கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி…
View More எல்லையில் மீண்டும் போர்மேகம்Tag: யாஹியா கான்
வங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்
அடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டித்தனமான சட்ட திட்டங்கள், மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்டெழுந்த கிழக்கு வங்க மக்களை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானிய ராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பாக் ராணுவத்திற்கு சொல்லப்பட்டது என்ன என்றால் இஷ்டப்படி கற்பழியுங்கள், கொலை செய்யுங்கள். சிறுவர் சிறுமியர் எந்த வித்யாசமும் பார்க்காதீர்கள். இந்துக்களை கற்பழித்து கொன்றால் மேலும் பதக்கங்கள், பரிசுகள், கொள்ளையடிக்கும் சொத்துக்களை நீங்களே அனுபவியுங்கள் என்றெல்லாம் யாஹியா கானும், ஜெனரல் டிக்கா கானும் உத்தரவிட்டார்கள். கொலை செய்வதையும் ,கற்பழிப்பதையும் செய்முறையோடு மதராசாவில் பயிற்று வைத்தார்கள். உள்ளூரில் வெறி பிடித்த அடிப்படைவாதிகளையும், கொலைகாரர்களையும் இணைத்துக்கொண்டார்கள். வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்ற ரஜாக்கர்களின் வெறியாட்டம் ஆரம்பித்த கதை இது. உருது பேசும் பாகிஸ்தானிய அடிப்படைவாத முஸல்மான்கள் நாடெங்கிலும் கொள்ளை, கொலை , வன்முறை வெறியாட்டங்களோடு கற்பழிப்புக்களை கூட்டம் கூட்டமாக செய்தனர். அவர்களின் காட்டுமிராண்டித்தனமான பாலியல் இச்சைகளுக்கு லட்சக்கணக்காண இந்து பெண்களும், சிறுமியர்களும் , பெளத்த ,சிறுபான்மை இஸ்லாமிய பெண்களும் ஆளாயினர்.
ரஜாக்கர்கள் என்பவர்கள் வங்க தேச வரலாற்றில் துரோகிகள் என பொறிக்கப்பட்டது இப்படித்தான். பாரதத்திற்கு இஸ்லாமிய வெறியர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல் தாள முடியாமல் அகதிகளாக 30 லட்சத்திற்கு மேல் மக்கள் குவிந்தனர். இத்தனையையும் யாரோ சொல்லவில்லை. இனப்படுகொலைக்கு எதிரான மனித நேய மன்றத்தில் சாட்சியமளித்தவர்களின் சாட்சிகளிலிருந்தும் ,ஆவணங்களில் இருந்தும் சொல்லப்படுகிறது
View More வங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்