தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது,  பா.ஜ.க.விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தை மோடி அரசு  பயன்படுத்திக் கொண்டு  வாக்கு திருட்டை நடத்துகிறார்கள்  என  ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார்.  மேலும்  தேர்தல் ஆணையம், புலனாய்வு  அமைப்புகள் மற்றும் அதிகாரத்துவம் உள்ளிட்ட பல நிறுவனங்களில்  ஆர்.எஸ்.எஸ். நுழைந்துள்ளது  என  ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.   

ஆனால்  உண்மையில்  1947க்கு பின்னர்,   சர்வாதிகார போக்குடன் செயல்பட்டவர்கள்   நேருவும், அவரது மகள் இந்திரா காந்தியும்  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  தேர்தல் ஆணையத்தையும்,  நீதித் துறையையும் எவ்வாறு சீரழித்தார்கள்  என்ற உண்மையை  திரும்பி பார்க்க வேண்டும்.   அரசியல் சட்டத்தையும்  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள்  நேருவும், இந்திரா காந்தியும்.

அரசியல் ஷரத்து 356ஐ  தவறாகவும், எதிர்கட்சிகளின் ஆட்சிகளை கலைக்கவும், மேற்படி ஷரத்தை துஷ்பிரயோகம்  செய்தவர்கள்  நேரு மற்றும் இந்திரா காந்தி என்பதை மறந்து விட்டு மோடி மீது குற்றச்சாட்டுகளை  ராகுல் காந்தி வைக்கிறார்.  1959-ம் ஆண்டு கேரள அரசை கலைத்தது முதல்  1960-ல் நேரு 11 முறையும்,   இந்திரா காந்தி  ஆட்சியில்,  1967 முதல் 1969 வரை 7 முறையும், 1970 முதல் 1974 வரை 19 முறையும்  மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.    மோடியின் ஆட்சியில்  ஒரு எதிர்கட்சி அரசையும் கலைக்கவில்லை.

இந்திரா காந்தி தனது ஆட்சியில் உளவு நிறுவனங்களை (குறிப்பாக IB மற்றும் RAW) தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்; இது, அரசியல் எதிரிகளைக் கண்காணிக்கவும்,  தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தினார். குறிப்பாக 1975-1977 அவசரநிலையின் போது இந்திராவின்  அதிகாரம் அதிகரித்தது,  இந்திரா காந்தி,  தனது அரசியல் எதிரிகள், பத்திரிகைகள் மற்றும் சில நேரங்களில் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களைக் கண்காணிக்கவும் உளவுத்துறைக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.   முன்னாள் ஐபி தலைவர் எம்.கே. தார்  தான் எழுதிய ஓபன் சீக்கிரட் புத்தகத்தில், , இந்திரா காந்தி, தனது குடும்பத்தினரின் அரசியல் இலட்சியங்களைக் கவனிக்கும் நோக்கில், ஐபி-க்கு உளவு பார்க்க உத்தரவிட்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார். .   தனது அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கு,  இந்திரா காந்தி இந்திய உளவு நிறுவனங்களைப் பயன்படுத்தியதகாவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும்  புறக்கணித்தவர்களில் முக்கியமானவர்  திருமதி இந்திரா காந்தி .1973-ல், கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, மூத்த நீதிபதிகளான ஷெலட், க்ரோவர் மற்றும் ஹெக்டே ஆகியோரைத் தாண்டி, இளைய நீதிபதியான ஏ.என். ரே–  தலைமை நீதிபதியாக நியமித்தது,   பின்னர், 1976-ல் ஏ.டி.எம். ஜபல்பூர் வழக்கில் (ஹேபியஸ் கார்பஸ் வழக்கு) அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதி ஹன்னாவை (Justice Khanna) மதிக்காமல், அவரைத் தாண்டி ஜஸ்டிஸ் பி.என். பகவதி போன்றவர்களை  தலைமை நீதிபதிகளாக நியமித்தது.  அவசரகால நிலையின் போது, சுதந்தரமாக தீர்பளித்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து,  நீதித்துறை சுதந்திரத்திற்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தவர்  இந்திரா காந்தி

அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம், அதிகாரத்தை தனது கையில்  வைத்துக் கொண்டவர்கள்  காங்கிரஸ் கட்சியினர்.   39வது திருத்தம் (1975): பிரதமர், ஜனாதிபதி மற்றும் சபாநாயகரின் தேர்தல் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்களில் கேள்விக்குட்படுத்த முடியாது என்று கூறி, நீதித்துறை ஆய்வுக்குத் தடையாக ஒரு சரத்தை (Article 329A) கொண்டுவர முயன்றது. 42வது திருத்தம் (1976): இது நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரித்தது, நீதித்துறை சுதந்திரத்தை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டது.

ராகுல் காந்தி, பாஜக மீது தேர்தல் ஆணையத்தை தனக்கு சாதகமாக வைத்திருப்பதன் மூலம் பாஜக தேர்தல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்துவதாக  குற்றம் சாட்டியுள்ளார் .  வரலாற்றை சற்றே கூர்ந்து கவனித்தால் , முன்னாள் தேர்தல் ஆணையர்கள் தனது  அணியில் சேருவதிலிருந்தோ  அல்லது ஓய்வுக்குப் பிறகு  மதிப்பு மிக்க அரசுப் பதவிகளைப்  வழங்கி, பல முறை பயனடைந்துள்ளது.  ஒரு முறை நாடாளுமன்றத்தில், திரு அத்வானி அவர்கள் தேர்தல் ஆணையர் நியமனம் சம்பந்தமாக கேள்வி ஒன்றை எழுப்பினர்.  அன்றைய அமைச்சர் சிவசங்கர், தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது ஆகவே எதிர்கட்சியினரை கலந்து ஆலோசித்து, தேர்தல் ஆணையரை நியமிக்க வேணடியதில்லை என கூறியதை ராகுல் காந்தி திரும்பி பார்க்க வேண்டும்.   காங்கிரஸ் ஆட்சியில், பிரதமர்கள் நேருவும், இந்திரா காந்தியும்   தன்னிச்சையாகவும்,   சர்வாதிகாரமாகவும்  தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள்.  அவ்வாறு நியமனமானவர்கள். .  1950-ல் சுகுமார் சென், 1958-ல்  கல்யாண்சுந்தரம்,  1967-ல்  எஸ்.பி. சென் வர்மா,  1967-ல் டி.சுவாமிநாதன்,  1977-ல் எஸ்எல்.ஷக்தர்,  1986-ல் ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி.  .  இதுபற்றி  ராகுல் காந்தி ஏன் வாய் திறக்கவில்லை.

காங்கிரஸ் பிரதமர்கள், தேர்தல் காலங்களில் தங்களது எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி செயல்பட்டவர்களுக்கு, பதவிகளை அளித்தவர்கள்.  அவ்வாறு பதவி சுகம் கண்டவர்கள்.  . எம்.எஸ். கில் (1996-2001) : நீண்ட காலம் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றியவர். பின்னர் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் (2009-2011) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராகவும் (2011) பணியாற்றினார்.  டி.என்.சேஷன் (1990-1996) : தேர்தல் சீர்திருத்தங்களுக்காக அடிக்கடி பாராட்டப்படும் சேஷன், 1996 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். 

ஜே.எம். லிங்டோ (2001-2004) : பாஜகவை எதிர்த்த பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் குழுக்களுடன் அவர் தொடர்புடையவர், அவரது அரசியல் சார்புகளை தெளிவாகக் காட்டினார்.   ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ஆனபோது, ​​முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோவால் நடத்தப்படும் தேர்தல்களுக்கான மேம்பட்ட மேலாண்மை அறக்கட்டளையை (FAME) இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நியமித்தார்.  2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நேரத்தில், பல முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் – டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, என். கோபாலசாமி மற்றும் எஸ்.ஒய். குரைஷி – FAME உடன் தங்களை இணைத்துக் கொண்டு, காங்கிரஸின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களின் பின்னணியை ஆராயத் தயாராக இருந்தனர்.

வி.எஸ். ரமாதேவி (1990) : ஓய்வுக்குப் பிறகு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார், இது காங்கிரஸின் ஆதரவின் தெளிவான அறிகுறியாகும்  ஆர்.கே. திரிவேதி (1982-1985) : தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய பிறகு, அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது, பின்னர் காங்கிரசின் அரசியல் நலன்களுடன் இணைந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  நாகேந்திர சிங் (1972-1973) மற்றும் கே.வி.கே. சுந்தரம் (1958-1967) : இருவருக்கும் மதிப்புமிக்க பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது, இது காங்கிரஸ் எவ்வாறு தேர்தல் ஆணையர்களுக்கு முறையாக வெகுமதி அளித்தது என்பதைக் காட்டுகிறது  என். கோபாலசாமி (2006-2009) : ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து காங்கிரஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், முதலில் அதன் சொந்த கடந்த கால நடத்தையை ஒப்புக்கொள்ள வேண்டும். கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம் ஜனநாயகத்தின் மீதான உண்மையான அக்கறையை விட சந்தர்ப்பவாதத்தின் வாசனையை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *