தமிழகத்தில் பள்ளிகளைத் மதமாற்றக் கருவிகளாகத் துவங்கி, படிக்கவரும் இளம் சிறுவர்களை மனதைத் திருப்பியும், மெதுவான அணுகுமுறைகளாலும் தமிழக ஹிந்துக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுப் பலரை புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதில் வெற்றி பெற்றார்கள், டேனிஷ் மிஷனரிகள். புதுச்சேரியில் மதம்மாறிய ஹிந்துக்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டன. ஹிந்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான பல ஆதாரங்களும் இருக்கின்றன.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 29Category: தேசிய பிரச்சினைகள்
2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!
இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான முழுமையான மதிப்பெண்களை மக்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்… குஜராத், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் முழுமையான வெற்றியை பாஜக ஈட்டி இருக்கிறது. சுமார் 200 தொகுதிகளில் 50 சதவிகிததுக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குவிகிதமும் 38 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது….
View More 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8
126 போர்விமானத் தேவைக்காக ராஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்திவந்த இரண்டே வாரத்திலேயே, அதாவது 2012லேயே, டசோல் நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பாரதத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி [யு.பி.ஏ – ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி] பாரதத்தை ஆட்சிசெய்தது என்பதை நினைவு கூறவேண்டும்.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7
பாரதம் செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது; விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது; கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது; அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6
டசோல் நிறுவனம் மட்டுமல்ல, அமெரிக்க விமான நிறுவனங்களும்கூட, பாரதத்தில் எச்.ஏ.ஏல். நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய முடியாது என்று தெரிவித்தபின்னர் பாரதத்தின்முன் நின்ற பெரும் பிரச்சினை இதுதான்..
முழுதாக, பறக்கும் நிலையிலுள்ள, பாரதம் விரும்பும் தொழில் நுட்பங்களுள்ள, – தாக்கும் திறனுள்ள, தளவாடங்களுள்ள, பாரத விமானப்படைத் தலைமை விரும்பும் போர்விமானமான ரஃபேலை உடனே பெறவேண்டும் என்றால் – அதை பிரெஞ்சு அரசின் மூலம்தான் அடையமுடியும் என்ற நிலைமை பாரதத்திற்கு ஏற்பட்டது.
கொலைகாரக் கிறிஸ்தவம் — 25
“புனித விசாரணை என்கிற பெயரில் கட்டாயப்படுத்தி ஒரு சமுதாயத்தின் மொழியை அழிப்பதன் மூலம், அந்தச் சமுதாயம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவைக்க இயலாது என்பதினை போர்ச்சுகீசிய பாதிரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக போர்ச்சுகீசிய பேரரசு இந்தியாவில் அழிவுண்டு கிடந்தது”
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 25கொலைகாரக் கிறிஸ்தவம் — 24
இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய டிரிபியூனல்கள் எல்லா இடத்திலும் இருந்தனவென்றாலும், கோவாவில் இருந்த இன்குசிஷன் விசாரணை டிரிபியூனலுக்கு இணையான படுமோசமான, இனவெறி கொண்ட, அயோக்கியர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படதொரு டிரிபியூனல் வேறெங்கும் இல்லை. இங்கிருந்த இன்குசிஷன் அதிகாரிகள் ஹிந்துப் பெண்களையும் கைதுசெய்து சிறையிலடைத்தார்கள். அங்கு தங்களது மிருகவெறியை அவர்களிடம் தீர்த்துக்கொண்ட பின்னர் அந்தப் பெண்களைக் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கூறி கட்டைகளில் கட்டி தீவைத்து எரித்துக் கொன்றார்கள்”
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 242019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?
கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது… எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது… திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது…
View More 2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?கொலைகாரக் கிறிஸ்தவம் — 23
சூரியவெளிச்சம் படாத வைகையில் இரவும், பகலும் இருட்டுச் சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார்கள். அவர்களின் கை-கால்கள் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்ருந்ததால் எங்கும் நகரமுடியாமல் கிடந்த இடத்திலே கிடந்து வலியில் உழன்றார்கள். அவர்களின் மலம்-மூத்திரத்தின்மீது அவர்கள் படுத்து உறங்கவேண்டிய நிலைமை இருந்தது. “அவர்களைப் பேன்களும், எலிகளும், இன்ன பிற ஜந்துக்களும் அவர்களின் உடல்களைச் சிறிது சிறிதாக கடித்துத் தின்றுகொண்டிருந்தன.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 23இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?
எனக்குத்தெரிந்து விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யாத தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை. எம்பிக்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று எங்கேயும் பிரச்சாரம் நடைபெறவில்லை. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்துவிட்டது என்று பேசுவதில்லை. அதாவது மக்களை நேரடியாக பாதிக்கிற பிரச்சினைகளைப் பற்றி யாரும் முக்கியப் பேசுபொருளாகப் பேசுவதில்லை. மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆகவே மதசார்பின்மையை காக்க மோடிக்கு வாக்களிக்க கூடாது. சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். பட்டியல் சமூதாயத்தினர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று முக்கியப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்த தேர்தலில் மையப் பிரச்சாரம்… அண்ணல் அம்பேத்கர் தீர்க்கமான பார்வையுடையவர். இவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தவர். அதனால் இவற்றைப்பற்றி இன்று பிரச்சாரம் மையம் கொண்டிருப்பதால் அண்ணல் அம்பேத்கர் இருந்திருந்தால் இன்று எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார் என்பதை அலச வேண்டியுள்ளது…
View More இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?