போகப் போகத் தெரியும் – 33

நாகூர் அனீபாவின் நண்பர்கள்

emhaniffaபொதுவாக கருணாநிதி மட்டுமல்ல, தி.மு.க-வில் பெரும்பாலோர் இந்துமதத்தைக் கடுமையாக எதிர்ப்பதுதான் முஸ்ஸீம்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு மார்க்கம் என்கிற தவறான கருத்தில் இருந்தார்கள். ரம்ஜான் நோன்பு விழாவில் ஒரு முறை கருணாநிதி பேசுகின்றபோது, ‘முஸ்ஸீம்களாகிய நீங்கள் இருப்பது நோன்பு, இந்துக்கள் செய்வது வம்பு’ என்று பேசினார். முஸ்ஸீம் சமுதாயக் கூட்டத்தில் போய் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காலத்திலிருந்தே திமுக-வில் நிலவி வந்த போக்கு இது.

என்னுடைய அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்…

அண்ணா பேசவிருந்ந்த பொறையார் கூட்டத்தில் போய் நான் அமர்ந்தேன். கூட்டத்திற்கு அண்ணா வருவதற்குக் காலதாமதமாயிற்று. நாகூர் ஹனீஃபா, இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ஒரு பாட்டில் இந்துக் கடவுள்களான விநாயகர், முருகன் ஆகியோரைக் கேவலமாக வர்ணித்துப் பாடியதுடன் அந்தக் கடவுள்களை வழிபடுகின்ற இந்துக்களைப் ‘பொச கெட்டப் பசங்களா’ எனக் கேலிசெய்தும் பாடினார். கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஒரு முஸ்ஸீம் இந்துக் கடவுள்களைக் கேவலப்படுத்திப் பாடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் பொறுமையுடன் இருந்தேன்.

அண்ணா வந்து பேசினார். கூட்டம் முடிந்தவுடன் இரவு உணவு பொறையார் ஜம்பு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு அருந்திவிட்டு அண்ணா வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் நாகூர் ஹனிஃபா உட்கார்ந்திருந்தார். எதிர்த் திண்ணையில் நான் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அண்ணா ஹோம்லேண்ட் இதழ் பற்றி சற்றுநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அதைப் பற்றி அவர் பேசி முடிந்தவுடன், கூட்டத்தில் நாகூர் ஹனிஃபா இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பாடியதைப் பற்றிச் சொல்லிவிட்டு மூடநம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு முஸ்ஸீம், இந்துமதத்தைப் பற்றி மட்டும் இழிவாய் பாடுவது என்ன நியாயம்? வேண்டுமானால், ஹனிஃபா இஸ்லாமிய மதத்திலுள்ள பிற்போக்கான கோட்பாடுகளைப் பற்றிப் பாடலாமே என சற்றுக் காரசாரமாகவே கேட்டேன்.

அண்ணா புன்முறுவலுடன் ஹனீஃபாவைப் பார்த்து, ’கணேசன் எனக்குச் சொல்லவில்லை, உனக்குத்தான் சொல்கிறார்’ எனச் சொல்லி, அவருக்கே உரிய ராஜதந்திரத்துடன் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இந்துமத எதிர்ப்பும், ஏனைய மதச்சார்பும் ஒருபோதும் பகுத்தறிவுக்கு விளக்கமாகிவிட முடியாது.
– பி.சி. கணேசன் / பக். 186/191 திரும்பிப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு பகுத்தறிவாளரும் பதில்சொல்லவேண்டிய கேள்வியைத்தான் பத்திரிகையாளர் பி.சி. கணேசன் கேட்டிருக்கிறார்.

இந்து முஸ்லிம் விரோதத்தைத் தேவையில்லாமல் கிளரும் விவகாரத்தில் அண்ணாதுரை அமைதியாக இருந்திருக்கிறார், கருணாநிதி கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார். கண்மணிகள் கைதட்டி ரசித்திருக்கிறார்கள்.

ஆகமொத்தம் பகுத்தறிவு அகராதியில் இஸ்லாம் என்றால் இனிப்பு, இந்து என்றால் கசப்பு என்று ஆகிவிட்டது. சீர்திருத்தத்தைப் பற்றி அவர்கள் மற்ற மதத்தவரிடம் வாய் திறக்கவே வெட்கப்படுகிறார்கள்.

இதற்காக ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மதச் சீர்திருத்தம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு 2005ஆம் ஆண்டில் கிடைத்தது.

உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் இருக்கிறது முஸபர் நகர். அதன் அருகில் உள்ள சர்தாவால் கிராமத்தில், முஸ்லிம் பஞ்சாயத்தின்முன், ஒரு விவகாரம் தீர்வுக்காக வைக்கப்பட்டது.

இம்ரானா என்ற பெண்ணை அவருடைய மாமனார் கற்பழித்துவிட்டார். பஞ்சாயத்தில் இம்ரானாவும் அவருடைய கணவரும் புகார் செய்தனர்.

imranas-father-in-lawவழக்கை விசாரித்த பஞ்சாயத்து, இம்ரானா ஏழுமாதகாலம் தனியாக இருந்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்; பிறகு மாமனாருக்கு மனைவியாக வேண்டும்; தற்போதைய கணவனை மகனாகக் கருதவேண்டும் என்று தீர்ப்பளித்தது. தீயோபந்தில் இருக்கும் தாருல்-உலூம் என்ற முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்து ஃபட்வா வெளியிட்டது.

இந்த ஃபட்வாவுக்கு நாடெங்கிலும் பலத்த கண்டனம் எழுந்தது. பத்திரிகைத் தலைப்புகளில் தீப்பொறி பறந்தன.

மாதர் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.

Muslim Womenஅகில இந்திய ஷியா பர்சனல் லா போர்டு ஃபட்வாவைக் கண்டித்தது. இஸ்லாமிய கிரிமினல் சட்டப்படி ’கற்பழித்தவனைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும்’ என்பதை சில முஸ்லிம்களே நினைவூட்டினார்கள்.

’மதச் சட்டங்களில் மாற்றங்கள் செய்வதைப் பற்றி யோசிக்கவேண்டும்’ என்று பாஜக கூறியது.

மார்க்சிஸ்ட் கட்சி சார்புடைய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் இம்ரானைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அகில இந்திய முஸ்லிம் பெண்கள் பர்சனல் லா போர்டு, ‘மவுலானாக்கள், குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவும் பாதிக்கப்பட்டவரைத் தண்டிப்பதற்காகவும் இஸ்லாமியச் சட்டங்களை வளைக்கிறார்கள்’ என்று சொல்லி ஃபட்வாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

    உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த சல்மான் குர்ஷித் பத்திரிகையாளர்களிடம் பிடிகொடுக்காமல் நழுவினார்.

    நாகூர் ஹனிஃபாவின் நண்பர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

  • அப்துல் ரகுமான் என்ற கவிஞர் திராவிட இயக்கங்களுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார். இம்ரானா விவகாரத்தில் இவருடைய கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.
  • கஸ்பருடைய கருத்து என்ன?
  • சோலை ஏதாவது சொல்லியிருக்கிறாரா?
  • சின்னக் குத்தூசியின் சிந்தனை என்ன?
  • சுப வீரபாண்டியனுக்கு சொந்தக் கருத்து ஏதாவது உண்டா?
  • மதிமாறனிடமிருந்து மறுமொழி உண்டா?
  • நன்னனிடமிருந்து ஏதாவது நற்செய்தி உண்டா?

இம்ரானின் துன்பத்தில் இவர்களுக்குப் பங்கில்லை. இவர்கள் பிரியாணி விருந்தில் மனித உரிமைகளை மறந்துவிட்டார்கள்.

அந்தப் பக்கம் போனால் அடிவிழும் என்பதால் இந்தப் பக்கமே இவர்களுடைய காற்று வீசுகிறது. முஸ்லிம்களோடு ஏற்பட்ட மோதலைப் பற்றி திமுக தலைவரான மு. கருணாநிதி எழுதுகிறார்:

1953 ஜூன் 21ம் நாள் திருச்சியிலேயுள்ள மதுரைரோடு திமு கழகத்தின் திறப்பு விழாவை நடத்தி வைக்கச் சென்றிருந்தோம். அன்று காலை தோழர் கண்ணதாசனும் வந்திருந்தார். தஞ்சையிலிருந்து நண்பர் சண்முக வடிவேலும் வந்திருந்தார்.

ஒரு பீடி முதலாளி – அவரும் முஸ்லிம்தான். நல்ல பணபலம் உடையவர். ஆளும் கட்சியின் ஆசி தேவை என்பதற்காக அடிமைப் பேரிகை கொட்டும் ஒரு சில முஸ்லிம் பெரியவர்களைப் போன்ற பண்பு பெற்றவர் அவர். தானே முன்வந்து நின்று கூட்டத்திலே சோடா புட்டிகள வீசி, கம்புகொண்டு மக்களைத் தாக்க முற்பட்டார்.

‘ஏனோ தெரியவில்லை ஒரு சில முஸ்லிம் பெரியவர்களும் வாலிபர்களும் நமது திராவிட இயக்கத்தை எதிர்த்திடவும் அவதூறாகப் பேசவும் எழுதவும் முற்பட்டிருக்கின்றனர். நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும் பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே – பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதாரம் நம்மைப்போல யாரும் தந்தது கிடையாதே – அவர்களும் திராவிட முஸ்லிம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது இல்லையே. அப்படியிருக்க அவர்களில் சிலர் நம்மீது காய்ச்சுவானேன் – பாய்வானேன்?
– மு. கருணாநிதி/ ஆறுமாதக் கடுங்காவல்

imranaவரலாற்றை உள்ளதை உள்ளபடி பதிவுசெய்ய வேண்டியதுதான் நம்முடைய வேலை. முஸ்லிம்கள் திராவிட இயக்கங்கள் உறவில் ஆரம்ப கட்டத்தில் சில உரசல்கள் இருந்தன என்பதும் கால ஓட்டத்தில் இவை காணாமல் போய்விட்டன என்பதும் வரலாற்றுச் செய்திகள்.

குடிஅரசு இதழில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு எதிராகக் கட்டுரைகள் வெளிவந்தன. புரட்சி இதழிலும் இத்தகைய கட்டுரைகள் வெளிவந்தன.

  • கோஷா முறைக்கு குரானில் ஆதாரம் – 04. 12. 1927
  • பர்தாவின் கொடுமை – சிறுமுகை எஸ்.ஜே. அப்துல் அஜிஸ் / 25. 11. 1928
  • இந்தியாவில் பர்தாமுறை ஒழிக்கவேண்டிய அவசியம் – 14. 10. 1928
  • சமதர்மத்திற்கு பெண்கள் விடுதலை அவசியம் – 15. 04. 1934 (புரட்சி)
  • முஸ்லிம் பெண்களும் அடிமைகளேதான் – 28.01.1934 (புரட்சி)

முஸ்லிம்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் ஈ. வெராவின் திராவிட இனவாதக் கோரிக்கையை எதிர்த்து, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழ் எழுதியது. ‘திராவிட நாட்டில் அல்லாவுக்கும் குர் ஆனுக்கும் இடமிருக்காது’ என்று அது எச்சரித்தது.

‘பிறை’ என்ற முஸ்லிம் இதழ் திராவிட இயக்கங்களைத் தொடர்ந்து விமர்சனம் செய்தது.

சில இடங்களில் திராவிட இயக்கத்தை ஆதரித்த முஸ்லிமகள் சமூக விலக்கு செய்யப்பட்டனர். விவாகரத்துகளும் நடைபெற்றன. சிலர் செருப்பால் அடிக்கப்பட்டனர்.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் ‘புரட்சி ஏடு’ நிறுத்தப்பட்டதாக ஈ.வெராவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கிருத்துவர்களின் எதிர்ப்பைக் கண்டபிறகு ஈவெரா ’ஜகா வாங்கியிருக்கிறார்’ என்று முந்தைய பகுதியில் எழுதியிருந்தேன். இஸ்லாத்திற்கும் அது பொருந்தும்.

முஸ்லிம்களோடு சமரசம் செய்து கொண்ட ஈவெராவுக்கு 1962-ல்தான் அவர்கள் பிரச்சினையானார்கள். அப்போது திமுக, சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் கூட்டு ஏற்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணி பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் ஈவெரா செய்த விமர்சனங்களை அந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை :

‘மகமதியரல்லாதவரைக் கொல்லவேண்டும் என்ற வசனம் குரானில் இருக்கும்வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை சாத்தியப்படாது’ என்று சுயராஜ்ஜியாவில் லாலா லஜபதிராய் எழுதியிருக்கிறார்.
– (பெரியார் களஞ்சியம் – பாகம் 3, பக்கம் 120.)

(தொடரும்…)

17 Replies to “போகப் போகத் தெரியும் – 33”

  1. ///இம்ரானா என்ற பெண்ணை அவருடைய மாமனார் கற்பழித்துவிட்டார்///

    இன்னுமா இந்த கற்பழிப்பு வார்த்தை எல்லாம் காலாவதியாகலை? அவங்க செயலைவிட கொடுமையா இருக்கு. வன்புணர்வுன்னு குறிப்பிடுங்கய்யா!

  2. //நாகூர் ஹனிஃபாவின் நண்பர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
    அப்துல் ரகுமான் என்ற கவிஞர் திராவிட இயக்கங்களுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார். இம்ரானா விவகாரத்தில் இவருடைய கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.
    கஸ்பருடைய கருத்து என்ன?
    சோலை ஏதாவது சொல்லியிருக்கிறாரா?
    சின்னக் குத்தூசியின் சிந்தனை என்ன?
    சுப வீரபாண்டியனுக்கு சொந்தக் கருத்து ஏதாவது உண்டா?
    மதிமாறனிடமிருந்து மறுமொழி உண்டா?
    நன்னனிடமிருந்து ஏதாவது நற்செய்தி உண்டா?//

    சூடு சுரனை இருந்திருந்தா அப்போதே இவர்கள் எல்லாம் பதில் சொல்லியிருப்பார்களே.

  3. //வன்புணர்வுன்னு குறிப்பிடுங்கய்யா// புணர்வு மட்டும் மங்களகரமான வார்த்தையாக்கும். வார்த்தைய மாத்திட்டா அதன் மீதுள்ள உணர்ச்சி மாறிடுமா? ஏன் கற்புன்னு உங்களுக்கு இருந்தா என்னவாம்?

  4. //ram
    8 September 2009 at 6:50 am
    //வன்புணர்வுன்னு குறிப்பிடுங்கய்யா// புணர்வு மட்டும் மங்களகரமான வார்த்தையாக்கும். வார்த்தைய மாத்திட்டா அதன் மீதுள்ள உணர்ச்சி மாறிடுமா? ஏன் கற்புன்னு உங்களுக்கு இருந்தா என்னவாம்?//

    விடு தலைவா, அந்த கொடும் செய்கையால் பாதிக்கப் படும் பாலைச் சேர்ந்தவர் என்ற முறையிலே அவர் தன் உணர்வை வெளிப் படுத்துகிறார்!
    நாம வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல எழுத வேண்டுமா?

  5. திருச்சிகார் கூறியது சரியே, SOWMIYA கூறியது பெண்களுக்கு தான் அவ்வார்த்தையும் உணர்வு புரியும். இவ்வார்தையை விட்டொழிக்க வேண்டும்.

  6. வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணதண்டனையை தானே இஸ்லாம் கூறுகிறது. ஔஏன் அதை செய்யவில்லை. இவ் வன்புணர்ச்சிகாரர்கள் இவ்வுலகில் வாழ தகுதியற்றவர்கள். ஆனால் இதே நிகழ்வு சவுதி அரேபியாவில் நடந்திருந்தால் தலையை வெட்டியிருப்பார்கள். ஏன் அது போன்று இந்தியாவில் இல்லை.

    தண்டனை கடுமையானல் தான் தவறுகள் குறையும்… என்பது உண்மை.

    (Edited and Published – Tamilhindu Editorial.)

  7. இந்தத் தொடரின் மூலமாக பல விஷயங்கள் வெளிவருகின்றன. ஈ.வே.ரா என்ற பொய்யரின் முகமூடி இதனால் நன்றாகவே கிழிபடுகிறது. வாழ்த்துக்கள் சுப்பு அய்யா 🙂

  8. நல்ல கட்டுரை..

    உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்..

    நன்றி.

    அக்டோபர் முதல் வாரத்தில் நான் முடிந்தால் சந்திக்கிறேன் அல்லது என்னால் இயன்றதை அனுப்பி வைக்கிறேன்.

  9. “சில இடங்களில் திராவிட இயக்கத்தை ஆதரித்த முஸ்லிமகள் சமூக விலக்கு செய்யப்பட்டனர். விவாகரத்துகளும் நடைபெற்றன. சிலர் செருப்பால் அடிக்கப்பட்டனர்”

    சுப்பு, இது நிஜமா..? அல்லது போகிற போக்கில் எழுதப்பட்டதா..?

    தராசு.

  10. Hi,

    I have not read all 33 parts but browesd through some of them over a period of time. Part 33 is the best of the lot. Going by the size of the articles, the book must be small in physical form.This topic deserves a bigger one.

    “Movements come in groups. Each one of them tries to rear itself above the rest. But as a rule only one of them really grows in strength, and this, in the long run, swallows up all the contemporary movements”. Movement of hatred towards hinduism ?? – I guess Poga poga theriyum!!!

  11. அண்ணன் காட்டிய வழி அம்மா என்பார்களே அது போல அவர்கள் தலைவர் முகமதுவும் தனது சொந்த மருமகளை (மகனை “த‌லாக்” செய்யவைத்து…) திருமணம் செய்தாரே அது வரலாறு;

    அது அநேகருக்குத் தெரியாது; அவர்களிடம் கேட்டால் அல்லாவே அதற்கு அனுமதி கொடுத்தார் என்றும் இறைத் தூதருக்கு எதிராகப் பேசுவதையும் அல்லா தடை செய்துவிட்டார் என்றும் சொல்வார்கள்..!

  12. ##அவர்கள் தலைவர் முகமதுவும் தனது சொந்த மருமகளை (மகனை “த‌லாக்” செய்யவைத்து…) திருமணம் செய்தாரே அது வரலாறு;
    அது அநேகருக்குத் தெரியாது; அவர்களிடம் கேட்டால் அல்லாவே அதற்கு அனுமதி கொடுத்தார்##

    mr.kumargilady. நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே கிடையாத போது எப்படி மருமகள் வந்தார்?
    இந்த வரலாறு எங்கே உள்ளது?
    பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்லுங்கள்.

  13. abdurrab,

    Tell me 1 thing.

    “Friends, Tell me whether a religion which has several Gods is best or whether a religion which says that God is only Supreme Head & arules overe evryone is best?”

    So says the Qoran.

    This verse clearly criticises hinduism & islamists say it is mentioned in the Quran.

    Now, what is your answer to this?

    If your answer is yes, then it means that Islam preaches hatred.

    If your answer is no, then the Quran has been misinterpreted & your religious leaders are lying.

    Whatever may be your answefr, please remember 1 thing – Your God will not be happy if you continue to kill in the name of religion – that much is for sure.

    Please do not commit all sorts of crime & put the blame on your God.

    That is the greatest disservice you can do to your God.

  14. சகோதரி சுமிதாவுக்கு வணக்கம். மனிதனின் தோற்றம் மற்றும் கலாச்சார ஆன்மீக படித்தரங்களின் அனைத்து நிலைகளையும் இன்று இந்தியாவில் காணலாம்.ஒருகாலத்தில் உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் அணுவை மேலும் பிளக்க முடியாது என்று கருதினார்கள். பின்னர் அணுவை பிளந்தார்கள். விஞ்ஞானமும் தவறுகளை திருத்திதான் வளர்ந்துள்ளது தாங்கள் அறிவீர்கள். ஒரு இந்து ஆலயத்தில் பல தெய்வங்களின் சிலைகள் இருக்கும். பல மதங்கள் நம்மில் இரண்டறக்கலநது விட்டதற்கு இது ஒரு அற்புதமான நரூபணம். நாம் யாரையும் அழிக்கவில்லை. ஒரு குழு மற்றகுழுவின் மீது அன்பு செலுத்தி பின் பரஸ்பரம் கல்வி கலாச்சார முன்னேற்றங்களை முன்எடுத்துச் சென்றுள்ளது. இந்து மதத்தின் உன்னதங்களை நாம் நமது இந்துக்களுக்கு முறையாகக் கற்றுக் கொடுக்கவில்லை.அதுதான் பிரச்சனை. நமக்கு நமது முன்னோர்களளின் மேன்மை ஆதிசங்கரரின் திருமந்திரத்தின் தாயுமானரின் கீதாச்சாரியாரன் மேன்மையை தாங்கள் அறிவீர்கள். பல தெய் வங்கள் என்பது பல குழுக்களின் சங்கமம் என்று முஸ்லீம் களுக்கு ஓங்கிச் சொல்லுங்கள். ஓர்நாமம் ஒர்உருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் தெள்ளேநாம் கொட்டாமே என்று மாணிக்க வாசகர் கூறுவது தாங்கள் அறிந்ததுதானே. இந்து மதத்தை கேள்வி கேட்கும் ஒருவனுக்கு காலத்தின் கருத்தின் உன்னதங்களின் அடிப்படையில் நாம் பதிலளிக்க வேண்டும்.நம்மில் பல சீர்திருத்தங்கள் நடைபெற வேண்டும் என்பது உண்மைதான்.
    முகம்மது ஒரு அரேபிய வல்லாதிக்க குழுவை உருவாக்கினார் அகண்ட பாரதம் கொள்கைபோல் உம்ரா அல் அரேபியா என்ற கருத்தை – உலகமே அரேபியா ஆக வேண்டும் என்று பேராசைமிக்க திட்டம் தீட்டினார். முகம்மதுவை ஒரு ராணுவ தளபதி என்பது மட்டும்சரி. சமயாச்சரிஎன்பது தவறு. தன்னை இறைவனின் துதராக ஏற்காத மக்களை எவ்வளவு கொடுமைப்படுத்தி கொன்று குவித்தார் என்பது உலகம் அறிந்து உண்மை. ஆயிசா என்ற 6 வயது சிறுமியை 50 வயதில் திருமணம் செய்து 9 வயதில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இது சிறப்பா ?
    அதிகாலையில் சோபியா என்ற யுத பெண்ணின் கணவன் சொந்தபந்தங்களைக் கொன்று விட்டு மாலையில் அப் பெண்னை திருமணம் செய்தது சிறப்பா? வளர்ப்பு மகன் செயது தன் மனைவியை தலாக் செய்தவுடன் மருமகளை திருமணம் செய்து கொண்டார். இது சிறப்பா ? யுத்தத்தில்கைபற்றிய பெண்களில் 5% முகம்மதுவுக்கு என்பது தங்களுக்கு தெரியுமா ? குமுஸ் பெண்கள் -வைப்பாட்டிகள் என்பது-முகம்மது பல குமுஸ் பெண்களை வைத்திருந்தார். 13 மனைவிகளுக்கு அப்பாற்பட்டு .இதுவும் சிறப்பா ? மெக்கா வியாபாரிகளை பாலைவத்தில் படைதிரட்டி அவர்களின் வாழ்வாதாரமான வியாபாரப் பொருட்களை கொள்ளை அடித்தார் -பகல் கொள்ளை – இதுவும் சிறப்பா.. தன்னை விமர்சித்த அஸ்மா என்ற பெண் கவிஞரை கொலையாளியை அனுப்பி கொன்று வரச் செய்து -அல்லாவுக்கும் தூதருக்காக கொலை செய்தால் பாவம் அல்ல என்று உபதேசித்தாரே அது சிறப்பா
    இறையில்லா இஸ்லாம் என்ற இணையதளம் செங்கொடி போன்றவற்றை முதலில் படியுங்கள். இந்துக்கள் முஸ்லீம்களைக் கேள்வி கேட்க வேண்டும். ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரை முழுமையாகப்படியுங்கள்.

  15. முகம்மது சொர்கத்தில் ஆண்களுக்கு பேரழகு படைத்த 72 தேவ கன்னிப்பெண்கள் கிடைக்கும் என்கிறார். அப்படியானால் சொர்க்கம் செல்லும் பெண்களுக்கு என்ன கிடைக்கம். 72 பொலி காளைகள் போன்ற ஆண்களா ? அரேபிய கலாச்சாரப்படி உலகை மாற்ற வேண்டும் என்று பிற கலாச்சாரக்குழு மக்களை பல கோடி பேர்கள் அநியாயமாகக் கொல்லப்பட மகம்மதுவும் குரானும் இன்றும் காரணமாயிருக்கின்றனர். கோவையில் மும்பையில் டெல்லியில் பல தொடர் குண்டு வெடிப்புக்ளைச் செய்த அனைவரும்குரான் படித்தவர்கள்தான ? பாக்கிஸ்தானில் இருந்து வந்து மும்பையில் அப்பாவி மக்களைக் கொன்றுகுவித்த அஜ்மல்கர்சாப் உட்பட 10 பேர்களும் குரான் படித்த பாக்கிஸ்தானியர்களே. மேற்படி நபர்கள் மனதில்- இவ்வளவு கொடுரக் கொலைகளைச் செய்யத் தூண்டிய கருத்து என்ன? தத்துவம் எது ? குரரான் மகம்மதுவும்தான். முகம்மது இறந்தஉடனே அவரது உம்ரா அல் அரேபிய கனவு பொய்த்துப் போனது. கலிபா பதவிக்கு முகம்மதுவின்குடும்பத்தினருக்கும் அபுபக்கருக்கும் போட்டி. அபுபக்கர் கொலை செய்யப்பட்டார்.பின் உமருக்கும் போட்டி. உமரும் கொலை செய்யப்பட்டார் 3 வது கலிபாவும் கொலை செய்யப்பட்டார். 4வது கலிபா பதவிக்கு போட்டி. முகம்மதுவின் மனைவி ஆயிசா தனது மைத்துனருக்கு ஆதரவாக களத்தில் இறங்குகிறார். எதிர் அணியில் மகம்மதுவின் அருமைமகள் பாத்திமாவின் கணவர் அலி. மகம்மதின் ஆதரவாளர்கள் இரு அணிகளாகப்பிர்ந்து – ஒருகுழுவின் தளபதி ஆயிசா -அழகிய ஒட்டகத்தின் மீது போர்க்ளம் சென்றார் – எனவே இப்போருக்கு Battle of camel – என்று பெயர்.மறுபக்கம் முகம்மதின் மருமகன் அலி. முகம்மதின் தொண்ர்கள் 5000 பேர்கள் மேற்படி யுத்தத்தில்பலியானார்கள். அன்று கொட்டத்துவங்கிய இரத்தம் …… இன்றும் கொட்டிக்கொண்டேயிருக்கின்றது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள அனைத்து நாடுகளிலும் குரானுக்காக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கங்கள் நிறைய உள்ளதே.ஏன் ? அரேபியன் போல் பெயர்,தாடி, துணி, செனட, வீடு சொத்துப்பங்கு,திருமணச் சடங்குஎன்று ஒரு இந்தியனை உலக மக்களை அரேபிய கலாச்சாரசாதிஆக்கிவிட்டால்என்ன நன்மை மிஞ்சும். மதம் என்பது சத்தியம் தர்ம் ம் ஒழுக்கம் பண்பாடு மனித நேயம் இரக்கவுணர்வு ஆகும்.
    அரேபியன் போல் தோன்றுவது மதம் என்று முகம்மது போதித்து இந்த உலகிற்கு பெரும் கேட்டை உண்டாக்கி வைத்துள்ளார்.முற்றிலும் முஸ்லீம்கள் வாழும் சமுதாயத்தில் கலாச்சார அடையாளங்கள் வெளி வேஷங்கள் எடுபடாது. மனித வளம் பண்பாடு மனித நேயம் நீதிபோன்ற விழுமிய்ஙகள் மட்டுமே கதைக்கு பயன் படும். இதையே ஒரு இந்துவாக வாழ்நது அவன் அந்தணனாக இருந்தால் அரேபியன்போல் அவனது சில பழக்க வழக்கங்கள் இல்லை என்ற காரணத்தைக்காட்டி அவனை காபீர் என்று இழித்து சொல்வது ஏன் ? அரேபிய சாதித்திமீர்தான். .இந்தியாவின் அற்புதம்ஸ்ரீவிவேகானந்தர் கூறுவதைக் கேளுங்கள் EVERY RELIGION IN THE WORLD HAS PRODUCED MEN AND WOMEN OF MOST EXALTED CHARACTERS- ஒவ்வொரு மதமு்ம் உயர்தகுதிபெற்ற ஆண்களையும் பெண்களையும் உலகிற்கு அளித்துள்ளது .எவ்வளது சத்தியமான வார்த்தை. இதுான் அறிவு.இதுதான் அன்பு கருணை பகுததறிவு பாசம் நேசம் சகோதரத்துவம் மனித நேயம் . பிற குழுக்களின் சிறப்பபை உணர்ந்தால் வெறுப்பு இல்லை. முகம்துதான் உண்மை மற்வர்கள் அனைவரும் சாத்தானின் கூட்டம் காபீர்களின் கூட்டம். கொல்லுங்கள். வெட்டுங்கள் என்கிறது குரான். எங்கே சமாதானம். குரான் படித்தவன் மனதில் வெறுப்பு பகை கொழுந்துவிட்டு எறியும்.யார் அணைக்கப் போகின்றார்கள். இந்தப் பகைத்தீ இனனும் எத்தனை பேரை எவ்வளவு இரத்தத்தைக் கொட்டப்போகின்றதோ? யாரறிவார் ?

  16. abdurrab , நீங்கள் தயவு செய்து answering islam என்ற தளத்தில் சென்று பார்க்கலாம்.

    One of the most shocking events in the life of Muhammad, one which has been a major source of embarrassment for Muslims, is his marriage to his adopted son’s former wife, Zaynab bint Jash. Zaynab had married Zayd, the freed slave of Muhammad’s first wife, Khadijah, whom Muhammad adopted as his son. According to some versions of the story, Muhammad had ventured to see his adopted son, Zayd, at his house. Upon arriving, he found Zaynab unveiled and was enamored by her beauty. As he departed, Muhammad made some comments which she heard and, when her husband returned, told him what had transpired. After Zayd heard that Muhammad had made some comments about his wife’s beauty, he went to his adoptive father and told him that he would divorce her so he could marry her if this is what Muhammad desired. Muhammad refused and encouraged his adopted son to remain with his wife. Subsequently, Zayd divorced his wife and

    Muhammad was commanded by Allah to then marry Zaynab, his adopted son’s divorcee.

    The Quran refers to this marriage in the following passage:

    When thou saidst to him whom God had blessed and thou hadst favoured, ‘Keep thy wife to thyself, and fear God,’ and thou wast CONCEALING WITHIN THYSELF what God should reveal, FEARING OTHER MEN; and God has better right for thee to fear Him. So when Zaid had accomplished what he would of her, THEN WE GAVE HER IN MARRIAGE TO THEE, so that there should not be any fault in the believers, touching the wives of their adopted sons, when they have accomplished what they would of them; and God’s commandment must be performed. S. 33:37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *