“ஜாதி அரசியலைப் புறக்கணித்து வளர்ச்சிக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி, தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்களிடையே பேசினார். ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள அற்புதமான வெற்றியை ஒட்டி அவர் நிகழ்த்திய உரை இது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த உ.பி, உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது பாஜக. 2024இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதியில் வென்ற மகிழ்ச்சி பாஜக தொண்டர்களின் பூரிப்பில் தெரிகிறது.