அடுத்த வீடு

மாமா அடிக்கடி புகையிலை போடுவார். நான் அங்கு போகும்போதெல்லாம் மறக்காமல் அரையணா சாமான் (புகையிலை) வாங்கித்தரச் சொல்லுவார். சிலசமயம் காசும் தருவார். சில சமயம் ”நான் காசு தந்தேனே கார்டு எங்கே? அரையணா சாமான் எங்கே?” என்று கேட்பார். வாயில் வந்த பொய்யைச் சொல்லி சமாளிப்பேன்.

View More அடுத்த வீடு

“காமாச்சியைக் கரையேத்தணும்!”

இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே! வேற நீ என்னடா பண்ணுவே! அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழைபெய்யுமாடா? நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம். அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா. இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ?

View More “காமாச்சியைக் கரையேத்தணும்!”

மீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)

“பெரியபாட்டியையும் மெட்ராசுக்கு கூட்டிண்டு போயிட்டாரா?”
“நன்னாயிருக்கே, நீ சொல்றது! கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை. மொசைக் தரைன்னு தெரியாம, ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா. அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப்படுமா? அதுதான்…”
“எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா. இந்தக் கட்டை கண்ணைமூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன். இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா. எம் மனசு நெறஞ்சுபோச்சுடா, கண்ணா! எப்ப ஈஸ்வரன் கூப்படறானோ அப்ப நிம்மதியா போய்ச்சேருவேன். ஏன்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள்.

“கண்ணா, என்னால பிழிஞ்சு ஒணத்தவே முடியலடா. இப்ப நார்ப்பட்டுன்னு ஒண்ணு செய்யறாளாமேடா. அதைப் பிழியவே வேண்டாமாண்டா. வெறுன்ன நனைச்சுப்போட்டாலே ஒணந்து போகுமாமே. எனக்கு ரெண்டு நார்ப்பட்டு பொடவை வாங்கித் தரியாடா?”

View More மீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)