“நீ சொல்லறது நல்லா இருக்குடா. இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு. இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக? கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும். அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று இழுத்தாள் மூதாட்டி.
“வாங்க ஐயா. தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன். அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல. சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிக்கப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறேன்.”