தாலியின் மீது அநாவசிய வெறுப்பை உருவாக்குவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் படும் வெறுப்புணர்வுப் பிரசாரம். தமிழகத்தில் பூ விற்கும் பெண்கள் முதல் புகழின் உச்சியில் இருக்கும் உயரதிகாரிகள் வரை மதித்து அணியும் மங்கலச் சின்னமான தாலி. தங்கள் உழைப்பிலும் பண்பிலும் உண்மையாக நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் மதித்து அணியும் தாலி. அந்தப் பண்பாட்டு அடையாளத்தை அருவருக்கத் தக்க வகையில் பொது நிகழ்ச்சியில் அவமதிப்பதன் மூலம் என்ன பெரிய எழவுப் புரட்சியைக் கொண்டு வரப் போகிறீர்கள்? உங்கள் ஊடக போலித் தனத்தின் அவலட்சணத்தைப் பார்த்து ஊரும் உலகமும் சிரிக்கிறது…. தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. எனவே அதற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிடாமல் செய்யவும், இனி இந்த சில்லறை அமைப்புகளின் ஆட்டம் அதிகமாக இருக்கும். தேச விரோத ஹிந்து விரோத ஊடகங்களும் ஹிந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கும்.பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்…
View More ‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”