இந்தியாவைப் பொறுத்தவரையில் குடும்பஅமைப்பு முறையால் ஆண்களுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பையும் இதே இந்திய சமூகம் வழங்கியுள்ளது. இன்னமும் “வேலைக்குச் செல்வதே புருஷ லட்சணம்” என்பதைத்தான் இந்தியப் பெண்களும் சமூகமும் எதிர்பார்க்கிறது என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. திருமணத்திற்கு முன்பாகவே ஓர் ஆண் தனக்கான பணியை உறுதிசெய்யவேண்டிய அவசியத்தையும் சமூகம் வைத்துள்ளது. அதையும் ஆண்சமூகமே வைத்துள்ளதுபோலத் தோன்றினாலும், பெண்ணும் எதை எதிர்பார்க்கிறாள் என்பதும் அவசியம் கேட்கப்பட வேண்டியது. குடும்பஅமைப்பில் உடனடியான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், நீண்டகால நலன், எதிர்கால சந்ததிகளின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் குடும்பத்தோடு கூடிய பெண்ணியம் பேசுதலையே நான் வரவேற்பேன்….
View More இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?