தமிழன்னை அமர்ந்திருந்தாள்.
இளங்கோவடிகள் வந்தார். சிலப்பதிகாரம் என்ற முத்தாரத்தை தமிழன்னைக்கு அணிவித்தார்.
வள்ளுவன் வாமனனாய் ஈரடியால் தமிழன்னையை அளந்தான். தாய் அகம் மகிழ்ந்தாள்.
ஆழ்வார்கள் வந்தனர். காலத்தால் அழியாத பக்தி இலக்கியம் செய்தனர். திருமாலின் மார்பில், தமிழன்னை மாலையென தவழ்ந்தாள்.
கம்பனெனும் மகா கவிஞன் வந்தான். கவிமேருவென இராமாயணம் செய்தான். திக்குமுக்காடி மகிழ்ச்சியில் திளைத்தாள்.
மாணிக்கவாசகர், சுந்தரர் மற்றும் நாயன்மார்கள் தமிழன்னையை ஆடவல்லான் கையில் கொண்டு சேர்த்தனர். யாருக்கு கிடைக்கும் இந்த புகழ் என்றே மனம் குளிர்ந்தாள் தாய்.
திருமூலர் வந்தார். சிந்தை கவரும் கவி தந்தார்.
காளமேகப் புலவன் வந்தான். கலகம் செய்தாலும் நல்ல கவிதை செய்தான்.
இன்னும் எண்ணிலடங்கா நல்ல அறிஞர் பலர் வந்தனர். எங்கும் இல்லாத இலக்கியம் செய்தனர்.
ஆற்றில் எறிந்த இலக்கியம் தன்னை காப்பாற்றி அச்சில் ஏற்றினார் சுவாமிநாத ஐயர். தெய்வ நங்கை மனம் குளிர்ந்து இருந்தாள்.
பாரதி வந்தான். முன்னெப்போதும் யாரும் செய்யாவண்ணம் அவளை வாளெனக் கையிலெடுத்துப் போர்க்களம் சென்றான். கையில் எடுத்துக் கொஞ்சி காதலும் செய்தான். உச்சி குளிர்ந்து போனாள் தமிழன்னை. தமிழரும் மகிழ்ந்தே இருந்தனர்.
அந்தோ பரிதாபம். ஈரோட்டில் இருந்து ஒரு கயவன் வந்தான். அவளை காட்டுமிராண்டி என்று தூற்றினான். அவள் அணிந்திருந்த அணிகலன்கள் எல்லாம் மலம் என்றே தீ மொழி பேசினான். தமிழினத்தின் தந்தை என்றொரு சிறு கூட்டம் அவனைக் கொண்டாடியது. மனம் கருகினாள் தமிழன்னை, முதன்முதலாய்.
காஞ்சியில் இருந்து மற்றொரு விஷம் இறங்கியது. தாயின் மடியில் காமம் கண்டவனைப் போல, கம்பனின் கவியெல்லாம் காமம் என்றது. அவன் பேச்சில் மயங்கி அவனை அரியணை ஏறச் செய்தது தமிழ்ச் சமூகம். கண்ணீர் உகுத்தாள் தமிழ்த்தாய்.
திருவாரூர் ரயில் வந்தது. அதில் “இலவசமாய்” தீமையும் வந்தது. தமிழின் “வனவாசம்” தொடங்கியது. இரணியனாய் மாறி, நானே முத்தமிழ் வித்தகன் என்று சர்வாதிகாரம் செய்தது. மாயமான் கண்ட மாமகள் போல “மதியிழந்தது” தமிழினம்.
மூவரின் சதியால், நாத்திகம் எனும் சிறையில் அடைக்கப்பட்டு பொலிவிழந்து கிடக்கிறாள் தமிழன்னை.
இது தமிழின் ஆரண்ய காண்டம். நாமும் சுந்தரனாய் மாறி யுத்தம் செய்வோம்.
இராவணர்கள் வென்றதாய் சரித்திரம் இல்லை.
Degeneration of Tamil /Hindu culture by the gang of 3 briefly but precisely explained. Unless people realise and repent there will be no end to degeneration.