அந்த ஆலமரத்தடி சுடுகாட்டில் எனக்கு அந்தச் சிறு வயதில் பல ஆர்வங்கள் நிறைந்திருந்தன. கோவலன் பொட்டல் சுடுகாட்டில் பெரிய பெரிய பானைகளும் அந்தப் பானைகளில் இருந்து உடைந்த அழகான சின்னஞ் சிறு வழவழப்பான சில்லுகளும் நிறையைக் கிட்டும். ஒவ்வொரு முறை பிணம் தோண்டும் பொழுதும் இன்னுமொரு பெரும் மண்பானையை வெளியே எடுத்துப் போட்டிருப்பார்கள்… இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்து விட்டிருக்கிறார் அந்தப் புலவர்…
View More கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே