கடந்த 2025 ஆகஸ்டு 5 அன்று திருப்பூர் அறம் அறக்கட்டளையினரால் நடத்தப்படும் வருடாந்திர ‘ஏகாதசி பேருரை’ தொடரி முதல் உரையை திரு. ம.வெங்கடேசன் நிகழ்த்தினார். இந்தியாவில் தூய்மைப் பணியார்களின் நிலைமை என்பது உரையின் தலைப்பு. நம் கண் முன் நிகழ்ந்தும் நாம் உணர்வற்று கடந்து போகும் உலகம் அது.
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நேரடியாக சென்று பல்வேறு மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர்களின் பணிச்சூழலையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் களத்தில் கண்டறிந்தவர் ம.வெங்கடேசன். இந்த ஆணையத்தின் செயல்பாட்டில் இத்தனை முனைப்புடன் செயல்பட்ட பிறிதொருவரை காணுதல் அரிது. இந்தியராகவும் தமிழராகவும் நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய மனிதர். அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார்.
அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. இந்தியா முழுக்க உள்ள தூய்மைப்பணியாளர்களின் நிலையைக் களத்தில் கண்டறிந்த ஒருவராக அதனை அவர் அரங்கில் இருந்தவர்களுக்கு விளக்கினார். நம் கண் முன் நிகழ்ந்தும் நாம் உணர்வற்று கடந்து போகும் உலகம் அது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக, மிகச் சிறப்பானதாக அவரது உரை அமைந்திருந்தது.
ஐந்து பகுதிகளாக இந்த உரையின் வீடியோ பதிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.