ஒன்றுபட்ட ஒரே தேசமாக, ஒற்றுமையாக நமது நாடான இந்தியா இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நானும் நண்பரும் ஒரு நாள் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தோம். பேசப் பேசத் தான் இது எவ்வளவு பெரிய, மகத்தான விஷயம் என்ற உணர்வு ஏற்பட்டு அதிகரித்து வந்து. பின்பு, இந்த உரையாடலையே ஒரு காணொளியாகப் பதிவு செய்தால் என்ன எண்ணம் தோன்றியது. அதன் விளைவே கீழ்க்கண்ட வீடியோ பதிவு… வைகோ, சீமான் போன்ற முட்டாள்கள் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்ற ரீதியில் செய்யும் பிரிவினைவாத பிரசாரங்கள், இந்தியா ஏதடா, இந்து ஏதடா என்பது போன்ற உளறல்கள் ஆகியவற்றையும் பற்றி இந்த உரையாடலின் ஊடாக பதிலடி கொடுத்துள்ளோம். தனித் தமிழ் தேசம் சாத்தியமில்லாத ஒன்று என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம்…
View More ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்Author: லட்சுமண பெருமாள்
ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?
இந்தியாவைப் பொறுத்தவரையில் குடும்பஅமைப்பு முறையால் ஆண்களுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பையும் இதே இந்திய சமூகம் வழங்கியுள்ளது. இன்னமும் “வேலைக்குச் செல்வதே புருஷ லட்சணம்” என்பதைத்தான் இந்தியப் பெண்களும் சமூகமும் எதிர்பார்க்கிறது என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. திருமணத்திற்கு முன்பாகவே ஓர் ஆண் தனக்கான பணியை உறுதிசெய்யவேண்டிய அவசியத்தையும் சமூகம் வைத்துள்ளது. அதையும் ஆண்சமூகமே வைத்துள்ளதுபோலத் தோன்றினாலும், பெண்ணும் எதை எதிர்பார்க்கிறாள் என்பதும் அவசியம் கேட்கப்பட வேண்டியது. குடும்பஅமைப்பில் உடனடியான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், நீண்டகால நலன், எதிர்கால சந்ததிகளின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் குடும்பத்தோடு கூடிய பெண்ணியம் பேசுதலையே நான் வரவேற்பேன்….
View More இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?
டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது…முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது. இதுவெல்லாம் தெரிந்தும் கெஜ்ரிவால் பல நாடகங்களை அரங்கேற்றுவார் என்பதை நாம் கண்கூடாகப் பார்ப்போம்….
View More டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு
“உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக்களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்…. உலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை…உலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும்…
View More உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்புதமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்திலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு” தலைமை அடிமை”யாகவே உள்ளன. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது. தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும்…. கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர் அடையாளம் காணாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது என்பதே நிதர்சனம்..
View More தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?
அரசு அணைக் கட்டுவதாக இருந்தால், நிலப்பரப்பைக் கொடுப்பவர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு, இழப்பீடு என்பதை செய்ய அறிவுறுத்துவது சரியா? அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அரசுகளிடம் போராடி நிலங்களை இழப்பவருக்கு அனைத்துக் கட்சிகளும் போராடலாம். அப்பகுதி மக்கள் போராடி முறையான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் கேட்டுப் பெறுவதுதான் சரியே ஒழிய, இதை இங்கு வர விட இயலாது என சொல்வதென்பது இந்தியாவின் கட்டுமானத்தையும், தொழில், விவசாய, மின் வளர்ச்சியையும் நிச்சயமாகப் பாதிக்கும்… எதைப்பற்றியும் தெளிவுப்படுத்தாமல் அதிகாரப் பகிர்வை கெஜ்ரிவால் முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் வைத்து அவரை ஆதரிப்பதை அவரை ஆதரிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வை முறையாக எங்கு செலுத்த வேண்டும் என்கிற புரிதலின்றி செயல்படுதல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவாது என்பது திண்ணம்….
View More ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?