வயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் இசையமைத்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’ என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன்.
இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜன். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான ‘வா ராஜா வா’வில் குன்னக்குடி வைத்தியநாதனை வெற்றிகரமான திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார். அதில் வரும் ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா’ போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஏ.பி.என். அவர்கள் தயாரித்த ‘கண்காட்சி’, ‘திருமலை தென்குமரி’, ‘அகத்தியர்’, ‘மேல்நாட்டு மருமகள்’ போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து மக்களிடையே ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் அறியப்பட்டார் குன்னக்குடி வைத்தியநாதன்…
View More நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்