மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசாக இருந்தாலும், பதவிக்கு வருபவர்கள் தங்களைத் தங்கள் பதவியில் நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் பிற்காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சமயத்தை அனுசரிப்பது, அல்லாது அனுசரிக்காமலிருப்பது இவற்றைச் சட்டமியற்றி மட்டுப்படுத்தக்கூடாது என்பதில் அமெரிக்க்த் தந்தையர் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பது கண்கூடாகிறதல்லவா?
அதற்குக் காரணம் தனிமனித உரிமை காக்கப்படவேண்டுமென்ற தணியாத தாகம்.
Tag: அதிபர் தேர்தல்
இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?
இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா?
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.