ?
நமது உள்ளூர் “ காம்ரேடுகள் “ சாவர்க்கரை திட்டினாலும் காரல் மார்க்சின் ( Karl Marx ) மருமகன் சாவர்க்கரை சட்ட விரோதமாக கைது செய்த பிரெஞ்ச் ( French ) காவல்துறையைக் கண்டித்தார் :
// Jean Longuet , socialist leader and grandson of Karl Marx , became Vinayak’s vocal supporter . He wrote a blistering article in the socialist newsweekly that he edited “ L’Humanite ” on 12th July 1910 //
அவர் சிறையில் இருந்த காலங்களில் அவர் அரசுக்கு அனுப்பிய மன்னிப்பு கடிதங்கள் – அதன் பின்னணி என்ன ?
சாவர்க்கர் ஒரு காந்தீயவாதி அல்ல – சொல்லப்போனால் அதற்க்கு நேர் எதிரான கருத்தோட்டம் உள்ளவர் . அவரது “ அபின்வவ் பாரத் ” இயக்கம் வெளிப்டையான காந்தீய இயக்கமும் அல்ல , அது ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஓர் ஆயதப் போராட்ட ரகசிய இயக்கம் . சாவர்க்கர் “ சத்ரபதி ” சிவாஜி மகாராஜாவைப் போல ஓர் செயல் / தர்ம வீரர் . சிறையில் தண்டனயில் தன்னுடைய நேரத்தை கடத்த அவர் மனம் ஒப்பவில்லை , சொல்லபோனால் ஔரங்கசீபின் சிறையில் இருந்து பழக்கூடையில் மறைந்து இருந்து தப்பித்த “ சத்ரபதி ” சிவாஜி மகாராஜாவைப் போல வெளியில் செல்லவே திட்டமிட்டார் . மர்செயில் துறைமுகத்தில் அவர் தப்ப முயற்சி செய்த விஷயத்தை இந்தப் பின்னணியில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும் .
// This process of petitioning the government was a legitimate tool available to political prisoners in British India , similar to defending oneself in court through the agency of a lawyer . And Vinayak was a compulsive petitioner . He sent more than ten petitions on various issues during his jail stay in the Andamans and prior to reaching there –like the ones at Byculla jail seeking provisions for milk and books . As a barrister , Vinayak knew the law and also wished to utilize all the provisions available to him under it , to free himself from imprisonment or to alleviate his condition in prison . It is but natural for a man incarcerated for life to explore every available legitimate option to first and foremost release himself.
He often expressed this opinion –that a revolutionary’ s primary duty was to free himself from the clutches of the British in order to return to the freedom struggle //
இது போல பல சம்பவங்களை நூலாசிரியர் பல்வேறு ஆவணங்கள் , குறிப்புகள் கொண்டு மிக அருமையாக இந்த நூலினை எழுதி உள்ளார் .
சாவர்கரின் அண்ணியைப் பற்றி நூலாசிரியர் குறிப்பிடும் கட்டத்தில் என்னுடைய கண்களில் கண்ணீர் பெருகியது :
// Knowing that her end was nearing , she beseeched the government for one final sight of her husband . Unfortunately this too was rejected . But her spirit was undaunted . Four days before her death , when a family friend , Goudami Khare , came to meet her and saw her hands bereft of bangles and questioned her about the same , she nonchalantly replied “Goudami , my bangles would not fit my hands because of my swelling and hence I removed them . Someone gave me new bangles , but since they are foreign made , I refused to wear them //
இந்த நாட்டை நேசிக்கும் பாரதீயர்கள் / ஹிந்துக்கள் கட்டாயாமாக தங்கள் குடும்பத்துடன் வாசிக்க வேண்டிய நூல் இது .
(க.கந்தசாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவு)
Thanks for the great review of the book. I will be placing an order for the same later today. Sarvarkar should be awarded with Bharath Ratna.
thamizhil eppothu varumo?
Dear w..I would like to know more about veer savarkar fight against foreigners and Indian congrass true abetters of whites …more about what he really faced the hardships at andhaman cellular jaila …kindly give me references