ச.திருமலை. ம.வெங்கடேசன் இருவரும் ஃபேஸ்புக்கில் இது குறித்து எழுதியதை இங்கு தொகுத்தளிக்கிறோம் – ஆசிரியர் குழு.
ச.திருமலை :
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சி செய்துள்ளது.
2002க்குப் பிறகு ஒரு மதக் கலவரம் கிடையாது.
எந்தவிதமான ஊழல் புகார்களும் கிடையாது.
உள்கட்டமைப்புகள் சாலைகள், பாலங்கள், நதிகள், மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப் பட்டுள்ளன.
மந்திரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் எந்நேரத்திலும் அணுகுவதற்கு ஏற்றவர்கள்.
காங்கிரஸினால் 50 வருடங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நர்மதா அணைத் திட்டம் துவக்கப் பட்டு அணையின் உயரம் உயர்த்தப் பட்டு வறட்சி பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப் பட்டுள்ளன.
ரோரோ திட்டம், நதி விமான திட்டம் போன்ற புதிய திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
வேலை வாய்ப்புகள் புதிய தொழில்கள் துவக்கப் பட்டுள்ளன.
முக்கியமாக அரசு அலுவலகங்கள் துவங்கி மாநில அரசின் மந்திரிகள் வரையிலும் ஊழல் லஞ்சம் எங்கும் இல்லாத ஒரு மாநிலமாக மாற்றப் பட்டுள்ளது.
22 ஆண்டுகள் ஒரே கட்சி ஆட்சி செய்துள்ளது அதனால் மக்களுக்கு இயல்பாக ஏற்படும் சலிப்பும் கோபமும் இருந்திருக்கும்.
பெரும்பாலான வணிகர்களும் வியாபாரிகளும் உள்ள மாநிலத்தில் ஜி எஸ் டி வரி விதிப்பு ஆரம்ப கட்ட சிரமங்களை ஏற்படுத்தியிருக்கும்.
பண மதிப்பிழப்பின் காரணமாக வணிகர்கள் நிறைந்த மாநிலத்தில் பெரும் பண இழப்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலமாக இருந்தும் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப் பட்டுள்ளது.
இன்னும் பல நூறு நல்ல விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இப்படி ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு ஆட்சியை அளிக்கும் இப்படி ஒரு கட்சியின் வெற்றியை எந்தவொரு தேசத்தை விரும்பும் இந்தியரும் வரவேற்பார்கள். மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆனால் இப்படியாகப் பட்ட ஒரு ஆட்சி தொடர்வதை விரும்பாமல் இந்த வெற்றியை வெறுக்கும் பழிக்கும் தூற்றும் மனிதர்கள் எவ்வளவு கேவலமான எவ்வளவு மோசமாக ஊழல்களையும் பிரிவினைகளையும் ஆதரிக்கும் ஒரு கேடு கெட்ட மனிதர்களாக இந்தியாவை வெறுக்கும் வீணர்களாக இருக்க முடியும்?
இந்த வெற்றியைக் கண்டு வயிற்றெரிச்சல் அடைபவர்களும், சாபம் இடுபவர்களும் நிச்சயமாக இந்திய தேசத்தின் விரோதிகளாகவும் இந்தியா நாசமாகப் போக வேண்டும் என்று மனமார விரும்பும் கெடுதலை மட்டுமே விரும்பும் அழிவை விரும்பும் வக்கிரம் பிடித்த கீழ்மையான மனிதர்களாக மட்டுமே இருக்க முடியும்.
தொடர்ந்து 22 ஆண்டு கால ஆட்சி செய்ததின் காரணமாக மக்களிடம் ஏற்படும் இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றங்கள், காங்கிரஸ் கட்சியினால் தூண்டி விடப் பட்ட ஜாதிப் பிர்வினைகள், கலவரங்கள், விவசாயிகளின் அதிக பட்ச எதிர்பார்ப்புகள் வறட்சி காரணமான ஏமாற்றங்கள் எதிர்ப்புகள், ஜி எஸ்டி டிமானிட் போன்ற அரசின் திட்டங்களினால் ஏற்பட்டுள்ள இயல்பான எதிர்ப்புகள் பாக்கிஸ்தானின் சதித் திட்டங்கள், உள்கட்சி பூசல்கள் திறமையின்மைகள், மூன்று முதல்வர்கள் மாறியது என்று கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான எதிர்மறை காரணங்களையும் வலுவான எதிர்ப்புகளையும் மீறி குஜராத் மாநிலத்தில் பிஜேபி அடைந்திருக்கும் இந்த வெற்றி உண்மையில் வரலாறு காணாத பிருமாண்டமான ஒரு வெற்றியாகும். சாதனைகளுக்கும் வளர்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் நல்ல தலமைக்கும் ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
இமாச்சல் பிரதேச தேர்தல் பற்றி சொல்லிக் கொள்ள அதிகம் ஏதுமில்லை. அங்கு காங்கிரஸ் ஆட்சியின் மெகா ஊழல்கள் காரணமாக பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. பிஜேபியின் முதல்வர் வேட்ப்பாளரும் திறமையானவர் கிடையாது புகார்களுக்கு உள்ளானவர். அவர் தோல்வி அடைந்தது அல்லது தோல்வி அடைய வைக்கப் பட்டது ஒரு நல்ல விஷயமே. அடுத்து வரும் முதல்வர் அங்கு மற்றொரு குஜராத்தை உருவாக்குவார் என்று நம்பலாம்
இத்தகைய வெற்றிக்காக இந்தியாவை உண்மையிலேயே நேசிக்கும் எவரும் மகிழ்ச்சி அடைவார்கள் கொண்டாடுவார்கள் இந்திய தேச விரோதிகளும் கம்னியுஸ்டு கபோதிகளும் நேருவிய அடிமைகளும் மனம் முழுக்க துவேஷமும் காழ்ப்பும் தீய எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் கொண்ட பாவிகளினால் மட்டுமே நன்மையையும் வளர்ச்சியையும் நோக்கிய இந்த மாபெரும் வெற்றியைக் கண்டு
எதிர்க்கவும் சாபமிடவும் வயிற்றெரிச்சல் கொள்ளவும் முடியும். தீயவர்களும் அரக்கர்களும் சண்டாளர்களும் துர்மதியாளர்களும் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டேயிருப்பார்கள் அவர்களையும் மீறியே இந்தியா கஷ்டப் பட்டு முன்னேற வேண்டியுள்ளது.
இடர்கள் அனைத்தும் மீறி பெற்றுள்ள இந்த வெற்றி ஆயிரம் இமாச்சல பிரதேச வெற்றிகளுக்கு சமமானதாகும். இமாலய வெற்றியாகும். இந்த வெற்றிப் பாதையை தொடர்ந்து அளித்து பிரதமர் மோடிக்கும் பிஜேபிக்கும் இன்னும் பல பத்தாண்டுகள் ஆட்சி செய்யும் அருளை ஆண்டவன் அருள்வானாக. அதற்கான நீண்ட ஆயுளையும் மக்கள் ஆதரவையும் மோடிக்கு அருள ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன். வாழ்க பாரதம், வாழ்க மோடி, வெல்க அவர் தம் ஆட்சி.
*****
ம.வெங்கடேசன்:
22ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த பாஜக சென்ற தேர்தலில் 115 இடங்களை வென்றது. தற்போது 2017ல் 99 இடங்களைப் பெற்றிருக்கிறது. இதை சுட்டிக்காட்டி தலித்துகள், பழங்குடிகள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை சில தலித் அமைப்புகள் வைத்திருக்கின்றனர். குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டது முதல் பல்வேறு வன்முறைகள் தலித்துகள்மேல் ஏவப்பட்டது வரை இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிரொலித்திருக்கிறது. அதனால்தான் பாஜக சென்ற தேர்தலை விட குறைவான இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
உண்மையிலேயே குஜராத்தில் தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்களா? என்று ஆராய்ந்து பார்த்தால் அப்படியொன்றும் நிகழவில்லை என்பதை சென்ற தேர்தலோடு தற்போதைய தேர்தலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
குஜராத்தில் தனித்தொகுதி 13, பழங்குடிகள் தொகுதி 27 இருக்கிறது.
சென்ற 2012ம் தேர்தலில் தனித்தொகுதியில் பாஜக 10 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் வென்றிருக்கிறது. அதாவது தனித்தொகுதியில் 76 சதவீத இடங்களை பாஜக வென்றிருக்கிறது. பழங்குடிகள் தொகுதியில் பாஜக 10 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும் சுயேட்சை 1 இடங்களையும் வென்றிருக்கிறார்கள்.
2017ம் தேர்தலில் தனித்தொகுதியில் 8 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது 61 சதவீத இடங்களை பாஜக வென்றிருக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேட்சை 1 இடத்தையும் வென்றிருக்கிறார்கள். சென்ற தேர்தலைவிட 2இடங்களை பாஜக இழந்திருக்கிறது. காங்கிரஸ் சென்ற தேர்தலைவிட 1 இடத்தை மேலும் வென்றிருக்கிறது.
இந்த கணக்கீடுகளை வைத்து பார்க்கும்போது தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதை உணர முடியும். அதேபோல பழங்குடி தொகுதிகளில் தற்போது 11 இடங்களை பாஜக வென்றிருக்கிறது. சென்ற தேர்தலைவிட 1 இடத்தை மேலும் பாஜக வென்றிருக்கிறது.
தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவே காரணம் என்று திட்டமிட்டு பரப்பியது, உனாவில் ஏற்பட்ட நிகழ்வு, அங்கு கூடிய தலித்துகள் கூட்டம், தலித்துகளுக்கு எதிரானது பாஜக என்ற பிம்பத்தை திட்டமிட்டு உருவாக்கியது, பாஜகவுக்கு எதிராக தலித்துகளை தூண்டிவிடுதல் – இவை எல்லாம் நிகழ்ந்தும்கூட தனித்தொகுதிகளில் 8 இடங்களை பாஜக வென்றிருப்பது என்பது தலித்துகள் பாஜகவின்மேல் நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது.
குஜராத்தில் தலித்துகள் பாஜகவின்மேல் நம்பிக்கை இழந்திருப்பார்களேயானால் 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாத்கம் தொகுதியில் வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானி என்கிற தலித் இளைஞர் பற்றி அதிகமாகவே பேசப்படுகிறது. பாஜகவிற்கு எதிராக சுயேட்சையாக நிறுத்தப்பட்ட மேவானி வெற்றி பெற்றிருப்பது பாஜகவின்மேல் தலித்துகள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் தலித் அமைப்பினர்.
ஆனால் உண்மை என்ன?
உனா நிகழ்வின்மூலம் பிரபலம் அடைந்தவர் ஜிக்னேஷ் மேவானி. திட்டமிட்டு குஜராத் முழுவதும் தலித்துகளை பாஜகவுக்கு எதிராக திருப்ப பிரச்சாரம் செய்தார். ஆயிரக்கணக்கில் தலித்துகளை கூட்டி கூட்டம் நடத்தினார். அதன்மூலம் தலித்துகள் பாஜகவுக்கு எதிராக இருக்கின்றனர் என்ற பிம்பத்தை கட்டமைத்தார். இதற்கு பல்வேறு கட்சிகள், ஊடகங்கள் உதவின. அவர் வெற்றிபெற்றதை குஜராத் தலித் மக்கள் அனைவருமே பாஜகவுக்கு எதிராக இருக்கின்றனர் என்ற பொய்பிம்பத்தை தற்போது கட்டமைத்து வருகின்றனர்.
அவர் எப்படி வெற்றி பெற்றார்?
ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக வாத்கம் தொகுதியில் போட்டியிட்டார். உடனே காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை வாபஸ் பெற்றது. மேவானிக்கு எங்கள் ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்தது. அதாவது காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணியுடன் (ஆதரவுடன்) போட்டியிட்டார் சுயேட்சை என்ற பெயரில் ஜிக்னேஷ் மேவானி.
ஏற்கனவே வாத்கம் தொகுதியில் 2012ல் காங்கிரசே வெற்றிபெற்றது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் மணிலால் ஜெதாபாய் வகேலா 90375 வாக்குகளைப் பெற்று வென்றார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் வகேலா பகீர்பாய் ராகபாய் 68536 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். அதாவது காங்கிரஸ் வேட்பாளர் 21839 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் வென்று 5ஆண்டுகாலம் பதவியில் இருந்த தொகுதியைத்தான் மேவானிக்கு தாரை வார்த்தது காங்கிரஸ். தற்போதைய தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜிக்னேஷ் மேவானி இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த வாக்கு 95497. சென்ற தேர்தலைவிட5122 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது. அதாவது 18150 வாக்குகள் வித்தியாசத்தில் மேவானி வெற்றிபெற்றார்.
சென்ற தேர்தலில் 21839 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போதைய தேர்தலில் மூவர் கூட்டணிக்கு (காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜிக்னேஷ் மேவானி) கிடைத்த அதிகமான வாக்குகள் 18150. இது சென்ற தேர்தலைவிட குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது என்பதையும் குஜராத் தலித்துகள் பலரும் இவர்களை ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது.
பாஜக வேட்பாளர் சக்ரவர்த்திக்கு கிடைத்த வாக்குகள் 75801. சென்ற தேர்தலைவிட 7265 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார்.
தலித் மக்கள் பாஜகவுக்கு எதிராக இருந்திருப்பார்களேயானால் இவ்வளவு வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்காது. அல்லது மேவானிக்கு ஆதரவாக தலித் மக்கள் இருந்திருப்பார்களேயானாலும்கூட இவ்வளவு வாக்கு பாஜக வேட்பாளருக்கு கி்டைத்திருக்காது.
ஒருவேளை காங்கிரஸ், பாஜக, ஜிக்னேஷ் மேவானி மூவருக்குமிடையே போட்டி இருந்திருக்குமானால் ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்று இருக்க முடியாது.
தங்கள் கைவசம் இருந்த தொகுதியை மேவானிக்கு விட்டுக் கொடுப்பதன்மூலம் குஜராத் தலித்துகளை பாஜகவுக்கு எதிராக திருப்ப முடியும் என்ற தப்புக் கணக்கை போட்ட காங்கிரசுக்கு குஜராத் தலித்துகள் சென்ற தேர்தலைவிட ஏழாயிரம் வாக்குகளை அதிகமாக பாஜகவுக்கு கொடுத்து பாடம் புகட்டியிருக்கின்றனர்.
இந்த உண்மையெல்லாம் தெரியாத தமிழக தலித் போராளிகள்கூட ஏதோ ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய பிரச்சாரத்தால், வலிமையால் வெற்றி அடைந்தார் என்பதுபோல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பொய்கள் நீண்டகாலம் நிலைக்காது.
BJP Lost in Saurashtra and Kutch.While Patels above 40 have voted for BJP, Young Patels have not. That issue need to be addressed.
Except for forward Brahman community all other forward cast has got several sub group to claim OBC status. Almost other forward community people within no time get the sub group status and availing the reservations. Also note that +50% OBC are rich land lords and business people. Hence one for all the OBC quota reservations to be abolished to stop caste politics.
சீட்டுகளோ குறைந்து விட்டன,என்று காங்கிரஸ் கார வியாக்கியான விருத்தாக்கள்,விளக்கி விளக்கியே வாய் வீங்கி போகின்றன!இருபத்திரண்டு கால வாழ்க்கை யில் ,தம் செல்ல தேவதையை ஊடல் கொண்டு ,மக்கள் கிள்ளி பார்த்திருக்கிறார்கள்.காங்கிரசை எப்போதோ கொன்றுவிட்டனர்.
The election results in Gujarat is definitely a wake up call for the BJP. Though they won, the margin of victory is not much. This, in spite of the extensive & sometimes vitriolic campaign by Modi.
It is unfortunate that Modi, instead of campaigning on the basis of development, chose to put the blame on the “foreign hand”.
Also, the projected BJP candidate has lost & they need to look for someone else do.
In a way, the people of Gujarat must be congratulated for not giving an overwhelming majority to any single party.
”காங்கிரசை எப்போதோ கொன்றுவிட்டனர்.”-may be in bad taste,just leave it.
வாழ்த்துக்கள்
திருமலை, வெங்கடேசன் கட்டுரைகளை /பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அருமையாக எழுதியுள்ளார்கள். வலம் இதழில் என்னுடைய கட்டுரை இந்த மாத இதழில் வருகிறது. குஜராத் தேர்தல் பற்றி இன்னும் சில புள்ளி விபரங்களுடன் எழுதியுள்ளேன்.
இத்தாலி வாடிகனின் திட்டங்களின் படிக்கு ஹிந்துஸ்தானத்தில் சிலுவையை நிறுவிட காங்க்ரஸ் கட்சிக்கு வாடிகன் அளித்திருக்கும் திட்டம் தேசத்தில் ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு ஜாதியையும் அடுத்த ஜாதியுடன் பகைமையை வளர்த்து சண்டையில் ஈடுபடச் செய்தல். அதில் குளிர் காய்ந்து என் ஜி ஓ பரங்கிய சர்ச் இவற்றின் ஆதரவுடன் ஹிந்துஸ்தானத்தில் சிலுவையை நிறுவுதல். வரும் 2019க்கு முன் காங்க்ரஸ் கட்சி ஊடகவேசிகள் மற்றும் தேசத்தின் உதிரிக்கட்சிகள் துணையுடன் தேசமுழுதும் தொடர்ந்து ஜாதிக்கலவரங்களை நிகழ்த்தி எண்ணற்ற மக்களை காவு வாங்க முனையும். ஒரு முழுமையான திட்டத்துடன் காங்க்ரஸ் திட்டமிடும் ஜாதிக்கலவரங்களை பாஜக சர்க்கார் எதிர்கொள்ளாவிட்டால் நஷ்டம் பாஜகவுக்கு மட்டிலும் அல்ல ஒட்டு மொத்த தேசத்துக்கும் ஹிந்துசமூஹத்துக்கும். குஜராத்தில் ஹிந்துக்களை ஜாதிவாரியாகப் பிளக்க முயற்சிப்பதில் ஓரளவு வெற்றி கண்ட காங்க்ரஸ் தேசத்தில் மற்ற பகுதிகளில் இதை விரிவு செய்ய விழைவதை ஒவ்வொரு மாகாணமாகக் காணலம்.