தி காஷ்மீர் ஃபைல்ஸ்: உள்ளத்தை உலுக்கும் உண்மை

“உள்ளம் என்பது ஆமை – அதில் உண்மை என்பது ஊமை” – கண்ணதாசன்

புலம்பெயர்ந்த காஷ்மீர பிராமணனான “கிருஷ்ணா பண்டிட்” JNU ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சி மாணவன். மாணவர் தலைமைக்கான தேர்தலில் போட்டியிட விரும்புகிறான். முப்பது வருடத்துக்கு முந்தைய அவன் வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் நடந்த அவன் அறிந்திராத சம்பவங்களும் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடப்பு நிகழ்வுகளும் தான் காஷ்மீர் கோப்புகள் Kashmir Files திரைப்படம். இரு கால சம்பவங்களும் மாற்றிமாற்றிப் பின்னப்பட்டு non -linear விதமாக திரைக்கதை காண்பிக்கப்படுகிறது.

இப்போது 33 வருடம் பின்னோக்கி செல்வோம். உங்களுக்கு “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி. காஷ்மீரில் வைஷ்ணோதேவி கோவிலில் இன்று நடைபெற்ற திருமண வைபவத்தில் புகுந்த தீவிரவாதிகள், மணமக்கள் உட்பட 63 பேரைச் சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கர் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்” நினைவு வருகிறதா? அதே காலம்தான். அதே இடம்தான். அதே கதைமாந்தர்கள் தான். மாணவன் கிருஷ்ணா அப்போது கைக்குழந்தை. அவன் தாத்தா புஷ்கர்நாத் பண்டிட் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். புஷ்கர்நாத்தின் மகனும், மருமகளும், பேரன் சிவா, கைக்குழந்தை கிருஷ்ணா ஆகியோர் மற்றும் சுற்றமும், நட்புமே கதை மாந்தர். இனி கதைக்குப் போவோம்.

புராண நாடக ஒத்திகைக்காக, சிவபெருமான் வேடமாக அரிதாரம் பூசிக்கொண்டு தயாராகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் புஷ்கர் நாத். அந்த நேரத்தில் வீட்டில் அவர் மகன் பக்கத்து வீட்டு பணக்கார இஸ்லாமிய சகோதரரிடம் “அண்ணா, நிலைமை சரியில்லையாமே?” என்று விசாரிக்க, அதற்கு இஸ்லாமிய சகோதரர் “பயப்பட ஒன்றுமில்லை, ஒருவாரம் இங்கே இருப்பதைத் தவிர்த்து வேறெங்காவது சென்று தங்கிக்கொள்ளுங்கள் . பிறகு பிரச்னைகள் குறைந்தவுடன் வரலாம்” என்று சொல்கிறார். யாசின் மாலிக்கின் தலைமையில் பயங்கரவாத முஸ்லீம்கள் துப்பாக்கியோடு வந்து கதவைத் தட்டுகின்றனர். கணவனை அரிசித் தாழிக்குள் ஒளிந்துகொள்ள வைத்துவிட்டு கைக்குழந்தையோடு சென்று கதவைத் திறக்கிறாள். கொல்ல வந்த இலக்கைக் காண முடியாத பயங்கரவாதிகளிடம் ஒளிந்துள்ள இட த்தை சமிக்ஞை செய்கிறார் பக்கததுக்கு வீட்டு இஸ்லாமிய சகோதரர் . அவருக்கும் ஆசையிருக்காதா, பணம் உள்ள நமக்கு ஆப்பிள் மாதிரி இன்னொரு மனைவி கிடைக்க வேண்டும், சொத்தும் இரட்டிப்பாக வேண்டும் என்று? அரிசித்தாழியில் துப்பாக்கி ரவைகள் துளையிடுகின்றன. வீட்டுக்குள் நுழைகிறார் புஷ்கர்நாத் பண்டிட். “அடப்பாவி, என் மகனைச் சுட்டுவிட்டாயா? என் மாணவன் என்பதை நீ மறந்துவிட்டாயா, நான் உன் வாத்தியார், புஷ்கர்நாத் பண்டிட்” . யாசின் மாலிக் பதில் சொல்கிறான்: “அதனால்தான் உன்னை உயிரோடு விடுகிறேன். உன் பேரன் கிருஷ்ணாவை உயிரோடு விடவேண்டுமென்றால், உன் மருமகளை இந்த ரத்த அரிசியை தின்னச் சொல்” … முப்பது வருடத்துக்குப் பின் கிருஷ்ணா JNU தேர்தலில் போட்டியிட தயராகிக் கொண்டிருக்கிறான்.

பெரிய பொட்டுடன் வேஷமிட்டிருக்கும் பெண் பேராசிரியர் (அருந்ததி ராய்?) தேசப்பிரிவினை பேசுகிறார். “மாணவர்களே சிந்தியுங்கள்..காஷ்மீர பிராமணர்கள் பணக்காரர்களாக இருந்துகொண்டு முஸ்லீமகளை ஏமாற்றினார்கள். உணவில்லாத ஏழை முஸ்லீம்களை அடிமைப்படுத்தி, அவர்களின் குழந்தைகளையும் இந்திய ராணுவம் பிடித்துக்கொண்டு போனால், முஸ்லீம்கள் சும்மாவா இருப்பார்கள்? அவர்களும் மனிதர்கள்தானே, அதனால்தான் தங்கள் இயலாமையை காஷ்மீர பண்டிதர்கள் மேல் திருப்பிவிட்டார்கள்”. “கிருஷ்ணா ‘பண்டிட்’? உன்னால் உயர்சாதிப் பெருமையை விட்டு இதரரை சமமாக பாவிக்க முடியாதில்லையா? ‘முடியும்’ என்றால் ‘விடுதலை’ என்று முழக்கமிடு பார்க்கலாம்?” என்கிறார். கிருஷ்ணா சங்கடத்துடன் “விடுதலை வேண்டும்” என முழங்குகிறான். “நான் உன்னை நம்புகிறேன் கிருஷ்ணா. நாளைக்குப் பத்திரிகையில் ‘காஷ்மீர பிராமணன் கிருஷ்ணா பண்டிட் , இந்தியாவில் இருந்து விடுதலை வேண்டும் என முழக்கம்’ என்பது வெளியாகும் என்கிறார்.

கிருஷ்ணா வீடு திரும்புகிறான். தன் தாத்தா புஷ்கர்நாத்திடம் முஸ்லீம்களின் அவலநிலையையும், எழுச்சியின் நியாயத்தையும் சொல்லி வாதாடுகிறான். புஷ்கர்நாத் இத்தனை நாளாக அவனிடம் அவன் பெற்றோரும் அண்ணனும் சாலை விபத்தில் இறந்ததாக சொல்லி மறைத்து வந்திருக்கிறார். உண்மையை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அவர் மனம் பிறழ்கிறது . சில நாட்களில இறக்கிறார். அவர் அஸ்தியை அவர் விருப்படி கரைக்க அவரின் பூர்விக வீட்டுக்கே செல்ல தயாராகிறான். எந்த வீட்டில் அவன் தந்தை சுட்டுகொல்லப் பட்டாரோ அதே வீடு. “கிருஷ்ணா, தேர்தல் முக்கியம் போகாதே, நம் விடுதலையின் நம்பிக்கை நட்சத்திரம் நீ” என்கிறார் தேசப்பிரிவினை பேராசிரியர். “சரி போய்த்தான் தீருவாய் என்றால், என் நண்பரான காந்தியவாதியும், விடுதலை போராட்ட வீரருமான யாசின் மாலிக்கிடம் சொல்கிறேன் அவர் உன்னைக் கவனித்துக்கொள்வார்”.

காலமானதை அறிந்த புஷ்கர்நாத்தின் நெருங்கிய நண்பர்கள் – காஷ்மீரில் அரசுப்பதவியில் இருந்தவர்கள் – நால்வர் சந்திக்கிறார்கள். பூர்விக வீட்டின் அடையாளம் தெரியுமாகையால் அவர்கள் கிருஷ்ணாவை அழைத்துக்கொண்டு புஷ்கர்நாத்தின் வீட்டுக்கு செல்லத் தயாராகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அரசுப்பணியில் அதிகாரியாகவும், போலீஸ் கமிஷ்னராகவும், டாக்டராவும் இருந்ததால் அவர்களுக்கு கிருஷ்ணாவின் தாத்தாவும், அம்மாவும், அண்ணன் சிவாவும் ஜம்முவில் தேளும், பாம்பும் கொண்ட கூடாரங்களில் வசித்ததையும், வெறும் 600 ரூபாய் பணத்தை அரசு அவர்களுக்கு கொடுத்ததில், மருந்து, உணவு வாங்க முடியாமல், உடல் நலம் குன்றி நடைப்பிணமாக வாழ்ந்த பாதிபேர் கூடாரத்திலேயே மடிந்ததையும் நன்கறிந்தவர்கள். கிருஷ்ணாவிடம் எந்த உண்மையையும் சொல்லாமல் ஊமை மாதிரி இருக்க வேண்டும் என ஒப்பந்தம். failure of collective conscience – அவர்களை துளைத்து எடுக்கிறது. மது கொடுத்த தெம்பில் நினைவில் இருந்து இறக்கி வைக்கிறார்கள்.அகதியான ஹிந்துக்களுக்கு 500 ரூபாய் தரும் அரசு அதே நேரத்தில் காஷ்மீர பயங்கரவாதிகளை சாந்திப் படுத்த பணத்தை இறைத்து செலவு செய்கிறது.

வாசகர்களுக்கு நினைவிருக்கலாம், யாசர் அரபாத் தின் மிகப்பெரிய நம்பிக்கையாக ராஜீவ் காந்தி திகழ்ந்தார். ராஜீவ் காந்தி, பரூக் அப்துல்லா, முப்தி முகமத் ஸையித் எல்லோரும் பாலஸ்தீன அகதிகளுக்காக உருகினார்களேயன்றி ஹிந்து அகதிகளுக்காக இல்லை. அகதிமுகாம் அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு சொந்த நாட்டில் அகதியான சிவா (கிருஷ்ணாவின் அண்ணண் ) செல்கிறான். அங்கும் தொப்புள்கொடி உறவான மௌல்வி ஆசிரியர்கள் மதம் மாறவில்லை என்றால் கொல்லவேண்டும், “”ஹிந்துக்களே அமைதி மார்க்கத்துக்கு மாறுங்கள்; இல்லையேல் உங்கள் பெண்களையும், சொத்துக்களையும் எங்களுக்கு விட்டுச்செல்லுங்கள்; அல்லது சாகுங்கள்”” என்று இளம் சிறார்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். விசாரிக்க செல்லும் கிருஷ்ணாவின் அன்னையை “உன் மகனுக்கு ஆபத்து வராமல் இருக்க என்னை மணந்துகொள் ” என்று கூசாமல் கேட்கிறார் அந்த இஸ்லாமிய சகோதரரான ஆசிரியர். பேராசை நிராசையான ஆத்திரத்தில் பயங்கரவாதிகளை ராணுவம் இல்லாத தருணத்தில் வரவழைக்கிறார் அந்தத் தொப்புள் கொடி உறவு.

பலவருடங்கள் கழித்து மன்மோகன் சிங் ஆட்சியில் டிவி ஸ்டேஷனுக்கு பேட்டியளிக்கும் யாசின் மாலிக் “ஒரு முப்பது பேரைக் கொன்றிருப்பேன்” எனச் சொல்கிறான். மன்மோகன் சிங்குடன் விருந்தில் கலந்துகொள்கிறான்.

இப்படியாக அவர்களின் மனக்கண் முன்னே கதை விரிகிறது.

சூழ்நிலைக்கைதியாகவும், ஆற்றாமையிலும், கண்முன்னே நடந்த அவலங்களை பார்த்தும் எதுவும் செய்யாது விட்ட ஆற்றாமையினாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதில் அரசு அதிகாரியாக இருந்தவர் பிரம்மா தத் படுகொலையில் பத்திரிகை செய்திகளை சேகரித்து காஷ்மீர கோப்புகளாக வைத்துள்ளார். அவரிடமிருந்து பல உண்மைகள், தத்துவங்கள் வெளிவருகின்றன. இஸ்லாமிய போலீசும், இஸ்லாமிய தலைவர் பரூக் அப்துல்லாவும் தீவிரவாதிகளுக்கு சாதகமாக நடந்துகொள்வது அதில் ஒன்று. தீவிரவாதி மாட்டினால், முஸ்லீம் அரசியல்வாதியின் மகள் கடததப்பட்டதாக நாடகமாடியாவது தீவிரவாதியை விடுவிக்கும் தொப்புள்கொடி உறவு, என பல தத்துவங்கள்.

மேலும் கதையை மறக்காமல் சினிமா அரங்கிற்குச் சென்று பார்க்கவும், உண்மையையும் பார்க்க விருப்பம் இருந்தால். காஷ்மீரக் கோப்புகளை கிருஷ்ணா பார்க்க நேருகிறதா? தேர்தலில் என்ன செய்கிறான்? என்பதெல்லாம் தெரிய வேண்டும் இல்லையா. நான் சொன்னது வெறும் கால்வாசி கதைதான்.

அனுபம் கேர் நன்றாக புஷ்கார்நாத் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிறருக்கு நடிப்பு நன்றாக இருந்தாலும் வேஷம், மேக்கப் – 30 வருடத்தைய மாற்றங்களைக் காண்பிப்பதாக இல்லை. பொதுவாகவே மும்பையை சேர்ந்த இஸ்லாமிய நடிகர்கள், தங்களுக்குப் பிடிக்காத நடிகர்களை கொலை செய்யக்கூடியவர்கள் ஆதலால் இதை நடிக்க ஆட்கள் கிடைத்ததே அதிகம்.


இந்த சினிமா வசனங்கள் மானமுள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். what you take home is this:

“ஏழ்மையினாலும், துன்புறுத்தப்பட்டதாலும் முஸ்லீம்கள் பயங்கரவாதி ஆனார்கள் என்றால், அதைவிட அதிகம் பட்ட காஷ்மீர ஹிந்துக்கள் ஒருவர்கூட ஏன் பயங்கரவாதி ஆகவில்லை?”

“பொய்யை ஏற்றுக்கொள்ள பயம் போதுமானது. உண்மையை ஏற்றுக்கொள்ள தைரியம் வேண்டும்”

“தீவிரவாதிகளில் பாதிபேர் போன தலைமுறையில் மதம் மாற்றப்பட்டவர்களின் மகன்கள்தான் – பாகிஸ்தானியர் அல்ல”

“பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டது உண்மையை எழுதியதற்கு அன்று. உண்மையை மறைத்ததற்கு”

வாசகர்கள் இந்த சினிமா பார்த்து, அவர்களுக்குப் பிடித்த வசனம் எது என கமெண்டில் எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்.


சினிமா முழுதும் படுகொலைகளைக் காட்டினாலும், நல்லவேளையாக கற்பழிப்பு, கணவனைக்கொன்று பின் மனைவியைக் கற்பழித்தல், மகள்களைக் கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு சென்ற நிகழ்ச்சிகள், ஹிந்துகணவனைக் கொன்று, மனைவியைக் கொன்றவனும், மகளை அவன் தம்பியும் நிக்காஹ் செய்துகொள்ளல் போன்ற நடந்தவை படமாக்கப் படவில்லை.

இந்தப் படத்தில் ஒரு குறை படுகொலைகளை மட்டுமே காண்பித்தது, பயங்கரவாதமே இல்லாமல் இனப்படுகொலை செய்ததை காண்பிக்காததுதான். அன்பாக நடித்தே கொலைசெய்வார்கள் என்பதையும் காட்டியிருக்கலாம். உதாரணத்துக்கு லவ் ஜிஹாத். அல்லது ஹிந்துக்கள் பேங்கில் போட்ட பணத்தைப் போலிக் கையெழுத்துப் போட்டு முஸ்லீம் மேனஜர் எடுத்துத் தீவிரவாதிகளிடம் கொடுத்தல், பள்ளியில் அன்பாகப் பேசி “எங்களில் ஜாதியில்லை. நான் தாழ்ந்த ஜாதி என்றுதானே என் காதலை நிராகரிக்கிறாய்? நீயே முடிவு செய்” என்று மணமாற்றுதல் etc . (இதை தமிழ்நாட்டில் ஹிந்துவாகவே இருப்பதாக கட்டிக்கொள்ளும் பிற ஜாதியினரும், கிறிஸ்தவர்களும் கூட செய்கிறார்கள்).

படம் பார்க்கப் பார்க்க “silence of the lambs ” என்ற வாக்கியம் என் மனதில் வந்து கொண்டே இருந்தது. இது பிராமணர்களிடம் உள்ள வியாதியாகவே கருதுகிறேன். அவர்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தாமல் “வெளியே தெரிந்தால் அசிங்கம்” என மூடி மறைக்கிறார்கள் – அது ஆபத்தையே வரவேற்கிறது. எதிரிகளுக்கு தைரியத்தையும், பிறருக்கு உதாசீனத்தையும் ஏற்படுத்துகிறது.

நிரம்பிய கொட்டகையில் சினிமா முடிந்து வெளிவந்தவர்கள் சிலர் தலை வலிப்பதாக சொன்னார்கள். எனக்கு சிலநாட்களாக “இப்படுகொலைகள் நடந்த சமயம் நானும் என்ன கிழித்துவிட்டேன்” என்ற குற்றவுணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த காஷ்மீரப் பாட்டி (2008) – கார்கில் ஜெய் முன்பு எழுதிய கட்டுரை.

5 Replies to “தி காஷ்மீர் ஃபைல்ஸ்: உள்ளத்தை உலுக்கும் உண்மை”

  1. பங்குத் தந்தையா்களுக்கு பறங்கிச்சிகளுக்கும் பிறந்த போலித் தமிழா்களின் தமிழின அழிப்புகள்.

    2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த அறுபதிற்கும் மேற்பட்ட(60) சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள்.

    2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு அலிக்கம்பை தமிழ் கிராமத்தை கத்தோலிக்க கிராமமாக மாற்றி அமைத்து சகல சைவ ஆலயங்களையும் உடைத்து எறிந்தாா்கள்.

    2019 ம் ஆண்டு கத்தோலிக்க மதத்தை சோ்ந்த செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க குண்டர்கள் வற்றிக்கானின் நிகழ்ச்சி நிரலின் கீழ் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் சிவன் ஆலயத்தின் சிவவளைவை உடைத்து எறிந்தாா்கள்.

    தமிழர்களின் உயிாிலும் மேலான நந்திக் கொடிடயை 2019 ம் ஆண்டுதிருக்கேதீஸ்வர ஆலய வாசலில் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் தீய் மூட்டினாா்கள் கத்தோலிக்க மதத்தை சோ்ந்த செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க குண்டர்கள்.

    2020 ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டம் தாளையடியில் ஆலய வழிபாட்டிற்கு தடை விதித்தாா்கள்.

    சிங்கள போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது, சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது என்று கூறிக் கொண்டு தமிழின் ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள்,

  2. இந்த ஐம்பெரும் காப்பியம் ஐங்குறு காப்பியம் அணிந்தவள் தமிழன்னை என்பதெல்லாம் அதே திராவிட கூப்பாட்டின் இன்னொரு வடிவம்

    அதெல்லாம் தமிழன் இந்து அல்ல என செய்யபட்ட ஏற்பாடு

    இந்த ஐம்பெரு காப்பியமும் ஐங்குறு காப்பியமும் முழுக்க சமண, பவுத்த இலக்கியங்கள். தமிழின் கம்பனுக்கோ ஒட்டகூத்தனுக்கோ அருகில் கூட அவை வரமுடியாது

    இங்கு கம்பராமாயணமும் பெரிய புராணமுமே இரு கண்களாக இருந்தன கம்பனுக்கு முன் ஒளவை இருந்தாள் இன்னும் எத்தனையோ புலவர்களெல்லாம் இருந்தார்கள்

    இந்த ஐம்பெரு காவியம் ஐங்குறு காவியமெல்லாம் எவன் வகைபடுத்தினான் என்றால் தமிழன் இந்து அல்ல என யார் நிறுவ முயன்றானோ அவனின் அடிபொடிகள் உருவாக்கிய பிம்பம்

    இதனை முதலில் ஒழித்து தமிழன் பவுத்தனோ சமணனோ அல்ல அதற்கு முன் தொல்காப்பியனும் அகத்தினும் ஒளவையும் வளர்த்த இந்து, தமிழ் இந்து என்பதை நிறுவுவதே ஒவ்வொருவரின் கடமையாகின்றது

  3. பாரதத்தின் ஆணிவேரான இந்துமதம் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு குணங்களை சொன்னது, அந்த ஒவ்வொரு அவதாரத்தி வாழ்வும் மானிடன் பின்பற்ற வேண்டிய வழிகளை சொன்னது

    அப்படி மானிடன் மானிடனாக வாழ, மகன் மாணவன், மூத்த அண்ணன், நண்பன், வீரன், அரசன், கணவன், தந்தை, ஆட்சி நிர்வாகி என மானிட வாழ்வின் பாத்திரங்களுக்கெல்லாம் உதாரணமாக ஒரு உதாரண புருஷனை அனுப்பிற்று

    அந்த பரமாத்வாவின் வடிவம் என்றாலும் கடைசி வரை தன் தெய்வீக சக்தியினை பயன்படுத்தாமல் மானிட வாழ்வில் துன்பமும் இன்பமும் பிரிவும் தவிப்பும் அழுகையும் கண்ணீரும் தவிர்க்கமுடியாதவை, தர்மத்தை நிலை நாட்டுதல் ஒன்றே மானிடரின் பணி

    எந்த கடமையில் மானிடன் இருப்பானோ அந்த தர்மத்தை காப்பதே அவன் கர்மா, அதை திறம்பட செய்தலே வாழ்வு என பெரும் தத்துவத்தை காட்டி சென்றவன் அந்த ஸ்ரீமன்

    பூலோகத்தில் பிறந்துவிட்டால் தெய்வமும் தப்பமுடியாது பூலோக கர்மாவினை அது சுமந்தே தீரவேண்டும் என்ற பெரும் தத்துவத்துக்கும் உதாரணமானவன் அந்த ஸ்ரீமன்

    அதர்மம் தலைதூக்கும் பொழுதெல்லாம் அவதாரமாய் வந்து அதை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது என்பது பரமாத்மா ஏற்றுகொண்ட சுதர்மம். யுகம் யுகமாக அப்படித்தான் இவ்வுலகை அவன் காத்து வருகின்றான்
    பூமியில் அக்கிரமங்கள் மிகும்பொழுதெல்லாம் அதை சரியாக செய்யும் பரமாத்மா, தன் 7ம் அவதாரமாக ராமனாக இறங்கி வந்தார்

    அக்காலம் கடுமையானதாய் இருந்தது, வாலி முதலான கூட்டம் ஒருபுறம், தாடகை முதலான அரக்கியர் ஒருபுறம், யாராலும் வீழ்த்தமுடியா ராவணன் ஒருபுறம் இன்னும் எண்ணற்ற அரக்கரும் அங்காரர்களும் கொடியவர்களும் உலகை படாதபாடு படுத்திய நேரமிது

    உதாரணம் சொல்லும் அளவு ஒரு நல்லவன் வரமாட்டானா, எக்காலமும் அவன் பெயர் சொல்லும்படி ஒரு தர்மவீரன் உருவாக மாட்டானா என பிரபஞ்சமே ஏங்கிய நேரமது

    அப்பொழுதுதான் ராமபிரான் அவதரித்தார்

    அவதாரங்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்லை வந்தவைதான், ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு நோக்கம் உண்டு, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ராம அவதாரம்

    ராமவழிபாடு என்பது கம்பன் தொடங்கிவைத்தது அல்ல, அது பற்றிய குறிப்புகள் புறநானூறு முதல் மகா பண்டைய இலக்கியம் வரை உண்டு, முருக வழிபாடு போலவே ராமன் வழிபாடும் இங்கு மகா பழமையானது
    அயனம் என்றால் வழி என பொருள், ராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று.

    கம்பன் இப்படி சொல்கின்றான் அவன் வரியில் தொடங்கலாம்

    “மும்மைசால் உலகுக்கெல்லாம்
    மூல மந்திரத்தை முற்றும்
    தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
    இம்மையே, எழுமை நோய்க்கும்
    மருந்தினை இராமன் என்னும்
    செம்மைசேர் நாமம் தன்னை
    கண்களில் தெரியக் கண்டான்”

    இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம், அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது வால்மீகி சொன்னது

    நாரத முனி வால்மிகிக்கு ராமனின் 16 கல்யாண குணங்களை போதித்தார், இன்றளவும் ராமன் ஏன் பூரணமான நிறைவுள்ளவன் என்பதற்கு அந்த வரிகள்தான் சாட்சி

    “வால்மீகி அவன் குணவான், பெரும் வீரன், தர்மபடி நடப்பவன், அவன் எக்காலமும் நன்றி கொண்டவன்,
    சத்திய வார்த்தை மட்டும் பேசுபவன், கர்மத்தை நிறைவேற்றும் வைராக்கியம் கொண்டவன், நடத்தையில் பரிசுத்தமானவன் , எல்லா உயிரையும் சரியாக நடத்துபவன் மனிதருக்கும் விலங்குக்கும் கூட வித்தியாசம் காட்டா பெருந்தன்மையானவன்

    அவன் எல்லா கலைகளையும் கற்றவன், யாரும் செய்யமுடியா சாதனைகளை எளிதாக செய்பவன், அவன் எந்நிலையிலும் பெரும் மகிழ்வோ அதிக கவலையோ கலக்கமோ கொள்ளாமல் மலைபோல் இயல்பில் இருப்பவன், அவன் மிக தைரியமானவன்

    கோபத்தை அவன் வென்றவன், மிக நுட்பமான அறிவுடையவன், எதிரிகள் யாரும் இல்லாதவன், வலியயுத்தம் செல்லாத அவன் அதற்கு அழைப்பவனை எதிர்கொள்ள தயங்காதவன் அவனை யுத்தத்துக்கு அழைத்தால் தேவர்களும் அஞ்சும் பராக்கிரமசாலி”

    ராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடும் தாங்காது, உலகமும் தாங்காது. காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் , அவன் புகழை மானிட குலம் பாடுவற்கும் காரணம்
    வாழ்வின் ஒவ்வொரு பக்கதுக்கும், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணம்
    அவன் வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தான், உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான். மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டினான்.

    அப்படி சோகமும் பரிதாபமும் கண்ணீரும் நிறைந்த வாழ்வு அவனுடையது, ஆயினும் ஒரு நொடியிலும் அவன் தன்நிலை தவறவில்லை

    மானிடன் எப்படி கர்மமே சுதர்மமாக கொண்டு வாழவேண்டும் என வாழ்ந்த தத்துவம் அவனுடையது
    சகோதர்களுடன் தாய்களுடனும் தந்தையின் ஒப்பற்ற பாசத்தில் வளர்ந்தவன் அவன், அவனின் குருமார்களுக்கு அருமை சீடன் அவன்

    அந்த வில்லை கூட சீதைக்காக அவன் உடைக்கவில்லை, விசுவாமித்திரர் சொன்னார் என்பதற்காக‌ உடைத்தான் சீதைக்கு மாலையிடுவதை கூட‌ தசரதனே முடிவு செய்வான் என ஒதுங்கி நின்றான் ராமன்
    ஆம் சீதை ராமனுக்கு நிச்சயம் செய்யபட்டவள் அல்ல, ஆனால் அவள் ராமனை மணந்து அவன் வழியேதா
    ன் ராவணனுக்கு முடிவுகட்ட வேண்டும் எனும் தர்மத்தின் திட்டம் விசுவாவித்திரர் மூலம் அழகாக ஆடியது
    பெரும் அழகியும் அரசியுமான சீதையினை அடையும் பந்தயத்தில் வென்றபின்பும் தந்தையினையே அவன் நோக்கினான்

    தந்தை அனுமதித்தபின்பே அந்த சீதையினை தன் ஒரே மனைவியாய் ஏற்றும் கொண்டான்

    மறுநாள் பட்டாபிஷேகம் எனும் நிலையில் அவன் அரசு மறுக்கபட்டபொழுது, அவன் கானகம் செல்லவேண்டும் என தசரதன் சொன்னபொழுது “யாருக்கு என் அரசை கொடுக்கின்றேன்? என் தம்பிக்குத்தானே” என பெருமையாக சொல்லி கானகம் புகுந்த அவனை அயோத்தி வணங்கி நின்றது

    ராமன் சென்ற இடமெல்லாம் தர்மங்கள் அரங்கேறின, அரக்கர் கூட்டமும் ஆணவமும் ஒழிந்தது, தர்மத்தை அவன் அப்படி காத்தான்

    பெண்கள் மேல் அவனுக்கு தனி இரக்கம் இருந்தது,

    சூர்ப்பநகையின் காதலை அவன் மறுத்து அவளுக்கு போதனையே செய்தான், இது முறையன்று என் இயல்புமன்று என எவ்வளவோ போதித்தான் .

    (ஆனால் சீதை இருக்கும்வரை தன் காதலை ராமன் ஏற்கபோவதில்லை என அவளை கொல்ல முயன்ற சூர்ப்பநகையினை லக்குவனே மூக்கறுத்து விரட்டினான்)

    தாடகையினை கொல்லுமுன் கூட விசுவாமித்திரரிடம் ஒரு பெண்ணை கொல்வது தர்மமாகாது என அஞ்சி வேண்டுகின்றான் , “மானிட குலத்துக்கு எதிரான , தர்மத்துக்கு எதிரான அக்கிரமிகளில் ஆண்பெண் பேதமில்லை” என அவன் குரு விளக்கிய பின்பே அவன் அவளை வதைக்கின்றான்

    கல்லான அகலிகை அவனால் உயிர்பெற்றாள் அப்பொழுதும் ஏற்க மறுத்தான் அவள் முனி கணவன்

    அவனிடம் “கவுதமா முக்காலமும் உணர்ந்த உனக்கே எது பொய்கோழி என தெரியவில்லையே, அவளுக்கு எப்படி வந்தவன் முனிவன் என தெரியும்?” என அவன் சொன்னபொழுது மன்னிப்பு கேட்டு அகலிகையினை ஏற்றான் முனிவன்

    மானிடருக்கு இருக்க வேண்டிய மிகபெரும் குணம், தர்மமும் நியாயமும் கலந்த குணம் அவனுக்கு இருந்தது, அது எல்லா உயிர்மேலும் அன்பு.

    ஆம் குரங்குகளை தனக்கு சமகாக அமர்த்தியவன் அவனே

    கழுகு என்றாலும் ஜடாயுவுக்கு தன் உடன்பிறந்தவன் போல் காரியம் செய்தவனும் அவனே

    தன்னை அறியாமல் அம்பால் குத்தபட்ட தேரைக்கும் அவன் கண்ணீரோடு அருள்பொழிந்தான் என்கின்றது ராமாயணம்

    இதனாலே வானர கூட்டம் அவன் அடிபணிந்தது, அனுமன் தான் கண்ட மனித கடவுளாகவே அவரை வணங்கினான், கடைசி வரை கூடவே இருந்தான்

    அந்த இலங்கை போரில் கூட ராவணன் திருந்த கடைசி வரை சந்தர்ப்பம் கொடுத்தான், “இன்று போய் நாளை வா” என அவன் சொன்னது கடைசி இரவிலாவது அவன் திருந்த்மாட்டானா எனும் ஒரு நம்பிக்கையன்றி வேறு என்ன?

    ராமனின் விஷேஷ குணங்களில் முதலாவது அரசுக்கு ஆசைபடாதது.

    முதலில் தம்பி பரதனுக்கு ஆட்சியினை விட்டு கொடுத்தான்

    வாலியினை வீழ்த்தியபின் கிஷ்கிந்தா ராமனுக்கே சொந்தம் ஆனால் சுக்ரீவனுக்கு விட்டு கொடுத்தான்

    லங்காபுரியினினை வென்றபின் நிச்சயம் அதன் அரசன் ராமனே, ஆனால் விபீஷ்ணனுக்கு விட்டு கொடுத்தான்

    சென்ற இடமெல்லாம் தர்மத்தை வாழவைத்து அரியணை ஏற்றிவைத்துவிட்டு வந்தான் அந்த ஞான‌மூர்த்தி

    தன்னை நம்பியோயோரை எல்லாம் காத்தான், யாரெல்லாம் அக்கிரமத்தின் கொடுமை தாங்காமல் அடைக்கலம் என வந்தார்களோ அவர்களை எல்லாம் அரணாக நின்று காத்தான்.

    இலங்கை போருக்கு பின்பே அவன் அயோத்தி அரசனாகின்றான், இன்றுவரை ராமராஜ்யம் என்ற அவன் ஆட்சிமுறை புகழபடுகின்றது என்றால் அவனின் ஆட்சிதிறன் அப்படி

    கவனியுங்கள், ஒரு சலவை தொழிலாளி சீதை யோக்கியமா? என்றவுடன் அவன் தலையினை ராமன் சீவவில்லை, சிறையிடவில்லை, நாடுகடத்தவில்லை மாறாக அவன் தன் குடிமகன் தன் அரசின் கீழ்வாழ்பவன் அவன் நம்பிக்கையினை பெறுவது அரசனின் கடமை என்றே சீதையினை தீகுளிக்க சொன்னான்

    அவனுக்கு சீதைபற்றி தெரியும், அவளின் கற்பு பற்றியும் அவளுக்கு இருந்த சக்தி பற்றியும் தெரியும்

    இதனால் அவளை முழுக்க நம்பி அதே நேரம் தன் நாட்டு குடிமக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே சீதையின் புகழ் அறியபட வேண்டும் என்பதற்காகவே தீயிலிறங்க சொன்னான்

    அங்கு நெருப்பே அந்த தாயினை வணங்கியது

    உலகிலே அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என சொன்ன அரசன் அவனே, அது உலகெல்லாம் புகழ்பெற்ற வரியாய் மாறிற்று, காலம் காலமாக தொடர்ந்தது

    ரோமர்களின் சாம்ராஜ்யத்திலும் அந்த வரி ஒலித்தது,

    சீசருக்கு பல லட்சம் வருடம் முன்னாலே அதை சொன்னவன் ராமன், ராமனின் புகழ் உலகம் முழுக்க பரவியிருந்தது இன்னும் தாய்லாந்து முதல் இந்தோனேஷுயா கிழக்கு சைனா வரை அவனின் வரலாறு உண்டு, அப்படி மேற்கிலும் பரவி இருந்த ராமனின் புகழ்வரிதான் சீசர் சொன்னதாக நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது

    “ராமனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்” என்பதை “சீசரின் மனைவி” என மாற்றிகொண்டான் ஷேக்ஸ்பியர்

    ராமனின் அரசு தேவலோக அரசுக்கு நிகராய் இருந்தது. அவன் பரதனிடம் கேட்கும் கேள்விகளின் தொகுப்பு, அவன் விளக்கும் பல நிர்வாகங்களின் தொகுப்பு சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்தில் அப்படியே வரும்

    ஆம் ராமன் இங்கு எல்லா விஷயங்களுக்கும் எடுத்துகாட்டானவன்

    அவன் செய்த ராஜநீதியே பின்னாளில் மனுநீதி சோழன் தன் மகனை பசுவுக்காய் கொல்லும் அளவு ஆட்சி கொடுத்தது, அவனின் பொய் சொல்லா குணமே அரிச்சந்திர கதையின் நாதம்

    அவனின் சகோதர பாசத்தின் தொடர்ச்சியே பாரதம்

    அவனின் அரச நீதியின் தொடர்ச்சியே சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம்

    இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு

    ஒருவனின் நற்குணத்தை பற்றி அவனின் நண்பர்களோ பலன் பெற்றவர்களோ சொல்வதில் அர்த்தமில்லை, அவனின் எதிரி என்ன சொல்கின்றானோ அதுதான் நிஜம்

    ராவணன் மாயமான் உருவெடுக்க மாரீசனிடம் சொன்னபொழுது ராமனின் குணம் பற்றி வியந்துரைத்து அவனுக்கு துரோகம் புரிய முடியாது என மருவுகின்றான் மாரீசன்

    ராமன் உருவெடுத்தால் சீதை மயங்குவாள் என திட்டம் போட்ட ராவணன்,, ராம உருவெடுத்து அந்த உருவில் தனக்கு மாபெரும் நல்ல குணங்கள் வருவதை உணர்ந்து அதை சட்டென மாற்றி அழுதான் என்கின்றது புராணம்

    போர்களத்தில் ராமனின் அழகையும் அவனின் வீரத்தையும் , “ஆயுதம் இல்லா தன்னை வீட்டுக்கு அனுப்பி நாளை வா” என சொன்ன ராமனிடம் மனமார தோற்றான் ராவணன்

    லங்காபுரியில் அவன் அழகில் தோற்றாள் சூர்ப்பநகை, அவன் அன்பில் தோற்றான் விபீஷ்ணன், அவன் வீரத்திலும் கருணையிலும் தோற்றான் ராவணன்

    ராவணன் வாலியாலோ, இல்லை கார்த்த வீரியனாலோ கொல்லபட்டிருக்க வேண்டியவன் ஆனால் அவனின் பெரும் பக்தியின் பலன் ராமன் எனும் நல்லவனால் கொல்லபட்டான், இதை உணர்ந்தே மகிழ்வாய் உயிர்விட்டான் ராவணன்

    இதைவிட ராமனின் பெருமை சொல்ல என்ன உண்டு?

    தந்தை பாசத்துக்கு எடுத்துகாட்டான ஒருவன் உண்டா? ராமன் வாழ்வு சொல்லும்

    சிற்றன்னையாயினும் அன்னை என கொண்டாடிய மகன் உண்டா? உண்டு என் ராமனின் வாழ்வு சொல்லும்

    ஒரு மூத்த சகோதரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யார் உதாரணம்? ராமன் வாழ்வு சொல்லும்

    ஒரு நல்ல மாணவன் எப்படி இருக்க வேண்டும்? ராமனின் வாழ்வு சொல்லும்

    ஒன்றுமே இல்லா பராரி நிலையில் ஒருமனிதன் எப்படி இருக்க வேண்டும்? ராமன் வாழ்வு சொல்லும்

    தந்தையும் மனைவியும் பிரிந்த நிலையில் அனாதையாய் நிற்கும் நிலையில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? ராமன் வாழ்வு சொல்லும்

    நம்பியோரை காப்பது எப்படி, தர்மத்தை அரங்கேற்றுவது எப்படி? அவன் வாழ்வு சொல்லும்

    நட்பு என்றால் என்ன, நல்ல நண்பனின் இலக்கணம் என்ன என்பதை ராமனே தன் வாழ்வில் சொன்னான்.

    மனிதன் தன்னிலும் கீழான விலங்குகளிடமும் பறவைகளிடமும் கருணையாய் இருப்பது எப்படி? அவன் வாழ்வு சொல்லும்

    எல்லாம் தொலைத்த நிலையிலும்எதுவுமே இல்லா நிலையிலும் தர்மமும் கருணையும் ஒருவனிடம் இருந்தால் அவன் எப்படி மீள்வான்? அதை அவன் வாழ்வு சொல்லும்

    ராஜ்யமும், ஏராளமான‌ பெண்களும், ஏன் அந்நிய ராஜ்யங்கள் ஏராளம் கண்முன் நின்று தனக்காக ஏங்கினாலும் ஒரு மனிதன் எப்படி ஒதுங்க வேண்டும்? ராமன் வாழ்வு சொல்லும்

    ஒரு வீரன் களத்தில் எப்படி நிற்க வேண்டும், பகைவனே ஆயினும் ஆயுதமில்லாதவனை கொல்ல கூடாது என தர்மம் பேணபடும் என்பதை “இன்று போய் நாளை வா” என அவனின் போர்களம் சொல்லும்

    நல்ல கணவன் எப்படி இருக்க வேண்டும், அதை ராமனே உலகுக்கு சொல்வான்

    நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும், தன் குடிகளை கண்காணித்து தன்மேல் நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும்? ராமனே உதாரணம்

    இதனாலே காலம் காலமாக இந்த உலகில் ராமனை வழிபட சொன்னார்கள், அவன் கதையினை படிக்க சொன்னார்கள்

    ராமன் கதையினை முழுக்க வாசிக்கும் ஒருவனுக்கு அவனின் ஏதாவது ஒரு குணம் வரகூடும், அவன் அதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக

    ராமனை யார் யாரோ சந்தித்தாலும் அனுமன் என ஒரு மாபெரும் வீரன் அவனால் உருவானான் அல்லவா? அந்த அனுமன் வணங்கபடும் தெய்வமும் ஆனான் அல்லவா?

    அதை போல லட்சோப லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அவனை போல் ஒருவன் வருவான் என ராமனின் கதையினை இச்சமூகம் வைத்திருந்தது

    எல்லா அரச குடும்பங்களுக்கும் உலகெல்லாம் அவன் வாழ்வு பாடமாயிருந்தது, சீசர் என்பவன் ஒரு உதாரணமே

    காதலருக்கு அவன் கதையே பாடம், சகோதர பாசத்துக்கு அதுவும் மூத்த மகனின் தியாகத்துக்கு அவனே வழிகாட்டி, நட்புக்கும் தர்மத்துக்கும் அவனே வழிகாட்டி , தியாகம் வீரம் கொடை என எல்லாவற்றுக்கும் அவனே வழிகாட்டி என இந்த பூமி காலம் காலமாய் அவன் புகழை காத்தும் வந்தது

    மகா முக்கியமாய் அவன் வாழ்வு எதற்கும் ஆசைபடாத குணத்துக்கும் அகங்காரத்தை ஒழிக்கும் உதாரணமாகவும் காட்டபட்டது

    தான் வீரன் எனும் வாலியின் அகங்காரம் அவனால் ஒழிக்கபட்டது, அழகி எனும் கர்வம் கொண்ட சூர்ப்பநகையின் அகங்காரம் அவனாலே ஒழிக்கபட்டது, தாடகை அவனிடமே அடங்கி வீழ்ந்தாள்

    மூவுலகை வென்ற ராவணின் அகங்காரம் அவனிடமே ஒழிந்தது, தன்னை வெல்ல சத்திரியன் எவனுமில்லை எனும் பரசுராமனின் அகங்காரமும் அவனிடமே ஒழிந்தது

    அகங்காரம் ஒழிய ராமனை வணங்கு என்றது இந்த பூமி, ஆற்றல் கொண்டவன் ராமனை பணிந்தால் அனுமன் போல் வாழ்வான், அகங்காரம் கொண்டவன் அழிவான் என சொன்னது

    ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் (மனைவி) என வாழ்ந்தவன் ராமன்..

    ராமனின் ஒரே குறை, குறை காணமுடியா வாழ்வினை அவன் வாழ்ந்தான் என்பதன்றி வேறல்ல

    ராமனை இங்கு எக்காலமும் நினைவில் நிற்க சொன்னார்கள், அவனை அனுதினமும் வணங்கினால் அவனை போல் நற்குணத்தில் ஒன்று வரும் என்றார்கள், அவன் அருள் பெருகும் என்றார்கள்

    அருள் பெருகுமோ இல்லையோ ராமனின் வாழ்வினை தியானிப்பவர்களுக்கு ஞானம் வரும்

    மானிட வாழ்வு சிக்கலும் கண்ணீரும் கவலையும் மிகுந்தது, ராமனுக்கு வந்த சிக்கலா நமக்கு வரும் என்ற தைரியம் பிறக்கும்

    ராமன் ராஜ்ஜியம் போனாலும் மனைவி பிரிந்தாலும் மீண்டும் பெற்றது போல் பெறுவோம் எனும் நம்பிக்கை வரும்

    வனவாசம் மட்டும் செல்லாமல் இருந்தால் அவன் அனுமனை கண்டிருப்பானா? குகனை கண்டிருப்பானா?

    ராவண வதம் நடந்திருக்குமா? இல்லை சலவை தொழிலாளியின் நம்பிக்கையினை பெற்று மாபெரும் அரசனாய் வீற்றிருப்பானா? எல்லாம் நன்மைக்கே எனும் நம்பிக்கை பிறக்கும்

    நல்லவனாய் இருப்போம் ராமனுக்கு அனுமன் போல நமக்கும் ஒருவன் வராமலா போய்விடுவான் எனும் தைரியம் பிறக்கும்

    ராமனின் பரசுராம மோதல் காட்சிகளை காணும் பொழுது அகம்பாவம் ஒழியும், ஆட்சியாளர் படித்தால் நாமும் அப்படி ஆள வேண்டும் என்ற் ஆசைவரும், வீரன் படித்தால் நாமும் ராமனை போல் தர்மப்போர் புரிய வேண்டும் என்ற வீரம் வரும்

    குறைந்த பட்சம் குகனைப்போல் நண்பனை பெறவேண்டும் எனும் ஆசை வரும், விபீஷ்ணன் சுக்கீவன் ராஜ்யம் அவனுக்கு என்பதை போல் மண் ஆசை குறையும்

    ராமனை வணங்கினால் பரதனுக்கு நாடு கொடுத்த ராமன் போல் நாமும் சகோதரனுக்கு விட்டு கொடுப்போம் மண்ணாசை வராது, பேரழகி ஆனாலும் ஏறேடுத்து பார்க்கமாட்டோம் இதனால் பெண்ணாசையும் வராது

    இதனாலே ஒவ்வொரு மனிதனும் ராமனின் கதையினை படிக்க வேண்டும் என்றது இந்த ஞானபூமி, இன்றும் இந்துக்கள் வாயில் “ராமா…” எனும் வார்த்தை சர்வ சாதாரணம்

    அது அவர்கள் ரத்தத்தில் வந்தது, பூர்வ பூர்வ ஜென்மமாய் வந்தது அது இன்னும் வரும்

    (திராவிட கோஷ்டி ஏன் ராமனை குறி வைத்து அடித்தது என்பதன் பொருள் இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், மனிதன் மனிதனாகவே வாழ்ந்துவிட கூடாது என்பது அவர்கள் பகுத்தறிவு)

    ராமன் காலம்தோறும் யாரையாவது உலகிலும் இப்பூமியிலும் தொட்டுகொண்டே இருப்பான், நல்ல அரசர் முதல் மோடிவரை வரை அவன் தொட்டான்

    இந்தியாவின் புகழ்மிக்க மன்னர்கள் முதல் கவிஞர்கள் ஆட்சியாளர்கள் ஞானியர் வரை ஆழமாக கவனியுங்கள் அவர்கள் ராமபக்தர்களாய் இருப்பார்கள்

    தென்னாடு இனி ஆப்கானியர் வசம் என்ற நிலை இருந்தபொழுது, இந்து ஆலயமெல்லாம் அழிக்கபட்டபொழுது ராமனின் புகழ்பாடிய விஜயநகர சாம்ராஜ்யம் எழும்பிற்று, ராமனை மனமார தொழுத அவர்கள் பெரும் இந்து ராஜ்ஜியம் உருவாக்கி காவல் இருந்தனர்

    பின்னாளில் மறுபடியும் இத்தேசம் முழு அடிமையாகி இந்நாட்டிற்கு இனி விடுதலை இல்லை மொகலயர் இனி இதனை முழு இஸ்லாமியநாடாக மாற்றிவிடுவார்கள் என்ற பெரும் அச்சம் ஏற்பட்டபொழுது “ராமதாஸர்” எனும் ராமனின் பக்தன் வந்தார், ராமநாமம் ஒன்றிலே எழுச்சி கொடுத்தார்

    முகமதியர் சலாம் சொல்வது போல் இந்துக்கள் “ராம் ராம் ராம்” என மும்முறை சொல்லவேண்டும் என அவர் ஏற்படுத்திய ஏற்பாடுதான் பெரும் எழுச்சியினை இந்தியாவில் கொடுத்தது

    அவர் தன் புகழ்மிக்க சீடனை ராமனின் பெயரால் ஆசீர்வதித்த பின்பே அடுத்த பெரும் போர் வெடித்தது, வீரசிவாஜி கொடுத்த எழுச்சியில்தான் மொகலாய அஸ்திவாரம் ஆட அதன் பின் பிரிட்டிசார் நாட்டை பிடித்தனர்

    பிரிட்டிசாருக்கு எதிரான போராட்டத்தில் யாருக்கும் கிடைக்கா வெற்றி “ஹே ராம்” என எப்பொழுதும் உச்சரித்த காந்திக்கு கிடைத்தது

    ராமனின் நினைவு இல்லாமல் அவன் பிரஞ்ஞையில் கரையாமல் நல்லாட்சி தரமுடியாது, இன்று உத்திரபிரதேசத்தில் யோகி நல்லாட்சி கொடுக்க ராமனே காரணம்

    குஜராத் முதல்வராக இருந்து நல்லாட்சி கொடுத்து இன்று பாரத திருநாட்டுக்கே மோடி நல்லாட்சி கொடுக்க அந்த ராமனே காரணம்

    அப்படிபட்ட ராமன் இத்தேசத்தை இன்றல்ல எக்காலமும் காப்பான், சோதனை வந்தாலும் மீள் எழவைத்து காப்பான், அதை தேசம் கண்டுகொண்டிருக்கின்றது

    பல ஆயிரம் வருடம் கழித்து அவன் ஆலயம் கட்டபடுவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல, எகிப்து ரோம் இன்னும் பல மதங்கள் செத்தே விட்ட நிலையில் ராமன் ஆலயம் மட்டும் உயிர்த்தெழுவது எப்படி?

    ஆம் அவனே தர்மம், அவனே சத்தியம் அது ஒருகாலும் அழியாது

    சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் என்பதன் தத்துவ வடிவம் என்ன்ன என்பதை இப்படி சொன்னார்

    “இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

    அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

    ராமனை போல ஒருவனை காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் , ஆழமாக் இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் , வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும், நீங்கள் இன்னும் ஒரு ராமனை காணவே முடியாது
    அவன் ஒப்பற்றவன். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய ஒருவனை காணமுடியும்”

    இன்று ராமநவமி, இந்துக்கள் அவன் பெயரால் பூஜித்து கொண்டிருக்கின்றார்கள், இன்றல்ல எக்காலமும் உச்சரித்து கொண்டிருக்கவேண்டியது அவன் பெயரே

    “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
    இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
    நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
    வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
    நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
    சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.”

    இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் , புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே விடுதலையும் கிட்டும்.
    அந்த ராமனை மனமார வணங்குங்கள், வான் மேகத்தில் ஒரு துளியும் தாகம் தீர்க்கும் என்பது போல, வைரத்தின் ஒவ்வொரு துண்டும் மின்னும் என்பது போல ராமனின் குணங்களில் ஒன்று , ஒன்றே ஒன்று உங்களில் கலந்தால் போதும், உங்கள் வாழ்வே மாறும் அது சமூகத்தை மாற்றும்

    அனுமன், விபீஷ்ணன், வால்மீகி, கம்பன், விவேகானந்தர், காந்தி , மோடி, யோகி என ஏராளமான உதாரணங்களை சொல்லிகொண்டே இருக்கமுடியும்

    நிச்சயம் அதில் உங்கள் பெயரும் வரும், அழியா அடையளமாவீர்கள்

    ஒவ்வொரு அன்னையும் தன் மகனை ராமன் போல வளர்க்கவும், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ராமன் போல் கணவன் கிடைக்கவும் வேண்டும் நாளிது

    ஒவ்வொரு அண்ணனும் தான் ஒரு ராமனாகவும், ஒவ்வொரு தம்பியும் தான் ஒரு லக்குவனாகவும் வாழவேண்டும் என உருகும் நாள் இது

    ஒவ்வொரு குருவும் ராமனை போல் ஒரு சீடன் வேண்டும் என மனமுருகும் நாள் இது,

    ஒவ்வொரு பக்தனும் அனுமனை போல் ராமனை வணங்கி நிற்கும் நாளும் இதுவே

    ராவணன் சிறைபோல் பெரும் இக்கட்டில் இருப்போரெல்லாம் ராமா.. என கூவி அழைக்கும் நாளும் இதுதான்
    அதே நேரம், நல்லாட்சி அமைய ஒவ்வொரு இந்துவும் அழைக்கும் நாமமும் அவன் நாமமே

    ஆம் தலைமகனாக, அண்ணனாக, கணவனாக, நாயகனாக, வீரனாக ,குருவாக மின்னினான் ராமன், “ராமன் எத்தனை ராமனடி” என்பது அதுதான்

    எத்தனையோ வகையாக மின்னிய ராமனில் அவன் அரசனாக ஜொலித்தது தனி இடம்

    அந்த பரந்தாமனின் தனி அருளில் நாடு ஜொலிக்கட்டும் என தேசம் வேண்டிகொண்டிருக்கின்றது
    புராணத்தில் ஒரு காட்சி உண்டு, அது இந்த வரிகளை சொல்கின்றது

    “ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி
    ஸ்ரீ பார்வத்யுவாச-
    கேனோபாயேன லகுனா
    விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரகம்‌
    பட்யதே பண்டிதைர்‌ நித்யம்
    ச்’ரோதுமிச்சாம்யஹம்‌ ப்ரபோ
    ஸ்ரீ ஈ’ச்வர உவாச-
    ஸ்ரீ ராம ராம ராமேதி
    ரமே ராமே மனோரமே
    ஸஹஸ்ரநாம தத்துல்யம்‌
    ராமநாம வரானனே”
    அதாவது பார்வதி சிவபெருமானிடம் கேட்கின்றார்

    நாதா, தனிபெரும் கடவுளே, “இந்த ஸகஸ்ர நாமத்தில் மிகவும் உயர்ந்ததும் சுலபமானதுமான நாம் எது?”
    ச‌ர்வேஸ்வரன் கூறுகிறார், தேவியே “ஶ்ரீராமன் என்ற நாமமே உயர்ந்த நாமம் என்று(ஶ்ரீராம ராம ராமேதி….)இந்த ஸ்லோகத்தை மூன்று முறை கூறினால் முழு ஸகஹ்ர நாமம் சொன்ன பலன் கிடைக்கும்”
    ஆம், நாமங்களிலும் மந்திரங்களிலும் உயர்ந்தது ராமநாமம், எல்லா நலன்களையும் கொண்டுவரும் மகா புண்ணிய‌ நாமமும் அதுவே

    எங்கும் ராமநாமம் ஒலிக்கட்டும், அது ஒலிக்க ஒலிக்க தேசம் செழிக்கட்டும்

    ஜெய் ஸ்ரீராம்….

    ஒவ்வொருவனும் தன் கடமையிலும், குடும்பத்திலும், சமூகத்திலும் எல்லா நிலையிலும் இந்த இடத்தில் ராமன் இருந்தால் என்ன முடிவெடுப்பான் என யோசித்து முடிவெடுத்தால் போதும், இந்த பூமி அதி உன்னதமாக அமையும், ராம அவதார நோக்கமும் அதுதான்

    (தனிபட்ட வகையில் ராமனின் வாழ்வு எமக்கு எவ்வளவோ ஆறுதலை கொடுக்கும், ஊரை பிரிந்து தாய் தந்தையினை பிரிந்து வெளிநாட்டுக்கு கிளம்புதல் என்பது உயிரை பிடுங்கி அதனை கொண்டு குடலை கிழிக்கும் கொடுமை போன்றது

    கண்ணீரும் அழுகையும் பொங்க அந்த மண்ணைவிட்டு கிளம்பியபொழுது மனமெல்லாம் கதறி அழும் பொழுது விஸ்வாமித்திர முனி தசரதனுக்கு சொல்லும் வார்த்தையே மருந்தும் ஆறுதலானாது

    “தசரதா, கோடி என்ன? இந்த உலகையே கொடுத்தாலும் ராமன் நம்மை விட்டு செல்வானா? மாட்டான், அப்படிபட்ட ராமனே கானகம் செல்கின்றான் என்றால் அது அவனால் முடியுமா? அல்ல, அவனாக செல்லவில்லை அவன் விதி அவனை இழுத்து செல்கின்றது

    விதியினை வெல்ல நீயார்? நான் யார்? அந்த ராமனேதான் யார்?”

    அந்த வரிதான் தாய், தந்தை, மண், மனைவி, குழந்தை என எல்லோரையும் பிரிந்து எங்கோ கிடக்கும் வெளிநாட்டு வாசிகளுக்கெல்லாம் ஆறுதல்

    ஒரு பாவமும் செய்யா ராமனே அவன் விதியால் அவ்வளவு பாடுபட்டான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என ஆறுதலும் நம்பிக்கையும் தந்து அமைதியாய் வாழ வழி சொல்வது ராமனே

    நல்ல மகனாக, அண்ணனாக, கணவாக அவன் வாழ்ந்த அந்த‌ சிரமமிக்க வாழ்வுதான் ஒவ்வொரு வெளிநாட்டுவாசியின் தனிமையிலும் கண்களை துடைத்து ஆறுதலை சொல்லி, மாட்டுக்கு நுகம் சுமத்தபடுவது போல் பொறுப்பினை வலிக்காமல் சுமத்துகின்றது

    ஆனானபட்ட ராமனே தன் தந்தை தாய் மரணத்துக்கு செல்லமுடியவில்லை எனும்பொழுது நாமெல்லாம் என்ன செய்துவிட முடியும் என்ற ஆறுதல் அவனாலேதான் உருவாகின்றது

    அவனாலே மனம் அமைதி கொள்கின்றது, அந்த அமைதிதான் ஒவ்வொரு நாளும் கடமையினை செய்து வாழ்வினை தொடரும் நம்பிக்கையும் உற்சாகமும் கொடுக்கின்றது

    வாழ்வின் எல்லா நிலைக்கும் எல்லோருடனும் எப்பொழுதும் துணைவரும் பெரும் அவதாரம் ராமன், காலம்காலமாக அவன் வாழ்வதும் எல்லோரையும் வழிநடத்துவதும் இப்படித்தான்)

  4. ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, லங்காபுரி போரில் நீலன் என ஒரு வானரம் லட்சுமணனிடம் ஓடிவரும் , “லட்சுமணா, இந்த போரில் இதுவரை நாம் கண்ட முகங்கள் திடீரென மாறி விகாரமாக வந்து நம் முன் நிற்கின்றன, என்னால் நம்ப முடியவில்லை லட்சுமணா. நேற்றுவரை வேறு முகத்தில் சாந்தமாக இருந்தவர்கள் இன்று ஏன் இப்படி முகத்தினை மாற்றி வேறுவடிவில் வருகின்றார்கள், நான் குழம்புகின்றேன் இவர்கள் எதிரிகளா இல்லையா என்பதே புரியவில்லை நான் இவர்களோடு மோதுவதா வேண்டாமா?”

    லட்சுமணன் சொன்னான் “நீலா, நேற்றுவரை அவர்கள் தங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி இங்கு பெரும் ஆட்டம் ஆடியவர்கள், அவர்களை தட்டி கேட்க யாருமில்லை அவர்கள் வைத்ததெல்லாம் சட்டம் போதித்தல்லாம் போதனை

    அவர்களால் இங்கு நடந்த அழிவு கொஞ்சமல்ல, அந்த அதர்ம கூட்டம் நல்லவர் போல் வேடமிட்டு மிக நுணுக்கமாக எல்லோரையும் ஏமாற்றி ஆடிகொண்டிருந்தது

    ராமன் காலடி இங்கு பட்டதும் அவற்றுக்கு அழிவுகாலம் வந்துவிட்டதை எண்ணி வேடம் கலைந்து அலறுகின்றன, நீ நேற்றுவரை கண்டது அவைகளின் வேடம் இப்பொழுது காண்பதுதான் உண்மை சுயரூபம், இதனால் அதை கண்டு குழம்பாது போர் புரிவாய்”

    ஏ.ஆர் ரகுமானின் சமீபத்திய தடுமாற்றங்களை பார்க்கும் பொழுது இதுதான் தெரிகின்றது, அவரின் 30 வருட இசைவாழ்வில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் வந்த அவரின் சமீபத்திய குழப்பம் இந்த வரி அவருக்கும் பொருந்தும் என்பதை சொல்கின்றது

    தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கி அவரின் சீடர் அகத்தியரால் பொதிகை மலையில் உருவாகி மதுரையில் சங்கம் வைத்து வளர்ந்தமொழி

    ஆனானபட்ட அகத்தியனோ, தமிழுக்கு இலக்கணம் எழுதிய அவன் சீடன் தொல்காப்பியனோ “தமிழ் அன்னை” என யாரையும் வணங்கவுமில்லை வாழ்த்தவுமில்லை

    இங்கு தமிழர் எனும் இந்துக்களின் வாழ்வு இறைவனை வணங்கிவிட்டு பாடுவதாக இருந்தது

    அந்த தமிழை இசைதமிழ், இயல்தமிழ், நாடக தமிழ் என பிரித்த அந்த இந்துசமூகம் மூன்றிலும் இறைவாழ்த்து என இந்து தெய்வங்களைத்தான் வணங்கின‌

    வள்ளுவனே கடவுள் வாழ்த்துபாடினானே அன்றி “தமிழ் வாழ்த்து” பாடவில்லை அவன் குறளில் “தமிழ்” எனும் வார்த்தை கூட இல்லை

    இசை தமிழுக்கு அது சரஸ்வதியினை வணங்கிற்று வீணையோடு வீற்றிருக்கும் அவளை அச்சமூகம் இசைதமிழுக்கு அதிபதி என வணங்கியது கம்பனும் ஒட்டகூத்தனும் அவ்வகை

    இயல்தமிழுக்கு அது விநாயகனை நிறுத்திற்று, இயல்தமிழ் என்பது ஞானமொழிகளை தரும் வகையானது ஒளவை திருமூலர் போன்றவர் அவ்வகையே

    நாடக தமிழுக்கு “கூத்தன்” எனும் சிவனை நடராஜ பெருமானாக நிறுத்திற்று

    இதனை தவிர வேறு தெய்வங்களோ அதற்கான வாழ்த்தோ தமிழ் இந்துக்களிடம் இல்லை, இம்மூன்று தமிழும் பக்தியினை வளர்ப்பதாகவும் இறை சிந்தனையினை தூண்டுவதாகவும் வாழ்வு நெறிகளை போதிப்ப்பதுமாக இருந்தது இதில் தமிழ் அன்னையோ, தமிழ் அணங்கோ இல்லை

    பின்னாளில் சமணமும் பவுத்தமும் தமிழகத்தை ஆட்கொண்ட பொழுது இந்த இந்து வழிபாடுகள் மறக்கடிக்கபட்டன அல்லது மறைக்கபட்டன‌

    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பவுத்த நூலாக கருதபட்டாலும் உண்மையில் அவை மறைமுகமாக இந்துதுத்வா கருத்துக்களையே பேசின அந்த அளவில் இங்கு இந்து வேர் உண்டு

    பின்னாளில் மூவேந்தர் எழுந்து இந்துமதத்தை மீட்டனர், அதன் பின் பெரியபுராணம் போன்றவை வந்தன, அவையும் மொழிவாழ்த்து பாடவில்லை மாறாக இந்து தெய்வ வாழ்த்தைத்தான் பாடின‌

    இந்த “டமிலன்னை” அல்லது “டமிழனங்கு” குழப்பம் வெள்ளையன் வரும்பொழுது வந்தது, அப்பொழுது தமிழகத்தில் நாயக்க அரசுகள் இருந்தன இவர்கள் தமிழர்கள் அல்ல, நவாபுகள் இருந்தார்கள் இவர்களும் தமிழர்கள் அல்ல‌

    அதே நேரம் இந்துக்களுக்கும் மொகலாயர்களுக்கும் தீராபோர் நடந்தது

    வெள்ளையன் வடக்கே அப்போரில் கால்பதிக்கமுடியாமல் 16ம் நூற்றாண்டிலே தமிழகத்தில் ஒதுங்கினான், அவனுக்கு ஒரு பாதுகாப்பு தேவைபட்டது

    வீரசிவாஜியின் அரசு தஞ்சை வரை நீண்ட நிலையில் இந்து ராஜ்ஜியமும் இந்து மத பக்தியும் செழித்திருந்தன அது இன்னும் பெருகிற்று

    அந்நேரம் தமிழக இந்துக்களை “இந்து” என அந்த மனப்பான்மையில் சேரவிட்டாமல் நாயக்கர்களுக்கும், சிவாஜிக்கும் எதிராக தூண்டிவிட “தமிழ்” “தமிழன்” எனும் ஆயுதம் உருவானது

    18ம் நூற்றாண்டில் வெள்ளையன் எழும்ப எழும்ப இதுவலுவானது

    தமிழன் இந்துவாக இருந்தால் தனக்கு ஆபத்து என்றும் அவன் இந்தியனாக இருந்தால் பெரும் ஆபத்து என்பதையும் உணர்ந்த வெள்ளையன் இந்த அயுதத்தை தீட்டினான்

    இலங்கையில் இதனை பரிசீலித்ததில் அவனுக்கு பெரும் வெற்றி என்பதை கொண்டு தமிழகத்திலும் செய்தான்

    அதுதான் பின் “டம்ல்” “டம்லன்” என உருவானது

    இந்துமதமில்லா தமிழ் கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் இந்தியாவிலும் இலங்கையிலும் குழப்பம் விளைவிக்கும் திட்டம் அழகாக வேலை செய்தது

    இந்து என்றால் பெரும் கூட்டம் கூடும் இடத்தில் “டமிலன்” என சொல்லி அவனை சிறுகுழுவாக பிரிப்பது பலன் தரும் தந்திரமாயிற்று

    கால்டுவெல் வந்து என்னென்னவோ எழுதினான் ஆனால் கடைசிவரை அவனுக்கு திருநெல்வேலி டின்னவேலி என்றும், திருவனந்தபுரம் “டிரிவண்ட்ரம்” என்றும், வாசுதேவநல்லூர் “வாஷ்டேவ்நல்லூர்” என்றுதான் வந்தது

    தமிழக ஊர் பெயரே சொல்லதெரியாதவன் எழுதியது தமிழ் வரலாறு ஆயிற்று திராவிட கும்பலுக்கு “பைபிள்” என்றாயிற்று

    பல லட்சம் ஆண்டாக இங்கு சிவனையும் சரஸ்வதியினையும் விநாயரையும் முருகனையும் வணங்கிய தமிழ் சபைக்கு குபீரென “டமிலன்னை” உருவானாள்

    இதெல்லாம் 19ம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லாத வழமை

    ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர் விநாயகரையும் சரஸ்வதியினையுமே தொழுது தமிழ்சபை நடத்தினார்கள்

    பின் டமிலன்னை அரசியலாகி, இந்தி எதிர்ப்பதே டமிலன்னை வாழும் வழி என்றானது, சுத்தானந்த பாரதி போன்றோர் இதில் சேர்ந்ததும் காலகொடுமை

    பல இடங்களில் இந்துக்களே துணை போனார்கள் என்பதுதான் கொடுமை

    அதுவரை பெரும் நிலமும் வருமானமும் இந்து ஆதீனங்களுக்கு அக்கால மன்னர்களால் கொடுக்கபட்டது தமிழ் வாழ அல்ல, மாறாக இந்துமதத்துக்காக தமிழ் வாழ‌

    அதனால்தான் ஆலயம் கட்டி அதற்கு நிலமும் வைத்து அதனால் தமிழ் வாழ்ந்து இதனால் இந்துமதமும் வாழட்டும் என்றுதான் அக்கால இந்துசமூகம் பெரும் ஏற்பாட்டை செய்தது

    ஆனால் இந்துமதம் எப்படியும் போகட்டும் தமிழ்தான் முக்கியம் என ஆதீனங்களும் மடங்களும் இந்த கொடுமைக்கு துணை போயின‌

    அதனாலே சைவ வைணவ இலக்கியம் அல்லாமல் ஒளவையின் போதனை அல்லாமல் சமண பவுத்த இலக்கியம் ஐம்பெரும் காவியமானது, அவை ஐஞ்சிறு காவியமானது

    இரண்டிலும் இந்து இலக்கியமில்லை

    ஆம், தமிழ் என ஆங்கிலயேர் தந்திரம் பாய்ந்து இங்கு இந்து இலக்கியம் அழிய ஆரம்பித்தது 18ம் நூற்றாண்டிலே வந்த கொடுமை

    அது பின்பு நீதிகட்சி, தனி தமிழ் இயக்கம், தமிழர், திராவிட கழகம், திமுக என விரிந்து வந்தது, விடுதலை புலிகள் எனும் தீவிரவாத இயக்கம் வரை வந்தது

    பர்மாவில் பவுத்த பர்மாக்காரன் அடிப்பான் ஆனால் அடி வாங்கும் தமிழனுக்கு மதம் கிடையாது மொழி மட்டும் உண்டு

    இலங்கையில் பவுத்த சிங்களன் அடிப்பான் அடிவாங்கும் தமிழனுக்கு மதமே கிடையாது

    அப்படிபட்ட கொடுமை தமிழகத்திலும் வந்தது, இந்த கொடுமை இந்திய ஒருமைபாட்டுக்கு எதெல்லாம் ஏற்பாடோ அதையெல்லாம் “டமில்” பெயரில் துண்டாடும்

    17ம் நூற்றாண்டில் வெள்ளையன் செய்த ஏற்பாடு 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது வேதனை

    இன்றைய நாஞ்சில் சம்பத் போல ஒருவர் 1940களில் இருந்தார் அவர் பெயர் பாரதிதாசன், அவரின் முழக்கமே திராவிட கும்பலுக்கு “சங்கீத”மாயின‌

    உண்மையில் தமிழகம் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு இந்தி கன்னடம் இந்தி ஆங்கிலம் உருது என எங்கும் அவரவர் மொழிக்கான அன்னையினை காணமுடியாது

    திராவிட கும்பல் இந்த அன்னையினை தமிழக தெய்வங்களுக்கு நிகராக நிறுத்தின, சரஸ்வதி கோலத்தில் கவுரமாக நிறுத்தி இந்து அழிப்பில் ஈடுபட்டன‌

    இப்பொழுது திலீப்குமார் சந்திரசேகர் எனும் இயற்பெயர் கொண்ட ஏ.ஆர் ரகுமானார் “தமிழனங்கு” என தலைவிரி கோலத்தில் அதாவது அவரின் தொடக்ககால தலைமுடி போல ஒரு கோலத்தில் தமிழன்னையினை நிறுத்தியிருக்கின்றார் இது கண்டிக்கதக்கது

    அவர் பெயர் தமிழ் அல்ல, அவரின் குடும்பத்தில் யார் பெயரும் தமிழ் அல்ல‌

    அவர் பாடவைக்கும் பாடகர்களும் பெரும்பாலும் தமிழர் அல்ல‌

    இன்று இந்தியினை எதிர்ப்போம் எனும் ரகுமானார் இந்திபடங்களுக்கு நல்ல சம்பளத்தில் இசை அமைப்பதும் அதற்கு ஆஸ்கர் போன்ற விருதுகள் பெருவதும் ரகசியமல்ல‌

    தான் இந்தி படங்களுக்கு இசை அமைப்பதை, இந்தி பாடல்களை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதை மறைத்துவிட்டு “டமில்” கோலம் பூணுவது சரியல்ல‌

    ரகுமானார் தமிழ்பற்று உண்மையென்றால் அவர் பெயரை மாற்றட்டும், அவர் சார்ந்த சமூகத்தில் தமிழ் வழி வழிபாட்டை ஊக்குவிக்கட்டும்

    உமறு புலவர் போல சுத்த தமிழுக்கு மாறட்டும்

    ஒரு அரைமணி நேரம் அவர் ஆங்கிலமும் கலக்கா சுத்த தமிழில் பேசட்டும் அதன் பின்பே அவருக்கு “டமிழனங்கு” பற்றி பேசும் தகுதி இருப்பதாக பொருள்

  5. வடநாட்டு கடவுள் இராமனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கும் இராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறியாத இந்த சங்கிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று புலம்பிக்கொண்டே என்னிடம் வந்தார் நண்பர் ஒருவர். இப்படியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அந்த நண்பர் என்னிடம், ஏன் இவர்கள் இராமனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று கேட்டார்….!

    அதற்கு நான் சேர சோழ பாண்டியர்கள் என்று மூவேந்தர்கள் முதல் இந்த நிலப்பரப்பை ஆண்ட பூர்வகுடிகள் அனைவரும் இராமரை போற்றி புகழ்ந்து இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் மற்றும் பெயர்களை அடிப்படையாகக் கொண்டும் தனது வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்துள்ளனர் எனும்போது பூர்வகுடிகளான சங்கிகள் இராமநாமம் பாடுவதில் என்ன பிழை என்று கேட்க, மனதிற்குள் (நீயும் ஒரு சங்கியா) திட்டியவாறே அதெப்படி மூவேந்தர்களும் இராமநாமம் பாடினார்கள் என்று கேட்டார்…!

    நானும் கொஞ்சநேரம் இழைப்பாறலாம்னு ஆரம்பித்தேன்… இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு

    மூவேந்தர்கள் மட்டுமில்லை ப்ரோ சங்கப்புலவர்கள், சித்தர்கள் முதல் கடைக்கோடி பக்தர்கள் வரை இராமநாமம் பாடியதற்கு நம்மிடம் இலக்கியம் கல்வெட்டுனு நிறைய சான்றுகள் உள்ளன. இவற்றையெல்லாம் சொல்வதற்கு நான் தயாராக இருந்தாலும் இதை அமைதியாக கேட்கும் பொறுமை உங்களுக்கு உள்ளதா என்று கேட்டதும் ஆர்வமுடையவரைப்போல நான் சொல்வதை கேட்கத் தயாரானார்…!

    “கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண் உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலை அறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே”

    – திருவருட்பா.

    நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! என்ன சகோதரரே இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது எதாவது சமஸ்கிருத ஸ்லோகத்தை தமிழில் எழுதிட்டீங்களா???

    சகோதரரே இது சமஸ்கிருத ஸ்லோகம் எதுவுமில்லை. திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய திருவருட்பா எனும் பொக்கிஷத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா??? அவர் எழுதிய இராமநாமப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் வரும் வரிகள்தான் இவை.

    ஐய்யய்யோ வள்ளலார் ராமரை புகழ்ந்து எழுதியிருக்காரா? வள்ளலார் ஆரிய ராமனுக்கு எதிரானவர்னு தானே சொல்லி குடுத்தாங்க. படுபாவிக ஏமாத்திட்டானுகளா? இல்ல நீங்க ஏமாத்துறீங்களா? ஒண்ணும் புரியலியே

    இப்போ நான் தொடர்ந்து சொல்லணுமா இல்லை நிப்பாட்டணுமா சகோதரரே??? உங்களுக்கு சந்தேகம் இருந்தா வீட்ல போய் பொறுமையா நான் சொல்வது சரியா தவறா என்று #புகுத்து ஆய்ந்துகொள்ளுங்கள் என்றதும் என்னை மடக்குவதாக இந்த திருவருட்பா காலத்தால் பிந்தையது இல்லையா? அதுனால 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி எதாவது இராமநாமங்கள் உள்ளதா என்று சொல்லுங்க என்றார்…!

    சரி சகோ, இலக்கியங்களை விட்ருவோம். மூவேந்தர்களின் கட்டிடக்கலைகள் பற்றி பார்ப்போமா என்றதும் ஆவலுடன் ஆம் என்றார்…

    “திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக”

    என்ன சகோ சோழர்களின் கட்டிடக்கலை பற்றி சொல்றதா சொல்லீட்டு இங்கயும் அயோத்தி ராமர்னு சொல்லீட்டு இருக்கீங்க??? ஏன்?

    இதுவும் சோழர்களின் கட்டிடக்கலை சம்பந்தமானதுதான் சகோதரரே. அதாவது புள்ளலூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில் இது ஏற்கனவே இராமர் கோவிலாக இருந்ததாகவும் அது இடிந்துவிட்டதால் பிற்காலத்தில் அதை காமாட்சி அம்மன் கோவிலாக கட்டியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
    அதாவது இதற்கு சான்றாக பொ.ஆ. 941 ஆம் ஆண்டில் முதலாம் பராந்தகச் சோழனின் 34 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இன்று காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டு கூறுவதாவது,

    திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக கொடுத்த தகவல் உள்ளது.இங்கே இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதால் அயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவன் என்று சான்று பகிர்வதாக குடந்தை சேதுராமன் கூறுகிறார்…!

    ஐய்யய்யோ சோழர்களின் கட்டிடக்கலையிலும் இராமர் கோவிலா தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக. இங்க பார்த்தால் சோழர்களே இராமர் கோவில் கட்டியிருக்காங்களே. சரி விடுங்க சகோ பாண்டியர்களின் கட்டிடக்கலையிலும் இராமபுராணம் இருக்கா சகோ?

    “ஸ்ரீ ராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்துமா நிலம்”

    ஐய்யய்யோ …. என்ன நீங்க வள்ளலார்ல துவங்கி சோழர்கள், பாண்டியர்கள் என்று எல்லா இடத்திலும் இராமரை அடையாளப்படுத்துறீங்க? இராமரை முன்னிறுத்தாத வரலாறே இல்லையா? தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக, நீங்க என்னடான்னா வள்ளலார் முதல் சோழர்கள் பாண்டியர்கள்னு தொடர்பு படுத்திக்கிட்டே போறீங்க சரி சொல்ல வந்ததை முழுமையா சொல்லுங்க….!

    அதாவது பொ.ஆ 863 ல் பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி மனோன்மனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் இராமர் கோவிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட தகவல் உள்ளது. இந்த கல்வெட்டின் காலத்தை குடந்தை சேதுராமன் அவர்கள் இது வரகுணன் காலத்து கல்வெட்டாக இருக்கலாம் என்று எழுதியதோடு பொ.ஆ 864 க்கு முன்பே தமிழகத்தில் இராமர் கோவில்கள் இருந்துள்ளது என்ற தகவலை இக்கல்வெட்டுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்…..!

    ஆதாரம் : (South Indian Inscription volume 14)

    ஐய்யய்யோ தெரியாம வந்து சிக்கிக்கிட்டமோ இனிமேல் இந்த வாட்சப், முகநூல் பார்த்து வரலாறு பேசுறத நிப்பாட்டணும் முதல்ல. சரி சகோதரரே இராமநவமிய அவங்க கொண்டாடட்டும். நீங்கள் எங்கள் முப்பாட்டன் முருகன் பற்றி சொல்லப்பட்டுள்ள வரலாற்று தகவல்களை சொல்லித் தாருங்களேன்

    முருகன் பற்றியா??? சரி சொல்றேன் கேளுங்க…!

    “எந்தை வருக ரகுநாயக வருக
    மைந்த வருக மகனே இனி வருக
    என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம
    இங்கு வருக அரசேவருக முலை
    உண்க வருக மலர் சூடிட வருக
    என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்”

    – திருப்புகழ்

    சகோதரரே நான் முருகனை பற்றிதானே கேட்டேன்? ஆனால் இதில் ரகுநாயகன், அபிராமன், கோசலை என்றெல்லாம் வருகிறதே?

    அதாவது கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணித்து முருகனுடன் ஒப்பிடுகிறார்.

    அடக்கடவுளே எங்கள் முப்பாட்டன் முருகனை புகழும் இடத்திலும் இராமனா? இது என்ன சோதனை? இது கண்டிப்பாக பார்ப்பனர்கள் எழுதியதாகத்தான் இருக்க வேண்டும்.

    சகோதரரே இது திருப்புகழில் வரும் பாடலாகும். இதை எழுதியவர் ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதர்.

    அங்கேயும் போச்சா சித்தர்கள் பற்றி சொல்லுங்க ( மனசுக்குள்ள இங்க எப்படி இராமர் வறாருனு பாத்துக்குறேன்)

    சரி சொல்றேன் கேளுங்க. கையை இந்த கம்பில பிடிச்சுக்கோங்க சகோதரரே.

    “நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம் ஈனதேதூ? ராம ராம ராம என்ற நாமமே”

    – சிவவாக்கியர்.

    எதே இங்கேயும் இராமநாமமா??? ஐயய்யோ தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே. மானமுள்ள தமிழ் பிள்ளைகள் யாராவது இருந்தால் வந்து என்னை காப்பாத்துங்களேன். இராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லைனு நான் சொன்னா சோழர்கள் பாண்டியர்கள், அருணகிரிநாதர் முதல் சித்தர்கள் வரை தொடர்புபடுத்துறானே முடியலயே

    சகோதரரே இது சித்தர் சிவவாக்கியர் எழுதியது. அவர் இதுமட்டுமின்றி இன்னும் பல பாடல்கள் இராமரைப்பற்றி பாடியுள்ளார். அவற்றையும் சொல்லவா???

    ஐயய்யோ வேண்டவே வேண்டாம். சமண காப்பியங்கள் பற்றி சொல்லுங்க. இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது போன்று உணர்கிறார்

    “மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே”

    – சிலப்பதிகாரம்.

    நிறுத்துங்க நிறுத்துங்க நிறுத்துங்க. இதில் இராமனைப்பற்றியோ இராமயணத்தை பற்றியோ இல்லை தானே? (ஏதோ பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்)

    சகோதரரே இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இந்த சிலப்பதிகார வரிகளில் இராமனோ, இராமயணமோ வருகிறதா? என்பதை நான் அப்பாடலுக்கு கூறும் விளக்க உரைகளில் உள்ளதா என்று நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க

    பொருள் : மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம் தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?

    ஐயய்யோ நான் ஊருக்கு போறேன்.! ஐய்யயோ நான் ஊருக்கு போறேன்.! தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு நான் ஒத்துக்குறேன். பீளீஸ் சார் என்ன விட்ருங்க

    இருங்க சகோதரரே எங்க போறீங்க? சங்க இலக்கியத்தை கூட ஒரு சேம்பிள் பார்த்துட்டு போகலாம்.
    சொல்றேன் கேளுங்க…!

    “அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்”

    – புறநானூறு.

    அதாவது உன்பொதி பசுங்குடையார் என்ற சங்கப்புலவர் இந்த புறநானூற்று வரிகளால் சொல்வது என்னவெனில்,

    பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர். மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்….!

    இதுமட்டுமின்றி அகநானூறு, பழமொழி நானூறு போன்ற இன்னபிற சங்க இலக்கியங்களிலும் இராமனைப்பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் குறிப்புகள் உண்டு என்பதை கூறிக்கொள்வதோடு தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை வள்ளலார் துவங்கி சித்தர்கள், காப்பியக் கவிகள் முதலான சங்கால புலவர்கள் வரை நன்கு அறிந்திருந்தனர் என்பதை மேற்கூறிய தரவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்…!

    சரிங்க சார் நீங்க சொன்னது புருஞ்சுபோச்சு. தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு கண்டிசன்

    நமக்கு இங்கே நடந்த விவாதத்தை யாருக்கும் சொல்லக்கூடாது சரியா?

    அவ்வளவுதானா? #செஞ்சிட்டா போச்சி

    இதற்கு கைமாறாக நீயும் ஒன்று செய்ய வேண்டும் சகோதரரே..!

    என்ன சார் செய்யணும்?

    இதுபோல் இராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் இராமநவமி கொண்டாடுபவர்களை பழித்து பிரிவினை பேசித்திரியும் பிரிவினை வியாதிகளை கண்டால் கல்லால் அடிக்கணும் சரியா?

    கண்டிப்பா அடிக்கிறேன் சார். இது நீங்கள் இவ்வளவுநேரம் சொன்ன தகவல்களுக்கு தட்சிணையா நெனச்சி பண்றேன் சார்… அப்படியானால் இன்றுமுதல் நீயும் சங்கி, காவி தீவிரவாதி, இந்துத்துவாவின் சேவகன், RSS காரன், பாஜக காரன் என்று அன்போடு அழைக்கப்படுவாய்…!

    (ஜெய்ஸ்ரீராம். அனைவருக்கும் இராமநவமி நல்வாழ்த்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *