ராமஜன்ம பூமி இயக்கம் தேசிய அளவில் மையம் கொண்டது முதல், தன்னை முழுமையாக அதனுடன் பிணைத்துக் கொண்டார் அசோக் சிங்கல். 1990ல் முலாயம் தலைமையிலான உ.பி மாநில அரசு அமைதியாக கரசேவையில் ஈடுபட்டிருந்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, களத்தில் இறங்கி தொண்டர்களுடன் நின்று போராடியவர். முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு கரசேவர்களுடன் அவர் நிற்கும் புகைப்படம் வரலாற்றில் அழியாத இடம் பெற்று விட்டது… “மனுஸ்மிருதியின் சாதிய கருத்துக்களை வி.ஹி.ப நிராகரிக்கிறது. பண்பாடும் கலாசாரமும் கொண்ட ஒரு சமூகத்தில் அத்தகைய கருத்துக்களுக்கு எந்த இடமும் அளிக்கப் படக்கூடாது. நமது ஆதி மனுஸ்மிருதி என்றால் அது ஸ்ரீமத்பகவத்கீதை தான்… ” என்று கருத்துக் கூறினார் அவர். அதன் படியே, தலித்கள் உட்பட அனைத்து சாதி இந்துக்களுக்களும் அர்ச்சகராகும் உரிமைகளையும், வேதக் கல்விக்கான வாய்ப்புக்களையும் வி.ஹி.ப வலியுறுத்தி வந்திருக்கிறது…
View More அஞ்சலி: அஷோக் சிங்கல்