தான் இயற்றிய இந்தச் சிவதாண்டவத் தோத்திரத்தினையும் பாடுகிறான். இவற்றினால் மனமகிழ்ந்த சிவபிரான் அவனை விடுவித்து, அவன் பக்தியை மெச்சி சந்திரஹாசம் எனும் வாளையும் பரிசளிக்கிறார்.
கம்பீரமான குரலில் பாட, சிவதாண்டவத்தின் ஜதிகளுக்கொப்ப சொற்களைப் பயன்படுத்தி அவன் இயற்றியுள்ள இந்த சமஸ்கிருதத் தோத்திரம் படிக்கவே இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். பெரும்பாலான அடிகளில் ஒரே எழுத்தில் தொடங்கும் (மோனை) பலவிதமான பொருள்கொண்ட சொற்கள் அமைந்து தாண்டவத்தின் ஆண்மைத்தனமான அழகை (பௌருஷத்தை) சித்தரிக்கின்றன. சொற்கள் எழுப்பும் ஒலிகளும் வார்த்தை ஜாலங்களாகி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.