கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே… புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும் வழங்கப்பட்டது. பழைய ப்ளெக்ஸ்கள், தார்பாய்கள் வாங்கப்பட்டு தற்காலிக முகாம்கள்,உடைந்த கூரைகள் மீது போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மிக முக்கியமாக உணவுப்பொருட்களை அனுப்பும் துவங்கியது…
View More கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்