சோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. சங்ககாலத்திலேயே 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள் – முழுப்பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது…
View More ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்ததுTag: அழகிய மரம்
அழகிய மரமும் பூதனையின் பாலும்
லயோலா போன்ற கிறித்துவர்களின் கல்வியோ தெரசா போன்றோரின் உதவியோ, எல்லாமே கிறித்துவ மத மாற்றத்திற்கான ஒரு கருவியே. இதனாலே தான் கிறித்துவர்கள் கொடுக்கும் கல்வி பூதனையின் பால் போன்றது. அதில் சில நச்சு வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மிதமான வகையில் கிறித்தவத்தின் மீது ஒரு நன்றியும்,நன்மதிப்பும் கொடுக்கும்; சராசரியாக இந்து மரபின் மீது ஒரு அக்கறையின்மையும் ஏளனமும் உண்டுபண்ணும்; தீவிரமாயின் இந்து சமய பண்டிகைகள் கொண்டாடினாலோ, மரபின் அடையாளங்களை அணிந்தாலோ தண்டிக்க கூடச்செய்யும். அண்மையில் கூட அத்தகைய செய்திகள் வந்துள்ளன…. இந்த பொய் வரலாற்றிற்கு வைரமுத்து போன்றோர் சாட்சி கூறிவருவது மிகவும் ஈனச்செயல். “கிறிஸ்துவர்கள் வராவிட்டால் தமிழ் நாட்டில் கல்வி பொதுவுடைமை ஆகியிருக்காது”, என்று அவர் கூறுவது, ஒரு திருடன் ஊர் சொத்தை கொள்ளையடித்து தன் வீட்டில் அன்னதானம் செய்வதை போற்றுதல் போல. மரபுக்கல்வியாகிய அழகிய மரத்தின் நிழலில் பொதுவாக அனைவரும் படித்தனர், அதை சாய்த்துவிட்டு, பெஞ்சுகள் செய்து, கிறித்துவக்கல்வி என்னும் கலப்படப்பாலை ஊட்டுவோர்க்கு நன்றி அறிவித்தல் அறிவீனம்…
View More அழகிய மரமும் பூதனையின் பாலும்அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி
1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன… இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம். எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும்?….
View More அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்விஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்
1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆதாரபூர்வமான நூலை எழுதினார். மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை B.R.மகாதேவன் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்திருக்கிறார்..
View More அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்