டிசம்பர் 12 ஆம் தேதி முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்ட ஷெரிப் ஒஸ்மான் ஹாடியின் கொலையைத் தொடர்ந்து மின்டும் பங்களாதேஷ் நாட்டில் வன்முறை வெடித்தது. ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் மாணவர் பிரிவான சத்ரா ஷிருவின் பொறுப்பாளர். 2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையிலிருந்து நடத்தியவன். இந்தியாவுக்கு எதிரான அவனது வசைபாடல் காரணமாக முக்கியத்துவம் பெற்றான். இந்த தீவிரவாதி ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ திட்டத்தின் ஆதரவாளராக இருந்தார், இது இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய ‘பங்காளதேச பேரரசு’ என்ற ஒரு புதிய நாட்டினை உருவாக்க முயன்ற அமைப்பின் சூத்திரதாரி , 2024 ஆம் ஆண்டு அமைதியின்மையில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருந்த தீவிரவாத கூறுகளின் பிரதிநிதியாக ஹாடி இருந்தார், . இதன் விளைவாக, துரதிர்ஷ்டவசமான பங்களாதேஷ் இப்போது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளது. .
பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் தீவிரவாதக்குழுக்கள் தங்களின் பிம்பத்தை முன்வைக்கிறார்க்ள. 2009 முதல் தடை செய்யப்பட்ட அடிப்படைவாதக் குழுவான ஹிஸ்ப் உத் தஹ்ரிர் ஒரு இஸ்லாமிய கலிபாவை உருவாக்க முயற்சிக்கிறது. அதன் ஆதரவாளர்கள் டாக்காவில் வெளிப்படையாக அணிவகுத்து பிரச்சாரத்தைப் பரப்புவதைக் காண முடிந்தது. யூணுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஹூட் அமைப்பின் நிறுவன உறுப்பினாரான தசிமுல் கனியை உள்துறைச் செயலாளராகவும், இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களை , பங்களாதேஸூடன் இணைப்பிற்காக வாதிடும் ஹூட் துணை நிறுவனருமான மஹ்ஃபுல் ஆலமை ஒரு முக்கிய உதவியாளராகவும் நியமித்துள்ளார். . இதன்மூலம் பங்களாதேஷ் தீவிரவாதகுழுக்களுக்கு ஆதரவாகவே யூணுஸ் இடக்காலஅரசு உதவி வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் அகற்றப்பட்ட பிறகு, அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி-வங்காளதேசம் (ஹுஜி-பி), ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி), அன்சாருல்லா பங்களா குழு (ஏபிடி), ஜமாத்-உல்-அன்சார் ஃபில் ஹிந்தால் ஷர்கியா (ஜேஏஎஃப்எச்எஸ்) மற்றும் பிற இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பல ஆண்டுகளாகவே இந்தியவிற்கு எதிரான பிரச்சாரங்களை ஜமாத் – இ – இஸ்லாமிய அமைப்பின் மூலம் பங்களா தேஷில் தொடர்ந்து நடத்தி வருகிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகளில் ஷேக் ஹெசீனாவின் தலையீட்டால், வங்காள தேசத்தில் ஐஎஸ்ஐயின் சொத்துக்கள் முடக்கப்பட்டன, பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மூடப்பட்டன. பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்களை உடனடியாக கைது நடவடிக்கையையும் எடுக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமாகவே ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கு தடைவிதிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார். இதன் விளைவாகவே ஐஎஸ்ஐ ஷேக் ஹெசீனாவின் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியது.
கலிதா ஷியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியும் ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சியும் இணைந்து நடத்திய ஆட்சியில் அரசாங்க உர குடோன் ஆயுதங்கள் சேமிப்பு கிடங்காகவே மாறியது. 2004 ஏப்ரல் 1-ந் தேதி வங்காளதேச கடலோர காவல்படை மற்றும் உள்ளுர் காவல்துறையினர் சிட்டகாங்கில் உள்ள அரசுக்கு சொந்தமான யூரியா ஃபெர்டிலைசர் லிமிடெட் கம்பெனியின் பெயரில் கொண்டு வரப்பட்ட பெட்டிகளை சோதனையிடப்பட்டது. சோதனையில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆலையை சோதனையிட்டத்தில் பத்து டிரக்குகளில் 4,930 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் 27,020 கையெறி குண்டுகள் 840 ராக்கட் லாஞ்சர்கள், 300 ராக்கெட்டுகள், போன்ற பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆயுதங்கள் இந்தியாவில் வன்முறையின் மூலம் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் அமைப்புகளுக்கு அனுப்பட இருந்தது என்பது விசானையில் தெரியவந்தது. குறிப்பாக வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக என கூறப்பட்டது.
பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமிய ஆட்சியின் போது, வங்காளதேச தேசிய பாதுகாப்பு புலனாய்வு மற்றும் டைரக்ட்ரேட்ஜெனரல் ஆஃப் ஃபேர்சஸ் இன்டலிஜென்ஸ் அமைப்பினரும் , உல்ஃபா கமாண்டர் பரேஷ் பாருவாவிற்கு பாதுகாப்பான இருப்பிடம் மற்றம் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தது. 2014- ஜனவரி 30-ந் தேதி சிட்டகாங்கில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உல்பா தலைவர் பரேஷ் பாருவா மற்றும் ஜமாத் –இ- இஸ்லாமிய தலைவரும் அப்போதைய தொழில் துறை அமைச்சருமான நிஜாமி மற்றும் உள்துறை அமைச்சர் பாபர் உட்பட 13 பேரின் மரண தண்டனையை குறைத்தது. இது கலிதா ஜியாவின் ஆட்சியில் நடந்த சம்பவமாகும். பிஎன்பிக்கு தேர்தல் நிதி கொடுத்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. 2012-ல் நடந்த ஒரு விசாரனையின் போது, 1991- தேர்தலுக்கு முன்னதாகவே கலிதா ஜியாவிற்கு ரூ50 கோடி வழங்கியதாக விசாரனையில் முன்னாள் தலைவர் ஆசாத் துராணி தெரிவித்தார்.
1971-ல் நடந்த பங்களாதேஷ் சுதந்திரம் அடையும் வரை 9 மாதங்கள் நடந்த போரின் போது, ஜமாத்-இ-இஸ்லாமியாவின் பங்கு முக்கியமானது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களை ஒன்றுப்படுத்துவதே முதன்மையான நோக்கமாக செயல்பட்டது. இதன்காரணமாக வங்க தேசத்தில் போராடியவர்களுக்கு எதிராக மேற்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு முழு ஆதரவை வழங்கியவர்கள் . ஜமாத் இ இஸ்லாமிய அமைப்பினர். மேற்கு பாகிஸ்தான் அரசாங்கம் கிழக்கு பாகிஸ்தான் மத்திய அமைதி குழுவை நியமித்தது. இதற்கு பெங்காலியில் சாந்தி பாஹினி என பெயர். இந்த அமைப்பின் உயர் தலைவர் குலாம் ஆசம் . சாந்தி பாஹினி மேற்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து தங்கள் சொந்த நாட்டின் ( கிழக்கு பாகிஸ்தான்) சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கு எதிராக போர்க் குற்றங்களை புரிந்தார்கள். முஸ்லிம் அல்லாத பெண்களை கற்பழித்து கொன்றதும், மருத்துவர்கள் , விஞ்ஞானிகள், அறிஞர்கள் போன்றவர்களை கடத்தி கொல்வதும் இவர்களின் தினசரி நடவடிக்கையாகவே இருந்தது.
பாரத நாட்டின் அண்டை நாடான பங்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த மற்றும் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற கொந்தளிப்பின் பின்னணயில் உள்ள முக்கிய சதி திட்ட வகுப்பாளர்கள் ஜமாத்-இ-இஸ்லாமிய பங்களாதேஷ் அமைப்பினர். இந்த அமைப்பின் மாணவர் பிரிவான சத்ரா ஷிபிர் வன்முறையை தூண்டிய அமைப்பாகும். இந்த அமைப்பிற்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே சர்ச்சைக்குறிய இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக நடந்த போராட்டங்களை பல்கலைகழக மாணவர்கள் மூலம் தூண்டிய அமைப்பு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தான்.
கடந்த இரண்டு வருடங்களாகவே சத்ரா ஷிபிர் வுடன் இணைந்த பல மாணவர் அமைப்பினரின் செயல்பாடுகளை ஷேக் ஹசீனா அரசு அனுமதித்தது. அரசு அனுமதியளித்ததால், பங்களாதேஷ்சில் உள்ள, டாக்கா பல்கலைகழகம், சிட்டகாங் பல்கலைகழகம், ஜஹாங்கீர் பல்கலைகழகம், சில்ஹெட் பல்கலைக்கழகம், மற்றும் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகம் ஜமாத்-இ-இஸ்லாமிய மாணவர் பிரிவான சத்ரா ஷிபிரின் கட்டுப்பாட்டில் இயங்கின. மேற்படி பல்கலைக்கழங்களில் நடந்த தேர்தல்களில் சத்ரா ஷிபிர் அமைப்பினரே வெற்றி பெற்றார்கள். இந்த அமைப்பு பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பல மாணவர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை பெற்றுள்ளார்கள்.
ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை, மேலும் ஹாடி போன்ற புதிய ‘இளைஞர் சின்னங்கள்’ இந்த வளர்ச்சியின் விளைவாகும். இதனால், ஹாடியின் மரணம் உடனடியாக இந்தியாவுக்கு எதிரான சொல்லாட்சியாக மாறுகிறது , நாட்டில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிவைக்கப்படுகிறது. முகமது யூனுஸின் தற்போதைய இடைக்கால ஆட்சியின் வழக்கமான மற்றும் நிலையான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, இந்த ஆட்சியின் அரசியலமைப்பிலும் ஒரு சதி கோணம் இருந்தது என்பதை நிறுவுகிறது. பொறுப்பேற்றதிலிருந்து, ஆட்சி, குறிப்பாக அதன் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் இந்தியாவை கோபப்படுத்தும் தனது விருப்பத்தை ஒருபோதும் மறைக்கவில்லை . மாணவர்கள் செய்ததை இந்தியா ‘ஒருபோதும் விரும்பவில்லை’ என்று அவர் குற்றம் சாட்டினார் , இது 2024 அமைதியின்மையைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது, இது இந்தியா தனது ஆட்சிக்கு எதிரானது என்பதைக் குறிக்கிறது. இதனால், ஃபிராங்கண்ஸ்டைனைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு இந்தியாவைப் பொறுப்பேற்கச் செய்வதன் மூலம் யூனுஸின் ஆட்சி இந்தியா மீதான தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, ஹாடியைத் தாக்கியவர்களைக் கைது செய்து ஒப்படைக்குமாறு இந்தியாவை அது வலியுறுத்தியது , ஆனால் டாக்கா பெருநகர காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான எந்த சரிபார்க்கப்பட்ட ஆதாரமும் இல்லை என்று கூறியது.
இரண்டு வருடங்களாக இவர்களின் செயல்பாடுகளை கண்காணித்த பின்னர் பங்களாதேஷ் அரசாங்கம் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கும், மாணவர் அமைப்பான சத்ரா ஷிருக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த மாணவர் அமைப்பினர் பங்களாதேஷில் உள்ள மதராஸக்களிலும் அதன் செயல்பாடுகளிலும் அதிக அளவில் ஊடுருவி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதன் மூலம் நாடுமுழுவதும் ஷேக் ஹெசீனா அரசுக்கு எதிராக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். . இந்த உருவாக்கத்திற்கு ஆட்சி மற்றும் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினர்.
டாக்காவில் உள்ள இடைக்கால ஆட்சி, ஹசினாவுக்கு எதிரான அதன் நம்பகத்தன்மையை வெளிப்புறமாகவும் காட்ட வேண்டும் என்று உணர்கிறது. இதனால், அது உள் மற்றும் வெளிப்புற இந்திய எதிர்ப்பு கூறுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது, அதே நேரத்தில் அதன் தலைமை ஆலோசகர் பாகிஸ்தானுடன் வலுவான உறவுகளுக்கு ஆதரவாக உள்ளார் . உண்மையில், ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வகுக்க அது இறையாண்மை உரிமையாக இருக்கும்போது, யூனுஸ் ஆட்சி இந்தியாவிற்கு எதிராக ஒரு அழுத்த தந்திரத்தை பயன்படுத்த முனைகிறது, இதனால் பிராந்தியத்தில் பாகிஸ்தான் முன்மொழியப்பட்ட இந்தியா எதிர்ப்பு அச்சில் சேர சிந்திக்கிறது . இருப்பினும், வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக மற்றொரு போர்முனையைத் திறக்க இஸ்லாமாபாத்துடன் கைகோர்த்து விளையாட இடைக்கால ஆட்சியின் விருப்பம் மிகவும் கவலைக்குரியது. பிரிவினைவாத உல்ஃபா தலைவர் பரேஷ் பருவாவை சீனாவில் உள்ள அவரது தற்போதைய மறைவிடத்திலிருந்து டாக்காவிற்குத் திரும்புவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் , வடகிழக்கு இந்தியா குறித்த வங்கதேசத் தலைவர்களின் ஆத்திரமூட்டும் கருத்துக்களுடன் இணைக்கப்படும்போது, அது இழிவானது மற்றும் ஆட்சியின் எந்தத் தடையும் இல்லாமல் இருக்கிறது.

ஜமாத் – இ – இஸ்லாமிய அமைப்பினர் தங்கள் நாட்டிலில்லாமல் அண்டை நாடான இந்தியாவிலும் பயங்கரவாத தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டவர்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கைது செய்யப்பட்ட நுருல் இஸ்லாம், புல்புல் முகமது, நஜ்ருல் இஸ்லாம், மற்றும் கமால் அகமது சிக்தர் ஆகியோர் சத்ரா ஷிபிர் அமைப்பைச் சார்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள்.
ஜமாத்-இ-இஸ்லாமிய பங்களாதேஷ் அமைப்பினரின் கடந்த கால செயல்பாடுகளே இவர்களின் தாலிபான் சிந்தனையின் வெளிப்பாடு நன்கு தெரியும். பங்களாதேஷ் நாட்டில் இரண்டு கட்சிகள் மட்டுமே பிரதான கட்சிகளாக இருக்கின்றன. ஒன்று அவாமி லீக் அதாவது விடுதலைக்காக போரிட்ட ஷேக் முஜிப்பர் ராஹ்மன் கட்சியும், இவர்களுக்கு எதிராகவும், 1971-ல் விடுதலை போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட பங்களாதேஷ் தேசிய கட்சி. பிஎன்பி என வர்ணிக்கப்படும் பங்களாதேஷ் தேசிய கட்சியின் தலைவி கலிதா ஜியா ஊழல் மற்றும் கடத்தல் வழக்கின் காரணமாக சிறையிலிருப்பவர். போராட்டத்தின் விளைவாக, சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள கலிதா ஜியாவுடன் கூட்டணியிலிருக்கும் அமைப்பு ஜமாத்-இ-இஸ்லாமி. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் கலிதா ஜியாவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சி.
இவர்கள் இருவரும் இந்தியாவிற்கு எதிராகவும், எல்லை மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத அமைப்பினருக்கு ஆதரவாக களம் கண்டவர்கள். குறிப்பாக அஸ்ஸாம் உல்பா பிரிவினருக்கு ஆயுதங்கள், பயிற்சி, நிதி கொடுத்து உதவிய அமைப்பு பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பாகும். . ஆயுத கடத்தலில் ஈடுபட்டவர்கள் பிஎன்பி கட்சியினர். 2006-ல் மார்ச் மாதம் கலிதா ஜியா இந்தியாவிற்கு வந்த போது, உள்துறை அமைச்சகம், டெல்லி மற்றும் வாரணாசி குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஐஎஸ்ஐயின் பாதுகாப்பில் வங்காள தேசத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற ஆவணத்தை அவரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட 172 பயிற்சி முகாம்களின் விவரங்களையும் அளித்தது. ஆனால் அவரது ஆட்சி முடியும் வரை மேற்படி விவரங்கள் மீத எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமில்லாமல், கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரியும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவருமான கர்னல் அப்துல் ஹக், பங்களா தேஷ் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள 7 மாநிலங்களும், 7 சுதந்திர நாடாக மாறவேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் பேசியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், பங்களாதேஷ் நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் , இந்திய நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க வேண்டும் என வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகின்றன. இதற்கு பின்னால், பாகிஸ்தானின் சதி வலை உள்ளது.
டாக்காவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, முன்னாள் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் குலாம் ஆசாமின் மகனும், பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) அப்துல்லாஹ்ல் அமன் ஆஸ்மி இந்தியாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் , இந்தியா துண்டு துண்டாக உடைந்து போகாத வரை பங்களாதேஷ் முழு அமைதியை் காணாது என்ற விஷமத்தனமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவும் பங்களாதேஷூம் உறவுகளை மீட்டெடுக்க முயற்சிக்கும் நேரத்தில் அவரது கருத்துக்கள் வெளி வந்துள்ளன. பங்களா தேஷ் நாட்டில் சர்ச்சைக்குரிய நபராக வலம் வரும் அமன் ஆஸ்மி , இந்தியாவை விமர்சிக்கவும், பிராந்திய புவிசார் அரசியல் குறித்து இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருபவர். இவருக்கு பின்னாலிருந்து இயக்குபவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயாகும். பாதுகாப்பு நிபுணரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான கர்னல் மயங்க் சௌபே, பங்களாதேஷ் அதிகார சுற்றுச்சூழல் அமைப்பின் சில பிரிவுகளுக்குள் அமைதியாகப் புரையோடிப் போயுள்ள இந்திய எதிர்ப்பு மனநிலை தான் இருக்கிறது என்றார்.
பங்களா தேஷ் நாட்டில், இந்தியாவைப் பற்றிய முரண்பட்ட கருத்துக்களை உருவாக்குவதில் ஜமாத்-இ-இஸ்லாமி முன்னிலை வகிக்கிறது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள மக்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல காத்திருககிறார்கள் என்றும், அவர்களால் பங்களாஷே் நாட்டிற்கு உதவ முடியவில்லை என்ற ஆதங்கம் இருப்பதாக ஒரு பொய்யான கருத்தை பரப்புகிறார்கள். இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த ஐம்பதாண்டு காலமாக மேற்கு பாகிஸ்தான் பின்னர் மாறிய பங்களா தேஷ் நாட்டிலிருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் ஊடுருவலே இந்த கருத்து வலுப்பெற காரணமாகும். உங்கள் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்றும், ஆனால் நாம் புதிய அண்டை வீட்டாரை உருவாக்க முடியும். இதன் மூலம் பங்களா தேஷ் நாட்டை ஒரு வலுவான சுதந்திர நாடாக மாற்ற முடியும் என முஸ்லீம்களை தூண்டிவிடும் வன்ம செயலில் ஈடுபட்டு வருகிறார்.
சிட்டகாங் மலைப்பகுதியை பங்களா தேஷ்சின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கும் 22 கி.மீ. அகலமுள்ள கோழி கழுத்தை ( Chicken’s neck ) வெட்டி இந்தியா கைப்பற்ற விரும்புவதாகவும் ஜமாத் தலைவர் குறிப்பிட்டார். காரணம் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களுக்கு நுழைவு வாயிலாக அமைந்துள்ள பகுதி கோழிகழுத்து பகுதியாகும். சிட்டகாங் பகுதியை காப்பாற்ற ஜீலையில் பங்களாதேஷ்சில் நடந்த போராட்டம் போல் மீன்டும் ஒரு போராட்டத்தை துவங்க வேண்டும் என ஜென்இசட் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். இதற்காக பங்களாதேஷ் சில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக பாகிஸ்தானின் மூத்த ராணவ அதிகாரிக்கு சிட்டகாங் பகுதியை பங்களாதேஸூடன் இணைக்கும் புகைப்படத்தை பரிசாக வழங்கியுள்ளார். சிட்டகாங் பகுதியை பாதுகாக்க , நேரடியாக சீனாவை வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை எடுக்க தூண்டுகிறது.
இந்தியா மற்றும் பங்களா தேஷ்சுடன் இணைந்து சிட்டகாங்கில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும், நிலை நாட்ட முயலும் முயற்சியை சீர்குழைக்கும் நோக்கத்துடன் ஜமாத்-இ-இஸ்லாமி செயல்படுவதை, ஊக்குப்டுத்தும் நோக்கத்துடன் பங்களாதேஷ் தேசீய கட்சி உறுதுணையாக இருக்கிறது. சிட்டகாங் (Chittagong) குறித்த இந்தியாவின் நிலைப்பாடு, அதன் மூலோபாய முக்கியத்துவம், சீனாவுடனான நெருக்கம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த கவைலகளை மையமாகக் கொண்டது. இந்தியா சிட்டகாங் துறைமுகத்தை தனது வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாகவும் பார்க்கிறது. சிட்டகாங், இந்தியாவின் “சிக்கன்’ஸ் நெக்” (Chicken’s Neck) எனப்படும் சிலிகுரி நடைபாதை அருகே அமைந்துள்ளது. இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் மிக முக்கியமான பகுதி. எனவே, சிட்டகாங்கில் யார் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பது இந்தியாவின் வர்த்தகம், கடற்படை போக்குவரத்து, மற்றும் பிராந்திய பாதுகாப்பை பாதிக்கும். சீனா சிட்டகாங்கில் முதலீடு செய்து, அதன் துறைமுகத்தில் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இது இந்தியாவைத் தவிர்த்து, வங்காளதேசத்தை சீனாவுடன் நெருக்கமாக்குகிறது, இது இந்தியாவிற்கு ஒரு மூலோபாய கவலையாக உள்ளது.
இந்தியாவிற்கு எதிராக உருவாகியுள்ள பாகிஸ்தான் – அமெரிக்கா கூட்டு முயற்சிக்கு , பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டுடன் மூலோபாய ரீதியாக இணைந்திருக்கும் சூழ்நிலையை பங்களாதேஷ் உருவாக்க முயலுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவும், தனது கால்நடத்தை அதிகரித்து போட்டியிடும் பெரும் வல்லரசு நலன்களுக்கான மையப் புள்ளியாக பங்களாதேஷ்த்தை மாற்றுகிறது. இதன் மூலம் இந்தியாவின் அச்சத்தை அதிகம் உருவாக்க முயலுகிறது. இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தை பலவீனப்படுத்த பாகிஸ்தான் பழைய உறவுகளை மீண்டும் நிலைநாட்ட முயல்கிறது.
இப்படிப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பினரும் அவர்களின் மாணவர் பிரிவான சத்ரா ஷிபரும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் இணைந்து போராட்டத்தை நடத்தினார்கள். இந்த இணைப்பு மீன்டும் இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஊக்கத்தை கொடுக்கும், இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

இந்திய பேரரசு பங்களாதேஷ் இந்துக்களை காக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பதிவிடலாம்.