மண்குடமும் பொன்குடமும்

கண் முன் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தன்னைத் தானே எரித்துக்கொண்டதா?… பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்… ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர்… குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?… வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

View More மண்குடமும் பொன்குடமும்

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? இதில் உச்சபட்ச நகைச்சுவை, பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக சோனியா அம்மையார் முழங்கி இருப்பது தான். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறெல்லாம் அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

View More ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?