நீதிமன்றங்களின் உத்திரவுக்கு தலைவணங்காத அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், நாளுக்கு நாள் பெருகிவருகிறார்கள். ஆர்எஸ்எஸ். தனது நூற்றாண்டு கொண்டத்தின் மூலம் வைத்த பஞ்ச பரிவர்த்தனின் ஒரு அம்சம், அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதாகும். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சட்டத்தை மதித்தால், பொதுமக்களும் சட்டத்திற்குறிய மரியாதை அளிப்பார்கள். சில வருடங்களுக்கு முன், நமது நாட்டின் இராணுவ அமைச்சராக இருந்த திரு.ஜகஜீவன்ராம், வருமான வரி கட்ட மறந்து விட்டதாக அதிகாரிகளிடம் கூறினார். இதையே வருமான வரி வழக்கில் பொது ஜனம் ஒருவர், மறந்து விட்டேன் என கூறியதை நினைவு கூற வேண்டும் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதிமொழி எடுத்து ஆட்சியில் அமர்ந்து, சட்டத்திற்கு மரியாதை கொடுக்காமல் , மம்தா பானர்ஜி சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்கிறார். அதன் பின்னணியை புரிந்து கொள்ள வேண்டும்.
2020-நவம்பர் 28-ந் தேதி, மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்தது. இதில் பெறப்பட்ட லஞ்ச பணம் சட்ட விரோதமாக தேர்தலுக்காக ஐ-பேக் நிறுவனத்துக்கு கைமாறியதாக கிடைத்த தகவலையடுத்து , கொல்கட்டாவில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில், அமுலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். இதன் காரணமாக அந்நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயீன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.. சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, மாநில முதல்வர் மம்தா , பிரதீக் ஜெயின் வீட்டிலிருந்து சில முக்கியமான ஆவணங்கள எடுத்து சென்றுள்ளார். இது மம்தாவின் அகம்பாவத்தையும், சட்டத்தை மதிக்காத ஒருவராக தன்னை காட்டியுள்ளார். இது தொடர்பாக அமுலாக்க துறையும், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.
2021 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் PMLAபிரிவு 17 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தொடர்புடைய 46 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தி பல ஆவணங்களைப் பறிமுதல் செய்த போது, மம்தா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் நிலக்கரி சுரங்க ஊழலில் ஹவாலா ஆபரேட்டர்களில் ஒருவரானவர், ஐ-பேக் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை மம்தா தேர்தலுக்காக ஹவாலா மூலம் மாற்றுவதற்கு உதவியதாக ஐ-பேக் நிறுவனனம் உடந்தையாக இருந்தது விசாரனை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரனையின் போது, மம்தாவின் வழக்கறிஞரின் ஒழுக்க சீரகேடான நடத்தையின் காரணமாக, விசாரணையை ஒத்திவைத்து, நீதிபதி பாதியிலேயே நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார். . சோதனையில் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். இது பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழலின் பணப்பரிமற்றச் சங்கிலி தொடர்பான விசாணையாகும். மேற்கு வங்கத்தின் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் குத்தகை பகுதியிலிருந்து சட்ட விரோதமாக வெட்டியெடுக்கப்பட்டு கடத்தப்பட்டதாக 2020-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த கடத்தலுக் கு உடந்தையாக இருந்ததாக அனும் மாஜி என்பவர் நடத்தியதாகவும், இதன் மூலம் ரூ 2,742 கோடி சட்டவி்ரோத வருவாய் ஈட்டப்பட்டடதாக அமுலாக்கத்துறை கணக்கிட்டுள்ளது.
ஈஸ்டர்ன் கோல்ட்பீல்டு லிமிடெட் க்கு உட்பட்ட சுரங்களிலிருந்து நிலக்கரியை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து திருடி, பன்குரா, பர்தாமன், புருலியா மற்றும் மேற்கு வங்காளத்தின் பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை பிரிவுகளுக்கு விற்றதாகவும், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட இந்த நிலக்கரியின் கணிசமான பகுதி, ஷகாம்பரி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாகவும், இதன் மூலம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது. மேற்படி சட்டவி்ரோத பணபரிமாற்றம் ஐ-பேக் மூலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுள்ளதாக குற்றச்சாட்டு.
நிலக்கரி கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் ரூ20 கோடி , கோவா தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு, காந்திலால் மூலம் கோவாவிற்கு மாற்றப்பட்டது. மேற்படி 2021-2022 காலகட்டத்தில் கோவா சட்டமன்றத் தேர்தலின் போது ஐ-பேக் நிறுவனத்தின் பணிகளுக்கா பயன்படுத்தப்பட்டதாக அமுலாக்கதுறை குற்றச்சாட்டில் உள்ள விவரமாகும். ஹவாலா மூலம் பெறப்பட்ட இந்த பணம், ஹெர்ட்ஸ் அண்ட பிக்சல்ஸ் மற்றும் ஏஎஸ்எம் ஈவென்ட் டெக்னாலஜி மூலம் ஐ-பேக் பணிகளுக்குச் செலவிடப்பட்டதாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. மேலும் ஐ-பேக் நிறுவனத்தின் இயக்கநர்களில் ஒருவரான பிரதிக் ஜெயின், கோவாவில் நடந்த தேர்தல் பணிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக முன்னின்று நடத்தியவர். இவருடைய வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றதில் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அமுலாக்கத்துறை கூறியது.
சோதனைகள் பற்றிய செய்தி வெளியான உடனேயே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க காவல்துறை இயக்குநர் ராஜீவ் குமார் மற்றும் காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா ஆகியோருடன் கொல்கத்தாவில் உள்ள பிரதிக் ஜெயின் வீட்டிற்கு வந்து, கட்சியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் வேட்பாளர் கட்டியலைத் திருடவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறி, லேப்டாப், சில ஆவணங்களை எடுத்துக் கொண்டார். மேற்படி ஆவணங்களை கால்துறையினர் மம்தாவின் காரில் வைத்ததாக பார்வையாளர்களும், ஊடகத்தினரும் தெரிவித்தார்கள். மம்தாவின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளில் முழுக்க முழுக்க கட்சியின் தேர்தல் உத்தி இருப்பதாக கூறுகிறார். தேர்தல உத்தியே, நிலக்கரி கடத்தலில் பெறப்பட்ட ஊழல் பணத்தில் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்ற விவரமும் இருப்பதாக அமுலாக்கத் துறை கூறியுள்ளதை பொய் என நீருபிக்க மம்தா கைப்பற்றி ஆவணங்களை திருப்பி ஒப்படைத்திருக்க வேண்டும்.
தனது சர்வாதிகாரத்தை காட்டுவிதமாக, அமுலாக்துறை சோதனை நடத்தி்ய போது நடந்து கொண்டார் மம்தா வருவதற்கு முன் அமைதியாக நடத்த சோதனை, வந்த பின்னர். ஏராளமான போலீஸ் அதிகாரிகளுடன் அடாவடித்தனமாக பல ஆவணங்களை அள்ளி சென்றுள்ளார். குறிப்பாக ஜெயின் வீட்டிலருந்து பச்சை நிறக் கோப்போடு மம்தா கோபத்துடன் வெளியேறுவது ஊடகங்களில் தெளிவாகத் தெரிந்தது. மம்தாவின் வாகனத்தை தொடர்ந்து நிறைய வாகனங்கள் சால்ட் லேக்கில் உள்ள ஐ-பேக் அலுவலகத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்து மம்தா மற்றும் அவரது உதவியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொருத்தமான ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினார்கள் என்றும் கூறப்பட்டது. இது பணமோசடி சம்பந்தமான வழக்கை தடுப்பதற்கு சமமாகும். இது சம்பந்தமாக அமுலாக்துறையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

மம்தா கைப்பற்றிய ஆவணங்கள் என்ன என்பதை வெளிப்படையாக காட்டவில்லை. ஆனால் அமுலாக்கத் துறையினர், நிலக்கரி கடத்தல் வழக்கில் பெறப்பட்ட சட்டவிரோத் பணம் ஐ-பேக் நிறுவனத்திற்கு சென்றதாகவும், அந்தப் பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை மம்தா பானர்ஜி பலவந்தமாக எடுத்துச சென்றதாக கூறுகிறது. இது விசாரணைக்கு எதிராக ஆதாரங்களைச் சிதைக்கும் முயற்சியாகும்.
மம்தாவின் சர்வாதிகார போக்கு , மற்ற மாநில முதல்வரகளுக்கு உத்வேகத்தை கொடுக்கும். குறிப்பாக தமிழக முதல்வர் ஏற்கனவே இடி பற்றிய பொய்யான தகவல்களை பரப்புவதில் முன்னியில் உள்ளார். ஆனால் சட்டப்பூர்வான சோதனையின் போது, ஆதாரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தால், அமலாக்கத்துறையின் வழக்கை வலுப்படுத்தக்கூடும். மம்தாவின் நடவடிக்கை பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ், அரசு ஊழியர்கள பொதுப் பணிகளைச் செய்வதைத் தடுத்தல், பொது ஊழியரைத தடுத்து தாக்குதல் அல்லது குற்றசியல் பலாத்தாகரம் செய்தல் போன்ற பிரிவுகளில் கீழு் வழக்கு தொடுக்கப்படும். சட்டப்பூர்வமான சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, சோதனை நடத்தும் அதிகாரியின் அனுமதி அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாவிட்டால் , ஆவணங்கள் அல்லது சில பொருட்களை அகற்றுவதற்கு அரசியலமைப்பு அதிகாரி உட்பட எந்தபொரு தனிநபருக்கும் உரிமையில்லை. இந்த உண்மையை மறந்து விட்டு, மம்தா நடந்து கொண்டார். காரணம், சட்டவிரோத குடியேறிகளின் வாக்ககளை பெற்று ஆட்சியிலிருப்பதால் ஏற்பட்ட இறுமாப்பாகும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்திரவின்படி, அமலாக்துறையினர் ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை நடத்திய போது, அதிரடியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா, தனது அரசின் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தி. ஆவணங்களை தன்னிச்சையாக எடுத்து சென்றதாக குற்றச்சாட்டுகள். இது ஒன்றும் மம்தாவிற்கு புதிதல்ல. தனது அனுமதியில்லாமல் சிபிஐ தங்கள் மாநிலத்தில் எந்த விசாரனையையும் நடத்தக் கூடாது என உத்திரவிட்டுள்ளார். இதனால், மேற்கு வங்கத்தில் உலா வந்த பயங்கரவாதிகள், மாநில காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை. மாறாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் மட்டுமே கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர், சட்டத்திற்கு புறம்பாக குற்றவாளிகளை பாதுகாப்பது என்பது வழக்மான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக , ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக் என்பவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளை சோதனை நடத்தவிடாமல், அவரது ஆதரவாளர்கள் மற்றும் மம்தா கட்சியினர் தடுத்து ஈடி அதிகாரிகளைத் தாக்கினார்கள். ஷாஜகான் ஷேக் தலைமறைவானர். பொது மக்கள் குறிப்பாக பெண்கள், பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி, ஷாஜகான் ஷேக் வீட்டின் முன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மம்தா அரசு குற்றச்சாட்டை மறுத்தது. 55 நாட்களுக்கு பிறகு ஷாஜகான் ஷேக் சரணடைந்தார். கல்கத்தா உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்திரவிட்டது. இது தான் மம்தாவின் சட்டத்திற்கு மரியாதை கொடுக்கும் லட்சணம்.
பல் வேறு வழக்குகளில் குறிப்பாக தீவிரவாதிகளை கைது செய்தது, மம்தா அரசின் காவல்துறையினர் கிடையாது. முர்ஷிதாபத்தில் ஆறு அல்கொயிதா தீவிரவாதிகளை கொல்கத்தாவில் கைது செய்ததும், , சீல்டாவில் 4 ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஜமாத் முகமது பங்களாதேஷ் தீவிரவாதிகள் நான்கு பேரை கைது செய்தது முதல் கொண்டு, 2009-ல் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான யாசின் பட்கல் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க அரசு ஒரு சிறு திருட்டு குற்றச்சாட்டு சுமத்தி ஒரு மாதத்தில் யாசின் பட்கலை வெளியே விட்டது. 2023-ல் ஹவுராவில் ஐஎஸ்ஐஎஸ் நபர்கள கைது,. ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு, கயா குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் பதுங்கியிருந்தவர்களை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பினர். பயங்கரவாத முஸ்லீம்களுக்கு ஆதரவாக மம்தா இருப்பதால், சட்டத்தின் மூலம் கைது செய்ய வேண்டிய கடமையை கொண்ட மாநில காவல்துறையினரின் கைகள் மம்தா அரசால் கட்டப்பட்டன.
தற்போது மேற்கு வங்கத்தில் காணப்படும் மத்திய-மாநில அரசு மோதல் போக்கு, தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் சவால் விடுவதாக இருக்கிறது. தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் மம்தாவின் போக்கிலேயே அமைந்துள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை (ED) அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்தது. அப்போது மாநில போலீசாருக்கும் ஈடி அதிகாரிகளுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டு, ஈடி அதிகாரி தாக்கப்பட்டார். மணல் குவாரி தொடர்பான வழக்குகளில் தமிழகத்தின் பல மாவட்ட ஆட்சியர்களுக்கு ஈடி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றது. “மாநில அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்புவது மாநில தன்னாட்சியைப் பாதிக்கும்” என்பது தமிழக அரசின் வாதம். ஆனால் இறுதியில் மாவட்ட ஆட்சியிர் சட்டதிற்கு கட்டுப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் உத்திரவால் அடங்கினார்கள். ஈடி மூன்று முறை தமிழக டிஜிபிக்கு வழக்கு தொடுக்க ஆதராங்களை கொடுத்தும், காவல்துறையினர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோருக்கு எதிரான ஈடி நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் என்று திமுக அரசு தொடர்ந்து கூறி சட்டவிரோதமாந கோடிக்கணக்கில் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு மாநில சுயாட்சி என்ற போர்வையில் , சட்டத்திற்கு புறம்பாக குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது.
சட்டத்தை தன்காலில் மதித்த அரசு ஸ்டாலின் அரசு, கார்த்திகை தீப திருநாளில், திருப்பரங்குன்றம் மலை மீது, விளக்கு ஏற்ற அமைக்கப்பட்ட விளக்கு தூணில் தீபம் ஏற்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் அனுமதி அளித்த பின்னரும் கூட, அரசு அனுமதிக்கவில்லை. உயர் நீதிமன்றம் அளித்த சட்டத்தின் படி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, அதன அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சித் தலைவரையும், காவல் துறையினரையும் , தீர்ப்பு புறம்பாக செயல்பட தூண்டியது. மேலும் இந்துக்களுக்கு எதிராகவும், ஆகம விதிகளுக்கு புறம்பாகவும், மேல் முறையீடு என்ற போர்வையில் மேல் முறையீடு செய்தது. இது அப்பட்டமான சட்ட மீறலாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, பல முறை கோவில் நிர்வாகம் சம்பந்தமாக , தமிழக அரசுக்கு குட்டு வைத்தாலும், சட்டத்தை மதிக்காத அரசாகவே திமுக அரசு உள்ளது.
கேரளாவிலும் இதே போன்ற சூழல் நிலவுகிறது: தங்கம் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் செயலர் சிவசங்கரன் கைதானபோது, இடதுசாரி அரசுக்கும் மத்திய அமைப்புகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. மாநில அரசின் சில நிதி திட்டங்களை மத்திய அமைப்புகள் ஆய்வு செய்வதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுவும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என்பதை சிந்திக்க கூட இடதுசாரிகளுக்கு நேரமில்லை.
மம்தா பானர்ஜியும், மு.க.ஸ்டாலினும், ஒரே மாதிரியாக சட்டத்திற்கு புறம்பாக குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதும், இதில் மம்தா எதிர்ப்பு தெரிவிக்க தெருவில் இறங்கிப் போராடுவதும், ஈடி மற்றம் வருமான வரி துறை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தவது, முடிந்தால் தாக்குவது. முக.ஸ்டாலின் ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது, அறிக்கைகள் மூலம் கண்டனம் தெரிவிப்பது, கூட்டணி கட்சித் தலைவர்களை கொண்டு, ஈனத்தனமாக மத்திய அரசை குறிப்பாக மோடியையும், ஆர்எஸ்எஸ்.யும் விமர்சனம் செய்வது. இவ்வாறு இவர்களின் செயல்பாடுகளின் முக்கிய நோக்கம், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையினரின் சோதனைகளைத் தடுப்பதன மூலம், குற்றத்தின் ஆதாரங்களை மறைக்கப்படவும், ஊழல் புகார்களுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக , மத்திய-மாநில உறவு மற்றும் மத்திய அரசின் ஏஜெண்டுகள் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவது, இதன் மூலம் குற்றவாளிகளை காப்பாற்றும் தந்திரமாகும். உச்ச நீதிமன்றம் பல முறை பல வழக்குகளில் மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க துறைகளின் நடவடிக்கைகளில் தலையிட மறுத்த போதிலும், சட்டத்திற்கு கட்டுப்படாமல், விமர்சிப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் குறைக்ககூடும்.
சட்டம் கூறுவது, வாக்குமூலமே ஆதாரம்: ED அதிகாரியிடம் ஒரு நபர் அளிக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் காவல்துறையிடம் அளிக்கும் வாக்குமூலம் ஆதாரமாக ஏற்கப்படாது. கைது செய்யும் அதிகாரம்: ஒருவரைத் தேடுதல் (Search) மற்றும் பறிமுதல் (Seizure) செய்யும் போது, பிடியாணை (Warrant) இல்லாமலேயே கைது செய்ய ED-க்கு அதிகாரம் உள்ளது. சொத்துக்களை முடக்குதல்: குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் என்று சந்தேகிக்கப்பட்டால், அவற்றை உடனடியாக முடக்கும் (Attachment) அதிகாரம் இவர்களுக்கு உண்டு. ஜாமீன் பெறுவதில் சிக்கல்: PMLA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஜாமீன் பெறுவது மிகவும் கடினம். குற்றம் சாட்டப்பட்டவர் “தான் நிரபராதி” என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது (Reverse Burden of Proof). இந்த சட்டத்தை உருவாக்கும் போது, மம்தா காங்கிரஸ் கட்சியிலிருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏன் மம்தாவும், ஸ்டாலினும் மற்றவர்களும் அமலாக்க துறையின் சோதனையாகட்டும், அல்லது விசாரணையாகட்டும் ,இடையூறு ஏற்படுத்த முயலுவது சட்டமேயாகும்.
ஒரு நபர் மீது ஊழல் அல்லது மோசடி வழக்கு இருந்தால் மட்டுமே ED விசாரிக்க முடியும். ஆனால், மாநில அரசு அந்த வழக்கை முடித்து வைத்தாலும், ED தனது விசாரணையைத் தொடர முடியும் என்பது மாநிலங்களுக்கு அதிருப்தியைத் தருகிறது. அதிருப்தி ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல்வாதிகளும், ஆளும் கட்சியினரும் அகப்படுவதால் ஏற்படும் அதிருப்தியாகும். மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் ED நேரடியாகத் தலையிடுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று மம்தா மற்றும் ஸ்டாலின் போன்றோர் வாதிடுகின்றனர். ஆனால் ஊழல் மற்றும் மோசடி செய்யும் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
சட்டத்தை மதிக்காமல், அமலாக்கத்துறையினரை தடுத்து, கோப்புகளை திருடி சென்ற மம்தா, 2011 –ல் ஆட்சிக்கு வந்த பின்னர், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு சட்டத்தை முன்னிலைப்படுத்தி வாதிட்டார் என்பதை கவனிக்க வேண்டும். நிலக்கரி கடத்தல் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க முனைந்த அமலாக்க துறையினரை தடுத்த மம்தா, கம்யூனிஸ்ட் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஒதுக்கீடு குறித்து மறுவிசாரணைக்கு உத்திரவிட்டார். மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பிறகு, பழைய கால வழக்குகளை மீண்டும் தோண்டி எடுப்பது மற்றும் புதிய வழக்குகளைப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன: : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கௌதம் தேவ் மீது மம்தா பானர்ஜி தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் நடந்த அரசியல் கொலைகள் (எ.கா: நந்திகிராம், சிங்கூர் சம்பவங்கள்) தொடர்பாகச் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது சட்டப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக இடதுசாரித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பல FIR-கள் பதிவு செய்யப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட தலைவர்கள், தங்கள் கட்சித் தொண்டர்கள் மீது மம்தா அரசு பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டினார். பல இடங்களில் இடதுசாரி கட்சி அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவோ அல்லது சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகவோ கூறி மம்தா அரசு நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுத்தது. கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தின் “அத்துமீறல்களை” விசாரிக்க மம்தா பானர்ஜி பல விசாரணை ஆணையங்களை (Commissions of Inquiry) அமைத்தார்: மாரிச்ஜான்பி (Marichjhapi) சம்பவம்: 1979-ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மீண்டும் விசாரிக்க மம்தா ஆர்வம் காட்டினார். சாரதா மற்றும் ரோஸ் வேலி முறைகேடுகள்: இந்தச் சிட் ஃபண்ட் மோசடிகளில் இடதுசாரித் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி மாநில காவல்துறை மூலம் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. அதாவது, மம்தாவும் , ஸ்டாலினும், பினராயி விஜயனும், தங்களது எதிரிகளை அடக்க, சட்டத்தை கையில் எடுப்பார்கள். தாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாக காட்டிக் கொள்ளும் சிறந்து நடிகர்கள்.
