இந்து மதத்தில் சொல்லப்படும் “ஓம்” மந்திரம் உலகில் தோன்றிய முதல் ஒலியாகக் கருதப்படுகிறது. வேதங்களும், அதைப் பின்பற்றும் உபந்யாசர்கள், ரிஷிகள், ஞானிகள், யோகிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அது கடவுளின் ஒலி வடிவம் என்றும் பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது உண்மைதானா? உண்மை என்றால் எத்தனை பேருக்கு இதை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய மனோபாவம் உள்ளது? இன்றைய காலத்தில் கல்வி கற்று தர்க்க அறிவு வளர்ந்துவிட்டதால் எதையும் நம்பாத சூழல் வளர்ந்துள்ளது. இந்தச் சூழல் மூட நம்பிக்கைகளை ஒழிக்க முற்பட்டாலும் பலர் உண்மையையும் சேர்த்தே ஒழிக்கிறார்கள். “ஓம்” மந்திரத்தின் பலன் பற்றி பல இடங்களில் பேசப்பட்டாலும், அதன் தோற்றம் பற்றிய கேள்வி எனது நட்பு வட்டாரத்தில் எழுந்ததனால் விளைந்த கட்டுரை இது.
“ஓம்” தான் முதல் ஒலியா? அதை எப்படி நம்புவது?
நம்முடைய தமிழ்த் தாத்தா “வள்ளுவர்” நமக்காக திருக்குறளைக் கொடுத்து இருக்கிறார். அது உலகம் முழுவதுக்கும் பொதுவான விதிகளைக் கொடுத்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் முதல் குறளில் இருந்தே என் பயணத்தைத் துவக்குகிறேன்.
முதல் குறள்:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”
பொருள்:
உலகில் வழங்கி வரும் எல்லா எழுத்துகளும் “அ” என்ற எழுத்தை முதலாக உடையன. அது போல உலகம் கடவுளை முதன்மையாக உடையது.
உங்களில் பலருக்கு இது ஏதோ பரிட்சைக்குப் படித்து எழுதுவது என்பது போலத்தான் இருக்கும். இங்கு உள்ள இரண்டு வரிகளும் உங்களுக்கு மிக்க பரிட்சையமான ஒன்றே. அதற்கு உண்டான விளக்கமும் நீங்கள் அறிந்ததே. ஆனால் எத்தனைபேர் இதை ஆழமாக உணர்ந்தீர்கள்?
1. அதெப்படி அனைத்து எழுத்துகளுக்கும் “அ” முதல் ஆகும்?
2. தமிழில்தான் முதல் எழுத்து “அ”. உலகில் உள்ள மற்ற எல்லா மொழிகளுக்கும் முதல் எழுத்து “அ” கிடையாது. பின்னர் எப்படி இந்தக் கூற்று உலகம் முழுவதுமாக (2000 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து இன்றுவரை) ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அதற்கான விளக்கத்தை என்னால் முடிந்தவரை உங்களுக்குப் புரியவைக்கிறேன்.
முதலில் எழுத்து என்பது என்ன? மனிதன், தான் உச்சரிக்கும் ஒலியின் குறியீடுதான் எழுத்து. அதாவது “க” என்ற உங்கள் உச்சரிப்பைக் (ஒலியை) குறிக்க பயன்படுத்துவதே “க” என்ற எழுத்து. அப்படியானால் வள்ளுவர் சொல்ல வருவது உலகில் உள்ள எல்லா ஒலிக்கும் “அ” என்ற ஒலியே ஆதாரம். (மூலம்; அதாவது source, origin). இது எப்படி உண்மை? மனிதன் எழுப்பும் ஒலியை விடுங்கள், நாம் இன்னும் சற்று ஆழமாகச் செல்வோம். நாம் உயிர் வாழ ஆதாரத் தேவையான காற்றை எடுத்துக் கொள்வோம். காற்று மலைகளின் மேல் மோதி எழுப்பும் ஓசை என்னவாக இருக்கும்? சற்று யோசித்தால் உங்கள் அனைவராலும் அதை ஊகிக்க முடியும். முதலில் “அ”, பின்னர் “உ” இவை இரண்டும் கலந்த கலவையாக இருக்கும். முதலில் “அ” தான், பின்னர் தான் “உ”. ( காற்றின் ஒலி “உஸ்ஸ்” என்று சொல்ல முனையாதீர்கள். அடைத்து வைத்த காற்று வெளிவந்தால்தான் அவ்வாறு ஒலிக்கும் ). “அ” என்ற ஒலியை எழுப்ப முயலும்போது உதடுகளைக் குறுக்கினால் வருவது “உ”. (உச்சரித்து பாருங்கள், உண்மை புரியும்). காற்று மலைகளின் மேல் மோதும்போது “அ”, அது பின்னர் குறுகிய பாதையிலோ அல்லது கீழிறங்கினாலோ “உ” என்ற ஒலி பிறக்கும்.
(காற்றின் ஒலியை ஊகிக்க முடியாதவர்களுக்கு, ஒரு செயல்முறை விளக்கம்: ஒரு காலி சொம்பு அல்லது டம்ளர் அல்லது சிறிய பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். அதை, உங்கள் காதை முழுமையாக மூடியவாறு வைத்து அப்போது வரும் சத்தத்தைக் கவனியுங்கள். எழும் ஒலி “உ”-ஆக இருக்கும். இப்போது அந்தப் பொருளை சிறிது வெளியே எடுத்தும் மீண்டும் காதின் அருகே கொண்டு சென்றும் பாருங்கள். மீண்டும் மீண்டும் இதையே செய்து பாருங்கள். “அ” மற்றும் “உ” ஒலிகளை நீங்கள் கேட்கலாம். உங்கள் காதருகே கொண்டு செல்லும்போது காற்று குறுகிய பாதைக்குள் செல்வதால் “உ”, வெளியே எடுக்கும்போது விரிந்த பாதையில் செல்வதால் “அ”. இயல்பான காற்று விரிந்த பாதையில்தான் இருக்கிறது. ஆகவே முதல் ஒலி “அ” தான் என்பது உறுதி.)
இதையே வள்ளுவர் எல்லா எழுத்துகளுக்கும் (ஒலிகளுக்கும்) முதல் “அ” என்றார். இத்தனை ஆழமான கருத்தை சொல்ல வள்ளுவர் எடுத்துக் கொண்டது மூன்று வார்த்தைகள் மட்டுமே. இது இம்மையைப் ( இவ்வுலகம்) பற்றிய உண்மை. மறுமையைப் (மறுவுலகம்) பற்றிய உண்மையைக் கூற மீதி நான்கு வார்த்தைகளை எடுத்துக் கொண்டார். இந்த அளவிற்கு நுண்மையாக வள்ளுவர் ஆராய்ந்து இருப்பதால்தான்,
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள். “
என்றார் ஒளவையார்.
இவர் மட்டுமல்ல, உலகமே இன்றளவும் வள்ளுவன் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்கிறது. திருக்குறள் முக்காலத்துக்கும் சொல்லப்பட்ட உண்மை.
(அறிவியல் ஆதாரம்: பூமியில் முதலில் இருந்தது காற்றும் பாறையும் (மலை) மட்டுமே. நிலம் என்ற ஒன்று இருந்தால் ஆகாயம் என்பது “default”. காற்று குளிர்ந்தால் நீர். கல்லும் கல்லும் மோதினால் நெருப்பு. (முதலில் நெருப்பில் இருந்து பிறந்த கல்தான் பூமி என்பது தனிக் கதை). நீரில் இருந்து தான் உயிர்கள்.)
“அ” மற்றும் “உ” என்ற இரண்டு ஆதார ஒலிகளைப் புரிந்துகொண்ட நாம் அடுத்து செல்லவிருப்பது “ம்” ஒலிக்கான ஆராய்ச்சி.
இந்தப் பிரபஞ்சமே அதிர்வுகளால் ஆனது என்பது அறிவியல் கூற்று. இயக்கம் அல்லது வடிவம் என்ற ஒரு இருந்தாலே அதிர்வு என்பது நிச்சயம். இந்த அதிர்வை (ஒலியை) எவ்வாறு குறியீடு செய்ய முடியும்? மனிதனால் கேட்க கூடிய ஒலியளவில் இருந்தே ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். ஒரு மெல்லிய நீண்ட கம்பியை எடுத்துக் கொள்வோம். அதன் இரு முனைகளையும் நீட்டிப் பிடித்து அதன் நடுவில் மெதுவாகத் தட்டி அதிர்வை ஏற்படுத்தினால் எழும் ஒலியில் “ம்” என்ற ஒலி பிரதான பங்கு வகிப்பதை உணர முடியும். ஆக அதிர்வுகளின் ஒலி வடிவம் “ம்”. (தனியே அமர்ந்து “ம்” என உங்களால் முடிந்தவரை சத்தமாக நீண்டநேரத்திற்கு (அடிவயிற்றில் இருந்து ) ஒலித்துப் (சொல்லி) பாருங்கள். உடலின் எந்த ஒரு பாகத்தின் அசைவும் இல்லாமல் (ஏன், நாக்கை கூட அசைக்கத் தேவை இல்லை) நீங்கள் உங்கள் உடல் முழுவதும் ஓர் அதிர்வை உணரலாம்.)
ஒலிகளுக்கு எல்லாம் முதலாவதான “அ”, பின்னர் “உ”, பின் உடல் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தும் “ம்” இவை மூன்றும் சேர்ந்தால் “அஉம்” . இதுவே பின்னர் மருவி ” ஓம்” ஆனது. (“அ”, “உ” இரண்டையும் சேர்த்துச் சொன்னாலே அது “ஒ” போல்தான் இருக்கும்.) இதைத்தான் உயிர்களுக்கு ஆதார ஒலி “ஓம்” என்கிறது இந்து மதம்.
(அட! ஓர் ஆச்சர்யம்! ….. ஆன்மிகம் என்பது உடல், உயிர் சக்தியை மேம்படுத்தி மனிதன் தன் வாழ்வில் இன்புற்று இருக்க வழி காட்டுவதே ஆகும். “ஓ” என்பது உயிர் எழுத்து, “ம்” என்பது மெய் (உடல்) எழுத்து. ஏதோ புரிகிற மாதிரி இருக்கிறதா? புரிந்துகொள்ள முயலாமல் நீங்கள் கொட்டாவி சத்தமாகவோ/ சத்தமில்லாமலோ விட்டால்கூட வரும் ஒலி ” அ…..உ….ம்” தான்.)
“ஓம்” தான் உயிர்களின் ஆதார ஒலி; இந்த “ஓம்” என்ற ஒலி நம் பிராண சக்தியோடு நெருங்கிய தொடர்பு உடையது. அந்தத் தொடர்பு பற்றி அறிய விவேகானந்தர் கருத்துகள் உதவும்.
‘ஓம்’ (அஉம்) என்ற ஒலியின் இன்றியமையாத தன்மையை விளக்கியதற்கு நன்றி. மேலும் அதன் அர்த்தத்தையும் விளக்கியிருந்தால் பயனுள்ளதாய் இருந்திருக்கும்.
லோகநாதன் அவர்களுக்கு,
உலகின் முதல் ஒலி “ஓம்” தானா என்பதற்கான ஆய்வுக் கட்டுரையாக இதை கருதியதால் அதன் பலன்களை சேர்க்க தவறிவிட்டேன். எனினும் இப்போது எனக்கு தெரிந்த வரையில் சொல்கிறேன்.
இந்து மதத்தில் மிகப்பரவலாக “ஓம்” பயன்படுத்தப்பட்டாலும் யோக மார்கத்தில் இதன் பலன்களை எளிமையாக விளக்க முடியும். யோகம் பற்றிய எளிமையான விளக்கம் இதே வலைதளத்தில் உள்ளது. அதை படிக்காவிடில் தயை கூர்ந்து படிக்கவும்.
குண்டலினி சக்தியை எழுப்பி நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் எழுச்சி பெற செய்வது யோகத்தில் முக்கிய செயல்பாடு. இந்த குண்டலினி சக்தியை நமது தண்டுவடத்தின் மைய நாடியான “சுஷும்னா” வழியாகவே மேலே எழுப்ப முடியும். இந்த மைய நாடி வழியாக உயிர் சக்தி பாய்வதற்கு இடது நாடியான “இடா” மற்றும் வலது நாடியான “பிங்களை” ஆகியவற்றிற்கு இடையே ஒரு சமநிலை அவசியம். சாதரணமாக நமக்கு இந்த இடது (இடா) மற்றும் வலது (பிங்களை) நாடிகள் சமநிலையில் இருப்பதில்லை. இதை நீங்கள் படிக்கும் இந்த கணத்திலே சோதித்து பார்க்கவும் முடியும். (சோதனை: உங்கள் ஆள்காட்டி விரலை உங்கள் மேல் உதட்டுக்கு மேல் மூக்குக்கு கீழ் வைத்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். இடது புறமோ அல்லது வலது புறமோ சுவாசம் அதிகமாக நடைபெறும்.) இந்த ஒருபக்க மிகை சுவாசம் ஒரு குறிப்பிட்ட நேரம் (சுமாராக 40 நிமிடங்கள்) கழித்து இன்னொரு பக்கத்துக்கு மாறும். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். ஆக, இந்த இரு நாடிகளிலும் சமநிலை கொண்டு வருவது முக்கியம். இந்த சமநிலையை யோகாசனங்களின் வாயிலாக கொண்டு வர முடியும். இவ்வாறு உடல் நிலையில் ஒரு சமநிலை கொண்டு வந்த பின்னர் மனநிலை, உணர்ச்சிநிலை ஆகியவற்றிலும் ஒரு சமநிலை தேவைப்படும். இந்த சமநிலையை எளிமையாக அடைய செய்வதே “ஓம்” ஒலியின் முக்கிய செயல்ப்பாடு.
ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்ந்து,
“அ” சொல்லும்போது உங்களின் வயிற்றுப்பகுதியில் அதிர்வை உணர முடியும் – இதுவே பிரம்மாவாக கருதப்படுகிறது.
“உ” சொல்லும்போது நெஞ்சுப்பகுதியில் அதிர்வை உணர முடியும் – இதுவே விஷ்ணுவாக கருதப்படுகிறது.
“ம்” சொல்லும்போது கழுத்து மற்றும் முகத்தில் அதிர்வை உணர முடியும். – இதுவே சிவமாக கருதப்படுகிறது.
ஆக “ஓம்” ஒலியை தொடர்ந்து ஒலிக்கும்போது உடலில் அதிர்வை ஏற்படுத்தி உடல்நிலை, மன நிலை, மற்றும் உணர்ச்சி நிலையில் ஒரு சமநிலையை கொண்டு வர முடியும். அவ்வாறு கொண்டு வரப்படும் சமநிலை உங்கள் உயிர் சக்தியை எழுப்ப மிகவும் சாதகமாய் இருக்கும்.
இது வரை சொன்னது இந்து மதத்தில் சொல்லப்படும் ஓம் ஒலியின் பயன்பாடு.
மேலும் “ஓம்” ஒலிக்கு தனிப்பட்ட அர்த்தம் எதுவும் இல்லை. அது வெறும் அடையாளத்துக்காகவோ / குறிக்கவோ மனிதனால் உண்டாக்கப்பட்ட வார்த்தை அல்லை. பிரபஞ்சத்தின் மூலம் “பிரணவம்”. இந்த பிரணவத்தின் ஒலி வடிவம்தான் “ஓம்” என்பது விவேகானந்தர் உள்பட பலயோகிகள் உணர்ந்து சொன்ன உண்மை.
புரிந்து ஏற்றுக்கொள்ள எளிமையான ஆய்வு. நல்ல விளக்கம்.
ஆசிரியர் அவர்களுக்கு,
நன்றி,
யோகத்தில் ‘ஓம்’ என்ற மந்திர ஒலியின் பயன்பாட்டை விளக்கிக் கூறியதற்கு நன்றி. ஓர் ஆன்மீக உரையில் இம்மந்திரத்தின் பொருளைக் கேள்விப்பட்டிருகின்றேன். அதை இப்போது சொல்ல விழைகிறேன்.
‘ஓம்’ என்பது ‘அ உ ம்’ மூன்று எழுத்துக்கள் சேர்ந்தது.
‘அ’ – அகரம் – அனைத்தும் ஆன பரமாத்மா.
‘ம்’ – மகரம் – ‘நான்’ என்கின்ற உணர்வு. (ஹிந்தியில் ‘மே’ என்று சொல்வார்கள் அல்லவே?)
‘அந்த பராமத்மாவுக்கே நான் அடிமை’ எனும் அர்த்தத்தில் ‘பரமாத்மவுக்கே’ என்ற ‘ஏகார’ -மாக ‘உ’ எனுன் சப்தம். இவ்விதமாக ‘அ உ ம்’ மூன்று எழுத்துக்கள் சேர்ந்தது.’அந்த பராமத்மாவுக்கே நான் அடிமை. அவனைத் தவிர வேறு ஒருவருக்கும் அடிமை இல்லை’ என்பது பொருள்.
‘நம’ என்ற சொல்லிலும்.
‘ந’ – இல்லை என்றும். ‘ம’ – நான் என்று. பொருள்.
அதாவது ‘நான் இல்லை’, ‘நம் கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் பரம்பொருளே. அவனே ஆட்டுவிப்பவன்.’ என்று பொருள்.
இவ்விதமாகவே ‘ஓம் நமச்சிவாய’ , ‘ஓம் நமோ நாராயணாய’ என்றெல்லாம் மந்திரங்கள் அமைந்துள்ளன.
இந்த அர்த்தத்தை பலரும் உணர்ந்து இம்மந்த்ரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி.
மிக உயரிய ஒரு விஷயத்தை அழகாக சுருக்கமாக சொல்லி விட்டீர்கள். பொருளுரை எழுதிய சின்னா அவர்களுக்கும், பதிலுரை எழுதிய லோகநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.
அ+உ=ஓ என்பது எனக்கு ஏனோ ஒத்துக்கொள்ள முடியவில்லை. வேறு விதமாக விளக்கங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி
Good explanation. Thanks. I have heard that the christians use of ‘Amen’ is derived from Om.And so is Muslims ‘Ameen'(?). Some even write it as ‘AUM’ to give the correct pronunciation.
Thanks for the excellent work,once again.
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு…
“ஓம்” மந்திரத்திற்கு தாங்கள் தந்த பொருள் சில குருமார்களால் அவரது சீடர்களுக்கு கொடுக்கப்படும் விளக்கம் ஆகும். தாங்கள் தந்த விளக்கமும் சிறந்ததுதான். அஃது பக்தி யோகத்தில் உள்ள அன்பர்கள் அகந்தை ஒழிந்து அன்பில் அதாவது பக்தியில் திளைத்திடவே. நான் என்பதே இல்லை, எல்லாமே பரம்பொருள்தான் என்று ஒருவர் உணர்ந்து பார்ப்பதே யோகத்தின் உச்சம். ஆரம்பத்தில் எவருமே இதை உடனடியாக உணர முடிவதில்லை. ஆனால் யோகப்பயிற்சி செய்பவர்கள் “ஓம்” ஒலி உண்மையில் உடல், மனம், உணர்ச்சி நிலையில் சமநிலை கொண்டு வருகிறதா என்று சில வாரங்களிலேயே உணர்ந்து பார்க்க முடியும் என்பதே என் தாழ்மையான கருத்து. பொருள் புரிந்து கொண்டு அதோடு நின்று விடாமல் அதை அனுபவத்தில் அனைவரும் உணர வேண்டும் எனபதே என் விருப்பம்.
//அ+உ=ஓ என்பது எனக்கு ஏனோ ஒத்துக்கொள்ள முடியவில்லை. வேறு விதமாக விளக்கங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி//
ரொம்ப சுலபமான முயற்சி மிக வேகமாக சொல்லிப்பாருங்கள்.
அது தவிர இன்னமும் நிறைய உள்ளன. சுழலும் பம்பரம், வீசும் காற்று, ஆலய மணியின் ஓசை, இன்னமும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம் எனினும் நன்றாக நீங்கள் கேட்கும் எந்த ஓசையையும் உன்னிப்பாக கேளுங்கள் அதன் முடிவான ரீங்காரம் ஓம் என்பதுவாகவும், இன்னமும் இறுதி முடிவான ஒலி மகா பிராண ஒளியாகவும் இருப்பதை கேளுங்கள். ஆனால் மிகவும் constentration தேவை. அப்போதுதான் சூக்குமமான ஓங்காரம் நீங்கள் செவிமடுக்கமுடியும்.
அது சரி ஓங்காரம் என்பது ‘ஓம்’ அது என்ன மகாப்ரான ஒலி
ஓங்காரத்தில் ஒ என்பதின் காலம் குறைவு அனால் ‘ம் ‘என்பதின் காலம் மற்றும் அதிர்வும் அதிகம் . எனவே அதுவே மகாப்ரான ஒலியாகும்.
I also wish all to recite the valuable paras in explaining Thirumanthiram (https://sriranganatha.tripod.com/mumukshupadi.pdf)
Thirumanthram which explains the nature of the self has to be
learnt ahead of the other two rahasyas which explain the means
and the goal. A jiva is enslaved to the Lord. He is dependent on the
Lord and He enjoys nothing but his association with the Lord – this
is the understanding of the self. Thirumanthram which explains
this meaning is therefore to be learnt first.
The Thirumanthram is made of two parts: Pranavam and
Manthrasesham. Om is the Pranavam and Namo Narayanaya is
Manthrasesham. Pranavam is expanded upon by Manthrasesham.
Manthrasesham is expanded upon by Dvayam. Dvayam is
expanded upon by Carama Slokam. By this order also
Thirumanthram has to be learnt first.
The word manthram is obtained from “manthAram thrAyathe”. It
is that which protects those who recite it. The protection is of two
types: One is via the sound of the manthra and the second is via the
meaning of the manthra.
The benefits that are obtained by those who recite it and use it in
Homas is obtained via the power of the sound of Thirumanthram.
The benefit accrued by the prapannas who look to nothing but the
Lord, is obtained by the power of the meaning of Thirumanthram.
The second meaning is explained by Sri Bhattar in Ashtasloki as
follows:
If a person thinks that his body is the same as his soul then
he should look at the makaram of the pranavam. Since it talks
about the soul with knowledge he would understand the
knowledge-less body cannot be the same as the soul. Even if one understands this, he may mistake that the soul is not dependent on
the Lord and think that it is fully independent. Such a person
should look at akaram in pranavam. Akaram emphasizes that the
souls are enslaved to the Lord and therefore he will be cleared of
his error. If he understands that a soul is enslaved to the Lord but
thinks that it is similarly enslaved to many others, a fact that is
commonly seen in this world, then he should look at the ukaram in
pranavam. This ukaram shows that the souls are enslaved only to
Sriman Narayana and as such he would correct his mistake. A
person who understands all of this might still think that his own
effort is sufficient to protect himself. Such a person should look at
the nama: term. This term shows that the protection of the souls is
the duty of the Lord and not of the self. If a person begins to
develop great attachment to the people surrounding him, his wife,
children, relatives, then he should look at the Narayana term. This
teaches him that Sriman Narayana is the one and all relation to a
soul. A person who becomes attached to things of this world
should look at the “aya” term (chathurthi vibhakti). As this term
signifies that eternal service to the Lord is the purpose for a soul,
attachment to other things will be broken.
உங்கள் விலைமதிக்கமுடியாத இக்கருத்துக்கள் எமது மண்டூக்கிய உபநிடதத்தில் மிகவும் விரிவாக சொல்லப்படுள்ளது
யோகரஜாஹ் இலங்கை மட்டக்களப்பு