சாணக்கிய நீதி -1

எந்த நாடு உன்னைத் தன்மானம், மதிப்பு, வாழும் வழி, குடும்பம், உற்றார் உறவினர், நலம்விரும்பிகள், கற்கும் வழி, தன் முன்னேற்றம் – இவற்றைப் பெற அனுமதிக்கவில்லையோ, அந்த நாட்டில் வசிக்காதே.  அதைவிட்டு நீங்கு.  அது நீ வாழத் தகுதியற்றது.

—  சாணக்கிய நீதி

நூல் அறிமுகம்:

லகத்திலேயே முதன்முதலாகப் பொருளாதர நூலான அர்த்தசாத்திரத்தை எழுதியவர் என்ற  பெருமை இவருக்கிருந்தாலும், மேற்கு நாட்டவரான ஆடம் ஸ்மித்துதான் (Adam Smith) பொருளாதாரத்தின் தந்தை எனச் சொல்லப்படுகிறது.  ஆடம் ஸ்மித்துக்கும் மேலாக — ஓர் அரசன் எப்படித் தன் நாட்டை நிர்வகிக்க வேண்டும், எங்கெங்கு தந்திரமாக ஒற்றர்மூலம் உளவறிந்துச் செயல்படவேண்டும் என்று இவர் எழுதிய அர்த்தசாத்திரம் விளக்குகிறது.  இப்பொழுது உலகெங்கும் வல்லரசுகள் கையாளும் அரசதந்திரத்தைக் காணும்போது, அவர்களும் இவர்  எழுதியதைப் பின்பற்றுகிறார்களோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

சாணக்கியர்

யாரிவர்?  ஒரு ஏழை அந்தணராகப் பிறந்து, மகதப் பேரரசன் நந்தனால் உணவுண்ணும் பந்தியிலிருந்து எழுப்பித் தள்ளப்பட்டதால், அவனையே தொலைத்துக் கட்டித்தான் தனது அவிழ்ந்த குடுமியை முடிவேன் எனச் சூளுரைத்து, அவ்வண்ணமே அரச குடும்பத்தில் பிறக்காத சந்திரகுப்தனை மௌரியப் பேரரசனாக ஆக்கிய – கௌடில்யர் என்ற சாணக்கியர்தான் அவர். 

அவர் எழுதிய நூல்தான், சாணக்கிய நீதி.  இது வடமொழியான சங்கதத்தில் இருவரிப் பாக்களாக எழுதப்பட்டுள்ளது.  மொத்தம் பதினேழு அத்தியாயங்கள் உள்ளன.

நீதி எனில் முறைப்பாடு, சட்ட திட்டங்கள் வாழவேண்டிய அறநெறி என்றே பொருள்கொளல் வேண்டும். ஒரு நாடு தனக்கேற்ற சட்டதிட்டங்களை, நாட்டில் எப்படிப் பொதுவாழ்வு வாழவேன்டும் என்ற நெறிமுறையாக வகுக்கிறது.  பின்னர் அதில் தேவையான மாற்றங்களைக் கொணர்கிறது.

 கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு எழுதப்பட்ட நூல், சாணக்கிய நீதி.  எனவே, அதில் எழுதியிருக்கும் அனைத்தும் தற்பொழுதைய நடைமுறைக்கு ஒத்துவரும் என நினைத்தல் இயலாது.  எனினும், பெரும்பாலானவை இன்றும் பொருந்தும்.  உட்பொருளை எப்படிக் கொணர்கிறோம் என்பதைப் பொருத்தே, எந்தவொரு நீதிநூலும் அதன் மெய்ப்பொருளைத் தெளிவாக்கும்.

விவிலியத்திலிருந்து ஒரு சான்று:  அடிமைகளையும் நன்றாக நடத்து என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியத்தில் வருகிறது.  அதன் உட்பொருள் என்ன?  அமெரிக்காவில், “ஏசுபிரானே அடிமைகள் வைத்திருப்பதை ஆதரித்துள்ளார்,” என்று தெற்கில் அடிமைத் தனத்தை ஆதரித்துக் குரலெழுப்பினர்.  ஆனால், அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களோ, “சாத்தனைப் போல வேதம் ஓதாதீர்.  இப்பொழுது அதன் உட்பொருள் என்னவென்று சிந்தியுங்கள்.  நமக்கு கீழே, நம்மை அண்டி வேலைபார்ப்பவரை நன்கு நடத்துங்கள் என்று ஏசுபிரான சொன்னார் என்றுதான் அதற்குப் பொருள்.  மனிதரை மனிதர் விலங்குபோல நடத்துவது, வாங்கி விற்பது, அவர்தம் உரிமையைப் பறிப்பது அந்த ஏசுபிரானுக்கே அடுக்காது,” எனப் பொங்கியெழுந்து போர் தொடுத்து, அடிமைத் தனத்தையே அறவோடு அகற்றினர்.  இது வரலாறு. 

ஆகவே, எதையும் நாம் உட்பொருளறிந்து உணரவேண்டும்.  சொல்லுக்குச் சொல் மொழிமாற்றம் செய்து பொருள்கொள்வது முறையாகாது என்று முன்மொழிகிறேன்.  இருப்பினும், இக்காலத்துக்குப் பொருந்தாதவை ஒருசில இருக்கக்கூடும்; அதனால், சாணக்கியநீதியே சரியல்ல என்று கூக்குரலிடுவது பொருந்தாது என்ற எச்சரிக்கையையும் செய்வது எனது கடமையாகும்.

அவர் வடமொழியில் எழுதிய நூலை என்னால் இயன்ற அளவுக்குப் பொழிப்புரையுடன் விளக்கி எழுதலாம் என்ற அவாவினால் முன்வந்து தொடங்குகிறேன். 

அவர் எழுதியதில் என்னை மிகவும் கவர்ந்த நீதியை நான் முதலிலேயே மொழிமாற்றம் செய்து கொடுத்திருக்கிறேன்.  ஏன் பலரும் தாய்நாட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள்?  சிந்தித்துப் பார்த்தால், சாணக்கியன் அன்றே சொல்லிய அறிவுரைப்படிதானே நடந்துகொள்கிறார்கள்? 

உக்ரைனில் கல்விக்குச் சென்ற இந்திய மாணவர்

உக்ரைன்-ரஷ்யப் போரில் எத்தனை இந்திய மாணவர் – மருத்துவக்கல்விக்காக அங்கு சென்றவர் திரும்பி வந்தனர்?[1],[2]   இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தும் ஏன் அங்கு சென்றனர்? தன் தாய்நாட்டில் கற்கும் வழி இல்லாததால்தானே? 

அதுமட்டுமல்ல;  இரண்டரை ஆண்டுகளில் இருபத்தியெட்டு இலட்சம் இந்தியர்கள் வெளிநாட்டுக்குக் வேலைநாடிச் சென்றுள்ளார்கள்.[3]  ஏன்?  தாய்நாட்டில் வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் சென்றிருப்பார்களா? ஏன் அவர்களுக்கு எங்கோ பத்தாயிரம் மைல்களுக்கும் அதிகமாக, உலகின் அந்தப் பக்கத்திலுள்ள நாட்டுக்குத் தங்கள் பிறந்தமண்ணை விட்டு ஓடவேண்டும்? அப்படியென்ன அந்த அமெரிக்கக் கண்டம் அவர்களுக்குத் தங்கள் தாய்நாட்டில் இல்லாத சிறப்பு கிட்டிவிட்டது?

சிந்திக்கவேண்டிய விடயம் அது.

அறிமுகத்தை மேலும் வளர்க்காது, சாணக்கியன் செப்பிச்சென்ற நீதியைக் காணுவோமா?

குறிப்பு:  சாணக்கியர் எழுதிய வடமொழிச் செய்யுள்களை நாகரியில் எழுதாது, தமிழெழுத்துக்களிலேயே கொடுத்திருக்கிறேன்.  சரியான ஒலிப்புக்காக 1, 2, 3, 4 என்று எழுத்துக்குமேலே சிறிய எண்களில் கொடுத்துள்ளேன்.

*          *          *

அத்தியாயம் 1 – 1

ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதி4பதிம் ப்ரபு4ம் |

நாநாஶாஸ்த்ரோத்3த்4ருதம் வக்ஷ்யே ராஜநீதிஸமுச்சயம் || 1  ||

பதவுரை:  மூன்றுலகங்களுக்கும் நாயகரும், எங்கும் நிறைந்தவருமான இறைவனைத் தலைவணங்கிப் பல சாத்திரங்களிலிலும் காட்டப்பட்ட அரசநீதியை எடுத்துரைக்கிறேன்.       —             —             1

நீதிநூல் எழுதும் சாணக்கியர்

விளக்கம்இறைவணக்கத்துடன் எதையும் தொடங்குவது தொன்றுதொட்டு வரும் மரபு  அதையே சாணக்கியரும் செய்துள்ளார்.  இதற்கு என்ன விளக்கம் என்று கேட்பதுபோல இருக்கும்.  முதலில் அவர் எப்படி இறைவனை வணங்குகிறார் என்று பார்த்தால், தலையால் வணங்குகிறேன் என்கிறார்.  கைகூப்பி வணங்குவதை விடத் தலையால் வணங்குவது சிறப்பாகும்.  எண்சாண் உடலுக்குத் தலையே முக்கியம் என்பதால், தலையால் பணிவதே சாலச் சிறந்தது என்று குறிப்பிடுகிறார்.

இறைவன் எப்படிப்பட்டவன் என்பதையும் சொல்கிறார்.  மூவுலங்களுக்கு அதிபதி என்றால் அதென்ன மூன்று உலகங்கள்?  நமக்குத் தெரிந்தவரை பூவுலகம் ஒன்றில்தானே மக்களும், உயிரினங்களும் உள்ளன.  அப்படியிருக்க, மற்ற இரண்டு உலகங்கள் எவை என்ற கேள்வி எழுகிறது.  வேதம், பூ:, புவ:, ஸுவ: என்று மூன்று உலகங்களைக் குறிப்பிடுகிறது.  அவை, மண்ணுலகம், விண்ணுலகம், இறையுலகம் என எழுதாக் கிளவி சொல்லுகிறது.  இவை மூன்றுக்கும் அதிபதியாக இருப்பவர் எங்கும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா?  அதனால் இறைவனை விஷ்ணு (omnipresent) என்று சங்கதத்தில் குறிப்பிடுகிறார்.

இக் குறியீட்டைத் திருமால் எனச் சொல்லுவோரும் உளர்.  அவர்கள், சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர் என்ற பெயரும் உள்ளதால், திருமாலையே குறிப்பிட்டுள்ளார் எனவும் வாதிப்பர்.  எனினும் அவரைத் திருநீற்றுடன் சிவபக்தராகவே காட்டுகின்றனர்.  அதனால், இறைவன், எங்கும் நிறைந்தவர் என்று பொருள் கொள்கிறேன்.  ஆனைமுகனையும், “சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்” என்றுதான் துதிக்கிறோம்.  எனவே, அத்துதி விஷ்ணு என்ற சொல்லுக்கு ‘எங்கும் நிறைந்தவர்’ என்றே ஆனைமுகனைச் சுட்டுகிறது. 

ஆகையால், சாணக்கியரின் விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்தவர் என்ற பொருளையே எடுத்துக்கொள்கிறேன்.

இந்நூலின் நோக்கம் அரசநீதிதான். அதையெல்லாம் தான் அறிந்தது எனாமல், அவையடக்கத்துடன் சாத்திரங்கள் உரைப்பதைத்தான் தானும் தொகுத்து வழங்குவதாகச் சொல்கிறார்.

அரசநீதி (political rules) என்று எழுதியிருக்கிறதே, இது அனைவருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழும்.  அரசன் நாட்டிற்காக இயற்றி நிறைவேற்றும் சட்டம் மக்கள் அனைவராலும் பின்பற்றவேண்டியதே.  நெறிமுறைகள் இருந்தபோதிலும், அவை சரிவர பின்பற்றப்படுகின்றவா என்று பார்த்து, தவறுபவர்களைத் திருத்தவோ, தண்டிக்கவோ உரிமையுள்ளவன் அரசன்.  ஆகவே, அரசநீதி என்றால், மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும், அதை எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதும் அதில் அடங்கும்.

அதையே சாணக்கியர் பின்வரும் பாக்களில் வலியுறுத்துகிறார்.

அதீத்யேத3ம் யதாஶாஸ்த்ரம் நரோ ஜானாதி ஸத்தம: |

4ர்மோபதே3ஶவிக்2யாதம் கார்யா(அ)கார்யம் ஶுபா4 (அ)ஶுப4ம்  ||  2  ||

பதவுரை:  எந்த நல்லொழுக்கமுள்ள மனிதன் இந்தச் சாத்திரத்தை கவனத்துடன் கற்கிறானோ, அவன் மிகச்சிறந்த நன்நெறிகள் செய்ய உகந்தவை, செய்யத் தகாதவை என விளக்குவதை அறிவான்.  —  2

விளக்கம்எவராக இருந்தாலும், தான் தொகுத்த நெறிமுறைகளைக் கற்றால், எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது, எவை நல்லவை, எவை தீமை பயப்பன என்று அறிவான் என்று இயம்பவில்லை.   மாறாம நல்லொழுக்கமுள்ள மனிதர் மட்டுமே பயனுறுவார்கள் என்கிறார். 

சங்கதத்தில் ‘தம’ என்றால் சிறந்த என்று பொருள்.  எனவே, சிறந்த மனிதர் எனாமல் ‘ஸத்’ என்ற முன்னொட்டை ஏன் சேர்க்கவேண்டும்? மிகச்சிறப்பான என்று ஏன் சொல்லவேண்டும்?  எந்தவொரு நன்நெறியையும் கற்று விளக்கச் சிறந்தவராக இருந்தாலும் போதாது, மிகச்சிறப்பான, அதாவது நல்லொழுக்கம் உள்ளவராக இருந்தால் மட்டுமே, நெறிகளில் நம்பிக்கைவைப்பர், அதைச் சரியானபடி புரிந்து, உணர்ந்து செயல்படுவர் என்கிறார். 

ஒரு சிறிய உதாரணம்:  ஒரு கொடியவனுக்குப் பயந்து ஒருவர் ஓடிவந்து  இவரிடம், “என்னைக் கொலைசெய்ய ஒருவன் வருகிறான்.  அருள்கூர்ந்து என்னைக் காட்டிக்கொடுத்து விடாதீர்கள்!” என்று  வேண்டிக்கொண்டு ஒளிந்துகொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

ஒளிந்துகொண்ட சில கணங்களில் அக்கொடியவன் வந்து, “இங்கு ஒருவன் ஓடிவந்தானே, நீங்கள் கண்டீர்களா?” என்று இவரைக் கேட்கிறான்.

“பொய் சொல்லாதே, உண்மையே பேசு” என்று அறநெறி உரைக்கிறது. 

இவர் என்ன செய்வார்?  அறநெறியைக் கற்றிருக்கிறார்.  உண்மை பேசவேண்டும் என்று  ஒளிந்துகொண்ட இடத்தைச் சுட்டிக்காட்டுவாரா? அல்லாது, “இங்கு எவரும் ஒளிந்ததை பார்க்கவில்லை,” எனப் பொய்யுரைப்பாரா?

அறநெறிப்படி உண்மை பேசினால், எளியவன் ஒருவனின் உயிர் போகும்;  கொலைக்குத் துணைபோன பாவம் இவரை வந்துசேரும்.  பொய்யுரைத்தால், அந்தப் பாவமும் வந்து சேரும்.  எச்செயலும் அறநெறிக்குப் புறம்பானதே! எதைச் செய்வது? 

பொய்யும் சொல்லக்கூடாது, உண்மையைச் சொல்லி ஓர் அப்பவி கொலையுறுவதற்கும் காரணமாக அமையக்கூடாது.  என்னதான் செய்வார், இவர்?

கொலைசெய்ய வந்தவனையே கேள்விமேல் கேள்வி கேட்கிறார்.  “அவன் ஏன் ஓடி வந்தான்?  அவன் எப்படி இருப்பான்?  நீ ஏன் அவனைத் துரத்திக்கொண்டு வந்தாய்?  அவன் செய்த குற்றம் என்ன?  திருடினானா, இல்லை வேறு ஏதாவது தீச்செயல் செய்தானா?  அவன் உயரமா, குட்டையா, ஒல்லியா, நெட்டையா?  கருப்பா, மாநிறமா, வெளுப்பா?  என்ன நிற ஆடைகள் அணிந்திருந்தான்?”

இவர் குழப்பும் குழப்பத்தால், துரத்துபவன் பொறுமையிழந்து அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

இவர் நன்நெறிக்கு ஊறு விளைவிக்கவில்லை;  உண்மையும் சொல்லவில்லை, பொய்யுரைக்கவுமில்லை;  எளியவனையும் காப்பாற்றிவிட்டார்.  இதை உணர்ந்தே, சாணக்கியருக்குச் சில நூற்றாண்டுகள் பின்னர் அவதரித்த, தமிழ்மறை இயற்றிய வள்ளுவரும்,

திருவள்ளுவர்

பொய்மையும் வாய்மையிடத்தே, புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்,

எனப் பகர்ந்திருக்கிறார்.

‘தர்ம உபதேச விக்யாத’ என்றால் நன்நெறியின் சிறந்தஅறிவுறுத்தல் என்றாகும்.  அது சொல்வதன்படி, எது செய்யத் தக்கது, எது தகாதது என்று அவை விளக்குவதை அறிந்தால்தான் சாணக்கிய நீதியைச் சரியாக உணர இயலும்.  அதைக் கற்றுச் செயல்பட, மிகச்சிறந்த நல்லொழுக்கமும் வேண்டும், அவர் எழுதியதைக் கவனமாகக் கற்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.

அப்பாடா!  எதற்கும் ஒரு மறுப்பு, அதாவது டிஸ்க்ளைமர் வேண்டுமல்லவா!  அதைத்தான் சாணக்கியர் இங்கு கொடுக்கிறார்.  இல்லாவிடில், அவரது நீதி குரங்கு கைப் பூமாலை ஆகிவிடும்.

தத3ஹம் ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா  |

யேன விஞ்ஞாநமாத்ரேண ஸர்வஞ்ஞத்யம் ப்ரபத்3யதே  ||  3  ||

பதவுரை:  எதன் பொருளை அறிந்தவுடனேயே அனைத்து அறிவாற்றலும் வந்துசேருகிறதோ, அதை மக்கள் நலத்தை விரும்பி நான் நன்றாக வழங்குகிறேன்.                              —                            —             3

விளக்கம்எழுத்தாளர் தன்னுடைய பாண்டித்யத்தைக் காட்டுவதற்காக எழுதும் நூல்கள் கற்பவரைப் போய்ச் சேராது; நூலில் துவக்கத்திலேயே, இறைவணக்கத்துடன் யாருக்காக எதற்கு எழுதப்பட்டது என்று சொல்லவேண்டும் என்று தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தன்னுடைய தத்துவபோதம் என்னும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.[4]  அது சாணக்கியரின் நீதிநூலிலும் வெளிப்படுகிறது. 

முதலில் இறைவணக்கம் எழுதினார்.  அதன்பின் எந்த நெறிநூல்களிலுந்து தொகுத்து எவருக்காக எழுதப்பட்டது, இந்நூலை எப்படிக் கற்கவேண்டும், அதனால் என்ன பயன் என்று இரண்டாம் செய்யுளில் எழுதினார்.  இந்தச் செய்யுளில் எதற்காக எழுதினோம் என்பதைத் தெரிவிக்கிறார்.

தனது அறிவுத்திறனை, நீதிநூல்களைத் தான் கரைத்துக் குடித்ததைப் பறைசாற்ற இந்த நூலை எழுதுவதாகச் சொல்லவில்லை; மாறாக, மக்களின் நலத்தை விரும்பியே தன் வழங்கியதாக எடுத்துரைக்கிறார். சரி, எழுதியாகிவிட்டது.  இதைக் கற்பதனால் என்ன கிடைக்கும் என்று இதற்குமுன் எழுதிய செய்யுளில் தெரிவித்திருந்தும் அதை வலியுறுத்துவற்காக, மீண்டும் இந்த நூலின் கருத்தை, அதன் உட்பொருளை உள்வாங்கினால் அனைத்து அறிவாற்றலும் வந்து சேருகின்றன என முழங்குகிறார்.

சங்கதத்தில் ஸர்வ என்றால், அனைத்து என்று அறிவோம்.  அதை நடைமுறையில் தங்குதடையின்றிக் கையாளுகிறோம்.  ஸர்வஞ்ஞத்யம் என்றால் அனைத்தையும் அனைத்தையும் அறியும் திறன் என்று எடுத்துக்கொளல் வேண்டும்.   ‘அனைத்தையும்’ என்றால்?  முன்வந்த செய்யுளில் சொன்ன, நீதி நெறிப்படி செய்யத்தகுந்த நற்செயல்கள் எவை, செய்யத் தகாதத் தீச்செயல்கள் எவை என்பதை ஆய்ந்தறியும் அறிவாற்றலே ஆகும்.

(தொடரும்)


[1]         “ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் உக்ரைனில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்,” உக்ரைனிலிருந்து திரும்பும் மருத்துவ மாணவர்கள்; அவர்கள் எதிர்காலம் இனி என்னாகும்? — விகடன் இணைய இதழ், மார்ச், 3, 2022, https://www.vikatan.com/social-affairs/education/how-ukraine-war-will-impact-future-of-indian-medical-students-who-are-study-there   

[2]      “மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் உக்ரைன் செல்வது ஏன்?” — இந்து தமிழ் திசை, ஆகஸ்ட் 5, 2022, https://www.hindutamil.in/news/india/772662-why-do-thousands-of-students-go-to-ukraine-to-study-medicine-educators-say-opening-more-medical-colleges-in-india-is-the-solution.html

[3]   “2.5 ஆண்டுகளில் வேலைக்காக வெளிநாடு சென்ற 28 லட்சம் இந்தியர்கள்,” தினமணி இணைய இதழ், 5, ஆகஸ்ட், 2022,  https://www.dinamani.com/india/2022/aug/05/28-lakh-indians-have-gone-abroad-for-work-in-25-years-3893192.html

[4]       “தத்துவபோதம்”, தயானந்த சுவாமிகள் ஆங்கிலந்தில் எழுதி பேராசிரியர் ந. மணி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல், ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளை, கோயம்புத்தூர், 2013.

5 Replies to “சாணக்கிய நீதி -1”

  1. – Sreekanth.
    அது காலம் 1911 ஜீன் 14.

    இரண்டு நாளாக தொடர்ந்து அடைமழை.

    பாண்டிசேரியில் குறுகிய சந்திலோர் வீடு… இரவு 7 மணி.

    வாசல் ‎திண்ணையில் மாடத்தில் சின்னதாய் எரியும் அகல்விளக்கு. அடிக்கும் காற்றில்.., ‘நான் அணைந்து விடட்டுமா..? வேண்டாமா..?’ என போராடிக்கொண்டிருந்தது.

    அதன் மங்கலான வெளிச்சம் ஒரு அடி தூரம் கூட தெரியாத நிலை.

    *

    வாசலிலே மழையில் நனைந்தபடி பஞ்சகட்ச வேட்டி கட்டி, மேல் துண்டு போர்த்தி கையில் ஒரு துணிப்பையுடன் வெடவெட வென்று குடுமி வைத்த உருவம். கழுத்தில் ருத்ராஷ்ஷம்.

    “ஆத்துள யாராவது இருக்கேளா…?” மிகபலஹீன குரல்.

    வாசல் ‎திண்ணையில் அமர்ந்திருந்த நீலகண்ட ஐயர், “யாரு வாசல்ல… சித்த முன்னால வாங்கோ… யாருன்னு இருட்டுல தெரியலையே…! மழைல நனையாதேள்! முதல்ல உள்ள வாங்கோ…” என அழைக்க,

    தயங்கி தயங்கி வந்தவர், ”நா…ன்…. என்…பேரு ரகுபதி ஐயர்….”

    ”அதெல்லாம் இருக்கட்டும்… முதல்ல திண்ணையில சாரல் படாம உட்காருங்கோ, நான் போய் தலை துவட்ட துணியெடுத்துண்டூ வரேன்” என்று வேகமாக எழுந்த கிருஷ்ணயரை தடுத்து,

    ”அதெல்லாம் வேண்டாம். நான் செங்கோட்டையிலேர்ந்து வரேன்… என் பேர் ரகுபதி ஐயர். நான் வாஞ்சிநாதனனோட தோப்பனார்… அவனை பார்கனம். அவன் இந்த ஆத்துல தான் இருக்கானாம்…. ஆமாம்.. இது வரகூர் நீலகண்டன் ஆகம் தானே…” என பெரியவர் தயக்கதோடு கேட்க,

    திண்ணையிலே இருந்த நீலகண்ட ஐயர் அவசர அவசரமாக எழுந்து, ”வாங்க… வாங்க… உள்ள ஊஞ்சல்ல உட்காருங்க….” என சொல்லிவிட்டு,

    ரயில்வண்டி போல் நீளமாக இருந்த வீட்டில், ”அடே…ய்… வாஞ்ஞி… வாஞ்சி…” என கத்தி கொண்டே ஓட்டமும் நடயுமாக வீட்டுள்ளே மித்தம் கடந்து ஓட….

    *

    சிறிது நேரத்தில்,

    கஞ்சலான உடம்பு… மா நிறம்… பஞ்சகட்ச வேட்டி… உள்ளடங்கின கண்கள்… கத்தையா குடுமி முடிஞ்சு பின்னால தொங்க, காதுல சின்ன கடுக்கன், தூக்கின புருவம், சற்றே புடைத்த கூர் நாசி… கண்ணுல அபார ஞானத்தோட கோவம்…

    அந்த வாஞ்ஞி என்கின்ற வாஞ்சி நாத ஐயர், M.A., வயது 32. காட்டிலாக்கா அதிகாரி… கல்யாணமாகி சரியா 1 வருடம் மூணு மாதம்.

    மூணுமாசமாச்சு வீட்டை விட்டு வந்து….

    *

    நிலைபடி தாண்டி கூடத்துல வாஞ்சி வந்து நிக்க,

    “ஓ…. நீயா. நீ எதுக்குப்பா இங்க வந்த…?” என இடைநிறுதாமல் கேட்க….

    அந்த தகப்பன் மெதுவாக எழுந்து, வாயில துண்டு பொத்திகிட்டு குலுங்கி குலுங்கி அழ…

    ”ஏன்பா? ஏன் அழற? அழாம விஷயத்தை சொல்லு….. அது தான் எல்லாத்துக்கும் தான் இந்த ஜனங்க அழுகை தான் தீர்வுன்னு நினைச்சின்டிருகேளே…
    நீயும் ஏன் அழறே… அழாம சொல்லி தொலை….!”

    ”வா…ஞ்……ஞி…… குழந்தை செத்து போயிடுத்துடா… குழந்தை நம்மவிட்டு போயிடுத்து… ஆத்துக்கு வாடா… தகப்பனா நீ தான்டா கார்யம் பன்னனும்”

    சொல்லிட்டு குலுங்கி குலுங்கி அழ,

    முகத்தில் எந்த உணர்சியும் இல்லாம அப்பாவை வெறிச்சு பார்த்துவிட்டு, ஏதோ தீர்மானித்தவனாய் ஆழ்ந்த உஷ்ண பெருமூச்சுடன்,

    “அ…ப்பா… ஈமசட்டங்கை நீயே செஞ்சுடு,

    எனக்கு செய்ய வேண்டிய தேச கார்யம் பாக்கி நிறைய இருக்கு,
    வா.வே.சு.ஐயர் கல்கத்தாலேர்ந்து வந்துருக்கார்.
    கூடவே பெரியதேசபக்தாள் எல்லாம் வந்திருக்கா!
    இன்னும் நிறைய பேர் வரபோறா!
    அறிய காரியம் நடக்கபோகிறது!
    தேசத்தை பிடிச்ச பீடை ஒழியபோறது!

    நீயே எல்லாத்தையும் பார்த்துகோ…
    அப்பப்போ வந்து தொந்தரவு பன்னாதே.
    இந்தா… இந்த காசை வெச்சுக்கோ”

    என அவர் பதிலுக்கு கூட எதிர்பார்காமல் கையில் சில நோட்டுகளை தினித்துவிட்டு, விருவிரு என மறுபடி வீட்டிகுள் விரைந்த செங்கோட்டை வீரவாஞ்சி….

    வா.ஊ.சி-க்கும், சுப்ரமண்ய சிவத்திற்கு ஆயுள் தண்டனை கொடுத்தும், தூத்துகுடி கலவரத்தில் பல பேர் கொல்லபட காரணமாக இருந்த “கலெக்டர் ஆஷை” சுட்டுகொல்வது என தீர்மானம் செய்யபடும் ரகசிய கூட்டத்தில் அதை யார் செய்வது என சீட்டுகுலுக்கி போட வாஞ்சியின் பெயர் வர… !

    (எல்லா துண்டுசீட்டிலும் வாஞ்ஞியின் பெயரையே அவர் எழுதியதே தனி கதை)

    செங்கோட்டை ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷை சுட்டு கொன்று விட்டு , ஏற்பாட்டின் படி தன் வாயில் அதே பிஸ்டலால் சுட்டுகொண்டு மரணிக்க, 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரத தேசத்தின் விடுதலைக்கு முதல் தற்கொலை படை….

    “செங்கோட்டை வீர வாஞ்சிநாத ஐயர்”

    *

    ஒரே ஒருத்தன், இன்று வரை அந்த மஹா புருஷனுக்கு வீர அஞ்சலி செலுத்தியதுண்டா ?

    செங்கோட்டை வீர வாஞ்சியின் சரிதத்தை ஒரே ஒரு வரியேனும் பாடத்தில் சேர்க கோரியதுண்டா அரசிடம் ?

    நினைவு நாள் அஞ்சலி என நாலுபேர் கூட கூடவில்லையே குலதுரோகிகளே…

    மறதி நோய் தமிழர்களே…

    பாரதியும், வாஞ்சியும், ஆயிரக்கணக்கான புரட்சியாளர்களை உருவாக்கிய வா.வே.சு.ஐயரும் பிராம்மணகுலத்தில் பிறந்ததே பாவமடா!

    நீசர்களே!

    அந்த மாமனிதனின் மனைவியை இறுதிவரை கண்டுகொள்ளாமல் பட்டினி போட்ட தேசமிது…

    இந்த கொடுமைகளை கூட சகிக்கலாம்….

    #ஆஷ்துரைக்கு_வீரவணக்கம் -னு சிலர் கிளம்ப வேடிக்கை பார்கும் அரசுதான் உச்சகொடுமை.

    அதை எதிர்த்து ஏதும் போசாமல் மௌனமாய் ஒரு மானங்கெட்ட மக்கள்.

    உங்களுக்கு தானாடா பாடினான் அக்ரஹாரத்தின் அதிசயம் சுப்பினீ !

    ” அச்சமும் பேடுமையும் அடிமை சிறுமதியும் உச்சத்தில்
    கொண்டாரடி கிளியே ஊமைஜனங்களடி

    சொந்த அரசும் புவிசுகமும் மான்புகளும் அந்தகர்குன்டாமோ கிளியே அலிகளுக்கின்பமுன்டோ” என !

    Note :-

    வாய்ப்பு கிடைதால் ஆசிரியர்
    “ரகமி” எழுதிய ” வீரவாஞ்சி ”
    என்ற புத்தகம் படியுங்கள். அன்றைய நாளிதழ்கள் செய்தியின் அடிபடையில் அற்புதமாக எழுதியிறுப்பார்.

  2. எந்தவொரு உற்பத்தி பெருக்கும் நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை பெருக்கும் எந்த தொழிலும் 2009லிருந்தே வரவில்லை. போதாக்குறைக்கு நன்றாக இயங்கி பல்லாயிரம் வரி வருவாய் மற்றும் 40000ஆயிரம் வியாபாரம் நடந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மதம் மற்றும் கம்மனாட்டிகளின் தீய செயலால் பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினை உயிரிழப்பு என்று கொண்டு போய் தூத்துக்குடியின் பொருளாதாரத்தையே முடக்கி னர். அங்கு முதலிலேயே ஸ்பிக் டேக் போன்ற தொழில் நிறுவனங்கள் நசிந்து விட்டது. 1967பின்னர் ஆவடி, நெய்வேலி, திருச்சி ஃபெல் போன்ற 10000மேற்பட்டவர்கள் வேலை செய்யும் எந்த தொழிலும் இங்கு கொண்டு வரப்படவில்லை. நடப்ப தெல்லாம் இலவசங்கள் சாராயம் சமாதிகள் நினைவிடங்கள் மணி மண்டபங்கள் சினிமா கூத்துக்கள். அடித்தட்டு மக்களின் பொருளாதார வாழ்வாதார மேம்பாடுபற்றி பேசுவதோ செய்வதோ ஏதுமில்லை. அவர்களை 100வேலை இலவச ரேஷன் இலவச மின்சாரம் பஸ் என்று மனதளவில் அவர்களை முடக்கியாக்கிவிட்டார்கள். அதற்கும் மேலாக ஏதாவது ஒரு நல்ல மத்திய அரசாங்கதிட்டம் பற்றி பேசினால் அவ்வளவுதான் எவ்வளவு சீக்கிரம் பைலை மூடி வைக்க எல்லா போராட்டம் வரும். எதிர்காலத்தில் சந்ததியினர் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

  3. இந்தியா உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது, அம்பானியின் எண்ணெய் நிறுவணம் அதானியின் நிறுவணமெல்லாம் உலக எண்ணெய் வளநாடுகளில் கால்பதிக்க தொடங்கிவிட்டன‌

    இந்திய அரசோ இந்தியாவில் அப்படிபட்ட பராகசுர கம்பெனிகள் இருந்தால் உலக சந்தையில் வாய்ப்பினை பெற்றுதருவதாக அறிவிக்கின்றது

    ஆனால் தமிழகத்தில் இருந்து திராவிட கம்பெனிகள் எதுவும் சென்றதாக தெரியவில்லை

    காரணம் திராவிட கம்பெனிகளெல்லாம் ஒன்று முரசொலி, சன்டிவி, கலைஞர் டிவி என குத்தாட்டம் ஆடிகொண்டிருக்கும்

    அல்லது டாஸ்மாக்குக்கு சரக்கு காய்ச்சி கொண்டிருக்கும்

    இது இல்லை என்றால் சினிமா, கல்குவாரி, மண்குவாரி என அட்டகாசம் செய்து கொண்டிருக்குன்

    மோடிமேல் ஆயிரம் சர்ச்சையினை சொன்னாலும் அவர் முதல்வராக இருந்தபொழுது தன் மாகாணத்தை வேகமாக வளர்த்திருப்பது தெரியும், அவர்கள் வளர்ந்திருக்கின்றார்கள்

    இன்று உலக அரங்கில் இந்திய தொழிலதிபர்களை தேடும்பொழுது அவர்கள்தான் பங்கெடுக்கும் தகுதியில் இருக்கின்றார்கள், அதாவது இதர மாகாண அரசுகள் அந்த அளவு தொழில்களை தொழிலதிர்பர்களை தொழிற்சாலைகளை வளர்க்கவில்லை

    கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெரும் தொழில் ஆயுதம், தொலைதொடர்பு போன்ற பெரும் தொழில்களில் இதர மாகாணத்தில் யாரும் வளரவில்லை அல்லது வளர்க்கவில்லை

    ஆம், மோடி முதல்வராக இருந்தபொழுது அங்கு கச்சா எண்ணெய், எண்ணெய் எடுப்பு, சுத்திகரிப்பு, ஜவுளி என பல தொழில்கள் வளர்ந்திருக்கின்றன‌

    கருணாநிதி முதல்வராக இருந்த தமிழகத்தில் என்ன வளர்ந்தது தெரியுமா?

    கலைஞர் டிவி , சன் நெட்வோர்க், ரெட் ஜியண்ட் மூவீஸ், டாஸ்மாக் மற்றும் திமுகவின் பினாமி சாராய கம்பெனிகள்

    இப்பொழுது எது வளர்கின்றது தெரியுமா?

    ஜி ஸ்குவர்…

  4. நால்வகை சாதிகளை பற்றி மனுநீதி சொல்கின்றது, கீதை சொல்கின்றது அது சூத்திரன் என தாழ்த்தபட்டோரை அடக்கி சாதிவெறி கக்குகின்றது என சில பகுத்தறிவு கோஷங்கள் வழக்கம் போல் எழுகின்றன, அந்த திமுக பிரமுகரின் வழக்கமான இந்து துவேஷத்தை அடுத்து இப்படி குரல்கள் எழுகின்றன‌

    உண்மையில் கீதையில் என்ன சொல்லபட்டிருகின்றது என்பதை சமஸ்கிருதம் கற்று, முறைபடி மொழிபெயர்த்த பண்டிதர்கள் சொன்னதை இங்கு அலசலாம்

    மூலபத்திரம் கேட்டால் கூட கொடுக்காத கோஷ்டிகள் கீதையின் மூலவரிகளை அதுவும் சமஸ்கிருத வரிகளை தெரிந்திருக்க நியாயமில்லை, ராம்சாமியும் வீரமணியும் கருணாநிதியும் சமஸ்கிருத பண்டிதர்கள் அல்ல, கனிமொழி அவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியாது

    கீதையில் “அர்ஜூனா நால்வகை வர்ணமும் நானே உருவாக்கி இயக்குகின்றேன்” என உலக இயக்கத்தை சொல்கின்றான் கண்ணன்

    அதாவது இந்த உலகை இயக்குவது பிராமணன் , சத்ரியன், வைசியன் , சூத்திரன் என நான்கு பிரிவுகள் என தெளிவாக சொல்கின்றான் கண்ணன்

    இதனை சாதி என்றோ, சாதியால் உயர்வு தாழ்வு என்றோ கண்ணன் சொல்லவில்லை மாறாக பள்ளியில் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகள் இருப்பதை போல இந்த பிரிவுகளை சொல்கின்றான்

    இந்த உலகம் அன்றல்ல இன்றல்ல என்றும் இந்த 4 பிரிவுகளில்தான் வரும், அதைத்தான் மிக ஞானமாக முக்கால உண்மையாக சொன்னான் கண்ணன்

    இதில் பிராமணன் என்பது சாதி அல்ல, அது உலகை இயக்கும் சிந்தனை பிரிவு

    இன்றும் விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், திட்டமிடுபவர்கள், சிந்தனையாளர்கள் என ஆட்சிக்கு வழிகாட்டுவோர் உண்டு. அன்றும் இப்படியான ஞானிகள் இருந்தார்கள்

    இப்படியான குழுவைத்தான் அதாவது பின்னணியில் இருந்து சிந்தையால் மூளை பலத்தால் சமூகத்தை இயக்குபவனை பிராமணன் என சொன்னான் கண்ணன்

    அவ்வகையில் விஞ்ஞானியும் பொருளாதார மேதைகளும் சிந்தனையாளர்கள் எல்லோரும் பிராமணர்களே

    அமெரிக்க பொருளாதார மேதை முதல், கம்யூனிச பொருளாதார தத்துவவாதிகள் வரை, ஐன்ஸ்டீன் முதல் நம்ம ஊர் இஸ்ரோ சிவன், அப்துல் கலாம் வரை எல்லோரும் பிராமணர்களே

    இரண்டாம் வகை சத்திரியன் எனும் ராணுவ தர்மம், இன்றும் உலகில் அதுதான் மிரட்டி கொண்டிருக்கும் விஷயம். உலகின் வளமான நாடுகளில் பலமான ராணுவம் அவசியம், ராணுவம் மட்டும் பலமாக இல்லாத தேசம் பாதுகாப்பாய் இருக்க முடியாது

    அவ்வகையில் இன்று இந்திய நரவாணே முதல் அமெரிக்க தளபதி மார்க் வில்லி வரை சத்திரியர்களே, அபிநந்தனும் வீர சத்திரியனே

    மூன்றாம் வகையினை வைசியன் என்றான் கண்ணன். அது அக்கால செட்டியார் முதல் இக்கால பில்கேட்ஸ் வாரன் பெப்பட், அம்பானி, டாட்டா என எல்லாரையும் குறிக்கும் சொல்

    அவர்கள்தான் பணம் கொட்டி தொழில் தொடங்குவார்கள், அவர்கள்தான் தொழில்வாய்ப்பை உருவாக்குவார்கள், தொழில்வாய்ப்புத்தான் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்

    அது அன்றைய வியாபார சமூகம் முதல் இன்றைய ஐடி கம்பெனி ஏன் ஹோட்டல் முதலாளிகள் வரை வரும்

    நான்காவது சூத்திர சமூகம்

    இதுதான் உலகை இயக்கும் அடிநாதம், விவசாயி தொழிலாளி என அடிமட்டத்தில் இருந்து டிவிஎஸ் கம்பெனியில் மெக்கானிக்காக இருப்பவனில் இருந்து, ஐடி கம்பெனியில் டெவலப்பாராக இருக்கும் எல்லோரும் சூத்திரர்களே

    நடிகர்கள், நடிகைகள், கேளிக்கை கோஷ்டிகள் என எல்லோரும் இந்த பிரிவில்தான் வருவார்கள்

    இந்த நாலு பிரிவு எக்காலமும் இருக்கும், அது மானிட இனம் இருக்கும் காலமட்டும் இருக்கும் இதனை ஒரு காலமும் மாற்ற முடியாது

    கண்ணன் இதைத்தான் கீதையில் ஞானமாக சொன்னான்

    தலையால் இயங்கும் பிரிவு அதாவது கற்றவர்கள் ஞானிகள் என ஒரு பிரிவு எக்காலமும் உண்டு என்பதை குறிப்பால் தலையால் இயங்குபவர்கள் என அவர்களை தலையில் இருந்து வந்ததாக பிராமணன் என்றான்

    அது சாதி அல்ல, மூளைபலம் மிக்க பிரிவினை சொல்வது

    அப்படி நெஞ்சுரம் மிக்கோரை சத்திரியன் என சொன்னான் அக்கால அர்ஜூனன் முதல் இக்கால மானெக்சா வரை அவ்வரிசையே

    வைசியன் வயிற்றினை குறிப்பவன் என்றான், அதாவது உணவு ஒரு இடத்தில் விளைந்தாலும் அதை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்ப்பவன் வியாபாரியே

    அவனால் கங்கைகரை கோதுமை நெல்லைக்கு வரும், நெல்லை பக்கத்து பனங்கருப்பட்டி உலகெல்லாம் செல்லும்

    ஒன்றும் விளையாத சிங்கபூர் அரேபியா போன்ற தேசங்களிலும் தொழில்வாய்ப்பை உருவாக்கி சந்தையினை திறந்து எல்லாம் கிடைக்க வைத்து பசியாற்றுபவன் வியாபாரியே

    அதனால்தான் வயிற்றுக்கு உணவிடும் அதற்குவழி செய்யும் சமுகம் வைசிய சமூகமானது

    சூத்திரன் காலால் வந்தான் என்பது கூர்ந்து நோக்கதக்கது, தொழிலாளியோ விவசாயியோ இல்லை மற்றவனோ இருந்த இடத்தில் இருந்து தொழில் செய்யமுடியாது, அவனின் கால்கள் அசைந்தால்தான் தொழில் நடக்கும்

    ஆனால் அதுதான் உலகை தாங்கி நிற்பது

    தொழிலாளி சமூகம் மட்டும் இல்லையென்றால் இங்கு எதுவும் உற்பத்தி ஆகாது, விளையாது, எதுவும் கிடைக்காது. சூத்திரம் என்றால் இயக்கும் சக்தி என பொருள், அப்படிபட்ட தொழிலாளர் உலகைத்தான் கண்ணன் சூத்திரன் என்றான்

    இந்த 4 வர்ணங்களும் எக்காலமும் உண்டு, உலக இயக்கம் இந்த 4 வர்ணத்தாலேதான் நடக்கும்

    இந்த 4 வர்ணங்களுக்குள் உலகை ஆள்வது யார் எனும் போட்டியும் உண்டு, ஒரு காலம் ராணுவம் ஆண்டால் ஒரு காலம் அறிவுடையோர் ஆள்வார்கள்

    ஒரு காலம் தொழிலாளர் ஆள்வார்கள்., ஒரு காலம் வியாபாரிகள் ஆள்வார்கள்

    கற்றவர்கள் ஆண்ட காலம் போனபின்பே, சத்திரிய காலம் வந்தது, மன்னர்கள் என்பவர்கள் அவர்கள்தான்

    அவ்வப்போது அடிமட்ட மக்களின் ஆட்சியும் புரட்சி குரலாக எழும், கம்யூனிசம் என்பது நாம் கண்ட கடைசி தொழிலாளர் அரசாக இருந்தாலும், வரலாறேங்கும் இதற்கு சாட்சி உண்டு

    பகவான் கண்ணனே யாதவர் எனும் தொழிலாளர் வம்சத்துக்குத்தான் ஆட்சி அமைத்து கொடுத்தான்

    இப்பொழுது நாம் வாழும் காலம் வியாபாரிகள் காலம், கார்பரேட் உலகம் என்பது இதுதான். இதுவும் ஒரு நாள் மாறும், இன்னொரு வர்ணம் ஆளும்

    ஆம் கீதை என்பது உலகின் உன்னதமான ஞான நூல், அது பூமியில் மானிடர் வாழ்வின் பிரிவுகளை சொன்னது, எப்படி மானிடரால் இந்த உலகம் இயக்கபடும் என்பதை சொன்னது

    மற்றபடி சாதி ஒழிப்பு திராவிட கட்சிகள் அங்கீகரித்துள்ள சுமார் 100க்கு மேற்பட்ட சாதிகள, அதாவது அய்யர், அய்யங்கார், தெலுங்கு அய்யங்கார் என தொடங்கி ஆதி திராவிடர், அருந்ததியர் என பக்கம் பக்கமாக கீதை சொல்லவுமில்லை, யாரும் எழுதி வைக்கவுமில்லை

    கீதை சொன்ன நான்கு பிரிவுகளும் எக்காலமும் உண்டு

    அவ்வகையில் கருணாநிதி ஒரு பிராமணனாகவும் அந்த பிரமுகரும் பிராமணராககவுமே பதவியில் இருக்கும் பொழுது அறியபட்டார்கள், முக அழகிரி போன்றோர்கள் சத்திரியனாக அறியபட்டார்கள்

    திமுகவின் வியாபாரிகளான ஜெகத்ரட்சகன், டி.ஆர் பாலு, முரசொலிமாறன் போன்றோர் வைசியர்களே, சாராய கம்பெனி முதலாளிகளான திமுகவினரும் வைசியர்களே

    உண்மையில் அக்கட்சியின் இருநூறு ரூபாய் உபி என்பவனே சூத்திரன், அவனே கால்கள் தேய தேய ஓடி ஓடி கட்சிக்கு பாடுபடுகின்றான், அவனாலே அக்கட்சி நிற்கின்றது அவனே உண்மையான திராவிட சூத்திரன்

    கீதையினை அக்கட்சியின் நிலையினை கொண்டு கூட எளிதாக விளக்கமுடியும், அந்த ஞான நூல் இப்படி மானிட சிந்தனையினை மிக நுட்பமாக கவனித்து போதிக்கபட்ட ஞானநூல்

  5. கீழடி காமெடிகள்
    புரோ.., கீழடி மேட்டர் பார்த்தீங்களா….? ”
    ” கீழடியில் என்ன….? ”
    ” அகழ்வாராய்ச்சியில் தமிழனின் வரலாற்றையே புரட்டி போட்டிருக்கு… ”
    ” எப்படி தண்ணியடிச்சி மல்லாக்க கவுந்து கிடந்தவனை குப்புற புரட்டி போட்டிருக்கா…? ”
    ” இதான், ஆர் எஸ் எஸ் சங்கிங்க கிட்ட சகவாசமே வைச்சிக்க கூடாதுங்கிறது. நான் எவ்வளவு சீரியசான மேட்டர் சொல்லிக்கிட்டு இருக்கேன்… நீ நக்கல் பன்ற… ”
    ” சீரியசான மேட்டரா… ? சரி சொல்லித்தொலை… ”
    ” கீழடியில் அகழ்வாராய்ச்சி பன்னதில் அங்க இது வரை கோவில் இருந்த அடையாளம் எதுவும் கண்டு பிடிக்கலை தெரியுமா… ? ”
    ” தெரியும், அதனாலென்ன… ? ”
    ” அதனால் என்னவா… ? தமிழன் இந்துங்கிற வாதம் இனிமேல் நீங்க வாயை திறந்து பேச முடியாது. தமிழனுக்கு மதம் இல்லைன்னு நீங்க ஒத்துக்கிட்டுத்தான் ஆகனும். வேற வழியே இல்லை…. ”
    ” ஓ…. அப்படியா… ? அகழ்வாராய்ச்சியில் காலியான சரக்கு பாட்டில் எதுவும் கிடைச்சதா…. ? ”
    ” சரக்கு பாட்டில் அங்க எப்படி கிடைக்கும்.. ? அந்த காலத்தில் அங்க என்ன டாஸ்மாக் கடையா வச்சிருந்தாங்க… ? ”
    ” கேட்டதுக்கு பதில் சொல்லு நாயே… சரக்கு பாட்டில் எதுவும் அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிச்சாங்களா… ? ”
    ” இல்லை…”
    ” ஒரு குவார்டர் பாட்டில் கூடவா கிடைக்கலை..? ”
    ” இல்லை… ”
    ” உடைஞ்ச பாட்டில்…. ”
    ” அட அப்படி எதுவுமே கிடைக்கலை. ”
    ” சரி, பாட்டில் தான் கிடைக்கலை, ஒரு டிஸ்போசபிள் கப் கூடவா கிடைக்கலை.. ? ”
    ” யோவ் வெறுப்பேத்த வேனாம். அதெல்லாம் கண்டு பிடிக்கலை… ”
    ” தமிழன்னா சரக்கு அடிச்சிருப்பான். சரக்கு அடிக்காம இருக்க தமிழனால் இருக்க முடியாது. பாட்டில் கிடைக்கலைன்னா என்ன அர்த்தம்… ? ”
    ” என்ன அர்த்தம்…? ”
    ” கீழடியில் இருந்த மக்கள் சரக்கடிக்காம யோக்கியனா இருந்த ஒழுக்கமான சமூக மக்கள். அவங்களுக்கும் தமிழனுக்கும் சம்பந்தமே இல்லை… அதனால்…. ”
    ” யோவ், என்னய்யா குழப்பற….? ”
    ” நான் குழப்பலை. ரொம்ப தெளிவாத்தான் இருக்கேன். கீழடியில் இருந்தது வேற ஒரு நாகரீகம். சரக்கடிக்கிற நாகரீகம் உடைய தமிழன் பிற்காலத்தில் வந்தேறியா இங்கே வந்து ஆக்கிரமிச்சிருக்கான்…. ”
    ” அதெல்லாம் ஒத்துக்க முடியாது. கீழடி தமிழர்கள் நாகரீகம் தான். ”
    ” சரி, அதை விடு. கீழடியில் இருந்தது தமிழன் அப்படின்னே ஒத்துக்கறேன். அகழ்வாராய்ச்சியில் துணி எதுவும் கிடைச்சதா… ? ”
    ” இல்லை… ”
    ” கிழிஞ்ச ஜட்டியாவது கிடைச்சதா… ? அது கூட வேண்டாம்… இரண்டு இஞ்ச்ல கந்தை துணியாவது கிடைச்சதா… ? ”
    ” இல்லை… ”
    ” துணி எதுவும் கிடைக்கலைன்னா என்ன அர்த்தம்… ? ”
    ” என்ன அர்த்தம்னு எனக்கு புரியலையே… அகழ்வாராய்ச்சியில் கோவில் கண்டு பிடிக்காததால் தமிழனுக்கு மதம் இல்லை. அதையேத்தான் நானும் சொல்றேன். துணி கண்டு பிடிக்காததால் தமிழன் ஆடையே இல்லாமல் அம்மனமா காட்டு மிராண்டியா திரிஞ்சான். நான் சொல்றது சரியா…. ? ”

    ” போடா சங்கி, ஆரிய கைக்கூலி… ”

    ” ஒரு கிராமம்னா கூட ஐம்பது நூறு ஏக்கர் இருக்கும். வெறும் ரெண்டு கிரவுன்ட் நிலத்தை தோண்டிட்டு தமிழனுக்கு மதம் இல்லைன்னா கூவற…? பிச்சிப்புடுவேன் பிச்சி படவா…. டேய் எங்கடா ஓடுற… ? பதில் சொல்லிட்டு போடா… ”

    ” தமிழனின் கீழடி நாகரீகத்தை மறைக்கும் மத்திய அரசு ஒழிக, ஆர் எஸ் எஸ் ஒழிக…. மோடி ஒயிக…. ”

    ” டேய் கீழடிக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்னாவது சொல்லிட்டு போடா…”

    ” பிரபாகரன் வாழ்க… தந்தை பெரியார் வாழ்க.. சே குவேரா வாழ்க… தளபதி ஸ்டாலின் வாழ்க…. “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *