மருத்துவக் கல்வியில் புலிப் பாய்ச்சல்

மோடி அரசின் தொலைநோக்கால் சாதனை படைக்கிறது தமிழகம்

தமிழகத்தில், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 11 இடங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலமாக, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆகிறது.

***

“நீ என்னவாகப் போகிறாய்?” என்ற கேள்விக்கு பெரும்பாலான குழந்தைகளின் பதில் “டாக்டராவேன்” என்பதாகத் தானிருக்கும்.

அந்த அளவுக்கு, நமது நாட்டில் மருத்துவர் பணி மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது. உயிர் காக்கும் உன்னதப் பணி என்பதாலோ என்னவோ, இந்த எண்ணம் நம் எல்லோரிடையேயும் பதிந்திருக்கிறது.

ஆனால், எல்லோராலும் மருத்துவம் படித்து டாக்டர் ஆக முடிவதில்லை. ஏனெனில் மருத்துவப் படிப்பு பிற படிப்புகள் போல அதிகமானோருக்குக் கற்பிக்கப்படுவதில்லை. மனித வாழ்வைக் காக்கும் துறை என்பதால், கடுமையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதற்கான தகுதி உள்ளவர்களையே இந்தப் படிப்பில் சேர்ப்பது வழக்கம். மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பிரிவில் மிக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

எனினும், கல்வி என்பது இந்தியாவில் வசதியானோருக்கு வேறாகவும் பிறருக்கு வேறாகவும் இருந்து வந்தது. குறிப்பாக பணம் படைத்தவர்கள் பல கோடிகளைச் செலவிட்டு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படித்து டாக்டர் ஆக முடிந்தது; இதனால் தகுதியற்றோரும் மருத்துவராக முடிந்தது.

இந்த வேறுபாட்டைக் களைவதற்கான முயற்சி, உச்சநீதிமன்ற உத்தரவால், 2013-இல் ‘நீட்’ தேர்வாக உருவெடுத்தது. இன்று தேசிய அளவில் நடத்தப்படும் தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெறுவோரே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது, மருத்துவக் கல்வியில் சமத்துவத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது.

***

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 2021 புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மருத்துவர்: நோயாளிகள் விகிதம் 1:834 ஆக இருக்கிறது. அதன் எதிர்பார்ப்பு, ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்பதாகும். அதைவிட மேம்பட்ட நிலையிலேயே இந்தியா உள்ளது. இத்தகவலை, கடந்த டிசம்பரில் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்திருக்கிறார் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார்.

எனினும், முறைப்படுத்தப்பட்ட மருத்துவ வசதியில் இந்தியா 83 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறது. தற்போது நம் நாட்டில் 13.02 லட்சம் அலோபதி மருத்துவர்கள் பதிவு பெற்ற மருத்துவர்களாக உள்ளனர் என்கிறது தேசிய மருத்துவ ஆணையம். இவர்கள் தவிர, நாடு முழுவதும் 5.65 லட்சம் பாரம்பரிய மருத்துவர்களும் உள்ளனர். இவர்கள் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை வைத்தியம் ஆகிய முறைகளில் சிகிச்சை அளிப்பவர்கள்.

ஆனால், நாட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவ சேவை சென்று சேர வேண்டுமானால், நமது மருத்துவத் துறை மேலும் வளர்ச்சி பெற்றாக வேண்டும். அதற்கு மருத்துவக் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

மருத்துவக் கல்வி என்று சொல்லும்போதே, ‘அலோபதி’ என்ற மேற்கத்திய மருத்துவ முறைதான் அடிப்படையாக இருந்து வருகிறது. நமது நாட்டில் இதனைப் பயில ‘எம்பிபிஎஸ்’ (MBBS) பட்டப் படிப்பு உள்ளது. வேறு பல மருத்துவப் படிப்புகள் இருந்தாலும், எம்பிபிஎஸ் தான் அலோபதி படிப்பின் அடிப்படைப் பட்டப் படிப்பு. இதனைக் கற்பிக்கும் கல்லூரிகளே மருத்துவக் கல்லூரிகள்.

நாடு முழுவதும் சேர்த்து 1965 வரை 8 மருத்துவக் கல்லூரிகளே இருந்தன என்று இப்போது சொன்னால் வியப்பாக இருக்கும். நமது நாட்டில் 1980 வரை மருத்துவக் கல்வி மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோருக்கே சென்று வந்தது. 1980களில் தனியார் கல்லூரிகள் இத்துறையில் அனுமதிக்கப்பட்ட பிறகே இத்துறையில் பெரும் மாற்றங்கள் நிகழத் துவங்கின. 2000க்குப் பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் சிறிது சிறிதாக அதிகரித்தது.

மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் இந்திய மருத்துவக் குழுமத்தால் (ஐஎம்சி) கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் மூலமாக, தேசிய மருத்துவ ஆணையமாக ஐஎம்சி மாற்றப்பட்டது. இதன்கீழ், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியாரால் ஆணைய அனுமதி பெற்று நடத்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இயங்குகின்றன.

***

பலவிதமான மருத்துவக் கல்வி

மருத்துவக் கல்வி என்றால் எம்பிபிஎஸ் மட்டுமல்ல, பல் மருத்துவம் தொடர்பான பிடிஎஸ் படிப்பு, ஆயுஷ் படிப்புகள் (சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம்) ஆகியவையும் மருத்துவப் படிப்புகளே. இவற்றில் சேரவும் நீட் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகள் 19 உள்ளன. இவற்றில் அரசுக் கல்லூரி 1. இவற்றில் உள்ள பிடிஎஸ் (BDS) இடங்களின் எண்ணிக்கை 1,860. அதேபோல அரசு ஆயுஷ் கல்லூரிகளின் எண்ணிக்கை (சித்தா- 3, ஆயுர்வேதம்- 1, யுனானி- 1, ஹோமியோபதி- 1, யோகா- இயற்கை மருத்துவம்- 2) என எட்டாகும். இவற்றில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களின் எண்ணிக்கை 470. இவை தவிர, தனியார் ஆயுஷ் கல்லூரிகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்த்தே மருத்துவக் கல்வி இடங்கள் பட்டியலிடப்படுகின்றன.

***

நமது நாட்டின் மக்கள்தொகை  2020இல் 138 கோடியை எட்டிவிட்டது. இது மேலும் பெருகவே வாய்ப்பு. இத்தகைய நிலையில், நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டுமானால், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 2000 ஆண்டு வரை, இந்தக் கண்ணோட்டத்திலான செயல்பாடுகளை முந்தைய அரசுகள் எடுக்கவில்லை. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரான பிறகே, மருத்துவக் கல்வி குறித்த நமது அரசின் சிந்தனை மாறியது.

2021 இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் 596 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 285. இந்த கல்லூரிகள் மூலமாக ஒட்டுமொத்தமாக சுமார் 85,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். (தேசிய மருத்துவ ஆணையம் ஆண்டுதோறும் ஆய்வுக்குப் பின் அளிக்கும் சேர்க்கை அனுமதிகளைப் பொருத்து, ஒவ்வொரு கல்லூரியின் சேர்க்கை இடங்களும் மாறும்.)

இந்த மருத்துவக் கல்லூரிகளில், 2019 முதல் 2021 வரையிலான மூன்றாண்டுகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 124. அதிலும், 2021இல் மட்டுமே 66 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. எனில், நமது மருத்துவக் கல்வியின் வளர்ச்சி அண்மைக்காலமாக புலிப்பாய்ச்சல் கண்டுள்ளது என்பதை உணர முடிகிறது. இந்த மூன்றாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த மோடி அரசின் தொலைநோக்குக் கண்ணோட்டமே இந்த மாற்றத்துக்குக் காரணம்.

கடந்த டிச. 8 இல் உ.பி. மாநிலம், கோரக்பூரில் பல்வேறு நலப்பணிகளைத் துவக்கிவைத்த பிரதமர் மோடி, “நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் மருத்துவ சேவையை எளிதாகப் பெற வேண்டும். அதற்காக, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்படும்” என்று அறிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 748. இவற்றில் தற்போது 285 இடங்களில் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பிரதமரின் கனவு நிறைவேறினால், மருத்துவக் கல்வி என்பது தகுதியுள்ள அனைவருக்கும் எட்டும் கனி ஆகிவிடும்.

***

மருத்துவ ஆராய்ச்சியில் மைல்கல்!

மருத்துவக் கல்வியில் உயர் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது தான் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்- AIIMS) நிறுவனம். தில்லியில் 1952இல் நிறுவப்பட்ட எய்ம்ஸ், மருத்துவக் கல்வியின் அதிநவீன உயர் ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற நிறுவனம். இங்கும் மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. நீட் தேர்வில் உச்ச மதிப்பெண் பெறுவோர் இங்கு சேர முடியும்.

1998 முதல் 2004 வரை பிரதமராக இருந்த வாஜ்பாய், எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க முடிவெடுத்தார். போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் புதிய எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களை அமைக்கும் பணிகளை வாஜ்பாய் அரசு 2003இல் துவக்கியது. அதன் விளைவாக, இவை 2012இல், அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் துவங்கப்பட்டன. தவிர, ரேபரேலியில் ஒரு எய்ம்ஸ் 2013இல் துவக்கப்பட்டது.

2014இல் நரேந்திர மோடி அரசு அமைந்தவுடன் எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களை அதிகரிக்கும் பணி மீண்டும் முடுக்கி விடப்பட்டது. அதன்மூலமாக, இந்த 7 ஆண்டுகளில் மங்களகிரி, நாகபுரி, கோரக்பூர், கல்யாணி, பதிண்டா, கௌஹாத்தி, விஜய்பூர், தேவ்கர், ராஜ்காட், பீபி நகர், பிலாஸ்பூர் ஆகிய 11 இடங்களில் எய்ம்ஸ் துவங்கப்பட்டுள்ளது. தற்போது 19 இடங்களில் எய்ம்ஸ் செயல்படுகிறது. இவற்றின் மூலமாக சுமார் 1400 மாணவர்கள் எம்பிபிஎஸ் பயில முடியும். புதுவையில் உள்ள மத்திய நிறுவனமான ஜிப்மரில் 220 பேர் பயில முடியும்.

மேலும், மதுரை (தமிழகம்), காஷ்மீர், தர்பங்கா, மனேத்தி ஆகிய 4 இடங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 5 எய்ம்ஸ்களை நிறுவும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. 2025 பிப்ரவரியில் நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்பது மோடி அரசின் செயல்திட்டம்.

***

தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 இடங்களில் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடனும், ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 4 இடங்களில் தலா 100 எம்பிபிஎஸ் இடங்களுடனும் 11 அரசு மருத்துவக் துவங்கப்பட உள்ளன. இதன் மூலமாக, தமிழகத்தில் மருத்துவக் கல்வி இடங்களின் எண்ணிக்கை 1,450 அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறார் மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்ற ஆண்டு அக். 25 இல் உ.பி. மாநிலத்தில் ஒரே நாளில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதுவே மருத்துவக் கல்வியில் மிகப் பெரிய முன்னெடுப்பாக இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக, இந்த ஆண்டு ஜன. 12இல் தமிழகத்தில் ஒரே நாளில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கி வைக்க வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. நாட்டிலேயே இதுவரை நிகழ்ந்திராத சாதனை இது.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த அதிமுக அரசு நிகழ்த்திய சாதனை இது. ஒவ்வொரு கல்லூரியும் சுமார் ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய மாநில சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உரிமை கொண்டாடுவதில் பொருள் உள்ளது. ”அதிமுக அரசின் தீவிர முயற்சிகளின் விளைவே இந்தச் சாதனை” என்கிறார் இவர்.

ஆனால், தமிழகத்தில் ஆளும் திமுக இதற்கு பெருமை கொள்ளத் துடிக்கிறது. உண்மையில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு தான். மருத்துவக் கல்லூரி அமைக்க முன்முடிவுகளை எடுத்தல், அதற்கான நிதியை மத்திய அரசிடம் பெறுதல் (மத்திய அரசு: 60 %, மாநில அரசு: 40 %), நிலம் கையகப்படுத்துதல், கல்லூரிக் கட்டடங்களை அமைத்தல், மருத்துவக் கல்லூரிக்கான கருவிகளை கொள்முதல் செய்தல்,  மருத்துவர் தேர்வு உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளை முந்தைய அரசு வேகமாகச் செய்ததால் தான், இது சாத்தியமானது.

இந்தக் கல்லூரிகளை, விருதுநகரில் ஜன. 12இல் நிகழ உள்ள அரசு விழாவில் பிரதமர் மோடி துவக்கிவைக்க உள்ளார். இவ்விழாவில் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா, மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடி வருகை தரும் முதல் அரசு விழா இதுவாகும்.

தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 26 (மொத்த இடங்கள்: 3,725), தனியார் மருத்துவக் கல்லூரிகள் 26 (மொத்த எம்பிபிஎஸ் இடங்கள்: 4,350), அரசு உதவி பெறும் கல்லூரி 1 (100 இடங்கள்) ஆகியவை உள்ளன. இவை அல்லாது நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கூடுதலாக 11 அரசுக் கல்லூரிகள் சேர்கின்றன. மேலும் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்திய அளவில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறுகிறது.

தமிழகம் (69 கல்லூரிகள்- 10,375 இடங்கள்), உ.பி. (67 கல்லூரிகள்- 6,928 இடங்கள்), கர்நாடகம் (61 கல்லூரிகள்- 9,545 இடங்கள்), மகாராஷ்டிரம் (59 கல்லூரிகள்- 9,200 இடங்கள்), தெலுங்கானா (34 கல்லூரிகள்- 5.340 இடங்கள்) என மாநிலங்களின் வரிசையில் முதலிடம் பெறுகிறது தமிழகம். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 12 % தமிழகத்தில் இருப்பதாக இந்திய மருத்துவ குழுமம் தெரிவித்துள்ளது (2021 நிலவரம்).

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டமே இல்லாத நிலையை நோக்கி தமிழகம் விரைந்து கொண்டிருக்கிறது. ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய, அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமையும்போது, தமிழகம் மருத்துவக் கல்வியில் பூரணநிலையை அடையும்.

.

பட விளக்கம்: மதுரை- தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் கல்வி நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி (நாள்: 27.01.2019).

***

19 Replies to “மருத்துவக் கல்வியில் புலிப் பாய்ச்சல்”

 1. அவரு பாட்டுக்கு சிவனேன்னு..
  தான் உண்டு தனது குஜராத்
  உண்டுன்னு இருந்தாரு..

  இந்த பானா சீனாவும் இத்தாலியும் டார்ச்சர் கொடுக்க கொடுக்க..

  தனது பதவியை ஒரு அம்மாவிடம் கொடுத்து விட்டு பெட்டி படுக்கையுடன் டில்லிப்பக்கம் வந்து வேலையை காட்ட ஆரம்பிச்சாரு…

  “டீ வித்தவன் பிரதமராவதா.. விட மாட்டோம்” என மணிசங்கர் அய்யரைப் போன்ற காங்கிரஸ் மேதாவிகள் …

  மதக்கலவரம் வெடிக்கும்.. ரத்த ஆறு ஓடும்.. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகும் என்ற எதிர் கட்சிகளின் எச்சரிக்கையை மீறி…

  மக்கள் இருப்பதைந்து ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக 2014 ல் மோடிஜிக்கு தனிப்பெரும்பான்மை கொடுத்து பிரதமராக்கினார்கள்..

  மறுபடியும் ஐந்து ஆண்டுகளாக நண்டு சிண்டு முதல் நாட்டில் உள்ள அத்தனை எதிர்கட்சிகளும் சேர்ந்து குடைச்சல் கொடுத்தீர்கள்..

  நீங்க எதிர்பார்த்த சாதிச் சண்டையும் மதக்கலவரமும் நடக்க வில்லை.. ரத்த ஆறும் ஓட வில்லை.. டெலஸ்கோப் மைக்ராஸ்கோப் எல்லாம் வச்சு ஜூம் பண்ணி பண்ணி பாத்திங்க.. ஒரு ஊழலையும் கண்டு பிடிக்க முடியவில்லை…

  மாறாக பழம் பெரும் ஊழல் பெருச்சாளிகள் ஜாமினுக்கு கோர்ட்டுக்கு நடையா நடந்தார்கள்..

  நீங்க அந்த ஆளுக்கு ஓயாம டார்ச்சர் கொடுக்க கொடுக்க என்ன ஆச்சு..

  அவருக்கு மக்கள் கடந்த ஆண்டு முன்னூற்றி சொச்சம் சீட் கொடுத்து ஜெயிக்க வச்சு பெரும்பான்மை பிரதமராக ஆக்கிட்டாங்க..

  அந்த ஆளுக்கு அமெரிக்காவில் நுழைய விசா கொடுக்கக்கூடாது என ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து போட்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு காலில்விழாத குறையாக மண்டியிட்டிங்க…

  இப்ப என்ன ஆச்சு… மோடிஜி நீங்க மறுபடியும் எப்ப எங்க மண்ணில் காலை வைப்பிங்க என
  அமெரிக்க காரன் தவம் கெடக்கான்… எல்லாம் உங்க ராசிதான்..

  ட்ரம்ப் தனது இரண்டாவது வெற்றிக்கே மோடியைத்தான் நம்பிக்கிட்ருக்கார் என்பது கூடுதல் தகவல்… நீங்க வயிற்றெரிச்சல் படும்படியான தகவலும்கூட…

  அந்த ஆளு இந்த ஆறு ஆண்டுகளில் எந்த மதத்தையாவது இழிவாக பேசினாரா… எந்த மதத்தினரையாவது இழிவாக நடத்தினாரா…?

  நீங்க இனிமேலும் மதவாதம்னு பழைய பல்லவியை பாட முடியாது..

  ஊழலை பேசி ஓட்டு வாங்கலாம்னு கற்பனைகூட பண்ண முடியாது..

  ரபேல் பற்றி திரும்ப திரும்ப பேசி.. மக்களே வெறுப்படைஞ்சி.. உச்ச நீதி மன்றமே காறி துப்பிய பிறகு, இப்பத்தான் அதைப்பற்றி பேசுவதை நிறுத்தியிருக்கிங்க…

  இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கு அவரைப்பற்றி குறை கூறிப்பேச வேறு ஏதாவது இருக்கா என தேடி கண்டுபிடியுங்கள்…

  ஒப்புக்கு சப்பாணியா நீங்க ஏதாவது சொல்லப்போக அந்த ஆளுக்கு மக்கள் 2024ல் நானூறு சீட் கொடுத்து ஜெயிக்க வச்சிடப்போறாங்க..

 2. காங்கிரஸ் முன்னாள் மக்களவை தலைவர் மீரா குமார் புதிய பாராளுமன்ற இல்லத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

  ✋வருடம்: 2012
  கட்டிடம்: புதிய பாராளுமன்ற கட்டுமானம்
  பிரதமர்: மன்மோகன் சிங்
  கட்சி: காங்கிரஸ்
  பரப்பளவு: 35,000 சதுர மீட்டர்
  செலவு :3000 கோடி
  (பணவீக்கத்தின் படி 2020-க்கான தொகை-3900 கோடியாக இருக்கும்)

  இப்போது தெரிந்து கொள்ளுங்கள்

  வருடம்: 2020
  கட்டிடம்: புதிய பாராளுமன்ற கட்டுமானம்
  பிரதமர்: நரேந்திர மோடி
  கட்சி: பாஜக
  பரப்பளவு: 65,000 சதுர மீட்டர்
  விலை: ₹ 970 கோடி

  ✋காங்கிரஸ் எந்த வேலையையும் தரகு இல்லாமல் ஊழல் இல்லாமல் எந்த வேலையும் இருக்காது.
  மோடி ஜி ஆட்சியின் கீழ் இந்த பகுதி இரட்டிப்பாகிவிட்டது என்பது மிகவும் தீவிரமான உண்மை.
  ஆனால் விலை ஒரு குவார்ட்டர்
  ஏனெனில் தரகு இல்லை, கமிஷனரும் இல்லை.
  இத்தாலியன் எப்படி உலகின் மூன்றாவது பணக்கார பெண்ணானார்.
  உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?
  அதனால் தான் ‘காங்கிரஸ்
  இந்த வலியை மறைக்க காங்கிரஸ் முனைகிறது.
  பிரதமர் மோடிஜிக்கு இவ்வளவு வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறார்கள்.

  மகாராஷ்டிராவில் புதிய ஆதாரை இணைத்து 10 லட்சம் ஏழைகள் மாயம்!

  உத்தர்காண்டிலும் பல லட்சம் போலி பிபிஎல் அட்டை வைத்திருப்பவர்கள் உயிரிழப்பு!

  30000000 கோடிக்கும் அதிகமான (30000000) போலி எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் உயிரிழப்பு

  மதரஸாக்களிலிருந்து வசீஃபா பெற்ற 1,95,000 போலி குழந்தைகள் காணாமல் போயினர்!

  ஒன்றரை கோடிக்கு மேல் (15000000) போலி ரேஷன் அட்டைதாரர்கள் மாயம்!
  ஏன் எங்கே இவை எல்லாம் காணாமல் போகிறது!

  திருடர்களின் மொத்த கருப்பு லாட்டரியும் திறக்கப்பட இருக்கிறது…

  அனைத்து திருடர்களும் சேர்ந்து ஆதார் இணைப்பு நமது அடிப்படை உரிமை மீறல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! திருடர்களுக்கு தனியுரிமை என்ன இருக்கிறது!

  1) 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை மூடிவிட்டார் மோடி!
  2)வரி ஏய்ப்பு செய்துவந்த வியாபாரி கோபமடைந்தார்!
  3) மேக் இன் இந்தியாவினால் ராணுவத்திற்கு கொள்முதல் புரோக்கர்கள் கோபம் வந்தது!
  4) ஆன்லைன் அமைப்பு உருவாவதால் புரோக்கர்கள் கோபம்!
  5) 40,000 போலி NGO க்கள் தடை செய்யப்பட்டுள்ளது, அதனால் இந்த NGO க்களின் உரிமையாளர்களும் கோபத்தில் உள்ளனர்!
  6) No 2 வருமானத்தில் சொத்து வாங்கியவர்களுக்கு கோபம்!
  7) புதிய விவசாய சட்டத்தினால் விவசாய புரோக்கர்கள் கோபமடைந்தனர்!
  8)எரிவாயு பெட்ரோல் லிய இறக்குமதியில் ஊழல் சம்பாதித்து வந்த நிறுவனத்தினர் கோபம் அடைந்துள்ளனர்!
  9)புதிதாக வருமானவரித் திட்டத்தில் வந்த 12 கோடி கருப்புப் பண முதலைகள் கோபமடைந்துள்ளனர்!
  10) GST முறையை அமல்படுத்துவதில் தொழிலதிபர்கள் கோபம், ஏனெனில் ஆட்டோமேடிக் சிஸ்டத்தில் வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை .
  11) பலதுறைகளில் லைசென்ஸ் பெறுவது எளிதாக பட்டதால் தொழிலில் போட்டி ஏற்பட்டதால் வருமானம் குறைந்தது என்று கோபம்
  13) பினாமி ஒழிப்பு சட்டம் கறுப்பு வெள்ளையாக்கும் முறை ஒரு லூசு மாதிரி ஆகிவிட்டது.
  14) மந்திரிகள் ஊழல் செய்யாததால் அதில் கமிசன் அடித்த அதிகாரிக்கு கோபம்.
  15) சரியான நேரத்தில் வேலை செய்யாமல் லஞ்சம் கொடுத்து வேலை செய்வதில் நம்பிக்கை கொண்டவர்கள் கோபம் கொண்டார்கள்.
  16) டெல்லிJ.N.Uமாணவர் க்கான அறை ஒரு மாதத்திற்கு ரூ10 மற்றும் .ஒருவருக்குஉணவு ஒரு மாததிர்க்கு ரூ 7 இப்படி பல ஆண்டுகளாக மூன்றாண்டு படிப்பினை ஒன்பது ஆண்டுகளாக அங்கேயே தங்கி நக்சல் இயக்கத்தை வளர்த்து வந்த மாணவருக்கு மோடியால் வருத்தம்.
  17) பத்திரிகையாளர் என்ற போர்வையில் டெல்லியில் லூட்டியன்ஸ்கலுக்கு கிடைத்து வந்த பல லட்சங்கள் வெளிநாட்டுப் பயணங்களும் ஆடம்பர வாழ்க்கையும் தொலைத்த மோடியின் மேல் கோபம்.

  சீனா பாகிஸ்தான் ஏஜென்டுகள் ஆகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த பத்திரிகையாளர்களும் தங்கள் வாழ்க்கை போய்விட்டது என்று
  வருந்த வேண்டியதுதான், நாட்டில் மாற்றம் என்ற கதை எழுதப்படுகிறது, அதை உணர்ந்தவன் மாறுகிறான், உணராதவன் * மன அடிமைகள் * நம்மை குருட்டு பக்தாள்!! சங்கி!! என்று சொல்லி தலையில் அடித்துகொகிறான்!

  நாட்டுக்காக ′′ ஏதாவது செய்ய வேண்டுமென்றால் இந்த செய்தியை 30 பேருக்கு அனுப்புங்கள்…

 3. திரு.அண்ணாமலை. பி.ஈ,எம் பி ஏ,
  ஐ பி எஸ் அவர்களின் கன்னியாகுமரி பேட்டியில் சில……

  24 மணி நேரமும் மோடிங்கிற தனிமனிதனை எதிர்த்து…..
  தன் கட்சியோட பிரச்சாரத்துக்கு பயன்படுத்தற சன் டிவி கலைஞர் டிவிலாம் பிரச்சார சேனல்தானே ஒழிய ….
  செய்தி சேனல் கிடையாது…

  நீங்க மாறுங்க நான் மாறறேன்..
  அது வரைக்கும் இப்படித்தான்னா என் பதிலும் இருக்கும் ….

  நீங்க எதிர்பாக்குற மாதிரி எல்லாம் கட்சி நடத்த முடியாது …
  நீங்க எதிர்பார்க்கிற பதிலையும் நான் கொடுக்க முடியாது ….

  ஏன்னா நான் தனிப்பட்ட மனசன் அல்ல.
  நான் கொஞ்சம் பணிவா தான் பேசுறவன்.
  நான் இப்ப வந்து பாஜக அப்படிங்கிற ஒரு நல்ல கட்சியோ மாநிலத் தலைவர்…
  நீங்க இப்படி இருந்தா…என் பதிலும் இப்படித்தான் இருக்கும்….

  நீங்க நேர்மையாக இருங்க….
  நானும் உங்களுக்கு பணிவா.
  பதில் சொல்றேன்….

  பேட்டி எடுத்தா எடுங்க…இல்லீன்னா பேசாம பாய்காட் பண்ணிட்டு போங்க….
  என்னோட பேட்டியை நீங்க முடிஞ்சா…
  உங்க சேனலில் போடுங்க ….
  போடாட்டி குப்பையில் போடுங்க….

  உங்களுடைய சிங்கிள் பாய்ண்ட் அஜண்டா…. மத்திய அரசுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் ….
  பாஜகவுக்கு எதிராகவும் விஷமத்தனமான பிரச்சாரம் பண்றது ….

  அதற்கெல்லாம் பதில் கொடுக்கற நிலைமையில மாநிலத் தலைவராக நான் இருக்கேன்….
  நல்லபடியா கேள்வி கேட்டா நல்லபடியா பதில் வரும்…முடிஞ்சா உங்க டிவியில விவாதம் பண்ணலாங்க…

  யாரை வேணா கூட்டிட்டு வாங்க….
  நானே டைரக்டா வர்றேன்….
  உங்களுக்கு அந்த மாதிரி விவாதங்கள் நடத்த தைரியம் இருக்கா?…. செய்யுங்க நானே வர்றேன்…. பேசிக்கலாம்.

  தேவையற்ற கேள்விகள் கேட்கிறதுக்கு…
  உங்களுக்கு உரிமை இருக்கிறதுன்னா அதற்கு …..என்னுடைய பதிலை தெளிவா சொல்வதற்கு எனக்கும் உரிமையிருக்கு…

  அப்படித்தான் கேட்பேன் …
  அப்படிதான் பேசுவேன்….
  நான் பாஜக மாநிலத் தலைவர்ங்கற பதவியில இருக்கேன்…
  நான் பதில் கொடுக்காமல் யார் கொடுப்பாங்க…

  அடித்துச் சொன்ன அண்ணாமலை

  வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்.

  ஜெய்ஹிந்த்

 4. வேண்டுகோள் :-

  தேசப்பற்றுள்ள ஒவ்வொருவரும் இந்தப் பதிவை பகிருங்கள். என் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

  திரு. அண்ணாமலை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ….
  ~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~~ ~~~~~~

  இன்று எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஒரு பதிவு நியாயமானது என்பதால் இத்துடன் எனது கருத்துக்களையும் சேர்த்தே பதிவிடுகிறேன். தேசநலன் கருதி நண்பர்கள் அனைவரும் இதை திரு. அண்ணாமலை அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் …. ….. ……

  திமுகவின் வரலாற்றை சற்று ஆழமாகப் பார்த்தால்தான் உண்மை புரியும். அது வெறும் அரசியல் கட்சி அல்ல. 1920-களில் அதாவது நம் நாடு பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை அடையும் முன்னரே அந்நிய கிறிஸ்தவ மிஷிநரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு அது ……. …….

  நம் சநாதன தர்மத்தை அழித்து, அதன் ஆதாரமாக விளங்கும் ஆலயங்களை அழித்து, அவற்றை காத்து வரும் அந்தணர்களையும் அழித்து, சநாதன தர்மத்தின் ஆணிவேரான சமஸ்க்ருதத்தையும் அழித்து தென்னிந்தியா முழுவதையும் கிறிஸ்தவ மயமாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் ….. ……

  கடந்த 70 ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள் அரசியலில் பல ஆட்களை உள்ளே நுழைத்து வளர்த்தும் விட்டு தங்களின் Agendaவில் பெரிய அளவில் வெற்றியும் பெற்று விட்டனர் ……..

  ஈ.வே. ராம்சாமி, சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, கி. வீரமணி போன்றோர் பெரிய அளவில் அரசியலில் வளர்ந்ததற்கும், தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் குறிப்பாக இந்துக்களின் புனிதத் தலங்களின் முன்னே ஈ.வே. ராம்சாமியின் சிலைகள் உருவானதன் பின்னணியும் கிறிஸ்தவ மிஷிநரிகள்தான் ….. ……

  இவர்களுக்குத் தமிழ்நாட்டில் பெரும்தடையாக இருந்தவர் பொதுவாழ்வில் நேர்மையின் சிகரமாக விளங்கிய கர்மவீரர் காமராஜர். அவரையும் அவரது சொந்த ஜாதிக்காரர்களையும், படித்த அறிஞரான ராஜாஜியையும் வைத்து கவிழ்த்து விட்டு அரசியலில் மு. கருணாநிதியை வளர்த்து விட்டனர் ….. …..

  மு. கருணாநிதி எப்போதெல்லாம் அரசியலில் சறுக்கினாரோ அப்போதெல்லாம் கருணாநிதியைக் காப்பாற்றி போட்டியாளர்களை காலி செய்தனர் மிஷிநரிகள். 1977-ல் ஆட்சிக்கு வந்த MGR 1987-ல் மரணமடைந்ததன் பின்னணி இறைவனுக்கே வெளிச்சம் …..

  தொடர்ந்து போட்டியாக இருந்த ஜெயலலிதாவின் கதையும் முடிந்து போனது. அதேபோல திமுகவில் உருவான போட்டியாளர்கள் காணாமல் போயினர். வைகோ வேறு வழியின்றி குடும்பத்தோடு மதம் மாறி ஞானஸ்நானம் பெற்றதால் தப்பித்து இன்னும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார் …. ….

  வைகோவைத் தொடர்ந்து திருமாவளவன் குடும்பத்தோடு மதம் மாறி சநாதன தர்மத்தை அழித்தே தீருவேன் என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் யாருமே கிறிஸ்தவத்தைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள். காரணம் எஜமான விசுவாசம்.

  இன்னொரு பக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இவர்கள் இப்போது அரசியல் கட்சி என்னும் முகமூடியை போட்டுக் கொண்டு தைரியமாக திரிகிறார்கள். உயிருக்குப் பயந்து எந்த அரசியல்வாதியும் இவர்களை எதிர்ப்பதில்லை …..

  இடைப்பட்ட காலத்தில் இந்த சூட்சுமங்கள் எதையும் அறியாத மனிதாபிமானியும், நேர்மையான மனிதரான தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் எழுச்சியோடு உருவான போது ……

  அவரை திமுக சில உள்ளடி வேலைகளை பார்த்து திமுக முடக்கியது. அதில் அதிமுகவுக்கும் பங்கு உண்டு …… …..

  இப்போது தேசியவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி திமுகவுக்கு பெரும் சவாலாகி நிற்கும் திரு. அண்ணாமலையும் முடக்க பார்ப்பார்கள்.

  வெளிப்படையாக ஸ்டாலின் அண்ணாமலையை எதிர்த்து பேசாவிட்டாலும் உள்ளடி வேலைகளை பார்க்க ஆட்களை முடுக்கிவிடுவார் ……

  ஆகவே, அண்ணாமலை அவர்கள் இப்போது மிகமிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். எந்த இடத்தில் என்ன செய்வார்கள் என்று ஊகிக்க முடியாத பாதுகாப்பற்ற நிலைதான் இப்போது தமிழகத்தில் நிலவுகிறது ……

  எனவே திரு. அண்ணாமலை அவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் கூட மிகவும் தெரிந்த நம்பிக்கையான மருத்துவமனையை நாட வேண்டும் …..

  கூட்டநெரிசல்களை தவிர்க்க வேண்டும் விஜயகாந்தை இப்படிதான் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைத்து ட்ரீட்மென்ட் என்ற பெயரில் அவரை நிலைகுலைய செய்தார்களாம் …….

  ஆகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அன்பும் அக்கறையும் இருப்பதால்தான் கவலைப்படுகிறேன் ……

  இந்த செய்தியை அவரிடம் தெரிவிக்கவும்….

  திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் கட்சி மட்டுமல்ல. அது ஒரு விஷம் கொண்ட ஆக்டோபஸ்போல. அதன் கரங்கள் அனைத்து இடங்களிலும் துறைகளிலும் இருக்கும் ……

  இந்த விஷயத்தில் தமிழக போலீஸ் மீதும், நீதித்துறை மீதும் எனக்கு 1% கூட நம்பிக்கை இல்லை. அங்கும் இந்துமத விரோதிகள் முழுமையாக ஊடுருவி விட்டார்கள். கோவையில் குண்டுவெடிப்பை; ராஜீவ் காந்தியின் படுகொலையை; தமிழகத்தில் நடக்க விட்டதோடு சம்பந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளையும் சர்வ சுதந்திரமாக வெளியே விட்டவர்கள் …..

  அதற்காக படித்த அடியாட்கள் இருப்பார்கள். ரொம்ப நுணுக்கமாக உள்ளடி வேலைகளை செய்வார்கள் …..

  அதனால் சகோதரர் அண்ணாமலை அவர்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் …..

  நம் அண்ணாமலைக்கு அந்த அண்ணாமலையானே
  பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டுமென்பதே என் போன்றோரின் ஆசை

 5. “நாம் அனைவரும் மெடிக்கல் லீவ்வு போட்டாவது உ.பி, ராஜஸ்தான், ம.பி, குஜராத்.. போன்ற வடமாநிலங்கள் சென்று பெரியார் கொள்கைகளை பரப்பி 2024ல் மோடியை தோற்கடிக்க வேண்டும்.. அப்போதுதான் தமிழகம் பிழைக்கும்” –#சீப்பு_செந்தில் ஆவேசம்

  என்ன சொல்லி ராமசாமி கொள்கைகளை பரப்புவீங்க??

  *ராமரை செருப்பால் அடிப்பீங்களா?

  *கடவுள் இல்லைன்னு பரப்புவீங்களா??

  *மகளையே மணம் புரியலாம்னு சொல்லுவீங்களா?

  *ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தவறு.. யாரு வேணும்னாலும் யாரோட வேணுமம்னாலும் வாழலாம்..என்று சொல்லுவீங்களா??

  *ஹிந்தி (தமிழ்) ஒழிக!! இங்லீஸ் வாள்க என்று சொல்லுவீங்களா?

  இந்த 5 தான் ராமசாமியோட மெயின் கொள்கைகள்..

  இதை கேட்டுகிட்டு சூடுசொரணை இல்லாம இருக்க அவனுங்க ‘பழைய தமிழன்’ இல்லை..

  பிஞ்சு போன செருப்பை எடுத்து சாணியில முக்கி முக்கி அடிச்சே கொன்னுடுவானுங்க..

  இப்படி ஈனமா சாவுவதுக்கு பதிலா இங்கே தமிழகத்தில் மின்சாரம் போல பாயும் அண்ணாமலையிஸத்தை தடுக்கவாவது ட்ரை பண்ணி மண்ணு கவ்வுங்கடா.. உசுராவது தப்பிக்கும்..

  ஏதோ..

  தோணிச்சு… சொன்னேன்.. பிறகு உன் தலைவிதி……டாடா.. பைபை..

 6. #தடுமாறும்தமிழன்

  1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை “வட இந்தியர்” என எதிர்ப்பான்!!

  இந்தியர் அல்லாத இத்தாலியை சேர்ந்த
  சோனியாவை “அன்னை” என்று அழைப்பான்
  “ஏன்?” என்று கேட்டால் முழிப்பான்!!

  2. “வட இந்தியர்கள் முட்டாள்கள்” என்பான்,
  எனவே பாஜகவின் மோடி அறிவாளி அல்ல என்பான்!!

  “காங்கிரஸின் ராகுலும் வடஇந்தியர்தானே, அவர் மட்டும் புத்திசாலியா?” என்று கேட்டால் முழிப்பான்…

  3. “டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா?”
  என மோடியை எதிர்ப்பான்!!

  “சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?” என்று கேட்டால் முழிப்பான்…

  4. “நரேந்திர மோடி ஒரு ஆரியர்” என எதிர்ப்பான்

  “ராகுல் மட்டும் திராவிடனா?” என்று கேட்டால்
  முழிப்பான்…

  5. “மோடி விதவிதமான ஆடைகளை அணிகிறாரே?” என்று எதிர்ப்பான்

  அந்த ஆடைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை தேசத்திற்கு தானேஅவர் கொடுக்கிறார் என்று சொன்னால் முழிப்பான் …

  6. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த மோடியை “மேல் ஜாதியினருக்கு ஆதரவானவர்” என கூறி எதிர்ப்பான்!!

  “கவுல் கோத்திரத்தில் பிறந்த பிராமணன் என ராகுல் தன்னை கூறிக் கொள்கிறாரே?”
  என கேட்டால் முழிப்பான் ….

  7. “வெறும் 7 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு செய்த பணிகள் போதாது” என எதிர்ப்பான்!

  “60 ஆண்டுகளில் காங்கிரஸ், திமுக கட்சிகள் இந்த அளவுக்குக்கூட செய்யவில்லையே?” என்று கேட்டால் முழிப்பான்!!

  8. தொழிலதிபராகவோ, கோடீஸ்வரராகவோ
  இல்லாத மோடியை “கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவர்” என எதிர்ப்பான்!!

  “உண்மையான கார்ப்பரேட்
  தொழிலதிபர்களாகவும் பெரும்
  கோடீஸ்வரர்களாகவும் இருப்பது கருணாநிதி, ராகுல்காந்தி, சிதம்பரம் ஆகியோர் குடும்பம்தானே?” என கேட்டால் முழிப்பான் …

  9. இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்து, இலங்கை
  கடற்படையால் இந்திய மீனவர்களின்
  படுகொலையை தடுத்த “மோடியை தமிழ்
  மக்களுக்கு எதிரானவர்” என்று கூறி எதிர்ப்பான்

  “இலங்கையில் இறுதிப்போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான காங்கிரஸ் திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்கிறாய்?” என்று கேட்டால் முழிப்பான் ….

  தமிழனை குறைகூறி எந்த பயனும் .இல்லை
  தமிழன்,
  சிந்திக்க மறந்தவன்!
  தன்னையும் மறந்தவன்!!
  தன் மதத்தை யார் கேவலப்படுத்தினாலும்
  பல்லை காட்டி கொண்டு நிற்பவன்!!

  ஏனென்றால் திமுகவும் திமுக ஆதரவு ஊடகங்களும் சில சில்லரை கட்சிகளும் சேர்ந்து தமிழனுக்கு மோடியை எதிர்க்க மட்டும்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!!

  “ஏன் எதிர்க்கிறோம்?
  என்று தெரியாமலேயே அவனும் எதிர்க்கிறான்

  வெகு விரைவில் மாறுவான்,
  இல்லை மாற்றபடுவோம்

  பாரத் மாதா கி ஜே

 7. #நேருவுக்கு மகளாக பிறந்ததாலேயே
  இந்திரா பிரதமர்.

  #இந்திராவுக்கு மகனாக பிறந்ததாலேயே
  ராஜீவ்காந்தி பிரதமர்.

  #கருணாநிதிக்கு மகனாக பிறந்ததினாலேயே
  மு.க.ஸ்டாலின் முதல்வர்.
  அழகிரி மத்திய அமைச்சர்.
  கனிமொழி பாராளுமன்ற உறுப்பினர்.

  #ஸ்டாலினுக்கு மகனாக பிறந்ததாலே
  உதயநிதி சட்டமன்ற உறுப்பினர்.

  #தேவேகவுடா மகனாக பிறந்ததாலே
  குமாரசாமி முதல்வர்.

  #லாலுவுக்கு மனைவியானதாலேயே
  ராப்ரிதேவி முதல்வர்.

  #லாலுவுக்கு மகனாக பிறந்ததாலே
  தேஜஸ்வி துணைமுதல்வர்.

  #முலாயம்சிங் மகனாக பிறந்ததாலே
  அகிலேஷ் யாதவ் முதல்வர்.

  #ராஜசேகர் ரெட்டிக்கு மகனாக பிறந்ததாலே
  ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர்.

  ஆனால்…

  #குடிசையில் பிறந்தவரை ஜனாதிபதி ஆக்கியது #RSS

  #விவசாயி மகனை துணை ஜனாதிபதி ஆக்கியது #RSS

  #துறவியை முதல்வர் ஆக்கியது #RSS

  #டீ விற்றவரை பிரதமர் ஆக்கியது #RSS

  நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்,
  நாம் #RSSகாரர்கள் என்று.

  #ஜெய்_ஸ்ரீராம்

 8. பகிர்வு :
  நெருப்பைப் பற்றவைத்துவிட்டு நீரூற்றி அனைப்பதற்கு உதவுவது, நோயைப் பரப்பிவிட்டு பிறகு மருந்து கொடுப்பதுபோல் நடிப்பது, பஞ்சத்தை, வறுமையை உருவாக்கிவிட்டு ரொட்டித் துண்டுகளைக் கொடுப்பது இவைதான் காலங்காலங்களாக கிறிஸ்தவ மதம் மாற்றிகளின் தந்திரம் –

  சமீபத்தில் “Mother therasha” என்ற படம் பார்க்க நேர்ந்தது –

  அதில் மெசிடோனியா என்ற நாட்டிலிருந்து கல்கத்தா வரும் கன்னிகாஸ்திரி தெரஸா எவ்வாறு மதர் தெரஸாவானார் எப்படியெல்லாம் இந்திய மக்களுக்கு உதவினார் என்று காட்டியிருப்பார்கள்-

  1950களில் தெரஸா பிறந்த மெசிடோனியா ஒன்றும் செல்வவளம் கொண்ட நாடல்ல அந்த நாட்டிலும் வறுமை, நோய், இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர், அவர்களுக்கு உதவாமல் அவர் ஏன் இந்தியா வந்தார் என்று கேள்வி கேட்டால் உங்களை சங்கி என்பார்கள் –

  ஆக. முதலில் அவர் இந்தியா வந்தது இங்கே சேவை செய்ய அல்ல மதம் மாற்றும் மிஷநரிகளுக்கு உதவ என்பது தெளிவாகிறது –

  அடுத்ததாக அந்தப்படத்தில் காண்பிக்கப்படும் இந்திய மக்களின் தோற்றம். வறுமையும், நோயும் மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்பது போலக் காட்டியிருப்பார்கள் இவற்றையெல்லாம் கண்டு மனமிரங்கிய அன்னை தெரஸா அவர் தங்கியிருந்த சர்ச் நிர்வாகத்தின், வாடிகனின் எதிர்ப்பையும் மீறி நேரடியாக களத்தில் இறங்கி பிச்சைக்கார, நோயாளி இந்தியர்களை மீட்பதாக காட்சிகள் அமைத்திருப்பார்கள் (அதில், அவர் முதல் மிஷநரி அலுவலகம் அமைத்தது உள்ளூர் காளிகோவில் இடம் என்பது குறிப்பிடத்தக்கது)-

  தைமூர் படையெடுத்து வந்து டெல்லியைச் சூறையாடிய பொழுது அவனது படைவீரர்கள் நகரத்தில் கொள்ளையடிப்பதில் இறங்குகிறான்கள், அதில் ஒருவன் தைமூரிடம் ஓடிவந்து கூறுகிறான் “மன்னா, இங்கே நாம் தங்கத்தை எங்கும் தேடவேண்டியதில்லை ஒவ்வொரு பெண்களின் கழுத்திலும், காதுகளிலுமே வேண்டிய அளவிற்கு தங்க ஆபரணங்கள் கிடக்கின்றன என்று-

  ஆம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் செல்வச்செழிப்புள்ள ஒரே நாடு இந்தியா, அதனால்தான் தெரஸாவின் நாட்டிலிருந்து அலெக்ஸாண்டர் முதல் தைமூர், பாபர், கஜினி தொடர்ந்து வெள்ளையன் வரை இந்த நாட்டை தொடர்ந்து கொள்ளையடிக்க மட்டுமே படையெடுத்து வந்தான் என்பது வரலாறு –

  நமது நாட்டின் செல்வச்செழிப்பிற்கு காலத்தைக் கடந்து இன்றும் உயர்ந்து நிற்கும் கோவில்கள் மட்டுமே சாட்சி –

  கொள்ளையனுக்குப் பிறகு வந்த வெள்ளையன் இந்த நாட்டை ஆண்டு நமது வளங்களைக் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் மதம் மாற்றுவதற்காக பல தந்திரங்களைச் செய்தான் –

  வரிகள் என்ற பெயரில் இந்தியர்களைச் சுரண்டி அவர்களை ஓட்டாண்டிகளாக்கியது மட்டுமின்றி செயற்கை பஞ்சங்களையும் உருவாக்கினான், பஞ்சம் இருக்குமிடத்தில் நோய்களும் உருவாகின_

  பஞ்சமும் நோய்களும் இருக்குமிடம்தான் பாதிரிகளுக்கு சொர்க்கம்-

  ஆம், இதை கம்யூனிஸ்ட் MP சு.வெங்கடேஷன் தன்னுடைய காவல் கோட்டத்தில் விளக்கியிருப்பார், இயக்குநர் பாலா தனது பரதேசி படத்தில் தெளிவாகக் காட்டியிருப்பார் பாருங்கள் –

  ஆக, பஞ்சத்தையும், வறுமையையும் இவர்களே உருவாக்கிவிட்டு இவர்களே உதவி செய்வார்களாம்-

  இதைத்தான் தெரஷாவும் செய்தார், இந்தியாவில் மதம் மாற்றத்தடைச் சட்டம் கொண்டுவந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று இந்திய அரசையே மிரட்டும் அளவிற்கு இவர் வளர்ந்துவிட்டிருந்தார் –

  சரி நாடு சுதந்திரமடைந்து விட்டது இந்தியாவை இந்தியர்களே ஆள்கிறார்கள், வறுமையையும், நோயையும் ஓரளவிற்கு வெற்றிகொண்டு வருகிறோம் இப்பொழுது எப்படி மதம் மாற்றுவார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது –

  மிஷநரி வெள்ளையன் ஆட்சி போனால் என்ன? வெள்ளையன் உருவாக்கிய காங்கிரஸ் ஆட்சிதானே 53 ஆண்டுகள் இங்கே நடந்தது, அதிலும் மிஷநரிகளின் தலைமையிடமான இத்தாலி அரசியின் ஆட்சியல்லவா நேரடியாக 10 ஆண்டுகள் நடந்தது –

  இங்கே, இன்றும் கூட மிஷநரிகள் உருவாக்கிய தி.கவின் வழிவந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளல்லவா இன்றும் நடக்கிறது –

  சரி, இன்றும் அவர்களால் எப்படி வறுமையையும் நோயையும் உருவாக்க முடிகிறது? –

  முதலில், அரை நூற்றாண்டுகளாக இங்கே இல்லாதிருந்த மதுவை திருவாளர் திருவாரூர் கருணாநிதியின் துணைகொண்டு இங்கே நுழைத்து 50 ஆண்டுகளில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் குடிகார தேசமாக்கினான், இன்று குடிகாரத் தமிழர்களின் இல்லங்களில் வறுமை மட்டுமே தாண்டவமாடுகிறது, அடுத்து போராட்டங்கள் என்ற பெயரில் தமிழகத்தின் ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளை மூடி வறுமையை உருவாக்கி வருகிறான்-

  மூன்றாவதாக, குடியால் நோயாளிகளாகவும், விபத்தில் அடிபட்டு மருத்துவமனை வரும் நோயாளிகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றுகிறான், அவர்கள் குடும்பப் பெண்களை எளிதில் மூளைச்சலைவை செய்கிறான் –

  நான்காவதாக, மிக முக்கியமான காரணம், குடிகாரனால் வறுமையில் இருக்கும் குடும்பப்பெண்களுக்கு 500, 1000 கொடுத்தும், மாதந்தோறும் கொடுப்பதாக ஆசை காட்டியும் தொடர்ந்து திராவிடக் கட்சிகள் வெல்ல துணை நிற்கிறான் –

  இறுதியாக, இந்த மிஷநரிகளின் சூழ்ச்சிகளை ஒவ்வொரு இந்தியரும், தமிழரும் உணர்ந்து திருந்தும் வரை இங்கே, வறுமையும் இருக்கும், நோயும் இருக்கும் அதைத் தீர்த்து வைக்க மிஷநரிகளும் இருக்கும், திராவிடமும் ஜெயிக்கும் –

  தேசப்பணியில் என்றும் –

 9. 50 ஆண்டு கால இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கார்கோடகனின் விஷம் மண்ணைக் கவ்வி இருக்கிறது

  ஆம். என் தேசத்தின். தலைமை பீட குடும்ப வாரிசை பெண்ணாசையில் வீழ்த்தி சதி வலையில் சிக்க வைத்து நயவஞ்சகமாக அதிகாரபூர்வமாக என் ‌தேசத்தில் நுழைந்தது அந்த கருநாகம்

  தன் இலக்கிற்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கையிலேயே அதற்கு தடையாக இருக்கும் மைத்துனன் விமானம் வெடித்து சிதறி மர்மமாக இறந்து போனார். உண்மை உணர்ந்தும் கூட ஜஅந்த இரும்பு பெண்மணி தன் தோல்வியை. மறைக்க வேண்டி மவுனம் காத்தார்

  அடுத்து குறி அந்த இரும்பு பெண்மணிக்கே என்ற நிலையில் அதற்கு இடையூறாக இருந்த அந்த வீட்டின் மூத்த மருமகளை மாமியாருடன் வஞ்சகமாக மோதவிட்டு வேடிக்கை பார்க்க

  கணவன் இறந்த பிறகு கூட மாமியாருக்கு சகலமுமாக நம்பிக்கையாக இருந்த தனக்கு நேர்ந்த அவமானம் அதன் பிண்ணனி உணர்ந்து அரச குடும்ப வாரிசான அவர் தன் மானம் பெரிதென நள்ளிரவில் தன் 5 வயது மகனோடு வீட்டை விட்டு வெளியேறினார்

  (அன்று முதல் இன்று வரை அவர் தனது மாமியார் வீடு என்று கட்சியில் கால் பதிக்க நினைத்ததே இல்லை அதனால் தான் இன்றளவும் தாயும் மகனும் உயிரோடு இருக்கிறார்கள் போல )

  அவர் வீட்டை விட்டு வெளியே வந்த சில மாதங்களில் அவரின் மாமியாரான பூகோளத்தை மாற்றியமைத்த அந்த பெண் சிங்கம் தனது வளாகத்திலேயே சல்லடையாக துளைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்தது

  அன்றைய முன தினம் வரை ஒரிசா மாநிலத்தில் பயணம் செய்த வரை பொய்யான காரணம் காட்டி உடனே தில்லி வரவைத்ததும் மறுநாள் அவர் புல்லட் ஃபுரூப் ஜாக்கெட் அணியாமல் மறந்ததை அறிந்து சமிக்ஞை கொடுத்ததும் யாரென்று யாரும் இன்று வரை பேசாதது மர்மமே

  அத்தனை தடைகளும் கடந்து கணவனை அரியணை அமர வைத்து வெற்றி கண்ட போதிலும் தனது இலக்கிற்கு அவரே தடையாவார் என்ற பட்சத்தில் கனகச்சிதமாக காய் நகர்த்தி சர்வதேச சிக்கலை முன நிறுத்தி அவரும் தமிழகத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் சிதறடிக்கப்பட்டார்

  அதுவரை கணவன் போகும் இடமெல்லாம் கூடவே போனவர் அந்த முறை மட்டுமே உடன் வராத இரகசியம் இன்று வரை அறிந்தாரில்லை

  தன் கனவு கை கூட போகிறது என்று இருந்தவருக்கு சுப்ரமணியன் சுவாமி என்ற பெயரில் விதி விளையாடி 91-96 வரை. இருக்கும் இடம் தெரியாமல் இருக்க வைக்க பட

  96-98 இடைப்பட்ட அரசியல் குழப்பம் அவரை கட்சியின் தலைமையில் கொண்டு வந்து சேர்த்தது ஆனால் எண்ணிய எண்ணம் ஈடேற இந்துத்துவ சக்திகள் இடைமறித்து 5 ஆண்டுகள் அவரை எதிர்க்கட்சித் தலைவர் ஆகவே அமர வைக்க

  வழக்கமான தனது பாணியில் மீண்டுமொரு சதி செய்து அது வெறும் நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் மற்றும் உயிர் பலி என்று பிசுபிசுத்து அந்த கருநாகத்தின் குறி முதல் முறையாக தவறியது

  இங்குள்ள அனைத்து துரோகமும் ஒன்றிணைந்து உடன் நிற்க 2004 ல். கட்சியும் எனதே ஆட்சியும் எனதே என்று இருமாந்து இருக்க

  விதி மீண்டும் ஒரு முறை குடியுரிமை என்ற பெயரில் விளையாட தன் கைக்கு அடக்கமான ஒரு தலைப்பாகை வைத்த பொம்மையை அரியணை ஏற்றி விட்டு இரண்டாம் முறையாக தனது குறி தவறியதில். முக்கறுந்த சூர்ப்பனகையாக காத்திருந்தது அந்த கரும் பாம்பு

  தன் கனவை தகர்க்கும் இந்துத்துவ சக்திகள் இனியும் இந்த மண்ணில் இருக்க கூடாது என்று என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வர அதில் இவரின் சுயரூபத்தை உணர்ந்து கடும் அதிர்ச்சி அதிருப்தி யில் இருந்த குவாலியர் ன் அரச குடும்ப வாரிசு சில தினங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்

  கட்சியில் என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்க போகிறது என்று கேள்வி கேட்க தொடங்கி தனது பிண்ணணியையும் தனது கணவரின் நெருங்கிய நண்பரான குவாலியர் வாரிசின் முடிவின் மர்மமும் தெரிந்து கொண்ட ஒரே காரணத்திற்காக

  தனது மதமாற்ற சூழ்ச்சிக்கு உற்ற துணையாக இருந்து ஏழுமலையானின் ஏழுமலைகளில் ஒரு மலையையே ஏசுமலையாக்க துணிந்த அந்த அடிவரூடியும்
  அதே மலையின் காட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஒரு வாரம் கழித்து அடையாளம் தெரியாத அழுகிய பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

  தனது இலக்கிற்கு இனி தடையே இல்லை என்று இருமாந்திருந்தவருக்கு. இறைவன் இந்துத்துவ அரசியல் என்ற பெயரில் மரண் அடி கொடுத்த நிலையில்

  இனி எப்பாடு பட்டாவது அரியணை ஏற வேண்டும் என்று அத்தனை உள்நாட்டு வெளிநாட்டு துரோகமும் இணைந்து செயல்பட்டு கூட அரியணை கனவு இரண்டாம் முறையாக கானல் நீர் ஆகி இந்துத்துவ சக்திகள் ன் கைகளில் அசுர பலத்தோடு போய் விட்டது

  இனி இவர் இருக்கும் வரை நமக்கு மட்டுமல்ல நம் வாரிசுகளுக்கும் அரியணை கனவு வெறும் கனவே தான் என்ற நிலையில் தான் தனது மாமியாருக்கு விரித்த அதே பழைய வலையை தூசி தட்டி மீண்டும் விரித்து வைத்தது அந்த விஷநாகம்

  ஆனால் அந்த கார்கோடகனின் தலையிலேறி காளிங்க நர்த்தனம் ஆடிய கிருஷ்ணனின் மதுரா வை மீட்க வேண்டும் என்று காத்திருக்கும் அந்த மகானிடம இந்த விஷநாகத்தின் வீரியம் எம்மாத்திரம்?
  வென்று விடுமா? விஷநாகம் இல்லை அந்த கிருஷ்ண பரமாத்மா தான் வெற்றி பெற விட்டு விடுவாரா?

  அன்று அவரின் கொடியில் இருந்து அவரின் தேரை காத்த ஹனுமன் இன்றும் பாதுகாப்பு படை வீரர்களின் வடிவில் இருந்து அந்த இராம ராஜ்ஜியம் என்ற கனவை கட்டமைத்த வரும் ஸ்ரீ ராமதாசனை கன கச்சிதமாக காத்தருளி இருக்கிறார்

  அவர் கொண்ட கடமைகள் யாவும் கை கூடும் வரையில் அவரையும் அவருக்கு பின் அவரது வழி வருபவர்களையும் கூட உடனிருந்து காக்கும் இந்த மண்ணில் உலவும் தெய்வீகம் என்ற உண்மை அந்த விஷநாகத்திற்கு இனியும் புரிய வாய்ப்பில்லை

  குறைந்த பட்சம் அதற்கு மகுடி ஊதும் காக்கை கூட்டத்திற்காவது புரியுமா? என்றால் அதுவும் இல்லை ஒரு வேளை
  புரிந்திருந்தால்

  சகுனியின் சூழ்ச்சி துருபத கன்னிகையின் வஸ்திரபங்கம் வரை தான் வென்றது
  அதன் பிறகு வென்றதெல்லாம் அவளின் பொறுமையும் மாண்பும் அவளின் தர்மமுமே என்ற உண்மையை எடுத்துரைத்து அவளின் அம்சமான பாரத தேவிக்கு அவமானம் நேரும் எனில்

  அது உனக்கும் உனக்கு காவடி தூக்கும் எங்களுக்கும் அந்திம காலமே என்ற உண்மையை எடுத்து சொல்லி இருப்பார்கள் இப்படி கூட சேர்ந்து கும்மிப்பாட்டு பாடி குலவை இட வாய்ப்பில்லையே

  விநாச காலே விபரீத புத்தி

  ஜெய் ஹிந்த்
  ஜெய் ஸ்ரீ ராம்

 10. ‘மோடி அலை’ நாளுக்கு நாள் பெருகி வருவது ஏன் ?

  காமராஜரை நான் கண்டதில்லை.

  ஆனால்,
  காமராஜரை போல உயர்ந்தவராக விளங்கி வருகிறார் மோடிஜி அவர்கள்

  14 வருடங்கள் முதல்வர்.

  கடந்த 7 வருடங்களாக பிரதமர்…

  தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ இதுவரை ஒரு சிறு ஆதாயமும் அடைந்ததில்லை.

  எதிலும் வெளிப்படையாகவே நடந்து கொள்கிறார்.

  தன்னை ஒரு இந்துவாக காட்டி கொள்ள தயங்கியதில்லை.

  ‘மதச்சார்பின்மை’ என்ற போலிதனம் அவரிடம் இல்லை.

  இதுவரை எந்த இந்தியப் பிரதமர்களும் நடந்து கொள்ளாத விதம்.

  500 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த…
  இராமர் கோயில் பிரச்சினைக்கு சிறந்த முறையில்…
  அமைதியான தீர்வை கண்டிருக்கிறார்.

  300 வருடங்களாக மிகச் சிறிய இடத்தில் முடங்கிக் கிடந்த…
  காசி விஸ்வநாதர் கோயிலை
  மிகப் பிரமாண்டமாக புணரமைத்திருக்கிறார்.

  2013-ல் வெள்ளத்தால் சேதமடைந்த…
  கேதர்நாத் கோயிலை சீரமைத்துள்ளார்.

  50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு…

  சொந்த நாட்டிலேயே அகதிகளாக கிடந்த காஷ்மீர இந்துக்களை…

  திரும்பவும் அவர்கள் சொந்த இடத்திலேயே குடியமர்த்தி வருகிறார்.

  உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு இந்தியா தான் ‘தாய்நாடு’.

  ‘அவர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் இந்திய அரசு உதவும்’ என்ற தைரியத்தை கொடுத்துள்ளார்.

  பாரதத்தின் கொடையான யோகாவை உலகமெங்கும் கொண்டு சேர்த்தார்.

  இஸ்லாமிய நாடுகளும் இன்று யோகாவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

  மசூதிகளை தவிர வேறு மத வழிபாட்டுத் தலங்களை பார்க்க முடியாத வளைகுடா நாடுகளில் எல்லாம்…

  இப்போது, இந்து கோயில்களை அமைக்க வழி வகுத்தார்.

  எதற்கெடுத்தாலும் ‘தீவிரவாத பூச்சாண்டி’ காட்டிய பாகிஸ்தானை…

  இன்று,
  திவாலாக்கி உலக அரங்கில் பிச்சையெடுக்க வைத்துள்ளார்.

  கடன் கொடுத்து உலக நாடுகளை விழுங்க நினைத்த சீனாவை…
  அந்த நாடுகளில் இருந்து துரத்தியடித்து கொண்டிருக்கிறார்.

  உணவுப் பொருட்களை தவிர மற்ற எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருந்த நமது தேசத்தை…

  இன்று,
  ‘ஆயுதங்களை’ கூட ஏற்றுமதி செய்யும் தேசமாக மாற்றியிருக்கிறார்.

  மேலும்,
  இந்த தேசம் நினைத்து கூடப் பார்த்திராத…

  ஜிஎஸ்டி,
  டிஜிட்டல் பேமெண்ட்,
  OROP,
  என்று எத்தனையெத்தனை திட்டங்கள் கடந்த 7 ஆண்டுகளில்…

  பல ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள்,

  புதிய ரயில் பாதைகள்,

  வெளிநாடுகளில் மட்டுமே நாம் பார்த்திருந்த அதிவேக உயர்தர ரயில்கள்,

  மேம்படுத்தப்பட்ட விமான நிலையங்கள்.

  இத்தனையையும் இரவு பகல் பாராமல் தன்னை முழுவதுமாக இந்த தேசத்துக்காக அர்ப்பணித்து வாழும் ஒரு துறவியால் தான் முடிந்தது.

  இப்படி பட்டவரை எதிர்த்து தான்…

  சில நயவஞ்சகர்கள் எந்த விதமான கள்ள தனமும் செய்ய முடியாமல்…

  தினமும் நிந்தனை செய்து வருகிறார்கள்.

  தொடர்ந்து,
  வீண் பழி சுமத்தியும் வருகிறார்கள்.

  ஆனால்,
  அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல்…

  ‘நாட்டை சரியான முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்’
  என்ற ஒரே நோக்கத்தில்…

  இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருகிறார் நமது மோடிஜி அவர்கள்.

  அவரைப் பற்றி சரியாக அறியாதவர்கள்…

  நாட்டை செல்லரித்து வந்த நயவஞ்சகர்கள்…

  அந்த நயவஞ்சகர்களின் பொய் பிரச்சாரத்தால், மோடியை பற்றி தவறாக புரிந்து கொண்டவர்கள்…

  மத வெறி பிடித்த பிரிவினை வாதிகள்…

  அந்நிய நாட்டு கை கூலிகள்…

  இவர்களை தவிர,

  மோடியை சரியாக புரிந்து கொண்டு, உண்மையை உணர்ந்த…

  மனசாட்சி உள்ள இந்தியர்கள் அனைவரும்…
  இன்று,
  மோடியை ஆதரித்து வருகிறார்கள்.

  இதனாலே தான் இன்று பார் போற்றும் பாரதமாக…

  உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து வருகிறது.

  இதற்கு,
  இந்தியர்களாகிய நாம் அனைவரும்…
  ‘பாரத தாயின் தவப்புதல்வன்’
  மோடிஜிக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்

  வாழ்க மோடிஜி!

  வளர்க நல்லாட்சி!

  பாரத் மாதா கி ஜெய்!

  ஜெய் ஹிந்த்!

  நன்றி!

 11. 70 ஆண்டுகளாக, ஒரு குடும்பம், நாட்டை ஒரு முஸ்லிம் தேசமாக மாற்ற விரும்புகிறது என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ளவில்லை.☹️

  ஆனால் 5 ஆண்டுகளில், மோடி ஒரு இந்து தேசத்தை உருவாக்க விரும்புகிறார் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர்.

  நாடு இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டது,
  ஆனால் எங்கிருந்தும் எதிர்ப்பு சத்தம் வரவில்லை.

  பாதி காஷ்மீர் போய்விட்டது,
  எதிர்ப்பு சத்தம் இல்லை?

  திபெத் சென்றது,
  கிளர்ச்சி இல்லை?

  இட ஒதுக்கீடு போன்ற பலத்த காயங்கள் கொடுக்கப்பட்டது
  எமர்ஜென்சி,
  தாஷ்கண்ட்,
  சிம்லா,
  சிந்து கூட கொடுக்கப்பட்டது,
  ஆனால் யாரும் கவலைப்படவில்லை

  ஊழல்கள்
  2 ஜி அலைக்கற்று,
  நிலக்கரி,
  CWG,
  அகஸ்டா வெஸ்ட்லேண்ட்,
  போபர்ஸ்
  ஆனால்
  எவனும் சத்தம் போடவில்லை

  வீட்டோ பவர் சீனாவுக்கு வழங்கப்பட்டது,
  எந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை.

  லால் பகதூர் சாஸ்திரி போன்ற துணிச்சலான மனிதனை இழந்தோம்,
  எவனும் மெழுகுவர்த்தி ஏற்றவில்லை
  குறைந்தபட்சம் சிபிஐ விசாரணைக்கு கூட யாரும் கோரவில்லை

  மாதவராவ், ராஜேஷ் பைலட் போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர்,
  எந்த வித கோஷமும் இல்லை

  ஆனால் மாட்டிறைச்சி தடை என அறிவிக்கப்பட்டவுடன்,
  பேரழிவு ஏற்படுத்தப்பட்டது
  நமது வரலாற்றில் முதன் முறையாக பொது வெளியில் மாடுகள் வெட்டினார்கள் விபசாரத்துக்கு பிறந்தவர்கள்.

  தேசிய கீதம் கட்டாயமாக்கப்பட்டவுடன், அவர்களின் முகங்களில் சோகம் கவலை படர்ந்தது
  பலத்த எதிர்ப்பும் தொடர்ந்தது

  வந்தே மாதரம் அல்லது பாரத் மாதா கி ஜெய் என்று எல்லாரும் கூறும்போது, ​​அவர்களின் நாக்குகளில் தையல் போடப்பட்டு உள்ளது போல் இருந்தனர் இன்னமும் இருக்கின்றனர்.

  பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி
  அவர்களை கோபத்தில் டண்டணக்கா டணுக்குணக்கா ஆஹ் டர்ணக்கா டணுக்குணக்கா என டான்ஸ் ஆட வைத்தது.☹️☹️

  ஆதாரை நிராதராக மாற்ற அவர்களுடைய சிறந்த (பெஸ்ட்)முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன☹️☹️

  சொந்த நாட்டில் அகதிகளாக வந்த காஷ்மீரிய இந்தக்களின் வலியை யாரும் உணரவில்லை/ புரிந்து கொள்ளவும் இல்லை

  கூட்டத்துக்கு பிறந்த ரோஹிங்கியாக்கள விரட்டினால்
  முஸ்லிம்களுக்கு வலியை ஏற்படுத்தது. அவன் நாட்டில் அவன் அட்டகாசம் தாங்க முடியவில்லை என விரட்டி விட்டவனும் முஸ்லிம்கள் தான் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

  சிந்தியுங்கள் …. காங்கிரஸ் இந்துக்களை எப்படி எல்லாம் சிதைத்து வைத்து இருக்கு ??
  ?? !! ஆண்மையற்ற ஹிந்துகளாக வார்த்து உள்ளது நம்மை என்பது கூட உணர முடியவில்லையா நம்மால்?

  பயங்கரவாதம் காரணமாக காஷ்மீரில் மொத்தமாக 50 ஆயிரம் கோவில்கள் மூடப்பட்டது அல்லது இடிக்கப்பட்டது, அதை மீண்டும் புனரமைக்கப்பட்டு – திறக்கப்படும் அல்லது மீண்டும் கட்டப்படும்
  – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

  மிகவும் நல்ல செய்தி,(கொஞ்சம் பழைய செய்தி தான்)
  ஆனால் 50 ஆயிரம்?
  இந்த எண்ணிக்கையை கேட்டதும்,
  என் மனம் கோவத்தில் வேம்புது.

  தேவாலயத்தின் ஜன்னல் மீதோ அல்லது மசூதியின் மீது கற்கள் வீசப்பட்டன என்றவுடன்
  ஊடகங்களின் புருஷன் செத்தது போல் வாரக்கணக்கில் மோசமாக அழும்

  ஆனால் ஒன்று – இரண்டு அல்ல, 50 ஆயிரம் கோவில்கள் மூடப்பட்டன
  எந்த இந்துவுக்கும் இது பற்றி தெரியவில்லையா?அல்லது கவலை இல்லையா? சொல்லுங்கடா

  முதலில் பள்ளத்தாக்கில் இருந்த ஒவ்வொரு இந்துக்களையும் வலுக்கட்டாயமாக விரட்டினார்கள்,
  பின்னர் இந்து மதத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் அழித்தனர்☹️☹️
  எவ்வளவு பெரிய சதி என்று யோசியுங்கள் ..
  மொத்த பள்ளத்தாக்கின் வேரிலிருந்து ஒரு முழு மதத்தையும் அழிக்கவா இவர்கள் நம்மிடம் சகோதரத்துவத்தை பேசுகிறார்கள்?
  #காக்_த்தூ

  மோடி அரசு வந்திருக்காவிட்டால், இதை யாரும் அறிந்திருக்க கூட மாட்டார்கள்!

  இடதுசாரி பத்திரிகையாளர்கள், முஸ்லீம் புத்திஜீவிகள் மற்றும் காங்கிரஸ் மற்றும் அதன் உளவாளிகள் ஏன் இந்த பிரச்சினையை நாட்டின் முன் வைக்கவில்லை?

  இது தான் காங்கிரஸின் சாதனை
  மற்றும்
  இடதுசாரி பத்திரிகையாளர்கள் மற்றும் முஸ்லீம் புத்திஜீவிகளின் புத்திசாலித்தனம்
  பொது இந்து இந்த வரலாற்றை அறியாமலேயே அப்பாவியாக இருக்கிறான், அப்பாவி தான் தர்ம அடி வாங்குவான் என்பதற்கு வரலாறு சான்று.

  காங்கிரஸ் செய்த ஒவ்வொரு வேலைக்கு பின்னாடி ஒரு சூழ்ச்சி இருந்தது என்பதை உணர்ந்து செயல்பட துவங்குங்கள் இந்துக்களே
  நமக்கு தெரியாத அளவுக்கு இன்னமும் அமைதியாகவும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது நம்மிடம் போலி சகோதரத்துவத்தை பேணும் குரூப்கள் ஆதரவுடன்.

  தேசியவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்
  இதைப் பற்றி நன்கு சிந்தித்து, உங்கள் அனைத்து நண்பர்கள்/உறவினர்களுக்கு, உங்களால் முடிந்தால் இந்த செய்தியைப் பகிரவும் –

  #ஜெய்_ஹிந்த்.

  #ஜெய்_ஸ்ரீ_ராம்.

  #ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா.

 12. சுவாமி விவேகானந்தர் இந்தியா அறியாமையிலிருந்து விடுபட்டு தன் ஞான பாரம்பரியமான சனாதான தர்மத்தின் உன்னத கோட்பாடுகளால் உய்ய வேண்டும் என போதித்தார்

  இந்நாட்டுக்கு தேவையானது புதிய மதம் அல்ல அதற்கு தேவையான மதம் அதனிடமே இருக்கின்றது, எங்களுக்கு தேவை கல்வி, காலத்துக்கு ஏற்ற கல்வி, அறியாமை போக்கும் கல்வி, உன்னதமான சிந்தனையில் தேசத்துக்கும் உலகுக்கும் பயன்படும் நல்ல சிந்தனை மிக்க கல்வி என முழங்கினார்

  அவரின் மிகபெரிய கனவு ஆரோக்கியமான இந்தியா, பலமான உடலே உழைக்கவும் முடியும் சிந்திக்கவும் முடியும் அதனாலேதான் எல்லா சிந்தனைகளும் முன்னேற்றமும் வரவும் முடியும் என நம்பினார்

  உடல் ஆரோக்கியம், உழைப்பு, நல் சிந்தனை என்பது அவரின் மிகபெரிய போதனையும் செயலுமாய் இருந்தது

  அந்த வீரதுறவியும் ஞானபெருமகனும் பாரத தவமுனியுமான விவேகானந்தரின் பிறந்த நாளில் அவரின் அவதாரமான வீரதுறவி, கர்மஞானி மோடி தமிழகத்துக்கு மட்டும் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்துநாட்டுக்கு அர்பணிக்கின்றார்

  ஆம், அதே தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை விவேகானந்தரின் நாளில் அர்பணிக்கின்றார்

  எந்த தமிழகம்?

  சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு கையில் காலணா இல்லாமல் பாரதமெல்லம் சுற்றி விவேகானந்தர் வந்த அதே தமிழகம்

  பெரும் பசியிலும் பெரும் களைப்பிலும் தவித்தாலும் குமரி கடலில் நெடுந்தூரம் நீந்தி அந்த பாறையில் இன்னொரு குமரி அன்னை போல் தவமிருந்து அந்த மகான் இந்நாட்டுக்காய் கதறிய அதே தமிழகம்..

  130 ஆண்டுக்கு முன்னாலே எதிர்கால இந்தியா பிரிவினையில் படும் பாடுகளையும் மாபெரும் துரோகங்களையும் வலிகளையும் காயங்களையும் தாண்டித்தான் வளரும் என அவர் கண்ணீர் விட்டு அழுத அந்த தமிழகம்

  அமெரிக்காவுக்கு செல்ல அவருக்கு பண உதவி செய்த அதே தமிழகம், அமெரிக்க சிக்காகோவில் உலகம் புகழும் பேருரையினை காலத்துக்கும் நிற்கும் உரைகளை அவர் நிகழ்த்திய பின் இந்திய மண் என முதலில் கால்வைத்து கதறிய அதே தமிழகம்

  அந்த தமிழகத்திற்கு , விவேகானந்தர் நன்றியும் கண்ணீரும் ஆனந்தமும் கொண்டு ஓடிவந்த அதே தமிழகத்துக்கு சுமார் 3 ஆயிரம் கோடியில் விவேகானந்தரின் சீடர் 11 மருத்துவ கல்லூரிகளை கொடுப்பதெல்லாம் எங்கோ என்றோ எடுத்த முடிவு

  இந்த தமிழகத்துக்கு எக்காலமும் அரூபியாய் நின்று நான் வழிகாட்டுவேன் என அந்த வீரதுறவி குமரியிலும் பாம்பனிலும் எடுத்த அந்த சபதம் அவரின் சீடரால் இன்று நிறைவேறுகின்றது

  விவேகானந்தரின் பிறந்த நாளான தேசிய இளையோர் நாளில், இளையோருக்கு கல்வி வழிகாட்டும் நிலையங்களை தமிழகத்துக்கு தருகின்றார் மோடிபிரான்

  அந்த வீரதுறவி விவேகானந்தருக்கும் அவர் கனவை நிறைவேற்றும் கர்மஞானிக்கும் கோடி நன்றிகளை தெரிவிக்கின்றது தமிழகம்..

  இந்த சனாதான தர்ம ஆன்மீக மண் இந்து ஞானிகளாலும் இந்து துறவிகளாலும் எக்காலமும் காக்கபடும், எக்காலமும் காக்கபட்டுகொண்டே இருக்கும்

 13. வரலாற்றை வீரர்கள் படைப்பதில்லை, பெரும் சாம்ராஜ்யத்தை வாள்முனைகள் அமைப்பதில்லை, மாபெரும் தேசத்தின் மாற்றங்கள் வீரனாலும் மக்களாலும் மட்டும் கிடைப்பதில்லை

  ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும் அதன் பொற்காலத்திலும் அத்தேசம் வலிமையாக எழவும் மாற்றங்கள் எழவும் ஒரு ஞானி வேண்டும்

  ஞானியே வரலாற்றினை மாற்றுவான், ஆன்மீக ஞானியே அக்கினி குஞ்சாக காட்டை எரியவைப்பான், அவனே சூரிய வெப்பம் போல் மேகம் கூட காரணமாவான், அவனே பெருமழையாக கொட்டி பெரும் பசுமை செழிப்பை கொடுப்பான்

  வரலாற்றில் அரிஸ்டாட்டில், சாணக்கியன் என பலரை இப்படி சொல்லமுடியும், ஏன் நவீன சீனாவினை தொடங்கி வைத்த சன்யாட்சன் சொன்னபடி “இந்த புத்தமதம் இருக்கும் வரை நாம் உருப்பட போவதில்லை நம் பண்டைய கலாச்சாரத்தை மீட்டெடுக்காமல் உருப்படபோவதில்லை” என்பதில்தான் சீனா எழும்பி நிற்கின்றது

  இஸ்ரேலின் எழுச்சிக்கும் காரணம் அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் காத்து வருவது மட்டுமேதான், அவர்களுக்கு அந்த சிந்தனையினை கடந்த நூற்றாண்டில் தியோடர் ஹார்ல் தொடங்கினான்

  ஆம் சிந்திக்க கற்றுகொடுப்பான் ஞானி, பிரபஞ்ச சக்தியோடு அவன் எடுக்கும் போதனையில் மாபெரும் எழுச்சி எழும், அவனின் சிந்தனை வெறும் உணர்ச்சி வெறியினை கொடுக்காது அது அந்த இனம் எது? அதன் தாத்பரியம் என்ன? அதன் பெருமையும் வரலாறும் என்ன? எனும் மிகபெரிய‌அது வரலாற்றை மாற்றும்

  இந்தியாவின் ஞானமும் சிந்தனையும் எக்காலமும் உலகில் கொண்டாடபட்டது, அந்த இந்திய ஹிந்து ஞானத்தை விட கிரேக்க சிந்தனை உயர்ந்தது என காட்டபோவதாக சொல்லி இந்தியா வந்தான் அலெக்ஸாண்டார்

  ஆனால் போரஸுடன் தோற்ற நாட்களில் அலெக்ஸாண்டர் இந்திய ஞானத்தாலும் அதன் சனாதான சிந்தனையாலும் ஈர்க்கபட்டான் ஞானியாய் திரும்பசென்றான்

  அவனுக்கு பின் புத்தமும் சமணமும் இந்நாட்டை குழப்பி போட்டது ஆதிசங்கரர் வந்து மீட்டெடுத்தார்

  இஸ்லாமிய படையெடுப்புகள் அதை ஒழிக்க பார்த்தன, பிரிட்டானியர் இந்நாட்டு மதத்தை கலாச்சாரத்தை ஆண்டிகள் தேசம், பாம்பாட்டி தேசம் என மாற்றி சொல்லி இந்நாட்டின் மகத்துவத்தை திரித்தனர்

  இந்தியர்களின் வீரமும் ஞானமும் தாத்பரியமும் ஒழிந்து அவர்களை குழப்பி நாகரீகமற்றவர்காக்கி செவ்விந்தியர்களை போல ஒழித்துவிடும் தந்திரமேதான் ஐரோப்பியருக்கு இந்தது

  அதில்தான் இந்தியாவினை பாம்பாட்டி நாடு, காட்டுமிராண்டி நாடு, மூடநம்பிக்கை நிரம்பிய மதத்தை கொண்ட நாடு என கதைகட்டினர், அக்கதை ஐரோப்பாவிலும் வேகமாக பரவிற்று, இந்திய மதமும் நாகரீகமும் பிற்போக்கானது என அவர்களகவே நம்ப தொடங்கினார்கள்

  ஆனால் அந்த ஆண்டிகள் தேசத்துக்கா ஐரோப்பாவில் இருந்து பிழைக்க வந்தாய்? அந்த அறிவில்லா மூட நம்பிக்கை தேசமா இவ்வளவு செல்வத்தை உருவாக்கிற்று? என அறிவுள்ள இந்தியர் கேட்டாலும் பிரிட்டிஷ்காரனிடம் பதில் இல்லை

  காலம் இந்நாட்டின் தாத்பரியங்களையும், இந்து ஞானத்தின் பிரமிப்பையும் பிரமாண்டத்தையும் அதன் விஸ்வரூபத்தையும் காட்ட ஒரு மகானை உருவாக்கியது, இரண்டாம் சங்கரராக அந்த மகான் வங்கத்தில் தோன்றினார்

  சுவாமி விவேகானந்தர், அவர்தான் இந்திய சனாதானதர்மத்தின் ஞான முகத்தை மேற்குலகில் மிளிர செய்தார், அவராலே இந்த மங்கிய விளக்கு மிக பிரகாசமாய் எரிந்தது, மேற்குலகம் இந்திய ஞானத்தை கண்டு அசந்தது, ஏகபட்டோர் இந்துமதம் வரவும், இந்து எழுச்சி ஏற்படவும் அது சுதந்திர கணலாக எரியவும் அதுதான் காரணமாயிற்று

  வங்கம் ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர்.

  அந்த நரேந்திர தத்தா எனும் ஞான பிறப்பு சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், குதிரையேற்றம் முதல் வீர விளையாட்டு வரை அவருக்கு தெரிந்தது, மிக எளிதாக கலெக்டர் ஆகும் தகுதி அவரிடம் இருந்தது

  ஆனால் அவர் ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார்.

  ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகபெரிய ஞானி, புலி இன்னொரு புலியினை அடையாளம் காணுதல் போல மிக சரியாக இவரை அடையாளம் கண்டார், அவரின் கைபட்ட நேரத்தில் இருந்து முழு பிரபஞ்ச சக்தி நரேந்திரனில் இறங்கிற்று, சுவாமி விவேகானந்தர் என மாறினார்

  அதில்தான் பல்லாண்டு பாரம்பரியம் கொண்ட இந்துமதத்துக்கு பெரும் ஒளி கிடைத்தது

  தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் உறுதி,எதற்கும் அஞ்ஞாத மனஉறுதி இவற்றுடன் அவர் பரம்மஹம்சர் மடத்தின் தலைவராகும் பொழுது அவருக்கு வயது வெறும் 23.

  பெரும் அவதாரங்களை தவிர, பிறவி ஞானிகளை தவிர யாருக்கும் இது சாத்தியமில்லை.

  அந்த வயதிலே ஞானம் அடைந்தார், ஆண்மீகம் என்பது ஆலயத்திலோ அல்லது இமயமலை,காசி சாமியார் கூட்டத்திலோ அல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு தெய்வீக தன்மை உண்டு, அதனை வெளிபடுத்தினால் அதுதான் ஆன்மீகம் என்பதுதான் இம்மண்ணின் ஞானமரபு என பழைய ஞானத்தை மீட்டெடுத்தார்

  ஆண்மீகம் மூலம் இந்தியாவினை மாற்றி அமைக்கலாம், என்பதுதான் அவரின் கொள்கை.
  அக்கால இந்தியா மிகவும் அறியாமையால் பின் தங்கி மோசமாக இருந்தது, தன் மதமும் அதன் உயர்வும் அறியாமல் இருந்தது

  ஆப்கானிய படையெடுப்பும் அதை தொடர்ந்த பிரிட்டிசார் ஆட்சியும் அதனை முறித்து போட்டிருப்பதை உணர்ந்தார், சிவாஜியின் இந்து பேரரசு எழுச்சி ஆங்கிலேயரால் அடக்கபட்டதை அமைதியாக உணர்ந்தார்

  சுல்தான்களும் ஆங்கிலேயனும் சேர்ந்து செய்த ஆட்சியில் இந்துமதம் நசுங்கியிருந்ததையும் அந்த ஆன்ம எழுச்சி இல்லாமல் இனி இங்கு மாற்றமில்லை என்பதையும் உணர்ந்தார்.

  அரச ஆதரவு இல்லா மதம் வாழாது, மக்களிடம் ஆத்மரீதியாக சிந்திக்கவைக்கா சிந்தாந்தம் நிலைக்காது என்பது அவரின் தீர்க்கமான முடிவாயிற்று

  காலத்தால் தூசுஅடைந்து , பாழ்பட்டு கவனிக்க யாருமற்று இருந்த இந்துமதத்தை ஆப்கானியராலும் வெள்ளையனாலும் இந்திய அரசர்கள் வீழவும் விழுந்து கிடந்த இந்துமதத்தை அவர் தட்டி எழுப்பினார்

  அதன் தாத்பரிய நம்பிக்கைகள் கொள்கைகள் ஞான விளக்கங்களை காவி உடை அணிந்து அவர் சொல்ல தொடங்கிய பொழுது ஒவ்வொரு இந்தியனின் ஆன்மாவும் உண்மை உணர்ந்தது, யானையின் பலம் அதற்கு தெரிவது போல் ஒவ்வொருவரும் உணர தொடங்கினர், மாயை அகன்றது

  தேசபற்றும் அர்பணிப்பும் நிரம்பிய‌ 100 இளைஞர்களை கொடுங்கள் இத்தேசத்தை நான் மாற்றுகின்றேன் என சவால் விட்டார் விவேகானந்தர், இளைஞர்களும் திரண்டனர், பெரும் எழுச்சி அவரால் உண்டாயிற்று

  அமெரிக்க சர்வமத மாநாட்டில் அவர் உரையாற்றி நின்றபொழுது வணங்காத கரங்களுமில்லை தெளியாத உள்ளங்களுமில்லை, ஆம் மிகபெரிய ஞானியாக அவரை உலகம் ஏற்றும் கொண்டது

  விவேகானந்தர் தெளிவாக இருந்தார், வீணாக ஆயுதபோராட்டமோ அறவழி போராட்டமோ அர்த்தமற்றது என்பது அவருக்கு தெரிந்தது, உண்மையான ஆன்மீக எழுச்சி ஒன்றே இங்கு தர்மத்தை மீட்டெடுத்து நிலைக்க வைக்கும் என்பதை உணரபெற்றார்

  நாடெல்ல்லாம் சுற்றிபார்த்த விவேகானந்தர் அதனை மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் என போதித்தார் , அதனால்தால் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அவருக்கு தேவையாய் இருந்தனர்.

  அவரது போதனைகள் சாகாவரம் பெற்றவை,

  சிகாகோ உலக சமய மாநாட்டில் எல்லோரும் ஆங்கில நாகரீகத்தில் “சீமான்களே,சீமாட்டிகளே” என சொல்லி பேச தொடங்க, எடுத்த எடுப்பிலே “சகோதர, சகோதரிகளே” என தொடங்கி கைதட்டலை அள்ளியவர். கேட்டதற்கு காரணம் சொன்னார். “ஒரு துறவிக்கு பெற்றவரை தவிர வேறு எல்லோரும் சகோதர சகோதரியே” என அமைதியாக விளக்கினார், அதற்கு மேற்கத்திய கலாச்சாரம் இந்துக்களிடம் இருந்து எடுத்து கொண்ட பல சான்றுகளை காட்டினார்

  ஐரோப்பியரின் வாழ்க்கை முறை வேறு கலாச்சாரம் வேறு மதம் வேறு. ஆனால் எங்கள் இந்து மண்ணில் வாழ்வும் மதமும் கலாச்சாரமும் ஒன்று என அவர் சொன்னபொழுது ஐரோப்பியரிடம் பதிலே இல்லை, இந்துமதம் அன்றே அவர்களால் மதிப்புடம் நோக்கபட்டது

  அதுவும் உலக சமயமாநாட்டில் ஒரு காவி பரதேசி கோலத்தில் சென்று, இந்திய ஞானத்தை, அதன் அமைப்பை, அதன் ஆழ்ந்த நோக்கத்தினை அவர் விளக்கி முழங்கியபொழுது, இமைக்கமறந்து அவரை வணங்கி நின்றது அந்த சபை.

  பெண்களுக்கான மரியாதை என்ற பொருளில் அவர் பேசும்பொழுது “எங்கள் நாட்டில் மனைவியினை தவிர எல்லோரையும் அம்மா என்றே அழைப்பார்கள், சிறுமியிடம் பிச்சை கேட்டாலும் தாயே என அழைக்கும் பாரம்பரியம் எங்களது” என அவர் சொன்னபொழுது, மற்ற மத வித்தகர்களிடம் அதற்கு பதில் இல்லை

  இந்து மத கலாச்சாரத்தில் பெண்களுக்குரிய உயர்ந்த இடத்தினை அவர் விளக்கியபொழுது மற்ற மத குருக்கள் எல்லாம் சங்கடத்தில் தலையினை தொங்க போட்டுகொண்டனர். அவ்வளவு அழகாக விளக்கினார்.

  உண்மையில் பழம் இந்திய அடையாளங்களில் பெண்களுக்கான இடம் அவ்வளவு உயர்ந்ததாய் இருந்திருக்கின்றது என்பதை அவர் விளக்கியபொழுது மற்ற மதத்தாருக்கு இந்துமதத்தின் மீதான அபிமானம் கூடிற்று

  இதுதான் விவேகானந்தரின் முத்தாய்ப்பு அவர் எல்லா மதங்களையும் படித்தார், எல்லா மத நோக்கத்தையும் அவரின் இளம் வயதிலே அறியமுடிந்தது, எல்லா ஆறுகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதமும் இறைவனை அடையவே என அவரால் 30 வயதிலே போதிக்க முடிந்தது.

  அதனால்தான் வெள்ளையர் கூட அவரை கிழக்கின் ஞான ஒளி என அழைத்தனர். கல்வி மூலம் மக்களின் அறியாயமை அகற்றவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார், இந்தியா முழுமையும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதே அவரது முதல் குறிக்கோள்.

  நிச்சயமாக சொல்லலாம்,, அழிந்திருந்த இந்து மதத்தினை மீட்டெடுத்தவர் ஆதிசங்கரர் என்றால், அதற்கு அழியா புகழை கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

  உலகில் பலநாடுகளில் இந்தியாவில் பிறந்த இருவருக்கு மட்டும் சிலை உண்டு, காரணம் அவர்களை உலகம் மதித்துவணங்கி ஏற்றுகொண்டது, ஒருவர் காந்தி இன்னொருவர் சுவாமி விவேகானந்தர்.

  அவரது தெளிவு அப்படி, போதனைகள் அம்மாதிரியானவை. மனிதனுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் ஒப்பற்ற மந்திரங்கள் அவை. ஆன்மாவை தட்டி எழுப்ப கூடியவை.

  ஒரு இந்து துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இருந்தவர் விவேகானந்தர்
  உங்கள் அறிவிற்காக உங்கள் போல அறிவான மகனை பெற, உங்களை திருமணம் செய்ய தயார் என ஒரு இளம்பக்தை வேண்டி நிற்க, “அம்மா..துறவிக்கு பெண்கள் எல்லாம் தாய் ஸ்தானம், நீ வேண்டுமானால் என்னை மகனாக ஏற்றுகொள், நான் இப்பொழுதே உன் மகனாவேன்” என சொல்லி உயர்ந்து நின்றாரல்லவா? அதுதான் விவேகானந்தர்.

  அவர்தான் இந்தியா தன் ஞானமரபிலும் சனாதர்ம உயரிய சிந்தனையிலும் எழுந்து விடுதலைபெற வேண்டும் என முதலில் முழங்கினார்

  “இந்த நாட்டிற்கு தேவையானது நிச்சயமாக மதம் அல்ல. அது அவர்களிடமே இருக்கின்றது கல்வியும், தங்கள் மதம் கலாச்சாரம் பற்றிய‌ விழிப்புணர்வுமே அதுதான் இந்நாட்டை மாற்றும், ”
  எவ்வளவு அழகான போதனைகள், எளிய வாதங்கள், ஆழ்ந்த தத்துவங்களை மெல்லிய பூங்காற்று போல் சொல்லிய எளிமையான அணுகுமுறைகள்? சந்தேகமில்லை அவர் மாபெரும் ஞானி

  அவரின் கிளிகதையும், ஆமை கதையும் போதும் அவரின் ஞானத்தினை சொல்ல

  அந்த குளத்தாமை கதையின் மூலம் எங்கே என தேடும்பொழுதுதான் விவேகானந்தரின் ஆகபெரிய தேடலும், அவரின் நுணுக்கமான சிந்தனையும் வெளிபடுகின்றன‌

  கடல் ஆமை குளத்தாமையினை நோக்கி கடல் பெரிது என்றால் குளத்து ஆமை கடல் எப்படி இதைவிட பெரிதாக இருக்கும் என அடம்பிடிக்குமாம், இறைவன் எவ்வளவு பெரியவன் என்பதை விளக்க இந்த கதையினை பல இடங்களில் ஆமையாகவும் தவளையாகவும் அறியாமை பதர்களை உருவகபடுத்தி சொல்வார் விவேகானந்தர்

  அந்த கதையின் மூலம் அப்பர் சுவாமிகளின் பாடல் என்பதுதான் ஆச்சரியம்

  “கூவலாமை குரைகடல் ஆமையைக்
  கூவலோடு ஒக்குமோ கடல் என்றல்போல்
  பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்
  தேவதேவன் சிவன் பெருந்தன்மையே” என்பது அப்பர் சுவாமிகளின் பாட்டு

  அதையே விவேகானந்தரும் படித்து பேசினார் என்றால் ஒரு இந்துவாக அவர் இந்த பாரத கண்டமெல்லாம் எவ்வளவு தேடி தேடி இந்து நூல்களை படித்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது

  அதை நினைக்கையிலே கண்ணீரோடு கண்கள் அப்பெருமகனை தேடுகின்றது

  இறைவன் பெரும் சூத்திரதாரி, நைஷ்டிக பிரம்மசாரி துறவிகளை அவன் நீண்டநாள் வாழவிடுவதில்லை, அப்படித்தான் பெரும் ஞான சூரியனாக, தெய்வீக திருமகனாக உலகெல்லாம் இந்துமதத்தின் பெருமையை ஒரு இந்தியனாக ஒளிவீசி பரப்பிய அவரையும் எடுத்துகொண்டான்.இறக்கும் பொழுது அவருக்கு வயது 39 மட்டுமே.

  ஒரு மாபெரும் ஞானசூரியனின் பிறந்த நாளை உலகம் இன்று கொண்டாடுகின்றது, ஒரு இந்தியனாக அந்த ஞானமகனை வாழ்த்துவோம், நிச்சயம் அவர் வாழ்த்துகுறியவர், வாழ்த்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டிய அவதாரம்

  “இந்த நாட்டின் இழிநிலைக்கு காரணம் மதம் அல்ல, அந்த புனித மதத்தினை ஒழுங்காக பின்பற்றாததே..” என்ற அவரின் போதனை நிச்சயம் இன்றும், எக்காலமும் பொருந்த கூடியது.

  அப்படி பின்பற்றினால் இந்நாடு எவ்வளவு உயர்வாக உலகில் ஒளிவீசும், அதனை செய்தால் இந்துமதமும் வாழும், இந்தியாவும் மகா அமைதியாக செழிப்பாக வாழும்

  இந்நாடு இந்துக்கள் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்றால் அதற்கு விவேகானந்தர் காட்டிய வழியே எக்காலமும் சால சிறந்தது

  இந்து எப்படி வாழவேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும்? எப்படி தியானிக்க வேண்டும் என சொல்லியும் வாழ்ந்தும் காட்டிய மகான்

  இந்துத்வா என்பது என்ன? மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்துவதே இந்துமதம், ஒவ்வொரு மனதில் இருக்கும் கடவுள் தன்மையினை வளர்த்து அம்மனிதனை தெய்வநிலையினை எட்ட செய்வதே இந்துமதம்
  இந்த உலக வாழ்வில் எதெல்லாம் மனிதனை மனிதனாக வாழவைக்க அவன் மனதை செம்மைபடுத்துமோ அதுதான் இந்துமதம்

  “ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் எல்லா வழிபாட்டிலும் என்னையே அடைகின்றான், அது சுடுகாட்டு பூசையோ , ஆடு வெட்டுவதோ இல்லை ஆலய கருவறை முன் நிற்கும் வழிபாடோ எல்லாம் என்னையே சேரும்” என கண்ணன் சொன்ன தத்துவத்தை எளிதாக விளக்கியவர் விவேகானந்தர்

  ஒவ்வொரு இந்து வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களில் கீதை போல விவேகானந்தரின் போதனைகளும் கட்டாயம் இருக்க வேண்டும்

  பாரதத்தின் கலாச்சார பெருமையும், அதன் மகா உயர்ந்த தாத்பரியமும் , இந்து மதம் உலகுக்கு சொல்லும் மாபெரும் ஞானமும் அந்த ஞானமரபும் அதில்தான் இருக்கின்றன‌

  பென்னெடுங்கால ரிஷிகளும் மகான்களும் முனிகளும் ஒருசேர கலந்து உரிய நேரத்தில் இம்மண்ணின் மகத்துவத்தை விவேகானந்தர் உருவில் விளக்க வந்த நாள் இது

  அலெக்ஸாண்டரையும் அவன் கிரேக்க மன பெருமையினையும் சாணக்கியன் தோற்கடித்து விரட்டியது போல, ஐரோப்பிய கிறிஸ்துவ பெருமைமிகுந்த அகங்கார‌ தலைகணத்தை தோற்கடித்து விரட்டியவர் விவேகானந்தர்.

  அந்த தேசபற்று மிக்க ஞான பிம்பம் நரேந்திரனாய் பிறந்து விவேகானந்தராய் ஜொலித்து மறைந்தபின் இப்பொழுது நரேந்திர மோடியாய் திரும்பவும் வந்திருக்கின்றார், அந்த ஞானமகனால் தேசம் தலை நிமிர்ந்து நிற்கின்றது

  சுவாமி விவேகானந்தர் தன் இறுதிநாட்களில் நான் உடலால் மறைந்தாலும் என் ஆன்மா இந்த நாட்டை மீட்டெடுக்க மறுபடி வரும், நான் மறுபடி வந்து இந்நாட்டை உயர்த்துவேன் என அடிக்கடி சொல்லிகொண்டிருந்தார்

  அந்த நரேந்திர தத்தா பின்னாளில் நரேந்திர மோடியாய் திரும்ப வந்ததை காலம் காட்டிற்று, மோடி தன் தேச சேவையினை விவேகானந்தரின் சீடராகத்தான் தொடங்கினார்

  விவேகானந்தரோடு அவரின் எழுச்சி அடங்கவில்லை உண்மையில் அவர் எழுச்சியும் போராட்டமும் அவர் காலத்துக்கு பின்புதான் பெரும் அலையாக எழும்பிற்று

  வரின் பூலோக வாழ்வு முடிந்து அரூபியாக விஸ்வரூபமெடுத்தார் விவேகானந்தர், அவரின் சிந்தனைகளும் போதனையும் இந்தியாவில் பெரும் எழுச்சியாக உண்டாயிற்று, அதுவும் வங்கத்தில் பற்றி எரிந்தது
  இதன்பின்பே வெள்ளையன் வங்கத்தை இரண்டாக பிரித்தான், இந்துக்கள் எழுச்சியினை தொடர்ந்தே முஸ்லீம் லீக் அமைப்புகளும் தோன்றின‌

  விவேகானந்தர் ஏற்றிவைத்த அமைதி தீ தொடர்ந்து எரிந்தது, அது இந்து மகா சபையாக ஆர்.எஸ்.எஸ் இயக்கமாக தொடர்ந்து வந்தது, ஆனால் உலக நிலை யாருக்கும் சாதமில்லை, அதனால் என்ன, ஞானி ஏற்றிவைத்த தீ அணையுமா என்ன?

  அது எரிந்தது, இந்நிலையில் ஹிட்லரின் எழுச்சியும் அமெரிக்க சோவியத் எழுச்சியும் பிரிட்டனை வீழ்த்தின, இரண்டாம் உலகபோரின் முடிவில் இந்தியாவினை இரண்டாக பிரித்து இரு நாட்டுக்கும் தன் அடிமைகளை அமர்த்திவிட்டு வெளியேறினான் வெள்ளையன்

  1947ல் நடந்தது சுதந்திரம் அல்ல, தன் அடிமைகளிடம் ஆட்சியினை வெள்ளையன் கொடுத்த ஒரு நிகழ்வு அவ்வளவுதான்

  ஆனால் விவேகானந்தர் விஸ்வரூபமாக வளர்ந்தார் நாடெல்லாம் இந்து எழுச்சி நடந்தது, அமைதியாக நடந்தது கன்னியாகுமரி வரை அவர் வந்து நின்றார்

  திராவிட கண்களுக்கு அது ஏதோ ஒரு சாது என தெரிந்ததே தவிர அவர்களின் அறியாமை அகங்கார கண்களுக்கு அந்த ஞானம் பிடிபடவில்லை

  விவேகானந்தரின் போதனைகள் இன்னும் வளர்ந்தன , 1990களில் உலகமே மாற்றங்களை தேடியபொழுது இந்தியாவிலும் காங்கிரஸ் வீழ ஆரம்பித்தது

  அதாவது வெள்ளையனின் அடிமை கூட்டம் வீழ ஆரம்பித்து இந்துக்களிடம் எழுச்சி வந்தது, ஆயினும் அக்கட்சி இத்தாலி கூட்டத்திடம் சென்றது

  பொறுமையுடன் விவேகானந்தரின் ஞானதீ தன் கடமையினை செய்து கொண்டே இருந்தது, 2014ம் ஆண்டு இத்தேசம் இத்தாலி கோஷ்டியினை பிடுங்கி எறிந்து தன்னை முழுக்க மீட்டது

  ஆம் கவனியுங்கள் உங்களுக்கே புரியும்

  1947ல் சுதந்திரம் என சொன்னாலும் உண்மையான சுதந்திரம் 2015ல் தான் நடந்தது, அதன் பின்புதான் காஷ்மீர் இணைப்பு முதல் இன்னும் ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கின்றன‌

  அதில் ராமர்கோவிலும் சேர்ந்து கொண்டது, ஆம் விவேகானந்தர் கண்ட கனவுகளெல்லாம் இப்பொழுதுதான் அரங்கேறுகின்றன, இந்தியாவின் சுதந்திரம் 20104ல் நடந்து இப்பொழுதுதான் நடக்கின்றது

  காசி இப்பொழுதுதான் துலங்குகின்றது, இனி ஒவ்வொரு ஷேத்திரமாக துலங்கும்

  எங்கெல்லாம் சுவாமி நடந்து அந்த ஷேத்திரங்களின் நிலைகண்டு கண்ணீர்விட்டாரோ அதெல்லாம் துலங்க ஆரம்பித்துவிட்டன, இதெல்லாம் மாபெரும் ஆச்சரியம் சனாதான துறவிகள் மட்டும் காட்டும் ஆச்சரிய அதிசயம்

  ஞானிகளின் கணக்குகளும் வாழ்வும் ஆயுளும் புரிந்து கொள்ளமுடியாதவை, இதை ராகவேந்திரா சுவாமிகளின் வரலாற்றிலே காணலாம், ராகவேந்திரரின் சாயல் விவேகானந்திரடமும் உண்டு.

  தன் ஆயுள் பற்றி ராகவேந்திரர் சொன்னார் “என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள், என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும், பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்”

  விவேகானந்தர் வாழ்வும் இப்படியே, அவரின் பூவுடலுக்கு வயது 39, அவரின் அரூபியான போராட்ட வாழ்வு 100 வருடங்கள், அவரின் சிந்தனை ஆளதொடங்கியிருக்கும் இந்த காலத்தின் அளவு இனிதான் உலகம் அறியும்

  அந்த அதர்மம் இந்தியாவில் அட்டகாசம் செய்தபொழுது பிரபஞ்சம் இங்கு விவேகானந்தர் எனும் மகா ஞானியினை அனுப்பியது, அவரால் இங்கு மாபெரும் புரட்சி ஏற்பட்டு 2014ல் இந்திய விடுதலையும் சாத்தியமாயிற்று

  ராகவேந்திரரின் அம்சம் விவேகானந்தர் என்படில் சந்தேகமில்லை. ராகவேந்திரரின் எழுச்சி 15ம் நூற்றாண்டில் இந்துமதத்தை காத்தது, எவ்வளவோ இடங்களில் காத்தது அவர் எழாவிட்டால் தென்னகம் பலவற்றை இழந்திருக்கும்

  ராகவேந்திரரின் சாயல் இருப்பதால் என்னவோ விவேகானந்தருகும் தமிழகத்துக்கும் இடையேயான தொடர்பு மிக அதிகம், தமிழகத்தை அவர் அதிகம் நேசித்தார்

  குமரியில்தான் அவர் தவமிருந்தார்

  விவேகானந்தர் 1893ல் சொன்னார், சென்னையில் இருந்து ஒரு ஆன்மீக ஒளி எழுந்து வரகண்டேன் என்றார், அதன் பின்பே ரமணரால் திருவண்ணாமலை மாபெரும் எழுச்சி பெற்றது, இன்று கன்னியாகுமரியில் அவர் சிலையாக எழும்பி நிற்கின்றார்

  ஆண்மீக தலங்கள் நிரம்பிய தமிழகத்திற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

  இந்தியா சுற்றிய அவருக்கு தமிழகம் பிடித்தமான இடம், சென்னை வந்தார், அவர் தங்கிய இடம் இன்றும் விவேகானந்தர் இல்லம் என அழைக்கபடுகின்றது, மொத்த இந்தியர்களுக்கும் தெரியாத அவர் பெருமை, தமிழகத்து சேதுபதி அரசனுக்கு தெரிந்தது, சேதுபதி மன்னர் மட்டும்தான் அவர் சிகாகோ செல்ல பணவுதவியும் செய்தார்,

  அதன் நன்றிகடனாகத்தான் அந்த மாபெரும் சொற்பொழிவினை நிகழ்த்தியபின் அவர் முதலில் இலங்கை வழியாக தமிழகம்தான் வந்தார்.

  அவருக்கு வரவேற்பு கொடுத்த இடத்தில் இன்றும் நினைவுத்தூண் பாம்பனில் உண்டு.

  குமரி விவேகானந்தர்பாறை அறிவாதவர் யாருமில்லை, அதுவும் அவர் கால்பட்ட புனிதபாறை,இவ்வாறாக‌ தமிழகத்தில் அம்மகானுக்கு அழியாத நினைவுசின்னம் உண்டு. குமரியில் விவேகானந்தர் நினைவு இல்லம் அமைக்க ஆயிரம் காரணம் உண்டு, அதில் அரசியல் சர்ச்சைகளும் உண்டு.

  விவேகானந்தரின் பெயர் எக்காலமும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எரிச்சலை கொடுக்கும் என்பதால் கன்னியாகுமரி பாறை சேவியர் பாறை என சிலுவை நட்டு அட்டகாசம் செய்தார்கள்
  கொஞ்சம் அசந்தாலும் பாபர் மசூதி அளவிற்கு பற்றி எரியும் பிரச்சினைதான்.

  பக்தவக்சலம் போன்ற உண்மை அரசியல்வாதியும், ஏக்நாத் ராணடே போன்ற உண்மையான தேசபக்தர்களும் இருந்ததால் பிரச்சினை மகா சுமூகமானது, அல்லாவிட்டால் நிச்சயம் அது பெரும் கலவரமாக வெடித்திருக்கும்.

  அந்த அளவு இந்துவிரோத சக்திகளுக்கு விவேகானந்தர் பெரும் பயத்தையும் அச்சத்தையும் என்றும் கொடுத்து கொண்டிருக்கின்றார்

  (பின்னாளில் அப்பக்கம் இதை மனதில் வைத்தே வஞ்சகமாக நிறுவபட்டதுதான் திருவள்ளுவர் சிலை என்பது வேறு விஷயம்)

  அந்த பாம்பன் தூணும் மகா பெரிய வரலாற்றை கொண்டது, ஆனால் அதனை சொல்ல கூட யாருமில்லை. நிச்சயம் அந்த இடமும் மகா வரலாற்று சிறப்பானது. அந்த ஞானமகன் சிகோகோ வெற்றி உரை ஆற்றிவிட்டு இத்திருநாட்ட்டில் கால்பதித்த முதல் இடம்.

  தமிழகம் நாசமாய் போன தலைவிதி ஈரோட்டில் எழுந்ததென்றால் தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும் கன்னியாகுமரி பக்கம் இருந்தே எழும்பின, அய்யா வைகுண்டர் முதல் பலர் வந்தார்கள்

  அவர் கால்பட்ட புதுகோட்டை ராமநாதபுரம் பக்கம் இருந்துதான் தேவர் பெருமகனும் வந்தார்

  இதெல்லாம் ஆழ நோக்க வேண்டிய விஷயங்கள், விவேகானந்தர் இங்கு குறிப்பால் பல விஷயங்களை உணர்த்தித்தான் சென்றார்.

  விவேகானந்தர் காட்டிய வழியில் இந்தியா தன் பொற்காலத்தை மீட்டெடுத்து கொண்டிருக்கின்றது, இனி பாரதம் உச்சம் பெறும்

  ஒருவேளை காலவோட்டத்தில் இந்தியா சறுக்கினால் மறுபடியும் அந்த “நரேந்திரர்” மறுபடியும் வந்து இந்தியாவினை காத்து கொண்டே இருப்பார்

  பாரதத்தின் பெரும் ஞான துறவியும் , இந்திய விடுதலையினை ஆன்மீக வழியில் இந்திய சுதந்திரம் சாத்தியம், அதன் கலாச்சார மீட்டெடுப்பு சாத்தியம், அதன் புனிதமான மதம் சாத்தியம் என நிரூபித்த அந்த மாபெரும் ஞானிக்கு ஞான அஞ்சலிகள்.

  அந்த மகான் இந்தியாவின் “ஞான தந்தை”

  “இங்குள்ள சிக்கலுக்கெல்லாம் காரணம் இந்துமதம் அல்ல, அதை தவறாக புரிந்து கொண்டதே. அம்மத்தின் உண்மையான தத்த்துவத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கெல்லாம் அது விளங்கவில்லையோ அதை நாம் விளக்க வேண்டும்

  இந்துமதத்தின் அருமையும் பெருமையும் அது சொல்லும் வாழ்வியல் முறையினையும் மனபூர்வமாக ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ளும்நாளில் பாரத ஆத்மாவினை அவன் உணர்வான், எல்லோரும் அப்படி உணரும் பட்சத்தில் இத்தேசம் மிகபெரும் மேன்மைபெற்று உலகை ஆளும்”

  இதுதான் விவகானந்தர் சொன்ன முத்தாய்ப்பான வரி, ஒவ்வொரு இந்துவும் செய்யவேண்டிய காரியம் இதுதான்
  இந்துமதம் எந்த சிக்கலுக்கும் காரணம் அல்ல, அது தவறாக புரிந்து கொள்ளபட்டதும் அதை பலர் திரித்து சொன்னதுமே சிக்கலுக்கெல்லாம் காரணம், அதை சரிசெய்து இந்துமத மேன்மையினை எல்லோருக்கும் எடுத்து சொல்ல ஒவ்வொரு இந்துவும் உறுதி ஏற்க வேண்டிய நாளிது

  “இங்கு புதிய சிந்தனைகள் நாகரீகமாகவு கண்ணியமாகவும் உருவாக வேண்டும் என்பதே நம் தர்மம் வலியுறுத்தும் விஷயம், இந்தியாவின் புதியசிந்தனைகள் அந்த அடிப்படையில் உருவாக வேண்டும்

  இந்தியா எக்காலமும் வெளிநாட்டை நம்பிருக்க முடியாது, அது சரியானது அல்ல. இங்கு வெற்றிகள் ஒரே நாளில் வராது வெற்றி வரும் வரை காத்திருங்கள், உழையுங்கள்

  தைரியமாக முன்னேறுங்கள், உயர்ந்த கொள்கையும் நம்பிக்கையும் வைத்திருங்கள். திடம் கொள்ளுங்கள் பொறாமையும் சுயநலமும் உங்களிடமிருந்து அகலட்டும், தேசத்தின்பால் அதன் உண்மைக்கும் சத்தியத்துக்கும் கீழ்படிந்திருங்கள் அது தேசத்தை பாரினில் உயர்த்தும் தேசம் முன்னேறும்”

  எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்? அந்த ஞானமகனை தவிர யாருக்கு இவை சாத்தியம்?

  விவேகானந்தர் எக்காலமும் இங்கு பாரத பெருமையினை காத்து கொண்டே இருப்பார், அந்த ஞானமகனின் பிறந்தநாளில் தேசம் கம்பீரமாய் அவரை வணங்குகின்றது

  இந்த “ஞானபாரத சிற்பி” அப்பெருமகனே,ஆயிரம் ஆண்டு கழித்து இந்துமதம் ஒளிவீசி துலங்க பெரும் காரணம் அந்த ஞானதிருமகனே

  அந்த அவதாரத்தை நன்றி கண்ணீரோடு வணங்கி அவர் பிறந்த நாளில் இந்துமதத்தாலும் அதன் உயரிய சிந்தனையாலும் நாட்டை காப்போம் நாட்டோடு மதத்தையும் காப்போம் என அவர் வழியில் பாடுபட உறுதியேற்கின்றது இந்துஸ்தானம்

 14. முல்லைபெரியாறு அணையில் ஏதோ தமிழனுக்கு சேவை செய்ய வெள்ளையன் வந்தது போலவும் அதில் மகா தியாகியான பென்னிகுயிக் ஒரு அணையினை கட்டி தமிழனை வாழவைத்தது போலவும் ஏகபட்ட புகழாரங்கள்

  இந்த வரலாற்றில் எளிய கேள்வியினை கேட்கலாம், அன்று இந்தியா வெள்ளையனால் ஆளபட்டது இம்மக்களின் வரி அவனிடம்தான் சென்றது அப்படியானால் அதை யார் கட்டியிருக்க வேண்டும்? வெள்ளை அரசாங்கம்தானே கட்டியிருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை

  இந்த பென்னிகுயிக் லண்டன் சொத்துக்களை விற்று கட்டினான் என கதைவிடும் கும்பல் கருத்துக்களை ஒரு வாதத்துகு அப்படி வைத்தாலும் அந்த சொத்து லண்டன் பிரிட்டிசார் காட்டிலும் மேட்டிலும் உழைத்து சம்பாதித்ததா இல்லை இந்தியாவில் அடித்த கொள்ளையில் வந்ததா என்ற கேள்விக்கு எவனும் பதில் சொல்லமாட்டான்

  முல்லை பெரியாரின் வரலாறு என்ன? இதனை தொடங்கி வைத்து செய்தது யார்? பென்னிகுயிக் ஏன் கதையில் வந்தான் என்றால் அதன் தூங்கும் வரலாறு தெரியும்

  பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கல்லணை கட்டியவன் தமிழன், நெல்லை திருவைகுண்டம் அணை கட்டியவன் தமிழன்

  இன்னும் வைகைநதி கடலுக்கு செல்லாமல் ஏரிகள் வழியே செல்லுமாறு பாதையினை மாற்றியவன் தமிழக இந்து

  சிவன் வைகை நதியினை தோற்றுவித்தார் என்பது சாதாரண வார்த்தை அல்ல, இன்றும் கடலில் நேரடியாக கலக்காத நதி அதுதான்

  ஆம் மிக பெரிய பரகாசுர சக்தி அத்தனை கண்மாக்கள் வழியே ஒரு நதியினை வழிசெல்லுமாறு அமைத்தது என்பது உலக ஆச்சரியமான அதிசயங்களில் ஒன்று

  அப்படிபட்ட வைகையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மேற்கு நோக்கி செல்லும் நதிகளை கிழக்கே திருப்ப பல முயற்சிகள் எடுக்கபட்டன‌

  உண்மையில் இங்கு யாரும் பல விஷயங்களை சிந்திப்பதில்லை அல்லது மறைக்கபடுகின்றது

  ஒரு காலத்தில் செழித்து ஓடிய வைகை, நெல்லை மாவட்ட நம்பியாறு போன்றவை இப்பொழுது வறண்டு கிடக்க காரணம் என்னவென்றால் விஷயம் வரலாற்றில் இருக்கின்றது

  சேர சோழ பாண்டி மன்னரிடையே நடந்த தீரா யுத்தம் நதி சண்டையாகவும் இருந்தது, சோழர்களுக்கு புலிகேசிகள் காவேரியின் குறுக்கே தடைபோட்ட பொழுது சோழன் சென்று உடைத்து காவேரி மீட்ட கதை வரலாறாக உண்டு

  பாண்டியருக்கும் சேரருக்கும் தீராமோதல் வர காரணத்துக்கு நதிகளும் காரணம் உண்டு

  ஆம் மேற்கு மலைதொடங்கி அதன் கிழக்கு பக்கம் வரை சேர ஆதிக்கம் இருந்தது கோவை முதல் நெல்லை மாவட்டம் களக்காடு வரை சேரர்கள் பிடித்திருந்தார்கள்

  இதனால் நதிகள் பல அவர்கள் பக்கம் திருப்பபட்டன அப்பொழுது கிழக்கே வரும் நீர் பாதிக்கபடும்

  பாண்டியரில் பலர் உதித்து அதை மீட்டு கொண்டே இருந்தனர், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அதில் முக்கியமானவன் அவன் கோட்டைடையம் போரே நதி ஓடைகளை மீட்க நடந்தது

  பின்னாளில் தமிழகம் பாண்டிய சோழரை இழந்து ஆப்கானியர்கள், நாயக்கர்கள் என சிக்க சேரநாடு பல வகையான விஷயங்களால் பல ஓடைகளை மேற்கே இழுத்தது அதில்தான் பாண்டிநாட்டு நதிகள் வறண்டன பலம் குறைந்தன‌

  பாண்டிநாடு ஒரு நாள் அந்நதிகளை மீட்கும் எனும் வலியான சபதம் எல்லா பாண்டிநாட்டு அரசர்களிடம் இருந்தது

  அது 17ம் நூற்றாண்டு, வேலுநாச்சியார் வீழ்த்தபட்டு மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையினை ஆண்டு கொண்டிருந்த காலம், ஆற்காடு நவாபின் சார்பாக வெள்ளையர்கள் தமிழகமெங்கும் வரிவிதித்த காலம்
  அப்பொழுது இராமநாதபுர சேது மன்னர்களின் வரிசையில் அந்த மன்னர் பதவிக்கு வந்தார் அவர் பெயர் முத்துராமலிங்க சேதுபதி

  சேதுபதி வம்சம் என்பது பாண்டிய சீமையில் தனித்து நின்ற வம்சம், சேது பூமி எனும் அந்த ராமநாதபுர வம்சத்துக்கு தனிபெரும் கவுரவமும் வரலாறும் உண்டு, கச்சதீவு அவர்கள் சொத்தாகவே இருந்தது, கிழக்கே குவிக்கபடும் முத்துக்களும் கடல்வழி வாணிபமும் வரியும் வைகையின் நீர்வளமும் அவர்களை செழிப்பாக வைத்திருந்தது

  ஒரு கட்டத்தில் அவரையும் வெள்ளையன் துணையோடு அடக்கி கப்பம் வசூத்தான் ஆற்காடு நவாப், வெறுவழியின்றி அதை ஏற்றும் கொண்டார் சேதுபதிக்கள், வெள்ளையனும் மிக தந்திரமாக தன் தளபதி ஒருவனை அவரை கண்காணிக்க அவர் அருகே அமர்த்தியிருந்தான் அவன் பெயர் மார்ட்டின்ஸ்

  சேதுபதி அன்று கப்பம் கட்ட காரணம் அந்த சேதுபூமி இஸ்லாமிய மயமாகிகொண்டிருந்தது, ஹிஜிர் காலண்டர் ஆர்காடு இஸ்லாமிய பணம் என அது வேகமாக இஸ்லாமியம் ஆயிற்று

  மன்னர் அதை தந்திரமாக தடுக்க கப்பம் கட்டி இந்து பூமியாக மாற்றி கொண்டார்

  சேதுபதி மன்னரின் முன்னோர் செய்த புண்ணியத்தில் அவருக்கொரு திவான் கிடைத்தார் அவர் பெயர் முத்திருளப்ப‌ பிள்ளை.

  அவர் திருநெல்வேலி பகுதியின் ஏழை பிள்ளை, ராமநாதபுரம் பக்கம் உச்சிநத்தம் எனும் ஊரில் ரெட்டியாரிடம் கணக்குபிள்ளையாக சேர்ந்தவர். அபாரமான திறமைசாலி, வருமானம் பெருக்கும் அனைத்து வழிகளும் அறிந்த நிர்வாகி, பண்ணையாரான ரெட்டியிடம் இருந்த அவரின் திறமை அறிந்த சேதுபதி மன்னன் முத்துராமலிங்கம் அவரை தன் திவான் ஆக்கினார்

  திருமலை நாயக்கனுக்கு கிடைத்த வடமலையான் பிள்ளை போல சேதுபதிக்கு முத்திருளப்ப பிள்ளை கிடைத்தார்

  அவர் பெயர் முத்தருளப்ப பிள்ளை என்பதும் பின் முத்திருளப்ப பிள்ளை என்றாயிற்று என்கின்றது சில ஆய்வு
  திவான் ஆனபின் முத்திருளப்ப பிள்ளை அசத்தினார், மிக சரியான சுங்க சாவடி வசூல், கிராமம் கிராமாக ஜாரி மகமை எனும் வரி வசூல், வணிக பொருள் வசூல், டச்சுக்காரரிடம் இருந்து வரி என மிக சீரான முறையில் செல்வம் குவித்தார்

  இந்த மகமை வசூல் என்பது கோவில்கள் திருபணிக்கானது, இதனால் இராமேஸ்வரம் திருக்கோயிலின் 3வது பிரகாரம் சிறப்பாய் முடிந்தது அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் காணலாம்

  அப்படியே சேது மன்னர்களின் குடும்ப கோவிலான திருமருதூர் என்ற‌ நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார் என்பதை அங்குள்ள கல்வெட்டு சொல்கின்றது

  இந்த திவான் முத்திருப்ப பிள்ளைதான் காவேரிபோல் வைகையினை வற்றாமல் ஓடும் பெரும் நதியாக மாற்ற எண்ணினார், வரலாற்றில் வைகை என்பது மிக சீராக பயன்பட்ட நதி, அதன் வரைபடத்தை பார்த்தாலே உங்களுக்கு விளங்கும்

  ஆம் அது மதுரையினை தாண்டி மிகபெரும் ஏரிகளை நிரப்பியபடி கடலில் சென்று கலக்கும் வகையானது, பாண்டியர்களின் நீர்மேலாண்மை அப்படி இருந்தது

  பாண்டியர்களின் மதுரை ராஜ்ஜியத்தை நாயக்கர் கைபற்றினர், ஆனால் சேர அரசு அப்படியே நீடித்தபொழுது வைகையில் நீர்வரும் பல ஓடைகள் சேரநாட்டுக்கு அதாவது கேரளாவுக்கு திருப்பபட்டன இதனால் வைகை அடிக்கடி வறண்டது

  வைகையின் நீரை பெருக்கும் திட்டத்தை மன்னர் சேதுமதி இருளப்ப பிள்ளையிடம் வழங்கினார், முத்திருப்ப பிள்ளை வைகையின் மூலம் சென்று மலையில் அதற்கான வழிகளை தேடினார்

  அப்பொழுதான் அங்கு ஓடு பெரியாறு எனும் ஆறை கண்டார், அது 5 சிறு ஆறுகளை கொண்டு 56 கிமீ ஓடிவந்து முல்லை எனும் இன்னொரு ஆறை 6வதாக இணைத்து கேரளாவுக்குள் ஓடிகொண்டிருந்தது
  இதை தடுத்து நிறுத்தி கிழ்க்கே திருப்பி வைகையில் கலந்தால் வைகை செழிக்கும் என ஆலோசனை சொன்னார் முத்திருளப்ப பிள்ளை, மன்னன் சேதுபதி அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்

  ஆம் முதன் முதலில் முல்லை பெரியாரை வைகையில் திருப்பும் வழியினையும் அணை கட்டவேண்டிய சரியான இடத்தையும் சொன்னது முத்திருளப்ப பிள்ளையே

  இது நடந்தது 1792ம் ஆண்டு

  அப்பொழுது வைகை செழிக்க மன்னர் அவசரபட்ட காரணம் சேதுநாட்டில் ஏற்பட்ட வறட்சி, இந்த அணை கட்டபட்டால் வறட்சி நீங்கும்

  இங்கு இரு சிக்கல் எழுந்தது முதலாவது நான் கொடுக்கும் கப்பம் எம்மக்களுக்காகவே இதனால் அணைகட்டும் பெரும் செலவில் பிரிட்டிஷ் நவாப் கூட்டாட்சி பங்குதரவேண்டும் அல்லது கப்பம் கோரகூடாது என்றார் மன்னர்
  இரண்டாவது பஞ்சம் வந்ததால் அங்கு கொள்ளைவிலைக்கு தானியங்களை விற்க வந்த வெள்ளையனை துணிவுடன் தடுத்து மக்கள் நலம் முக்கியம் என்றார் மன்னர்

  இது போக கப்ப பணத்தை அதிகபடுத்தினர் பிரிட்டிஷார் காரனம் ஐரோப்பாவில் நெப்போலியன் ஏற்படுத்திய அதிர்வு அப்படியே திப்பு சில்தான் கொடுத்த மிரட்டல்

  இவர்களை சமாளிக்க கூடுதல் வரிகேட்டனர் பிரிட்டிசார், மக்களோ பஞ்சத்தில் வாட அது முடியாது அணை முக்கியம் உங்கள் தானியங்களுக்கு நான் வரி விதிப்பேன் என மிரட்டவும் செய்தார்

  ஒரு கட்டத்தில் மக்களுக்காக சிந்தித்த மன்னரை தன் கையாளான மார்ட்டின்ஸ் மூலம் அகற்றி சிறைவைத்தனர் வெள்ளையர்

  இதில் ஒரு கொடுமையும் நடந்தது சிவகங்கை சீமைக்கும் சேதுநாட்டுக்கும் ஒரு பகை உண்டு, சிவகங்கை சீமை சேதுவின் ஒரு பகுதி என அதை தன் சாம்ராஜ்யமாக கருதினார் மன்னர், இதனால் மருது கோஷ்டியும் உதவிக்கு வரவில்லை அல்லது தடுக்கபட்டனர், போரும் சிறையுமாக 48 வயதிலே இறந்தார் முத்துராமலிங்க சேதுபதி

  அத்தோடு இருளப்ப பிள்ளையின் முல்லை பெரியாறு கனவு முடிந்தது ஆனால் அவர் கொடுத்த திட்டம் அப்படியே இருந்தது

  முத்துராமலிங்க சேதுபதிக்கு பின் அவர் அக்கா மங்களேஸ்வரி நாச்சியார் என்பவரை அரசியாக முடிசூட்டினர் பிரிட்டிசார்

  100 வருடங்கள் கடந்தன‌

  அந்த வழியில் வந்தவர்தான் முத்து விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி 1888ல் அவர் சமஸ்தான பொறுப்புக்கு வந்தார், இவர் சென்னையில் படித்த பட்டதாரி

  அவர் சேதுபதி மன்னர்களின் இந்து பக்தி மொத்தமாய் கலந்த பிறப்பாய் இருந்தார், முன்னோர்கள் செய்த திருப்பணிகளை தொடர்ந்து செய்தார்

  நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டுமானம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் குட முழுக்கு, கோதண்டராமர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், இராமநாதபுர அரண்மனை இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் சீரமைப்பு. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில் என ஏகபட்ட திருபணிகளை செய்தார்

  1890களில் மிஷனரிகளுக்கும் மதமாற்ற கும்பலுக்கும் பெரும் சவாலாக திகழ்ந்தார்

  தன் முன்னோரான அந்த முத்துராமலிங்க சேதுபதி கனவான முல்லை பெரியாறு அணையினை கட்ட முடிவெடுத்தார் விஜயரகுநாத சேதுபதி ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து சாதகமான பதில் இல்லை

  ஆங்கிலேயர்கள் இங்கு சுரண்டி பிழைக்கும் வியாபாரம் செய்ய வந்தவர்கள், இங்கு நல்லது செய்யவேண்டிய ஆசையும் அவசியமும் அவர்களுக்கு இல்லை என்பதால் மறுத்தார்கள், எனினும் இந்தியா ஓரளவு விழிப்படைய ஆரம்பித்த நேரம் சுதந்திர குரல் சிந்தனைகள் ஒலித்த நேரம் என்பதால் கொஞ்சம் சிந்தித்தனர்
  ஆனால் அனுமதி தருவோம் காசுதரமாட்டோம் என்பது போல் இருந்தது அவர்கள் செயல்

  கடைசியில் மன்னரே அணைகட்டலாம் என்றும், அதற்கான அனுமதியினை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு பெற்றுதரும் என்றும் முடிவாயிற்று.

  திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் வருவதால் விசாக திருநாள் மகாராஜாவின் திவான் V ராம் ஐயங்காருக்கும் மதராஸ் மாகாணத்தின் செயலாளர் J C ஹன்டிங்டன் என்பவருக்கும் இடையே 999 வருட குத்தகைக்கு 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுக்கபட்டது

  அதாவது நீர் வரத்து இருப்பது தமிழக பகுதி நீர்பிடிப்பு பகுதி தமிழக பகுதி ஆனால் அணை கட்ட இருப்பதும் நீர் தேங்ககும் பகுதியும் திருவாங்கூர் சமஸ்தானக்கானது

  இந்த 999 குத்தகைக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் என அன்றே கொடுத்தவன் விஜயபாஸ்கர தொண்டைமான் ஆங்கிலேயன் சல்லிகாசு கொடுக்கவில்லை

  மன்னன் அசரவில்லை முன்னோர்கள் கட்டாத அணையினை தான் கட்டுவதாக எழும்பினான், இருளப்ப பிள்ளையும் தன் கொள்ளுதாத்தா முத்துராமலிங்க சேதுபதியும் தன்னை வழிநடத்துவதாக எண்ணி அவர்களை வணங்கி தொடங்கினான்

  அணை கட்டுவது என்பது அவனின் மொத்த ராஜ்ய சொத்துக்களுக்கு ஈடான செலவாய் இருந்தது, அவன் அசையவில்லை

  அன்று பிரிட்டிஷார் பினாமிகளாக செட்டியார்கள் இருந்தார்கள், பர்மாவில் இருந்து தொடங்கிய உறவு அது, வெள்ளையரின் பணத்தை செட்டியார்கள் மூலம் சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கி அணைகட்ட தொடங்கினான் அந்த உத்தமன்

  1893 ஜூலை 21 ல் கடன் 20 லட்சம், 1894 கடனுக்கு அடகு வைத்தவை முழ்க திவாலாகிறது, 1885ல் ஏலம் விடப்பட்டது.

  ஒரு வருடத்திலே கடன் மூழ்குவதும் மன்னன் திவால் நிலைக்கு வருவதும் வெள்ளையனின் மறைமுக விளையாட்டு, வங்கி போன்ற கடன் நிலையங்கள் அவன் கட்டுபாட்டிலேதான் இருந்தன‌

  ஆனால் அணை வேலை ஓரளவு நடந்தது, போர்த்துகீஸ் மற்றும் டச்சு தொழில்நுட்பத்தில் அணை எழும்பிற்று எனினும் முழுமையாக பூர்த்தி ஆகவில்லை

  பூர்த்தி ஆக வெள்ளையன் விடவுமில்லை, தன் அரசில் ஒரு மன்னன் அணைகட்டுவது தங்களுக்கு அவமானம் என கருதி மறைமுகமாக தடுத்தனர்

  மன்னனின் சொத்தெல்லாம் அரசுக்கு சென்றது, எஞ்சியிருக்கும் சில சொத்துக்களுக்கு தன் மழலை ராஜேஸ்வர சேதுபதியினை வாரிசாக்கி அதையும் தர்ம ஸ்தாபனமாக மாற்றிவிட்டு இறந்தான் பாஸ்கர சேதுபதி

  அப்பொழுது அவருக்கு வயது வெறும் 35

  இன்றைய பணத்தில் பல்லாயிரம் கோடி பணம் மற்றும் 500 பேர் சாவு என்பதோடு அணையின் அத்தியாயம் அன்று முடிந்தது

  ஆம் அவர் அந்த முத்துராமலிங்க சேதுபதியின் மறு அவதாரம், அணைகட்ட முயன்று தோற்று 100 வருடம் கழித்து வந்து மறுபடியும் தோற்று 40 வயதுக்குள்ளே இறந்த அந்த மறுபிறப்பு

  (ரஜினியின் லிங்கா கதை இந்த பாஸ்கர சேதுபதி பற்றியதே, ஆனால அதை வாய்விட்டு சொல்ல இயக்குநருக்கோ ரஜினிக்கோ மனமில்லை

  ஏனென்றால் அதுதான் சினிமா உலகம், அவர்கள் அப்படித்தான்.)

  விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்காது, அதுவும் நல்லோர் கண்ட கனவு ஒரு காலமும் தோற்காது
  மன்னன் தொடங்கி வைத்த அணை என்னாயிற்று என ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வரை செய்தி எட்டிற்று

  வேண்டா வெறுப்பாக அணைகட்ட பென்னிகுயிக் என்பவனை இழுத்து வந்தனர் அவன் தன் அறிவில் ஒரு அணையினை ஆங்கிலேயன் ஒதுக்கிய பணத்தில் கட்டினான் அது நிலைக்கவில்லை

  நிலைக்கவில்லை என்பதை விட பென்னிகுயிக்கின் திட்டம் சரியில்லை என்பதே பொருள்

  அரசு பணத்தை வீணாக்கினான் பென்னிகுயிக் என சொல்லி திட்டத்தை நிறுத்தியது வெள்ளை அரசு, ஏனோ அது கட்டபடுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை

  தோற்றுபோன பொறியாளன் என்றால் எதிர்காலம் பாதிக்கபடும் என கருதி இன்னொரு பொறியாளனிடம் வடிவம் பெற்று தன் சொத்துக்களை போட்டு எப்படியோ கட்டிமுடித்தான் பென்னிகுயிக்

  அவன் புதிதாக கட்டியது கொஞ்சமே அதற்கான அடித்தளம் பாஸ்கர சேதுபதியால் மிக வலுவாக இடபட்டிருந்தது, பெனிகுயிக் செலவழித்தது சொற்பமான பணமே, 1895ல் அணை பயன்பாட்டுக்கு வந்தது

  இன்று கம்பீரமாக நிற்கின்றது அந்த முல்லை பெரியாறு அணை

  அதற்கு பென்னிகுயிக்கும் ஆங்கில அரசும் காரணம் என சொல்லி பென்னிகுயிக்கு சிலை வைத்து அவனுக்கு மணிமண்டபமும் கட்டி கொண்டாடுகின்றது தமிழக அரசு

  நேற்று பென்னிகுயிக்குக்கு லண்டனில் சிலை எழுப்புவோம் என்கின்றது தமிழக அரசு, இது விசித்திரமானத்

  காரணம் பென்னிகுயிக் லண்டனில் பிறக்கவில்லை அவன் இந்தியாவின் புனேவில்தான் பிறந்தான், சிலை வைப்பதாக இருந்தால் கூட புனேயில்தான் வைக்கவேண்டும் அதற்கு மராட்டியர் அனுமதிக்கபோவதில்லை அந்த சிலை அவசியமற்றது

  சிலை வைப்பதாக இருந்தால் நிச்சயம் பாஸ்கர தொண்டைமானுக்கு முல்லைபெரியாற்று கரையில் வைக்கலாம், இருளப்ப பிள்ளைக்கு வைக்கலாம்

  அதை செய்தால் அர்த்தமுள்ளது

  ஏன் அதை செய்யாமல் திராவிட அரசுகள் இப்படி செய்கின்றன‌ என்றால் திராவிட சித்தாந்தமே ஆங்கிலேயனை வழிபட்டு அவன் சொன்னதை உண்மை என நம்பிய கூட்டத்தின் உருவாக்கம்

  காங்கிரஸும் திமுகவும் வெள்ளையனின் வாரிசுகள் என்பதால் வெள்ளையன் பென்னிகுயிக் இங்கு சிலையாக நிற்கின்றான் அவனுக்கு தமிழக அரசின் கொண்டாட்டமும் உண்டு

  ஆனால் தமிழக இந்து மன்னன் முத்துராமலிங்க சேதுபதியினையும் அவனின் கொள்ளுபேரன் விஜய பாஸ்கர சேதுபதியினையினையும் நினைத்து பார்க்க யாருமில்லை

  என்று தமிழகத்தில் காங்கிரசும் திமுகவும் இல்லாத, தேசிய அபிமானமும் இந்து அபிமானமும் கொண்ட இயக்கம் வலுபெறுமோ அன்று பென்னிகுயிக் மண்டபம் சேதுபதி மண்டபம் என மாற்றபடும்

  அவன் சிலைக்கு பதிலாக சேதுபதி மன்னர்களான முத்துராமலிங்க சேதுபதி , விஜயபாஸ்கர சேதுபதி மற்றும் முத்திருளப்ப சேதுபதி ஆகியோரின் சிலைகள் நிறுவபடும்

  ஆம் இங்கு மறைக்கபட்டதும் புதைக்கபட்டதும் ஏராளம், எக்காலமும் இங்கு தமிழன் ஒரு இந்தியன் என்பதும் இந்திய மன்னர்களில் அவன் தனித்து இந்துவாக இருந்தான் என்பதும் வெளிவரகூடாது என்ற சதிகார சிந்தனை கொண்டோரின் வில்லதனங்கள் ஏராளம்

  சேதுபதி மன்னர்கள் ஏன் அணைகட்ட முயன்றார்கள் என்றால் கோவில்கள் அமைப்பதும் ஏரி குளம் வெட்டுவதும் அவர்கள் சேவையாய் இருந்தன‌

  அவர்களை பற்றி சொன்னால் இந்துபக்தி வளரும், தேசாபிமானம் பெருகும், இப்படிபட்ட நல்லவர்களை வெள்ளையன் பாடாய் படுத்தினான் என்ற வரலாறு வெளிவந்துவிடும் அதில் காங்கிரஸ் கொள்கையும், திராவிட சிந்த்தாந்தமும் பல்லிளிக்கும் என பல காரணங்களால் அது மறைக்கபட்டு வெள்ளையனே நல்லவன் அவனே அணைகட்டினான் என இங்கு நிறுவியும் விட்டார்கள்

  வரலாற்றில் எவ்வளவோ உண்மைகள் புதைக்கபட்டன, அதில் ஆழகிடப்பது முத்துராமலிங்க சேதுபதி, இருளப்ப பிள்ளை, விஜயபாஸ்கர சேதுபதி ஆகியோரின் உழைப்பும் மக்கள் அபிமானமும்

  முல்லைபெரியாரின் அடிதளத்தில் அவர்கள் மனம் புதைத்தது போல அவர்களின் பெயரை புதைத்துத்தான் பென்னிகுயிக் சிலை எழும்பி நிற்கின்றது

  ஒரு காலம் வரும், அன்று பென்னிகுயிக் சிலை வீழ்த்தபட்டு சேதுபதி பெயரும் சிலையும் கம்பீரமாக எழுந்து நிற்கும்

  முல்லை பெரியாறு அணைக்கே அந்த முத்திருளப்ப பிள்ளை பெயர் சூட்டபடும், ஆம் முதன் முதலில் அந்த அணை பற்றி மிக தீர்க்கமாக சொன்னவன் அவனே, அது அமைய காரணமும் அந்த நெல்லையின் பிள்ளையே

  ஆனாலும் புனேவில் பிறந்த பென்னிகுயிக் என்பவனுக்கு தமிழக அரசின் சார்பாக லண்டனில் சிலை என்பதெல்லாம் தமிழக மக்களால் ஏற்கதக்கவை அல்ல, தமிழ் இந்து மன்னன் பாஸ்கர தொண்டைமானை மறந்து அந்நியனுக்கு தமிழக மக்களின் செலவில் அதுவும் லண்டனில் சிலை என்பதெல்லாம் இங்கு அவசியமற்றது, அதுவும் இந்திய வரிபணத்தில் இந்தியருக்கு அணைகட்டி தரமாட்டோம் என வஞ்சித்த நாட்டில் இந்திய பணத்தில் பிரிட்டானியருக்கு சிலை வைக்க துடிப்பதெல்லாம் தேசபற்றும் அல்ல

  நல்ல வேளையாக தாஜ்மஹால் தமிழகத்தில் இல்லை, அப்படி இருந்திருந்தால் இந்நேரம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மத்தியில் ஷாஜகானுக்கு பெரும் சிலை எழும்பிகொண்டிருக்கலாம்

 15. 1947ல் சுதந்திரம் கிடைத்தாலும் 1949 வரை இந்தியாவுக்கென ராணுவம் இல்லை அது பிரிட்டனின் கட்டுபாட்டில் இருந்தது

  நிச்சயம் வெள்ளையன் வெளியேறும் பொழுதே இந்தியாவுக்கு ராணுவ அதிகாரம் கொடுக்கபட்டிருக்க வேண்டும் ஆனால் இந்தியாவினை நாசமாக்கி பிளக்கவேண்டும் எனும் நயவஞ்சக திட்டத்தில் இருந்த அந்த பிரிட்டன் அந்த அதிகாரத்தை கொடுக்கவில்லை

  நேரடி நடவடிக்கை என ஜின்னா இந்தியாவில் கலவரங்களை செய்தபொழுதும் இந்தியாவின் பிரிட்டிஷ் ராணுவம் களமிறங்கவில்லை

  1947ல் சுதந்திரம் என சொல்லி இந்தியா பாகிஸ்தான் பற்றி எரிந்தபொழுது இங்கு பாதுகாப்பு பிரிட்டன் கையில்தான் இருந்தது, அவர்கள்தான் பொறுப்பு. அந்த சண்டாளர்கள் நினைத்தால் தடுத்திருக்கலாம் , ஆனால் கொளுத்திவிட்டவன் அணைக்க வருவானா?

  இன்னொரு கோணமும் இருந்தது, இந்திய சுதந்திர போராட்டமும் ஆயுதமுனையில் அதை பிரிட்டானியன் அடக்கியதும் பெரும் வரலாறு, இந்தியா தன் மேல் திருப்பி பாய்ந்துவிட கூடாது என்ற தந்திரமும் அதில் இருந்தது

  பொதுவாக சில நாடுகள் சந்தேகத்துகிடமான நாடுகள் ராணுவம் வைக்க அனுமதிக்காது, ஜப்பான் ஜெர்மன் போன்ற பழைய தாதாக்கள் பாதுகாப்பு அமெரிக்க வசமே உள்ளது, எல்லாம் பயம்

  இந்தியாவினையும் அப்படி வைத்துகொள்ள பிரிட்டன் விரும்பியது, ஆனால் நாம் அடங்கவில்லை
  நேதாஜி வந்தாலும் வரலாம் என ஒரு அச்சமும் அவர்கள் காவலை நீட்டிக்க செய்தன

  நாம் சுதந்திரம் வாங்கி ஈராண்டுகள் கழித்தே நமக்கென ராணுவம் உருவாக்கபட்டு பிரிட்டனிடம் இருந்து நாட்டின் பாதுகாப்பினை தேசம் பெற்றது

  கரியப்பா எனும் தேசத்தின் தளபதி அதை பெற்றுகொண்டார், அது ஜனவரி 15ம் நாள்

  அன்றில் இருந்து இங்கு ராணுவதினம் கொண்டாடபடுகின்றது, 1949ல் இருந்து பாகிஸ்தானுடன் 4 போர்கள் சீனாவுடன் ஒரு நேரடி போர், பல தடவை மறைமுகமான போர் இன்னும் அண்டை நாடுகளில் அமைதி பணி, ஐக்கிய நாட்டு அமைதிபடையில் பணி என இந்திய ராணுவம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது
  193 குறிப்பிடதக்க நாடுகள் உள்ள உலகில் முப்படைகள், செயற்கோள் பலத்துடன் 4ம் பெரிய ராணுவமாக இன்று வலம் வருகின்றது இந்தியா

  ஆசியாவின் இரண்டாம் பெரிய ராணுவம் இதுதான்

  நாட்டின் பாதுகாப்பு ஒரு பக்கமும் உள்நாட்டில் ஏற்படும் இயற்கை சீற்றம் போன்றவற்றில் இன்னொரு பக்கமுமாக எந்நேரமும் தேசபாதுகாப்பில் இருக்கும் அமைப்பு அது

  அவர்கள் எல்லையில் காவலிருப்பதால் நாமெல்லாம் பாதுகாப்பாய் இருக்கமுடிகின்றது

  மலை உச்சி, பனி, பாலைவனம், கடல் , காடுகள் என இந்திய எல்லை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடன் இருக்க அதிலெல்லாம் நின்று தேசத்தை காக்கின்றன அத்தெய்வங்கள்

  இந்நாட்டினை காக்கும் கடமையில் உயிர்நீத்த தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இன்று நம்மை காத்து நிற்கும் அந்த வீரகணவான்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்

  வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

 16. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இரு நாட்களுக்கு முன் ஒரு விஷயம் கலங்கடித்தது

  பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சீன உளவுதுறை வளைக்க முயல்வதாகவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீன உளவாளியுடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தை அலற வைத்தார் சபாநாயகர்

  அவருக்கு விஷயத்தை சொன்னது பிரிட்டனின் உளவுதுறை எம்.ஐ 6

  எம்.ஐ6 என்பது பிரிட்டனின் ராணுவ உளவுதுறை என்றாலும் பல தகவல்களை சேகரிப்பார்கள், அப்படி சேகரித்த தகவலைத்தான் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு சொன்னார்கள்

  அவர்கள் தகவல்படி ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்ட லண்டன் வாசி பெண்ணான 58 வயது கிர்ஸ்டன் குய் லீ எனும் பெண்ணே அடையாளம் காட்டபட்டிருக்கின்றார்

  அவர் லண்டனின் வழக்கறிஞர் நிறுவணம் அமைத்து மனித உரிமை, சமூக நீதி என அழிச்சாட்டியம் செய்து மானுடம் வாழ பல பில்லியன் டாலரை வாரி இறைத்ததும் அதில் பல அரசியல்வாதிகளும் சிக்கியிருப்பதையும் ஆதாரத்தோடு சொன்னது லண்டன் உளவுதுறை

  அவருக்கும் சீனாவுக்கும் இருக்கும் தொடர்புகளெல்லாம் ஆவணமாய் இருக்கின்றன‌

  லண்டனில் பல குழப்பங்களுக்கு அம்மணி காரணம் என்பதையும் இன்னும் பல குழப்பங்களை ஏற்படுத்த அது திட்டமிட்டதும் தெரியவந்தது

  இப்பொழுது அம்மணி தலைமறைவு, பிரிட்டிஷ் பார்லிமென்ட் உறுப்பினர்களிடமும் விசாரணை ரகசியமாக நடக்கின்றது

  ஒரு வல்லரசு தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட இப்படியெல்லாம் செய்யும் இது ஒன்றும் ஆச்சரியமல்ல, ஒரு காலத்தில் அல்ல இன்றும் பிரிட்டன் பல நாடுகளில் செய்வதை அவர்கள் நாட்டிலே செய்திருக்கின்றது சீனா

  எனினும் சீனா இதனை தங்கள் வம்சாவழி பெண்ணை வைத்து அல்லாமல் பிரிட்டிஷ்காரனை வைத்து செய்திருக்கவேண்டும் சீனாவுக்கு கொஞ்சம் யோசனை குறைவுதான் என தோளை குலுக்கி கொள்கின்றன இதர நாட்டு உளவுதுறைகள்

  ஆனால் பிரிட்டிஷ்காரனை வளைப்பது சுலபம் அல்ல, அவன் என்ன இந்தியாவில் இருக்கும் சில கோஷ்டிகளா எளிதில் வளைவதற்கு?

  ஆக பிரிட்டனின் சீனா செய்த பல விஷயங்கள் வெளிதெரிகின்றன இதே போல் இந்திய பார்லிமென்டிலும் இந்தியாவில் இருக்கும் சீன கைகூலிகள் அறிவிக்கபடுவார்களா என எதிர்பார்ப்பதில் அவசியமில்லை

  காரணம் இந்திய நாடாளுமன்றத்தில் சொல்லித்தான் நமக்கெல்லாம் சீன கைகூலிகள் யாரென தெரிய வேண்டுமா என்ன?

 17. நாடார்களும் அகமதியர்களும்:-

  முதலில் அகமதியர்களை காண்போம்.

  உலக மக்கள், ஆய்வாளர்கள்:-
  உங்கள் கடைசி அகமது மிகவும் இழிச்செயல்களை செய்துள்ளார் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார், அவரை பின்பற்றுபவர்கள் மூலம் பல கோடி பெண்களை தவறான வழியில் எடுத்துச்சென்றுள்ளார். கோடானுக்கோடி மக்களை அழிக்கும் ஒரு சித்தாந்தத்தை தோற்றுவித்து செயல்படுத்தி சாதனை கண்டுள்ளார். சௌதி வரலாற்றில் கடைசி அகமது செய்தது அத்தனையும் மனித இனத்தின் அழிவுக்குதான் வழிகாட்டியுள்ளார்!?

  அகமதியர்கள்:- இல்லை இல்லை அவர் எங்கள் கடைசி அகமது. அவர் எங்களின் அழகிய முன் மாதிரி. அவர் எங்கள் உயிரினும் மேலானவர். அவரை பற்றிய உண்மைகளை கூறினால் வைத்து விடுவோம்.

  அடுத்து நாடார்களை காண்போம்.

  இமக, ஆய்வாளர்கள், ஆசிரியர்கள்:-
  உங்கள் நாடாரினம் முலைவரி கட்டியதாக எந்த ஏடும் இல்லை கல்வெட்டும் இல்லை எந்த தரவுகளும் இல்லையே!? எழுதிய அனைத்தும் 1950களுக்கு பிறகு, சுதந்திரத்தின் முன்னும் பின்னும் பிரித்தானிய நாட்டு கிருஸ்தவ அமைப்புகளின் ஆதரவில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் தான் முலைவரி கட்டியதாக உள்ளது. எந்த ஜாதியினரும் இப்படி ஒரு வரலாறு இருப்பதாக கூறவில்லையே? நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை மீண்டும் படித்துப் பார்த்து முலைவரி பொய் வரலாற்றை அகற்றிடலாமே!?

  தமிழ்நாடு நாடார் சங்கம்:- நீங்கள் எப்படி இதை பற்றி கூறலாம்? உங்களுக்கு எப்படி தெரியும் எங்கள் கஷ்டம்? வாகனத்திற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். குழந்தைகளுக்கு துணிமணி வாங்க வேண்டும். உண்ண உணவு வேண்டும். இதையெல்லாம் நீங்கள் தருவீர்களா? உங்களால் கேள்வி கேட்க முடியும். எங்களை யார் வாழ வைப்பார்கள்? எங்கள் முலைவரி வரலாறு உண்மை தான். நாங்கள் எங்கள் குடும்பத்து பெண்களின் முலையை வரிசையில் நிற்க வைத்து திறந்து காட்ட அனுமதிப்போம்‌. யாரோ எவரெல்லாமோ வருவார்கள், முலையை பிடித்து பார்த்து அளவெடுப்பார்கள், வரி விதிப்பார்கள். நாங்களும் ஆனந்தமாக முலைவரி கட்டி தான் வாழ்ந்து வருகிறோம். மீண்டும் இது போல் கேள்விகள் கேட்டால் எங்களிடம் உள்ள பெரிய பெரிய தலைவர்களை மேடையில் ஏற்றி மிரட்ட வைத்து எங்கள் முலைவரி கட்டிய பொய் வரலாற்றை ஏற்க வைப்போம். எங்கள் நூல்களை நாங்கள் ஏன் மாற்ற வேண்டும்? நாங்கள் வருடாவருடம் பல ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி விதவிதமாக பொய் வரலாற்று திணிப்பை எழுதத்தான் செய்வோம். நாங்கள் வயிறார உண்பது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நாடார்களை சீண்டிப்பார்க்காதீர்கள் (ஒற்றை விரலை உயர்த்தி சர்க்கரையால் வந்த விரல் ஆட்டத்துடன் மிரட்டிச்சென்றார் அந்த நாடார் இன பெருந்தலைவர்).

  முடிவுரை:-
  நாடாரினம் தன்மானம் நிறைந்த இனம். சௌதி அகமது இனம் தன்மானச்சிங்கங்கள் நிறைந்த தமிழர் இனம்.

 18. நானும் ஒரு சங்கிதான்

  கிரண் பேடி என்ற லஞ்சம் வாங்காத நேர்மையான, தைரியமான ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பாண்டிச்சேரியில் துணை நிலை ஆணையராக்கியது பாஜக அரசு. உடனே அவர் சங்கியாகிப் போனார்…

  நாட்டுக்காகவே யோசித்து மதத்தையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக, நேர்மையாக விளங்கிய, நாட்டின் ஏவுகணையின் தந்தை அப்துல்கலாம் அய்யாவை குடியரசு தலைவராக ஆக்கியது பாஜக. பிற்காலத்தில் அவரும் சங்கியாகிப் போனார்…

  வெளி உறவு செயலாளராக திறமையாக பல நாடுகளில் வேலை செய்தவர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் தூதரக அதிகாரியாக இந்திய அரசு அலுவலராக வேலை செய்தவர் திரு சுப்ரமணியம் ஜெய்சங்கர். அவரின் திறமையை பார்த்த மோடி அரசு நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவரையே வெளியுறவு மந்திரி ஆக்கியது. பிற்காலத்தில் அவரும் சங்கியானார்…

  மோடியின் தலைமைப் பண்பைக் கவனித்து இந்தியாவை மிக நெருங்கிய நட்பு நாடாக மாற்றிய அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூட சங்கி பட்டம் பெற்றார்…

  தமிழ்நாட்டில் பிறந்து டில்லியில் பொருளாதாரம் படிப்பில் MPhil முடித்து பின் லண்டனில் வசித்து திரும்பிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நிதி அமைச்சர் பதவி. அவரும் இப்பொழுது சங்கிதான்…

  விஜயகுமார் என்னும் மிக திறமை வாய்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியை, மூன்று மாநில போலீஸ் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருந்த வீரப்பனை சாதுரியமாக தூக்கிய காஷ்மீரின் சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் ஆக மிக திறமையாக பணியாற்றிய அவரை உள் துறை அமைச்சருக்கு ஆலோசகராக நியமித்தது பாஜக. அவரும் தற்போது சங்கி ஆனார்…

  அரசியலுக்காக, ஓட்டுக்காக காங்கிரஸ் அரசு அயோத்தி பிரச்சனையை வேண்டும் என்றே ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்தது. அதற்கு தைரியமாக முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூட சங்கி என்றே அழைக்கப்பட்டார்…

  கர்நாடகாவில் சிங்கம் என்று பெயர் எடுத்த லஞ்சம் வாங்காமல் மக்களுக்காகவே மக்கள் போலீஸ் என்று பெயரெடுத்த அண்ணாமலை என்பவர் அந்த ஐபிஎஸ் வேலையும் தாண்டி மக்களுக்கு நல்லது செய்ய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்தார். அது மோடி தலைமையிலான பாஜக என்று முடிவெடுத்தார் கடைசியில் அவரும் சங்கி ஆகிப் போனார்…

  அமுதா என்ற ஒரு சிறந்த நேர்மையான திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பிரதம மந்திரி அலுவலகத்துக்கு, டில்லிக்கு மாற்றியது மோடி அரசு. அதாவது நாட்டு நலனுக்கான சட்டங்களை துரிதமாக அமுல்படுத்த ஒரு சுறுசுறுப்பாக வேலை செய்யும் அதிகாரி தேவை என்ற காரணம் தான் அங்கே பணி அமர்த்தப்பட்டார். ஆனால் அவரும் சங்கியாகிப் போனார்…

  சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தான் தமிழ்நாட்டின் அனைத்து தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். அதன் பதவிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாகப் பெறப்பட்டு பணியமர்த்தப் படுகிறது என்ற தகவல் வர நேர்மையே வாழ்க்கையாகக் கொண்ட லஞ்சம் என்பதைத் தவிர்த்து வாழ்ந்து வந்த சூரப்பா என்பவரை பாஜக அரசு அண்ணா பல்கலை கழகத் துணைவேந்தர் ஆக நியமித்தது. கடைசியில் அவரும் சங்கி ஆகிப் போனார்.

  அவர் மேலேயே ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது ஊழலுக்கு புரையோடிப்போன திராவிட கட்சிகள்…

  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நல்ல திறமையும் அறிவும் நேர்மையும் தலைமைப் பண்பையும் கொண்ட மனிதர்களை இந்த பாஜக அரசு தேடித்தேடிப் பதவி வழங்கி அவர்களை மிகச் சிறந்த தலைவர்களாக முன்னெடுத்துச் செல்கிறது…
  ஆனால் அவர்கள் அனைவரும் சங்கி என்று நேர்மையில்லாத, காங்கிரஸ் குடும்பம், களவாணி திமுக குடும்பம், பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் குடும்பம், காஷ்மீரின் வளங்களை எல்லாம் ஒரே குடும்பமாக அனுபவிக்கும் பரூக் அப்துல்லா, கொல்கத்தா மமதை மம்தா, டன் கணக்கில் தங்கம் கடத்திய கேரள கம்யூனிஸ்ட் போன்றவர்களால் ஏளனம் செய்யப்படுகிறது…

  மேலே சொன்ன யாருமே பாஜக கட்சியின் பிதாமகன் அத்வானியின் குடும்பமோ, மோடியின் குடும்பமோ, வாஜ்பாய் குடும்பமோ, சுஷ்மா சுவராஜின் குடும்பமோ, அறும் ஜெட்லியின் குடும்பமோ அல்லது அமீத்ஷாவின் குடும்பமோ அல்ல. அனைவருமே திறமைசாலிகள், நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் என்ற அந்த ஒற்றைக் காரணம் தான்…

  நான் பாஜகவை ஆதரிக்க காரணமே இதுதான். இவர்களுக்கெல்லாம் நாடுதான் முக்கியம். இல்லாவிடில் இன்னேரம் அத்வானி தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவை உடைத்திருப்பார். முரளி மனோகர் ஜோஷி மோடி வடகிழக்கு பக்கமே வர முடியாதபடி செய்திருப்பார். பாஜகவில் குடும்பத்தை முன்னிறுத்தி கட்சி இல்லை. நாட்டுக்காக, கொள்கைக்காக குடும்பத்தையே கவனிக்காமல் வந்தவர்கள், இருப்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்குப் பெயர்தான் சங்கி…

  நாளை அமீத்ஷாவின் மகன் பிரதம மந்திரி ஆக முடியாது. ஆனால் அமித்ஷா குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தமிழ் நாட்டின் நிர்மலா சீதாராமன் அல்லது கர்நாடகா வின் தேஜஸ்வி சூரியா அல்லது அண்ணாமலை ஐபிஎஸ் கூட பிரதமர் ஆக முடியும் பாஜக ஜெயித்தால்…

  இப்படிப்பட்டவர்களே சங்கி எனும் போது நாமும் உரக்க சொல்வோம்…
  சங்கி
  நன்றி…..

 19. கோவாவில் 15ம் நூற்றாண்டில் நடந்த போர்த்துகீசியரின் புனித விசாரணை எனும் இன அழிப்பு கொடுமை…….
  ஹிட்லரும் இன்னும் பலரும் செய்த கொடுமைகளுக்கு கொஞ்சமும் குறையாதது, மிக மிக உக்கிரமானது, கிறிஸ்தவம் எவ்வளவு கொடூரமானது என்பதை வரலாற்றில் காட்டிய ரத்த சரித்திரம் அது

  1498ல் வாஸ்கோடமாகா இந்தியாவுக்கு மிளகுவாங்க வந்து கேரளா கள்ளிகோட்டையில் கால்வைத்தான் பின் மெல்ல தன் கால்களை வடக்கே கோவா பக்கம் வைத்தான்

  மதமாற்றம் அவர்கள் ரத்ததில் ஊறிய விஷயம், போப் எனும் அவர்கள் மன்னர் அதற்காகத்தான் அவர்களை கொண்டாடுவார் என்பதால் மதமாற்றுவதும் அதை காட்டி போப்பை சந்தோஷபடுத்துவதும் இந்த கம்பெனியாரின் வழக்கமாயிற்று, மதம் பெருக பெருக போப் மகிழ்ந்து சலுகை கொடுப்பார்

  வாஸ்கோடகாமா இதை கேரளாவில் செய்யும்பொழுது அவன் அடித்தே கொல்லபட்டான் , அவன் கல்லறை இன்றும் அங்கு உண்டு, அதன் பின் கோவா பக்கம் ஒதுங்கியது போர்ச்சுக்கல் கம்பெனி

  அங்கே அப்பொழுது பாமினி சுல்தான்களுக்கும் நாயக்க மன்னர்களுக்கும் பெரும் போர் நடந்தது, இந்துக்கள் தங்களுக்கு ஒரு உதவி வேண்டும் என்பதற்காக போர்த்துகீசியர்களுக்கு கோவாபகுதியினை கொடுத்தனர் அதுதான் இந்துக்கள் செய்த தவறு

  அங்கு காலூன்றிய போர்ச்சுக்கல் கம்பெனி மெல்ல தன் நரிதனத்தை பாமினிக்களிடம் காட்டி நாயக்க அரசுகளை ஏமாற்றி அங்கே நிலைத்து கொண்டது, பாமினிக்கு பின் அடில்ஷாஹி எனும் பிஜப்பூர் சுல்தானத்தில் ஒரு சிறிய பகுதியாக தன்னை நிறுத்தியது

  இந்நிலையில் இந்தியாவில் யூதர்களும் இருந்தார்கள், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஐரோப்பாவில் ஆகாது, யூதர்களை அடித்து கொல்லுதல் விரட்டுதல் கொன்றுகுவித்தல் என மிகபெரிய ரணகளம் நடந்தது, ஹிட்லர் அதை கடைசியாகத்தான் செய்தான்

  அப்பொழுது இந்துக்களும் இஸ்லாமியரும் யூதருடன் பகையில்லை என்பதால் இந்தியா யூதர்களுக்கு மிக நிம்மதியான நாடாக தோன்றிற்று இங்கு வந்தார்கள்

  அந்த யூத சண்டை இங்கும் தொடர்ந்தது

  இந்நிலையில் போர்ச்சுக்கல் கோஷ்டி மதம்மாற்றலில் தீவிரமாக ஈடுபட்டது, கோவா என்றல்ல அவர்கள் காலூன்றிய அன்றைய சென்னை (சாந்தோம் ஆலயம் பரங்கிமலை தோமா வருகை எனும் கட்டுகதையெல்லாம் அப்பொழுதுதான் பரப்பபட்டது) இலங்கை என எங்கெல்லாமோ பரப்பினார்கள்

  ஒரு கட்டத்தில் மதம்மாறிய இந்துக்கள் விழித்து கொண்டார்கள், இந்திய கலாச்சாரத்துக்கு நேரெதிரான வழக்கம் கொண்டதும், ஒரு தீர்க்கமான அறம் இல்லாததும் , பைபிளை தவிர எதையும் படிக்காதே என்ற முரட்டு கொள்கை கொண்டதுமான கிறிஸ்தவம் அவர்களுக்கு பொருந்தவில்லை

  மெல்ல மெல்ல கிறிஸ்தவத்தில் இருந்து விலகி தாய்மதம் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது அல்லது ரகசிய வழிகளில் இந்துக்களானார்கள்

  இந்த பின்னணியில் யூதரும் இதர சதிகளும் இருப்பதாக கருதிய போர்ச்சுக்கல் தன் கடும் முகத்தை காட்டிற்று

  கிறிஸ்தவதுரோகிகள் என முத்திரை குத்தபட்டு கிறிஸ்தவம் விட்டு விலகியோர் எல்லோரும், கிறிஸ்துவத்தில் இருப்போரும் “புனித விசாரணை” என கொண்டுவரபட்டனர்

  பின்னாளில் ஹிட்லர் செய்த அனைத்து கொடுமைகளும் அவர்களுக்கும் செய்யபட்டன, இந்து ஆலயங்கள் இடிக்கபட்டன, இந்து பூஸாரிகள் கோவாவில் கொல்லபட்டனர் அல்லது விரட்டபட்டனர்

  சொல்லமுடியா அக்கிரம்ங்கள் அரங்கேறின, அப்படி ஒரு கொடுமை இதுவரை வரலாற்றில் இல்லை

  உலகின் எல்லா சித்திரவதைகளும் அங்கு அரங்கேறின, கிறிஸ்துவத்தை புறக்கணித்தோரை கொல்வதும் அழிப்பதும் இறைபணி என கருதபட்டது

  பிராமண வெறுப்பு அன்றுதான் இந்தியாவில் தொடங்கிவைக்கபட்டது, அவர்கள் கொல்லவும்பட்டனர்

  சுமார் ஆயிரமாயிரம் மக்கள் கொல்லபட்டனர், அங்கம் இழந்தவர்கள் ஏராளம், கிறிஸ்வத்துக்கு எதிரான சதி என இந்திய இந்துக்கள் ஆடுமாடுகளை போல் அடித்து கொல்லபட்டும் இன்னும் எத்தனையோ சித்திரவதைகளயும் செய்து அந்த கொடுமை, மனதை என்றும் ரணமாக்கும் கொடுமை “புனித விசாரணை” என போப்புக்கு அனுப்பபட்டது அவரும் மகிழ்ந்தார்

  இக்காலத்தில்தான் இன்றும் தென்னகங்களில் கிறிஸ்தவ‌ தெய்வமாக கோவில் கொண்டிருக்கும் பிரான்ஸிஸ் சவேரியார் என்பவர் வந்திருகின்றார்

  ஆனால் மாபெரும் பாதகங்கள் நடந்தபொழுதும் இந்துக்கள் ரத்தம் கோவா எங்கும் வழிந்தோடும் பொழுதும் “இயேசு ரத்தம் சிந்தியது இதற்காக” என அமைதியாக கடந்து சென்றிருகின்றார்

  ஒரு துறவி இப்படியும் இருக்கமுடியுமா என்றால் அவரால் இருந்திருக்க முடிகின்றது

  மிகபெரிய கொடுமையினை அந்த கோவாவில் இந்துக்களுக்கு எதிராக அரங்கேற்றி நாடிபார்த்த போர்ச்சுக்கல் பின் புத்தமதம் ஜெயினமதம் என அதே கொடுமைகளை செய்தது

  பின் இஸ்லாமியரிடமும் அதை காட்ட அடில்ஷாஹிக்கள் வெகுண்டெழுந்து கடிவாளமிட்டார்கள்

  1640களில் எழும்பிய இந்துமாவீரன் சிவாஜி இவர்களை முழுக்க அடக்கி வைத்தான், ஒரு சிறிய பகுதியில் முழங்காலில் நிறுத்தினான், அவன் காலத்தில் கிறிஸ்தவர்கள் இந்துக்களாகும் பொழுது போர்த்துகீசியருக்கு எதிர்க்க வழி இல்லை

  ஆனால் 1750களில் மராத்தியருக்கும் மொகலாயருக்கும் தீராபோர் நடந்த காலங்களில் மறுபடியும் “புனித விசாரணை” தலை தூக்கிற்று பின் மெல்ல மெல்ல ஒழிந்தது

  சுதந்திர இந்தியாவிலும் கோவா தனி கிறிஸ்தவ அரசாக நீடித்தது, நேரு அந்த சலுகையினை வழங்கினார் பின் சீனபோரில் மொத்த இந்தியாவும் கண்டிக்க கோவா கைபற்றபட்டது

  இந்திய வரலாற்றில் மிகபெரிய கொடுமைகளை நிகழ்த்தியது தைமூர், நாடிர் ஷா இன்னும் அவுரங்க்சீப் என வரலாற்றில் இருந்தாலும் மிகபெரிய கொடுமையினை அப்பாவி இந்துக்கள் மேல் மதவெறியில் செய்தது போர்த்துகீசிய கோஷ்டிதான்

  ஜாலியன் வாலாபாக் கொடுமையோ இதர துவேஷ சித்திரவதைகளோ அதன் அருகில் கூட வரமுடியாது

  இது மிகபெரிய கொடுமை, பின்னாளில் ஜின்னா செய்த “நேரடி நடவடிக்கை” எனும் கலவரங்களை விட மிகபெரிய கொடுமை, மாபெரும் இன அழிப்பு

  அந்த வரலாற்றை வெகு சாதாரணமாக எழுதிவிட முடியாது

  ஒவ்வொரு இந்துவும் தங்களுக்கு யாருமில்லை என கதறி அழுத கொடுமை அவை, இந்துக்களின் குழந்தைகள் தாயின் கண்முன்னால் கதற கதற ஞானஸ்நானம் கொடுக்கபட்ட கொடூரம் அவை, இந்து எனும் ஒரே காரணத்துக்காக அவர்கள் உயிர்வரை இழந்த சோக வரலாறு அது

  வாள்முனையிலும் துப்பாக்கி முனையிலும் இந்துக்கள் கையாலே அவர்கள் கோவில்களை உடைக்க வைத்து அவமானபடுத்த வைத்து இன்னும் நினைத்து பார்க்கவே அஞ்சும் கொடூரம் அவை

  ஹிட்லர் யூதருக்கு செய்த கொடுமைகள் இந்த “புனித விசாரணை” எனும் கொடுமையில் கால் பங்கு கூட வராது

  ஐரோப்பிய யூதர்களை விட மிகபெரிய சித்திரவதையினை கிறிஸ்தவர்களிடம் பெற்றவர்கள் அந்த கொங்கன் கரை இந்துக்களே, வரலாறு அதைத்தான் சொல்கின்றது

  சாத்தானே அஞ்சி நடுங்கும் கொடுமைகளை கிறிஸ்துவின் பெயரால் அரங்கேற்றிய அக்கொடுமைகளை பின்னொரு நாளில் பார்க்கலாம், அதை எழுத நாம் தயார்

  ஆனால் அதை தாங்கும் அளவு உங்கள் மனம் பலமிக்கதா? என்பதுதான் விஷயம், அவ்வளவு கொடூரமான கொலைகளும் கலவரங்களும் கொள்ளைகளும் மனம் பதைக்கும் சித்திரவதைகளும் கொண்ட ரத்த சரித்திரம் அது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *