(படம்: சூரிய தேவன் திருவுருவங்கள். இடப்புறம்: பாலர் காலத்தியது, வங்காளம் (பொ.பி 10-11ம் நூற்.), வலப்புறம்: சோழர் காலத்தியது, தமிழ்நாடு (பொ.பி 11-12ம் நூற்.). இரண்டு திருவுருவங்களும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருள்களாக உள்ளன)
இன்று குரோதி என்ற சௌரமாண சம்வத்ஸர (சூரிய காலக்கணக்கு) ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஓம்.
வருஷத்தையும் மாதத்தையும், பிறகு பகலையும் இரவையும் வேள்வியையும் ‘ரிக்’கையும் கற்பித்த அரசர்களான வருணனும், மித்திரனும் அர்யமானும் ஒப்பில்லாது தங்கள் அரசாட்சியை வெல்கின்றனர்.
ஆதலால், இன்று சூரியோதயத்திலே நாங்கள் வருணனும் மித்திரனும் அர்யமானும் ஆகிய உங்களை சூக்தங்களால் வேண்டுகிறோம் – நீங்களே ‘ருதம்’ என்னும் தேரைச் செலுத்துபவர்கள்.
ஒவ்வொன்றையும் ஆள்பவனும், அசையும் அசையாப் பொருள்களுக்குத் தலைவனும், உலகெங்கும் சுற்றுபவனுமான சூரியனை, நமக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொணர்வதற்காக, சகோதரிகளான ஏழு குதிரைகள் ஏந்துகின்றன.
தெய்வங்களுக்கும் துணையாயிருப்பதும் சுடர்விடுவதுமான அந்த ’உலகின் கண்’ எழுகிறது. அதை நாம் நூறு கார்காலங்கள் காண்போம். நூறு கார்காலங்கள் வாழ்வோம்.
– ரிக்வேதம், 7.66.11-12,15-16
(’ரிக்’ – மந்திரம். ‘ருதம்’ – உலகை இயக்கும் ஒழுங்கின் லயம். கார்காலங்கள் என்றது வருடங்களைக் குறித்தது).
மந்திரங்கள் (மூலம்):
वि ये दधुः शरदं मासमादहर्यज्ञमक्तुं चादृचम् । अनाप्यं वरुणो मित्रो अर्यमा क्षत्रं राजान आशत ॥
तद्वो अद्य मनामहे सूक्तैः सूर उदिते । यदोहते वरुणो मित्रो अर्यमा यूयमृतस्य रथ्यः ॥
शीर्ष्णःशीर्ष्णो जगतस्तस्थुषस्पतिं समया विश्वमा रजः । सप्त स्वसारः सुविताय सूर्यं वहन्ति हरितो रथे ॥
तच्चक्षुर्देवहितं शुक्रमुच्चरत् । पश्येम शरदः शतं जीवेम शरदः शतम् ॥