இந்த உடம்பின்கண் தோன்றும் பொய், களவு, காமம் என்ற மூன்றும் தீவினையாகும். நமது வாய்மொழியில் தோன்றுவது நான்கு. அவை பொய், குறளை எனப்படும் நிந்தனைச் சொற்கள், கடுஞ்சொல் மற்றும் பயனற்ற சொற்கள் என்பவையாகும். மனதில் தோன்றும் மூன்று ஆசை, கோபம், மயங்குதல் என்பவையாகும். மேற்சொன்ன பத்தும் தீயவழிகளாகும். நன்கு கற்றறிந்தோர் இந்தப் பத்தின் வழி செல்லமாட்டார்கள். அப்படிச் சென்றார்களாயின் விலங்குநிலை, பேய்நிலை அல்லது நரகநிலை அடைந்து மனத்தளவில் துன்பங்களை அனுபவிப்பார்கள்.. நல்வினை எதுவென்று கேட்டால் மேற்கூறிய பத்து வினைச் செயல்களையும் தவிர்த்து, நல்லொழுக்கத்தின்கண் நின்று, தானங்கள் செய்து, மனிதர், தேவர் மற்றும் பிரம்ம நிலைகளை எய்தி இன்புற்று இருத்தலாகும்…
View More ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25Tag: சித்திராபதி
உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19
மணிமேகலை யாரு? மாதவி என்ற பேரிளங்கொடிக்குப் பிறந்த துவண்டுவிழும் கொடி. பூத்துக்குலுங்கும் மலர். போதவிழ்ந்து தேன்சிந்தும் மலர். மலரில் தேன் வடிகிறதென்றால் வண்டு மொய்க்காதா என்ன? மணிமேகலையைச் சாதாரண வண்டா மொய்த்தது? உலகாளும் அரசவண்டு. நான் பார்த்துக்கொண்டு வாளாதிருப்பேனா? அந்த வண்டு தேன்பருகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன். அமுதசுரபியாம் அமுதசுரபி! பிச்சைப் பாத்திரம்! அந்தத் திருவோட்டை மணிமேகலை கைகளிலிருந்து பிடுங்கி அந்தப் பிச்சைக்கரகள் முகத்தில் விட்டெறிந்துவிட்டு அவளை என்னுடன் பொன்தேரில் ஏற்றிக்கொண்டு வருகிறேனா இல்லையா, பார்!
View More உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19