இல்லறத்தில் இருப்பவர்கள் மோக்ஷமே வாழ்வின் இறுதியான நோக்கம் என்பதை மறவாமல் இருக்கவும், அதற்காக படிப்படியாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவுமே ஐயப்ப தெய்வ வழிபாடு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய், தாயும் தந்தையுமாய் குடும்பமாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காணுவது. அது இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது. ‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்’ எனும் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம்.. முறைப்படுத்தப்பட்ட காமம் ஆக்கசக்தியாகிறது. கட்டுப்படுத்தப்படாத காமம் அழிவுசக்தியாகிறது. ஆண்கள் உடலையும் மனத்தையும் காமத்தையும் வெல்லும் பயிற்சியாகவே ஐயப்ப விரதம் இருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. (மாதவிடாயுள்ள பருவத்தில் இருக்கும்) கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களுக்கென விரதங்கள், வழிபாட்டு முறைகள் – விசேஷமாகப் பெண்களுக்கே உரியனவாக – நமது பண்பாட்டில் பல உள்ளன. அதுவே அவர்கள் மனக்கட்டுப்பாட்டுக்குப் போதுமானது…
View More சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்Tag: புலனடக்கம்
எழுமின் விழிமின் – 35
…..பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்கவேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிட,ம் கடுங்கோபமாக இருக்கிறாள். அந்நிலையில் அவள் இருக்கும்பொழு து உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப்போய் புதிய அலை எழுகிறது. அது தான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது.
கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி நினைக்க வேண்டும். யாரிடமிருந்தாவது பரிசாக எதையாவது பெறவேண்டுமென்ற எண்ணம் எழுந்தால் அதற்கு எதிப்பான எண்ணத்தால் எண்ணத்தை மாற்றிவிட வேண்டும்.
…..மிக ஆழ்ந்த மௌனமாக இருக்கும்போது, தனிமை நிலையில் மூழ்கி இருக்கும்போது அந்த நேரத்தில் தீவிரமான நடவடிக்கையைக் கண்டுபிடித்துச் செய்யக்கூடியவன் லட்சிய மனிதனாவான். அவன் மிகத் தீவிரமான நடவடிக்கைகளுக்கிடையே பாலைவனத்திலுள்ளது போன்ற அமைதியையும் தனிமையையும் அனுபவிப்பான்.
View More எழுமின் விழிமின் – 35