தோல்வி காணாத கட்சி என்று எந்தக் கட்சியும் எக்காலத்திலும் இருந்ததில்லை. உண்மையில் இந்தத் தோல்வி பாஜகவை உள்முகமாக மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில், இத்தோல்வி பாஜகவின் அரசியல் எதிரியான காங்கிரஸ் அடைந்தது போன்ற அவமானகரமான தோல்வி அல்ல. மிகவும் போராடி, நூலிழையில் பாஜக பறிகொடுத்த வெற்றியைத் தான் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுகிறது… கள நிலவரம் மிகவும் மோசமாக இருந்தபோதும், பாஜக கடைசி வரை கடுமையாகப் போராடி தோல்வி விகிதத்தைக் குறைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சூறாவளிப் பிரசாரமும், வாக்குச்சாவடி மட்டத்திலான தீவிரமான களப்பணியும், நேர்த்தியான தேர்தல் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும்…
View More யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்Tag: சிவராஜ் சிங் சௌஹான்
நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி
காங்கிரஸ் கட்சியினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 2019 மே வரை மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த நாட்டை ஆளும். அதன் பிறகும் பாஜக அரசு தொடர்வதற்குரிய பணிகளையே காங்கிரஸ் கட்சியின் துர் நடத்தைகள் உருவாக்கி வருகின்றன.
ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்கள் பொறுமையுடன் நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் நயவஞ்சகத் தந்திரங்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியினருக்கே எமனாகும். இதனை மக்கள் அவர்களுக்குப் புரிய வைப்பார்கள்.
View More நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி