முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். நாலந்தா கொஞ்ச காலத்திற்கு அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே வந்து அதையும் அழித்தார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் தெளிவாக விவரிக்கப்படுகிறது…. ஆனால் “திபெத்திய நூல் ஒன்று நாலந்தா சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுவதாக” மார்க்சிய வரலாற்றாசிரியர் டி.என்.ஜா பதிவு செய்கிறார்…. இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?… மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்… (மூலம்: அருண் ஷோரி, தமிழில்: ராஜசங்கர்)
View More நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்Tag: பௌத்தம் அழிவு
வன்முறையே வரலாறாய்… -7
“இஸ்லாம் இந்தியாவில் மட்டும் பௌத்த மதத்தை அழிக்கவில்லை. அது சென்ற இடங்களில் எல்லாம் அதனை அழித்து ஒழித்தது… அதையும் தாண்டி கல்வியையும், அறிவையும் அழித்தது என்று தொடர்கிறார் பாபா சாகேப் அம்பேத்கர். “வெறி கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்த பௌத்த பல்கலைக்கழகங்களான நாளந்தா, விக்ரம்ஷீலா, ஜகதாலா, ஓடாந்தபூரி போன்றவற்றை அழித்தார்கள். பௌத்த பிட்சுக்கள் எவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனைக் குறித்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்களே விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்” என்கிறார்… “ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இந்து காஃபிர் ஆண், பெண் மற்றும் குழந்தைகளைக் கொல்வது மதக் கடமை” என்ற எண்ணமுடையவர்களாக பாமினி சுல்தான்கள் இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் அப்துல் காதிர் பாதோனி…..
View More வன்முறையே வரலாறாய்… -7