1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன… இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம். எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும்?….
View More அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்விTag: இந்தியக் கல்வி
அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்
1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆதாரபூர்வமான நூலை எழுதினார். மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை B.R.மகாதேவன் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்திருக்கிறார்..
View More அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி
தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!… ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது… தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன்… ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை… திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான்…
View More [பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி