சென்ற தவணையின் இறுதியில் வெளியிடப்பட்ட அருணகிரியின் கேள்விகளின் மேல் எழுப்பப்படும் ஐயங்களும், விளக்கங்களும் இந்தப் பகுதியில் இடம் பெறுகின்றன.
அருணகிரி சார்,
நீங்கள் எழுப்பியுள்ள வினாக்களுக்குள் புகுவதன்முன், உங்களுடைய ஐயங்கள் மீதான என் ஐயங்களைத் தீர்க்கவும்:
2008/9/7 arunagiri a <arunagiri.a@gmail.com>
ஹரிகி அவர்களே,
பிரமாதம், இது முக்கியமான விஷயம், யாராலும் அதிகம் பேசப்படாத விஷயம். கர்ணன் என்ற தேரோட்டி மகனுக்கு இளவரசுகளுடன் சேர்த்து துரோணர் தனுர் வித்தை பயிற்றுவித்தார் என்பதே பல சுவாரஸ்யங்களுக்கும் சாத்தியக்கூறுகளுக்கும் இடம் தருவதாக எனக்குத் தெரிகிறது:
முதல் ஐயம்: தேரோட்டி மகனுக்கு, இளவரசர்களுடன் சேர்த்து வித்தை பயிற்றுவிக்கக் கூடாது என்று யார் சொன்னது, அல்லது எங்கே சொல்லப் பட்டிருக்கிறது. சூதன் (தேரோட்டி) is not a driver’s job. It is a very highly responsible position.
1. மற்ற இளவரசுகளோடு சூத புத்திரன் கர்ணன் என்று தனித்துச் சொல்வதால், ராஜ குலப்பயிற்சியில் எக்ஸப்ஷனாக இவன் மட்டுமே சேர்க்கப்பட்டான் என்று கொள்ளலாம் என நினைக்கிறேன். (லாமா?)
கீசகனை ஒரு இருநூற்று முப்பத்தாறு முறையாவது பாஞ்சாலி ‘சூத புத்ரா’ என்று அழைக்கிறாள் என்பது தெரியுமா?
கீசகன், விராட மன்னனுடைய மைத்துனன். விராட மன்னனிடத்தில்தான் பாண்டவர்கள் அஞ்ஞாத வாச காலத்தில் தங்கியிருந்தார்கள். கீசகனையும், உபகீசகர்களையும் சூதபுத்ரர் என்றே அழைக்கின்றனர்.
அவன் சூதபுத்ரன் என்றால், அவனுடைய சகோதரி சுதேஷ்ணையும் சூதபுத்ரிதானே? அரசனுடைய மனைவி, சூதபுத்ரியாக இருப்பாரா? கீசகன் சூத வம்சத்து அரசன். அரக்கு மாளிகை சம்பவத்துக்குப் பிறகு பாண்டவர்கள் தப்பிச் சென்று குடியிருந்த ஏகசக்ரபுரம் எல்லாம் கீசகனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது ஒருசிலர் சொல்லும் கருத்து. இந்தக் கருத்தை மஹபாரதம், பாகவதம் போன்ற நூல்களின் துணையோடு சரிபார்க்க வேண்டியதிருக்கிறது. ஆயினும், கீசகன் விராட மன்னனுடைய மனைவி சுதேஷ்ணையின் சகோதரன். ஆகவே, அரசியின் சகோதரன், அரச பரம்பரையில் வந்தவன்தான் என்பதில் ஐயமில்லை. கீசகன் சூத வம்சத்தவன்; சூத புத்ர என்று மிகப்பலமுறை அழைக்கப்பட்டுள்ளவன். ஆகவே, சூத வம்சத்தில் அரசர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. விராட மன்னனே மத்ஸ்ய வம்சத்தைச் சேர்ந்தவன். பாஞ்சாலன் மத்ஸ்ய வம்சத்தைச் சேர்ந்தவன். மத்ஸ்ய வம்சம் என்பது மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள குலத்தைக் குறிக்கும் சொல். மத்ஸ்ய, சூத, நிஷாத (வேட) என்று எல்லா வம்சங்களிலும் அரசர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆகவே, கர்ணன் பிறப்பால் உயர்குடியில் தோன்றி, வளர்ப்பால் தாழ்ந்தவனாகி, அதன் காரணத்தாலேயே தனக்கு இயற்கையாகக் கிட்டியிருக்கவேண்டிய உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டான் என்று விவரிப்பது a mere sympathy seeking argument and has got no validity more than that. இதைக் குறித்த மற்ற விவரங்களை உங்களுடைய பதில் கிடைத்த பிறகு பேசுகிறேன்.
2. ஏன் அவ்வாறு சேர்க்கப்பட வேண்டும்? கவச குண்டலத்தோடு பிறந்தவன் என்ற செய்தி பரவியிருந்ததால் இவன் ஸ்பெஷல் என்று முடிவு செய்து இவனைச் சேர்த்திருக்கலாமோ?
கர்ணன் அதே ஹஸ்தினாபுரத்தில் வளர்ந்தவன்தானே. ஆனாலும், அவன் எங்கிருந்தோ திடுமென பிரவேசித்தவன் என்பதுபோன்றதொரு தோற்றம்தானே நிலவிவருகிறது.
கவச குண்டலத்தோடு பிறந்தவன் என்ற காரணத்தால் ‘கீழ்சாதிக்கு’ விலக்களிக்கப்பட்டு, அரண்மனையில் அனுமதிக்கப்பட்டானா என்று கேட்க வருகிறீர்களா? தேரோட்டி என்பவன் கீழ்சாதி என்று யார் சொன்னார்கள்?
3. கவசகுண்டலத்தோடு பிறந்தவன் என்ற செய்தி பரவலாகத்தெரிந்ததென்றால் குந்திக்கும் இது கட்டாயம் தெரிந்திருக்கும். அதனாலேயே அவனைத் தன்மகன் என அப்போதே யூகித்து அவனுக்கு இளவரசுகளோடு பயிற்சி கொடுக்க அழுத்தம் தந்திருக்கலாம்.
குந்தி, கர்ணனை முதன்முறையாகப் பார்ப்பது, துரோணருடைய சீடர்கள், தாம் பெற்றிருந்த பயிற்சிகளை மக்களுக்கு முன்னால் எடுத்துக் காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த ஆட்டக் களத்தில் அல்லவா? அதுவும், கர்ணனைப் பார்த்து, தன் மகன்தான் இவன் என்பதை உணர்ந்ததும் மயக்கமுற்று விழுகிறாள் அல்லவா? கர்ணன், குந்தியுடைய மகன் என்பது பீஷ்மர், கிருஷ்ணன் போன்ற வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த ரகசியம் அல்லவா?
அப்படி இருக்கும்போது, குந்தியின் பரிந்துரையின் பேரிலா துரோணர் கர்ணனைத் தன் மாணவர்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டிருப்பார்? எந்த அடிப்படையில் இவ்வாறு ஊகிக்கிறீர்கள் என்பதனை நான் புரிந்துகொள்ள உதவுங்கள்.
கே: துணியை அணிந்து உடல் தகிக்கும் கதையெல்லாம் வியாசபாரதத்தில் இல்லை என நினைக்கிறேன்.
கர்ணனும் குந்தியும் சந்திக்கும் இந்தக் கட்டத்தை கமலா சுப்ரமணியம் (பாரதீய வித்யா பவன் பதிப்பு) எழுதியிருப்பதைப் படித்துப் படித்து, பலமுறை கண்ணீர் விட்டிருக்கிறேன். உணர்ச்சிமயமாக எழுதியிருப்பார். ‘என் சிறுவயதில் எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அதில் ஒரு ராஜகுமாரி தோன்றுவாள். அவளுடைய முகத்தை எனக்குக் காட்ட மாட்டாள். என்னை விட்டு விலகிச் சென்றபடி இருப்பாள். அவளைத் தொடர்ந்து சென்று, ‘உன் முகத்தை எனக்குக் காட்டு’ என்று நான் கதறுவேன். ஆனால் அவள் மறைந்துவிடுவாள். பிறகு, வயதாக ஆக, இந்தக் கனவு வருவது நின்று போனது. அந்தக் கனவில் தென்பட்ட பெண்ணைப் போல நீங்கள் காணப்படுகிறீர்கள். நீங்கள் யார்’ என்று கர்ணன் கேட்பதாகவெல்லாம் எழுதியிருப்பார். மனம் உருகிப் போகும்.
ஆனால், இது அத்தனையும் கமலா சுப்ரமணியம் அவர்களுடைய சொந்தக் கற்பனை என்பதை அறிந்துகொண்ட சமயத்தில் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவில்லை. இவற்றில் ஒரே ஒரு வாக்கியம் கூட வியாச மூலத்தில் இல்லை.
யோசித்தால், இந்தச் சித்திரிப்பில் உள்ள குறைபாடுகள் பல புலப்படும்.
- முகத்தைக் காட்ட மறுத்த பெண்ணுடைய முகத்தை ஒத்த சாயல் உள்ள பெண்மணியைக் கர்ணன் எவ்வாறு அடையாளம் கண்டான்?
- இந்த நிகழ்சி நடைபெற்ற காலகட்டத்தைக் கணக்கிட்டால், கர்ணனுக்கு அந்தச் சமயத்தில் குறைந்தபட்சம் 55-60 வயது ஆகியிருக்கும். அதுவரையில் கர்ணன், குந்தியைப் பார்த்ததே இல்லையா! அதுவும் பாண்டவர்களுடைய வனவாச காலம் முழுவதும் குந்தி வசித்தது ஹஸ்தினாபுரத்தில். முதலமைச்சனாக விளங்கிய விதுரனுடைய வீட்டில். தர்பாரில் நுழையாமல் விலகியிருக்க குந்தி என்ன கோஷாவா? அப்புறம் எப்படி, ‘இவள் யார்’ என்று கர்ணனுக்கு அடையாளம் தெரியாமல் போனது?
சினிமாவுக்கு, குந்தியின் சேலை. கமலா சுப்பிரமணியத்தின் (அற்புதமான, மனப்பூர்வமாக, அற்புதமான–இப்படிப்பட்ட ஒருசில கற்பனைகளைத் தவிர்த்து மிக அற்புதமான) பதிப்பில், ‘கனவுப் பெண்’. வியாசர் இப்படி எதையும் சொல்லவில்லை. வாசகனுடைய (அல்லது பார்வையாளனுடைய) உணர்வுகளோடு விளையாடும் கலையை நன்கறிந்தவர்கள் அவரவருக்குத் தோன்றிய விதத்தில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
நல்லதுதான். Creativity has its own beauty, and every narrator or re-teller has his own way, and his own right of his genius to put the story before the reader as he perceives it. என்ன விபரீதம் ஏற்படுகிறது என்றால், நாம் இப்படி இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கைகளிலிருந்து அறிவதை வைத்து, மூலத்தை எடைபோடத் தொடங்குகிறோம்.
கர்ணனுடைய கேரக்டர் ஸ்டடி ஒன்று எழுதவேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. எழுதினால், கர்ணனைப் பற்றிய பற்பல பிம்பங்கள் உடையும். மக்களால் நான் சொல்லும் உண்மைகளை ஜீரணிக்க முடியாது. கர்ணனை ‘அர்த்தரதன்’ என்று பீஷ்மர் மதிப்பிட்டார். ஆனால் சிகண்டியை ஒரு மகாரதி என்று பகவத் கீதையின் தொடக்கத்தில் துரியோதனன் வாய்மொழியாகவே சொல்லப்படுகிறது’ என்று ஒருமுறை சென்னைஆன்லைனி்ல் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரைக்குப் பத்துப் பன்னிரண்டு வாசகர்கள் கொதித்துப்போய் எனக்குத் தனிமடல் எழுதியிருந்தார்கள். ‘கர்ணனை எவ்வாறு குறைத்து மதிப்பிட்டாய்’ என்று. பிறகு அதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, என் விளக்கங்களை உரிய ஆதாரங்களோடு அந்தத் தொடரில் எழுதினேன் என்பது வேறுகதை.
கே: முன்னமேயே அவளுக்குத் தெரிந்திருந்ததோ? குந்தி தன்னைத் தாயெனச்சொல்கையில் கர்ணன் பெருவியப்பு அடைந்ததுபோல் படித்ததாக நினைவில்லை.
குந்தி, பாண்டவர்களுடைய தாய், துரியோதனனுடைய சித்தி என்றெல்லாம் கர்ணனுக்குத் தெரியும். அவள் தன்னைத்தேடி வந்திருப்பது அவனுக்கு வியப்பையே ஏற்படுத்தியது. அதுவரையில் அவள்தான் தன்னுடைய தாய் என்பது அவனுக்குத் தெரியாது. கொஞ்சம்கூட ஊகித்திருக்கக்கூட வாய்ப்பில்லை. அவளே தன்னுடைய தாய் என்று அறிந்ததும், வியாசர் சொல்கிறார்:
“Vaisampayana said (After Kunti had said this), Karna heard an affectionate voice issued out of the solar circle. Coming from a great distance, that voice was uttered by Surya himself with paternal affection. (And it said)–The words said by Pritha are true. O Karna, act according to the words of thy mother. O tiger among men, great good will result to thee if thou fully followest those words.’
இதற்குப் பின்னால்தான் கர்ணன், குந்தி தன்னுடைய தாய் என்பதை அறிகிறான்.
கே: குறைந்தது குந்திக்கு கர்ணன் யாரென்பது முதலிலேயே தெரிந்திருக்க வேண்டும். சந்தேகோபாஸ்தமாக கர்ணனுக்கும் கூடத் தெரிந்திருக்கலாம். இது பாண்டவ கௌரவர்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கலாம். இப்படி யோசித்தால் தேரோட்டி மகனுக்கு மட்டும் ஏன் சிறப்புச் சலுகை என்பதற்கு சில புதுவிளக்கங்கள் கிடைக்குமோ?
மீண்டும். தேரோட்டி மகனுக்குச் சிறப்புச் சலுகை என்று ஏன் சொல்கிறீர்கள்? தேரோட்டி மகனுக்கு யுத்தப் பயிற்சி தேவையில்லையா? ஒரு சாதாரண 25 pounder பீரங்கியை ஐந்துபேர் கொண்ட குழு இயக்கும். ஐந்து பேருக்கும் ஐந்து தனித்தனி வேலைகள். ஆனாலும், ஐந்து பேருக்கும், ஐந்து வேலைகளிலும் பயிற்சி தரப்படும். இது இன்றைக்கும் நடைமுறையில் உள்ள யுத்தப் பயிற்சி. இது ஏனெனில், யுத்த களத்தில் எந்தக் கணத்தில் யார் செத்துப் போவார்கள், யாருடைய பணியையும் சேர்த்துச் செய்யவேண்டி வரும் என்பதெல்லாம் எதிர்பார்க்க ஒண்ணாதவை. ஆகவே, யுத்தப் பயிற்சி எல்லோருக்கும் உண்டு. தேரோட்டிக்கு மிக முக்கியமாக உண்டு. Once again. His job cannot be equated to that of a car driver of these days. மன்னர்களுக்கு அமைச்சர்கள் தேரோட்டுவார்கள். சல்லியன் தேரோட்டியிருக்கிறான். கைகேயி, ஸத்யபாமா என்று திறமை நிறைந்த தேரோட்டிகள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கும் தேரோட்டும் பயிற்சி இருந்திருக்கிறது. இவர்களைத் தவிர தேரோட்டிகளின் இனமும் இருந்திருக்கிறது.
சூதன் என்பவன் ஜாதியால் சூதனா, தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனா? உங்களுடைய கேள்வி இந்தக் கருத்தின் அடிப்படையில் எழுகிறதா?
அடுத்த தவணையில் இந்த விவாதங்கள் தொடர்கின்றன.
very nice argument.
I enjoyed yur good ideas.
vaazga Hari!,
yurs,
Yogiyaar
அற்புதமான விளக்கங்கள் ஹரிகி ஐயா.
வியாசர், வைசம்பயானர், சூதர் (இவர் தேரோட்டி அல்ல, ஒரு மகரிஷி!), ஸௌதி என்று மகாபாரதம் தந்த மகரிஷிகளின் வரிசையில் தற்காலத்தில் இந்தப் பேரிதிகாசத்தின் உட்பொருளையும், நுணுக்கங்களையும் மீண்டும் விளக்க அவதரித்த மகரிஷியாகவே தங்களைக் கருதி வணங்குகிறேன்.
Hari Sir
I am looking forward to your article on Karnan. We need more enlightment on famous heroes/characters of Mahabharatha. Again, I humbly salute your knowldge.
Heartfelt thanks
Rama
I was following Sri Harikrishnan’s articles on Kamba Ramayanam, Mahabharatha and Bharathiyar.All his articles have not appeared for quite some time. I request him to continue these subjects and also request the editors to persuade him to do so.